மாவட்ட ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியாவில் உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் படிவரிசைகள், மாவட்ட ஊராட்சிகள், (நீல நிறம்)

மாவட்ட ஊராட்சி, சென்னை மாவட்டம் தவிர்த்த ஓவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட ஊராட்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 50,000 மக்கள்தொகைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாவட்ட ஊராட்சியின் தலைவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதாவது உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்ககிறார்கள். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.[1]

மாவட்ட ஊராட்சியின் கடமைகள்:[தொகு]

  • மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் செயல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், சாலை மேம்பாடு குறித்தும் அரசுக்கு ஆலோசனை வழங்குவது இதன் கடமையாகும்.
  • மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் போன்றவையும் இதன் கடமைகள் ஆகும்.

மாவட்டத் திட்டக்குழு[தொகு]

  • இதன் தலைவர் மாவட்ட ஊராட்சி தலைவர் ஆவார்.
  • மாவட்டம் முழுவதற்கும் ஒரு வரைவு வளர்ச்சித் திட்டத்தை தயாரிப்பது இதன் பணி ஆகும்.
  • இதன் உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • அம்மாவட்டத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மாவட்ட முழுமைக்குமான வளர்ச்சித்திட்டம் தயாரித்து மாநிலத் திட்டக்குழுவிற்கு அனுப்பி வைப்பது மாவட்டத் திட்டக்குழுவின் கடமை ஆகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. THE TAMIL NADU PANCHAYATS ACT, 1994
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவட்ட_ஊராட்சி&oldid=2856579" இருந்து மீள்விக்கப்பட்டது