பூர்ஜ் அல் அராப்
பூர்ஜ் அல் அராப் | |
---|---|
![]() | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | Complete |
வகை | ஹோட்டல் |
இடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
ஆள்கூற்று | 25°08′31″N 55°11′10″E / 25.141975°N 55.186147°Eஆள்கூறுகள்: 25°08′31″N 55°11′10″E / 25.141975°N 55.186147°E |
கட்டுமான ஆரம்பம் | 1994 |
நிறைவுற்றது | 1999 |
ஆரம்பம் | டிசம்பர் 1999 |
செலவு | USD $ 650 million[1] |
உயரம் | |
கட்டிடக்கலை | 322.0 m (1,056 ft)[2] |
நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 60[2] |
உயர்த்திகள் | 18[2] |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர் | டாம் ரைட், அட்கின்ஸ் |
மேம்பாட்டாளர் | ஜுமெய்ரா |
பிற தகவல்கள் | |
Number of rooms | 202[2] |
இணையத் தளம் | |
burj-al-arab.com | |
மேற்கோள்கள் | |
[2][3][4][5][6] |
பூர்ஜ் அல் அராப் என்பது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒரு ஆடம்பர விடுதி (luxury hotel). 321 மீட்டர் (1053 அடி) உயரமுள்ள இக் கட்டிடம், விடுதியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்ற கட்டிடங்களில் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமாகும். கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில், பாரசீக வளைகுடாவில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவொன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிக்குச் செல்வதற்கெனவே கட்டப்பட்ட பாலம் ஒன்று இத் தீவைத் தலைநிலத்துடன் இணைக்கின்றது. துபாய் நகரத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உலக அளவில் அறியப்பட்ட கட்டிடமாக இது திகழ்கின்றது.
இக்கட்டிடத்தின் கட்டுமான வேலை 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடம், ஒருவகை அராபியப் பாய்க்கப்பல் ஒன்றின் பாய்மரத்தை ஒத்திருக்கும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Burj Al Arab". Encyclopedia of Things. Glasssteelandstone. 3 January 2011. 3 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Burj Al Arab Hotel - The Skyscraper Center". Council on Tall Buildings and Urban Habitat. 2012-12-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-05-20 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "skyscraperCenter" defined multiple times with different content - ↑ பூர்ஜ் அல் அராப் at Emporis
- ↑ பூர்ஜ் அல் அராப் at SkyscraperPage
- ↑ பூர்ஜ் அல் அராப் at Structurae
- ↑ "Stay at Burj Al Arab". Jumeirah. 25 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 January 2010 அன்று பார்க்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
வெளியிணைப்புக்கள்[தொகு]
- 'புரிஃஜ்-அல்-அரப் ஹொட்டல்' பரணிடப்பட்டது 2009-11-08 at the வந்தவழி இயந்திரம்
- அதிகாரபூர்வ இணையத்தளம் (ஆங்கில மொழியில்)
- பூர்ஜ் அல் அராபின் உலங்குவானூர்தி இறங்குதளத்தில் டென்னிஸ் விளையாட்டு (ஆங்கில மொழியில்)
- பூர்ஜ் அல் அராப் பற்றிய ஒரு கட்டுரை (ஆங்கில மொழியில்)
- கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் பூர்ஜ் அல் அராப் (ஆங்கில மொழியில்)
- 3D Model of Burj Al-Arab for Google Earth பரணிடப்பட்டது 2008-05-15 at the வந்தவழி இயந்திரம்
- Burj al-Arab Reservation பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்