பாம் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம், ஜுமேரா.

தற்போது, துபாய், அமீரகத்தின் கடற்கரையை அண்டி, கடலுக்குள், பேரீச்ச மரங்களின் வடிவில் அமைக்கப்பட்டு வரும் மூன்று பெரிய தீவுகள் பாம் தீவுகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றை அல் நக்கீல் புரொப்பர்ட்டீஸ் (Al Nakheel Properties) என்னும் நிறுவனத்தினர் அமைத்து வருகிறார்கள். இத் தீவுகள் ஒவ்வொன்றும் ஒரு பேரீச்ச மர வடிவத்தையும் அதன் தலைப் பகுதியைச் சூழ ஒரு பிறை வடிவத்தையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. துபாய் கடற்கரையின் அகலமான கண்டத் திட்டும், ஆழம் குறைவான பாரசீக வளைகுடாவும் இத் தீவுகள் கட்டப்படுவதைச் சாத்தியமாக்கி உள்ளன.

மூன்று தீவுகள்[தொகு]

பாம் தீவுகள் மூன்றும், அவை அமைந்துள்ள இடங்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

  1. பாம் ஜுமேரா
  2. பாம் ஜெபல் அலி
  3. பாம் டெய்ரா

இதனையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Palm Islands
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்_தீவுகள்&oldid=3295917" இலிருந்து மீள்விக்கப்பட்டது