ஜெய்ப்பூர் நகர அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெய்ப்பூர் நகர அரண்மனை
Jaipur 03-2016 24 City Palace complex.jpg
ஜெய்ப்பூர் அரண்மனை வளாகம்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Rajasthan" does not exist.
Location within Lua error in Module:Location_map at line 42: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Rajasthan" does not exist.
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிராஜ்புத், மேலைச் சாளுக்கியர், பதாமி சாளுக்கியர் மற்றும் முகலாயர்களின் கட்டிடக் கலவைக் கொண்டது[1][2][3][4][5]
நகர்செய்ப்பூர்
நாடுஇந்தியா
ஆள்கூற்று26°55′32″N 75°49′25″E / 26.9255°N 75.8236°E / 26.9255; 75.8236
கட்டுமான ஆரம்பம்1729
நிறைவுற்றது1732
கட்டுவித்தவர்ஜெய்ப்பூர் மன்னர் இரண்டாம் ஜெய்சிங்
நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைசிவப்பு மற்று இளஞ்சிவப்பு மணற்கற்கள்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்வித்தியாசாகர் பட்டாச்சாரியா

ஆள்கூற்று: 26°55′34″N 75°49′26″E / 26.92608°N 75.82378°E / 26.92608; 75.82378

சந்திர மகாலின் ஓவியம், ஆண்டு 1903

ஜெய்ப்பூர் நகர அரண்மனை (City Palace, Jaipur) வளாகத்தில் சந்திர மகால் மற்றும் முபாரக் மகால் போன்ற அரண்மனைகளைக் கொண்டது. இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தலைநகரான செய்ப்பூர் நகரத்தில் உள்ள இவ்வரண்மனையின் ஜெய்ப்பூர் இராச்சிய மன்னரின் வாழிடமாகும். ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சந்திர மகால் தற்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் நகரத்தின் வடகிழக்கில் அமைந்த ஜெய்ப்பூர் அரண்மனை பெரும் தாழ்வாரங்களையும், தோட்டங்களையும், கட்டிடங்களையும் கொண்டுள்ளது. ஜெய்ப்பூர் அரண்மனை சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. அரண்மனை சுவர்களிலும், கூரைகளிலும் பல வண்ணக் கண்ணாடி சில்லுகளால் அலங்கரிப்பட்டுள்ளது.

இவ்வரன்மனை 1729 - 1732 கால கட்டங்களில், ஜெய்ப்பூர் இராச்சிய மன்னர் இரண்டாம் ஜெய் சிங் காலத்தில், ராஜ்புத், மேலைச் சாளுக்கியர், பதாமி சாளுக்கியர் மற்றும் முகலாயக் கட்டிடக் கலைகளின் கலவையுடன் கட்டப்பட்டது.[1][2][3][4][5]

ஜெய்ப்பூர் அரண்மனையின் நுழைவு வாயிலின் அழகிய வளைவு

முபாரக் மகால்[தொகு]

முபாரக் மகால்

மன்னர் இரண்டாம் மதோ சிங் என்பவரால் கட்டப்பட்ட வரவேற்பு மாளிகையான, முபாரக் மகால் இசுலாமிய, இந்திய, ஐரோப்பியக் கட்டிடக் கலைநயத்தில் கட்டப்பட்டது.

சந்திர மகால்[தொகு]

ஜெய்பூர் இராச்சியத்தின் அரன்மனை குடும்பத்தினர் தங்கும் சந்திர மகால்

ஜெய்ப்பூர் அரண்மனை வளாகத்தின் மேற்கு பகுதியில் அமைந்த சந்திர அரண்மனை ஏழு தளங்கள் கொண்டது.

இவ்வரன்மனை அழகிய ஓவியங்கள், பல நிறக் கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கூடிய பூக்களால் ஆன சுவர்கள், தரைகள் கொண்டது.

தற்போது இவ்வரன்மனை, ஜெய்பூர் மன்னர்களின் வழித்தோன்றல்களின் வாழிடங்களாக உள்ளது.

எனவே சந்திர மகாலின் தரைத்தளத்தைப் பார்வையிட மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அரண்மனையின் முகப்பில், மயில் வடிவ அழகிய தோரண வாயில் கொண்டது. மேலும் தோட்டங்களுடன் கூடிய இவ்வரண்மனையில் ஒரு சிறு ஏரியும் உள்ளது. [2][3][4][5][6]

சுக் நிவாஸ் எனப்படும் ஓய்வு மாளிகை, ஜெய்ப்பூர் மன்னரின் . தனியறையாகவும், உணவுக் கூடமாக உள்ளது. சந்திர மகாலின் மூன்றாம் தளத்தை வண்ண மாளிகை என்பர். இங்குள்ள சுவர்கள், கூரைகள் மற்றும் தூண்களில் சிறிய மற்றும் பெரிய பல வண்ணக் கண்ணாடிச் சில்லுகள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. [7]சந்திர மகாலின் நான்காம் தளத்தை, சோபா நிவாஸ் என்பர்.

ஐந்தாம் தளத்தில் படிமங்களின் மாளிகை உள்ளது. ஆறாம் தளத்தை சிறீ நிவாஸ் என்பர். ஏழாம் தளத்தை மணி மகுடக் கோயில் என்பர்.[8]

பிரிதம் நிவாஸ் சதுக்கம்[தொகு]

இடது:பீதம் நிவா வாயில், வலது:மயில் வடிவ வாயில் இடது:பீதம் நிவா வாயில், வலது:மயில் வடிவ வாயில்
இடது:பீதம் நிவா வாயில், வலது:மயில் வடிவ வாயில்
அரசவை மண்டபம்
அரசவை மண்டபம்
இடது:அரசவை மண்டபம், வலது:வெள்ளிக் கலசம் இடது:அரசவை மண்டபம், வலது:வெள்ளிக் கலசம்
இடது:அரசவை மண்டபம், வலது:வெள்ளிக் கலசம்

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Brown, Lindsay; Amelia Thomas (2008). Rajasthan, Delhi and Agra. Lonely Planet. பக். 151–158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-74104-690-4. https://books.google.com/books?id=Zz0_zXPb68kC&pg=PA154&dq=City+Palace,+Jaipur&ei=nwYhS9uMCaGykATC_7jNCQ&cd=3#v=onepage&q=City%20Palace%2C%20Jaipur&f=false. பார்த்த நாள்: 2009-12-10. 
  2. 2.0 2.1 2.2 Marshall Cavendish Corporation (2007). World and Its Peoples: Eastern and Southern Asia. Marshall Cavendish. பக். 444. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7614-7631-8. https://books.google.com/books?id=5ZBaVhmRvCkC&pg=PA444&dq=City+Palace,+Jaipur&lr=&ei=kwkhS9HUIoyIkwTs0uylCQ&cd=15#v=onepage&q=City%20Palace%2C%20Jaipur&f=false. பார்த்த நாள்: 2009-12-11. 
  3. 3.0 3.1 3.2 "Palace of Maharajah, Jeypore, Rajpootana". British Library Online Gallery. பார்த்த நாள் 2009-12-11.
  4. 4.0 4.1 4.2 "City Palace Jaipur". பார்த்த நாள் 2009-12-10.
  5. 5.0 5.1 5.2 "City Palace Jaipur". பார்த்த நாள் 2009-12-10.
  6. Brown p. 151
  7. pareek, Amit kumar pareek and Agam kumar. "City palace the home of jaipur royals | History || Architecture || Rajasthan|| India |".
  8. pareek, Amit kumar pareek and Agam kumar. "City palace the home of jaipur royals | History || Architecture || Rajasthan|| India |".

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]