பயனர் பேச்சு:Kanags

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


கவனிக்க[தொகு]

வணக்கம் "பேச்சு:கூகுள்-மொழிப்பெயர்ப்பு மென்கலக்கருவி" என்ற பேச்சுப் பக்கமானது. தனியாக உள்ளது. இதில் உள்ள உள்ளடக்கத்தை அப்படியே வெட்டி கூகுள் மொழிபெயர்ப்பு பக்கத்தில் ஒட்டி பின்னர் பேச்சு:கூகுள்-மொழிப்பெயர்ப்பு மென்கலக்கருவி பக்கத்தை நீக்கிவிடலாமா. அல்லது அப்பக்த்தை எதுவும் செய்யாமல் விட்டுவிடலாமா--அருளரசன் (பேச்சு) 14:26, 21 சனவரி 2019 (UTC)

@Arularasan. G: வெட்டி ஒட்டுவது நல்லதல்ல. வரலாற்றுடன் இணைத்திருக்கிறேன். நன்றி.--Kanags (பேச்சு) 21:36, 21 சனவரி 2019 (UTC)

சந்தேகம்[தொகு]

வணக்கம் அண்ணா, ஒரு நபர் ஒரே ஐ. பி. முகவரியில் பல கணக்குகளை உபயோகிக்கிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது அண்ணா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:28, 22 சனவரி 2019 (UTC)

உதவி[தொகு]

வணக்கம் ஐயா! இலங்கைப் பெண்கள் குறித்த கட்டுரைகளில் சரியான பெயர்கள் தெரியாததால் ஓரளவு தலைப்பிட்டுள்ளேன். ஏதேனும் தவறுகள் இருப்பின் மாற்றி உதவுங்கள்.--அபிராமி (பேச்சு) 18:29, 23 சனவரி 2019 (UTC)

@அபிராமி நாராயணன்: கவனிக்கிறேன். இன்னும் ஒரு குறிப்பு. நீங்கள் ஆங்கில விக்கியில் இருந்தே பெரும்பாலான கட்டுரைகளை மொழிபெயர்க்கிறீர்கள். இதற்கு உங்களுக்கு இந்தக் கருவி நிச்சயம் உதவும். இதனை நிறுவுங்கள். கட்டுரையில் உள்ள விக்கியிடை இணைப்புகளை ஒரு நொடியில் இணைத்துவிடும். கட்டுரையை எழுதுபவரே இந்த இணைப்புகளை வழங்கி விட்டால் கட்டுரையைத் திருத்துபவருக்கு இலகுவாக இருக்கும். ஏனைய புதிய பயனர்களுக்கும் இக்கருவி குறித்து அறியத் தாருங்கள். உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags (பேச்சு) 22:16, 23 சனவரி 2019 (UTC)
மிக்க நன்றி ஐயா. இக்கருவியை இணைத்துள்ளேன்.--அபிராமி (பேச்சு) 13:44, 24 சனவரி 2019 (UTC)

பரிந்துரை[தொகு]

வணக்கம். இந்தியர்களால் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில்...

  1. இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் எனும் பகுப்பையும் (தற்போது பகுப்பின் தலைப்பு பிழையாக இருக்கிறது!)
  2. xxxx தமிழ்த் திரைப்படங்கள் (உதாரணமாக 2016 தமிழ்த் திரைப்படங்கள்) எனும் பகுப்பையும் இட்டால் போதுமானது என நினைக்கிறேன். இது குறித்து உங்களின் கருத்தைத் தெரிவிக்கவும். உங்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் அனைத்துப் பயனர்களுக்கும் தெரிவிப்பேன்.

இந்தியத் திரைப்படங்கள், தமிழ்த் திரைப்படங்கள், 2016 திரைப்படங்கள் என சீராக இல்லாமல் பலரும் பலவிதமாக பகுப்பு இட்டு வருகின்றனர். இதனை நெறிப்படுத்த வேண்டும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:31, 25 சனவரி 2019 (UTC)

ஆலோசனை[தொகு]

வணக்கம் Kanags 1. ஒரே பெயர் அல்லது ஒரே மாதிரியான பகுப்புகளை எப்படி ஒன்றாக சேர்த்தல் ? 2. ஒரு கட்டுரையில் பகுப்பின் பெயர் மாற்றும் பொது, அந்த பகுப்பு உள்ள கட்டுரைகளில் தானாக மாற்றம் செய்யமுடியுமா? 3. தமிழில் உள்ள அனைத்து பகுப்புகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் பார்க்கும் வசதி உண்டா? ஏனெனின் பல தமிழ் பகுப்புகள் ஆங்கில விக்கிப்பீடியாவில் இணைக்காமல் உள்ளது. அதை கண்டு கொன்று தமிழ் விக்கிப்பீடியாவில் இணைக்க விரும்புகின்றேன். --Thilakshan 19:07, 28 சனவரி 2019 (UTC)

@Thilakshan:
1. பகுப்புகளை இணைத்தல்: பகுப்பில் {{mergeto|இணைக்க வேண்டிய பகுப்பின் தலைப்பு}} என எழுதிச் சேமியுங்கள்.
2. முடியாது. தானியங்கி அணுக்கம் உள்ல ஒருவரை அணுக வேண்டும்.
3. விக்கிப்பீடியா:அகர வரிசையில் கட்டுரைகள். தேடும் போது பகுப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.--Kanags (பேச்சு) 22:51, 29 சனவரி 2019 (UTC)

பரிசீலனை (உதவி)[தொகு]

வணக்கம் மொழி என்ற கட்டுரையில் உள்ள கட்டுரைகள் நம்பத்தக்கதவாறு உள்ளன? இந்திய மொழிகள் கீழ் உள்ள கட்டுரைகளில் இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி என்றும் உலகளவில் 28% மக்கள் தெலுங்கு மொழியை பயன்படுத்துவதாகவும் எழுதப்பட்டுள்ளது. தமிழ் மொழி கிரேக்க மொழியிலிருந்து தோன்றியது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல்கள் நம்பத்தக்கவாறு உள்ளது என்ன செய்வது என சொல்லவும்?.--Thilakshan 19:38, 29 சனவரி 2019 (UTC)

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இவற்றை மீள்வித்திருக்கிறேன்.--Kanags (பேச்சு) 22:57, 29 சனவரி 2019 (UTC)

பகுப்பு:மொழிகள், பகுப்பு:மொழி[தொகு]

மேற்கூறிய இரு பகுப்புகள் உள்ளன. இரண்டும் தேவையா, அல்லது ஒன்றாக்கி விடலாமா?--கலை (பேச்சு) 16:36, 30 சனவரி 2019 (UTC)

  • மன்னிக்கவும், நான் தான் அப்படி மொழி எனும் புதிய பகுப்பை உருவாக்கினேன். என்னுடைய கருத்தும் இரண்டையும் ஒன்று இணைப்பது தான் என்று. --Thilakshan 19:05, 30 சனவரி 2019 (UTC)
@Thilakshan:ஆங்கில விக்கியில், Languages, Language என்று இரு பகுப்புகள் இருப்பதையும், அவை முறையே மொழிகள், மொழி பகுப்புகளுக்கு இணைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தேன். எனவே அவற்றை அப்படியே விடலாம் என நினைக்கிறேன். நன்றி. --கலை (பேச்சு) 20:24, 7 பெப்ரவரி 2019 (UTC)

உதவி[தொகு]

அண்ணா, இக்கட்டுரையை ஒன்றிணைக்கும் போது ஏதோ தவறு செய்துவிட்டேன், கட்டுரையில் உள்ள வரலாறுகள் அனைத்தும் இருக்கிறது. ஆனால் ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தையே காணோம்?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:02, 1 பெப்ரவரி 2019 (UTC)

Yes check.svgY ஆயிற்று.--Kanags (பேச்சு) 22:24, 1 பெப்ரவரி 2019 (UTC)

வழிமாற்று நீக்க உதவி[தொகு]

சுற்றுச்சூழல் (Biophysical environment) கட்டுரைக்கு இயற்கைச் சூழல் (Natural environment) என்ற வழிமாற்று உள்ளது. இரண்டும் ஆங்கில விக்கியில் இரண்டு கட்டுரைகளாக உள்ளன. புதிய கட்டுரை எழுத முயலும்போது வழிமாற்றுகிறது. எனவே வழிமாற்றை நீக்க வேண்டுகிறேன் ஐயா.--அபிராமி (பேச்சு) 18:44, 6 பெப்ரவரி 2019 (UTC)

Yes check.svgY ஆயிற்று
அபிராமி! வழிமாற்றை நீக்கியுள்ளேன். சுற்றுச் சூழல் கட்டுரைக்கு விக்கியாக்கம் கேட்டிருந்தீர்கள். அந்தக் கட்டுரையை மேம்படுத்தியுள்ளேன். இயற்கைச் சூழல் கட்டுரையை ஆரம்பித்து விடுங்கள்.Face-smile.svg @அபிராமி நாராயணன்:--கலை (பேச்சு) 20:25, 6 பெப்ரவரி 2019 (UTC)
மிக்க நன்றி--அபிராமி (பேச்சு) 13:07, 7 பெப்ரவரி 2019 (UTC)

கட்டி (உயிரியல்)[தொகு]

கட்டி (உயிரியல்) பக்கத்தில் ஆங்கில விக்கிக்குரிய இணைப்பைக் காணவில்லையே? ஏன்? அதனை எப்படி சரி செய்வது எனத் தெரியவில்லை. அறிந்து கொள்ள விருப்பம். வேறு கட்டுரைகளில் இதே பிரச்சனை ஏற்பட்டாலும் நானே திருத்தலாம். Wikidata வில் சென்று எப்படி மாற்றலாம்? Neoplasm ஆங்கில விக்கிக் கட்டுரைக்குள் சென்று, Edit interwiki language links ஐ அழுத்திப் போனாலும், எப்படி தமிழ் விக்கிக் கட்டுரையை அங்கே இணைப்பது? உதவுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 20:28, 7 பெப்ரவரி 2019 (UTC)

@Kalaiarasy: விக்கித்தரவில் உள்ள தமிழ் இணைப்பை நீக்கி விட்டு பின்னர் இந்த விக்கித்தரவில் மீண்டும் தமிழ்க் கட்டுரையை இணைக்கலாம். Neoplasm என இரண்டு விக்கித்தரவு இணைப்புகள் உள்ளன. ஒன்று tumor இற்கானது. ஆங்கில விக்கியில் ஆரம்பத்தில் tumor, neoplasam என இரண்டு கட்டுரைகள் இருந்திருக்கின்றன. பின்னர் அவை இரண்டும் neoplasm ஆக இணைக்கப்பட்டுள்ளன. சில வேறு மொழி விக்கிகள் இரண்டையும் வைத்திருக்கின்றன. நீங்களே மாற்றுகிறீர்களா அல்லது நான் மாற்றட்டுமா?--Kanags (பேச்சு) 07:19, 8 பெப்ரவரி 2019 (UTC)
நானே செய்து பார்க்க விரும்புகிறேன். நீக்கவோ, இணைக்கவோ, தொகுவை அழுத்தினால், site link ID என்று கேட்கிறதே. முன்பு செய்தபோது, இலகுவாக சேர்க்க முடிந்ததாய் நினைவு. --கலை (பேச்சு) 09:17, 8 பெப்ரவரி 2019 (UTC)
@Kalaiarasy: இணைப்பில் Wikipedia 65 Entries என்பதற்குப் பக்கத்தில் உள்ள edit ஐ அழுத்தி பின்னர் தமிழ் இணைப்பை நீக்கி save பண்ணுங்கள். பின்னர் அதே போன்று அடுத்த விக்கித்தரவில் சென்று இதே போன்று தமிழ் கட்டுரையை இணைக்கலாம்.--Kanags (பேச்சு) 09:29, 8 பெப்ரவரி 2019 (UTC)

ஆம். அந்த இணைப்பிற்குச் சென்றுதான் முயன்றேன். முன்னர் செய்தும் இருக்கிறேன். ஆனால், தற்போது ஏதோ ID என்றெல்லாம் வருகிறது. Screen shot எடுத்து மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறேன். பாருங்கள். --கலை (பேச்சு) 10:51, 8 பெப்ரவரி 2019 (UTC)

நான் இணைப்பைச் சொடுக்கி wikidata இற்குள் சென்றதும் எப்படித் தெரிந்தது என்பதையும், பின்னர் edit ஐ அழுத்தியதும் எப்படித் தெரிந்தது என்பதையும் screen shot எடுத்து உங்கள் ஜிமெயிலுக்கு அனுப்பியுள்ளேன். பார்த்துச் சொல்லுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 11:01, 8 பெப்ரவரி 2019 (UTC)
@Kalaiarasy: நான் கணினியிலேயே விக்கிப்பீடியா தொகுப்புகளை செய்து வருகிறேன். நீங்கள் கைப்பேசியைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் போல் தெரிகிறது. நானும் எனது கைபேசி மூலம் அவ்விணைப்புக்குப் போகும் போது எனக்கும் இவ்வாறே ID கேட்கிறது. இது புதிய இணைப்பை சேர்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தலாம் போலிருக்கிறது. Site id: tawiki, sitelink: கட்டி (உயிரியல்).--Kanags (பேச்சு) 12:15, 9 பெப்ரவரி 2019 (UTC)
நன்றி Kanags! மாற்றிவிட்டேன். கணினியிலிருந்துதான் மாற்றினேன். --கலை (பேச்சு) 10:26, 10 பெப்ரவரி 2019 (UTC)

தமிழில் உருவாக்கம்[தொகு]

வணக்கம், இவைகளை தமிழில் உருவாக்கி தர முடியுமா? --Thilakshan 21:06, 12 பெப்ரவரி 2019 (UTC)

ஜம்மு காஷ்மீர்[தொகு]

தமிழிலோ அல்லது தமிழகத்திலோ சம்மு காசுமீர் என அழைப்பதற்கான சான்று இல்லை.தயவு செய்து ஆதாரமற்ற தொகுப்பை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.தயவு செய்து அப்பக்கத்தை ஜம்மு காஷ்மீர் என மாற்றுக ஜெ.கலையரசன் (பேச்சு) 16:34, 18 பெப்ரவரி 2019 (UTC)

விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/பங்கேற்பாளர்கள் பட்டியல்[தொகு]

புதிதாகப் போட்டியில் இணையும் சிலர், தமது பெயரைப் பதிவு செய்யும்போது, ஏற்கனவே உள்ள பட்டியலை நீக்கிவிடுகின்றார்கள். புதியவர்களாதலால், சரியாகத் தெரியவில்லையென நினைக்கின்றேன். அவ்வாறு சில தவறான தொகுப்புக்கள் தொடர்ந்து நிகழும்போது, சரியான தொகுப்புக்கு (அதாவது 3, 4 படிநிலைகள் முன்னால் சென்று) மீளமைப்பது எப்படி? இங்கே பார்த்தீர்கள் என்றால் தெரியும். முதலில் யாரோ ஒருவர் தவறான தொகுப்பைச் செய்துவிட்டார் என்று எண்ணி, நான் தொகுப்பை முன்னிலையாக்கம் செய்தேன். ஆனால், அது மீண்டும் தவறான ஒரு தொகுப்புக்கே மீள வந்தது. பின்னர் சரியான பக்கத்திற்குச் சென்று வெட்டி ஒட்டினேன். அப்போது இடைவெளிகளை வெட்டி அகற்ற நீண்ட நேரம் செலவு செய்யவேண்டி இருந்தது. நான் அதைச் செய்து முடிப்பதற்குள் மீண்டும் ஒருவர், தவறான தொக்குப்பைச் செய்திருந்தார். எனவே நீண்ட நேரத்தின் பின்னர் எல்லாவற்றையும் சரிசெய்து, பழைய நிலைக்குக் கொண்டு வந்தேன். ஆனால், இவ்வாறு நீண்ட நேரம் செலவளிக்காமல், பழைய ஒரு தொகுப்புக்கு நேரடியாகக் கொண்டு செல்ல வழியுண்டா? அதாவது இரண்டு மூன்று பேர், தவறுக்கு மேல் தவறாகத் தொகுப்புக்களைச் செய்யும்போது, சரியான பழைய தொகுப்புக்கு மீளமைப்பது எப்படி? பழைய சரியான தொகுப்பிற்கு அடுத்ததாக இருக்கும் தொகுப்பில் மீளமை என்பதை அழுத்திப் பார்த்தேன். அதுவும் சரிவரவில்லை. இதே பிரச்சனையை முன்னரும் எதிர்கொண்டுள்ளேன். உதவ முடியுமா?--கலை (பேச்சு) 14:56, 23 பெப்ரவரி 2019 (UTC)

@Kalaiarasy: முடியும். விக்கிப்பீடியா:மின்னல் இந்தக் கருவியை உங்கள் விருப்பத் தேர்வில் சேர்த்து விடுங்கள். Screenshots அனுப்புகிறேன்.--Kanags (பேச்சு) 22:40, 23 பெப்ரவரி 2019 (UTC)
நன்றி Kanags! பார்க்கிறேன். --கலை (பேச்சு) 08:50, 24 பெப்ரவரி 2019 (UTC)
ஏற்கனவே மின்னல் கருவி விருப்பத்தேர்வில் சேர்த்திருந்தேன். ஆனால் பழைய தொகுப்பொன்றுக்கு மீளமைக்கும் முறையைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். நன்றி Kanags!--கலை (பேச்சு) 14:03, 24 பெப்ரவரி 2019 (UTC)

தலைப்பை மாற்ற வேண்டுகோள்[தொகு]

சைத்தூன் என்பது உருதுச்சொல். எனவே அப்பக்கத்தின் தலைப்பை இடலை என்று மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  • இடலை= olive
  • இடலைப் பச்சை= olive green
  • இடலையெண்ணை= olive oil

சான்று: [1] Varunkumar19 (பேச்சு) 14:13, 28 பெப்ரவரி 2019 (UTC)

உதவி[தொகு]

சைத்தூன் என்ற கட்டுரையின் தலைப்பை மாற்ற கோரி அதன் பேச்சுப் பக்கத்தில் நடைபெற்ற உரையாடலில் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. எனவே தாங்கள் குழப்பத்தைத் தீர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 04:19, 1 மார்ச் 2019 (UTC)

"குறியாக்கவியல்" கட்டுரை - திருத்த வரலாறு[தொகு]

இந்த "குறியாக்கவியல்" கட்டுரை பலமுறை விரிவாக்கப் பட்டு (+1,54,159) பிறகு (உங்களால்) குறுக்கப் பட்டுள்ளது(-1,45,513‎). இதை நான் விரிவாக்கலாமா? இப்போது இது மிகச் சுருக்கமாக இருக்கின்றது. நன்றி. Paramesh1231 (பேச்சு) 23:01, 3 மார்ச் 2019 (UTC)

@Paramesh1231: ஆம், விரிவாக்குங்கள். நன்றி.--Kanags (பேச்சு) 06:31, 4 மார்ச் 2019 (UTC)


உதவி தேவை[தொகு]

சுமாத்திரா காண்டாமிருகம் கட்டுரையை இன்று திருத்த முயன்றேன். அதில் வார்ப்புருக்களில் சில மாற்றங்கள் செய்தேன். அதனாலோ என்னவோ Taxoboxes with an unrecognised status system என்றவொரு பகுப்பு காணப்படுகின்றது (அல்லது முதலே அது இருந்ததா என்றும் தெரியவில்லை). அது எதனால், அதனை அகற்ற என்ன செய்ய வேண்டும்? --கலை (பேச்சு) 13:01, 16 மார்ச் 2019 (UTC)

ːதற்போது Taxoboxes with an unrecognised status system என்பதைக் காணவில்லை. ஆனால் அதனை அகற்ற என்ன செய்ய வேண்டும் என்பது சரியாகப் புரியவில்லையே.--கலை (பேச்சு) 16:51, 16 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kanags&oldid=2677108" இருந்து மீள்விக்கப்பட்டது