இராசத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராஜஸ்தான்

राजस्थान

—  மாநிலம்  —
ஜெய்ப்பூர்
இருப்பிடம்: இராஜஸ்தான்
அமைவிடம் 26°34′22″N 73°50′20″E / 26.57268°N 73.83902°E / 26.57268; 73.83902ஆள்கூற்று: 26°34′22″N 73°50′20″E / 26.57268°N 73.83902°E / 26.57268; 73.83902
நாடு  இந்தியா
மாநிலம் இராஜஸ்தான்
மாவட்டங்கள் 33
நிறுவப்பட்ட நாள் 1 நவம்பர் 1956
தலைநகரம் ஜெய்ப்பூர்
மிகப்பெரிய நகரம் ஜெய்ப்பூர்
ஆளுநர் கல்யாண் சிங்
முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா
சட்டமன்றம் (தொகுதிகள்) Unicameral (200)
மக்களவைத் தொகுதி இராஜஸ்தான்
மக்கள் தொகை

அடர்த்தி

68 (8வது) (2011)

129/km2 (334/சது மை)

ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg
0.537 (21வது)
கல்வியறிவு 66.11% (20வது)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 342269 கிமீ2 (132151 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-RJ
இந்திய வரைபடத்தில் ராசத்தான் இருப்பிடம்

இராஜஸ்தான் (Rājasthān, தேவநாகரி: राजस्थान,pronounced [raːdʒəsˈt̪ʰaːn]  ( listen)) இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்று. செய்ப்பூர் இராசத்தானின் தலைநகராகும். உதயப்பூர், சோத்பூர் மற்ற முக்கிய நகரங்கள். இராசஸ்தானி, மார்வாரி, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகியன இங்கு பெரும்பான்மையானவர்களால் பேசப்படும் மொழிகள் ஆகும்.

இம்மாநில தார் பாலைவனத்தில் உள்ள பொக்ரான் எனுமிடத்தில் முதன் முதலாக 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாளன்று சிரிக்கும் புத்தர் எனும் பெயரில் இந்தியா முதல் அணுகுண்டு வெடித்து சோதனை செய்யப்பட்டது. பின்னர் இரண்டாம் முறையாக அதே இடத்தில், 1998 ஆம் ஆண்டு மே மாதம் 11, 13 தேதிகளில் சக்தி நடவடிக்கை எனும் பெயரில் ஐந்து அணுகுண்டுகள் வெடித்து சோதனை செய்யப்பட்டது.[1]

இராஜஸ்தான் வரலாறு[தொகு]

புவியியல்[தொகு]

இந்தியாவின் மேற்குப் பகுதியல் உள்ள இராஜஸ்தான், பாகித்தான் எல்லையை ஒட்டி உள்ளது. குசராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தில்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இராஜஸ்தானுக்கு அண்மையில் உள்ளன. இராஜஸ்தானின் வடமேற்கு பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது.

உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் இம்மாநிலத்தின் தென்மேற்கில் இருந்து வடகிழக்காக செல்கிறது. அபு சிகரம் இம்மலை மீதே அமைந்துள்ளது.

மாவட்டங்கள்[தொகு]

செய்சல்மரில் உள்ள ஒரு பழைய கட்டிடம்

ராசத்தானில் 33 மாவட்டங்கள் உள்ளன. இவையனைத்தும் ஜெய்ப்பூர், ஜோத்பூர், அஜ்மீர், உதய்ப்பூர், பிகானேர், கோட்டா, பரத்பூர் எனும் ஏழு கோட்டங்களில் அடங்கும். அவைகள் பின்வருவன;

 1. அல்வர் மாவட்டம்
 2. அஜ்மீர் மாவட்டம்
 3. அனுமான்காட் மாவட்டம்
 4. உதய்பூர் மாவட்டம்
 5. பாரான் மாவட்டம்
 6. பில்வாரா மாவட்டம்
 7. பூந்தி மாவட்டம்
 8. பரத்பூர் மாவட்டம்
 9. பான்ஸ்வாரா மாவட்டம்
 10. பார்மேர் மாவட்டம்
 11. பிகானேர் மாவட்டம்
 12. பாலி மாவட்டம்
 13. பிரதாப்காட் மாவட்டம்
 14. சூரூ மாவட்டம்
 15. கரௌலி மாவட்டம்
 16. சவாய் மாதோபூர் மாவட்டம்
 17. சித்தோர்கார் மாவட்டம்
 18. சிரோஹி மாவட்டம்
 19. சீகர் மாவட்டம்
 20. தௌசா மாவட்டம்
 21. தோல்பூர் மாவட்டம்
 22. டுங்கர்பூர் மாவட்டம்
 23. ஸ்ரீ கங்காநகர் மாவட்டம்
 24. கோட்டா மாவட்டம்
 25. ஜெய்ப்பூர் மாவட்டம்
 26. ஜாலாவார் மாவட்டம்
 27. ஜெய்சல்மேர் மாவட்டம்
 28. ஜாலாவார் மாவட்டம்
 29. சுன்சுனூ மாவட்டம்
 30. ஜோத்பூர் மாவட்டம்
 31. நாகவுர் மாவட்டம்
 32. ராஜ்சமந்து மாவட்டம்
 33. டோங் மாவட்டம்

முக்கிய நகரங்கள்[தொகு]

ஜெய்ப்பூர், ஜெய்சல்மேர், அஜ்மீர், உதயப்பூர், கோட்டா, பரத்பூர் மற்றும் சோத்பூர் நகரங்களாகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 68,548,437 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 75.13% மக்களும், நகர்புறங்களில் 24.87% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.31% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 35,550,997 ஆண்களும் மற்றும் 32,997,440 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 928 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 519 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 66.11 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 79.19 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 52.12 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,649,504 ஆக உள்ளது. பில் பழங்குடி மக்கள் தொகை 28,05,948 ஆக உள்ளது. [2]

சமயம்[தொகு]

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 60,657,103 (88.49 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 6,215,37 (9.07%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 96,430 (0.14%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 872,930 (1.27%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 622,023 (0.91%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 12,185 (0.02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 4,676 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 67,713 (0.10%) ஆகவும் உள்ளது.[3]

மொழிகள்[தொகு]

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், இராசஸ்தானி, மார்வாரி, குஜராத்தி, உருது, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழியும் பேசப்படுகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. உள் கட்டமைப்பு வசதியின்றி இருக்கும் போக்ரான்
 2. Rajasthan Population Census data 2011
 3. Rajasthan Religious Data

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசத்தான்&oldid=2512580" இருந்து மீள்விக்கப்பட்டது