பேச்சு:பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg பாலம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தலைப்பு மாற்ற வேண்டுகோள்[தொகு]

பாலம் என்பது இந்தி மொழிச் சொல் ஆகும். இங்கே பார்க்க. பாலம் என்பதற்குத் தமிழில் வழங்கி வந்த சொல் அணை என்பதாகும்.

அலை கடல் தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீத்தம்அந் நீத்தமே.

கம்ப இராமாயணத்தின் ஆற்றுப் படலத்தில் இவ்வரி இடம்பெற்றுள்ளது. இங்கே பாலத்தைக் குறிக்க அணை என்னுஞ்சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அணை என்பது அணைக்கட்டையும் குறிக்கும். ஆகவே, எவ்வாறு பெயரிடலாம் என உதவி வேண்டுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:31, 8 மே 2012 (UTC)

அணை என்பது தமிழில் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பாலம் என்ற சொல் தமிழில் வழங்கும் சொல் மட்டுமல்ல, கலந்தும் விட்டது.--Kanags \உரையாடுக 12:29, 10 மே 2012 (UTC)
கனகின் கருத்துடன் உடன்படுகிறேன். அணை என்பது தற்காலத்தில் அணைக்கட்டையே குறிப்பதால் பாலம் என்பதற்கு அணை எனப் பெயரிட்டால் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே தலைப்பை மாற்ற வேண்டாம் என்பதே எனது கருத்தும்.--சிவக்குமார் \பேச்சு 13:05, 10 மே 2012 (UTC)
கனக்ஸ் மற்றும் சிவக்குமாரின் கருத்துடன் உடன்படுகிறேன். தலைப்பை மாற்றத் தேவையில்லை. --சிவகோசரன் (பேச்சு) 08:47, 11 மே 2012 (UTC)

பாலத்தைக் குறிப்பதற்குப் பண்டைய தமிழ் இலக்கியங்களில் வேறேதும் சொல் உள்ளதா? பாலம் என்பது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மைதான். அதேவேளை, அணை என்பது இங்கு பொருத்தமானதன்று. ஏனெனில், அச்சொல் அணைக்கட்டு என்னும் பொருளிலேயே பொது வழக்கிற் பயன்படுத்தப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 09:00, 11 மே 2012 (UTC)

குலை என்னுஞ்சொல்லும் பாலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் அவ்வாறே பயன்படுத்தப்பட்டுள்ளது.
குரைகடலை அடலம்பால் மறுக வெய்து
குலைகட்டி மறுகரையை யதனா லேறி

--மதனாகரன் (பேச்சு) 13:18, 11 மே 2012 (UTC)

பாலம் என்பது இந்திச் சொல் என்பது ஏற்பதற்கு கடினமாகவுள்ளது. வழக்கில், பாலமோ அதைச் சார்ந்த சொல்லோ இந்தியில் இருப்பதாக தெரியவில்லை. நீங்கள் குறிப்பிடும் கம்பராமாயணத்திலேயே பாலம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. (உதா ஆரண்ய காண்டம்: 77 பாடல்). நுட்பரீதியில் பார்த்தால் மூல ராமாயணத்தில் சேது பந்த(सेतु बांध) என்று கூறுவது கடலில் போடப்படும் தடையைத்தான். பந்த-அணை. எனவே கம்பர் குறிப்பிடும் அணை, தடுப்பு என்று பொருள். பாலம் என்பது தடுப்பாக இல்லாமல் நீர் கடந்து செல்லவும் துணை புரியும் ஒரு கட்டுமானமாகும். குலை என்று நடைமுறையில் இல்லாத ஒரு சொல்லைப் பயன்படுத்துவதால் நன்மையில்லை என நினைக்கிறேன். பாலம் என்பது அனைத்து ஊடகங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்திவரும் அதை மாற்ற வேண்டாம் என்பது என கருத்து--நீச்சல்காரன் (பேச்சு) 01:27, 12 மே 2012 (UTC)

பாலம் என்பது இந்திச் சொல் என இக்கட்டுரையிலேயே பார்த்தேன். இதனைத் தேனி.எம்.சுப்பிரமணி. தெளிவுபடுத்தினால் நன்று. --மதனாகரன் (பேச்சு) 03:53, 12 மே 2012 (UTC)

உண்மையிலேயே பாலம் என்பது இந்திச் சொல்லென்று கூறும் கட்டுரையைப் பார்த்த போது என்னாலும் நம்ப முடியவில்லை. சிங்களத்திலும் பாலம (පාලම) என்றுதான் கூறப்படுகிறது. எனினும் பாலம் என்பதன் தொடக்கம் எந்த மொழியிலிருந்தென்பது சரிவரத் தெரியவில்லை.--பாஹிம் (பேச்சு) 03:59, 12 மே 2012 (UTC)

இவ்வகர வரிசையில் வாராவதி (Bridge) என்னும் வட சொல்லுக்கான தமிழ்ச் சொல்லாகப் பாலம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, மேற்கூறப்பட்ட கட்டுரையிலுள்ளதைத் தெளிவுபடுத்துவது நன்று. --மதனாகரன் (பேச்சு) 04:05, 12 மே 2012 (UTC)
"பாலம்" என்னும் சொல் மிகப் பரவலாக வழக்கில் இருப்பதாலும், அதற்கு ஈடாக வேறு தமிழ்ச் சொற்கள் பொது வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை என்பதாலும் தலைப்பை மாற்றாமல் விடுவதையே நானும் விரும்புகிறேன். --- மயூரநாதன் (பேச்சு) 05:52, 12 மே 2012 (UTC)
நானறிந்தவரையிலும் (பணிநிமித்த) இந்தியில் பாலம் என வழங்குவதாகத் தெரியவில்லை. சேது என்றே அழைக்கின்றனர்.உ-ம்; மகாத்மா காந்தி சேது, ராஜேந்திர சேது, விவேகாநந்தா சேது என்பன சில. தொங்கு பாலங்களை ராம் ஜூலா, லட்சுமண் ஜூலா என்கின்றனர். மற்றொரு சொல் பூல் (லக்டி கா பூல்) ஆகும். எனவே இது குறித்த விளக்கம் தேவை. தவிர, மயூரநாதன் கூறுவதுபோல மிகப் பரவலாக வழக்கில் மற்றும் இந்த விக்கியில் பயன்படுத்தப்படுவதாலும் இதனையொட்டி தொங்கு பாலம், மேம்பாலம், விரைவுவழிப் பாலம் என பக்கங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாலும் தலைப்பை மாற்றாமல் விடுவதையே நானும் விரும்புகிறேன். --மணியன் (பேச்சு) 14:10, 12 மே 2012 (UTC)
கடந்த ஐந்து நாட்களாக சிறிய சுற்றுப்பயணம் சென்று விட்டதால் விக்கிப்பீடியாவில் பங்களிக்கவோ, பார்க்கவோ இயலவில்லை. பாலம் என்ற சொல் நான் தொடங்கிய கட்டுரை ஒன்றில் இந்திச் சொல் என்று குறிப்பிடப்பட்டுள்ளதும், இதுகுறித்து சில உரையாடல்கள் நடந்திருப்பதும் தற்போதுதான் பார்த்தேன். இந்த விவாதத்திற்கு “அருந்தமிழில் அயற்சொற்கள்” எனும் நூல் எழுதிய தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குனர் முனைவர் ந. அருள் பதிலளிப்பதே சரியானதாக இருக்கும் என்பதால் இந்தப் பக்கத்தைப் பார்வையிட்டுப் பதிலளிக்குமாறு அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அவரளிக்கும் விளக்கத்தை அறிந்து கொள்வோம். மிகச் சிறப்பான அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தழிழ்ச்சொல் கிடைக்கும் வரை மயூரநாதன் கூறுவது போல மிகப் பரவலாக வழக்கில் இருக்கும் பாலம் எனும் தலைப்பிலேயே தொடரட்டும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:56, 18 மே 2012 (UTC)

விளக்கமளித்தமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 02:40, 19 மே 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாலம்&oldid=2297635" இருந்து மீள்விக்கப்பட்டது