தீக் மாவட்டம்
தீக் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
இராஜஸ்தான் மாநிலத்தில் தீக் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
வருவாய் கோட்டம் | பரத்பூர் |
நிறுவிய நாள் | 7 ஆகஸ்டு 2023 |
தலைமையிடம் | தீக் |
மக்கள்தொகை (2011)[1] | |
• Total | 10,72,755 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | https://deeg.rajasthan.gov.in/home/dptHome |
தீக் மாவட்டம் (Deeg district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த புதிய மாவட்டம். இதன் தலைமையிடம் தீக் நகரம் ஆகும். பரத்பூர் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களைக் கொண்டு தீக் மாவட்டம் 7 ஆகஸ்டு 2023 அன்று நிறுவப்பட்டது.
இதன் வடக்கில் அரியானா மாநிலம், கிழக்கில் உத்தரப் பிரதேசம் மாநிலம், தெற்கில் பரத்பூர் மாவட்டம், மேற்கில் அல்வர் மாவட்டம் அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]தீக் மாவட்டம் 9 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள்து.[2]
- தீக் வட்டம்
- ஜனௌதர் வட்டம்
- கும்கெர் வட்டம்
- ராரா வட்டம்
- நகர் வட்டம்
- சிக்ரி வட்டம்
- காமன் வட்டம்
- ஜுர்கரா வட்டம்
- பகாடி வட்டம்
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தீக் மாவட்டத்தின் மக்கள் தொகை 10,72,755. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 894 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,63,199 (15.21%) மற்றும் 10,669 (0.99%) ஆக உள்ளனர்.[1]இந்துக்கள் 66.02%, முஸ்லீம்கள் 31.90%, சீக்கியர்கள் 1.65% மற்றும் பிறர் 0.43% ஆக உள்ளனர்.[3]இந்தி 52.86%, பிரஜ் மொழி 31.65%, இராஜஸ்தானி மொழி 11.87%, உருது 1.62% பஞ்சாபி மொழி 1.55% மற்றும் பிற மொழிகள் 0.45% பேசுகின்றனர்.[4]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District Census Handbook 2011 - Bharatpur" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India.
- ↑ Taluks of Deeg District
- ↑ "Table C-01 Population By Religion - Rajasthan". census.gov.in. Registrar General and Census Commissioner of India.
- ↑ "Table C-16 Population by Mother Tongue: Rajasthan". censusindia.gov.in. Registrar General and Census Commissioner of India.