தமிழிசை சௌந்தரராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர். தமிழிசை சௌந்தரராஜன்
Tamilisai Soundararajan with her book "Suvai Migu Theneer Thuligal".jpg
2வது தெலங்கானா ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
செப்டம்பர் 08, 2019
முதலமைச்சர் க. சந்திரசேகர் ராவ்
முன்னவர் ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்
25வது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (கூடுதல் பொறுப்பு)[1]
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
18 பெப்ரவரி 2021
முன்னவர் கிரண் பேடி
மாநில தலைவர் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு
பதவியில்
16 ஆகத்து 2014 – 01 செப்டம்பர் 2019
இயக்குநர் (அலுவல் சாரா),
பாரத் பெட்ரோலி நிறுவனம்[2]
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2017
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 2, 1961 (1961-06-02) (அகவை 61)[3]
நாகர்கோவில், மெட்ராஸ் ஸ்டேட், இந்தியா
(தற்போதைய தமிழ்நாடு)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மருத்துவர் பி. சௌந்தரராஜன்
பிள்ளைகள் சுகநாதன்
பெற்றோர் குமரி அனந்தன்
கிருஷ்ணகுமரி
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் மதராசு மருத்துவக் கல்லூரி
பணி * மருத்துவர்

தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan, பிறப்பு: சூன் 2, 1961) ஓர் இந்திய அரசியல்வாதியும், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும் ஆவார்.[4] 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 இல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்று அப்பதவியில் இருக்கிறார்.[5]இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தார்.[6] தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின்[7] மகளான இவரும், இவரது கணவர் சௌந்தரராஜன் தொழில்முறை மருத்துவர்கள். இவர் இதற்கு முன் பாரதிய ஜனதா கட்சியில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவராவார்.

பிறப்பு

தமிழிசை, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் சூன் 2, 1961 ஆம் ஆண்டு குமரி அனந்தன், கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் ஒரு மருத்துவர் ஆவார். இவர் சௌந்தரராஜன் என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவருடைய கணவரும் ஒரு மருத்துவர் ஆவார். இவர்களுக்கு சுகநாதன் என்னும் மகன் உள்ளார்.[8] இவர் மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை படித்து முடித்தார்.

அரசியல் வாழ்க்கை

2006, 2011 சட்டசபைத் தேர்தல்களிலும், 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக வேட்பாளராக, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியடைந்தார்.

இவரை 2017 ஆம் ஆண்டு மத்திய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின், அலுவல் சாரா இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இந்த பதவியில் இவர் மூன்றாண்டு காலம் இருப்பார் என மத்திய அரசு தெரிவித்தது.[9]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

ஆண்டு தேர்தல் கட்சி தொகுதி முடிவு பெற்ற வாக்குகள் வாக்கு சதவீதம் %
2006 சட்டமன்றத் தேர்தல் 2006 பாஜக இராதாபுரம் 5ஆவது இடம் 5,343 4.70%
2011 சட்டமன்றத் தேர்தல் 2011 பாஜக வேளச்சேரி 4ஆவது இடம் 7,040 4.63%

மக்களவைத் தேர்தல்

ஆண்டு தேர்தல் கட்சி தொகுதி முடிவு பெற்ற வாக்குகள் வாக்கு சதவீதம் %
2009 15வது மக்களவைத் தேர்தல் பாஜக வட சென்னை 3ஆவது இடம் 23,350 3.54%
2019 17வது மக்களவைத் தேர்தல் பாஜக தூத்துக்குடி 2வது இடம் 2,15,934 21.8%

ஆளுநராக

இவர் 2019 செப்டம்பர் 1 அன்று தெலுங்கானா மாநிலத்தின், ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]

பின்னர் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 இல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக நியமித்து, இவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

மேற்கோள்கள்

  1. https://www.ndtv.com/india-news/kiran-bedi-removed-as-puducherry-lieutenant-governor-amid-crisis-in-congress-government-2371971?pfrom=home-ndtv_topscroll
  2. "பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதிய பதவி!". தினமணி (15 செப்டம்பர் 2017)
  3. https://timesofindia.indiatimes.com/city/chennai/TN-BJP-chief-Thamilisai-Soundararajan-turns-55-vows-to-take-Bedi-govt-schemes-to-all-villages-in-state/articleshow/52558365.cms
  4. "ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் - தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்!". விகடன் (செப்டம்பர் 01, 2019)
  5. "புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு". விகடன் (பிப்ரவரி 16, 2021)
  6. "தினத்தந்தி". 16 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. https://web.archive.org/web/20131203041415/http://www.hindu.com/thehindu/holnus/004200904132112.htm
  8. "தமிழிசை சவுந்தரராஜன் மகன் திருமணம்: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து". (தி இந்து 18 பிப்ரவரி 2016)
  9. "தமிழிசை சௌந்தரராஜனுக்குப் புதிய பதவி வழங்கிய மத்திய அரசு!". விகடன் (16 செப்டம்பர் 2017)
  10. "தெலுங்கானா ஆளுநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்". தினத்தந்தி (செப்டம்பர் 01, 2019)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழிசை_சௌந்தரராஜன்&oldid=3532381" இருந்து மீள்விக்கப்பட்டது