உள்ளடக்கத்துக்குச் செல்

கணேசி இலால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணேசி இலால்
2018 இரத யாத்திரையின் போது
26வது ஒடிசா ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 மே 2018
முதலமைச்சர்நவீன் பட்நாய்க்
முன்னையவர்சத்யபால் மாலிக்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1996-2000
தொகுதிசிர்சா[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மார்ச்சு 1941 (1941-03-01) (அகவை 83)
சிர்சா, பஞ்சாப் மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(தற்பொழுது-அரியானா, இந்தியா)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்
சுசீலா தேவி (இற. 2020)
பிள்ளைகள்மணிஷ் சின்காலா
வாழிடம்(s)ராஜ் பவன், ஒடிசா
மூலம்: [1]

கணேசி இலால் (Ganeshi Lal)(பிறப்பு 1 மார்ச் 1941) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஒடிசாவின் தற்போதைய ஆளுநர் ஆவார்.[2][3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பேராசிரியர் கணேசி இலால் 1941ஆம் ஆண்டு மார்ச் [4] ஆம் தேதி அரியானாவின் சிர்சாவில் பிறந்தார். சிறந்த கல்வி வாழ்க்கையுடன், இவர் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் மேலும் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கம் வென்றவர். தனது கல்வியை முடித்த பிறகு, ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1964 முதல் 1991 வரை அரியானாவில் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். இலால், சுசீலா தேவியை மணந்தார்.[4] சுசீலா தேவி கோவிட்-19 காரணமாக 23 நவம்பர் 2020 அன்று இறந்தார்.

அரசியல்[தொகு]

இலால் பகவத்கீதையில் ஒரு புகழ்பெற்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதன் இரண்டாவது பதிப்பில் இயங்கும் 'Non-attached Attachment', பென் புத்தகப் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது.[5] இவர் 2003 முதல் 2007வரை[6] பாரதிய ஜனதா கட்சியின் அரியானா பிரிவின் தலைவராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sirsa Election Result". Mapsofindia. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  2. "Kerala BJP chief Kummanam Rajasekharan appointed Mizoram Governor". Indian Express. 25 May 2018. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  3. "Haryana BJP leader Professor Ganeshi Lal is new Odisha Governor". Tribune. 25 May 2018. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  4. 4.0 4.1 "RAJ BHAVAN ODISHA". www.rajbhavanodisha.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 October 2020.
  5. "Odisha Governor receives first copy of his book 'Nonattached Attachment' - Pragativadi: Leading Odia Dailly". 1 July 2020. Archived from the original on 8 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 4 October 2020.
  6. "List of Ex State Presidents". BJPHaryana.org.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேசி_இலால்&oldid=3852582" இலிருந்து மீள்விக்கப்பட்டது