தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சிக்கு அடுத்த நிலையில் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி பிரதான எதிர்க்கட்சி என்கிற தகுதியைப் பெறுகிறது. இத்தகுதியைப் பெற அந்தக் கட்சி குறைந்தது 24 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். பிரதான எதிர்க்கட்சியின் பேரவைக்குழுத் தலைவர் தமிழ்நாடு சட்டப்பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவைத் துணைதலைவருக்குரிய தகுதியை எதிர்க்கட்சித் தலைவராக உள்ளவர் பெறுகிறார்.

பதவி காலம் எதிர்க்கட்சித் தலைவர் கட்சி
2016 முதல் தற்போது வரை மு.க.ஸ்டாலின் திமுக
2011 முதல் 2016 வரை விஜயகாந்த் தே.மு.தி.க
2006 முதல் 2011 வரை ஜெ. ஜெயலலிதா அதிமுக
2001 முதல் 2006 வரை மு.கருணாநிதி திமுக
1989 முதல் 1991 வரை ஜெ. ஜெயலலிதா அதிமுக

மேற்கோள்கள்[தொகு]