பூமிபால் அதுல்யாதெச்
பூமிபால் அதுல்யாதெச் Bhumibol Adulyadej | |
---|---|
2010 இல் பூமிபால் | |
தாய்லாந்து மன்னர் | |
ஆட்சிக்காலம் | 9 சூன் 1946 – இன்று (78 ஆண்டுகள், 103 நாட்கள்) |
முடிசூட்டுதல் | 5 மே 1950 |
முன்னையவர் | ஆனந்தா மகிதோல் |
வாரிசு | வச்சிரலோங்கோன் |
பிறப்பு | கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா | 5 திசம்பர் 1927
இறப்பு | 13 அக்டோபர் 2016 தாய்லாந்து | (அகவை 88)
புதைத்த இடம் | |
Consort | சிரிக்கித் (1950 ஏப்ரல் 28 முதல்) |
குழந்தைகளின் பெயர்கள் | இளவரசி ராஜகன்னிய பட்டத்து இளவரசர் வஜிரலோங்கோன் இளவரசி சிரிந்தோர்ன் இளவரசி வலைலாக் |
மரபு | மகிதோல் அரண்மனை சக்கிரி வம்சம் |
தந்தை | மகிதோல் அதுல்யாதெச் |
தாய் | சிறீநகரிந்திரா |
மதம் | பௌத்தம் |
கையொப்பம் |
பூமிபால் அதுல்யாதெச் | |
"தாய்" மொழிப் பெயர் | |
---|---|
தாய் | ภูมิพลอดุลยเดช |
RTGS | Phumiphon Adunyadet |
பூமிபோன் அடூன்யடேட் அல்லது பூமிபால் அதுல்யாதெச் (Bhumibol Adulyadej, (தாய்: ภูมิพลอดุลยเดช) பிறப்பு: 5 டிசம்பர் 1927, இறப்பு 13 அக்டோபர் 2016) என்பவர் தாய்லாந்தின் தற்போதைய அரசர் ஆவார். இவர் ஒன்பதாம் இராமா என அழைக்கப்படுகிறார். 1946 சூன் 9 இல் ஆட்சிக்கு வந்த இவரே உலகில் அதிக காலம் நாட்டுத் தலைவராகவும், தாய்லாந்து வரலாற்றில் அதிக காலம், தமது எண்பதாவது வயதில் இறக்கும் வரை மன்னராகவும் இருந்தவராவார்.[1]
பூமிபால் சட்டபூர்வமாக அரசியல்சட்ட மன்னராக இருந்தாலும், தாய்லாந்து அரசியலில் பல முக்கிய தீர்மானங்களை எடுத்திருக்கிறார். இவர் நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் பதவியில் இருந்த இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும், 1990களில் தாய்லாந்து சனநாயகத்திற்கு மாற்றமடைவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கிறார். இவரது காலத்தில் 15 இராணுவப் புரட்சிகளும், 16 அரசியலமைப்புச் சட்டங்களும் ஏற்பட்டுள்ளன. அத்துடன் 27 பிரதமர்கள் அரசுத்தலைவர்களாக இருந்துள்ளனர்.[2] 1981, மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முயற்சிகளைத் தமது செல்வாக்கின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார்.
மன்னர் பூமிபால் தாய்லாந்து மக்களால் மிகவும் மதிக்கப்படுபவராகவும்[3][4] போற்றப்படுபவராகவும் உள்ளார்.[5] சட்டபூர்வமாக இவர் "அவமதிக்கப்பட முடியாதவராக" உள்ளார். அரசரின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவர்.[5] 1957 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு மன்னரின் கண்ணியத்துக்குக் களங்கம் விளைவித்தமையே காரணம் என நியாயப்படுத்தப்பட்டது.[6][7] தனது 2005 ஆம் ஆண்டு உரையில், பொதுமக்களிடம் இருந்து விமரிசனங்களை அனுமதித்தார். இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.[8] ஃபோர்ப்ஸ் இதழின் படி, பூமிபாலின் சொத்துக்களின் மதிப்பு (2010 ஆம் ஆண்டில்) 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்,[9] போர்ப்ஸ் இதழ் இவரை உலகின் பணக்கார அரசர்களில் முதலாவதாகப் பட்டியலிட்டுள்ளது.[10][11]
மறைவு
[தொகு]மன்னர் பூமிபோன் அடூன்யடேட் தமது எண்பத்தி எட்டாம் வயதில் உடல் நலக் குறைவால் இறந்தார்.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A Royal Occasion speeches". Journal. Worldhop. 1996. Archived from the original on 12 மே 2006. பார்க்கப்பட்ட நாள் 5 July 2006.
- ↑ Doherty, Ben (15 October 2009). "Fears for Thai monarch set stockmarket tumbling for second day". The Guardian (London). http://www.guardian.co.uk/world/2009/oct/15/thailand-bhumibol-stockmarket-sickness. பார்த்த நாள்: 13 April 2010.
- ↑ Aphornsuvan, Thanet (2004), "Bhumibol Adulyadej", Southeast Asia: A Historical Encyclopedia, From Angkor Wat to East Timor, ABC-CLIO, p. 232
- ↑ Nimanandh, Kongphu; Andrews, Tim G. (2009), "Socio-cultural context", The Changing Face of Management in Thailand, Taylor & Francis, p. 73
- ↑ 5.0 5.1 "Why Thailand's king is so revered". News. UK: BBC. 5 December 2007. http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/7128935.stm. பார்த்த நாள்: 3 February 2010.
- ↑ Handley, Paul M. (2006). The King Never Smiles. Yale University Press. pp. 136–137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-10682-3.
- ↑ Thak Chaloemtiarana (1979). Thailand: The Politics of Despotic Paternalism. Social Science Association of Thailand. p. 98.
- ↑ "Royal Birthday Address: 'King Can Do Wrong'". National Media. 5 December 2005. Archived from the original on 30 செப்டம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 26 September 2007.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ Declaration on Crown Property and Royal Assets, TH: Ministry of Foreign Affairs, 22 August 2008, archived from the original on 24 ஆகஸ்ட் 2008, பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச் 2013
{{citation}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help). - ↑ Serafin, Tatiana (17 June 2009). "The World's Richest Royals". Forbes இம் மூலத்தில் இருந்து 29 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120529193342/http://www.forbes.com/2009/06/17/monarchs-wealth-scandal-business-billionaires-richest-royals.html.
- ↑ Tatiana Serafin, “The world’s richest royals”, Forbes, 7 July 2010.
- ↑ தாய்லாந்து அரசர் பூமிபோன் அடூன்யடேட் காலமானார்