பயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 13

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


கவனிக்க[தொகு]

வணக்கம் "பேச்சு:கூகுள்-மொழிப்பெயர்ப்பு மென்கலக்கருவி" என்ற பேச்சுப் பக்கமானது. தனியாக உள்ளது. இதில் உள்ள உள்ளடக்கத்தை அப்படியே வெட்டி கூகுள் மொழிபெயர்ப்பு பக்கத்தில் ஒட்டி பின்னர் பேச்சு:கூகுள்-மொழிப்பெயர்ப்பு மென்கலக்கருவி பக்கத்தை நீக்கிவிடலாமா. அல்லது அப்பக்த்தை எதுவும் செய்யாமல் விட்டுவிடலாமா--அருளரசன் (பேச்சு) 14:26, 21 சனவரி 2019 (UTC)

@Arularasan. G: வெட்டி ஒட்டுவது நல்லதல்ல. வரலாற்றுடன் இணைத்திருக்கிறேன். நன்றி.--Kanags (பேச்சு) 21:36, 21 சனவரி 2019 (UTC)

சந்தேகம்[தொகு]

வணக்கம் அண்ணா, ஒரு நபர் ஒரே ஐ. பி. முகவரியில் பல கணக்குகளை உபயோகிக்கிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது அண்ணா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:28, 22 சனவரி 2019 (UTC)

ஒரு எழுத்தாளரை குறித்த தகவலை எப்படி பதிவேற்றம் செய்வது சகோதரர். Shivananthu (பேச்சு) 16:34, 29 பெப்ரவரி 2020 (UTC)

உதவி[தொகு]

வணக்கம் ஐயா! இலங்கைப் பெண்கள் குறித்த கட்டுரைகளில் சரியான பெயர்கள் தெரியாததால் ஓரளவு தலைப்பிட்டுள்ளேன். ஏதேனும் தவறுகள் இருப்பின் மாற்றி உதவுங்கள்.--அபிராமி (பேச்சு) 18:29, 23 சனவரி 2019 (UTC)

@அபிராமி நாராயணன்: கவனிக்கிறேன். இன்னும் ஒரு குறிப்பு. நீங்கள் ஆங்கில விக்கியில் இருந்தே பெரும்பாலான கட்டுரைகளை மொழிபெயர்க்கிறீர்கள். இதற்கு உங்களுக்கு இந்தக் கருவி நிச்சயம் உதவும். இதனை நிறுவுங்கள். கட்டுரையில் உள்ள விக்கியிடை இணைப்புகளை ஒரு நொடியில் இணைத்துவிடும். கட்டுரையை எழுதுபவரே இந்த இணைப்புகளை வழங்கி விட்டால் கட்டுரையைத் திருத்துபவருக்கு இலகுவாக இருக்கும். ஏனைய புதிய பயனர்களுக்கும் இக்கருவி குறித்து அறியத் தாருங்கள். உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags (பேச்சு) 22:16, 23 சனவரி 2019 (UTC)
மிக்க நன்றி ஐயா. இக்கருவியை இணைத்துள்ளேன்.--அபிராமி (பேச்சு) 13:44, 24 சனவரி 2019 (UTC)

ஒரு எழுத்தாளரை குறித்த தகவலை எப்படி எதில் பதிவேற்றம் செய்வது ஐயா Shivananthu (பேச்சு) 16:40, 29 பெப்ரவரி 2020 (UTC)

பரிந்துரை[தொகு]

வணக்கம். இந்தியர்களால் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில்...

 1. இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் எனும் பகுப்பையும் (தற்போது பகுப்பின் தலைப்பு பிழையாக இருக்கிறது!)
 2. xxxx தமிழ்த் திரைப்படங்கள் (உதாரணமாக 2016 தமிழ்த் திரைப்படங்கள்) எனும் பகுப்பையும் இட்டால் போதுமானது என நினைக்கிறேன். இது குறித்து உங்களின் கருத்தைத் தெரிவிக்கவும். உங்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் அனைத்துப் பயனர்களுக்கும் தெரிவிப்பேன்.

இந்தியத் திரைப்படங்கள், தமிழ்த் திரைப்படங்கள், 2016 திரைப்படங்கள் என சீராக இல்லாமல் பலரும் பலவிதமாக பகுப்பு இட்டு வருகின்றனர். இதனை நெறிப்படுத்த வேண்டும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:31, 25 சனவரி 2019 (UTC)

ஆலோசனை[தொகு]

வணக்கம் Kanags 1. ஒரே பெயர் அல்லது ஒரே மாதிரியான பகுப்புகளை எப்படி ஒன்றாக சேர்த்தல் ? 2. ஒரு கட்டுரையில் பகுப்பின் பெயர் மாற்றும் பொது, அந்த பகுப்பு உள்ள கட்டுரைகளில் தானாக மாற்றம் செய்யமுடியுமா? 3. தமிழில் உள்ள அனைத்து பகுப்புகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் பார்க்கும் வசதி உண்டா? ஏனெனின் பல தமிழ் பகுப்புகள் ஆங்கில விக்கிப்பீடியாவில் இணைக்காமல் உள்ளது. அதை கண்டு கொன்று தமிழ் விக்கிப்பீடியாவில் இணைக்க விரும்புகின்றேன். --Thilakshan 19:07, 28 சனவரி 2019 (UTC)

@Thilakshan:
1. பகுப்புகளை இணைத்தல்: பகுப்பில் {{mergeto|இணைக்க வேண்டிய பகுப்பின் தலைப்பு}} என எழுதிச் சேமியுங்கள்.
2. முடியாது. தானியங்கி அணுக்கம் உள்ல ஒருவரை அணுக வேண்டும்.
3. விக்கிப்பீடியா:அகர வரிசையில் கட்டுரைகள். தேடும் போது பகுப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.--Kanags (பேச்சு) 22:51, 29 சனவரி 2019 (UTC)

வணக்கம் நண்பரே, பால்குளங்கரை தேவி கோவில் என்று தாங்கள் மாற்றுவதற்கான காரணம் என்ன இதில் உள்ள பிழை என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி ராம்குமார் கல்யாணி 03:56, 14 மார்ச் 2020 (UTC)

பரிசீலனை (உதவி)[தொகு]

வணக்கம் மொழி என்ற கட்டுரையில் உள்ள கட்டுரைகள் நம்பத்தக்கதவாறு உள்ளன? இந்திய மொழிகள் கீழ் உள்ள கட்டுரைகளில் இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி என்றும் உலகளவில் 28% மக்கள் தெலுங்கு மொழியை பயன்படுத்துவதாகவும் எழுதப்பட்டுள்ளது. தமிழ் மொழி கிரேக்க மொழியிலிருந்து தோன்றியது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல்கள் நம்பத்தக்கவாறு உள்ளது என்ன செய்வது என சொல்லவும்?.--Thilakshan 19:38, 29 சனவரி 2019 (UTC)

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இவற்றை மீள்வித்திருக்கிறேன்.--Kanags (பேச்சு) 22:57, 29 சனவரி 2019 (UTC)

பகுப்பு:மொழிகள், பகுப்பு:மொழி[தொகு]

மேற்கூறிய இரு பகுப்புகள் உள்ளன. இரண்டும் தேவையா, அல்லது ஒன்றாக்கி விடலாமா?--கலை (பேச்சு) 16:36, 30 சனவரி 2019 (UTC)

 • மன்னிக்கவும், நான் தான் அப்படி மொழி எனும் புதிய பகுப்பை உருவாக்கினேன். என்னுடைய கருத்தும் இரண்டையும் ஒன்று இணைப்பது தான் என்று. --Thilakshan 19:05, 30 சனவரி 2019 (UTC)
@Thilakshan:ஆங்கில விக்கியில், Languages, Language என்று இரு பகுப்புகள் இருப்பதையும், அவை முறையே மொழிகள், மொழி பகுப்புகளுக்கு இணைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தேன். எனவே அவற்றை அப்படியே விடலாம் என நினைக்கிறேன். நன்றி. --கலை (பேச்சு) 20:24, 7 பெப்ரவரி 2019 (UTC)

உதவி[தொகு]

அண்ணா, இக்கட்டுரையை ஒன்றிணைக்கும் போது ஏதோ தவறு செய்துவிட்டேன், கட்டுரையில் உள்ள வரலாறுகள் அனைத்தும் இருக்கிறது. ஆனால் ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தையே காணோம்?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:02, 1 பெப்ரவரி 2019 (UTC)

Yes check.svgY ஆயிற்று.--Kanags (பேச்சு) 22:24, 1 பெப்ரவரி 2019 (UTC)

வழிமாற்று நீக்க உதவி[தொகு]

சுற்றுச்சூழல் (Biophysical environment) கட்டுரைக்கு இயற்கைச் சூழல் (Natural environment) என்ற வழிமாற்று உள்ளது. இரண்டும் ஆங்கில விக்கியில் இரண்டு கட்டுரைகளாக உள்ளன. புதிய கட்டுரை எழுத முயலும்போது வழிமாற்றுகிறது. எனவே வழிமாற்றை நீக்க வேண்டுகிறேன் ஐயா.--அபிராமி (பேச்சு) 18:44, 6 பெப்ரவரி 2019 (UTC)

Yes check.svgY ஆயிற்று
அபிராமி! வழிமாற்றை நீக்கியுள்ளேன். சுற்றுச் சூழல் கட்டுரைக்கு விக்கியாக்கம் கேட்டிருந்தீர்கள். அந்தக் கட்டுரையை மேம்படுத்தியுள்ளேன். இயற்கைச் சூழல் கட்டுரையை ஆரம்பித்து விடுங்கள்.Face-smile.svg @அபிராமி நாராயணன்:--கலை (பேச்சு) 20:25, 6 பெப்ரவரி 2019 (UTC)
மிக்க நன்றி--அபிராமி (பேச்சு) 13:07, 7 பெப்ரவரி 2019 (UTC)

கட்டி (உயிரியல்)[தொகு]

கட்டி (உயிரியல்) பக்கத்தில் ஆங்கில விக்கிக்குரிய இணைப்பைக் காணவில்லையே? ஏன்? அதனை எப்படி சரி செய்வது எனத் தெரியவில்லை. அறிந்து கொள்ள விருப்பம். வேறு கட்டுரைகளில் இதே பிரச்சனை ஏற்பட்டாலும் நானே திருத்தலாம். Wikidata வில் சென்று எப்படி மாற்றலாம்? Neoplasm ஆங்கில விக்கிக் கட்டுரைக்குள் சென்று, Edit interwiki language links ஐ அழுத்திப் போனாலும், எப்படி தமிழ் விக்கிக் கட்டுரையை அங்கே இணைப்பது? உதவுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 20:28, 7 பெப்ரவரி 2019 (UTC)

@Kalaiarasy: விக்கித்தரவில் உள்ள தமிழ் இணைப்பை நீக்கி விட்டு பின்னர் இந்த விக்கித்தரவில் மீண்டும் தமிழ்க் கட்டுரையை இணைக்கலாம். Neoplasm என இரண்டு விக்கித்தரவு இணைப்புகள் உள்ளன. ஒன்று tumor இற்கானது. ஆங்கில விக்கியில் ஆரம்பத்தில் tumor, neoplasam என இரண்டு கட்டுரைகள் இருந்திருக்கின்றன. பின்னர் அவை இரண்டும் neoplasm ஆக இணைக்கப்பட்டுள்ளன. சில வேறு மொழி விக்கிகள் இரண்டையும் வைத்திருக்கின்றன. நீங்களே மாற்றுகிறீர்களா அல்லது நான் மாற்றட்டுமா?--Kanags (பேச்சு) 07:19, 8 பெப்ரவரி 2019 (UTC)
நானே செய்து பார்க்க விரும்புகிறேன். நீக்கவோ, இணைக்கவோ, தொகுவை அழுத்தினால், site link ID என்று கேட்கிறதே. முன்பு செய்தபோது, இலகுவாக சேர்க்க முடிந்ததாய் நினைவு. --கலை (பேச்சு) 09:17, 8 பெப்ரவரி 2019 (UTC)
@Kalaiarasy: இணைப்பில் Wikipedia 65 Entries என்பதற்குப் பக்கத்தில் உள்ள edit ஐ அழுத்தி பின்னர் தமிழ் இணைப்பை நீக்கி save பண்ணுங்கள். பின்னர் அதே போன்று அடுத்த விக்கித்தரவில் சென்று இதே போன்று தமிழ் கட்டுரையை இணைக்கலாம்.--Kanags (பேச்சு) 09:29, 8 பெப்ரவரி 2019 (UTC)

ஆம். அந்த இணைப்பிற்குச் சென்றுதான் முயன்றேன். முன்னர் செய்தும் இருக்கிறேன். ஆனால், தற்போது ஏதோ ID என்றெல்லாம் வருகிறது. Screen shot எடுத்து மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறேன். பாருங்கள். --கலை (பேச்சு) 10:51, 8 பெப்ரவரி 2019 (UTC)

நான் இணைப்பைச் சொடுக்கி wikidata இற்குள் சென்றதும் எப்படித் தெரிந்தது என்பதையும், பின்னர் edit ஐ அழுத்தியதும் எப்படித் தெரிந்தது என்பதையும் screen shot எடுத்து உங்கள் ஜிமெயிலுக்கு அனுப்பியுள்ளேன். பார்த்துச் சொல்லுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 11:01, 8 பெப்ரவரி 2019 (UTC)
@Kalaiarasy: நான் கணினியிலேயே விக்கிப்பீடியா தொகுப்புகளை செய்து வருகிறேன். நீங்கள் கைப்பேசியைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள் போல் தெரிகிறது. நானும் எனது கைபேசி மூலம் அவ்விணைப்புக்குப் போகும் போது எனக்கும் இவ்வாறே ID கேட்கிறது. இது புதிய இணைப்பை சேர்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்தலாம் போலிருக்கிறது. Site id: tawiki, sitelink: கட்டி (உயிரியல்).--Kanags (பேச்சு) 12:15, 9 பெப்ரவரி 2019 (UTC)
நன்றி Kanags! மாற்றிவிட்டேன். கணினியிலிருந்துதான் மாற்றினேன். --கலை (பேச்சு) 10:26, 10 பெப்ரவரி 2019 (UTC)

தமிழில் உருவாக்கம்[தொகு]

வணக்கம், இவைகளை தமிழில் உருவாக்கி தர முடியுமா? --Thilakshan 21:06, 12 பெப்ரவரி 2019 (UTC)

ஜம்மு காஷ்மீர்[தொகு]

தமிழிலோ அல்லது தமிழகத்திலோ சம்மு காசுமீர் என அழைப்பதற்கான சான்று இல்லை.தயவு செய்து ஆதாரமற்ற தொகுப்பை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.தயவு செய்து அப்பக்கத்தை ஜம்மு காஷ்மீர் என மாற்றுக ஜெ.கலையரசன் (பேச்சு) 16:34, 18 பெப்ரவரி 2019 (UTC)

பக்கங்களின் தலைப்புகள் தமிழ் பலுக்கலுக்கு ஏற்றவாறு தமிழ் இலக்கணப்படி அமைந்திருத்தலையே ஊக்குவிக்கிறோம். அனைவரும் பிழையாக எழுதுகின்றனர் என்பதற்காக பிழை திருத்தமாகாது. Vetrrich Chelvan (பேச்சு) 06:02, 16 சனவரி 2021 (UTC)

விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/பங்கேற்பாளர்கள் பட்டியல்[தொகு]

புதிதாகப் போட்டியில் இணையும் சிலர், தமது பெயரைப் பதிவு செய்யும்போது, ஏற்கனவே உள்ள பட்டியலை நீக்கிவிடுகின்றார்கள். புதியவர்களாதலால், சரியாகத் தெரியவில்லையென நினைக்கின்றேன். அவ்வாறு சில தவறான தொகுப்புக்கள் தொடர்ந்து நிகழும்போது, சரியான தொகுப்புக்கு (அதாவது 3, 4 படிநிலைகள் முன்னால் சென்று) மீளமைப்பது எப்படி? இங்கே பார்த்தீர்கள் என்றால் தெரியும். முதலில் யாரோ ஒருவர் தவறான தொகுப்பைச் செய்துவிட்டார் என்று எண்ணி, நான் தொகுப்பை முன்னிலையாக்கம் செய்தேன். ஆனால், அது மீண்டும் தவறான ஒரு தொகுப்புக்கே மீள வந்தது. பின்னர் சரியான பக்கத்திற்குச் சென்று வெட்டி ஒட்டினேன். அப்போது இடைவெளிகளை வெட்டி அகற்ற நீண்ட நேரம் செலவு செய்யவேண்டி இருந்தது. நான் அதைச் செய்து முடிப்பதற்குள் மீண்டும் ஒருவர், தவறான தொக்குப்பைச் செய்திருந்தார். எனவே நீண்ட நேரத்தின் பின்னர் எல்லாவற்றையும் சரிசெய்து, பழைய நிலைக்குக் கொண்டு வந்தேன். ஆனால், இவ்வாறு நீண்ட நேரம் செலவளிக்காமல், பழைய ஒரு தொகுப்புக்கு நேரடியாகக் கொண்டு செல்ல வழியுண்டா? அதாவது இரண்டு மூன்று பேர், தவறுக்கு மேல் தவறாகத் தொகுப்புக்களைச் செய்யும்போது, சரியான பழைய தொகுப்புக்கு மீளமைப்பது எப்படி? பழைய சரியான தொகுப்பிற்கு அடுத்ததாக இருக்கும் தொகுப்பில் மீளமை என்பதை அழுத்திப் பார்த்தேன். அதுவும் சரிவரவில்லை. இதே பிரச்சனையை முன்னரும் எதிர்கொண்டுள்ளேன். உதவ முடியுமா?--கலை (பேச்சு) 14:56, 23 பெப்ரவரி 2019 (UTC)

@Kalaiarasy: முடியும். விக்கிப்பீடியா:மின்னல் இந்தக் கருவியை உங்கள் விருப்பத் தேர்வில் சேர்த்து விடுங்கள். Screenshots அனுப்புகிறேன்.--Kanags (பேச்சு) 22:40, 23 பெப்ரவரி 2019 (UTC)
நன்றி Kanags! பார்க்கிறேன். --கலை (பேச்சு) 08:50, 24 பெப்ரவரி 2019 (UTC)
ஏற்கனவே மின்னல் கருவி விருப்பத்தேர்வில் சேர்த்திருந்தேன். ஆனால் பழைய தொகுப்பொன்றுக்கு மீளமைக்கும் முறையைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். நன்றி Kanags!--கலை (பேச்சு) 14:03, 24 பெப்ரவரி 2019 (UTC)

தலைப்பை மாற்ற வேண்டுகோள்[தொகு]

சைத்தூன் என்பது உருதுச்சொல். எனவே அப்பக்கத்தின் தலைப்பை இடலை என்று மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

 • இடலை= olive
 • இடலைப் பச்சை= olive green
 • இடலையெண்ணை= olive oil

சான்று: [1] Varunkumar19 (பேச்சு) 14:13, 28 பெப்ரவரி 2019 (UTC)

உதவி[தொகு]

சைத்தூன் என்ற கட்டுரையின் தலைப்பை மாற்ற கோரி அதன் பேச்சுப் பக்கத்தில் நடைபெற்ற உரையாடலில் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. எனவே தாங்கள் குழப்பத்தைத் தீர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 04:19, 1 மார்ச் 2019 (UTC)

"குறியாக்கவியல்" கட்டுரை - திருத்த வரலாறு[தொகு]

இந்த "குறியாக்கவியல்" கட்டுரை பலமுறை விரிவாக்கப் பட்டு (+1,54,159) பிறகு (உங்களால்) குறுக்கப் பட்டுள்ளது(-1,45,513‎). இதை நான் விரிவாக்கலாமா? இப்போது இது மிகச் சுருக்கமாக இருக்கின்றது. நன்றி. Paramesh1231 (பேச்சு) 23:01, 3 மார்ச் 2019 (UTC)

@Paramesh1231: ஆம், விரிவாக்குங்கள். நன்றி.--Kanags (பேச்சு) 06:31, 4 மார்ச் 2019 (UTC)


உதவி தேவை[தொகு]

சுமாத்திரா காண்டாமிருகம் கட்டுரையை இன்று திருத்த முயன்றேன். அதில் வார்ப்புருக்களில் சில மாற்றங்கள் செய்தேன். அதனாலோ என்னவோ Taxoboxes with an unrecognised status system என்றவொரு பகுப்பு காணப்படுகின்றது (அல்லது முதலே அது இருந்ததா என்றும் தெரியவில்லை). அது எதனால், அதனை அகற்ற என்ன செய்ய வேண்டும்? --கலை (பேச்சு) 13:01, 16 மார்ச் 2019 (UTC)

ːதற்போது Taxoboxes with an unrecognised status system என்பதைக் காணவில்லை. ஆனால் அதனை அகற்ற என்ன செய்ய வேண்டும் என்பது சரியாகப் புரியவில்லையே.--கலை (பேச்சு) 16:51, 16 மார்ச் 2019 (UTC)

சந்தேகம்[தொகு]

வணக்கம் அண்ணா, எனக்கு தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளின் கட்டுரை சம்மந்தமாக சில சந்தேகம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளின் கட்டுரைகளை தானியங்கியால் உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஊராட்சி கட்டுரைகளில் ஒரே ஊராட்சியின் பெயர்கள் இரண்டு மாவட்டத்திற்கு இருந்தால், ஒரு ஊராட்சிக்கான கட்டுரை மட்டுமே தானியங்கி உருவாக்கியுள்ளது. உதாரணமாக: நேமம் என்னும் ஊராட்சியானது, நேமம் சிவகங்கை மாவட்டத்தில் ஒன்று உள்ளது மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒன்று உள்ளது. ஆனால் தானியங்கியால் ஒரு மாவட்டத்திற்கான ஊராட்சியை மட்டுமே உருவாக்க முடிந்தது. இவ்வாறு விடுபட்ட ஊராட்சிகளை நான் உருவாக்கி கொண்டு வருகிறேன்.

சந்தேகங்கள்

 • இரண்டு ஊராட்சிகளுக்கும் இறுதியில் மாவட்டத்தின் பெயர் சேர்க்க வேண்டுமா அல்லது ஒரு ஊராட்சி பெயருக்கு மட்டும் இருந்தால் போதுமா ??
 • நேம்ம ஊராட்சி (தஞ்சாவூர்) இந்த வடிவிலேயே இருக்கலாமா??
 • ஒரு ஊராட்சி கட்டுரையில், இன்னொரு ஊராட்சிக்கான கட்டுரை இணைப்பு அவசியமாக இருக்க வேண்டுமா??
 • ஒரு மாவட்டத்தில் இரண்டு ஊராட்சிகளின் பெயர்கள் ஒன்றாக இருந்தால், அந்த ஊராட்சிகளின் பெயர் இறுதியில் அதன் ஒன்றியத்தின் பெயரை சேர்க்கலாமா?? இந்த மாதிரி, காண்க: 1) மகாராஜபுரம் 2) மகாராஜபுரம்
நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 20:11, 6 ஏப்ரல் 2019 (UTC)
@Gowtham Sampath:
 • இரண்டு ஊராட்சிகளுக்கும் இறுதியில் மாவட்டத்தின் பெயர் சேர்ப்பது சிறந்தது.
 • நேமம் ஊராட்சி (தஞ்சாவூர்) கட்டுரையை அல்லது புதிய கட்டுரைகளை வழக்கமான விக்கி வடிவிலேயே எழுதலாம். தானியங்கிக் கட்டுரை போன்று உருவாக்கத் தேவையில்லை. பயனர்:Neechalkaran பதில் சொல்வார்.
 • கட்டுரையின் இறுதியில் மேலும் காண்க என்ற பகுதியில் இணைப்புக் கொடுப்பது எப்போதும் நல்லது.
 • நீஙக்ள் குறிப்பிட்டவாறே தலைப்பிடலாம். ஒன்றியம் ஒன்றின் பெயர் இரண்டு வெவ்வேறு மாவட்டங்களுக்கு உள்ளதா எனவும் பார்க்க வேண்டும். அவ்வாறு இருப்பது சாத்தியமில்லை என நினைக்கிறேன்.--Kanags (பேச்சு) 22:52, 6 ஏப்ரல் 2019 (UTC)
நன்றி அண்ணா--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:13, 7 ஏப்ரல் 2019 (UTC)
ஒரு ஒன்றியத்திற்குள் இரு ஊராட்சி இருக்காது, மேலும் புதிய மாவட்டத்தைப் பிரிக்கும் போது மாற்றிக் கொள்ளத் தேவையும் இருக்காது. அதனால் ஒன்றியத்தின் பெயரைச் சேர்ப்பது சிறப்பு. ஆனால் இதுவரை உருவாக்கியவற்றை மாற்ற வேண்டாம் புதியவற்றிற்கு இப்படித் தலைப்பிடலாம். தானியங்கிக் கட்டுரை வடிவம் கட்டாயமில்லை எதிர்காலத்தில் மாற்றிக் கொள்ளலாம். இரு கட்டுரையை வேறுபடுத்திக் காட்ட Other_uses_of வார்ப்புருவைப் பயன்படுத்தலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 08:53, 7 ஏப்ரல் 2019 (UTC)

உதவி தேவை[தொகு]

வணக்கம் Kanagsǃ பேச்சு:தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன் பக்கத்தில் சில மாற்றங்கள் செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டிருதீர்கள். அதில் நோர்வேஜிய மொழியில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதைக் கொடுத்துள்ளேன். படங்களைப் பொதுவகத்திற்கு நகர்த்தி வெளியிணைப்பாகக் கொடுப்பது எவ்வாறு எனப் புரியவில்லை. படங்களை இங்கே தமிழ் விக்கியில் அழித்துவிட்டு, பொதுவகத்தில் புதிதாகப் பதிவேற்றிப் பின்னர் அந்த இணைப்புகளை இங்கே கொடுக்க வேண்டுமா? அல்லது இங்கிருந்தே பொதுவகத்திற்கு நகர்த்த ஏதாவது வழி உண்டா? தயவுசெய்து உதவுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 14:46, 10 ஏப்ரல் 2019 (UTC)

@Kalaiarasy: முதலாவது படிமத்தை நகர்த்தியிருக்கிறேன். வார்ப்புருவில் தரப்பட்டுள்ள உதவிப் பக்கத்துக்கு சென்று நகர்த்த முடியும்.--Kanags (பேச்சு) 08:16, 11 ஏப்ரல் 2019 (UTC)
Yes check.svgY ஆயிற்று--Kanags (பேச்சு) 10:12, 11 ஏப்ரல் 2019 (UTC)

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம்[தொகு]

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் கட்டுரை நீக்கப்படுவதற்கு எதிராக யாரும் கருத்து தெரிவிக்காததால் நீக்கப்பட்டது. அதுதான் முறையும்கூட, ஆனால் எவ்வித மீளமித்தல் கோரிக்கையும் இன்றி மீளமைக்கப்பட்டுள்ளது.(!?) இக்கட்டுரை தனிநபர் ஆராட்சிக்கட்டுரையாகவே உள்ளது. அங்கு கேள்வி எழுப்பப்பட்டபடி சாலமோன் மன்னன் ஓர் முஸ்லிம் அல்ல. சாலமோன் காலம் சுமார் கி.மு 970–931. ஆனால் இஸ்லாம் காலம் சுமார் கி.பி. 570 – 632 இற்குப் பின் ஆகும். அங்குள்ள உசாத்துணைகள் பலவற்றின் நம்பகத்தம்மை பற்றி பல கேள்விகள் உள்ளன. --AntanO (பேச்சு) 01:44, 13 ஏப்ரல் 2019 (UTC)

கட்டுரைப் பேச்சுப் பக்கத்தில் உரையாடுங்கள். நன்றி.--Kanags (பேச்சு) 01:50, 13 ஏப்ரல் 2019 (UTC)
உங்கள் கருத்தின்படி, கட்டுரையை இலங்கைச் சோனகர் கட்டுரையில் இணைக்கலாம். பேச்சுப்பக்கத்தை இணைத்துள்ளேன். ஆனால் நீங்கள் குறிப்பிடும் நம்பகமான பகுதியை நான் அறியாததால், அதனை தாங்களே செய்யுமாறு கோரிக்கை வைக்கிறேன். நன்றி. --AntanO (பேச்சு) 02:11, 13 ஏப்ரல் 2019 (UTC)
நீங்கள் கட்டுரைகளை ஒன்றிணைக்கவிருப்பதால், அது முடிந்ததும் அங்கு உரையாடுகிறேன். --AntanO (பேச்சு) 06:22, 13 ஏப்ரல் 2019 (UTC)

உதவி[தொகு]

வணக்கம். Category:Phosphorus oxoanions, Category:Phosphorus oxyanions என்ற ஆங்கில விக்கி பகுப்புகளைக் கவனிக்கவும். தமிழ் விக்கிபீடியாவிலும் இதே போல இரண்டு பகுப்புகள் உள்ளன. பாசுபரசு ஆக்சோ எதிர்மின்னயனிகள் என்ற பகுப்பில் உள்ள கட்டுரைகள் பாசுபரசு ஆக்சி எதிர்மின்னயனிகள் என்ற பகுப்புக்கு மாற்றப்படுவது சரியாக இருக்கும் என நினைக்கின்றேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 04:42, 20 ஏப்ரல் 2019 (UTC)

சந்தேகம்[தொகு]

நாம் பகுப்பிற்கு வழிமாற்று உருவாக்கலாமா?? உ.தா: பகுப்பு:ராஜஸ்தான் அரசியல்வாதிகள் என்னும் பகுப்பு ஏற்கனவே உள்ளது. ஆனால் பகுப்பு:இராஜஸ்தான் அரசியல்வாதிகள் என்று கூட எழுதலாமே. இராஜஸ்தான் மாநிலத்திற்கான பகுப்பானது சில பகுப்பு:ராஜஸ்தான் என்ற பெயரிலும், சில பகுப்பு:இராஜஸ்தான் என்ற பெயரில் ஆரம்பிக்கிறது. இந்த வேறுபாட்டால் பகுப்புகளைக் கட்டுரைகளில் சேர்ப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இந்த பகுப்பாவது பரவாயில்லை, ஆனால் இந்த தெலுங்கான பகுப்பிற்கு சென்றால், இதை விட ரொம்ப மோசமாக உள்ளது. இதற்கு ஒரேவழி ஒரு மாநிலத்தின் தலைப்பின் பெயர் எப்படி உள்ளதோ, அதே பெயரில் அதற்கான பகுப்பு, வார்ப்புரு ஆகியவற்றை சரிசெய்யலாம் என்று இருக்கிறேன். உங்களுடைய கருத்துகளைத் தெரிவியுங்கள். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:30, 5 மே 2019 (UTC)


நகர்த்தல் காரணம்[தொகு]

இஸ்ரயேலின் அரசர்கள் என்ற பகுப்பு பண்டைய இசுரவேலின் அரசர்கள் எனவும், பண்டைய இஸ்ரயேலின் நீதித்தலைவர்கள் பகுப்பு பண்டைய இசுரவேலின் நீதித்தலைவர்கள் எனவும் நகத்தப்பட்டதன் காரணம் அறியலாமா? --AntanO (பேச்சு) 02:52, 12 மே 2019 (UTC)

இஸ்ரயேல், இசுரவேல் இரண்டும் வெவ்வேறா? இஸ்ரயேல் தமிழில் இசுரேல் அல்லது இசுரவேல் என்றுதானே நாம் எழுதுகிறோம். தேவையானால் பண்டைய இசுரேலின் அரசர்கள் எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 04:10, 12 மே 2019 (UTC)
தமிழ் விவிலியம் பொது மொழிபெயர்ப்பு இஸ்ரயேல் என்றே குறிப்பிடுகிறது. காண்க இஸ்ரயேல் மக்களுக்கு... இசுரேல் அல்லது இசுரவேல் என்பவை தேயைற்றவை அல்லது இவ்வாறானவற்றுக்குப் பொருத்தமற்றவை. மேலும், கிறித்து என்று எழுத வேண்டாம். இதுபற்றி முன்னமே உரையாடப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. காண்க: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)#கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு --AntanO (பேச்சு) 08:24, 12 மே 2019 (UTC)
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம் என்றுதான் தமிழ் விவிலிய பொது மொழிபெயர்ப்பில் உள்ளது. எந்த விவிலியத்தில் இசுரவேலின் கடவுளாகிய... என்றுள்ளது? காண்க பிழை. விக்கிப்பீடியாவிற்கு சமயங்களின் புனித நூல்களில் திருத்தம் மேற்கொள்ள இடமில்லை. --AntanO (பேச்சு) 11:02, 12 மே 2019 (UTC)
@AntanO: இந்தத் திருத்தத்திற்கு காரணம் அறியலாமா?--Kanags \உரையாடுக 11:06, 12 மே 2019 (UTC)
மாற்றங்களைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம். குரான் வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது. உள்ளிணைப்புகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் பிற ஏற்றுக்கொள்ளப்படாதர மாற்றங்கள். --AntanO (பேச்சு) 11:15, 12 மே 2019 (UTC)
அப்படியா? ஆனால் இஸ்லாமையும் மாற்றியிருக்கிறீர்களே. இஸ்லாம் என்று தானே இசுலாமியர்கள் எழுதுகிறார்கள். அவர்களுக்கு நியாயம் வேண்டாமா? இது உங்கள் இரட்டை நிலைப்பாடு எனலாமா?--Kanags \உரையாடுக 11:32, 12 மே 2019 (UTC)
விக்கிப்பீடியாவில் அவ்வாறு முடிவெடுக்கப்பட்டதா? என்ன கோர்த்துவீடுகிறீரா? இங்கும் காரணம் கேடகலாம். --AntanO (பேச்சு) 11:35, 12 மே 2019 (UTC)
விவிலிய வசனத்தை மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது? முதலில் இதற்கு விடை வேண்டும். --AntanO (பேச்சு) 11:39, 12 மே 2019 (UTC)
இசுரேல் என்ற கட்டுரை உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? அதை ஏன் நீங்கள் மாற்ற முயற்சிக்கவில்லை? ஏராளமான பகுப்புகள் இசுரேலைக் குறித்து உள்ளன. நீங்களும் பல உருவாக்கியிருப்பீர்கள் என நம்புகிறேன். ஏன் திடீரென உங்களுக்கு ஞானம் வந்தது? கிறிஸ்தவம் பற்றி நீங்கள் கூடி முடிவெடுக்கலாம், இஸ்லாமுக்கும் ஏனைஉய சமயத்திற்கும் அதே முடிவை அமுல் படுத்தமுடியாதா? அதற்கென வேறு விவாதம் வேண்டுமா? இஸ்ரயேல் என எழுதுவது பற்றி முடிவெடுக்கப்பட்டதா? ஆதாரம் காட்டுங்கள். இதனை நான் விவாதமாக நான் நீடிக்க விரும்பவில்லை. நீங்கள் விதண்டாவாதம் பேசுபவர் என்பதை நான் எப்போதோ உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்து விட்டேன். இத்துடன் நிறுத்திக் கொள்வோம். நீங்கள் விரும்பியபடி உங்கள் மதம் சார்ந்த பக்கங்களில் மாற்றங்கள் செய்யுங்கள். ஆனால் அதே வேளை மற்ற சமயத்தவர்களுக்கும் அதே அளவு உரிமையை வழங்குங்கள்.--Kanags \உரையாடுக 11:48, 12 மே 2019 (UTC)
எனக்கு கட்டளையிட வேண்டாம். விதண்டாதவாதம் பற்றி கனகு பேசக்கூடாது. தேவையாயின் குறிப்பிட்ட கட்டுரையில் பேசலாம். //உங்கள் மதம் சார்ந்த // என்னுடைய மதம் எதுவென்று உமக்குத் தெரியுமா? வீணாப் பேச வேண்டாம். இசுரவேல் என எழுதுவது பற்றி முடிவெடுக்கப்பட்டதா? ஆதாரம்? //நீங்கள் விதண்டாவாதம் பேசுபவர் என்பதை நான் எப்போதோ உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்து விட்டேன். // தான் யாரென்று தெரியாமல் என்னை விமர்சிக்க வேண்டாம். இது எல்லோருக்கும் பொருந்தும். இங்கு யாரும் புத்தர் இல்லை. --AntanO (பேச்சு) 11:53, 12 மே 2019 (UTC)
//இசுரவேல் என எழுதுவது பற்றி முடிவெடுக்கப்பட்டதா?// ஆகா, அப்படியானால் பண்டைய இசுரேலின் அரசர்கள் என மாற்றி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 12:04, 12 மே 2019 (UTC)
விவிலியத்தில் பண்டைய இசுரேலின் அரசர்கள் என்றுள்ளதா? --AntanO (பேச்சு) 12:06, 12 மே 2019 (UTC)
ஆருக்குத் தெரியும். ஒரு ஆலோசனை: விவிலியத்தையே விக்கிப்பீடியாவில் எழுதி விடுங்கள். மற்றைய கட்டுரைகள் எதற்கு? அவற்றை அழித்து விடலாம்:)--Kanags \உரையாடுக 12:17, 12 மே 2019 (UTC)
எந்த விக்கி கொள்கை இது, கணஸ்? ஒரு சமயத்தின் புனித நூலில் உள்ள ஒரு எழுத்தை மாற்றுவது மிகவும் சிக்கலான விடயம். அதைச் செய்துவிட்டு வேற என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறீர். --AntanO (பேச்சு) 12:20, 12 மே 2019 (UTC)
ஆமாம், இசுரேலை இவ்வாறு தான் தமிழில் எழுத வேண்டும் என விவிலியத்தில் குறித்து வைத்திருக்கிறார்கள் என்பதை எல்லோரும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் இன்னும் எனக்கு ஒரு பதிலைத் தரவில்லை. ஏன் இஸ்ரேல் பக்கத்தை மாற்றவில்லை. புரியாத புதிராக உள்ளது. எனக்குத் தெரிய இலங்கையில் நான் படித்த பள்ளிக் காலத்தில் இசுரேலை தினகரன் பத்திரிகை எப்போதும் இஸ்ரவேல் என எழுதும். வீரகேசரி பத்திரிகை இஸ்ரேல் என எப்போதும் எழுதும். இவ்வாறுதான் தமிழில் எழுத வேண்டும் எனக் கட்டாயம் உண்டா? இதற்கு நான் விவிலியம் படிக்க வேண்டுமா? தமிழில் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு எது எனக் கூறுங்கள். தரவிறக்கிப் படிக்கிறேன். John என்பதை ஜோன் என எழுத வேண்டுமா அல்லது ஜான் என எழுத வேண்டுமா அல்லது யோவான் என எழுத வேண்டுமா? தெரியாமல் கேட்கிறேன். தமிழ் நாடு விவிலிய மொழிபெயர்ப்பு ஈழத்து மொழிபெயர்ப்புடன் வேறுபடுகிறதா? இப்படிப் பல கேள்விகள்.--Kanags \உரையாடுக 12:38, 12 மே 2019 (UTC)
எனது ஆரம்ப கேள்விகளுக்கு பதில் தமாமல் என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம். இசுரவேலின் கடவுளாகிய... என்று எந்த விவிலியத்தில் உள்ளது? கிறித்தவம் என்று எழுதுவது பிழையென உரையாடிய பின்பும் கிறித்தவம் என எழுதுவது ஏன்? --AntanO (பேச்சு) 12:42, 12 மே 2019 (UTC)

நகர்த்தலாமா[தொகு]

ஆர்செனிக்கு சேர்மங்கள் என்ற பகுப்பை ஆர்சனிக்கு சேர்மங்கள் என்ற பகுப்புக்கு நகர்த்தினால் சரியாக இருக்கும் என நினைக்கின்றேன். தொடர்ச்சியாக சோடியம் ஆர்செனேட்டு என்பதையும் சோடியம் ஆர்சனேட்டு என்ற தலைப்புக்கு நகர்த்தினால் ஒரே மாதிரியாக ஆர்சனேட்டு, ஆர்சனிக், ஆர்சனசு என்ற போக்கில் தொடரலாம். --கி.மூர்த்தி (பேச்சு) 05:22, 26 மே 2019 (UTC)

சந்தேகம்[தொகு]

அண்ணா, தற்போது :{{இந்திய மக்களவை/16/தமிழ்நாடு/உறுப்பினர்}} என்பது காலாவதி ஆகிவிட்டது, அதற்கு பதில் :{{இந்திய மக்களவை/17/தமிழ்நாடு/உறுப்பினர்}} என்னும் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். நான் உருவாக்கிய கட்டுரையை எதனுடன் இணைத்தால், தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான கட்டுரைகளில் தற்போதைய உறுப்பினர் பெயர் மாற்றமாகும். அதற்கான வழிமுறைகளை சொல்லுங்கள்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:18, 31 மே 2019 (UTC)

இலக்கணப் பிழைகள்[தொகு]

தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளில் பல இலக்கணப் பிழைகள் உள்ளன. உதாரணமாக,

1). தமிழிலக்கணப் புணர்ச்சி விதிகளின்படி ய், ர், ழ் என்ற மெய்யெழுத்துக்களைத் தவிர, மற்ற மெய்யெழுத்துக்களுக்குப் பின் வல்லினம் மிகாது. உதாரணமாக, 'ஏற்படுத்து', 'வரவேற்பு', 'சுதந்திரத்திற்கு', 'தொழிற்சாலை' என்பவற்றிற்குப் பதிலாக 'ஏற்ப்படுத்து', 'வரவேற்ப்பு', 'சுதந்திரத்திற்க்கு', 'தொழிற்ச்சாலை' என்று எழுத்துப் பிழைகளுடன் பல கட்டுரைகளில் எழுதப்பட்டிருக்கிறது.

2). 'நடைபெறு', 'வெற்றிபெறு', 'புகழ்பெற்ற' போன்ற சொற்களுக்குப் பதிலாக 'நடைப்பெறு', 'வெற்றிப்பெறு', புகழ்ப்பெற்ற' என்று எழுதுவது தவறு. இலக்கண விதிகளின்படி இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகக்கூடாது. அதனால் 'நடைபெறு' (நடையைப் பெறு), 'வெற்றிபெறு' (வெற்றியைப் பெறு), 'புகழ்பெற்ற' (புகழைப் பெற்ற) என்று எழுதுவது சரி.

இது போன்ற இலக்கணப் பிழைகளைத் திருத்த அனைவரும் முயற்சி செய்யவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதே வேளையில் எதிர்காலக் கட்டுரைகளிலும் இவ்வாறான பிழைகளைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

உதவி[தொகு]

@AntanO: தோழமைக்கு வணக்கம்! பொதுவகம் தடையில் இருப்பதால் பு. ஏகாம்பரநாதன் எனும் தொகுப்புக்கு படிமம் எவ்வாறு பதிவேற்றுவது? மேலும் சம்பந்தப்பட்ட உறவினரிடம் படிமம் பெற்றுள்ளேன் அது பதிப்புரிமை மீறலாகுமா? உதவுங்கள் நன்றிகள்...--அன்புமுனுசாமி \பேச்சு 14:05, 12 சூலை 2019 (UTC)

வணக்கம்! தங்களிடம் படிமம் பதிவேற்றல் தொடர்பாக உதவி கோரியிருந்தேன், அதுபற்றிய மறுமொழி ஏதும் தெரிவிக்கவில்லை பின்பு, அன்ரன் அவர்களுக்கும் அத்தகவலை இணைத்திருந்தேன் எவ்வொரு பதிலுமில்லை ஏனென்று அறியலாமா? நன்றிகள்... அன்புமுனுசாமி \பேச்சு 13:8, 17 சூலை 2019 (UTC)

சந்தேகம்[தொகு]

வணக்கம் அண்ணா, en:Category:Social groups of Tamil Nadu என்னும் ஆங்கில பகுப்பிற்கு, சரியான தமிழ் பகுப்பு (பகுப்பு:தமிழரில் சாதிகள்) என்று தான் நினைக்கிறேன். ஆனால் அந்த ஆங்கில பகுப்பிற்கு, விக்கித்தரவில் (பகுப்பு:சாதிகள்) என்று உள்ளது. இது சரிதானா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:40, 18 ஆகத்து 2019 (UTC)

@Gowtham Sampath: தவறு தான். en:Category:Castes என்ற ஆங்கிலப் பகுப்பும் உள்ளதைக் கவனியுங்கள். சமூகம் வேறு, சாதி வேறு எனப் பகுக்கப்பட்டுள்ளன.--Kanags \உரையாடுக 11:27, 18 ஆகத்து 2019 (UTC)

தமிழகத்தினுடைய சமூகப் பிரிவுகள் என்பது சரியாக இருக்குமா?

Social groups in Tamilnadu என இருந்தால் தானே நாம் தமிழகத்தில் உள்ள சமூகப் பிரிவுகள் எனக் கூறலாம். ஸ்ரீ (talk) 11:42, 18 ஆகத்து 2019 (UTC)

சரி அண்ணா, en:Category:Social groups of Tamil Nadu என்னும் ஆங்கில பகுப்பிற்கு, (பகுப்பு:சாதிகள்) என்னும் பகுப்பு பொருத்தமில்லாதது தானே?? அந்த ஆங்கில பகுப்பில் தமிழகத்தில் வாழுகின்ற சாதியினரின் கட்டுரைகள் மட்டுமே உள்ளன, ஆனால் தமிழ் பகுப்பில் பொதுவாக இந்தியாவில் உள்ள சாதியினரின் கட்டுரைகள் உள்ளன.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:54, 18 ஆகத்து 2019 (UTC)

Project Tiger 2.0[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

உதவி[தொகு]

வணக்கம் ஐயா. நான் இலங்கையை சேர்ந்தவள். புதுப்பயனர் போட்டியில் 30 கட்டுரைகளை எழுதுதினேன். எனது smartphone இல் visual editing செய்வதன் மூலமும் கணனி வகுப்பின் கணனியை பயன்படுத்துவதன் மூலமே எழுதினேன். வேங்கை திட்டம் 2.0 வின் மூலம் மடிக்கணனி பெற ஆலமரத்தடியில் பதிவு செய்தேன். Smartphone னூடு பதிவு metawikimedia இல் பதிய முடியாதுள்ளது உதவ முடியுமா? Fathima rinosa (பேச்சு) 15:11, 31 ஆகத்து 2019 (UTC)

@Parvathisri மற்றும் Info-farmer: இந்தப் பயனருக்கு உதவ முடியுமா? நன்றி.--Kanags \உரையாடுக 23:08, 31 ஆகத்து 2019 (UTC)
அவரின் கட்டுரைகளைக் கண்டேன். அவர் இத்திட்டத்தின் வழி, பெறுவது கடினமே. எனினும், திட்ட நடத்துனரிடம் வினவுகிறேன். இத்திட்டத்தின் வழி கிடைக்கவில்லையெனில், நேரடியாக விக்கிஅறக்கட்டளையினரிடம் விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து வாரம் ஒரு சில பங்களிப்புகளை அனைத்துத் திட்டங்களிலும் செய்யுங்கள். கலந்தாய்வு செய்து நற்செய்தித் தருகிறேன்.--உழவன் (உரை) 01:55, 1 செப்டம்பர் 2019 (UTC)
சி.ஐ.எஸ் உடன் பேசியதில் இப்பயனருக்கு உதவி கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால் இலங்கை என்பதால் உதவி அனுப்புவதில் சிக்கல்கள் இருக்கலாம் எனத் தெரிவித்தார்கள்.ஆயினும் ஏதேனும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யலாம் என்றும் கூறினர். தகவல் உழவன் கூறியது போல் இவர் தொடர்ந்து பங்களித்து வரலாம்.போட்டியில் பங்குபெறலாம். அவருக்கான உதவி கோரும் மெட்டா பக்கத்தை நான் உருவாக்க உதவுகிறேன்.நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:02, 1 செப்டம்பர் 2019 (UTC)
மிக்க நன்றி. @Parvathisri மற்றும் Info-farmer:. @Fathima rinosa: --Kanags \உரையாடுக 05:21, 1 செப்டம்பர் 2019 (UTC)

உங்களனைவருக்கும் மிக்க நன்றி. Fathima rinosa (பேச்சு) 06:26, 1 செப்டம்பர் 2019 (UTC)

Proposed deletion of ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2019[தொகு]

Ambox warning yellow.svg

The article ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2019 has been proposed for deletion because of the following concern:

இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆடப்படுவது தேர்வுப் போட்டிகள் மட்டுமே. அதற்கென 2019 ஆஷஸ் தொடர் என்ற பக்கம் உள்ளது. அத்துடன் ஒருநாள், இ20 போட்டிகளும் ஆடப்படும் சமயங்களில் மட்டுமே இதுபோன்ற பக்கங்களை உருவாக்க வேண்டும்.

While all constructive contributions to Wikipedia are appreciated, content or articles may be deleted for any of several reasons.

You may prevent the proposed deletion by removing the {{proposed deletion/dated}} notice, but please explain why in your edit summary or on the article's talk page.

Please consider improving the article to address the issues raised. Removing {{proposed deletion/dated}} will stop the proposed deletion process, but other deletion processes exist. In particular, the speedy deletion process can result in deletion without discussion, and articles for deletion allows discussion to reach consensus for deletion.

Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 17:30, 4 அக்டோபர் 2019 (UTC)

கட்டுரைகளில் உள்ளிணைப்புகள்[தொகு]

வணக்கம், கட்டுரைகளில் உள்ளிணைப்புகள் பற்றிய தங்களது உதவி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் ஆண்ட்ராய்டு செயலின் மூலமே விக்கிப்பீடியாவை பயன்படுத்தி வருகிறேன். செயலியில் உள்ள இணைப்புகளைப் பெற Preview link என்ற வசதி உள்ளது. ஆனால் அது நேரடியாக சமமான தமிழ் கட்டுரை பெயர்களை வழங்குவதில்லை. நாம் சரியான தமிழ் கட்டுரை பெயர்களை தெரிந்து இருக்கும் பட்சத்திலேயே அதனை நம்மால் பயன்படுத்த முடிகிறது. ஆண்ட்ராய்டு செயலியில் இதுபோன்ற ஒரு வசதி இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.--Mereraj \உரையாடுக 04:29, 6 அக்டோபர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை முறையீடு[தொகு]

இங்கு முறையிட்டுள்ளேன் என்பதை அறியத்தருகிறேன். --Ramsey1982 (பேச்சு) 09:47, 22 அக்டோபர் 2019 (UTC)

நன்றி[தொகு]

இத்தொகுப்பில் தங்களால் reFill பற்றி தெரிந்து கொண்டேன் . நன்றி .--Commons sibi (பேச்சு) 12:02, 4 நவம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்![தொகு]

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)

நன்றி[தொகு]

பகுப்புகள் சேர்ப்பது பற்றி தெளிவு படுத்தியதமைக்கு நன்றி. இனி தொகுக்கும் கட்டுரைகளில் நிச்சயம் இதை பயன்படுத்துவேன்.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 13:49, 16 நவம்பர் 2019 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:13, 25 நவம்பர் 2019 (UTC)

பயனர் பக்கம் வார்ப்புரு நீக்கம் தொடர்பாக[தொகு]

வணக்கம் . நான் பார்த்த சில பயனர்கள் , வெறுமனே நங்கள் பயனர் பக்கத்தை மட்டும் சொந்த தகவல்களை வைத்து குவித்து வைக்கின்றனர் (விக்கி பங்களிப்பு இல்லாமல்). அத்தகைய பயனர்களுக்கு மட்டுமே நான் {{பயனர் பக்கம்}} வார்ப்புருவை இடுகிறேன் . இது பொதுவெளியில் (விக்கிக்கு வெளியே)

என் பெயரில் விக்கிப்பீடியாவில் கட்டுரை உள்ளது

எனக் கூறுவதைத் தவிர்க்கும் என்பதே எனது கருத்து . தவறாக இருப்பின் தெரிவிக்கவும் . தங்கள் கருத்துகளையும் தெரிவிக்கவும் .

ஆதாரங்கள் :

--Commons sibi (பேச்சு) 08:12, 26 நவம்பர் 2019 (UTC)

@Commons sibi: அறியத் தந்தமைக்கு நன்றி:)--Kanags \உரையாடுக 09:15, 26 நவம்பர் 2019 (UTC)

நன்றி: சிகத்யே-அலீன்[தொகு]

சிகத்யே-அலீன் பக்கத்தில் திருத்தங்கள் செய்தமைக்கு நன்றி !! அப்பக்கத்தில் தகவற்சட்டத்தில் புவியியல் வரைபடத்தில் சிகத்யே-அலீனைக் குறிக்க வேண்டிய செந்நிறக் குறியீடு சட்டத்திற்கு வெளியே வரிகளுக்கிடையே காணப்படுகின்றது. அதை எவ்வாறு சரிசெய்வது என்று விளக்கமுடியுமா? --Stymyrat (பேச்சு) 17:13, 1 திசம்பர் 2019 (UTC)


துடுப்பாட்ட சொல்லியல்[தொகு]

துடுப்பாட்ட சொல்லியல் பக்கத்தில் தங்களின் உதவி தேவை. நன்றி ஸ்ரீ (✉) 07:00, 6 திசம்பர் 2019 (UTC)

மாலத்தீவின் நாட்டுப்புறவியல்[தொகு]

மாலத்தீவின் நாட்டுப்புறவியல் கட்டுரையில் மொழிபெயர்ப்பைப் மேம்படுத்தியுள்ளேன். நன்றி.--வசந்தலட்சுமி (பேச்சு) 04:22, 18 திசம்பர் 2019 (UTC)

சந்தேகம்[தொகு]

en:West North Line, Chennai Suburban இந்த கட்டுரைக்கான தலைப்பு தமிழில் மேற்கு வடக்கு வழித்தடம், சென்னை புறநகர் என்று எழுதுவது சிறந்ததா அல்லது வடமேற்கு வழித்தடம், சென்னை புறநகர் என்று எழுதுவது சிறந்ததா அண்ணா?? -- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:36, 27 திசம்பர் 2019 (UTC)

@Gowtham Sampath:, இந்த வழித்தடம் சென்னையில் இருந்து நேர் மேற்கே அறக்கோணம் சென்று அங்கிருந்து நேர் வடக்கே திருப்பதி செல்கிறது என்பது எனது புரிதல். அது சரியெனில் மேற்கு-வடக்கு வழித்தடம் என எழுதுவதே சரியானதாக இருக்கும்.--Kanags \உரையாடுக 04:02, 27 திசம்பர் 2019 (UTC)
ஆம் அண்ணா, முதலில் மேற்கே சென்ற பின்பு வடக்கே செல்கிறது. உங்களது புரிதல் சரியானது. நன்றி அண்ணா-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:16, 27 திசம்பர் 2019 (UTC)

தொடருந்து[தொகு]

பொதுவாக விரைவுத் தொடருந்து என்று எழுதலாம?? விரைவு தொடருந்து என்று எழுதலாமா?? ஆராய்ந்து சொல்லுங்கள். இனி வரும் கட்டுரைகளை தாங்கள் சொல்லும் பதிலைக் கொண்டு தான் எழுத போகிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:07, 1 சனவரி 2020 (UTC)

@Gowtham Sampath: விரைவுத் தொடருந்து தான் சரி.--Kanags \உரையாடுக 07:45, 1 சனவரி 2020 (UTC)

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி[தொகு]

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை

உதவி[தொகு]

வணக்கம் கனக்ஸ், Geology of India, Geography of India, என்ற இரண்டு தனித்தனி கட்டுரைகள் ஆங்கிலத்தில் உள்ளன. திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் Geography of India கட்டுரையை மொழிபெயர்த்திருந்தார். நான் Geology of India கட்டுரையை மொழிபெயர்த்தேன். ஆனால் சேமித்ததும் இரண்டு ஆங்கிலக் கட்டுரைகளும் தமிழில் ஒரே கட்டுரையைக் காட்டுகின்றன. இதில் திரு கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை ஒருங்கிணைந்துள்ளது. இதனை சரிசெய்து உதவவும். நன்றி1-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:21, 10 சனவரி 2020 (UTC)

@Parvathisri: Geology of India என்பது இந்தியாவின் நிலவியல் என மொழிபெயர்க்க வேண்டும். Geography of India என்பது இந்தியாவின் புவியியல் என மொழிபெயர்க்க வேண்டும். உங்கள் திருத்தங்களை மீள்வித்து விட்டு இந்தியாவின் நிலவியல் என்ற தலைப்பில் புதிய கட்டுரையை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 21:52, 10 சனவரி 2020 (UTC)
நன்றி கனக்ஸ். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:40, 11 சனவரி 2020 (UTC)
ஆங்கிலத்தில் cyclone, storm, என இரு தலைப்புகள் உள்ளன. ஆனால் தமிழில் சூறாவளி, புயல் இரண்டும் சூறாவளி என்ற கூகுள் கட்டுரைக்குச் செல்கிறது.வழிமாற்றினாலா எனத் தெரியவில்லை உதவவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:42, 16 சனவரி 2020 (UTC)
@Parvathisri: புயல் (en:storm) வழிமாற்றை நீக்கியிருக்கிறேன். இதனால் ஏராளமான கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகள் வந்துள்ளன. முடிந்தால் விரைவில் புயல் தலைப்பில் ஒரு கட்டுரையை ஆரம்பியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:34, 17 சனவரி 2020 (UTC)
நன்றி கனக்ஸ். தொடங்குகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:29, 17 சனவரி 2020 (UTC)


விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020[தொகு]

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:29, 17 சனவரி 2020 (UTC)

தமிழ் விக்கிப் பீடியாக் கட்டுரைகளைத் திருத்துதல்-எனது நிறுத்தற்குறித் தவறுகள்.[தொகு]

தமிழ் விக்கிப் பீடியாக் கட்டுரைகளைத் திருத்துதல்-எனது நிறுத்தற்குறித் தவறுகள்.

மிக்க நன்றி! கவனித்தேன். நான், "அழகி+" ஒலிபெயர்ப்புச் செயலியைப் பயன்படுத்தித் தமிழில் எழுதுகிறேன். சற்று வேகமாகத் தட்டச்சுச் செய்கையில் அது பல தவறுகளைப் புகுத்துகிறது. உயிர் நெடில்களுக்கு இரட்டை ஆங்கில எழுத்துக்களைச் சரியாகப் பெயர்க்கும் அது, உயிமெய்க் குறில்களைத் தானாகவே நெடிலாகப் பெயர்க்கிறது. ("பெயர்க்கிறது" என்பதை, "பெயர்க்கிறாது" என்று செய்யும், வேகமாகத் தட்டச்சினால்). நிறுத்தற் குறிகளில் மெய்ப் புள்ளிகளும், மேற்கோள் குறிகளும் மிகச் சிறிதாகத் தெரியும். இதனால், மற்ற தவறுகளைத் திரும்பத் திரும்பச் சரி செய்ய நேரும் போது, இவை நழுவி விடுகின்றன.

அத்துடன், நான் இரண்டு வகை விசைப் பலகைகளையும் ( அஸ்க்கி மற்றும் அழகி+), இரண்டூ (இங்கு, 'டு' விற்கு, 'டூ' என வைக்கிறது, அழகி) மொழிகளையும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மாற்றி மாற்றிக் கையாள்கையில், எனது தட்டச்சு வேகம் மிகவும் குறைந்து விடுகிறாது. ('ற' விற்கு, 'றா'). அழகியை நான் இணையப் பக்கங்களில் நேரடியாக எழுதும் போது மட்டுமே பயன்படுத்துகிறேன்.

தட்டச்சுக் கெய்யும் போது கட்டுரைகளிலும், மற்ற எல்லா உரைநடைகளிலும் எனக்கு, நிறுத்தற் குறிகளை இடுவது வழக்கமான முறையிலேயே பழக்கமாகி இருக்கிறது. உரைநடை வரிகளுக்குள், உரையாடலைக் குறிக்க, இரட்டை மேற்கோள் குறிகளையும், பெயர்களைக் குறிக்க, ஒற்றை மேற்கோள் குறிகளையும் இட்டுப் பழக்கமாகி உள்ளது. இதனை இப்போது மாற்றிக் கொள்ள வேண்டும்! முயல்கிறேன்.

மற்ற அனைத்டுத் தட்டச்சு வேலைகளுக்கும் எம்எஸ் ஆஃபீஸ் தொகுப்பைப் பயன்படுத்திகிறேன்.அதில் எழுத்துருக்களை என் விருப்பப்படி அமைத்துக் கொள்ள முடிகிறது.அஸ்க்கி விசைப் பலகை எனக்குப் பல எழுத்துருக்களில் பழக்கமானது ஆகும். எழுத்துருக்களை மாற்றிக் கொண்டு மிக வேகமாகத் தட்டச்ச முடியும். அதில் நிறுத்தற் குறிகள் தெளிவாகத் தெரியும். மீள்பார்வை இன்றி என்னால் தட்டச்ச முடியும். அழகி+ கொஞ்சம் தடுக்குகிறது. குறைகளைக் களைய முயல்கிறேன். மிக்க நன்றி.--M.K.Chandra Mouleeswaran (பேச்சு) 12:22, 29 பெப்ரவரி 2020 (UTC)

பாத்திமா-மடிக்கணினி[தொகு]

இங்கு உங்களின் எண்ணங்களை எழுதலாம்--உழவன் (உரை) 00:48, 7 மார்ச் 2020 (UTC)

இலங்கைத் துடுப்பாட்ட வீரர்கள் தலைப்புகள்[தொகு]

பின்வரும் கட்டுரைகளை உருவாக்கியிருந்தேன்.அவை இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் பற்றியது எனவே அவர்களின் பெயர் உச்சரிப்பும் தலைப்பும் ஒன்றுதானா என்பதனை சரிபார்க்கவும். தவறாக இருக்கும் பட்சத்தில் அதனை பொருத்தமான பெயருக்கு நகர்த்தவும். நன்றி ஸ்ரீ (✉) 14:08, 14 மார்ச் 2020 (UTC) அசந்தா டி மெல் சஜித் பதிரனா சமிகா கருணரத்ன சதீர சமரவிக்ரம ருவிந்து குணசேகர காமிந்து மெண்டிஸ் லகிரு மதுசங்கா மலிந்தா புஷ்பகுமர ரோசன் சில்வா திலன் விஜசிங்கே அசேல குணரத்ன கசுன் ரஜிதா அவிஷ்கா பெர்னாண்டோ விஷ்வா பெர்னாண்டோ அகிலா தனஞ்செய வாணிந்து அசரங்கா தில்ஷன் முனவீரா

மிக்க நன்றி ஸ்ரீ (✉) 14:40, 22 மார்ச் 2020 (UTC)

உதவி[தொகு]

வணக்கம். வார்ப்புரு:2019–20 coronavirus outbreak data/India medical cases chart - இங்கு உங்களின் தேவைப்படுகிறது. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:25, 16 மார்ச் 2020 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

மௌசுமி அக்தர் ஷல்மா எனும் கட்டுரையின் தலைப்பினை அக்தர் சல்மா எனும் தலைப்பிற்கு விக்கிப்பீடியா பெயரிடல் மரபுப் படி மாற்றியுள்ளதற்கு நன்றி. இது பற்றிய தகவலை பயனருக்கு தெரிவித்தால் அவர் கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் மேலும் இது போட்டிக் கட்டுரை என்பதால் அதனை நீக்கி சரியான தலைப்பினை அவரே மீண்டும் சம்ர்ப்பிக்க வாய்ப்பாக இருக்கும். நன்றி ஸ்ரீ (✉) 15:11, 23 மார்ச் 2020 (UTC)

Pages using infobox cricketer with unknown parameters[தொகு]

பழைய துடுப்பாட்டக் கட்டுரைகளில் Pages using infobox cricketer with unknown parameters எனும் பகுப்பு வந்துள்ளது. அதனைச் சரிசெய்ய தங்களது உதவி தேவை. (உ.ம்: அசோக் பட்டேல்) நன்றி ஸ்ரீ (✉) 14:41, 27 மார்ச் 2020 (UTC)

பரிவட்ட நச்சுயிரி = Coronavirus இன் தூய தமிழ் சொல்[தொகு]

Coronavirus என்பதை அறைகுறை தமிழாக கொரொனாவைரசு என்பது தலைப்பிடப்பட்டது.

இதனை அழகிய தூய தமிழ் சொல்லான பரிவட்ட நச்சுயிரி என்பதற்கு தலைப்பிடலாம். இச்சொல் பல ஆண்டுகளாக தமிழக அரசு அகராதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பிடத்தக்கமை[தொகு]

சஞ்சித் லக்ஷ்மன் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விருதுகள் குறிப்பிடத்தக்கவையா? --AntanO (பேச்சு) 15:34, 7 ஏப்ரல் 2020 (UTC)

தில்லையடி வள்ளியம்மை பக்கம்[தொகு]

தில்லையடி வள்ளியம்மை பக்கத்தில் நான் ஆதாரத்துடன் தானே போட்டேன்? Tirukodimadachengunrur (பேச்சு) 08:18, 18 ஏப்ரல் 2020 (UTC)

திருப்பூர் குமரன்[தொகு]

திருப்பூர் குமரன் பக்கத்தில் எனது பங்களிப்பை எதற்க்காக நீக்கினீர்கள் ? Tirukodimadachengunrur (பேச்சு) 08:24, 18 ஏப்ரல் 2020 (UTC)

உதவி[தொகு]

வணக்கம். Theatre அல்லது theater என்ற சொல்லானது "அரங்கு மற்றும் "மேடையில் நடைபெறும் நிகழ்த்து கலை" என இரு பொருள்பட உள்ளதால், தவியில் சில கட்டுரைகள் சரியான பகுப்புகளுக்குள் இணைக்கப்படாமல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ([2], [3])

 • Theatre or theater - அரங்கு
 • Theatre or theater இந்த ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான தமிழ் கட்டுரை தவியில் இல்லை
 • இந்த ஆவி கட்டுரை சுட்டும் "Theatre or theater" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைப் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் சில கட்டுரைகளை சரியான பகுப்பிற்கு மாற்ற உதவும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:16, 28 ஏப்ரல் 2020 (UTC)

சந்திவிரிகளைப் புரியாமல் பிழைகளை உண்டாக்கவேண்டா[தொகு]

வணக்கம் நண்பர் Kanags அவர்களே... முக்கியப் பங்கு என்று சரியாய் இருப்பதனை நீயிர் "முக்கிய பங்கு" என்று தவறாகப் பிழைபடுத்தியுள்ளீர். தயவுசெய்து இந்த மிக எளிய தமிழ்ச்சந்தி விதிகளைக்கூடப் புரியாமே இப்படி செய்யவேண்டா என்று கோருகின்றோம் தமிழுலகத்தோம் எல்லோமும்... மீளமைப்பு இழுபறி வேண்டா என்று அறிவுபூர்வமாக அறிவுறுத்தவே இந்த இடுகை. சந்திவிதிகள் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினால் உங்கட்கும் மற்ற விக்கியாளர்க்கும் ஏதேனும் பயிற்சி நடத்தமுன்வருகின்றேன். அதுவரைத் தயவுசெய்து தாங்களே அந்த மீளமைப்பை மீளமைக்குமாறு கோருகின்றேன். https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88&type=revision&diff=2967597&oldid=2967417 --Perichandra (பேச்சு) 04:56, 10 மே 2020 (UTC)

@Perichandra: முக்கியப்பங்கு - முக்கியப் பங்கு எது சரி? கட்டுரையில் ஒன்று இங்கு ஒன்றாக எழுதுகிறீர்கள். இரண்டு முறையும் சரியா?--Kanags \உரையாடுக 05:04, 10 மே 2020 (UTC)

அன்பரீர்

  முக்கியப்பங்கு - முக்கியப் பங்கு: இரண்டுமே சரிதான்; நம் நற்பயனாய் ஆங்கிலம்போல் தமிழிலே தொடர்களின் இடையே இடைவெளி விடுகைக்கும் நிறுத்தக்குறிகட்கும் விரிந்த இறுக்கமான மரபு ஏதுமில்லை. 

ஆங்கிலத்திலேயும் இடைவெளி விட்டாலும் ஒரே தொடராகப் பேசவேண்டியன மிகப்பரவல். மிக எளிய எடுத்துக்காட்டு:

இரண்டுக்கும் பேசுமுறை ஒன்றே; footnote - foot note என்பதைப் பிரித்து எழுதப் புதிய அடிப்படை ஏதுமில்லை. ஆனால் ஆங்கிலத்திலே ஏதோ அப்படியாகிவிட்டது. அதனாலேதான் தமிழிலே நல்லபடியாக இப்படித் தேவையற்ற மரபுகள் இல்லையென்று கூறினேன். ஆனாலும் தேவைப்படும் இடங்களில் சீராகப் பின்பற்றினால் நன்று.

சில இடங்களில்தான் நாமே உணர்ந்து ஒரு வழக்கைப் பின்பற்றவேண்டும். சான்றாகத் தான்/தாம் போன்ற சொற்களுக்குச் சொல்லலாம். கீழ்க்கண்ட மூன்று வாக்கியங்களில் தாம் என்ற சொல்லுக்கு முன் இடைவெளியைச் சரியான சூழலிலே பின்பற்றினால் செய்திவாசிக்கை போன்ற சூழ்நிலைகளில் மீண்டு வாசித்துத் திருத்திப்படிக்க மறுவாய்ப்போ அழகோ இல்லாத நிலைகளில் வேகமாகப் படிக்கும்பொழுது உதவும். அல்லாவிட்டால் தடுமாறி மீண்டும் படிக்கவேண்டிய நிலைமை ஏற்பட நல்ல வாய்ப்புண்டு. ஆனால் சிலநேரங்களில் முந்தைய வாக்கியங்கலைக்கொண்டுகூட இதனைத் தீர்க்கமுடியலாம்.

 1. "அவர்தாமே இதைச் செய்துகாட்டப்போவதாக் கூறினார்; நான் அப்படிக் கூறவில்லையே!" <. இடைவெளிவிடாமை நன்று ... கூறினது அவர்தாம் வேறுயாரும் கூறவில்லை
 2. "அவர் தாமே இதைச் செய்துகாட்டப்போவதாகக் கூறினார்;" <- இடைவெளிவிடுகை நன்று! ...செய்துகாட்டப்போவது அவரே வேறு யாருமன்று
 3. "அவர் தாம் படித்துப்பார்த்தபொழுது எந்தப் பிழையும் இல்லையாமே; நீ படிக்கும்பொழுது மட்டும் எப்படிப் பிழையுண்டாயிற்று?" <- இடைவெளிவிடுகை நன்று! தாம் என்பதற்கும் நீ என்பதற்கும் வேறுபாட்டு முரண்.

மற்றபடியான பல நிலைகளில் மொழியை ஒழுங்காகப் பயின்ற யாரும் படிக்கும்போது "முக்கியப்", "பங்கு" என்று ஒவ்வொரு சொல்லையுந் தனியாகக் கண்டுகொண்டு படிபப்தில்லை.

மொழியைத் திறமாகத் தெரிந்திருக்கும் ஒருவர் தாம்படிக்கும்பொழுது இலக்கணம் தெரிவதால் அடுத்து என்ன சொல்லோ தொடரோ வரும் வாக்கியம் எப்படி முடிந்தாகவேண்டும் என்ற அந்த உள்ளுணர்ச்சியோடு இனி வருகின்ற சொற்களை முன்னமே கண்ணால் நோடி அவற்றையெல்லாம் உள்ளத்திலே தொகுத்து ஏற்ற அழுத்தந் திருத்தத்தோடுதான் படிப்பார்கள்; படிக்கவேண்டும். அப்படியல்லாவிட்டால் மொழிப்பயிற்சி பற்றவில்லை என்றுதான் பொருள்.

பழைய சுவடிமரபின்படி இடைவெளிகள் நிறுத்தக்குறிகள் ஏதுமில்லை என்பது தெரிந்ததே. அதையேதான் இயந்திர அச்சு வந்தபின்னரும் பின்பற்றினர்! சான்றாக எல்லிசுத் துரை வெளியிட்ட இந்தப் பழைய திருக்குறட் பதிப்பினைக்காண்க: எல்லீஸ்-திருக்குறள்-அறப்பால் அங்கே இன்று அச்சிடுவதுபோற் சீர்க்குச் சீர் இடைவெளிகூடக் கிடையாது! பொதுவாகத் தமிழிலே சிறுதொடர்களாய் இருந்தால் இடைவெளியின்றிக் கூட்டி யெழுதுவது உண்டு. இது பெரிய கட்டுரையாகிவிட்டதே. எம் முயற்சி தெளிவிற்கு உதவியிருக்குமென்று நம்புகின்றேன். --Perichandra (பேச்சு) 16:23, 10 மே 2020 (UTC)

உதவி[தொகு]

வணக்கம் Kanags. நான் சில நாட்களுக்கு முன்பு உங்களிடம் சில ஆலோசனைகள் கேட்டுள்ளேன். அவைகளை எனது உரையாடல் பக்கத்தில் குறிப்புட்டுள்ளேன். எனக்கு சரியான ஆலோசனைகள் வழங்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன்.--Thilakshan (பேச்சு) 16:56, 13 மே 2020 (UTC)

பாளையக்காரன் ஜாதி[தொகு]

வணக்கம் ஐயா , நான் உருவாக்கி பாளையக்காரன் என்ற பக்கம் முத்தரையர் சமுதாயத்தில் 29 உள்ள ஒரு உட்பிரிவின் பெயர் ஆகும். அந்த பக்கம் பாளையக்காரர் மன்னர்கள் பற்றியது அல்ல அது வேலூர்,திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர் பகுதியில் இருக்கும் சாதியின் பெயர் ஐயா. அந்த பக்கத்தை மீட்கும் படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ஐயா. முத்தரையர் உள்ள வலையர் ஜாதியை போல் வட தமிழகத்தில் உள்ள பாளையக்காரன் ஜாதி வரலாறை தகுந்த ஆதரங்களுடன் எழுதிருத்தேன் தயவு செய்து மீண்டும் அப் பக்கத்தை உருவாக்க வேண்டுகிறேன் ஐயா. --Almighty34 (பேச்சு) 13:03, 26 மே 2020 (UTC)

@Almighty34: உங்கள் கட்டுரையை பாளையக்காரர் (சாதி) என்ற தலைப்பில் மீட்டமைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:43, 26 மே 2020 (UTC)
@Kanags: மிக்க நன்றி ஐயா.---Almighty34 (பேச்சு) 13:28, 26 மே 2020 (UTC)

படங்களை பதிவேற்றவும்[தொகு]

வாணி போஜனில் படங்களை பதிவேற்ற முடியுமா? வாணி போஜனுக்கு இன்னொரு படம் தயவுசெய்து. மேலும் விக்கிபீடியாவிற்கான படம். Susenaes (பேச்சு) 14:18, 26 மே 2020 (UTC)

ஐயம்[தொகு]

வணக்கம், ஏன் hello fm vellore பக்கத்தை நீக்கிவிட்டீர்கள்?

@Mjmsjayamohan: வணக்கம், ஏற்கனவே ஹலோ எப். எம் கட்டுரை உள்ளது. அதில் அனைத்துத் தகவல்களும் உள்ளன. மேலும் தகவல்களை அந்தக் கட்டுரையிலேயே நீங்கள் எழுதலாம்.--Kanags \உரையாடுக 08:08, 8 சூன் 2020 (UTC)

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients[தொகு]

tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

தமிழ்நாடு[தொகு]

தமிழ்நாடு பக்கத்தில் தமிழக மாவட்டங்களை சேர்க்கலாம். அதுமட்டுமின்றி ஆங்கில மொழி பெயர் பக்கத்தில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது. தயவுகூர்ந்து கவனிக்கவும். Gunamurugesan (பேச்சு) 10:45, 14 சூன் 2020 (UTC)

@Gunamurugesan: தமிழ்நாடு கட்டுரையில் சுருக்கமாகவே மாவட்டங்களோ அல்லது வேறு எதனைப் பற்றியும் தரலாம். முழுமையான தகவலுக்கு குறிப்பிட்ட கட்டுரைகளைப் பார்க்க வேன்டும். நீங்கள் தந்தது வெறுமனே செய்திக் குறிப்புகள். அவை தமிழ்நாடு கட்டுரையில் இடம்பெறத் தகுதியற்றவை. தமிழக மாவட்டங்கள் கட்டுரையிலும் நீங்கள் குறிப்பிட்ட செய்திகளை மிகச் சுருக்கமாகவே தரலாம்.--Kanags \உரையாடுக 10:59, 14 சூன் 2020 (UTC)

பாபா லக்‌ஷி (ஞானசேகரம், ஜெயகுமாரன்)[தொகு]

வணக்கம் நான் ஒரு புதிய பயனர், நான் எழுதிய கட்டுரையில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமா ? ஏன் அது நீக்கப்பட வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை என காட்டுகிறது, என்க்கு உதவி தேவை, இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை சொலவும். நன்றி Thamilaraci (பேச்சு) 11:20, 5 சூலை 2020 (UTC)

@Thamilaraci: கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல, மேற்குறிப்பிட்ட நபரைப் பற்றிய கட்டுரை அவரது குறிப்பிடத்தக்கமையை நிரூபிக்கவில்லை. இந்த உதவிப் பக்கங்களைப் பாருங்கள்: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை, விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர்.--Kanags \உரையாடுக 12:01, 5 சூலை 2020 (UTC)

பாபா லக்‌ஷி (ஞானசேகரம், ஜெயகுமாரன்)[தொகு]

வணக்கம், மேலே குறிப்பிட்ட நபரைப் பற்றிய கட்டுரையை அவரது குறிப்பிடத்தக்கமையை, நேர்காணல்கள், இனையத்தளங்களில் வந்த சான்றுகள், ஊடகங்களில் வந்த சான்றுகள், சமூக வலைத்தளங்களில் வந்த சான்றுகள்

போன்றவற்றின் மூலம் மேற்கோள்கள் காட்டியும், வெளியினணப்புகள் செய்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை தவிர வேறு ஏதேனும் வழியில் காட்ட வேண்டுமா? அப்படியாயின் அதற்கு இனி என்ன செய்யவேண்டும்? நன்றி Thamilaraci (பேச்சு) 12:34, 5 சூலை 2020 (UTC)

அரிமளம் சு.பத்மநாபன்[தொகு]

வணக்கம் Kanagsǃ இன்று காலையில் நான் பதிவிட்ட அரிமளம் சு.பத்மநாபன் என்னும் தலைப்பிலமைந்த கட்டுரை நீக்கப்பட்டிருக்கிறது. சான்றாதாரங்களும் உசாத்துணைகளும் இணைப்பதற்குள் அது நீக்கப்பட்டுள்ளது. காரணம் ஏதும் தரப்பெறவில்லை. அந்தப் பக்கம் குறித்த விவரங்கள் அறிய விரும்புகிறேன். Arunankapilan பேச்சு

@Arunankapilan: கட்டுரை நீக்கப்படவில்லை. சரியான தலைப்புக்கு மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:59, 11 சூலை 2020 (UTC)

மிக்க நன்றிKanags \[[User talk:Kanags|. சான்றாதாரங்களை இணைத்து விடுகிறேன். :@Arunankapilan:

பல்லடம் சஞ்சீவ ராவ் கட்டுரை[தொகு]

வணக்கம் Kanags. தமிழ் கட்டுரை இதே தலைப்பில் இருப்பதை காட்டவில்லை. எனவேதான் இது போன்று நடந்துள்ளது. நன்றி. --பாலசுப்ரமணியன் (பேச்சு) 08:14, 14 ஆகத்து 2020 (UTC)

தலைப்பை மற்ற உதவி[தொகு]

காவல் என்ற திரைப்படத்தின் தலைப்பு நீயெல்லாம் நல்லா வருவடா என்று தவறாக உள்ளது .

@Asokkrish: கட்டுரையை நீக்கியிருக்கிறேன். காவல் என்ற தலைப்பில் புதிய கட்டுரையை முடிந்தால் எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 08:59, 14 ஆகத்து 2020 (UTC)

template help[தொகு]

நான் ஆங்கில விக்கியில் இருக்கும் user barba templateடை தமிழ்ல் என் பயனர் பக்கத்தில் உருவக்கியுள்ளன் அதில் எதும் தவறு உள்ளதா. Asok (பேச்சு) 07:09, 12 செப்டம்பர் 2020 (UTC)

@Asokkrish: தவறில்லை. ஆனாலும், வார்ப்புருக்களின் பெயரை மாற்றாதீர்கள். ஆங்கில விக்கியில் என்ன பெயர் உள்ளதோ அதே பெயரில் வார்ப்புருவை உருவாக்குங்கள்.--Kanags \உரையாடுக 07:33, 12 செப்டம்பர் 2020 (UTC)

அய்யா வைகுண்டர்[தொகு]

நண்பரே, அய்யா வைகுண்டர் பற்றிய கட்டுரையானது அகிலத்திரட்டு சான்றுடன் கட்டுரை விரிவாக்கப்பட்டது. தாங்கள் அதை ஏற்றுக் கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி சஜின் (பேச்சு) 08:14, 17 செப்டம்பர் 2020 (UTC)

சாக்கியர் கட்டுரை[தொகு]

வணக்கம் Kanags அவர்களுக்கு, Shakya என்ற கட்டுரையும் நான் உருவாக்கிய சாக்கியர் (கேரள சமூகக் குழுக்கள்) சார்ந்த கட்டுரையும் ஒன்றிணைந்து விட்டது. மீட்டெடுக்க உதவவும். --பாலசுப்ரமணியன் (பேச்சு) 13:13, 20 செப்டம்பர் 2020 (UTC)

Yes check.svgY ஆயிற்று @Balu1967: கட்டுரையின் தலைப்பை சாக்கியர் (கேரள சமூகம்) என மாற்றியிருக்கிறேன். சாக்கியர் தலைப்பு Shakya என்ற கட்டுரைக்கே மிகப் பொருத்தம். முடிந்தால் Shakya கட்டுரையை மொழிபெயருங்கள். கட்டாயம் இருக்க வேண்டிய கட்டுரை. நன்றி.--Kanags \உரையாடுக 07:39, 21 செப்டம்பர் 2020 (UTC)

We sent you an e-mail[தொகு]

Hello Kanags/தொகுப்பு 13,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

சத்திய சாயிபாபா - நீக்குதல் குறித்து[தொகு]

சத்திய சாயிபாபா குறித்த கட்டுரையில் அவரைப் பற்றி முரண்பாடான கருத்துகள் கூறப்படுகின்றன என்பதில் தவறில்லை. ஆனால், அவருக்கு எதிரான கருத்துகளை ஆதாரத்தோடு சுட்ட அனுமதிக்கும்போது, அவருக்கு ஆதரவான அறிவியல் ஆய்வறிக்கையையும் பதிவிடுவதில் என்ன தவறு? அவருக்கு எதிரானதும், ஆதரவானதும் (அறிவியல்அடிப்படையில்) ஆன இருகருத்துகளும் வாசகர்களுக்குத் தெரியவைப்பதுதானே முறை. அதுதானே சரி. அதுதானே நடுநிலை. அப்பொழுதுதானே சரியான முடிவுக்கு ஒருவர் வரமுடியும். எனவேதான், அவர்பற்றிய அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்ட மேல்நாட்டு அறிஞர் இருவர் ஆய்ந்துவெளியிட்ட அறிக்கையினைப் பதிவுசெய்துவருகிறேன். இதனை நீக்கவேண்டுமென்றால், அவர் பற்றிய எதிரான கருத்துகளடங்கிய பதிவுகளையும் நீக்கிடவேண்டும் என்பது சரிதானே. இல்லையென்றால் ஒரு சார்பாகச் செயல்படுகின்றது என்ற குற்றச்சாட்டு நம்மீது ஏற்படும். இரண்டையும் பதிவிட்டால், வாசகர்கள் முடிவுசெய்து கொள்வர், எது சரியென்று.

மேலும், மேற்கோள் பகுதியில் நான் பதிவிட்ட சத்தியசாயி பொன்மொழிகள் பல நீக்கப்பட்டுள்ளன என்பதையும் தங்களுக்குக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன். அது மிகவும் தவறான செயல். மனதிற்கு வருத்தமளிப்பது. ஏனென்றால், சினிமா நடிகர்கள் பேச்சைக் கூடப் பொன்மொழிகள் எனப் பதிவிட்டுள்ளனர்,(சினிமா நடிகர்களைக் குறைத்து மதிப்பிடுகின்றேன் எனத் தவறாக எண்ணவேண்டாம், அவர்களிலும் நல்ல அறிவாளிகள், கவிஞர்கள் உண்டு என்பது எனக்குத் தெரியும்) அவையெல்லாம் அங்கிருக்கப் பாபாவின் பதிவுகளை நீக்கியிருப்பது ஒரு சார்பான தன்மையைக் காட்டுகின்றது. அல்லது யாரோ ஒருவர் வேண்டுமென்றே இவற்றை நீக்கியுள்ளனரோ என எண்ணத் தோன்றுகிறது. கருத்துகளைக் கருத்தால்தான் வெல்லவேண்டுமே யொழிய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகக் கூடாது. நன்றி. ஆய்வறிக்கையை மீண்டும் பதிவிட்டுள்ளேன். நீக்கிட வேண்டாம். நீக்கவேண்டுமெனில், என்னுடன் கலந்து பேச வேண்டுகின்றேன். என் தொலைபேசி எண்: 9444334960.--−முன்நிற்கும் கருத்து Meykandan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@Meykandan: தனிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.--Kanags \உரையாடுக 06:01, 4 அக்டோபர் 2020 (UTC)

உதவி[தொகு]

Mrs.serial killer என ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரையை தமிழில் மிஸ் சீரியல் கில்லர் என்று எழுதியுள்ளன் இந்த தலைப்பு சரியானதா Asok (பேச்சு) 17:08, 6 அக்டோபர் 2020 (UTC)

@Asokkrish: மிஸ் அல்ல மிசிஸ். தலைப்பு "மிசிஸ். சீரியல் கில்லர்" என்று வைக்கலாம்.--Kanags \உரையாடுக 06:55, 7 அக்டோபர் 2020 (UTC)

தாயின் மணிகோடி[தொகு]

அன்பே Kanags! அர்ஜுன் நடித்த அரிய தமிழ் படம் தாயின் மணிகோடி பற்றி ஒரு கட்டுரை தயாரிக்க முடியுமா? நன்றி! --178.71.162.78 17:00, 10 அக்டோபர் 2020 (UTC)

கவனத்திற்கு[தொகு]

வணக்கம் பகுப்பு:தமிழ் நபர்கள் மற்றும் பகுப்பு:தொழில் வாரியாக தமிழர்கள் என்று இரண்டு பகுப்புகள் உண்டு இதில் எந்த பகுப்பு சரியானது? இரண்டு பகுப்பில் எது தேவை ?--Thilakshan (பேச்சு) 23:46, 15 அக்டோபர் 2020 (UTC)

@Thilakshan: இரண்டும் தேவை.--Kanags \உரையாடுக 06:41, 16 அக்டோபர் 2020 (UTC)

அப்படி என்றால் உதாரணமாக பகுப்பு:தமிழ் வரலாற்றாளர்கள் ‎ என்ற பகுப்பில் பகுப்பு:தமிழ் நபர்கள் மற்றும் பகுப்பு:தொழில் வாரியாக தமிழர்கள் என இரண்டு பகுப்பையும் சேர்க்கவா? பகுப்பு:தமிழ் நபர்கள் என்ற பகுப்பு எந்த ஒரு ஆங்கிலம் அல்லது வேறு ஒரு பகுப்புடனும் சேர்க்கப்படவில்லை யே என்ன செய்வது?--Thilakshan (பேச்சு) 06:54, 16 அக்டோபர் 2020 (UTC)

ஒரே பெயரில் 2 கட்டுரைகள்[தொகு]

ஆபிஸ் என்ற பெயரில் 2 ஆபிஸ் (தொலைக்காட்சித் தொடர்) / ஆபீஸ் (தொலைக்காட்சித் தொடர்) கட்டுரைகள் உள்ளது அதை ஒன்று சேர்க்க முடியுமா ?--Thilakshan (பேச்சு) 22:30, 16 அக்டோபர் 2020 (UTC)

ஆலோசனை[தொகு]

வணக்கம் பகுப்பு:இந்தி மொழித் தொலைக்காட்சி தொடரை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மொழித் தொலைக்காட்சி தொடர்கள் இந்த பகுப்புகள் மிக நீளமாக உள்ளது இதை மறு ஆக்கம் (அல்லது தயாரிப்பு) செய்யப்பட்ட இந்தி தொடர்கள் என்று பெயர் மாற்றவா? --Thilakshan (பேச்சு) 08:14, 17 அக்டோபர் 2020 (UTC)

விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020[தொகு]

வணக்கம் கனகரத்தினம் சிறீதரன் , தாங்கள் விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 நடக்க உள்ளதைப் பற்றி அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். அனுபவமுள்ள பயனரான நீங்கள் மாணவர்களுக்கு பயிற்சி நடத்தினால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். இதன்மூலம் விக்கிப்பீடியா பற்றி நாங்களும் கற்றுக் கொள்ள உதவியாக இருக்கும். தங்களுக்குப் பயிற்சி அளிக்க விருப்பம் எனில் இங்கு தெரிவிக்கவும் நன்றி ஸ்ரீ (✉) 09:16, 18 அக்டோபர் 2020 (UTC)

உதவி[தொகு]

வணக்கம் மாடல் என்ற சொல்லுக்கு மாதிரி என்று தமிழாக்கம் செய்து பல பகுப்புகள் உண்டு அதை என்று மாத்த முடியுமா?

@Thilakshan: இதற்காகத்தான் தேவையற்ற அளவுக்கதிகமாகப் பகுப்புகளை உருவாக்காதீர்கள் என முன்னரே பல முறை உங்களுக்கு எச்சரித்திருந்தோம்.--Kanags \உரையாடுக 09:34, 19 அக்டோபர் 2020 (UTC)

பயனர்_பேச்சு:Arularasan._G#விக்கிமூலம் இங்கு கொஞ்சம் கவனித்து, கருத்திடுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 03:23, 21 அக்டோபர் 2020 (UTC)

நீக்ககலுக்காக காரணம் வேண்டுதல்.[தொகு]

நீக்கப்படாமல் இருக்க கட்டுரை எவ்வாறு அமைய வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள் சகோதரரே! TNSE arunbharathi DGL (பேச்சு) 13:11, 22 அக்டோபர் 2020 (UTC)

@TNSE arunbharathi DGL: நீங்கள் எழுதிய எந்தத் தமிழ்க் கட்டுரையை நீக்கினேன் எனக் கூறுங்கள். பார்த்து விட்டுப் பதிலளிக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 00:19, 23 அக்டோபர் 2020 (UTC)

தமிழில் என்ன பெயர்[தொகு]

வணக்கம் Over-the-top media service/OTT Platform (ஓட் ஊடக சேவை) என்ற ஆங்கில சொல்லுக்கு தமிழ் பெயர் என்ன?--Thilakshan (பேச்சு) 12:40, 30 அக்டோபர் 2020 (UTC)

உதவி கோருதல்[தொகு]

வணக்கம். Kanags பைரோசு தஸ்தூர் கட்டுரையில் படம் பெரியதாகத் தோற்றமளிக்கிறது. சரி செய்யவும். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 08:17, 23 திசம்பர் 2020 (UTC)

உதவி[தொகு]

வணக்கம் Kanags, நான் எழுதிய கண்ணான கண்ணே, அன்பே வா (தொலைக்காட்சித் தொடர்), வேலைக்காரன் (தொலைக்காட்சித் தொடர்), வல்லமை தாராயோ (வலைத் தொடர்) போன்ற கட்டுரைகள் நீக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அது சார்ந்து விவாதம் மற்றும் நிர்வாகியிடம் ஒருவரிடம் தெரிவித்து உள்ளேன். ஆனால் அவர் மீண்டும் en:Wikipedia:Notability பற்றியே என்னிடம் கூறுகின்றார். நானும் அதை வாசித்தேன் எனக்கு எனது கட்டுரைக்கும் அதில் உள்ள தகவல்களும் பெரிதாக ஒரு வேறுபாடுகளும் இல்லை. தயவு செய்து அந்த கட்டுரைகளை கவனித்து விட்டு அதை மேட்படுத்த நான் மீண்டும் என்ன செய்யவேண்டும் என்று கூறவும் நன்றி. --Thilakshan (பேச்சு) 14:19, 26 திசம்பர் 2020 (UTC)

வேண்டுகோள்[தொகு]

நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கத்தில் புதிய தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. சீராய்வு செய்யவும்! சரியெனப்படின், பக்கங்களை இணைக்கலாம். அதன்பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சிக்கிறேன். A.R.V. Ravi (பேச்சு) 23:36, 5 சனவரி 2021 (UTC)

எச்சரிக்கை[தொகு]

தமிழ் சொர்கம் என்ற பக்கத்தை என்னால் உருவாக்கப்பட்டது . இந்த பக்கம் விக்கிப்பீடியா தளத்தின் எந்த ஒரு கொள்கைகளுக்கும் எதிராக இல்லை . இதனை நீக்க இனி நீங்கள் பரிந்துரைக்க வேண்டாம். தனீஷ் (பேச்சு) 09:36, 12 சனவரி 2021 (UTC)

உதவி தேவை[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய பக்கங்கள் உருவாக்கும் போது அவற்றுள் Infobox வார்ப்புருக்குள் படங்களை ஏற்ற முடிவதில்லை. 200px என்று தான் காட்டுகிறது. வழிகாட்டவும். Vetrrich Chelvan (பேச்சு) 05:58, 16 சனவரி 2021 (UTC)

எலிசபெத் வில்லிங் பவல்[தொகு]

எலிசபெத் வில்லிங் பவல் என்ற கட்டுரையை நான் மொழிபெயர்த்து வருகிறேன். அது தானியங்கி மூலம் தமிழாக்கப்படவில்லை. தயவுசெய்து, அந்த கட்டுரையை மீட்டெடுக்கவும். நன்றி. -AppuduPappudu (பேச்சு) 10:43, 17 சனவரி 2021 (UTC)

@AppuduPappudu: மீளமைத்திருக்கிறேன். கட்டுரையை இயல்பான தமிழ் நடையில் எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 11:08, 17 சனவரி 2021 (UTC)

உதவி[தொகு]

வணக்கம் Kanags. யோகேசு சாம்சி கட்டுரையில் புகைப்படம் பெரிதாகக் காட்டுகிறது. உதவவும். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 09:15, 19 சனவரி 2021 (UTC)

@Balu1967: image_size எதற்காக "கருவியிசை" என எழுதியிருக்கிறீர்கள்.--Kanags \உரையாடுக 09:23, 19 சனவரி 2021 (UTC)

விளக்கம்[தொகு]

| occupation = Non vocal instrumentalist - என்ற இடத்தில் தவறுதலாக கருவியிசை எனப் பதிவிட்டுவிட்டேன். கவனிக்கவில்லை நன்றி.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 11:42, 19 சனவரி 2021 (UTC)

விக்கிப்பீடியா:சனவரி 23, 2021 இணையவழி விக்கிப்பீடியா அறிமுகம்[தொகு]

இந்தப் பக்கத்தை நேற்று ஆரம்பித்தபோது ஏதோ தவறு விட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இன்று நீக்கல் பதிகையில் உங்கள் மாற்றத்தைப் பார்த்தேன். ஆனால் இன்னமும் தவறு எது என்று எனக்குக் கண்டு பிடிக்க முடியவில்லை. தயவு செய்து சொல்லித் தர முடியுமா? நன்றி.--கலை (பேச்சு) 11:05, 31 சனவரி 2021 (UTC)

@Kalaiarasy: நீங்கள் எழுதிய தலைப்பில் ஒருங்குறியில் ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது. இதனை நான் கண்டுபிடிக்கவில்லை. றுபீனா என்ற உங்களிடம் பயிற்சி பெற்ற பயனர் தான் சரியான தலைப்புக்கு உங்கள் கட்டுரையை மீண்டும் எழுதியிருந்தார். அவர் எவ்வாறு கண்டுபிடித்தார் எனத் தெரியவில்லை. அவருக்கு எனது வாழ்த்துகள். நீங்கள் எழுதிய தலைப்புடன் %E2%80%8B என்ற குறியீடுகளும் சேர்ந்து வந்திருந்தன.--Kanags \உரையாடுக 11:17, 31 சனவரி 2021 (UTC)
உங்கள் தகவலுக்காக:@Kalaiarasy:, @Kanags: ஒருங்குறியில் பிழை இருந்தால் விண்டோசில் தெரியாதது ஆப்பிள் கணிணியில் எளிதில் தெரியும். நான் அலுவலகத்தில் விண்டோசையும், வீட்டில் ஆப்பிள் கணிணியையும் உபயோகிப்பதால் இது தெரிய வந்தது. அப்பயனர் இப்படித்தான் கண்டுபிடித்தாரா என எனக்குத் தெரியாது.--நந்தகுமார் (பேச்சு) 11:35, 31 சனவரி 2021 (UTC)
@Nan:, @Kanags: நான் முதல் நடந்த நிகழ்வில் சிவகோசரன் எழுதியதை வெட்டி, ஒட்டிவிட்டு, பின்னர் த.வி.யிலுள்ள எழுத்துப் பெயர்ப்பைப் பயன்படுத்தித்தான் மாற்றங்களைச் செய்தேன். எப்படித் தவறு வந்ததெனத் தெரியவில்லை.🤔 எத்தனையோ தடவை திருப்பித் திருப்பிப் பார்த்தும் தவறைக் கண்டுபிடிக்க முடியவில்லை.😔
தவறைச் சரிசெய்தது நிகழ்வில் பங்குபற்றிய சுரேஸ்தான் என நினைக்கிறேன். ஆனால், வரலாற்றில் இவை தெரியவில்லையே? றுபீனா, நேற்றிரவுதான் என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக எழுதப் பயிற்சி எடுத்தார். பயனர் பக்கத்தைத் தொடங்குவதுபற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டார். எனவே அவராக இருக்க முடியாது.--கலை (பேச்சு) 13:04, 31 சனவரி 2021 (UTC)

நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்[தொகு]

மேலதிக தகவல்கள் சேர்த்துள்ளேன். பக்கத்தை பார்வையிடவும். இரண்டு பக்கங்களையும் இணைக்க வேண்டுகிறேன்.--A.R.V. Ravi (பேச்சு) 08:23, 2 பெப்ரவரி 2021 (UTC)

விக்கிப்பீடியா போதாமை[தொகு]

வணக்கம். தங்கள் புரிதலுக்கு. கருப்பொருள் எனும் பகுதியில் புதினம் என உள்ளது. புதினம் ஒரு இலக்கிய வகையே அன்றி கருப்பொருள் அல்ல. மேலும் இலக்கிய ஆக்கங்கள் பகுதியில் 15 நூல்கள் என தெளிவாக உள்ளது. ஆனால் பட்டியலில் 13 தான் உள்ளன. இந்த இரண்டு விடயங்களை மாற்றுவது விளம்பரம் என உங்கள் அறிவுக்கு தோன்றினால் அவ்வாறே இருக்கட்டும். இந்த போதாமைகளுடன் உங்களைப்போன்றவர்கள் இருப்பதால்தான் விக்கிப்பீடியா போன்றவை என்றுமே ஆய்வுக்கு ஏற்ற ஊடகமாக இருப்பதில்லை. நன்றி.--−முன்நிற்கும் கருத்து Navin Manogaran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

[kanags]] வணக்கம். இது நவீன் குறித்து அவரே எழுதும் பதிவு அல்ல. நவீனுடைய பெயரில் கணக்கை உருவாக்கி அவர் வாசகர் உருவாக்குவது. மேலும் அப்படி ஒரு சட்டம் உள்ளதாக (ஒருவர் குறித்து அவரே எழுதுவது) விக்கிப்பீடியாவில் எங்கேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா? எழுத்துப்பூர்வமான சட்டதிட்டங்கள் உண்டா? மேலும் அக்கட்டுரையில் எதையும் கூடுதலாக சேர்க்கவில்லை. அதில் உள்ள தவறுகளே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1. ஊடகவியலாளர் என்பது இதழியலாளர் என்று மாற்றம் கோரப்பட்டது.

2. 15 நூல்கள் எனக்குறிப்பிட்டு 13 நூல்கள் மட்டுமே பட்டியலில் உள்ளன. அது இணைக்கப்பட்டது.

3. புதினம் என்ற சொல்லாடல் கருப்பொருளில் வராது.

இந்தத் தவறுகளைச் சுட்டினால் அதை நீக்க மாற்ற உங்களுக்கு என்ன உரிமை உண்டு? நவீன் குறித்து மேற்கொண்ட தகவல்களை நான் சேர்க்கவில்லை. மாறாக இருப்பதில் உள்ள குறைகளை சுட்டினால் ஏன் மாற்றம் செய்ய அனுமதி இல்லை. எனவே தவறுடன் போடுவதுதான் உங்கள் கோட்பாட்டில் நடுநிலமையா? அது அறிவீனம் என்பதே என் எண்ணம். - நவீன் மனோகரன் (பேச்சு) 15.45, 8 பெப்ரவரி 2021 (UTC)