த. நாகி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. நாகி ரெட்டி
படிமம்:Tarimella nagireddy..jpg
த. நாகி ரெட்டி
பிறப்புத. நாகி ரெட்டி
பிப்ரவரி 11, 1917
அனந்தபூர் மாவட்டம் தரிமேலா
இறப்புசூலை 28, 1976
மற்ற பெயர்கள்டி.என்
பணிபொதுவுடைமை புரட்சியாளர்களின் ஆந்திர மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்
அறியப்படுவதுபொதுவுடைமை இயக்கத்தின் முக்கியத் தலைவர்

தரிமேலா நாகி ரெட்டி (Tarimela Nagi Reddy) (11 பிப்ரவரி 1917 - 28 சூலை 1976), பெரும்பாலும் "டி.என்" என்று அழைக்கப்படுபம் இவர், இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பொதுவுடைமை அரசியல்வாதியாவார். [1] தனது பள்ளி நாட்களிலிருந்தே இவர் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார். ஆந்திராவின் இரண்டு முறை முதல்வராகவும் இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவராகவும் இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி, இவரது மைத்துனராவார்.

  1. "Important Persons". 2012-04-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-31 அன்று பார்க்கப்பட்டது.

tarimela.com பரணிடப்பட்டது 2018-12-29 at the வந்தவழி இயந்திரம்

சுயசரிதை[தொகு]

இவர், ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். ஆந்திர தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நிறுவிய இரிஷி பள்ளத்தாக்கு பள்ளியிலிருந்து தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சென்னையிலுள்ள இலயோலாக் கல்லூரியிலும், வாரணாசியிலுள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலும் பயின்றார் . தனது மாணவ நாட்களில், இவர் தேசியவாதம் மற்றும் மார்க்சியத்துடன் தொடர்பு கொண்டார். இவரது அரசியல் நடவடிக்கைகள் இவரை 1940, 1941 மற்றும் 1946ஆம் ஆண்டுகளில் சிறையில் அடைத்தன. நில உரிமையாளராக இருந்த தனது தந்தைக்கு எதிராக கிளர்ச்சி செய்த இவர், 1000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை நிலமற்ற தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

இலயோலா கல்லூரி நாட்களின்போது, இவர், தனது தேசியவாத உணர்வுகளால் கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்களுடன் பழக முடியவில்லை. ஜவகர்லால் நேருவின் பொது உரைகளில் கலந்து கொண்டதற்காகவும், ராமசாமி முதலியார் மற்றும் சத்தியமூர்த்திக்கு இடையில் பிரச்சாரம் செய்ததற்காகவும், கட்டுரை போட்டிகளில் முகம்மது பின் துக்ளக்கைப் பாராட்டியதற்காகவும் கல்லூரி நிர்வாகம் இவருக்கு பல முறை அபராதம் விதித்துள்ளது.

அரசியல்[தொகு]

மெட்ராஸ் சட்டமன்றத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராக 1951 இல் அனந்தப்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் 1957 இல் அனந்தபுரம் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 இல் புட்டூரிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆந்திர மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ஆம் ஆண்டில் இவர் மீண்டும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது அனந்தபூரிலிருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஐ (எம்) வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாகிரெட்டி தனது அரசாங்க விரோத அரசியல் நடவடிக்கைகளுக்காக பல முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1940ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது, ​​பொருளாதாரம் மீதான போர் மற்றும் அதன் தாக்கம் என்ற புத்தகத்தை எழுதினார். மேலும் அரசாங்கத்தின் சீற்றத்தைத் தூண்டியதற்காக சிறைக்குச் சென்றார். திருச்சிராப்பள்ளி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 1941இல் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இவர் 1946 இல் பிரகாரம் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 1947இல் விடுவிக்கப்பட்டார்.[1]

1952 ஆம் ஆண்டில், அனந்தபூர் தொகுதியில் இருந்து சென்னை சட்டமன்றத்திற்கான இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையில் இருந்த போதிலும், காங்கிரசின் முக்கிய தலைவரும் தனது மைத்துனருமான நீலம் சஞ்சீவரெட்டியை தோற்கடித்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். 1955 ஆம் ஆண்டில், புதிதாக அமைக்கப்பட்ட புட்லூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்தில் போட்டியிட்டு, தரிமேலா இராமச்சந்திர ரெட்டியிடம் தோற்றார். 1957 ஆம் ஆண்டில், அனந்தபூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 2வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 ஆம் ஆண்டில், இவர் புட்லூர் தொகுதியில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, தரிமேலா இராமச்சந்திர ரெட்டியால் தோற்கடிக்கப்பட்டார். 1967ஆம் ஆண்டில், புட்லூர் தொகுதி மறுசீரமைப்பில் கலைக்கப்பட்டது. இவர் அனந்தபூர் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (எம்) வேட்பாளராக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மார்ச் 1969இல் சட்டப்பேரவை பதவியை துறந்தார்.

புதிய கட்சி[தொகு]

1968 ஆம் ஆண்டில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து (எம்) பிரிந்து ஆந்திரா பொதுவுடைமை புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவை (ஏபிசிசிஆர்) அமைத்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து (எம்) ஆர்வலர்களை புதிய கட்சியில் ஈர்ப்பதில் இவர் வெற்றி பெற்றார். சிறிது காலத்தில், ஐபிசிசிஆர் அகில இந்திய பொதுவுடைமை இயக்க ஒருங்கிணைப்புக் குழுவில் இணைந்தது. ரெட்டி 1976 இல் இறக்கும் வரை அதன் ஆந்திரத் தலைவராக தொடர்ந்தார்.


வெளி இணைப்புகள்[தொகு]

  1. Legacy and History of Indian Maoism - A Tribute to Tarimala Nagi Reddy and the Telangana Armed Struggle
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._நாகி_ரெட்டி&oldid=3556880" இருந்து மீள்விக்கப்பட்டது