நீம்ரானா
இந்தியாவின் ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்கால வரலாற்று நகரம், நீம்ரானா. குர்கானில் இருந்து 84 கி.மீ தொலைவிலும், தில்லியில் இருந்து 122 கி.மீ தொலைவிலும், ஜெய்ப்பூரிலிருந்து 150 கி.மீ தூரத்திலும் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் நீம்ரானா அமைந்துள்ளது. இது பெஹ்ரர் மற்றும் ஷாஜகான்பூர் இடையில் அமைந்துள்ளது. நீம்ரானா ஒரு தொழில்துறை மையமாகும். இந்த பகுதி இந்தியாவில் அஹிர்வால் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. இது 1947 ஆம் ஆண்டு வரை செளகான்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 16 ஆம் நூற்றாண்டின் மலைக்கோட்டை தளமாகும். செளகான்கள் முந்தைய ஆளும் வம்சமான பிருத்விராச் செளகானின் நேரடி பரம்பரையாக கருதப்படுகிறது. நீம்ரானாவிலிருந்து சிறிது தூரத்தில் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள மற்றொரு கோட்டை கெஸ்ரோலி. இது பழமையான பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். பாண்டவர்கள் தாங்கள் நாடுகடத்தப்பட்ட மறைநிலையின் கடைசி ஆண்டை கெஸ்ரோலியில் கழித்தனர் என கூறப்படுகிறது. கெஸ்ரோலியில் விராட்நகரில் புத்த விகாரையின் மிகப் பழமையான எச்சங்களையும், அங்கு பாந்துபோல், அனுமனின் ஒரே சாய்ந்த சிலை, ஆட்சியாளரும் புனித துறவியுமான பத்தரகிரியின் சமாதி ஆகியவற்றைக் காணலாம். அரியானா மற்றும் ராஜஸ்தானின் எல்லையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் இந்த பகுதியில் ஹரியான்வி மொழியும் கலாச்சாரமும் பின்பற்றப்படுகின்றன.
நீம்ரானாவின் வரலாற்று ராஜாக்கள் (ஆட்சியாளர்கள்)
[தொகு]நீம்ரானாவின் ராஜாக்கள் செளகான் குலத்தைச் சேர்ந்த சங்கத் துணைக்குழு மற்றும் காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ராவ் ராஜ்தியோ 1464 இல் நீம்ரானின் ராஜா ஆனார். 1170 இல் மண்டாவரின் நிறுவனர் ராவ் மதன் பாலின் வம்சாவளியில் ராவ் ராஜ்தியோ ஆறாவதாக இருந்தார். [1] அவருக்கு பிந்தைய ஆட்சியாளர்கள் பின்வருமாறு:
- ராஜா தெஹ்ரி சிங்
- ராஜா பீம் சிங்
- ராஜா முகந்த் சிங்
- ராஜ ஜனக் சிங் 1885-1931
ராஜா ஜனக் சிங்கின் பால்ய பருவ ஆண்டுகளான 1885 முதல் 1907 வரை நீம்ரானா மாநிலத்தை ஒரு அரசியல் முகவர் நிர்வகித்தார். 1907 பிப்ரவரியில் ராஜா ஜனக் சிங்கிற்கு முழு ஆளும் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் லாதா சிங் பாட்டியா நீம்ரானாவின் வசீராக நிறுவப்பட்டார்.
- ராவ் சாஹேப் உம்ராவ் சிங் 1932-1945
- ஸ்ரீமன் ராஜா ராஜேந்திர சிங்ஜி சாஹிப் 1946-சமீபத்தியது
- ராஜா கேசவ் சிங் (தற்போதை பட்டத்தை வைத்திருப்பவர்)
தொழில்
[தொகு]ராஜஸ்தான் அரசாங்கம், ஆல்வார் மாவட்டத்தில் உள்ள நீம்ரானாவில், ராஜஸ்தான் தொழில்துறை ஒத்துழைப்பு நிறுவனம்(RIICO) மூலம் பல தொழில்துறை மண்டலங்களை பல்வேறு கட்டங்களில் உருவாக்கியுள்ளது. வழக்கமான தொழில்துறை பகுதிகளைத் தவிர, ஏற்றுமதி மேம்பாட்டு தொழில்துறை பூங்கா (ஈபிஐபி) மற்றும் மஜ்ரா காதில் உள்ள ஜப்பானிய தொழில்துறை மண்டலம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.[2] இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நிறுவனங்கள் இந்த தொழில்துறை பகுதிகளில் தங்கள் அலகுகளை அமைத்துள்ளன. மேலும் பல புதிய தொழில்கள் வந்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. ராஜஸ்தான் தொழில்துறை ஒத்துழைப்பு (RIICO) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஜப்பானிய தொழில்துறை மண்டலம் முன்னர் இருந்த தொழில்துறை மண்டலத்தின் நீட்டிப்பாகும். கொரிய மண்டலமும் சில்வர்வுட் டவுன்ஷிப் பகுதியில் வருகிறது.
கல்வி
[தொகு]2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட செயிண்ட் மார்கரெட் பொறியியல் கல்லூரி மற்றும் பசுமையான வளாகத்திற்கான இந்தியா டுடே விருதை வென்ற என்ஐஐடி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தளம் நீம்ரானா. ராஃபிள்ஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் (நீம்ரானா) நல்ல வேலைவாய்ப்புகளுடன் கூடிய இந்தியாவின் சிறந்த விமானக் கல்லூரிகளில் ஒன்றாகும். ஒரு பல்தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் இளங்கலை படிப்புகளுக்கான ராவ் சோஹன்லால் கல்லூரி ஆகியவை நீம்ரானாவில் அமைந்துள்ளன. நீசா குழுமத்தின் கீழ் உள்ள காம்பே இன்ஸ்டிடியூட் ஆப் ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் (சிஐஎச்எம்), விடுதி நிர்வாகத் தொழிலைச் செய்வதற்கான இந்தியாவின் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் மாணவர்கள் நடைமுறை வெளிப்பாட்டைப் பெற ஆடம்பர விடுதி காம்பே சபையருடன் இணைக்கப்பட்டுள்ளது. சிஐஎச்எம்-ன் கிளைகள் ஜெய்ப்பூர் - குகாஸ், உதய்பூர் நகரம் மற்றும் காந்திநகர் குஜராத்திலும் உள்ளன. எம்.டி.வி.எம் பார்லே பள்ளி, வி.ஐ.பி பள்ளி போன்ற பல்வேறு பள்ளிகளும் நீம்ரானாவில் உள்ளன.
குறிப்புகள்
[தொகு]- ↑ Rathore, Abhinay. "Nimrana (Thikana)". Rajput Provinces of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-20.
- ↑ "Mini-Nippon in Rajasthan’s Neemrana - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/Mini-Nippon-in-Rajasthans-Neemrana/articleshow/37427439.cms.