செய்ப்பூர்

ஆள்கூறுகள்: 26°55′34″N 75°49′25″E / 26.9260°N 75.8235°E / 26.9260; 75.8235
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செய்ப்பூர்

जयपुर

இளஞ்சிவப்பு நகரம்
—  பெருநகரம்  —
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: சல் மகால், நாராயண் கோயில், ஆல்பர்ட் ஆல், அவா மகால், சந்தர் மந்தர்
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: சல் மகால், நாராயண் கோயில், ஆல்பர்ட் ஆல், அவா மகால், சந்தர் மந்தர்
செய்ப்பூர்
இருப்பிடம்: செய்ப்பூர்

, இராசத்தான்

அமைவிடம் 26°55′34″N 75°49′25″E / 26.9260°N 75.8235°E / 26.9260; 75.8235
நாடு  இந்தியா
மாநிலம் இராசத்தான்
மாவட்டம் செய்ப்பூர்
ஆளுநர்
முதலமைச்சர் அசோக் பர்னாமி
தலைவர் சோதி கண்டல்வால்
மக்களவைத் தொகுதி செய்ப்பூர்
மக்கள் தொகை

அடர்த்தி

32,10,570 (2009)

16,021/km2 (41,494/sq mi)

மொழிகள் இந்தி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

200.4 சதுர கிலோமீட்டர்கள் (77.4 sq mi)

431 மீட்டர்கள் (1,414 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.jaipur.nic.in

செய்ப்பூர் (ஆங்கிலம்: Jaipur) இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராசத்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் செய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். செய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது.

அமைவிடம்[தொகு]

மேற்கு இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர் நகரம், இந்தியாவின் தேசியத் தலைநகரம் புதுதில்லியிலிருந்து 288 கிமீ தொலைவிலும்; மும்பையிலிருந்து 1183 கிமீ தொலைவிலும்; அகமதாபாத்திலிருந்து 622 கிமீ தொலைவிலும்; சென்னையிலிருந்து 2064 கிமீ தொலைவிலும்; கொல்கத்தாவிலிருந்து 1510 கிமீ தொலைவிலும்; பெங்களூரிலிருந்து 2313 கிமீ தொலைவிலும்; ஐதராபாத்திலிருந்து 1651 கிமீ தொலைவிலும் உள்ளது.

வரலாறு[தொகு]

மக்கள்தொகையியல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, செய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது.

மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தவர்கள் 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; சமணர்கள் 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர்.[1]

இந்நகரத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.

போக்குவரத்து[தொகு]

செய்ப்பூர் தொடருந்து நிலையம்[தொகு]

செய்ப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து நாட்டின், தில்லி, சம்மு,மும்பை, கொல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம், விசயவாடா, கவுகாத்தி, ராஞ்சி, ராய்ப்பூர், போபால், குவாலியர், ஆக்ரா, மதுரா, சான்சி, புவனேசுவர் போன்ற அனைத்து பெருநகரங்களை இணைக்கும் இருப்புப் பாதைகள் உள்ளது.[2]

செய்ப்பூர் வானூர்தி நிலையம்[தொகு]

ஜெய்ப்பூர் உள்நாட்டு வானூர்தி நிலையம், வானூர்திகள் மூலம் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, புனே, கவுகாத்தி, அகமதாபாத், உதய்ப்பூர், இந்தூர், கொச்சி, புதுதில்லி நகரங்களை இணைக்கிறது.

செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், அபுதாபி, மசுகட், துபாய், சார்சா நாடுகளை இணைக்கிறது.[3]

சாலைப் போக்குவரத்து[தொகு]

1428 கிமீ நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை 79 தில்லி, மும்பை குர்கான், அச்சுமீர், வாரணாசி அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத்தையும் இணைக்கிறது.[4]

ஆக்ரா - பிகானீரை இணைக்கும் 495 கிமீ (308 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 11 செய்ப்பூர் வழியாக செல்கிறது.

சுற்றுலாத்தலங்கள்[தொகு]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jaipur City Census 2011 data
  2. https://indiarailinfo.com/departures/jaipur-junction-jp/272 ஜெய்ப்பூர் தொடருந்து கால அட்டவணை]
  3. Jaipur International Airport
  4. [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India
  5. "Jal Mahal gets a Rs1000 cr facelift". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2009-09-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்ப்பூர்&oldid=3882728" இலிருந்து மீள்விக்கப்பட்டது