உலக வணிக மைய வதிவிடம்

ஆள்கூறுகள்: 25°13′36.25″N 55°17′20.13″E / 25.2267361°N 55.2889250°E / 25.2267361; 55.2889250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக வணிக மைய வதிவிடம்
உலக வணிக மைய வதிவிடம் வலப்பக்கத்தில் உள்ளது. டிசம்பர் 28, 2007

உலக வணிக மைய வதிவிடம் வலப்பக்கத்தில் உள்ளது. டிசம்பர் 28, 2007


தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Complete
தொடக்கம் 2005
கட்டப்பட்டது 2008
திறப்பு 2008
பயன்பாடு வதிவிடம்
உயரம்
Antenna/Spire 158 மீ (518 அடி)
தள எண்ணிக்கை 38
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் ஹசெல் டபிள்யூ. எஸ். வொங்
Developer அஸ்டெக்கோ
முகாமை ஜுமேரா லிவிங்[1]

உலக வணிக மைய வதிவிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்றான துபாயில் அமைந்துள்ள துபாய் பன்னாட்டு மாநாட்டு மையத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள 38 மாடிகளைக் கொண்ட கட்டிடமாகும். 2008 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட உலக வணிக மைய வதிவிடம் ஜுமேரா லிவிங் என்னும் நிறுவனத்தால் மேலாண்மை செய்யப்படுகின்றது.[2] இக் கோபுரத்தின் மொத்த உயரம் 158 மீ (518 அடி). இக் கட்டிடம் ஒரு ஐந்து நட்சத்திரத் தரம் உள்ள வதிவிட வசதிகளைக் கொண்டுள்ளது.[3] இக் கட்டிடம் துபாயின் முதல் உயரமான கட்டிடமான உலக வணிக மையக் கட்டிடத்துக்கு அருகில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 2005 இல் தொடங்கிய அத்திவார வேலைகள் 2006 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் நிறைவெய்திக் கட்டிடத்தின் நிலமேற் பகுதி வேலைகள் தொடங்கின.[4] இக் கட்டிடம் பழைய உலக வணிக மைய விடுதி இருந்த இடத்தில் அமைந்துள்ளது.[3] உலக வணிக மைய விடுதி உடைப்பு வேலைகள் 1 ஏப்ரல் 2005 இல் இடம்பெற்றன. துபாயில் கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்ட இரண்டாவது நிகழ்வு இதுவாகும்.[5]

குறிப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
World Trade Centre Residence
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_வணிக_மைய_வதிவிடம்&oldid=3364736" இருந்து மீள்விக்கப்பட்டது