கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம்
Appearance
கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
ஆள்கூறுகள் (Kotputli-Behror district): 27°53′12″N 76°17′00″E / 27.8867°N 76.2834°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
கோட்டம் | ஜெய்ப்பூர் |
தலைமையிடம் | கோட்பூத்லி-பெக்ரோர் |
வருவாய் வட்டங்கள் | கோட்பூத்லி, பெக்ரோர், விராட்நகர், பன்சூர், நீம்ரானா, மந்தன், நாராயண்பூர், பௌதா[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
PIN | 30310X , 30170X |
வாகனப் பதிவு | RJ32 |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம் (Kotputli-Behror district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2][3][4]இதன் தலைமையிடமாக கோட்பூத்லி-பெக்ரோர் நகரங்கள் உள்ளது. இம்மாவட்டத்தின் அருகில் செய்ப்பூர் மற்றும் அல்வார் நகரங்கள் உள்ளது.
இம்மாவட்டம் இராஜஸ்தானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் முப்புறங்களில் ஆரவல்லி மலைத்தொடர் சூழ்ந்துள்ளது. இதன் வடக்கில் அரியானா மாநிலம் உள்ளது. இம்மாவட்டத்தில் சபி ஆறு பாய்கிறது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம் 8 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்:
- கோட்பூத்லி
- பெக்ரோர்
- விராட்நகர்
- பன்சூர்
- நீம்ரானா
- மந்தன்
- நாராயண்பூர்
- பௌதா
போக்குவரத்து
[தொகு]தில்லி-ஜெய்ப்பூர்-மும்பையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 79 மற்றும் தில்லி-மும்பை-சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 48 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Talukas of Kotputli-Behror District Map
- ↑ "Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
- ↑ "Rajasthan CM Ashok Gehlot creates 19 more districts, 3 new divisions in election year". The Times of India. 2023-03-18. https://timesofindia.indiatimes.com/city/jaipur/rajasthan-cm-announces-19-new-districts-3-new-divisions/articleshow/98742873.cms.
- ↑ "In poll year, Ashok Gehlot announces 19 new districts, 3 divisions". The Indian Express (in ஆங்கிலம்). 2023-03-18. பார்க்கப்பட்ட நாள் 2023-03-31.