தொட்டிப் பாலம்
Jump to navigation
Jump to search
தொட்டிப்பாலம், இரண்டு உயரமான இடங்களுக்கிடையே காணப்படும் பள்ளத்தாக்கை பாவும் வகையில் அமைக்கப்பட்ட வாய்க்கால் ஆகும். கட்டாயமாக நீரைக் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலம் அல்லது ஏதண்டம் மட்டுமே தொட்டிப்பாலம் எனப்படும். கப்பல் போக்குவரத்துக்காகவும் சிலவேளைகளில் தொட்டிப் பாலம் அமைக்கப்படுகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் என்னும் மலைப்பகுதியில் 1971ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது மாத்தூர் தொட்டிப் பாலம்.