மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, (District Rural Development Agency (DRDA), மாவட்ட அளவில், கிராமபுறங்களில் வறுமைக்கு எதிரான திட்டப்பணிகளை மேற்கொள்வதே இதன் முக்கிய அடிப்படை நோக்காகும்.
இம்மாவட்ட வளர்ச்சி முகமைகள், இந்திய அரசின் சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860ன் படி, பதிவு செய்யப்பட்டு, 1 ஏப்ரல் 1999 முதல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்குகிறது.
நிர்வாகம்
[தொகு]மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனராக, மாவட்டக் கூடுதல் ஆட்சித் தலைவர் அல்லது ஊரகத் துறையின் இணை இயக்குநர் இருப்பர். திட்ட இயக்குனரின் கீழ் ஊரக வளர்ச்சிக்கு துணையாக உள்ள துறைகளின் உதவி இயக்குநர்கள் உதவி திட்ட அலுவலர்களாக செயல்படுவர். 1999 முதல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிர்வாகச் செலவினங்களை இந்திய அரசு 90%, மாநில அரசு 10% ஏற்றுக்கொள்கிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பாடுகளை மாநில அளவில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்பார்வையிடுகிறது.
பணிகள்
[தொகு]இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகள், கிராமப்புற வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதிகளைக் கொண்டு கிராம ஊராட்சிகளின் உள்கட்டமைப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பு, சுகாதாரம், அடிப்படைக் கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு, கைவினைத்தொழில் மேம்பாடு போன்ற சமூகப் பொருளாதார வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வழியாக ஊராட்சி ஒன்றியங்கள் மேற்கொள்கிறது.[1][2]
நிறைவேற்றப்படும் இந்திய அரசின் திட்டங்கள்
[தொகு]- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
- சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம் )
- சுவவலம்பன் திட்டம், அமைப்புச்சார தொழிழிலாளர்களுக்கு
- துப்புரவு இந்தியா இயக்கம்
- ஜனனி சுரக்ச யோஜனா
- முத்ரா வங்கி
- முன்மாதிரி கிராமத் திட்டம் [3]
- பிரதம அமைச்சர் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் [4]
நிறைவேற்றப்படும் தமிழக அரசின் திட்டங்கள்
[தொகு]- கிராம தன்னிறைவுத் திட்டம்[5]
- தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டம்
- நமக்கு நாமே திட்டம் (Namakku Naame Thittam) (NNT) [6]
- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் [7]
- ஊரக உள்கட்டமைப்பு திட்டம் [8]
- ஊரக கட்டிட பராமரிப்பு மற்றும் சீரமைப்புத் திட்டம்[9]
- முழு சுகாதாரப் பிரச்சார இயக்கம் [10]
- திடக் கழிவு மேலண்மைத் திட்டம்
- கிராமப்புறச் சாலைகள் மேம்பாடுத் திட்டம்
இந்திய அரசின் நிதி நிறுத்தம்
[தொகு]மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 75% இந்திய அரசு மானியமாக பங்களிக்கிறது. இந்திய அரசின் இந்த பங்களிப்பு 1 ஏப்ரல் 2022 முதல் நிறுத்தப்படுகிறது.[11]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ DISTRICT RURAL DEVELOPMENT AGENCY
- ↑ State Schemes
- ↑ எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மாதிரி கிராம திட்டத்துக்குப் பயன்படுத்தலாம்: நாடாளுமன்றத்தில் தகவல்
- ↑ Pradhan Mantri Awas Yojana – Gramin (PMAY-G) | Pradhan Mantri Gramin Awas Yojana
- ↑ Self Sufficiency Scheme (SSS)
- ↑ Namakku Naame Thittam (NNT)
- ↑ Member of Legislative Assembly Constituency Development Scheme (MLACDS)
- ↑ [ https://www.tnrd.gov.in/schemes/st_ris.html Rural Infrastructure Scheme]
- ↑ Rural Buildings Maintenance and Renovation Scheme (RBMRS)
- ↑ Total Sanitation Campaign (TSC) Total Sanitation Campaign (TSC)
- ↑ Centre to stop funding DRDAs from April 2021