க. அன்பழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க. அன்பழகன்
திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்
பதவியில்
17 மே 1977 – 7 மார்ச் 2020
முன்னையவர்இரா. நெடுஞ்செழியன்
பின்னவர்துரைமுருகன்
தமிழ்நாடு நிதி அமைச்சர்
பதவியில்
13 மே 2006 – 15 மே 2011
தமிழ்நாடு கல்வி அமைச்சர்
பதவியில்
13 மே 1996 – 13 மே 2001
பதவியில்
27 சனவரி 1989 – 30 சனவரி 1991
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1996–2011
தொகுதிதுறைமுகம்
பதவியில்
16 நவம்பர் 1984 – 26 சனவரி 1989
தொகுதிபூங்கா நகர்
பதவியில்
30 சூன் 1977 – 15 நவம்பர் 1984
தொகுதிபுரசைவாக்கம்
தமிழ்நாடு சுகாதார, சமூக நல அமைச்சர்
பதவியில்
15 மார்ச் 1971 – 31 சனவரி 1976
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
4 மார்ச் 1967 – 15 மார்ச் 1971
தொகுதிதிருச்செங்கோடு
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1 ஏப்ரல் 1957 – 25 பெப்ரவரி 1967
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கல்யாணசுந்தரம் அன்பழகன்

(1922-12-19)19 திசம்பர் 1922
தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு7 மார்ச்சு 2020(2020-03-07) (அகவை 97)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)அண்ணா நகர், சென்னை, தமிழ்நாடு

க. அன்பழகன் (K. Anbazhagan, திசம்பர் 19, 1922 - மார்ச் 7, 2020)[1] தமிழகத்தின் முதிர்ந்த அரசியல்வாதி ஆவார்.இவர், தமிழக தி.மு.க. அரசின் அமைச்சரவையில், பல்வேறு காலகட்டங்களில், நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த இவரை 'பேராசிரியர்' என இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.[2] 2001-2006ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.இவர் 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2020 மார்ச்சு 7 ஆம் நாள், தம்முடைய 97 ஆம் வயதில், சென்னையில் காலமானார்.[3][4] தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 75 ஆண்டு கால நண்பராக இருந்தவர்.[4]

இளமைப் பருவம்[தொகு]

க.அன்பழகன், திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார், சுவர்ணம்பாள் தம்பதியருக்கு, 1922 திசம்பர் 19 இல் பிறந்தார். இவர் இயற்பெயர் இராமையா ஆகும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை (சிறப்பு) தமிழ் படித்தார். இது கலைமுதுவர் பட்டத்திற்கு இணையானது. படிப்பை முடித்தபின், 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார்.[5]

பொது வாழ்க்கை[தொகு]

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக, 1962 ஆம் ஆண்டில், சென்னை-செங்கற்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] இந்திய நாடாளுமன்றத்தில், மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 வரை பங்கு பெற்றவர். 1971இல், சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1983 ஆகத்து 10ஆம் நாள் ஈழத்தமிழரின் பிரச்சனையில் மத்திய அரசும் மாநில அரசும் போதிய கவனஞ்செலுத்தாதைக் கண்டித்து தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இவரும் அன்றைய தி.மு.க.தலைவர் மு.கருணாநிதியும் துறந்தனர். தி.மு.க.வின் மூத்த மேடைப் பேச்சாளராக விளங்கினார். ஈ.வெ.ரா. அடியொற்றி நடந்தார். இவர், 1996, 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 2011 சட்டமன்றத் தேர்தலில், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.

இதழாளர்[தொகு]

க. அன்பழகன், சென்னை புரசைவாக்கம், வெள்ளாளர் தெரு, கட்டிட எண் 10-இலிருந்து "புதுவாழ்வு" என்னும் மாத இதழை, 1948 சனவரி 15ஆம் நாள் (தை முதல் நாள்), முதல் ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.[7]

எழுத்துப் பணி[தொகு]

எழுத்தாளராகப் பல தமிழ் சமூகக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். இவர் எழுதிய நூல்கள் பின்வருமாறு:

  1. அழகுராணி [8]
  2. இன-மொழி வாழ்வுரிமைப் போர்
  3. உரிமை வாழ்வு, 1956, பாரி நிலையம், சென்னை.
  4. தமிழர் திருமணமும் இனமானமும்
  5. தமிழினக்காவலர் கலைஞர்
  6. தமிழ்க்கடல்
  7. தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி
  8. தமிழ் வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்
  9. தொண்டா? துவேஷமா? 1953, பாரி நிலையம், சென்னை. (தி.மு.க., பார்ப்பனர்களைச் துவேஷிக்கிறதா? தமிழகத்திற்கு தொண்டு புரிகிறதா? என விளக்கும் நூல்)
  10. நீங்களும் பேச்சாளர் ஆகலாம்
  11. வகுப்புரிமைப் போராட்டம், 1951; மக்கள் மன்றம், பவழக்காரத்தெரு, சென்னை.[9]
  12. வளரும் கிளர்ச்சி, 1953, பாரி நிலையம், சென்னை. (டாக்டர் நாயர் காலத்திலிருந்து, 1953 வரை திராவிட இயக்கத்தின் வரலாறு)
  13. வாழ்க திராவிடம் (ஓர் ஆராய்ச்சி நூல்), 1947, திராவிடன் பதிப்பகம், வேலூர்.[10]
  14. விடுதலைக் கவிஞர்
  15. விவேகானந்தர் - விழைந்த மனிதகுலத் தொண்டு
  16. பேராசிரியர்கள்
  17. சிங்க இளைஞனே! சிலிர்த்து எழு!
  18. மாமனிதர் அண்ணா
  19. தி திராவிடியன் மூவ்மெண்ட்டு (The Dravidian Movement)

குடும்பம்[தொகு]

இவர் வெற்றிச்செல்வி என்பவரை 1945 பிப்ரவரி 21இல் ஈ.வெ.ரா. தலைமையில் சென்னையில் மணந்தார்.[11] இவர்களுக்கு அன்புச்செல்வன் (பிறப்பு: பிப்ரவரி 17,1952)[12] என்னும் மகனும் டாக்டர் மனமல்லி சிவராமன் (மறைவு:13-6-2020)[13] செந்தாமரை [14] என்னும் இரு மகள்களும் பிறந்தனர். வெற்றிச்செல்வியின் மறைவிற்குப் பின்னர் மருத்துவர் சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருசோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்னும் இரு மகன்களும் ஜெயக்குமாரி என்னும் மகளும் பிறந்தனர்.[15] சாந்தகுமாரி திசம்பர் 23, 2012 ஆம் நாள் மறைந்தார்.

க. அன்பழகனுக்கு புலவர் க. திருமாறன், க. அறிவழகன், க. மணிவண்ணன், க. பாலகிருட்டிணன் என்னும் நான்கு தம்பிகள் உள்ளனர். இவர்களுள் புலவர் க. திருமாறன் விருதுநகர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினர்.[16] மற்றொரு தம்பியான க. அறிவழகன் சென்னை தியாகராயர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[17]

மறைவு[தொகு]

முதுமையின் காரணமாக 2020 பிப்ரவரி 24 அன்று அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் 2020, மார்ச் 7 அதிகாலை 1.10 மணி அளவில் காலமானார்.[18]

கௌரவங்கள்[தொகு]

க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2021 திசம்பர் 19 அன்று சென்னை, நந்தனம் நீதித்துறை வளாகத்தில் அன்பழகனின் மார்பளவு சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வைத்தார். மேலும் அந்த வளாகத்திற்கு பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என்ற பெயரையும் சூட்டினார். மேலும் அன்பழகனின் நூல்களை நாட்டுடமையாக்கி அதற்கு ஈடாக அவரின் வாரிசுகளுக்கு 25 இலட்சம் வழங்கினார்.[19]

மேற்கோள்கள்[தொகு]

  1. "திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்".
  2. "Veteran DMK leader K Anbazhagan not to contest this election". The NEWS Minute
  3. Kolappan, B. (7 March 2020). "DMK general secretary Anbazhagan no more" – via www.thehindu.com.
  4. 4.0 4.1 "தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்... திராவிட இயக்கத்தின் பேராசிரியர்... எப்படி இருக்கிறார் க.அன்பழகன்?". https://www.vikatan.com/. {{cite web}}: External link in |work= (help)
  5. Jaisankar, C. (5 May 2016). "Spry at 94, DMK's 'professor' loves the lectern" – via www.thehindu.com.
  6. திராவிடநாடு, 15-4-1962, பக்.16
  7. குடி அரசு 1948 சனவரி 24, பக்.14
  8. திராவிடநாடு (இதழ்) நாள்:30-3-1952, பக்கம் 9
  9. திராவிடநாடு (இதழ்) நாள்:10-6-1952, பக்கம் 3
  10. குடி அரசு நாள்:27-12-1947, பக்கம் 13
  11. குடிஅரசு, 17-3-1945, பக். 4
  12. திராவிடநாடு (இதழ்) நாள்:2-3-1952, பக்கம் 11
  13. திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மகள் டாக்டர் மனமல்லி காலமானார்
  14. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  15. Mathi https://tamil.oneindia.com. "திமுக தலைவர்கள் வீட்டில் தொடரும் குடும்ப சொத்து தகராறு- இப்போது பஞ்சாயத்தில் க.அன்பழகன்!". {{cite web}}: External link in |last= (help)
  16. திராவிடநாடு (இதழ்) நாள்:2-10-1955, பக்கம் 10
  17. திராவிடநாடு (இதழ்) நாள்:29-7-1957, பக்கம் 2
  18. "அன்பழகன் மரணம்- தலைவர்கள் இரங்கல்". Archived from the original on 2022-03-15. பார்க்கப்பட்ட நாள் 2020-03-07. மாலைமலர் (7 மார்ச், 2020)
  19. Udhayabaskar (2021-12-19). "பேராசிரியர் க அன்பழகன் 100ஆவது பிறந்தநாள் விழா.... சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._அன்பழகன்&oldid=3871996" இலிருந்து மீள்விக்கப்பட்டது