பயனர் பேச்சு:சா அருணாசலம்

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  தொகுப்பு

  தொகுப்புகள்


  1

  பயனர் அறிமுகம் வேண்டல்

  வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குக் காத்திரமான பங்களிப்பு செய்தவர்களை முதல் பக்கத்தில் அறிமுகம் செய்து வருகிறோம். அதன்படி உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சா அருணாசலம் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். உங்களது அறிமுகம் மற்றவர்களுக்கும் ஊக்கமாக இருக்கும் என நம்புகிறோம். -நீச்சல்காரன் (பேச்சு) 18:29, 18 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

  பக்கம் உருவாக்கியதற்கு நன்றி. இயன்றால் உங்களது ஒளிப்படம் இணைக்கலாம். மேலும் நீங்கள் உருவாக்கிய சிறந்த/விரும்பிய சில கட்டுரைகளை இணைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 21:13, 24 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
  எனக்கு விருப்பமான கட்டுரைகளை இணைத்துள்ளேன். இனிவரும் ஆண்டுகளில் என் ஒளிப்படத்தைச் சேர்க்கிறேன். என் பங்களிப்பாளர் அறிமுக பக்கம் உருவாக்கத்திற்கு காரணமான அனைவருக்கும் நன்றி -- சா அருணாசலம் (பேச்சு) 09:06, 25 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
  நன்றி. முன் பக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விக்கியில் பங்களியுங்கள். வாழ்த்துக்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 09:10, 28 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]
  முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்தி ஊக்கமளித்தற்கு நன்றி ஐயா -- சா அருணாசலம் (பேச்சு) 11:33, 28 பெப்ரவரி 2022 (UTC)Reply[பதில் அளி]

  குறிப்பிடத்தக்கமை

  ஒரு கட்டுரை குறிப்பிடத்தக்கமைக் கொண்டிருக்க வேண்டும். நபராயின் குறிப்பிடத்தக்கவராக இருக்க வேண்டும். ஆகவே அதற்கேற்ப கட்டுரை விரிவாக்கப்படல் வேண்டும். இது இல்லாதபட்சத்தில் கட்டுரை நீக்கப்படலாம். --AntanO (பேச்சு) 06:38, 5 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

  @AntanO: நபர்களில் குறிப்பிடத்தக்கவர் அல்லாத கட்டுரைகளை நீக்கிவிடலாம். இன்னும் நீக்க வேண்டிய பக்கங்கள் நிறைய உள்ளன. நன்றி. --சா அருணாசலம் (பேச்சு) 08:18, 5 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

  நாம் தமிழர்

  பழைய நாம் தமிழர் கட்சி குறித்த கட்டுரையை இப்போது நாம் தமிழர் கட்சியின் கட்டுரையுடன் நினைத்து விட்டேன் அதனால் இப்போது அந்த பக்கத்தை நீங்களே நீக்கவும் Chellakathiran2010 (பேச்சு) 17:56, 30 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

  வணக்கம் @Chellakathiran2010: கட்சி தொடர்பான கட்டுரை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 18:07, 30 ஏப்ரல் 2022 (UTC)Reply[பதில் அளி]

  பக்கங்களை இணைத்தல்

  கொங்கு தமிழ் என்ற கட்டுரையின் ஒரு பகுதி கொங்கு வட்டார வழக்கு அகராதி கட்டுரையுடன் இணைக்கப்பட வேண்டும். இரண்டையும் எந்தக் கட்டுரையில் இணைக்க வேண்டும் என்று பரிந்துரைக்க முடியுமா? அகர வரிசைப்படி அல்லது தலைப்பு வாரியாக எழுத முடியுமா? உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைத்தால் தயவுசெய்து அதைச் செய்ய முடியுமா? Corna2342 (பேச்சு) 11:37, 25 மே 2022 (UTC)Reply[பதில் அளி]

  Corna2342 கொங்கு தமிழ் என்ற கட்டுரையுடன் கொங்கு வட்டார வழக்கு அகராதி கட்டுரையுடன் இணைக்கலாம். பொதுவாக அகரவரிசையில் சொற்களை வரிசைப் படுத்துவதே நன்று. கொங்கு தமிழ் கட்டுரையில் உள்ள சொற்கள் பட்டியலில் கொங்கு வட்டார வழக்கு அகராதி கட்டுரையில் உள்ள சொற்களை நீங்களே சேர்க்கலாம் அவ்வாறு சேர்த்து முடித்த பின்னர் கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலோ அல்லது நிர்வாகிளின் பேச்சுப் பக்கத்திலோ தெரிவித்தால். இரண்டு கட்டுரைகளையும் ஒன்றிணைப்பர்--அருளரசன் (பேச்சு) 11:55, 25 மே 2022 (UTC)Reply[பதில் அளி]

  தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு

  வணக்கம்!

  ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

  தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

  - விழா ஏற்பாட்டுக் குழு

  மணல்தொட்டி

  மணல்தொட்டி இருப்பது பயனர்கள் பயிற்சி பெறுவதற்கே. உடனடியாக அவற்றை நீக்க வேண்டியதில்லை. சில நாட்கள் கழித்தோ அல்லது ஒரு வாரத்திலோ அதனை நீக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 10:14, 12 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

  தகவலுக்கு நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 11:07, 12 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

  எடப்பாடி க. பழனிசாமி

  குறிப்பிட்ட படிமம் Commonsல் இல்லாத காரணத்தினால் நீக்கியுள்ளேன். --சத்தியராஜ் (பேச்சு) சத்தியராஜ் (பேச்சு) 15:18, 18 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

  @Raj.sathiya: முன்னிலையாக்கத்திற்கு பின்னர் தான் கவனித்தேன். குறிப்பிட்ட படத்தை நானே நீக்கலாம் என்றிருந்தேன் மிக்க நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 15:22, 18 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

  விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

  வணக்கம்!

  செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

  இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

  - ஒருங்கிணைப்பாளர்கள்

  விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

  வணக்கம்!

  செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

  இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

  - ஒருங்கிணைப்பாளர்கள்

  விக்கி மாரத்தான் 2022

  வணக்கம். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள முதலில் விருப்பம் தெரிவித்து, பின்னர் விலகிக் கொண்டீர்கள். ஏதேனும் காரணம் உள்ளதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:17, 24 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

  வணக்கம். @Selvasivagurunathan m: தொடர்ச்சியாக 24மணி நேரமும் என்னால் பங்களிக்க இயலாது என்பதால் விலகினேன். முடிந்த அளவு சிறு தொகுப்புகளை மேற்கொள்கிறேன். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 08:27, 24 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
  இதில் கலந்துகொள்பவர்கள் தொடர்ச்சியாக 24 மணிநேரம் பங்களிக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. விக்கிமாரத்தான் 24 மணிநேரம் நடக்கும். அதில் உங்களால் அதிகபட்சம் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் பங்களித்து துப்புரவு பணியில் ஈடுபடலாம். எனவே உங்கள் பெயரை தாராளமாக சேர்க்கலாம் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 09:27, 24 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
  இது மட்டுமல்ல, விக்கிப்பீடியாவின் அனைத்துப் பங்களிப்புகளுமே தன்னார்வப் பணி தான்.எனவே, ஒய்வு நேரம் கிடைக்கும்போது செய்தால் போதுமானது. நன்றிஸ்ரீதர். ஞா (✉) 09:35, 24 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]
  @Arularasan. G:, @Sridhar G: தகவல்களுக்கு நன்றி. நிகழ்வில் பங்குகொள்கிறேன்.--சா. அருணாசலம் (பேச்சு) 10:18, 24 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

  நிகழ்வில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:10, 24 ஆகத்து 2022 (UTC)Reply[பதில் அளி]

  பயனர் பக்கம்

  வணக்கம். மற்ற பயனர்களின் பயனர் பக்கங்களில், பகுப்புகள், வார்ப்புரு இடுதல் போன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டும். தவறில்லை எனும்போதிலும் அவர்கள் இதை விரும்பாமல் இருக்கக்கூடும். ஒரு பயனரின் பக்கத்தில் ஏதேனும் அவதூறு நடந்தது எனில், பக்கத்தை மீளமைப்பது விக்கி நடைமுறை. SelvasivagurunathanmBOT (பேச்சு) 03:33, 10 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  @SelvasivagurunathanmBOT: வணக்கம். புதிய பயனர்களை பட்டியலிடுவதற்காக பயனர் ta என்ற பகுப்பினை மட்டும் சேர்த்து வந்தேன். இனி அவ்வாறு பகுப்பு சேர்க்கவில்லை. தகவலுக்கு நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 03:44, 10 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  கட்டுரைகள் மீளமைத்தல் தொடர்பாக

  ஆங்கில மணல்தொட்டிகளில் நான் பயிற்சி பெற்ற கட்டுரைகளையும் மீளமைத்துத் தர வேண்டுகிறேன். நன்றி! -- Almightybless (பேச்சு) 05:25, 12 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  @Almightybless: மணல்தொட்டிக் கட்டுரைகளை மீளமைப்பது எளிமையானது. (ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இதே போல் கட்டுரையை மீளமைக்கலாம்)
  1. . முதலில் மணல்தொட்டியின் வரலாறு என்பதில் சென்று
  2. . நீங்கள் தொகுத்த குறிப்பிட்ட தேதி நேரத்துடன் இருக்கும் இணைப்பைத் தொட்டால்
  3. . உங்களுடைய கட்டுரை வரும். அதிலிருந்து
  4. . தொகு என்பதைத் தொட்டால் அல்லது வேறுபாடு என்றிருக்கும். அதன்வழி சென்று கூட உங்களுடைய கட்டுரையை நீங்கள் நகலெடுக்கலாம். நன்றி.--
  சா. அருணாசலம் (பேச்சு) 08:59, 12 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
  .
  மிக்க நன்றி!
  -- Almightybless (பேச்சு) 09:22, 12 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  தமிழ் இலக்கணம் காப்போம்

  வணக்கம் அக்டோபர் என்று தமிழில் எழுதுவது தவறு ககரப் புள்ளிக்குப் பின் ககர உயிர்மெய் மட்டுமே வரும் அத்தோபர் அட்டோபர் அல்லது அற்றோபர் என்று எழுதலாம் தவறில்லை நன்றி தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 15:15, 13 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  @தணிகைவேல் மாரியாயி: வணக்கம். விளக்கம் தந்ததற்கு என் நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 15:42, 13 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  பரிந்துரை

  வணக்கம். தங்களின் தொடர்பங்களிப்பிற்கு பாராட்டுகள். புதுப்பயனர்கள் பலருக்கும் வழிகாட்டல் செய்கிறீர்கள்; அதற்கும் நன்றி! இரா. பாலாஜி எனும் கட்டுரையில் வாழும் நபர்கள் எனும் பகுப்பினை சேர்த்திருந்தீர்கள். அந்தக் கட்டுரை ஒரு கல்லூரிப் பேராசிரியர் குறித்தது. அவரின் வசிப்பிடம், அவரின் பணி, அவருக்கு இருக்கும் ஆர்வம் இது மட்டுமே கட்டுரையில் இருந்தது. அவர் குறித்தான கட்டுரை, கலைக்களஞ்சியக் கட்டுரை அன்று. இவ்வகையான கட்டுரைகளை வளர்க்க நாம் முயற்சி எடுப்பதை தவிர்க்கலாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:29, 16 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  @Selvasivagurunathan m: வணக்கம். நேரடியாக நீக்கல் வேண்டுகோள் வைப்பதற்குப் பதில் வாழும் நபர்கள் என்ற பகுப்பை இணைத்தேன். கட்டுரை எப்படியும் நீக்கப்படும் என்று தெரியும். தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி. இனி கவனத்தில் கொள்கிறேன். மீண்டும் நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 15:49, 16 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு

  விக்கி மாரத்தான் 2022

  வணக்கம்!

  செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

  தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

  - ஒருங்கிணைப்பாளர்கள்


  இறப்பு - மறைவு

  அண்மையில் கே. எஸ். சிவகுமாரன், சரோஜா ராமாமிர்தம் ஆகிய கட்டுரைகளில் இறப்பு என்ற தலைப்பை மறைவு என்று மாற்றியிருப்பதைக் கண்டேன். மறைவு என்பது இலக்கிய நடை. கலைக்களஞ்சியத்தில் இறப்பு (Death) என்றே எழுதவேண்டும். ஏனென்றால் மறைவு என்ற பெயர்ச்சொல்லுக்கு வேறு பொருள் உண்டு. பார்க்க: https://ta.wiktionary.org/s/180i - UKSharma3 உரையாடல் 05:09, 30 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  @Uksharma3: மறைவு- தலைமறைவானதற்கும் இச்சொல் பொருந்தும். ஆனால் பல தனிநபர் கட்டுரைகளில் மறைவு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மறைவு என்பது விக்கிப்பீடியாவின் மரபா? என்பதைக் கேட்கிறேன். தெளிவுபடுத்திய தங்களுக்கு என் நன்றி. -- சா. அருணாசலம் (பேச்சு) 06:06, 30 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
  நன்றி. நான்கூட முன்பு மறைவு என எழுதியிருக்கிறேன் என்று ஞாபகம். இறப்பு என்பது சந்தேகமற்ற பொருள் தரும் சொல். அதனைப் பயன்படுத்துவதே நல்லது என்று நினைக்கிறேன். UKSharma3 உரையாடல் 12:23, 30 செப்டம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  பகுப்பில்லாதவை

  வணக்கம். தங்களின் துப்புரவுப் பணிகளுக்கு நன்றி. சில பரிந்துரைகள்:

  1. ஒரு கட்டுரை, கலைக்களஞ்சியக் கட்டுரையாக இல்லை அல்லது தானியங்கி மொழியாக்கம் என நீங்கள் கருதினால் நீக்கல் பரிந்துரைக்கான வார்ப்புருவினை இடலாம்.
  2. இயன்றளவு உரிய பகுப்பினை இடுவதற்கு நீங்கள் முயற்சி செய்யலாம்.

  --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:34, 9 அக்டோபர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  வணக்கம் @Selvasivagurunathan m: நீங்கள் கூறியவாறே செயல்படுகிறேன். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 02:46, 9 அக்டோபர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

  Dear Wikimedian,

  We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

  We also have exciting updates about the Program and Scholarships.

  The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

  For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

  ‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

  Regards

  MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  (on behalf of the WCI Organizing Committee)

  WikiConference India 2023: Help us organize!

  Dear Wikimedian,

  You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.

  If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  (on behalf of the WCI Organizing Committee)

  முன்னிலையாக்கர்

  Wikipedia Rollbacker.svg

  வணக்கம், உங்கள் கணக்கு முன்னிலையாக்கர் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. AntanO (பேச்சு) 04:16, 28 நவம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]

  👍 விருப்பம் வாழ்த்துகள் அருணாச்சலம்.--கி.மூர்த்தி (பேச்சு) 04:30, 28 நவம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
  @கி.மூர்த்தி: மிக்க நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 09:57, 28 நவம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]
  @AntanO: மிக்க நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 09:55, 28 நவம்பர் 2022 (UTC)Reply[பதில் அளி]