துபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துபாய்
إمارة دبيّ
அமீரகம்
துபாய் அமீரகம்
Flag of துபாய்
Flag
Location of துபாய்
துபாய் is located in Dubai
துபாய்
துபாய்
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயின் அமைவு
ஆள்கூறுகள்: 25°15′00″N 55°18′00″E / 25.25000°N 55.30000°E / 25.25000; 55.30000
நாடு ஐக்கிய அரபு அமீரகம்
அமீரகம் துபாய்
நகரவாக்கம் 9 ஜூன் 1833
விடுதலை 2 டிசம்பர் 1971
(பிரித்தானியாவிடம் இருந்து)
நிர்மாணித்தவர் மக்தூம் இப்னு பதீ இப்னு சுகைல் (1833)
Seat துபை
துணைப் பிரிவுகள்
அரசு
 • வகை அரசியலமைப்பு முடியாட்சி[1]
 • மன்னர் முகமது பின் ராஷித் அல் மக்தூம்
 • முடிக்குரிய இளவரசர் ஹமதான் இப்னு முகமம்து இப்னு ராசித் அல்-மக்தூம்
பரப்பளவு[2]
 • அமீரகம் 4,114
மக்கள்தொகை (2008)[3]
 • அமீரகம் 22,62,000
 • அடர்த்தி 408.18
 • பெருநகர் 34,10,737
 • தேசியம் 
(2005)
17.1
நேர வலயம் அமீரக நேரம் (ஒசநே+4)
இணையத்தளம் துபை அமீரகம்
துபை மாநகராட்சி

துபாய் அல்லது துபை (Dubai, அரபு மொழி: دبيّ, துபாய்ய்) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும் வகையில் முதலாவது நகரமாகும். இது அராபியத் தீபகற்பத்தில் அராபிய வளைகுடாவின் (பாரசீக வளைகுடா) தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் அபுதாபி அமீரகத்தை அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது[4]. துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை மட்டுமே நடுவண் அரசின் முக்கிய தீர்மானங்களுக்கு எதிர்வாக்கு (வீட்டோ) அதிகாரம் கொண்டுள்ள அமீரகங்கள் ஆகும்[5].

துபாய் மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், முத்துக் குளித்தல் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அபுதாபி பகுதியிலிருந்து, "பனியாஸ்" என்னும் இனக்குழுவினர் அல்-மக்தூம் குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது. துபாய் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.

மக்கட்தொகைப் பரம்பல்[தொகு]

மக்கட்தொகையைப் பொறுத்தமட்டில் துபாய் மட்டுமன்றி, ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே ஒரு தனித்தன்மை உடையதாகும். இந்நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் வெளிநாட்டினராக உள்ளனர். இருப்பினும் ஆட்சி அதிகாரத்திலும், அரசுப் பணிகளிலும் பிற நாட்டினர் நுழையப் பல தடைகள் உள்ளன. மேலும், இந்நாட்டின் குடிமகனாவதற்கு கடுமையான பல சட்ட திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இந்நாட்டு மக்கள் சிறுபான்மை இனமாகவே இருந்தாலும், நாட்டின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் உள்ளது.

துபாய் அமீரகத்தின் மக்கள்தொகை சுமார் 22 லட்சம் ஆகும்.

மதம்[தொகு]

துபாய் மட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே இசுலாமிய மதத்தைப் பின்பற்றும் ஒரு நாடாகும்.

இந்நாட்டில் வாழும் வெளிநாட்டினர்களில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். இவற்றுள் இசுலாமியர், கிறித்தவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இசுலாமிய நாடாக இருந்த போதும், அங்கு வசிக்கும் மற்ற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவே உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக எல்லா மதத்தவர்களுக்கும் அவர் அவர் விருப்பபடி வணங்குவதற்கு கோயில், கிறித்தவக் கோவில்கள் மற்றும் சீக்கியக் கோயிலும் உள்ளது.

துபாய் பொருளாதாரம்[தொகு]

துபையின் இரவுக் காட்சி

2008 தரவுகளின்படி துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82.11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்[6]. துபை ஐக்கிய அரபு அமீரகங்களில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய அமீரகம் ஆகும். அபுதாபியை விட நிலப்பரப்பிலும், எண்ணெய் வளத்திலும் பல மடங்கு சிறிய ஒரு அமீரகம் துபாய். துபாய் அமீரகத்தின் தொடக்க கால வளர்ச்சிக்கு, அதன் எண்ணெய் வளம் காரணமாகவும், போதுமானதாகவும் இருந்தது. ஆனால் துபாயின் எண்ணெய் வளம் அதன் தொடர் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்பதை அந்த அமீரகத்தின் அரசாங்கம் உணர்ந்தே இருந்தது. இதன் காரணமாக, துபாய் அரசு எண்ணெய் சாரா பிற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. வெளிநாட்டு மூலதனத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களின் விளைவாக துபாய் கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக 2005-ல் வெளிநாட்டவர்கள் துபாயில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்தது வெளிநாட்டு முதலீடு பெருக ஒரு முக்கிய காரணம் ஆகும்.

துபாயின் கட்டுமானத் துறை, 2004 தொடங்கி ஐந்து ஆண்டுகள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, உருசியா, ஈரான், பாகித்தான் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்து வந்த முதலீடுகள் பெரும் காரணமாக அமைந்தது. 2008 ஆண்டு இறுதி வாக்கில் துபையின் கட்டுமானத் துறையும் அதை நம்பி இருந்த துபையின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அளவுக்கு அதிகமாக அதிகரித்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "UAE Constitution". Helplinelaw.com. பார்த்த நாள் 21 July 2008.
  2. ஐக்கிய அரபு அமீரகத்தின் பரப்பளவு செயற்கைத் தீவுகளையும் உள்ளடக்கியது.
  3. "Dubai: Profile of geographical entity including name variants. World Gazetteer.
  4. "United Arab Emirates: metropolitan areas". World-gazetteer.com. மூல முகவரியிலிருந்து 2012-12-04 அன்று பரணிடப்பட்டது.
  5. The Government and Politics of the Middle East and North Africa. D Long, B Reich. p.157
  6. ""Gross Domestic Product (GDP) of the Emirate of Dubai 2006–2008"". Dubai Statistics Centre.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துபாய்&oldid=1890696" இருந்து மீள்விக்கப்பட்டது