சவாய் மாதோபூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் எண், சவாய் மதோபூர் மாவட்டமாகும்

சவாய் மதோபூர் மாவட்டம் (Sawai Madhopur district) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். சவாய் மாதோபூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்தியாவிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட 640 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். பனாஸ் ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது.

அமைப்பு[தொகு]

இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே டெளசா மாவட்டமும், வடகிழக்கே கரெளலி மாவட்டமும் மேற்கே சம்பல் நதியும், தென்மேற்கே கோட்டா மாவட்டமும், தென்கிழக்கே புந்தி மாவட்டமும் கிழக்கே டோங் மாவட்டமும் அமைந்துள்ளது.

வட்டங்கள்[தொகு]

சவாய் மதோபூர் மாவட்டம் 8 வருவாய் வட்டங்களாக (தாசில்கள்) பிரிக்கப்பட்டுள்ளது.:[1]

 • சவாய் மதோபூர் (Sawai Madhopur)
 • சோத் க பர்வாரா (choth ka Barwara)
 • கந்தார் (Khandar)
 • போன்லி (Bonli)
 • மலார்னா துங்கர் (Malarna Dungar)
 • கங்காபூர் நகரம் (Gangapur City)
 • வாஸிர்பூர் (Vazirpur)
 • பாமன்வாஸ் (Bamanwas)

மக்கள் தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 13,38,114 ஆகும்.[2] இது மொரீசியஸ் நாட்டின் மக்கள் தொகைக்குச் சமமாகும்.[3] மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 297 எனும் வீதத்தில் உள்ளது.[2] கல்வியறிவு 66.19% ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Official website of district sawai madhopur> Administrative setup". sawaimadhopur.nic.in. http://sawaimadhopur.nic.in. 
 2. 2.0 2.1 2.2 "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. பார்த்த நாள்: 2011-09-30. 
 3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html. பார்த்த நாள்: 2011-10-01. "Mauritius 1,303,717 July 2011 est."