உள்ளடக்கத்துக்குச் செல்

அசோக் கெலட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் கெலாட்
ராஜஸ்தானின் 12வது முதலமைச்சர்
பதவியில்
17 டிசம்பர் 2018 – 15 திசம்பர் 2023
ஆளுநர்கல்யாண் சிங்
Deputyசச்சின் பைலட்
முன்னையவர்வசுந்தரா ராஜே சிந்தியா
தொகுதிசர்தார்புரா
பதவியில்
திசம்பர் 13, 2008 (2008-12-13) – 12 திசம்பர் 2013 (2013-12-12)
முன்னையவர்வசுந்தரா ராஜே சிந்தியா
பின்னவர்வசுந்தரா ராஜே சிந்தியா
பதவியில்
திசம்பர் 1, 1998 (1998-12-01) – 8 திசம்பர் 2003 (2003-12-08)
முன்னையவர்பைரோன் சிங் செகாவத்
பின்னவர்வசுந்தரா ராஜே சிந்தியா
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2017
பதவியில்
செப்டம்பர் 2, 1982 (1982-09-02) – 7 பெப்ரவரி 1984 (1984-02-07)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 மே 1951
ஜோத்பூர், ராஜஸ்தான், இந்தியா[1]
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரசு
துணைவர்சுனிதா கெலாட்
பிள்ளைகள்2

அசோக் கெலட் (Ashok Gehlot) இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும் இராசத்தான் மாநிலத்தின் 12வது முதலமைச்சரும் ஆவார்.

தனிவாழ்வு

[தொகு]

அசோக் கெலட் இராசத்தானின் ஜோத்பூர் நகரில் 3 மே 1951 அன்று லக்சுமண் சிங் கெலட்டிற்கு மகனாகப் பிறந்தார். அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பொருளியலில் முதுகலைப்பட்டமும் பெற்றவர். சுனிதாவை மணந்திருக்கும் கெலட்டிற்கு வைபவ்[2] என்ற மகனும் சோனியா என்ற மகளும் உள்ளனர்.[3]. இராசத்தானின் சைனி சாதியைச் சேர்ந்தவர்.

அரசியல் வாழ்வு

[தொகு]

இளமை முதலே அரசியலில் ஈடுபாடு கொண்ட கெலட் 1980-84 காலத்தில் ஏழாவது மக்களவைக்கு ஜோத்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து எட்டாவது மக்களவை (1984–1989),பத்தாவது மக்களவை (1991–1996), பதினொன்றாவது மக்களவை (1996–1998), பனிரெண்டாவது மக்களவை (1998–1999)களில் அத்தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டு ஜோத்பூரின் சர்தார்புரா சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியிலிருந்து 2003ஆம் ஆண்டு தேர்தலிலும் 2008ஆம் ஆண்டு தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.

நடுவண் அரசியல்

[தொகு]

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பி. வி. நரசிம்ம ராவ் ஆய அமைச்சுகளில் கெலட் பணியாற்றியுள்ளார்.1982ஆம் ஆண்டில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் உள்நாட்டு விமானத்துறை துணை அமைச்சராகவும்,பின்னர் விளையாட்டுத்துறை துணை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். 1985ஆம் ஆண்டு சுற்றுலா வளர்ச்சி மற்றும் உள்நாட்டு விமானத்துறை இணை அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் நெசவுத்துறை தனிப்பொறுப்புடன் இணைஅமைச்சராக பணியாற்றினார்.

1994ஆம் ஆண்டு முதல் 1999 வரை இராசத்தான் பிரதேச காங்கிரசின் தலைவராக கட்சிப்பணி ஆற்றினார்.2004ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய காங்கிரசின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார்.பிப்ரவரி 2009 வரை இந்தப் பதவியில் நீடித்தார்.இமாச்சலப் பிரதேசம் மற்றும் சத்தீசுக்கர் மாநில காங்கிரசு நடவடிக்கைக்களின் மேற்பார்வையாளராக இருந்தார்.

மாநில முதல்வராக

[தொகு]

1998ஆம் ஆண்டு முதன்முறையாக இராசத்தான் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.2003ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டுகள் ஆட்சியில் பஞ்ச நிவாரணம்,மின்னாற்றல் உற்பத்தி,கட்டுமான வளர்ச்சி,வேலைவாய்ப்பு பெருக்கம் ஆகியவற்றில் முனைப்பாகச் செயல்பட்டார்.

ஆயினும் 2003ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரசு தோல்வியைத் தழுவியது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றி வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராகப் பொறுப்பேற்றார். இருப்பினும் அவரது ஆட்சி பிற்பட்ட வகுப்பினர் குஜ்ஜர்களுக்கு சரியான தீர்வு காணாத நிலையில் 2008ஆம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தல்களில் மீண்டும் காங்கிரசு வெற்றி பெற்றது.

அசோக் கெலட் 13 திசம்பர் 2008 அன்று இரண்டாம் முறையாக இராசத்தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

முன்னர் இராசத்தான் முதலமைச்சர்
1998—2003
பின்னர்
முன்னர் இராசத்தான் முதலமைச்சர்
2008—2013
பின்னர்
முன்னர் இராசத்தான் முதலமைச்சர்
2018—நடப்பு
பதவியில் உள்ளார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chief Minister, Rajasthan". Rajassembly.nic.in. Archived from the original on 18 December 2018. பார்க்கப்பட்ட நாள் 13 August 2018.
  2. "(Vaibhav Gehlot)". Archived from the original on 2011-04-17. பார்க்கப்பட்ட நாள் 2010-12-07.
  3. Photo Gallery of Shri Ashok Gehlot, Chief Minister, Rajasthan

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_கெலட்&oldid=3881844" இலிருந்து மீள்விக்கப்பட்டது