உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் இந்தியாவின் மாநிலமானத் தமிழத்தின் உயர் நீதிமன்றமான சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள் மற்றும் தற்பொழுதயத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மற்றும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40[1] உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபரிபாலணை புரிவர். இதன் நீதி நிர்வாகங்களை செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் இவரின் வழிகாட்டுதலின்படி செயல்படுகின்றன.

  • உரிமையியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணங்கள்:[1]
    • மாவட்ட நீதிபதி
    • சார்பு நீதிபதி
    • மாவட்ட முன்சீப் ஆகியவர்கள் பங்காற்றுகின்றனர்.
  • குற்றவியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணைங்கள்:[1]
    • மாவட்ட அமர்வு நீதிமன்றம்
    • தலைமை நீதிமுறைமை நடுவர் மன்றம்
    • கூடுதல் அமர்வு நீதிமன்றம்
    • நீதிமுறைமை நடுவர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெறுகின்றன.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பட்டியல்

[தொகு]
வ. எண் தலைமை நீதி தலைமை/பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்ட நாள் ஓய்வு பெற்ற நாள்
1 பி. வி. ராஜமன்னார் 1948 10 மே 1961
2 சுப்பிரமணிய இராமச்சந்திர ஐயர் 10 மே 1961 23 நவம்பர் 1964
3 பி. சந்திர ரெட்டி 23 நவம்பர் 1964 1 ஜூலை 1966
4 எம். அனந்தநாராயணன் 1 ஜூலை1966 1 மே 1969
5 குப்புசாமி நாயுடு வீராசுவாமி 2 மே 1969 7 ஏப்ரல் 1976
6 பள்ளப்பட்டி சடையக் கவுண்டர் கைலாசம் 8 ஏப்ரல் 1976 3 சனவரி 1977
7 பத்மநாப்பிள்ளை கோவிந்தன் நாயர் 4 சனவரி 1977 28 மே 1978
8 தயி ராம்பிராசாத ராவ் 29 மே 1978 6 நவம்பர் 1979
9 மு. மு. இஸ்மாயில் 6 நவம்பர் 1979 12 மார்ச் 1982
10 கிருஷ்ண பல்லப் நாரயண் சிங் 12 மார்ச் 1982 2 ஏப்ரல் 1984
11 மதுகர் நர்கர் சந்துர்கர் 2 ஏப்ரல் 1984 19 அக்டோபர் 1989
12 ஆதர்ஷ் செயின் ஆனந்த் நவம்பர் 1989 16 ஜூன் 1992
13 காந்தா குமாரி பட்நகர் 15 ஜூன் 1992 1 ஜூலை 1993
14 குதாரிகோட்டி ஆன்னதனய சாமி 1 ஜூலை 1993 7 ஜூலை 1997
15 மன்மோகன் சிங் லிபரான் 7 ஜூலை 1997 24 மே 1999
16 அசோக் சோட்டலால் அகர்வால் 24 மே 1999 9 செப்டம்பர் 1999
17 கொ. கோ. பாலகிருஷ்ணன் 9 செப்டம்பர் 1999 15 ஜூன் 2000
18 நாகேந்திர குமார் ஜெயின் 13 செப்டம்பர் 2000 30 ஆகத்து 2001
19 போ. சுபாசன் ரெட்டி 12 செப்டம்பர் 2001 20 நவம்பர் 2004
20 மார்க்கண்டேய கட்சு 28 நவம்பர் 2004 10 அக்டோபர் 2005
21 அஜித் பிராக்காஷ் ஷா 12 நவம்பர் 2005 9 மே 2008
22 ஏ.கே.கங்குலி 21 மே 2008 9 மார்ச் 2009[2]
23 எச். எல். கோகிலே 9 மார்ச் 2009 10 ஜூன் 2010
24 எம். ஒய். இக்பால் 11 ஜூன் 2010 6 பிப்ரவரி 2013
பொறுப்பு ஆர். கே. அகர்வால் 7 பிப்ரவரி 2013 23 அக்டோபர் 2013
25 ஆர். கே. அகர்வால் 24 அக்டோபர் 2013 12 பிப்ரவரி 2014
பொறுப்பு சதீஷ் கே அக்னிஹோத்ரி 13 பிப்ரவரி 2014 25 ஜூலை 2014[3]
26 சஞ்சய் கிஷன் கவுல் 26 ஜூலை 2014 15 பிப்ரவரி 2017 [4]
பொறுப்பு ஹுலுவடி ஜி.ரமேஷ் 16 பிப்ரவரி 2017 4 ஏப்ரல் 2017
27 இந்திரா பானர்ஜி 5 ஏப்ரல் 2017 6 ஆகஸ்ட் 2018
பொறுப்பு ஹுலுவடி ஜி.ரமேஷ் 7 ஆகஸ்ட் 2018 11 ஆகஸ்ட் 2018
28 விஜய தஹில் ரமணி 12 ஆகஸ்ட் 2018 6 செப்டம்பர் 2019
பொறுப்பு வினீத் கோத்தாரி 21 செப்டம்பர் 2019 10 நவம்பர் 2019
29 அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி 11 நவம்பர் 2019 31 டிசம்பர் 2020
30 சஞ்சிப் பானர்ஜி 4 ஜனவரி 2021 17 நவம்பர் 2021
31 முனீசுவர் நாத் பண்டாரி 22 நவம்பர் 2021 12 செப்டம்பர் 2022
32 க. இரா. சிறீராம் 27 செப்டம்பர் 2024 பதவியில்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "சென்னை உயர்நீதிமன்ற வரலாறு- உயர் நீதிமன்ற இணையம் |பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009". Archived from the original on 2014-03-11. பார்க்கப்பட்ட நாள் 2009-04-07.
  2. "Justice Asok Kumar Ganguly to be Chief Justice of Madras High Court". The India Post. 21 மே 2008 இம் மூலத்தில் இருந்து 17 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110717004938/http://www.theindiapost.com/2008/05/21/justice-asok-kumar-ganguly-to-be-chief-justice-of-madras-high-court/. பார்த்த நாள்: 26 நவம்பர் 2009. 
  3. "Madras High Court". www.hcmadras.tn.nic.in. Archived from the original on 13 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2017. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  4. "Madras High Court". www.hcmadras.tn.nic.in. Archived from the original on 9 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2017.