துரைமுருகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துரைமுருகன்
பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
9 செப்டம்பர் 2020
தொடக்கத்தில் இருந்தவர் கா. ந. அண்ணாதுரை
முன்னவர் க. அன்பழகன்
தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
25 மே 2016
தலைவர் மு. க. ஸ்டாலின்
பொருளாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில்
28 ஆகத்து 2018 – 3 செப்டம்பர் 2020
தொடக்கத்தில் இருந்தவர் இரா. நெடுஞ்செழியன்
முன்னவர் மு. க. ஸ்டாலின்
பின்வந்தவர் த. ரா. பாலு
முதன்மை செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில்
10 சனவரி 2015 – 27 ஆகத்து 2018
பொதுப்பணித்துறை அமைச்சர் (தமிழக அரசு)
பதவியில்
2006–2009
பதவியில்
1996–2001
பதவியில்
1989–1991
சட்டத்துறை அமைச்சர்
பதவியில்
2009–2011
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1984
தொகுதி இராணிப்பேட்டை
பதவியில்
1971-1977,1989-1991,1996-
தொகுதி காட்பாடி
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சூலை 1938 (1938-07-01) (அகவை 82)[1]
குடியாத்தம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா தற்போது குடியாத்தம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) து. சாந்தக்குமாரி
பிள்ளைகள் கதிர் ஆனந்த்
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
காட்பாடி, வேலூர், தமிழ்நாடு, இந்தியா
கல்வி இளங்கலைமானி சட்டம், முதுகலைமானி
சமயம் இந்து

துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) ஒரு தமிழக அரசியல்வாதியும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். தமிழகத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள, காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் மாவட்டத்திலுள்ள, காங்குப்பம் என்னும் ஊரில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைமானி சட்டம் மற்றும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைமானி கல்வி பயின்று பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

துரைமுருகன் முதன் முதலில் 1971இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு மீண்டும் வேலூர் மாவட்டத்திலுள்ள, காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2] இவர் பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

. போட்டியிட்ட தேர்தல்கள் மற்றும் முடிவுகள்[தொகு]

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு சதவியிதம் எதிர்த்து போட்டியிட்டவர் எதிர்த்து போட்டியிட்ட கட்சி எதிர்த்து போட்டியிட்டவரின்வாக்கு சதவியிதம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971 காட்பாடி திமுக வெற்றி 57.79 தண்டாயுதபாணி நிறுவன காங்கிரசு 32.25[3]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 ராணிப்பேட்டை திமுக வெற்றி 43.53 வஹாப் கே.ஏ. சுயேச்சை 22.68[4]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 ராணிப்பேட்டை திமுக வெற்றி 53.70 ரேணு. என் அதிமுக 44.91[5]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 காட்பாடி திமுக தோல்வி 39.62 ஜி.ரகுபதி அதிமுக 57.08[6]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 காட்பாடி திமுக வெற்றி 43.41 மார்கபந்து. ஆர் அதிமுக 23.47[7]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 காட்பாடி திமுக தோல்வி 33.02 கலைசெல்வி அதிமுக 56.43[8]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 காட்பாடி திமுக வெற்றி 61.20 பாண்டுரங்கண் அதிமுக 27.93[9]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 காட்பாடி திமுக வெற்றி 49.47 நடராஜன் பாமக 43.30[10]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 காட்பாடி திமுக வெற்றி 49.55 ப.நாராயணன் அதிமுக 47.59[11]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 காட்பாடி திமுக வெற்றி 49.55 அப்பு அதிமுக 47.59[12]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 காட்பாடி திமுக வெற்றி 50.90 அப்பு அதிமுக 37.44[13]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரைமுருகன்&oldid=3116986" இருந்து மீள்விக்கப்பட்டது