பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மரக்குற்றிகளால் அமைக்கப்பட்ட ஒரு பாலம்

பாலம் என்பது, வீதிகள், தொடர்வண்டிப்பாதைகள், ஆறுகள், வேறு நீர்நிலைகள் போன்ற தடைகளைக் கடப்பதற்காக கட்டப்படும் அமைப்புகள் ஆகும். பொதுவாகப் பாலங்கள் அவற்றுக்குக் கீழாக வீதி அல்லது நீர்ப் போக்குவரத்துக்களை அனுமதிக்கக் கூடியதாக, தகுந்த உயரத்திலும், உரிய வடிவமைப்பிலும் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாகப் பாலங்களின் நோக்கம், இடங்களுக்கிடையே தொடர்ச்சியானதும், சீரானதும், இலகுவாகப் பயணம் செயத்தக்கதுமான பாதையொன்றை உருவாக்குவதன் முலம் போக்குவரத்தை இலகுவாக்குவதாகும்.

வரலாறு[தொகு]

ஸ்பெயின், கொர்டோபாசவில் இருக்கும் கி.மு முதலாம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட ரோமானிய பாலம்.

ஆரம்பகாலப் பாலங்கள், மரக்குற்றிகளால் நிர்மாணிக்கப்பட்டன. இத்தகைய பாலங்களை இன்றும் கிராமப் பகுதிகளில் காணமுடியும். இதற்காகப் பொதுவாக ஒரே நீளமான, தென்னை, பனை போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுவதைக் காணமுடியும். பின்னர் கல்லாலான தூண்களின் மீது கல்லாலான அல்லது மர உத்தரங்களை வைத்துப் பாலம் அமைக்கப்பட்டது. இத்தகைய முறைகள் மூலம் கூடிய தூரங்களைக் கடக்கப் பாலம் அமைக்க முடியாது.

பாலங்களும், நீர்காவிகளும் அமைப்பதற்காக வளைவு (கட்டிடக்கலை) அமைப்புகளை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள் ரோமானியர் ஆவர். இவர்கள் கட்டிய மேற்படி அமைப்புக்கள் சில இன்றும் நிலைத்திருப்பதைக் காணமுடியும்.

பால வகைகள்[தொகு]

பாலங்களில் ஆறு முக்கிய வகைகள் உள்ளன. அவை

  • கற்றை பாலம்
  • பிடிமானமான பாலம் (cantilever bridges)
  • வளைவு பாலங்கள்
  • தொங்கு பாலங்கள்
  • வடம்-தங்கி பாலங்கள்
  • சட்டக பாலங்கள்.
கற்றை பாலம்
BeamBridge-diagram.svg
இவை இருபுறங்களிலும் தாங்கும் அமைப்பை கொண்ட ஒரு கிடைமட்ட கரையை கொண்டவை ஆகும் இது இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட தாங்கும் அமைப்புகளை கொண்டிருக்கலாம்.வேறுபட்ட தூரங்களுக்காக ஓரங்களை தவிர பல தாங்கு தூண்களை கொண்டிருக்கும்.அமைப்பானது பியர்ஸ் என்று அழைக்கப்படும். [1] இவை இரும்பு,மரம்,கற்காரை என பலவகைப்பட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்படலாம்.

உலகில் மிக நீண்ட கற்றை பாலமானது லூசியானாவில் உள்ள பொன்ட்சார்ட்ரைன் ஏரி பாதை ஆகும்.இது 23.83 miles (38.35 km) நீளமுடையதாகும்..அதன் தூண்களுக்கு இடைப்பட்ட தூரம் 56 feet (17 m) ஆகும்.[2] இவை உலகில் அதிகமாக காணப்படும் வகை பாலமாகும்.

சட்டக பாலங்கள்
TrussBridge-diagram.svg
சட்டக பாலங்களில் அதன் எடை தாங்கும் திறன் அதன் சட்டங்களில் சமமாக பகிரப்படுவதால் அதிக எடையை தாங்க வல்லதாக உள்ளது.இது முக்கோண வடிவ உலோக சட்டங்களை இணைத்து கட்டப்பட்டிருக்கும்.இவை 19 மற்றும் 2௦ ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது.இதுவே நவீன கால பாலங்களில் பழமையானது.மேலும் இது கட்டுமான பொருட்களை அதிக அளவில் மிச்சப்படுத்துகிறது.
பிடிமான பாலம்
CantileverBridge-diagram.svg
பிடிமான பாலங்கள் ஒரே ஒரு முனையில் மட்டும் பிடிமானத்தை கொண்டிருக்கும் பாலங்கள் ஆகும்.பொதுவாக நகரக்கூடிய

வகை பாலங்கள் இந்த முறையில் கட்டப்பட்டிருக்கும்.இதில் இருபுறமிருந்தும் பிடிமானங்கள் மூலம் கட்டப்பட்டு மையப்பகுதியில் சேருமாறு அமைக்கப்பட்டிருக்கும். உலகின் மிகப்பெரிய பிடிமான பாலம் கனடாவின் கியுபெக் நகரில் இருக்கும் 549-metre (1,801 ft) நீளமுடைய கியுபெக் பாலம் ஆகும்

வளைவு பாலங்கள்
ArchBridge-diagram.svg
வளைவு பாலங்கள் அவற்றின் இருபுறங்களிலும் கீழ்நோக்கிய வளைவுகளை கொண்டிருக்கும்.இப்பாலத்தின் எடையானது அதன் இரு ஓரங்களிலும் சமமாக பங்கிடப்பட்டிருக்கும்.

தற்போது உலகில் உள்ளவற்றில் மிகப்பெரிய வளைவு பாலமானது சீனாவின் யங்ட்சே நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் 1,741 நீளமும் 552 மீட்டர் உயரமும் கொண்ட சோடியான்மென் பாலமாகும்.

இணைக்கப்பட்ட வளைவு பாலம்
TiedarchBridge-diagram.svg
இவை வழக்கமான வளைவு பலன்களை போல அல்லாமல் வளைவுகளை மேற்புறம் கொண்டும்,பல இணைப்பு தூண்களை கொண்டும் உள்ளது.வளைவு பாலங்கள் அதன் எடையை அதன் ஓரங்களில் நிலைபெற செய்திருக்கும்.ஆனால் இவை அதன் எடை முழுவதையும் பாலத்தின் கிடைமட்டப்பகுதியில் பகிருகிறது.இவை வில் நாண் வளைவுகள் என்றும் அழைக்கப்படும்.
வடம்-தங்கி பாலங்கள்
SuspensionBridge-diagram.svg
வடம்-தங்கி பாலங்கள் பொதுவாக கம்பிவடத்தால் தாங்கப்படுகின்றன.முதன்முதலில் கம்பிகளுக்கு பதில் மூங்கிலால் சூழப்பட்ட கயிறுகள் பயன்படுத்தப்பட்டன.இவற்றில் பாலத்தின் முழுப்பகுதியும் ஆங்காங்கே

அமைக்கப்பட்டிருக்கும் செங்குத்து கோபுரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். உலகின் மிக நீண்ட கம்பிவட பாலம் 3,909 m (12,825 ft) நீளமுடைய ஜப்பானின் அகாஷி கைக்யூ பாலம் ஆகும். [3]

கம்பிவட தாங்கு பாலம்
CableStayedBridge-diagram.svg
இவையும் வடம்-தங்கி பாலங்களை போலவே இருப்பினும் இதில் குறைந்த அளவிலான கம்பிவடன்களே தேவைப்படுகிறது.அண்ணல் கம்பிகளை தாங்கும் செங்குத்து கோபுரங்களின் உயரம் அதிகமாக இருக்கும்..[4]

இந்த வகையி உலகிலேயே மிக நீண்ட பாலம் சீனாவின் யங்ட்ஜீ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுடோங் பாலமாகும்.

நிலையான பாலங்களும் அசைக்கக்கூடிய பாலங்களும்[தொகு]

அதிகமான பாலங்கள் நிலையான பாலங்களாகவே காணப்படுகின்றன. அதாவது அவற்றிடம் அசைக்கக்கூடிய எந்தவொரு பகுதியும் காணப்படாது. அவை பழுதடையும் வரை அல்லது இடிக்கப்படும் வரை ஒரே இடத்திலேயே இருக்கும். பெய்லி பாலங்களைப் போன்ற (Bailey bridges) தற்காலிக பாலங்கள், விரும்பிய வாறு மாற்றக் கூடியதாகவும் பகுதிகளை பிரித்து எடுக்கக் கூடியதாகவும் விரும்பியவாறு பாலம் இருக்கும் திசையை மாற்றக் கூடியதாகவும் மீள்-பாவனைக்கு உட்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது. இவ்வகைப் பாலங்கள் இராணுவப் பொறியியலில் (military engineering) முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் பாழடைந்த பாலங்கள் சீர் செய்யப்படும் போது அவற்றுக்குப் பதிலாக இவ்வகைப் பாலங்களைப் பயன்படுத்தலாம். இவையெல்லம் பொதுவாக மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன.

பொருளை வைத்து பாலத்தை வேறுபடுத்தல்[தொகு]

பாலத்தின் அமைக்கப் பயன்படுத்தப்படும் பொருளை வைத்தும் பாலங்களை வகைப்படுத்தலாம். 18 ஆம் நூற்றாண்டின் முடிவு வரை பாலங்கள் மரம், கற்கள் போன்றவற்றாலையே உருவாக்கப்பட்டது. புதிய வகைப் பாலங்கள் கொங்கிரீட், உருக்கு, துருப்பிடிக்காத உருக்கு அல்லது சேர்க்கைகள் போன்றவற்றல் கட்டப்பட்டு வருகின்றது.

உச்சாதுணைகள்[தொகு]

  1. "Beam bridges". Design Technology. பார்த்த நாள் 2008-05-14.
  2. "A big prefabricated bridge". Life 40 (22): 53–60. 28 May 1956. 
  3. Sigmund, Pete (2007-02-07). "The Mighty Mac: A Sublime Engineering Feat". Construction Equipment Guide. http://www.constructionequipmentguide.com/story.asp?story=8153&headline=The%20Mighty%20Mac:%20A%20Sublime%20Engineering%20Feat. பார்த்த நாள்: 2008-05-14. 
  4. Johnson, Andy. "Cable Stay vs Suspension Bridges". U.S. Department of Energy.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலம்&oldid=2057784" இருந்து மீள்விக்கப்பட்டது