இந்திய மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், நடுவணரசில் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநிலவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.

மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்கள்[தொகு]

black;"
வ.எண் மாநிலங்கள் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பட்டியல்
1 ஆந்திரப் பிரதேசம் ஈ. எஸ். எல். நரசிம்மன் 27 திசம்பர் 2009 அனைத்தும்
1 தெலுங்கானா ஈ. எஸ். எல். நரசிம்மன் - -
2 அருணாச்சலப் பிரதேசம் பி. டி. மிஸ்ரா 3 அக்டோபர் 2017 அனைத்தும்
3 அசாம் ஜெகதீஷ் முகீ 10 அக்டோபர் 2017 அனைத்தும்
4 பீகார் லால்ஜி தாண்டன் 23 ஆகத்து 2018 அனைத்தும்
5 சட்டீஸ்கர் ஆனந்திபென் படேல் (கூடுதல் பொறுப்பு) 14 ஆகத்து 2018 அனைத்தும்
6 கோவா திருமதி மிருதுளா சின்கா 26 ஆகத்து 2014 அனைத்தும்
7 குஜராத் ஓம் பிரகாஷ் கோலி 14 சூலை 2014 அனைத்தும்
8 அரியானா சத்யதேவ் நாராயணன் ஆர்யா 25 ஆகத்து 2018 அனைத்தும்
9 இமாச்சலப் பிரதேசம் ஆச்சார்யா தேவ் விராட் 12 ஆகத்து 2015 அனைத்தும்
10 ஜம்மு காஷ்மீர் சத்ய பால் மாலிக் 23 ஆகத்து 2018 அனைத்தும்
11 ஜார்க்கண்ட் திரவுபதி மர்மு 13 மே 2015 அனைத்தும்
12 கர்நாடகா வஜூபாய் வாலா செப்டம்பர் 1 2014 அனைத்தும்
13 கேரளா ப. சதாசிவம் செப்டம்பர் 5 2014 அனைத்தும்
14 மத்தியப் பிரதேசம் ஆனந்திபென் படேல் சனவரி 23 2018 அனைத்தும்
15 மகாராஷ்டிரம் சி. வித்தியாசாகர் ராவ் ஆகத்து 30 2014 அனைத்தும்
16 மணிப்பூர் நச்மா எப்துல்லா ஆகத்து 21 2016 அனைத்தும்
17 மேகாலயா ததகதா ராய் ஆகத்து 25 2018 அனைத்தும்
18 மிசோரம் குமனம் இராஜசேகரன் மே 29 2018 அனைத்தும்
19 நாகாலாந்து பத்மநாபன் ஆச்சாரியா 19 சூலை 2014 அனைத்து
20 ஒரிசா கணேசி லால் 29 மே 2018 அனைத்தும்
21 பஞ்சாப் வி. பி. சிங் பத்னோர் 22 ஆகத்து 2016 அனைத்தும்
22 இராஜஸ்தான் கல்யாண் சிங் ஆகத்து 26 2014 அனைத்தும்
23 சிக்கிம் கங்கா பிரசாத் ஆகத்து 26 2018 அனைத்தும்
24 தமிழ்நாடு பன்வாரிலால் புரோகித் அக்டோபர் 6 2017 அனைத்தும்
25 திரிபுரா கப்டன் சிங் சோளங்கி 25 ஆகத்து 2018 அனைத்தும்
26 உத்தராகண்டம் பேபி இராணி மயூரியா 26 ஆகத்து 2018 அனைத்தும்
27 உத்திரப்பிரதேசம் இராம் நாயக் 22 சூலை 2014 அனைத்தும்
28 மேற்கு வங்காளம் கேசரிநாத் திரிபாதி 24 சூலை 2014 அனைத்தும்

ஒன்றிய அரசு பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள்[தொகு]

துணைநிலை ஆளுநர்கள் (Lieutenant Governor) ஓர் ஒன்றிய அரசு ஆட்சிப்பகுதியின் அரசுத்தலைவராக விளங்குகிறார். ஓர் மாநில முதல்வருக்குரிய அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.இந்நிலை தற்போது தில்லி, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. முன்னுரிமைப் பட்டியலில் ஆளுநர்களுக்கு இணையான நிலை துணைநிலை ஆளுநர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தில்லி மற்றும் புதுச்சேரி ஆட்சிப்பகுதிகளில் சட்டப்பேரவை அமைக்கப்பட்டு முதல்வரால் ஆளப்படுகின்றன. இங்கு துணைநிலை ஆளுநர் ஓர் ஆளுநர் போன்றே செயல்படுகிறார். மற்ற நான்கு ஒன்றிய அரசு பிரதேசங்களில் இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த அதிகாரிகள் "ஆட்சியாளர்"களாக உள்ளனர்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் தேவேந்திர குமார் ஜோஷி 08 அக்டோபர் 2017
புதுச்சேரி கிரண் பேடி[1] 29 மே 2016
(3 ஆண்டுகள், 87 நாட்கள்)
தில்லி அணில் பிஜால்[2] 31 திசம்பர் 2016
(2 ஆண்டுகள், 236 நாட்கள்)

ஒன்றிய அரசு ஆட்சிப்பகுதியின் ஆட்சியாளர்கள்[தொகு]

சண்டிகர் வி. பி. சிங் பத்னோர் 22 ஆகத்து 2016
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பிராபுல் கோடா படேல் (கூடுதல் பொறுப்பு) 30 திசம்பர் 2016
தாமன், தியு பிராபுல் கோடா படேல் 29 ஆகத்து 2016
லட்சத்தீவுகள் பரூக் கான் 6 செப்டம்பர் 2016

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கிரண் பேடி புதுவை ஆளுநராகப் பதவியேற்பு". டைம்ஸ் ஒஃப் இந்தியா (29 மே 2016). பார்த்த நாள் 18 சூலை 2016.
  2. "Anil Baijal sworn in as Delhi Lieutenant-Governor". The Hindu. 31 December 2016.