உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழக ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்நாடு ஆளுநர்
ராஜ் பவன், தமிழ்நாடு
தற்போது
ஆர். என். ரவி

18 செப்டம்பர் 2021 (2021-09-18) முதல்
வாழுமிடம்ராஜ் பவன், சென்னை, (தமிழ்நாடு)
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து வருடம்
இணையதளம்www.tnrajbhavan.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள தமிழகம்

தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.

தற்போதுள்ள தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.[1][2]

இம்மாநிலத்தின் தற்பொழுதைய ஆளுநராக மேதகு ஆர். என். ரவி[3] பதவி வகித்துக் கொண்டு வருகின்றார்.

ஆளுநர்கள்

[தொகு]
மதராஸ் இராஜதானி 1909, தெற்குப் பகுதி

மதராஸ் இராஜதானி அல்லது மதராஸ் மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாக, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் (புனித ஜார்ஜ் கோட்டை) தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.

இப்பொழுதுள்ள தமிழ்நாடு, மலபார் பிராந்தியமான வட கேரளம் , ஆந்திராவின் கடற்கரை மற்றும் ராயலசீமா பிராந்தியங்கள், பெல்லாரி, தக்சன கன்னடா, மற்றும் கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது.

மதராஸ் இராஜதானி 1653 இல் ஆங்கிலேயர் குடியேறிய கோரமண்டல் கடற்கரைப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு பெரிய மாகாணமாக நிர்மாணிக்கப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலையடைந்ததற்குப்பின், மதராஸ் மாநிலம் என்றப் பெயருடனும், தற்பொழுது தமிழ்நாடு மாநிலம் என்றப் பெயருடன் அமைந்ததின் முன்னோடியாக மதராஸ் இராஜதானி விளங்குகின்றது. இதனோடு இணைந்திருந்த பிராந்தியங்கள் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மற்றும் கேரளம் ஆகியப் பிராந்தியங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.[4]

Tabular
# பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு காலவரை[nb 1]
1 William Thomas Denison 18 February 1861 26 November 1863
2 Edward Maltby (acting) 26 November 1863 18 January 1864
3 William Thomas Denison 18 January 1864 27 March 1866
4 Lord Napier 27 March 1866 19 February 1872
5 Alexander John Arbuthnot (acting) 19 February 1872 15 May 1872
6 Lord Hobart 15 May 1872 29 April 1875
7 William Rose Robinson (acting) 29 April 1875 23 November 1875
8 Duke of Buckingham and Chandos 23 November 1875 20 December 1880
9 William Huddleston (acting) 24 May 1881 5 November 1881
10 Mountstuart Elphinstone Grant Duff 5 November 1881 8 December 1886
11 Robert Bourke, Baron Connemara 8 December 1886 1 December 1890
12 John Henry Garstin 1 December 1890 23 January 1891
13 Bentley Lawley, Baron Wenlock 23 January 1891 18 March 1896
14 Arthur Elibank Havelock 18 March 1896 28 December 1900
15 Arthur Oliver Villiers-Russell, Baron Ampthill 28 December 1900 30 April 1904
16 James Thompson (acting) 30 April 1904 13 December 1904
17 Arthur Oliver Villiers-Russell, Baron Ampthill 13 December 1904 15 February 1906
18 Gabriel Stoles (acting) 15 February 1906 28 March 1906
19 Arthur Lawley, Baron Wenlock 28 March 1906 3 November 1911
20 Thomas David Gibson-Carmichael, Baron Carmichael 3 November 1911 30 March 1912
21 Sir Murray Hammick (acting) 30 March 1912 30 October 1912
22 John Sinclair, Baron Pentland 30 October 1912 29 March 1919
23 Sir Alexander Gordon Cardew 29 March 1919 10 April 1919
24 George Freeman Freeman-Thomas, Baron Willingdon 10 April 1919 12 April 1924
During dyarchy (1920–1937)
1 Sir P. Rajagopalachari 1920 1923 Non-Partisan
1 ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை 6 மே1946 7 செப்டம்பர் 1948 1
2 கிருஷ்ண குமாரசிங் பவசிங் 7 செப்டம்பர் 1948 12 மார்ச் 1952 1
3 ஸ்ரீ பிரகாசா 12 மார்ச்1952 10 டிசம்பர் 1956 1
4 ஏ.ஜெ. ஜான் 10 டிசம்பர்1956 30 செப்டம்பர் 1958 1
5 பகாலா வெங்கட்ட ராஜமன்னார் (தற்காலிகம்) 1 அக்டோபர் 1958 24 ஜனவரி 1958 1
6 விஷ்ணுராம் மேதி 24 ஜனவரி 1958 4 மே 1964 1
7 ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் 4 மே 1964 24 நவம்பர் 1964 1
8 பி. சந்திர ரெட்டி (தற்காலிகம்)[5] 24 நவம்பர் 1964 7 டிசம்பர் 1965 1
9 ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் [nb 2] 7 டிசம்பர் 1965 28 ஜூன் 1966 1
10 சர்தார் உஜ்ஜல் சிங் (தற்காலிகமாக 16 ஜூன் 1967 வரை) 28 ஜூன் 1966 14 ஜனவரி 1969 1

தமிழ்நாடு

[தொகு]

மதராஸ் மாநிலம் ஜனவரி 14, 1969,[2] அன்று தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கொண்டது. தமிழக ஆளுநர்கள் மாநில அளவில் மைய அரசின் வரையறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரவரம்பையேப் பெற்றுள்ளனர். ஆனால் ஆளுநர் பெயரளவில் மட்டுமே தமிழக மாநிலத் தலைமையை ஏற்றுள்ளார். மாநிலப் பொறுப்புகள் மற்றும் ஆட்சி அதிகாரங்களை தமிழக மாநில முதல்வர்கள் மற்றும் அவரது அமைச்சரவையே பெற்றுள்ளன. தமிழக மாநில அரசின் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் செயல் வடிவங்கள் ஆளுநரின் பெயரிலேயே நிறைவேற்றப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டவணை
வ.எண் பெயர் படம் பதவி ஆரம்பம் பதவி முடிவு காலவரை[nb 1] ஜனாதிபதி
1 சர்தார் உஜ்ஜல் சிங் 14 ஜனவரி 1969 27 மே 1971 1 சாகீர் உசேன்
2 (கே. கே. ஷா) 27 மே 1971 16 ஜூன் 1976 1 வி. வி. கிரி
3 மோகன் லால் சுகாதியா 16 ஜூன் 1976 08 ஏப்ரல் 1977 1 பக்ருதின் அலி அகமது
_ பி. கோவிந்தன் நாயர் (தற்காலிகம்)[6] 09 ஏப்ரல் 1977 27 ஏப்ரல் 1977 1 பசப்பா தனப்பா ஜாட்டி
4 பிரபுதாஸ் பட்வாரி 27 ஏப்ரல் 1977 27 அக்டோபர் 1980 1
_ எம். எம். இஸ்மாயில் (தற்காலிகம்) 27 அக்டோபர் 1980 04 நவம்பர் 1980 1 நீலம் சஞ்சீவ ரெட்டி
5 சாதிக் அலி 04 நவம்பர் 1980 03 செப்டம்பர் 1982 1
6 சுந்தர் லால் குரானா (எஸ். எல். குரானா) 03 செப்டம்பர் 1982 17 பெப்ரவரி 1988 1 ஜெயில் சிங்
7 பி. சி. அலெக்சாண்டர் 17 பெப்ரவரி 1988 24 மே 1990 1 ரா. வெங்கட்ராமன்
8 சுர்ஜித் சிங் பர்னாலா 24 மே 1990 15 பெப்ரவரி 1991 1
9 பீஷ்ம நாராயண் சிங் 15 பெப்ரவரி 1991 31 மே 1993 1
10 எம். சென்னா ரெட்டி 31 மே 1993 02 டிசம்பர் 1996 1 சங்கர் தயாள் சர்மா
_ கிரிஷன் காந்த் (தற்காலிகம்)[6] 02 டிசம்பர் 1996 25 ஜனவரி 1997 1
11 எம். பாத்திமா பீவி 25 ஜனவரி 1997 03 ஜூலை 2001 1
_ சி. ரங்கராஜன் (தற்காலிகம்) 03 ஜூலை 2001 18 ஜனவரி 2002 1 கே. ஆர். நாராயணன்
12 பி.எஸ். ராம்மோகன் ராவ் 18 ஜனவரி 2002 03 நவம்பர் 2004 1 அப்துல் கலாம்
(8) சுர்ஜித் சிங் பர்னாலா 03 நவம்பர் 2004 31 ஆகஸ்ட் 2011 2
13 கொனியேட்டி ரோசையா 31 ஆகத்து 2011 30 ஆகத்து 2016 1 பிரதிபா பாட்டில்
_ சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு ) 02 செப்டம்பர் 2016 06 அக்டோபர் 2017 1 பிரணாப் முகர்ஜி
14 பன்வாரிலால் புரோகித் 06 அக்டோபர் 2017 17 செப்டம்பர் 2021 1 ராம்நாத் கோவிந்த்
15 ஆர். என். ரவி 18 செப்டம்பர் 2021 தற்போது பதவியில் 1

வரலாற்றுப் பதிவுகள்

[தொகு]
மேதகுசுர்ஜித் சிங் பர்னாலாஇரண்டு முறை ஆளுநர் பதவி வகித்தவர்.
  • ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மட்டுமே இருமுறை தமிழகத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர் மற்றும் அதிக நாட்கள் பதவி வகித்தவர்- மே 24, 1990 முதல் பெப்ரவரி 15, 1991 வரை மற்றும் நவம்பர் 3, 2004 முதல் ஆகஸ்ட் 31 2011 வரை.
  • தமிழகத்தின் ஆளுநராக குறைந்த நாட்கள் பதவி வகித்தவராக எம்.எம். இஸ்மாயில் என்பவர். தற்காலிக ஆளுநராகப் பதவி வகித்த இவர் பதவி வகித்த காலம் 9 நாட்கள் மட்டுமே. (அக்டோபர் 27, 1980-நவம்பர் 4. 1980).

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1946 முதல் பதவி வகித்த தமிழக ஆளுநர்கள் பரணிடப்பட்டது 2009-02-05 at the வந்தவழி இயந்திரம், (தமிழக சட்டமன்றப் பேரவை, 15 செப்டம்பர் 2008)
  2. 2.0 2.1 லிருந்து தமிழ் நாடு இந்திய மாநிலங்கள், (உலக ஆலோசகர்கள், 15 செப்டம்பர் 2008)
  3. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. தமிழகச் செயலகம் — சுருக்க வரலாறு (தமிழ் நாடு அரசு, 17 செப்டம்பர் 2008)
  5. மாண்புமிகு ஸ்ரீ நீதியரசர் பி. சந்திர ரெட்டி (ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், ஐதராபாத், 29 செப்டம்பர், 2008)
  6. 6.0 6.1 முன்னாள் ஆளுநர்கள் (ஆளுநர் மாளிகை (ராஜ் பவன்), சென்னை, 20 செப்டம்பர் 2008)

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 எண் வகையில் வரிசைக்கிரமமாக அவர்கள் பதவி வகித்த காலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது
  2. இந்தக் காலம் ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் ன் காலத் தொடர்ச்சி, முதல் காலத்தில் பி.சந்திர ரெட்டி தற்காலிக ஆளுநராக, ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபொழுது பதவி வகித்திருந்தார்