பயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 10

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கில விக்கிப்பீடியா இணைப்பு[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவுக்கான கட்டுரை இணைப்பை வழங்குவது எப்படி? ஈரசோனியம் சேர்மம் என்ற கட்டுரையில் நான் கொடுத்த இணைப்பை நீக்கியீருந்தீர்கள். ஆனாலும் இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது (இப்போது பழைய முறைப்படி en: என்ற குறிமுறையைப் பயன்படுத்துவதில்லையா?). --மதனாகரன் (பேச்சு) 09:26, 19 ஏப்ரல் 2015 (UTC)

தகவல் பெட்டி இணைக்கவும்[தொகு]

மீத்தைல் குளோரோபார்மேட்டு என்ற கட்டுரையில் தகவல் பெட்டியை இணைப்பதில் சிரமம் உள்ளது. இணைக்கவும். அன்புடன் --கி.மூர்த்தி 02:29, 20 ஏப்ரல் 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று.--Kanags \உரையாடுக 08:41, 20 ஏப்ரல் 2015 (UTC)

Translating the interface in your language, we need your help[தொகு]

Hello Kanags, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
அனைத்து விக்கிகளிலும் மொழிபெயர்ப்பு சேர்க்க அல்லது மாற்ற, தயவு செய்து மீடியா விக்கி மொழிபெயர்ப்பு திட்டமான translatewiki.net ஐ பயன்படுத்துங்கள்.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)

சிறு சந்தேகம்[தொகு]

இப்பக்கத்தில் இன்றைய நாள் தகவலில் ஒரு மாற்றம் செய்தேன், அது முதற்பக்கத்தில் இற்றையாகவில்லயே ஏன்? முதற்பக்கத்தின் மூலம் முன்னே குறிப்பிட்ட வார்ப்புருவையே உபயோகிக்கின்றது ?? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:16, 28 ஏப்ரல் 2015 (UTC)

தினேசு, உடனடியாகத் தெரிய தேக்க நிலையைப் போக்க வேண்டும். முதல் பக்கத்தில் செய்திகளில் என்ற தலைப்புக்குப் பக்கத்தில் உள்ள "இற்றைப்படுத்து" தொடுப்பை அழுத்துங்கள்.--Kanags \உரையாடுக 12:34, 28 ஏப்ரல் 2015 (UTC)

வேண்டுகோள்[தொகு]

அல்லைல் ஆல்ககால், அயோடசமிலம் ஆகிய இரண்டு கட்டுரைகள் - என்னுடைய ‘ தொடங்கிய கட்டுரைகள் ‘ பட்டியலில் இடம்பெறவில்லை. ஏன்? --கி.மூர்த்தி 14:53, 28 ஏப்ரல் 2015 (UTC)

தெரிகிறதே?.--Kanags \உரையாடுக 21:21, 28 ஏப்ரல் 2015 (UTC)

கோழுருச்சி என்ற கட்டுரையை எழுதியது தாவரங்களின் வகையையும் பெயரையும் தெரிந்து கொள்ளத்தான். முடிந்தால் கொஞ்சம் உதவி செய்யுங்கள். கட்டுரையை நீக்கி விடாதீர்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 12:56, 6 சூன் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:21, 7 மே 2015 (UTC)

உதவி தேவை[தொகு]

உலோக ஐதராக்சைடு கட்டுரையை விக்கித் தரவில் இணைக்க உதவி தேவை . --கி.மூர்த்தி 17:15, 13 மே 2015 (UTC)

ஐயம்...[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியா குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள், கட்டுரைகள் வெளியாகின்றன. இவை குறித்து ஆலமரத்தடியில் குறிப்பிடுகிறோம். ஆனால் இவற்றை ஒரு பக்கத்தில் (விக்கிப்பீடியா:ஊடகச் செய்திகள், கட்டுரைகள்) ஆவணப்படுத்தலும் செய்யலாம் என எண்ணுகிறேன். இதுமாதிரியான விக்கிப்பீடியா பக்கம் இங்கு ஏற்கனவே இருக்கிறதா? இருக்குமெனில், இற்றைப்படுத்துவேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:39, 16 மே 2015 (UTC)

செல்வசிவகுருநாதன், விக்கிப்பீடியா:ஊடகங்களில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் என்ற பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 21:48, 16 மே 2015 (UTC)
Nanri nanri.png

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:06, 17 மே 2015 (UTC)

நன்றி + கோரிக்கை[தொகு]

’ஈய சேர்மங்கள்’ வார்ப்புரு இணைத்தமைக்கு நன்றி! வார்ப்புருவில் உள்ள ஈய ஆக்சைடு Pbo2 வை சொடுக்கினால் ஈய ஐதராக்சைடு pb (oH)4 கட்டுரை திறக்கிறது. கவனிக்கவும். --கி.மூர்த்தி 06:42, 17 மே 2015 (UTC)

மூர்த்தி, இங்கு திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:06, 17 மே 2015 (UTC)

சரி செய்யப்பட்டுள்ளது நன்றி. மேற்கொண்டு கற்க ஆலோசனைகள் ஏதாவது வழங்கவும் --கி.மூர்த்தி 07:47, 17 மே 2015 (UTC)

தலைப்பு[தொகு]

”கார்பனோரொக்சைட்டு” என்ற தலைப்புக் கட்டுரையை ’கார்பனோராக்சைடு” என்ற தலைப்புக்கு நகர்த்தலாமா? உடன்பாடு எனில் நகர்த்தவும்.--கி.மூர்த்தி 12:07, 19 மே 2015 (UTC)


Roland zh[தொகு]

இந்தப் பயனர் ஏன் தடை செய்யப்பட்டார் என்று அறிய முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 12:39, 23 மே 2015 (UTC)

அவரது பேச்சுப் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 12:55, 23 மே 2015 (UTC)

கம்யூனிசம்[தொகு]

அன்புடையீர், கம்யூனிசம் என்றால் என்ன என்ற எனது கட்டுரை நீக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கம் தர முடியுமா?--−முன்நிற்கும் கருத்து திருப்பூர் தியாகு (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

திருப்பூர் தியாகு, உங்கள் உரையாடல் பக்கத்திலேயே விளக்கம் தரப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் வலைப்பதிவுக் கட்டுரையாக எழுத முடியாது. அது மட்டுமல்ல, கம்யூனிசம் என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளது. அப்படியிருக்க வேறு கட்டுரை தேவையற்றது. அக்கட்டுரையை உங்களால் முடிந்தால் கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தி உதவலாம். நன்றி.--Kanags \உரையாடுக 08:17, 30 மே 2015 (UTC)

இலங்கைத் தமிழ் நிகண்டு/அகராதி/இலக்கண நூற் தொகுப்பாளர்கள்[தொகு]

... இலங்கைத் தமிழ் அகராதித் தொகுப்பாளர்கள் பற்றிய நபர்கள் கட்டுரைகளை இயன்றால் சிறுதாகத் தொகுத்து தர முடியுமா. நன்றி. --Natkeeran (பேச்சு) 14:02, 2 சூன் 2015 (UTC)

கட்டாயம் தேடிப் பார்த்து எழுதுகிறேன்..--Kanags \உரையாடுக 12:08, 3 சூன் 2015 (UTC)

உதவி தேவை[தொகு]

இட்டெர்பியம் (III) புரோமைடு கட்டுரையை கவனிக்கவும். தகவல் பெட்டியல் உள்ள ”மேற்கோள்” மேற்கோள்கள் பகுதியில் இடம்பெற்வில்லை. இணைக்கவும். --கி.மூர்த்தி 02:11, 6 சூன் 2015 (UTC)

மீண்டும் உதவி[தொகு]

”ஜோகன் கோட்டியப் கான்” கட்டுரையை ”ஜோகன் கோட்லியப் கான்” என்ற தலைப்புக்கு நகர்த்தினேன். விக்கித் தரவில் இணைக்க உதவவும். --கி.மூர்த்தி 12:51, 6 சூன் 2015 (UTC)

தலைப்பு மாற்றப்படும் போது, விக்கித்தரவிலும் தானியங்கியாக மாற்றப்படும். சில வேளைகளில் இம்மாற்றம் உடனடியாக நடைபெறாது.--Kanags \உரையாடுக 22:34, 6 சூன் 2015 (UTC)

நன்றி![தொகு]

”காலவரிசையில் வேதித் தனிமங்கள் கண்டுபிடிப்பு ” கட்டுரையில் தனிமவரிசை அட்டவனண - வார்ப்புரு இணைத்தால் விரிவாக்கப் பணி முடியும் என நினைக்கின்றேன். இணைக்கவும்.--கி.மூர்த்தி 01:48, 9 சூன் 2015 (UTC)

மூர்த்தி, வார்ப்புரு:Periodic table (discovery periods) என்ற வார்ப்புருவை உருவாக்கியிருக்கிறேன். வார்ப்புரு:Periodic table legend/Age of discovery என்ற வார்ப்புருவை மொழிபெயர்க்க முடியுமா? மீதத்தை நான் கவனிக்கிறேன். மூன்று வார்ப்புருக்களும் முழுமை அடைந்தவுடன் கட்டுரையில் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 08:06, 9 சூன் 2015 (UTC)

நீங்கள் செய்த மாற்றங்களுக்கு நன்றி. [1] நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 08:12, 18 திசம்பர் 2015 (UTC)

தகவல் பெட்டி[தொகு]

இலித்தியம் சக்சினேட்டு என்ற கட்டுரையில் தகவல் பெட்டியை முழுமையாக இணைக்க தங்கள் உதவி தேவை--கி.மூர்த்தி 17:53, 13 சூன் 2015 (UTC)

இதைக் கவனிக்கவும்[தொகு]

கனக்சு, மார்த்தாண்ட வர்மா (திரைப்படம்) கட்டுரையில் நான் செய்துள்ள மாற்றத்தைக் கவனிக்கவும். தமிழ் விக்கியின் நடைமுறைகளுக்குப் புறம்பானதெனில் நீக்கிவிடவும் நன்றி.--இரா.பாலா (பேச்சு) 05:42, 26 சூன் 2015 (UTC)

பாலா, குறிப்பிட்ட திரைப்படத்தின் பதிப்புரிமை காலாவதியாகிவிட்டதால் (1933??) யூடியூப் பதிவை இணைப்பதில் தவறில்லை. @AntanO:.--Kanags \உரையாடுக 05:55, 26 சூன் 2015 (UTC)
ஆம். தவறில்லை--AntanO 19:31, 26 சூன் 2015 (UTC)

கவனிக்கவும்[தொகு]

எழுமதம் கட்டுரையில் அடிக்குறிப்புகள் இனைப்பதில் பிழை ஏற்படுகிறது. கவனிக்கவும்.--கி.மூர்த்தி 11:12, 27 சூன் 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று.--Kanags \உரையாடுக 11:14, 27 சூன் 2015 (UTC)

படம் பதிவேற்ற உதவி[தொகு]

வணக்கம் கனக்ஸ் ! சூரிய செல்பேசி மின்னேற்றி கட்டுரையில் படக்காட்சியகத்தில் சில படங்களை இணைக்க உதவவும். --கி.மூர்த்தி 06:34, 28 சூன் 2015 (UTC)

மூர்த்தி, அந்த மூன்று படங்களும் பொதுக்கோப்பகத்தில் இல்லாததால் அவற்றை இணைக்க முடியாது.--Kanags \உரையாடுக 06:54, 28 சூன் 2015 (UTC)
அவற்றை நீக்கிவிடுகிறேன். நன்றி --கி.மூர்த்தி 06:58, 28 சூன் 2015 (UTC)
திருஎவ்வுள் கட்டுரையில் தகவல் பெட்டியில் கவனிக்கவும். அங்கு ஒரு படிமம் பதிவேற்றம் செய்ய இயலுமா? --கி.மூர்த்தி 07:02, 28 சூன் 2015 (UTC)

நன்றிகள்[தொகு]

வேதியல் பச்சோந்தி கட்டுரையிலும் படம் பதிவேற்றம் அடையவில்லை. கவனிக்கவும். --கி.மூர்த்தி 13:40, 28 சூன் 2015 (UTC)

உதவி[தொகு]

”கோப்பை பதிவேற்று” -இதனைத் தேர்ந்தெடுத்து என்னால் படிமத்தினைப் பதிவேற்ற இயலவில்லை. \\பதிவேற்றம் செய்ய இதனைச் சொடுக்கவும்\\ என்பதைச் சொடுக்கினால் படிமத்தைத் தேர்ந்தெடுத்து பதிவேற்றம் செய்யும் பக்கம் திறக்காமல் மீண்டும் பழைய பக்கமே வருகிறது. சிக்கல் என்ன என்று எனக்குப் புரியவில்லை. உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:31, 28 சூன் 2015 (UTC)

எனக்கும் அதே சிக்கல் உள்ளது. பழைய கருவி சீராக வேலை செய்கின்றது. சிறப்பு:Upload என்ற பக்கத்திற்குச் சென்று பழைய கருவியைப் பயன்படுத்தலாம். இவ்வழுவைப் பதிய வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 03:16, 29 சூன் 2015 (UTC)

பரிந்துரைக்கு மிகவும் நன்றி மதன். விரைவில் வழு பதிவு செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 07:30, 29 சூன் 2015 (UTC)

@Shanmugamp7, Ravidreams, மற்றும் Info-farmer: யாவாக்கிறிட்டு நிரலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தொழினுட்ப ஆலமரத்தடியில் தானியங்கி கூறியுள்ளது. ஆனால், அப்பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள வழுவானது பதியப்படவில்லை. இவ்வழுவையும் பதிந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 03:29, 30 சூன் 2015 (UTC)

கட்டுரையை தெளிவாக படித்து விட்ட திருத்தம் செய்ய வேண்டும். நான் எழுதிய கட்டுரை பற்றிய போதுமான அல்லது அடிப்படை அறிந்து இருக்க வேண்டும். நான் தெளிவாக மேற்கொள் கொடுத்து உள்ளேன். (பேச்சு)

படம் இணைக்கவும்[தொகு]

வணக்கம் கனக்சு!யானைப் பற்பசை கட்டுரையில் படம் பதிவேற்றம் அடையவில்லை. உதவவும். அன்புடன்--கி.மூர்த்தி 15:43, 30 சூன் 2015 (UTC)

உதவி-ஒன்றிணைப்பு[தொகு]

திருஎவ்வுள் கட்டுரையிலிருந்த மேலதிகத் தகவல்களை திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயில் கட்டுரையிலிணைத்திருக்கிறேன். இரண்டையும் ஒன்றிணைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

”திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில்” எனத் தலைப்பை மாற்ற முடிந்தால் ஒற்றுப்பிழையில்லாமல் இருக்கும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:27, 30 சூன் 2015 (UTC)

உயர் ஆல்க்கேன்கள்[தொகு]

கனக்சு வணக்கம். கட்டுரையில் அட்டவணையை சிறிதாக்க முடியுமெனில் முயற்சிக்கவும். அன்புடன் --கி.மூர்த்தி 12:11, 3 சூலை 2015 (UTC)

டெக்கேன்[தொகு]

கட்டுரையின் துவக்கத்தைக் கவனிக்கவும். வார்ப்புரு வை நீக்கவும் --கி.மூர்த்தி 04:36, 4 சூலை 2015 (UTC)

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை[தொகு]

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:46, 4 சூலை 2015 (UTC)

நன்றி மற்றும் ஒரு ஐயம்[தொகு]

1. இணையத்தில் மேற்கோள்கள் இல்லையென்பதால், நூற்களை நாட வேண்டியுள்ளது. இது தவறா?

2. மற்றொருவர் எழுதிய வலைப்பதிவை மேற்கோள் காட்டுவதற்குத் தடை உள்ளதா?

நன்றி. பயனர்:Raja Shanmuga Sundaram

வலைப்பதிவுகளுக்கு அனுமதியில்லை. பார்க்கவும். விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள்.

மேற்கோளுக்கு நூற்களை நாடலாம். துறை சார்ந்த வல்லுநரின் நூல்களாக இருப்பது முக்கியம். மேற்கோளை எளிதாக்க பார்க்கவும் விக்கிப்பீடியா:புரூவ் இட்.

பேச்சுப்பக்கங்களில் எழுதும் போது கையெழுத்திடவும். பார்க்கவும். விக்கிப்பீடியா:கையொப்பம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:36, 6 சூலை 2015 (UTC)

அச்சில் வெளிவந்த வல்லுநர்களின் நூல்களை மேற்கோள்களாக சுட்டலாம். வலைப்பதிவுகளுக்கு அனுமதி இல்லை. ராஜாபாதர் கட்டுரையில் நீங்கள் தந்த சில வெளியிணைப்புகளில் அவரைப் பற்றி எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. அதனால் அவற்றை நீக்கினேன்.--Kanags \உரையாடுக 21:12, 6 சூலை 2015 (UTC)

ஒருவர் தனது சொந்த வலைத்தளத்துக்கோ வலைப்பதிவுக்கோ தானே இணைப்பு தரக்கூடாது என்பதைத் தான் விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள் சுட்டுகிறது. இணையத்தில் தமிழில் கிடைக்கும் உசாத்துணை வளங்கள் குறைவு என்பதால், பல கட்டுரைகளில் வலைப்பதிவுகள் மேற்கோள்களாகச் சுட்டப்பட்டே வருகின்றன. இவை, ஓரளவாவது தரமான பதிவுகளாக இருந்தால் போதுமானது. --இரவி (பேச்சு) 05:27, 7 சூலை 2015 (UTC)

உங்களது விளக்கத்துக்கு நன்றி. நான் மேற்கோளாகக் காட்டிய வலைப்பதிவில் ராஜாபாதர் பற்றிய குறிப்பு உள்ளது. திரு. ரவி சுட்டிக்காட்டிய படி, அது மூன்றாம் மனிதரின் வலைப்பதிவு. தரமான பதிவு மற்றும் பொருத்தமான மேற்கோள் என்று நீங்கள் கருதினால், மறுபடியும் சேர்க்கலாம். நன்றி. -- இரா சண்முக சுந்தரம் (பேச்சு) 06:04, 7 சூலை 2015 (UTC)

Wikipedia articles should be based on reliable, published sources, making sure that all majority and significant minority views that have appeared in those sources are covered. If no reliable sources can be found on a topic, Wikipedia should not have an article on it. --AntanO 07:25, 7 சூலை 2015 (UTC)

அன்டன், விக்கிப்பீடியா:வெளியிணைப்புகள் சுட்டும் வலைப்பதிவுகள் தொடர்பான வழிகாட்டல் நலமுரண் தவிர்ப்பு தொடர்பானது. வலைப்பதிவுகளை மேற்கோளாகத் தரலாமா என்பது தனி உரையாடல். இது வரை பல தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் வலைப்பதிவுகளில் இருந்து மேற்கோள்கள் தரப்பட்டே வந்துள்ளன. அவற்றை அறவே தடுக்கும் கொள்கை ஏதும் இல்லை. ஐந்து தூண்களைத் தவிர, ஒவ்வொரு விக்கிப்பீடியாவும் தங்கள் வளங்களுக்கு ஏற்ப மேலும் அதிக கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். எனவே, நீங்கள் சுட்டும் ஆங்கில விக்கிப்பீடியா வழிகாட்டலை தமிழ் அறிவுச் சூழலைக் கணக்கில் கொண்டே நடைமுறைப்படுத்த முடியும்.--இரவி (பேச்சு) 07:34, 7 சூலை 2015 (UTC)

நான் குறிப்பிடுவது "Identifying reliable sources" பற்றியது. இது பற்றி த.வி.யில் எதுவும் இல்லை. எனவே வலைப்பதிவுகளில் இருந்து மேற்கோள்கள் குறிப்பிட்டு கட்டுரைகளை தாராளமாக உருவாக்கிவிடலாம். தமிழ் அறிவுச் சூழல் தரமற்றுத்தான் இருக்கும் என்றால் என்ன செய்வது? Face-sad.svg--AntanO 07:45, 7 சூலை 2015 (UTC)
அன்டன், //If no reliable sources can be found on a topic, Wikipedia should not have an article on it// என்ற வழிகாட்டலை ஆங்கில விக்கிப்பீடியாவே முற்று முழுதாக நடைவ முறைப்படுத்துகிறதா என்பது ஐயமே. தமிழ் விக்கிப்பீடியாவில் தரமான, நம்பகமான ஆதாரங்களைக் கொண்ட கட்டுரைகளை எழுத வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், உண்மையிலேயே அவ்வாறான ஆதாரங்கள் இருந்தாலும், ஆங்கில விக்கிப்பீடியர்கள் அளவுக்கு அவற்றை நேரடியாக நூலகங்களுக்கும் கள ஆய்வுகளுக்கும் சென்று தேடிச்சேர்க்கும் பங்களிப்பாளர் வளம் நம்மிடம் இல்லை. எனவே, அவ்வாறான ஆதாரங்கள் கிடைக்கும் வரை அத்தலைப்புகளையே தவிர்க்க வேண்டும் என்பது இணையத்தில் தமிழ் வழி தரவுகள் தேடுவோருக்குப் பயனளிக்குமா? கட்டுரைகளை எழுதுவது, உரிய ஆதாரங்களைச் சேர்ப்பது ஆகியவே ஒருங்கே இணையாகச் செய்யப்படக்கூடியதே. அதே போல், வலைப்பதிவாக இருந்தாலேயே தரம் குறைவாகவே இருக்கும் என்றும் எண்ணுவதற்கு இல்லை. இந்த உரையாடலைப் பொருத்தவரை, பல கட்டுரைகளில் வலைப்பதிவு ஆதாரங்கள் இருக்கும் போது, ஒரு பயனரை மட்டும் அவற்றைத் தவிர்க்கச் சொல்வது முறையன்று. வேண்டும் என்றால், இது தொடர்பான முறையான கொள்கை வழிகாட்டலை உருவாக்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 08:05, 7 சூலை 2015 (UTC)
இரா சண்முக சுந்தரம், [2] என்ற வலைப்பதிவில் ராஜாபாதர் பற்றிய குறிப்பு ஓர் இடத்தில் மட்டும் அதுவும் பெயர்ப்பட்டியல் ஒன்றில் பத்தோடு பதினொன்றாகத் தரப்பட்டுள்ளது. இது கட்டுரைக்கு ஆதாரமாக சேர்ப்பது எந்த விதத்தில் தகும்?--Kanags \உரையாடுக 08:59, 7 சூலை 2015 (UTC)

நீங்கள் சொல்வது உண்மையென்றாலும், வேறு பதிவுகளோ வலையில் ஏற்றம் செய்யப்பட ஆதாரங்களோ இல்லாத நிலையில், இருப்பதைத் தானே காட்ட முடியும்? எடுத்துக்கட்டாக, ராஜாபாதர் மூன்று முறை நகரமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார் என்ற செய்திக்கான ஆதாரங்கள் வலைப்பதிவுகளில் இல்லை. தமிழ்ச் சூழலில், வரலாற்றுப் பதிவுகள் அதிகம் வலையேற்றப் படாத நிலையில், வரலாற்றுப் பதிவுகளைச் செய்யும் எளிய முயற்சிகளுக்கு, வரலாற்றுப் பதிவுகள் இல்லாததே தடையாக உள்ள புதிரை எப்படி அவிழ்ப்பது? -- இரா சண்முக சுந்தரம் (பேச்சு) 08:02, 8 சூலை 2015 (UTC)

இவ்வுரையாடல் பகுதி பேச்சு:ச. ராஜாபாதர் இற்கு நகர்த்தப்பட்டுள்ளது. அங்கு தொடரலாம்.--Kanags \உரையாடுக 11:49, 8 சூலை 2015 (UTC)

தரமான தரமில்லாத வலைபூக்கள்னு வகைப்படுத்துவது கடினம். அதே போல் இந்த விதியையும் கவனிக்கவும். இவர் ஒருவர்னு இல்லை. சமீபகாலமாக அரசர்களை தங்கள் சாதி என அடையாளப்ப்டுத்தும் வெளியிணைப்புகள் பல இணைக்கப்படுகின்றன. அவர்களிடமும் இதே நடைமுறை தான் வைக்கப்படுகிறது. மேற்கோள்களுக்கு வெளியிணைப்புகளை கொடுப்பது எந்த விதத்திலும் நன்மை பயக்காது.

//ஒரு விக்கிப்பயனரின் பக்கத்தை மற்றொரு விக்கிப்பயனர் இணைப்பதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஆதாய முரண் (Conflict of Interest) ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.//--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:25, 8 சூலை 2015 (UTC)

ஆதாய முரண் (Conflict of Interest) என்பதை விக்கிக்கு வெளியிலும் பார்க்க வேண்டும். எனக்குத் தெரிந்த ஆய்வாளரை வைத்து நான் எனக்குத் தோன்றுவதை எழுதச் சொல்லிவிட்டு அதை இங்கு இணைத்து இதோ பாருங்கப்பா ஆதாரம்னு வச்சா என்ன பண்ணுவீங்க?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:30, 8 சூலை 2015 (UTC)

வலைபூக்கள் தொடர்பான உரையாடலை இங்கு தொடரவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17
59, 8 சூலை 2015 (UTC)

பக்கத்தைத் திருத்தியும், ஏன் திருத்தப்பட்டது என்பதைப் பற்றியும் அளித்த தகவல்களுக்கும், உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. உங்களது பங்களிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. -- இரா சண்முக சுந்தரம் (பேச்சு) 04:59, 11 சூலை 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:13, 7 சூலை 2015 (UTC)

நன்றி..![தொகு]

விக்கி மாரத்தானுக்குரிய அழைப்பினை மேலும் சிலருக்கு இட்டமைக்கு எனது நன்றி; நான் எவரையேனும் (அறியாது) கவனிக்கத் தவறியிருந்தால், அவர்களின் பேச்சுப் பக்கத்தில் அழைப்பினை பதிவுசெய்து உதவுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:27, 8 சூலை 2015 (UTC)

தகவல் பெட்டி[தொகு]

வெச்டன் விண்வீழ்கல் கட்டுரையில் தக்வல் பெட்டியை இணைக்க உதவவும். அன்புடன் --கி.மூர்த்தி 04:09, 11 சூலை 2015 (UTC)

வெசுட்டன் விண்வீழ்கல் என்ற தலைப்பிற்கு நகர்த்தலாமா? --கி.மூர்த்தி 06:33, 11 சூலை 2015 (UTC)

list of oxidation state[தொகு]

கட்டுரையில் உள்ள அட்டவணையை இணைக்க முடியுமா? --கி.மூர்த்தி 14:01, 12 சூலை 2015 (UTC)

உதவி[தொகு]

கனக்ஸ், வார்ப்புரு வழிமாற்றத்தில் ஏதோ தவறிழைத்து விட்டேன். என்ன என்று பார்த்து சரிபார்த்தால் உதவியாக இருக்கும். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 21:32, 14 சூலை 2015 (UTC)

சரி செய்துவிட்டேன்--நந்தகுமார் (பேச்சு) 22:18, 14 சூலை 2015 (UTC)
"கர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்" எனும் வார்ப்புருவை தொகுக்க இயலவில்லை. என்ன என்று பார்த்து சரிசெய்தால் உதவியாக இருக்கும். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 12:15, 15 சூலை 2015 (UTC)
இப்போது சரியா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 12:18, 15 சூலை 2015 (UTC)
சரியாக உள்ளது. நன்றி--நந்தகுமார் (பேச்சு) 12:19, 15 சூலை 2015 (UTC)

குளோரின் புளோரைடு[தொகு]

வணக்கம்! கட்டுரையில் உள்ள் அட்டவனையில் வார்ப்புரு என்று வருகிறது கவனிக்கவும் --கி.மூர்த்தி 11:33, 16 சூலை 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:56, 16 சூலை 2015 (UTC)

சுற்றுக்காவல்[தொகு]

திலட்சனின் திரைப்படக் கட்டுரைகளைச் சுற்றுக்காவல் புரியும்போது, ஆங்கிலப் பெயர் சரியாக ஒலிபெயர்க்கப்பட்டுள்ளதா எனவுங் கவனியுங்கள். Smosh என்பதை ச்மோஷ் என் எழுதியிருந்தார். அக்கட்டுரையைச் சுற்றுக்காவல் புரிந்ததாகக் குறித்திருந்தீர்கள். அவருடைய பேச்சுப்பக்கத்தில் நீங்கள், ஆண்டன் உட்படப் பலர் எடுத்துரைத்தும் இது தொடர்பில் திலட்சன் கவனஞ்செலுத்தி வருவதாகத் தெரியவில்லை. --மதனாகரன் (பேச்சு) 04:48, 17 சூலை 2015 (UTC)

மதனாகரன், சுற்றுக்காவல் என்பது கட்டுரையைத் திருத்துவதல்ல. கட்டுரை விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதா இல்லையா என்பதைக் கண்காணிப்பது மட்டுமே. இல்லாவிட்டால் உடனடியாக நீக்க வேண்டும். Smosh என்பதை எவ்வாறு திறம்பட எழுதலாம் என்பது குறித்து எனக்கு இன்னமும் தெளிவில்லாமல் உள்ளது.--Kanags \உரையாடுக 09:22, 22 சூலை 2015 (UTC)

தலைப்பில் பிழை இருந்தாலும் அவ்வாறே விட்டுவிடலாமா? --மதனாகரன் (பேச்சு) 10:13, 22 சூலை 2015 (UTC)

அப்படிச் சொல்லவில்லை. தலைப்பில் பிழை இருந்தாலும், அதற்காகக் கட்டுரையை அழிக்கக் கூடாது அல்லவா? சரியான தலைப்பு ஒருவருக்குத் தெரிய வரும் போது அதை அவர் மாற்ற முடியும். சுற்றுக் காவலருக்கும், இதற்கும் தொடர்பில்லை என்பதையே சொல்ல வந்தேன். சுற்றுக்காவலருக்குத் தெரிந்தால் அவரே தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 10:17, 22 சூலை 2015 (UTC)

Pending Changes Reviewerஐயும் (ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ளது) சுற்றுக்காவலரையும் குழப்பிக் கொண்டேன். தெளிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி. --மதனாகரன் (பேச்சு) 10:31, 22 சூலை 2015 (UTC)

அமோனியம் புரோமைடு[தொகு]

வணக்கம் கனக்சு. ஒரு சில கட்டுரைகள் தொடுப்பு இல்லாத பக்கங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன். இதன் பொருள் என்ன? அவற்றை சாதாரணக் கட்டுரையாக மாற்றுவது எப்படி? --கி.மூர்த்தி 15:25, 21 சூலை 2015 (UTC)

@கி.மூர்த்தி: அமோனியம் புரோமைடு கட்டுரையில் அப்படி எதுவும் இல்லையே?--Kanags \உரையாடுக 08:53, 22 சூலை 2015 (UTC)
Kanags உறவிலிப்பக்கங்கள் என்ற பகுப்பில் அமோனியம் புரோமைடு வருகிறது. --கி.மூர்த்தி 09:06, 22 சூலை 2015 (UTC)
அது சரியானதே. அமோனியம் புரோமைடு என்ற கட்டுரை தமிழ் விக்கியின் எந்தவொரு கட்டுரையிலும் உள்ளிணைப்பாகக் கொடுக்கப்படவில்லை. பதிலாக அமோனியா கட்டுரையைப் பாருங்கள். அக்கட்டுரை தமிழ் விக்கியின் ஏராளமான பக்கங்களில் உள்ளிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 09:11, 22 சூலை 2015 (UTC)
எப்படி இணைப்பு கொடுப்பது? --கி.மூர்த்தி 09:18, 22 சூலை 2015 (UTC)
வேறு எந்தக் கட்டுரைகளில் அமோனியம் புரோமைடு பற்றி எழுதப்பட்டுள்ளது என்பதைத் தேட வேண்டும். அங்கு சென்று கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்க வேண்டும். நான் தேடிய அளவில் தமிழ் விக்கியில் உள்ள 67,000 கட்டுரைகளில் எக்கட்டுரையிலுமே அமோனியம் புரோமைடு பற்றி எக்குறிப்பும் இல்லை.--Kanags \உரையாடுக 09:25, 22 சூலை 2015 (UTC)
கனக்சு வனேடியம் நான்மபுரோமைடு என்ற தலைப்பை வனேடியம் நாற்புரோமைடு என்ற தலைப்புக்கு நகர்த்தலாமா?--கி.மூர்த்தி 10:17, 22 சூலை 2015 (UTC)

உளங்கனிந்த நன்றி![தொகு]

Diwali Diya.jpg

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:09, 25 சூலை 2015 (UTC)

நன்றி செல்வா, நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தங்களுக்கு எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 22:16, 25 சூலை 2015 (UTC)
polysulphide என்பதை எப்படி தமிழ்ப்படுத்தலாம்? --கி.மூர்த்தி 10:07, 26 சூலை 2015 (UTC)
பல்சல்பைடு என்று விக்சனரியில் தரப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 10:09, 26 சூலை 2015 (UTC)
ஆம் பல்சல்பைடு எனலாம். பாலிசல்பைடு என்பதற்கும் வழிமாற்று தரலாம். பிரான்சியத்தில் Polysulfure என்றும் எசுப்பானியத்தில் Polisulfuro என்றும் வழங்குகின்றார்கள். இடாய்ச்சு மொழியில் polysulfide என எழுதினாலும் ஒலிப்பு மாறுபட்டதாக இருக்கும். --செல்வா (பேச்சு) 23:29, 31 சூலை 2015 (UTC)

மிக்க நன்றி[தொகு]

சப்பானிய பகுப்புகள் பலவற்றையும் நீங்களாகவே மாற்றியமைத்தமைக்கு மிக்க நன்றி. --செல்வா (பேச்சு) 23:22, 31 சூலை 2015 (UTC)

வில்லியம் ஆடம்ஸ் பற்றி தொகுத்தமைக்கு மனமார்ந்த நன்றி. வாழ்க தமிழ். -- செலின் ஜார்ஜ் (பேச்சு) 15:17, 8 ஆகத்து 2015 (UTC)

பொன்ராஜ் வெள்ளைச்சாமி பற்றி தொகுத்தமைக்கு நன்றி :) செலின் ஜார்ஜ் (பேச்சு) 00:01, 15 ஆகத்து 2015 (UTC)

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்[தொகு]

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 15:12, 28 சூலை 2015 (UTC)

உதவி, கவனிக்கவும்[தொகு]

triphosphoric acid என்ற ஆங்கிலக் கட்டுரையுடன் தமிழாக்கம் செய்யப்பட்ட முப்பாசுபாரிக் அமிலம் கட்டுரை இணைப்பு பெறவில்லை. சரிசெய்யவும். வணக்கங்களுடன் --கி.மூர்த்தி 01:39, 6 ஆகத்து 2015 (UTC)

இணைக்கப்பட்டுத் தானே உள்ளது? [3].--Kanags \உரையாடுக 09:07, 7 ஆகத்து 2015 (UTC)
ஆங்கிலக்கட்டுரையில் தமிழ் காணவில்லை.--கி.மூர்த்தி 09:08, 7 ஆகத்து 2015 (UTC)
எனக்கு இணைத்துள்ளதாகத் தெரிகிறது.--Kanags \உரையாடுக 09:14, 7 ஆகத்து 2015 (UTC)
என்ன சிக்கலெனப் புரியவில்லை. எனக்கும் ஆங்கிலக் கட்டுரையில் தமிழ் இணைப்பு தெரியவில்லை. --மதனாகரன் (பேச்சு) 10:18, 7 ஆகத்து 2015 (UTC)
எனக்கும் தெரியவில்லை. நேற்றும் இத்தகையப் பிரச்சனை வேறு ஒரு கட்டுரையில் இருந்தது. தமிழ் பக்கத்தில் உள்ள இணைப்புகளை நீக்கிவிட்டு, மீண்டும் ஆங்கில விக்கி பக்கத்திற்குச் சென்று இணைத்ததால் சரியானது. இந்தப் பக்கத்திற்கும் இதை முயற்சித்துப் பார்த்தேன். ஆனாலும் ஆங்கிலப் பக்கத்தில் தமிழ் விக்கிப் பக்கத்திற்கான இணைப்பு தெரியவில்லை.--நந்தகுமார் (பேச்சு) 10:21, 7 ஆகத்து 2015 (UTC)
எனக்கு பயர்பொக்சு, கூகுள் குரோம் இரண்டிலுமே தெரிகிறது. "இன்டர்நெட் எக்சுபுளோரரில்" தெரியவில்லை. வேறு தொழிநுட்பப் பிரச்சினை போல் தெரிகிறது. எனக்கு இன்று Hotcat வேலை செய்ய மறுக்கிறது.--Kanags \உரையாடுக 10:27, 7 ஆகத்து 2015 (UTC)
ஆம், தொடுப்பிணைப்பி, புரூவு இட்டு முதலிய கருவிகளும் வேலை செய்யவில்லை. --மதனாகரன் (பேச்சு) 16:37, 7 ஆகத்து 2015 (UTC)
மூர்த்தி கூறிய சிக்கல் பற்றி ஏற்கெனவே வேறொரு பயனர் ஆங்கில விக்கிப்பீடியாவின் தொழினுட்ப ஆலமரத்தடியில் வினவியுள்ளார். அங்குக் கூறியபடி உலாவியின் இடைமாற்றை நீக்கியதன் மூலம் (Purge) இச்சிக்கலைச் சீர்செய்துள்ளேன். கருவிகள் ஏன் வேலை செய்யவில்லையெனத் தெரியவில்லை. --மதனாகரன் (பேச்சு) 17:00, 7 ஆகத்து 2015 (UTC)
ஆனாலும் இன்னும் சிக்கல் தீரவில்லை என்றே நினைக்கின்றேன். ஒவ்வொரு கட்டுரைக்கும் ?action purge பயன்படுத்தினால்தான் ஆங்கிலக்கட்டுரையில் தமிழ் தெரிகிறது. --கி.மூர்த்தி 10:59, 9 ஆகத்து 2015 (UTC)
எனக்கு அதே பிரச்சினை உள்ளது. இப்பிரச்சினை தீர சில நாட்கள் பிடிக்கலாம் என நினைக்கிறேன். எதற்கும் நமது இளம் தொழினுட்பவியலாளர் @Shrikarsan: இடம் கோரிக்கை விடுக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:36, 9 ஆகத்து 2015 (UTC)
கனக்ஸ் அவர்களே நானும் சில கட்டுரைகளை இணைத்துப் பார்த்தேன். எனக்கும் அப்பிரச்சினை இடைக்கிடையில் ஏற்பட்டது. ஆ.வி இல் மட்டுமே இணைப்பு (உடன்) தெரியவில்லை. பிற மொழி விக்கிகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை. பிற விக்கிகளிலும் இது பற்றிக் கேள்வியெழுப்பியுள்ளனர். மதனாகரன் அண்ணா கூறியது போல் இடைமாற்றை நீக்கிச் (purge) சரிசெய்யலாம். நீங்கள் கூறியது போல் வெகுவில் சரியாகிவிடும் என நினைக்கின்றேன். சரியான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை:(--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:59, 10 ஆகத்து 2015 (UTC)
நன்றி கர்சன்.--Kanags \உரையாடுக 10:47, 10 ஆகத்து 2015 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

ஐயா, கட்டுரையிலேயே அதிகாரபபூர்வ வளைத்தளங்களை இணைத்திருக்கிறேன், விடுபட்ட சிலவற்றிலும் இணைக்க முயற்சிக்கின்றேன். அதிகாரப்பூர்வ வளைத்தளங்கள் சரியான தரவு ஆக இருக்கும் என எண்ணுகின்றேன், பத்திரிக்கை செய்திகளை ஆதாராமாக இணைப்பதின் மூலம் எவ்வளவு காலம் அவர்கள் தரவுகளை பாதுகாப்பர் என்று சொல்ல முடியாது என எண்ணுகின்றேன், ஆலோசனை கூறவும்...


வணக்கம், எந்த கட்டுரையை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். பெரும்பாலான பக்கங்களுக்கு சான்றுகள் சேர்த்துவிட்டேன். தெளிவுபடுத்தவும். நன்றி --குறிஞ்சி (பேச்சு) 12:58, 12 ஆகத்து 2015 (UTC)

432 பார்க் அவென்யூ[தொகு]

கட்டுரையில் உடைந்த மேற்கோள்கள் என்ற பகுப்பு வருகிறது உதவவும் --கி.மூர்த்தி 13:15, 8 ஆகத்து 2015 (UTC)

முதலாவது மேற்கோளில் url என்பது URL என்று எழுதப்பட்டதால் ஏற்பட்ட சிக்கல். சரிசெய்துள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 14:01, 8 ஆகத்து 2015 (UTC)

இனிய அதிர்ச்சி[தொகு]

தானியக்க சுற்றுக் காவலர் என்ற தற்காவல் அணுக்கம் வழங்கப்பட்டிருப்பது எனக்கு ஒரு இனிய அதிர்ச்சியை அளித்துள்ளது. முன்மொழிந்த கனக்சின் நம்பிக்கைக்கு பாதகம் உண்டாகி விடக்கூடாதே என்ற அச்சமும் வந்திருக்கிறது.நன்றி என்ற ஒரு வார்த்தையை சமர்ப்பிப்பதைவிட, கூடுதலான நேரத்தை விக்கிக்காக செலவழித்து கனக்சை பெருமைப்படுத்துவது சிறப்பானது என நினைக்கிறேன். கனக்சு சார் வழக்கம் போல வழிகாட்டுங்கள்> உங்கள் நம்பிக்கை வீண்போகாது. அன்புடன் --கி.மூர்த்தி 13:12, 10 ஆகத்து 2015 (UTC)

👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 13:38, 10 ஆகத்து 2015 (UTC)
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:19, 10 ஆகத்து 2015 (UTC)
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 17:10, 10 ஆகத்து 2015 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 17:20, 10 ஆகத்து 2015 (UTC)

திட்டப்பக்கத்துக் குறிப்புகளை மீளமைப்பது எப்படி?[தொகு]

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பினை தொடர்நது காணவும். சிலபதிவுகளை மீளமைக்க வேண்டும் .உதவுக. இப்பக்கத்தில் ஒப்பமிட்டவர்களை மீளமைப்பது எப்படி?--உழவன் (உரை) 10:36, 12 ஆகத்து 2015 (UTC)

பொருத்தமற்ற ஒப்பத்தைக் குறுக்கோடிட்டு அடித்துவிடலாம். நிறைவடைந்த வேண்டுகோள்களைக் காப்பகத்தில் ஏற்றி விடலாம். --மதனாகரன் (பேச்சு) 10:53, 12 ஆகத்து 2015 (UTC)
மதனாகரன், தகவலுழவன் கேட்பது வேறு. குறைந்தது ஒரு ஒப்பம் தவறுதலாக(!) வேறு பயனரால் அழிக்கப்பட்டு விட்டது. அதனை மீளப் பெறுவது எப்படி எனக் கேட்கிறார் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:57, 12 ஆகத்து 2015 (UTC)
மதனாகரன்! //பொருத்தமற்ற ஒப்பத்தைக் குறுக்கோடிட்டு அடித்துவிடலாம்// என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்? எனக்கு விளங்கவில்லை. அவர்கள் இருவரும் எனது விக்சனரி ஆசான்கள்.
ஆம். கனகு! மேற்சொன்னத் தொடுப்பினை, தொடர்ந்து சொடுக்கவும். அங்ஙனமென்றால், மூன்று நபர்கள் பதிவுகளை செய்துள்ளது புலப்படும். மற்றொருவரும் (TRYPPN) ஒப்பமிட்டுள்ளார்அதில் பார்வதிசிறீ மீளமைப்பும் உண்டு. காணவும். --உழவன் (உரை) 11:04, 12 ஆகத்து 2015 (UTC)
த-உழவன், இரண்டையும் மீள்வித்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:06, 12 ஆகத்து 2015 (UTC)
தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன். ஒருவரே இரு தடவைகள் ஒப்பமிட்டு விட்டார் என நினைத்துக்கொண்டேன். --மதனாகரன் (பேச்சு) 11:17, 12 ஆகத்து 2015 (UTC)
எனது குழப்பத்தினைத் தெளிவு படுத்தி, மீளமைத்து வழிகாட்டியமைக்கு நன்றி. கனகு! மதனாகரன்! இனி நான் எனது தொடக்க காலத்தில் செய்த அவசரப் பதிவுகளை நீங்கள் செய்யாமலிருக்கக் கோருகிறேன். அடிக்கடி விக்சனரிக்கு வருவது கண்டு மகிழ்ச்சி. பலரும் ஈடுபட திட்டமொன்றை உருவாக்கி வருகிறேன். அங்கு தொடர்ந்து செயற்படுவோம்.. மீண்டும் பிரிதொரு உரையாடலில் சந்திப்போம்

உடன் செயற்பட்டு என்னைத் தெளிவு படுத்தியமைக்கு மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 11:22, 12 ஆகத்து 2015 (UTC)

//இப்பக்கத்தில் ஒப்பமிட்டவர்களை மீளமைப்பது எப்படி?// இதன் பொருள் ஒப்பத்தை நீக்க வேண்டும் என்பது போலிருந்தது. நான் இட்டது எவ்வகையில் அவசரப் பதிவு ஆயிற்று? பார்வதிசிறீ மீளமைத்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தால் இலகுவில் புரிந்து கொண்டிருப்பேன். மேற்கூறிய இணைப்பிலும் அது இல்லை. அல்லது சிறீதரன் கூறியது போல் கூறியிருந்தால் புரிந்து கொண்டிருப்பேன். --மதனாகரன் (பேச்சு) 11:39, 12 ஆகத்து 2015 (UTC)
உழவன், TRYPPN இன் ஒப்பம் மட்டுமே நீக்கப்பட்டிருந்தது. வேறு யார்?--Kanags \உரையாடுக 11:45, 12 ஆகத்து 2015 (UTC)

In the News/Image வார்ப்புரு[தொகு]

கனக்ஸ், மேற்குறிப்பிட்ட வார்ப்புரு முதற்பக்கப் படங்களில ஒரு படவிளக்கத்தைச் சேர்க்க பயனுள்ளது. ஒரு கட்டுரைக்கு நேரடித் தொடர்பற்ற படம் இடப்படுகையில் இது பயனுள்ளது. (இதனை நீக்க வேண்டாம்) மேலும், பார்வையற்றவர்கள் படிக்கும் கருவிகளில் இது போன்ற படவிளக்கங்களும் இணைப்புகளும் மிகவும் உதவிகரமான ஒன்று. இது அணுகலை (accessibility) மேம்படுத்தக்கூடிய ஒன்று. அதை அகற்ற வேண்டாம். இணையத்தளங்களில் அணுகலை மேம்படுத்துவது குறித்து மேலதிகத் தகவல்களை இங்கு அறியவும். நன்றி. --Surya Prakash.S.A. (பேச்சு) 06:45, 18 ஆகத்து 2015 (UTC)

அமெரிக்க இலங்கை மிசன்[தொகு]

அமெரிக்க இலங்கை மிசன் கட்டுரையில் சில பகுதிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது, கவனிக்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:06, 19 ஆகத்து 2015 (UTC)

உதவி[தொகு]

Kanags சார், முதல்பக்க அறிமுகம் பகுதிக்காக மதன் என்னுடைய புகைப்படம் கேட்டார்.படம் பதிவேற்றத் தெரியவில்லை.விக்கி காமன்சில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக நினைக்கிறேன். என்ன செய்யலாம்?--கி.மூர்த்தி 02:38, 20 ஆகத்து 2015 (UTC)

அதனால் பரவாயில்லை. பொது விக்கியிலேயே உங்கள் படம் இருக்கலாம். அங்கு உங்கள் பெயரில் தேடினேன். படிமம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்னும் தரவேற்றா விட்டால் இந்தத் தொடுப்பில் தமிழ் விக்கியில் தரவேற்றுங்கள்.--Kanags \உரையாடுக 02:47, 20 ஆகத்து 2015 (UTC)
நன்றி இரவில் முயற்சிக்கிறேன். அலுவலகம் புறப்பட வேண்டும். இன்னும் செயரத்தினாவும் புரியவில்லை --கி.மூர்த்தி 02:54, 20 ஆகத்து 2015 (UTC)

@கி.மூர்த்தி: செயரத்தினாவின் கருவியைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கலைக் கூறமுடியுமா? ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து விக்கிக் குறிமுறையுடன் உரையைப் படியெடுத்து தமிழ் விக்கிப்பீடியக் கட்டுரையில் ஒட்டி, பிற கருவிகள் என்பதன் கீழுள்ள பச்சை அம்புக்குறியை அழுத்துங்கள். --மதனாகரன் (பேச்சு) 13:24, 20 ஆகத்து 2015 (UTC)

பதிவிறக்கம் செய்வதிலேயே பிரச்சினை--கி.மூர்த்தி 13:31, 20 ஆகத்து 2015 (UTC) உள்ளது மதனாகரன்--கி.மூர்த்தி 13:31, 20 ஆகத்து 2015 (UTC)

மதனாகரன் கூகிள் குரோம் கருவியைப் பயன்படுத்துகிறேன். இடைமாற்று அகற்ற வேண்டும் என்றால்...?--கி.மூர்த்தி 13:41, 20 ஆகத்து 2015 (UTC)
Ctrl+Shift+R அழுத்திப் பாருங்கள். --மதனாகரன் (பேச்சு) 13:45, 20 ஆகத்து 2015 (UTC)
அழுத்தினாலும் அதே பக்கத்தில் வந்து நிற்கிறது.--கி.மூர்த்தி 13:47, 20 ஆகத்து 2015 (UTC)
தற்போது, பக்கங்களைத் தொகுக்கும்போது வரும் சாளரத்தில் பிற கருவிகள் என்பதை அழுத்திப் பாருங்கள். பச்சை அம்புக்குறி உள்ளடங்கலாகச் சில கருவிகள் வந்திருக்க வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 13:56, 20 ஆகத்து 2015 (UTC)
ஆம் வந்திருக்கிறது. --கி.மூர்த்தி 14:00, 20 ஆகத்து 2015 (UTC)

திரைப்படங்கள் குறித்தான உதவி தேவை...[தொகு]

வணக்கம். இந்த இணைப்பின் மூலமாக சன்யாசி, சம்சாரி எனும் திரைப்படங்கள் two-in-one movie packageஆக திரையிடப்பட்டதாக அறிகிறேன். நமது விக்கியில் சன்யாசி (திரைப்படம்), சம்சாரி (திரைப்படம்) என தனித்தனியாக கட்டுரைகள் உள்ளன. உசாத்துணையை உரியமுறையில் சேர்த்திட தங்களின் உதவி தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:31, 22 ஆகத்து 2015 (UTC)

மா. செல்வசிவகுருநாதன், இரு கட்டுரைகளையும் ஒன்றாக்கி விடலாமா? அல்லது இது குறித்து குறிப்பிட்ட கட்டுரை ஒன்றின் பேச்சுப் பக்கத்தில் உரையாடி முடிவெடுக்கலாம்.--Kanags \உரையாடுக 09:16, 24 ஆகத்து 2015 (UTC)
Yes check.svgY ஆயிற்று--Kanags \உரையாடுக 00:45, 5 செப்டம்பர் 2015 (UTC)

உதவி தேவை...[தொகு]

-Kanags சார் :இருமெத்தில் ஈதர் கட்டுரையில் ஒரு படம் இணைக்க முடியவில்லை. இணைக்க உதவவும்.--கி.மூர்த்தி 09:39, 26 ஆகத்து 2015 (UTC)

அப்படம் முழுமையாக ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் அச்சொற்களை மொழிபெயர்க்கமுடியுமா?.--Kanags \உரையாடுக 09:49, 26 ஆகத்து 2015 (UTC)
Kanags சார் ,

Heat – வெப்பம் Natural gas – இயற்கை வாயு Coal Biomass – கரி உயிர்த்திரள் Pre treatment – முன் தயாரிப்பு வினை Solid/ gaseous wastes – வளிமத்/ திணமக் கழிவுகள் H2O – தண்ணீர் Air/oxygen/steam – காற்று/ ஆக்சிசன் / நீராவி Gasification – வாயுமயமாக்கல் Ash – சாம்பல் O2+CO2 – ஆக்சிசன் + கார்பன் டை ஆக்சைடு Auto thermal reformer – தானியங்கி வெப்பக் கட்டுபடுத்தி Gas cleaning + gas processing – வாயுத் தூய்மை + வாயுச் செயல்முறை DME synthesis – இருமெத்தில் ஈதர் தொகுப்பு வினை Seperation + purification – தனித்துப்பிரித்தல் + தூய்மையாக்கல் DME – இருமெத்தில் ஈதர் --கி.மூர்த்தி 13:27, 26 ஆகத்து 2015 (UTC)

-Kanags சார் :அயோடின் ஐம்புளோரைடு என்ற கட்டுரையை விக்கித்தரவில் இணைக்க உதவவும். ஆங்கில எழுத்து தட்டச்சு செய்யவே முடியவில்லை. தமிழ் எழுத்துகள் மட்டுமே வருகிறது.

தமிழ் எழுதுவதற்கு எந்தக் கருவி பயன்படுத்துகிறீர்கள்?--Kanags \உரையாடுக 09:16, 27 ஆகத்து 2015 (UTC)

சரியாகிவிட்டது. என்.எச்.எம் ரைட்டர் கருவியை பயன்படுத்துகிறேன்.--கி.மூர்த்தி 09:19, 27 ஆகத்து 2015 (UTC) Kanags சார் வணக்கம். அசாரி(கிண்ணக்குழி) கட்டுரையில் படம் இணைக்க முடியுமா?--கி.மூர்த்தி 00:34, 31 ஆகத்து 2015 (UTC)

நன்றி Kanags பெர்டெக்னிடிக் அமிலம் தகவல் பெட்டியிலும் படம் வரவில்லை. --கி.மூர்த்தி 01:26, 31 ஆகத்து 2015 (UTC)
Kanagsகனக்சு சார், லெடா 074886 கட்டுரையில் படம் இணைக்க முடியுமா? --கி.மூர்த்தி 11:33, 3 செப்டம்பர் 2015 (UTC)
Yes check.svgY ஆயிற்று

ஏன் தகுதியற்றது?[தொகு]

கொங்கு மங்கலவாழ்த்தும் இது போல் ஒரு திருமண சீர் முறைதான் அதை அனுமதித்துள்ளீர்கள்..எனது கட்டுரையும்(குலம் ஓதுதல்) அதுபோல் ஒரு திருமண சீர் முறைதான் பிறகு இதை மட்டும் ஏன் அனுமதிக்க மறுக்கின்றீர்கள்?−முன்நிற்கும் கருத்து Kongarmaganprem (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

அறிதலுக்காக...[தொகு]

இங்கு நடந்த உரையாடல்களின் காரணமாக, மதனாகரன் சற்று உணர்ச்சிவயப்பட்டு ஒரு கட்டுரையைத் துவக்கினார். (ஒரு கட்டுரை சேர்ந்தது, மகிழ்ச்சியே!). கடந்த சில நாட்களாக நமது வளங்கள் பெருமளவில் வீணாவதைக் காண்கிறோம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:41, 9 செப்டம்பர் 2015 (UTC)

தெளிவு படுத்தவும்[தொகு]

எருமைக்கள்ளி முள்ளியான் (தாவரம்) இந்த பக்கத்தின் தலைப்பை நீங்கள் மாற்றியது போல் காட்டுகிறது. ஆனால் நான் கொடுத்த தலைப்பே தான் மீண்டும் உள்ளது. இது எதனால்? நீங்கள் கொஞ்சம் விளக்கம் கொடுங்கள். எனக்கு புரியவில்லை. பதிவேற்றிய பின் ஏதாவது ஒரு பயனர் அந்த கட்டுரையில் ஏதாவது புகுத்தவேண்டும் என்பதாலா?--Muthuppandy pandian (பேச்சு) 06:21, 9 செப்டம்பர் 2015 (UTC)

தாங்கள் கொடுத்த தலைப்பு எருமைக்கள்ளி முள்ளியான்(தாவரம்) என இடைவெளியின்றி இருந்தது. சொல்லுக்கும் அடைப்புக்குறிக்கும் இடையே இடைவெளி விடுவது தமிழ் விக்கிப்பீடியா வழமை. --மதனாகரன் (பேச்சு) 07:14, 9 செப்டம்பர் 2015 (UTC)
மதனாகரன், தமிழ் விக்கிப்பீடியா வழமையா? அப்போ, பொதுவாக அவ்வாறு இல்லையா? முதல் தடவை கேள்விப்படுகிறேன்.--Kanags \உரையாடுக 07:17, 9 செப்டம்பர் 2015 (UTC)
பொதுவழமையும் கூடத் தான். Face-smile.svg --மதனாகரன் (பேச்சு) 07:20, 9 செப்டம்பர் 2015 (UTC)

கனக்சு சார், சியரீசின் மீதுள்ள பிரமிடு வடிவ மலை என்று தலைப்பை மாற்றலமா? --கி.மூர்த்தி 08:31, 12 செப்டம்பர் 2015 (UTC)

கனக்சு நைட்ரசன் முப்புரோமைடு கட்டுரையில் பகுப்பு - கவனிக்கவும் அன்புடன்--கி.மூர்த்தி 12:53, 14 செப்டம்பர் 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று. வார்ப்புருவில் இன்று அன்ரன் செய்த சில மாற்றங்களால் இந்தப் பகுப்புகள் உருவாகியுள்ளன. அப்பகுப்புகளை மறைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 13:03, 14 செப்டம்பர் 2015 (UTC)
சரிசெய்யும் முயற்சியில் தகவல் பெட்டியில் சில தகவல்களை நீக்கிவிட்டேன். இணைக்க முடியுமா? நன்றி --கி.மூர்த்தி 13:12, 14 செப்டம்பர் 2015 (UTC)

கனக்சு சார், இன்னமும் அந்த பகுப்பு குறைபாடு சரிசெய்யப்படவில்லை. கவனித்தீர்களா? --கி.மூர்த்தி 09:51, 17 செப்டம்பர் 2015 (UTC)

நன்றி சார். அலுமினியம் சிலிக்கேட்டு கட்டுரையையும் கவனிக்கவும். --கி.மூர்த்தி 10:03, 17 செப்டம்பர் 2015 (UTC)
அவை பராமரிப்புப் பகுப்புகள். அவை அவசியமானவை. கட்டுரைகளில் இருந்து மறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பகுப்புகளைக் காணும் போது அவற்றுக்கு {{Hidden category}} என எழுதிச் சேமியுங்கள். அவை கட்டுரைகளில் இருந்து மறைந்து விடும். ஆங்கிலக் கட்டுரைகளிலும் இவ்வாறான பகுப்புகள் உள்ளன.--Kanags \உரையாடுக 10:00, 17 செப்டம்பர் 2015 (UTC)
{{Hidden category}} என்று எங்கு சேமிக்க வேண்டும் ? கட்டுரையின் இறுதியிலா ? பகுப்பிலா?--கி.மூர்த்தி 10:09, 17 செப்டம்பர் 2015 (UTC)
புதிய பகுப்பு உருவாக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:15, 17 செப்டம்பர் 2015 (UTC)

கனக்சு அமிலநீக்கி கட்டுரையில் ஒரு படிமம் பதிவேறாமல் உள்ளது உதவவும் --கி.மூர்த்தி 06:44, 19 செப்டம்பர் 2015 (UTC)

அது பொதுவகத்தில் இல்லாத படிமம். இணைப்பை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:51, 19 செப்டம்பர் 2015 (UTC)
sir please do not delete my page i will try improving on it. it is my assignment. i sincerely request you not to delete the page.−முன்நிற்கும் கருத்து Amal priyanka (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கனக்சு சார், விக்கித் தரவில் இருகுளோரின் ஓராக்சைடு கட்டுரையை இணைக்க முயலும் போது you have to logged in என்று வருகிறதே ஏன்? உதவவும். --கி.மூர்த்தி 12:35, 28 செப்டம்பர் 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று. ஏன் இவ்வாறு வந்தது எனத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 12:39, 28 செப்டம்பர் 2015 (UTC)
@கி.மூர்த்தி:, விக்கித்தரவில் இணைப்பதற்கு 'விக்கித்தரவு' இல் புகுபதிகை செய்யவேண்டும். சாதாரணமாக தானாகவே புகுபதிகை செய்யப்படும். எனினும் ஞாபகிகள் அழிக்கப்பட்டால் மீண்டும் செய்யவேண்டும். you have to logged in எனவரும் பெட்டியிலேயே புகுபதிகை செய்ய இணைப்பும் இருக்கும். :)--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:33, 28 செப்டம்பர் 2015 (UTC)

நன்றி ♥ ஆதவன் ♥--கி.மூர்த்தி 17:05, 28 செப்டம்பர் 2015 (UTC)

கனக்சு சார் இரும்புத்தாது உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் கட்டுரையில் மூரித்தான் நாடு கவனிக்கவும் --கி.மூர்த்தி 08:34, 29 செப்டம்பர் 2015 (UTC)

நீங்கள் இன்னும் செயரத்தினாவின் கருவி பயன்படுத்துவதில்லை போல் தெரிகிறது. முழுப் பட்டியலும் இக்கருவி கொண்டு மீளப் புதிதாக உருவாக்குவதற்கு எனக்கு 5 செக்கன்களும் பிடிக்கவில்லை.--Kanags \உரையாடுக 08:49, 29 செப்டம்பர் 2015 (UTC)
@Selvasivagurunathan m:, உங்களால் இக்கருவியைப் பயன்படுத்தும் முறை பற்றி மூர்த்திக்கு நேரடியாக ஒரு சிறு பயிற்சி கொடுக்க முடியுமா? ஆங்கில விக்கியில் இருந்து நேரடியாக மொழிபெயர்ப்பு செய்பவர்களுக்கு இக்கருவி பற்றித் தெரிந்திருப்பது மிக அவசியமாகக் கருதுகிறேன். இதனால் தேவையற்ற சிவப்பு இணைப்புகளை (பகுப்புகள் உட்பட) திருத்த முடியும்.--Kanags \உரையாடுக 09:56, 30 செப்டம்பர் 2015 (UTC)
@Kanags:, என்னால் இயலும். இதுகுறித்து, மூர்த்தி அவர்களுடன் பேசி திட்டமிடுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:32, 30 செப்டம்பர் 2015 (UTC)

உதவி தேவை...[தொகு]

வணக்கம்! பலாலி வீதி கட்டுரையில் மேற்கோள் சேர்க்க தங்களின் உதவி தேவைப்படுகிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:32, 29 செப்டம்பர் 2015 (UTC)

தேடிப் பார்க்கிறேன். பலாவி வீதியின் படத்தைத் தான் ஆதாரமாகத் தர வேண்டும்:)--Kanags \உரையாடுக 09:52, 30 செப்டம்பர் 2015 (UTC)

எம். கே. நாரயணன் என்ற தலைப்பில் எம். கே. நாராயணன் என்பதற்க்கு பதிலாக எம். கே. நாரயணன் என உள்ளது. அதை சரி செய்து உதவுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 08:59, 5 நவம்பர் 2015 (UTC)

வார்ப்புரு உருவாக்கம்[தொகு]

கடப்பு உறவு கட்டுரைக்குத் தேவையாக இருந்ததால், வார்ப்புரு:OEIS இணைப்பு, வார்ப்புரு:கணித உறவுகள் எண்ணிக்கை ஆகிய வார்ப்புருக்களை ஆ.வியிலிருந்து எடுத்து உருவாக்கினேன். அவை சரியானபடி செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்துத், தேவையான திருத்தங்களைச் செய்துதரும்படித் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:54, 30 செப்டம்பர் 2015 (UTC)

@Booradleyp1:, ஒரு சில (சிறிய) திருத்தங்களை செய்திருக்கிறேன். மற்றும் படி, அனைத்தும் நன்று.--Kanags \உரையாடுக 09:51, 30 செப்டம்பர் 2015 (UTC)
உதவிக்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:30, 30 செப்டம்பர் 2015 (UTC)

கனக்சு சார், ஆர்சனிக் என்பதற்கு பதிலாக ஆர்செனிக் என்று பகுப்பு வகைப்படுத்தப்பட்டுள்ளது. மாற்ற உதவவும். --கி.மூர்த்தி 02:02, 2 அக்டோபர் 2015 (UTC)

கனக்சு சார், எத்தில் அயோடைடு கட்டுரையில் படிமம் பதிவேற்ற உதவவும் --கி.மூர்த்தி 06:48, 17 அக்டோபர் 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று--Kanags \உரையாடுக 07:13, 17 அக்டோபர் 2015 (UTC)
கனக்சு சார் , காட்மியம் நைட்ரேட்டு கட்டுரையைக் கவனிக்கவும். தகவல் பெட்டியை சரிசெய்யவும். --கி.மூர்த்தி 08:18, 19 அக்டோபர் 2015 (UTC)
கனக்சு சார், பாதரசம்(I) நைட்ரேட்டு கட்டுரையை தவறுதலாக Mercury(II) nitrate கட்டுரையுடன் விக்கித் தரவில் இணைத்து விட்டேன் .சரிசெய்யவும். --கி.மூர்த்தி 09:32, 20 அக்டோபர் 2015 (UTC)
கனக்சு சார், குரோமைட்டு என்ற கட்டுரையும் chromite(compound) என்ற கட்டுரைக்குப் பதிலாக chromite என்ற ஆங்கிலக் கட்டுரையுடன் தவறுதலாக இணைக்கப்பட்டு விட்டது. குரோமைட்டு(சேர்மம்) என்ற தலைப்புக்கு கட்டுரையும் வழிமாற்றப்பட வேண்டும். --கி.மூர்த்தி 05:34, 22 அக்டோபர் 2015 (UTC)
கனக்சு சார், சயனிமைடு கட்டுரையும் cyanamide என்ற க்ட்டுரையுடன் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. --கி.மூர்த்தி 09:44, 22 அக்டோபர் 2015 (UTC)
கனக்சு சார், துத்தநாகப் புரோட்டினேட்டு கட்டுரையின் பகுப்பைச் சற்று கவனிக்கவும் --கி.மூர்த்தி 07:19, 23 அக்டோபர் 2015 (UTC)

பதக்கம்[தொகு]

Wiki medal.jpg சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர்
ஒவ்வொரு மாதமும் நிறைய பேர் பார்க்கும் பல முக்கிய கட்டுரைகளைத் தாங்கள் தொடங்கி பங்களித்திருப்பதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 07:38, 23 அக்டோபர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:43, 23 அக்டோபர் 2015 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:42, 24 அக்டோபர் 2015 (UTC)
அனைவருக்கும் நன்றி.--Kanags \உரையாடுக 07:37, 24 அக்டோபர் 2015 (UTC)

உதவி...[தொகு]

வணக்கம்! விக்கிசெய்தியில் எனக்கு நிருவாக அணுக்கம் தர, மெட்டாவிக்கியில் பரிந்துரைக்கலாம் என்பதாக என்னிடம் முன்பு கேட்டிருந்தீர்கள். அதுகுறித்து மீண்டும் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விடுமுறை நாட்களில் அங்கு பங்களிக்க ஆவலாக உள்ளேன். சில தேவையற்ற கட்டுரைகள் அங்கு எழுதப்படுவதைக் காண்கிறேன்; ஆனால் நீக்க இயலவில்லை. தங்களால் இயன்றளவு உதவவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:14, 27 அக்டோபர் 2015 (UTC)

@Selvasivagurunathan m:, விக்கிசெய்தியில் பங்களிக்க மீண்டும் முயற்சி செய்வேன். அதற்கிடையில் உங்களுக்கு நிருவாக அணுக்கம் தருவதற்கு விண்ணப்பிக்கலாம். மெட்டா விக்கியில் கேட்க வேண்டும். மெட்டா விக்கியில் அணுக்கம் கோருவதற்கான அந்தப் பக்கத்தின் இணைப்பைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை. இன்று அல்லது நாளை பார்த்து வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அல்லது @Shanmugamp7: ஐயும் கேட்கலாம்.--Kanags \உரையாடுக 11:15, 27 அக்டோபர் 2015 (UTC)
இங்கு விண்ணப்பிக்க வேண்டும், முதலில் தமிழ் விக்கிசெய்திகளில் ஒரு வேண்டுகோள்/வாக்கெடுப்பு விடுத்து, ஏழு நாட்கள் கழித்து மேல் விக்கியில் விண்ணப்பிக்க வேண்டும்.--சண்முகம்ப7 (பேச்சு) 12:59, 27 அக்டோபர் 2015 (UTC)
நன்றி சண்முகம். வாக்கெடுப்பை ஆரம்பித்துள்ளேன்.--Kanags \உரையாடுக 20:08, 27 அக்டோபர் 2015 (UTC)

உதவி[தொகு]

Kanags ஐயா, நான் உருவாக்கும் கட்டுரைகளின் சரியான தமிழ்ப்பெயரை அறிவுறுத்தவும். --குறிஞ்சி (பேச்சு) 14:03, 28 அக்டோபர் 2015 (UTC)

@குறிஞ்சி... நான் இயந்திரப் பொறியியலாளராக பணியில் உள்ளதால், என்னிடமும் இது குறித்த உதவிகளை நீங்கள் கேட்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:43, 28 அக்டோபர் 2015 (UTC)

ஐயா மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு), ஏற்கனவே இதுகுறித்த கட்டுரைகளில் உங்கள் பெயரை இட்டுக் கேட்டிருந்தேன், மேலும் உங்கள் பயனர் பக்கத்தில் நீங்கள் அதிகவேலைப் பளூவுடன் இருந்ததாக குறியீட்டிருந்தீர்கள், ஆகவே இங்கு வந்தேன்... --குறிஞ்சி (பேச்சு) 00:23, 29 அக்டோபர் 2015 (UTC)

Kanags வணக்கம் சார். க்ம்போடியா இன் புவியியல் என்று தகவல் பெட்டியில் இருக்கிறது. சரி செய்ய இயலுமா? --கி.மூர்த்தி 10:58, 8 நவம்பர் 2015 (UTC)

அத்தகவல் பெட்டி ஆங்கில விக்கிக்கு ஏற்றவாறே வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்போடியாவின் என எழுதலாம். அவ்வாறு மாற்றினால் சிங்கப்பூர் நாட்டுக்கு சிங்கப்பூரின், இங்கிலாந்து - இங்கிலாந்தின் என வராது. வேறு வழி பார்ப்போம்.--Kanags \உரையாடுக 11:06, 8 நவம்பர் 2015 (UTC)

Regarding பயனர்:MARTIN1531572/உள்ளடக்க மேலாண்மை அமைப்பு[தொகு]

Hi Kanags (பேச்சு • பங்களிப்புக்கள்),, Can you please tell me what was the issue with the article in the subject as I am unable to read the reason. Thanks Vincentvikram (பேச்சு) 04:51, 30 அக்டோபர் 2015 (UTC)

@Vincentvikram: Are u user MARTIN1531572? Why do you want the reason?--Kanags \உரையாடுக 06:47, 30 அக்டோபர் 2015 (UTC)
Hello @Kanags:! I am running a Wikipedia in Education programme where my students create Wikipedia articles. I conducted several iterations for my teacher trainees who are doing their B.Ed and பயனர்:MARTIN1531572 (பேச்சு • பங்களிப்புக்கள்) is my student. In order for these future teachers to use active learning and constructivism in their classrooms for their children, they need to first do it themselves. For their final exam they did en:User:Vincentvikram/Bachelor_of_education_2015_final_exam To prepare them, I did two iterations so that they get necessary exposure. Since, everyone learns at a different pace and take varying periods of time to absorb the process wanted to use the feedback to improve the next iteration. I am sure that the quality will improve over time and experience. Thanks Vincentvikram (பேச்சு) 07:38, 30 அக்டோபர் 2015 (UTC)
@Vincentvikram: That page had only Hi! as content. It was created on 11/9/2015 with "Hi" and nothing added since. And I deleted the page on 26/9/2015. If someone wants to practice he/she can create their own "sandbox", like பயனர்:MARTIN1531572/மணல்தொட்டி. Thanks..--Kanags \உரையாடுக 07:58, 30 அக்டோபர் 2015 (UTC)

தரவு அமைத்து தாருங்கள்[தொகு]

தோழமைக்கு அடியேனின் வணக்கம்விக்கிபீடியாவின் ஆசிய மாதம் போட்டியில், அடியேன் எழுதிய, "ஹெரத்" அல்லது "ஹேரத் நகரம்" என்ற தலைப்பின் கட்டுரைக்கு விக்கித்தரவு அமைத்து தரும்படி தாழ்மையுடன் கோறுகிறேன்.Heart.pngஅன்புமுனுசாமி (பேச்சு) 10:20, 3 நவம்பர் 2015 (UTC)

தரவமைத்தமைக்கு நன்றிகள்[தொகு]

தோழமைக்கு அடியேனின் அன்பு வணக்கம் "ஹெரத்" என்கிற என் கட்டுரை தலைப்புக்கு, "ஹெறாத்" என்ற சரியான தரவமைத்தமைக்கு நன்றிகள்... Heart.pngஅன்புமுனுசாமி (பேச்சு) 12:42, 3 நவம்பர் 2015 (UTC)

அறிவுரித்தியமைக்கு நன்றிகள்[தொகு]

தோழமைக்கு அடியேனின் மீண்டுமொரு அன்பு வணக்கம் அடியேன் தவற்றை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்... Heart.pngஅன்புமுனுசாமி (பேச்சு) 12:52, 3 நவம்பர் 2015 (UTC)

பகுப்பு சேர்த்தமைக்கு நன்றிகள்[தொகு]

தோழமைக்கு அடியேனின் அன்புHeart.png வணக்கம் எனது "மந்தை" கட்டுரைக்கு, கால்நடைகள் என்ற பகுப்பிணைத்துதவியதர்க்கு மனமகிழ்ந்து நன்றிகள். Heart.pngஅன்புமுனுசாமி (பேச்சு) 02:09, 03 நவம்பர் 2015 (UTC)

கனக்சு சார் ,(The British Archaeological Reports) என்ற தலைப்புக்கு சரியான மொழிபெயர்ப்பை பரிந்துரைக்கவும். --கி.மூர்த்தி 03:24, 11 நவம்பர் 2015 (UTC)

கனக்சு சார், நீலவானில் ஒரு வெள்ளை சூரியன் கட்டுரையை விக்கித்தரவில் இணைக்க முடியவில்லை. உதவவும்.--கி.மூர்த்தி 11:22, 19 நவம்பர் 2015 (UTC)

தொழில்நுட்பம் காரணமா?[தொகு]

கனக்சு சார்,விக்கிபீடியா ஆசியமாதம் பங்கேற்பாளர்கள் பக்கம் என்ன ஆனது? கவனிக்கவும் --கி.மூர்த்தி 00:12, 22 நவம்பர் 2015 (UTC)

புதிய பயனர் ஒருவர் தெரியாமல் கட்டுரையையும் அங்கு எழுதி விட்டார்.--Kanags \உரையாடுக 00:28, 22 நவம்பர் 2015 (UTC)

கனக்சு சார், Bukit Timah வை எப்படி மொழி பெயர்க்கலாம்?--கி.மூர்த்தி 03:04, 27 நவம்பர் 2015 (UTC)

@கி.மூர்த்தி: புக்கித் திமா என்று தான் சிங்கப்பூரில் அதிகாரபூர்வமாகத் தமிழில் எழுதப்படுகின்றது என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 03:19, 27 நவம்பர் 2015 (UTC)

விக்கிச்செய்திகள்[தொகு]

இந்த இரு இடங்களிலும் உங்களுக்கு அணுக்கம் உள்ளதால், (1.விக்கிசெய்திகள் + 2.விக்கிநூல்கள்) ஒரு கோரிக்கையை வைத்துள்ளேன். அனைத்து தமிழ் திட்டங்களிலும் சில வசதிகள் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.ஆவலுடன்..--உழவன் (உரை) 02:29, 2 திசம்பர் 2015 (UTC)

அந்தந்த விக்கிப்பக்கங்களில் குறிப்புகளை இற்றைப் படுத்தியுள்ளேன்.--உழவன் (உரை) 06:03, 2 திசம்பர் 2015 (UTC)
விக்கிச்செய்தி்களில் நீங்கள் செய்த மாற்றம் கண்டு மகிழ்ந்தேன். விக்கிநூல்களிலும் செய்யக் கோருகிறேன்.--உழவன் (உரை) 01:42, 4 திசம்பர் 2015 (UTC)
Yes check.svgY ஆயிற்று @Info-farmer:.--Kanags \உரையாடுக 01:45, 4 திசம்பர் 2015 (UTC)
உடனுக்குடன் வேலை நடந்து முடிந்தால், புயல்போல செய்து முடித்தார் என்பர். நான் உங்களை, விக்கியின் தென்றல் என்றே அழைக்க விரும்புகிறேன். புயலால் அழிவு தானே அதிகம். தென்றல் வரும் போதெல்லாம் இதம். மீண்டும் மற்றுமொரு நோக்கத்தில் சந்திப்போம். வணக்கம்.--உழவன் (உரை) 01:57, 4 திசம்பர் 2015 (UTC)

கட்டுரை அளவு[தொகு]

கட்டுரை அளவுக்கு உச்சகட்ட வரம்பு இல்லையென்று சொல்லமுடியாது. ஆனால் பொதுவான ஒரு உயர் வரம்பு இருக்கின்றது. இது உயர்ந்து செல்லும்போது கட்டுரைகள் பகுதிகளாக்கப்படுகின்றன. ஆங்கில விக்கியில் எங்கோ கண்டதாக ஞாபகம். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:15, 4 திசம்பர் 2015 (UTC)

நீங்கள் அங்கு கூறியது தவறு. //கட்டுரை அளவென்பது மூன்று வரிகளுக்கு மேல் என்பது பொதுவான கொள்கை. அதைவிட சற்று அதிகமாகவே உருவாக்கினால் பிரச்சினை இல்லை.// நான் விளங்கிக் கொண்டது: நீண்ட கட்டுரைகள் எழுத வேண்டாம். மூன்று வரிகள் அல்லது சிறிது அதிகமாக இருந்தால் காணும் என்றே நான் விளங்கிக் கொண்டேன்:) நீங்கள் அவ்வாறு நினைத்து எழுதியிருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். கட்டுரைகள் பொதுவாக நீண்டதாக இருந்தால், (100,000 பைட்டுகளை விட அதிகமாக இருந்தால்) அவற்றை இரண்டு மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதலாமா எனப் பார்க்கலாம். அதற்காக, கட்டாயம் அவற்றைப் பிரித்துத் தான் எழுத வேண்டும் என்பதில்லை. உதாரணமாக, ஒரு நாட்டைப் பற்றி எழுதினால், அவற்றின் முக்கியமான பகுதிகளை ஒரு கட்டுரையில் தந்து (கட்டுரை , ஒரு பகுதியை இன்னும் விரிவாக எழுத வேண்டுமானால், {{main|உபதலைப்பு}} எனத் தொடரலாம். இது உங்களுக்குத் தெரியாததல்ல.--Kanags \உரையாடுக 07:37, 4 திசம்பர் 2015 (UTC)
குறுகிய கட்டுரைகள் குறித்து தீர்க்கமான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றே நம்புகிறேன். மூன்று வரிகள் என்று நிறுத்துக்கொள்ளாமல் சற்று அதிகம் எழுதினால் நன்று (பிரச்சினைகள் இல்லை (பிரச்சினைகள் என்பது கட்டுரை அளவு தொடர்பானவை)) என்பதே நான் அங்கு சுட்டவந்தது. சற்று அதிகம் என்றால் 'காணும்' என்பதல்ல :). இப்போதுதான் பொருள் மயக்கம் தெரிகின்றது. அதற்காகத்தான் இங்கு குறிப்பிட்டேன். நன்றி கனக்ஸ். அங்கும் சேர்த்துவிடுகிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:44, 4 திசம்பர் 2015 (UTC)

அடிலைன் மொலமுறே[தொகு]

மேற்படி கட்டுரையில் படம் சரிவரவில்லை. பார்க்கிறீர்களா?--பாஹிம் (பேச்சு) 06:19, 5 திசம்பர் 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று @Fahimrazick:File:Meedeniya 899.JPGபொது உரிமத்தில் இருந்தாலும், பொதுவகத்தில் இல்லாமல் இருந்தது. உரிய மாற்றங்களைச் செய்துள்ளேன். அதே கோப்பின் பெயரை வைத்துள்ளதால், அனைத்து மொழி திட்டங்களிலும், அதனை பயன்படுத்தலாம்.--உழவன் (உரை) 07:20, 5 திசம்பர் 2015 (UTC)

குறுங்கட்டுரை விளக்கம்[தொகு]

ஒரு கட்டுரையில் மேலும் உள்ளடக்கங்கள் சேர்க்க வாய்ப்பிருந்தால் இயன்றவரையில் துறை சார்நது குறுங்கட்டுரை என்று குறிப்பிடுகின்றேன். இது ஒருவகையான கவன ஈர்ப்பாகவே எண்ணுகின்றேன். தவறெனில் சுட்டுங்கள். நன்றி ! - ʋɐɾɯnபேச்சு 08:07, 16 திசம்பர் 2015 (UTC)

இவ்வாறு பார்க்கப்போனால், தமிழ் விக்கிப்பீடியாவின் 90% கட்டுரைகளுமே குறுங்கட்டுரைகள் தான். பொதுவாக அனைத்துமே வளர வாய்ப்புகள் உள்ளன. குறுங்கட்டுரை எனக் கவனயீர்ப்பு செய்வதால் எவரும் அதனைக் கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. பகுப்பில் எண்ணிக்கை கூடுமே அன்றி, வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையில் போதுமான அளவு தகவல்கள் உள்ளன. இதற்கு மேல் எழுத வேண்டும் என்றால், துறை சார் நிபுணர் ஒருவர் தமக்குத் தெரிந்த தகவலை விரும்பினால் சேர்க்கலாம். பொதுவாக அடிப்படைத் தகவகள் இருந்தால் அவை போதும். பயனர்கள் மேலும் தகவல்கள் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம். அனைத்துக்கும் குறுங்கட்டுரை வார்ப்புருவைச் சேர்க்கத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 08:16, 16 திசம்பர் 2015 (UTC)
உண்மை ! //எவரும் அதனைக் கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை// இதுவரை இல்லாதிருக்கலாம் எனினும் இனிவரும் காலங்களில் பங்களிக்களிப்பு உயரலாம் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன். துறைசார்ந்து பங்களிக்க விரும்புவோருக்கு உதவும் வகையில் குறுங்கட்டுரை வார்ப்புருக்களை இடுகின்றேன். மறுதலிப்பிற்கு மன்னிக்கவும் ! - ʋɐɾɯnபேச்சு 08:52, 16 திசம்பர் 2015 (UTC)
உங்கள் விருப்பம். ஆனாலும், அவற்றில் ஏதேனும் குறுங்கட்டுரை அல்ல என நான் நினைத்தால் வார்ப்புருவை இக்கட்டுரையில் நீக்கியது போல் நீக்கலாம்:)--Kanags \உரையாடுக 09:06, 16 திசம்பர் 2015 (UTC)

உதவுக:விக்கிமூலம்[தொகு]

s:மீடியாவிக்கி பேச்சு:Common.css s:மீடியாவிக்கி பேச்சு:Common.js என்பதில் உங்கள் உதவி தேவை. 10நிமிடங்கள் தேவைப்படலாம்.--உழவன் (உரை) 03:13, 18 திசம்பர் 2015 (UTC)

User:Info-farmer, எனக்கு அணுக்கம் இல்லாததால், உதவ முடியாமைக்கு வருந்துகிறேன். @Ravidreams:.--Kanags \உரையாடுக 07:03, 18 திசம்பர் 2015 (UTC)
Yes check.svgY ஆயிற்று--இரவி (பேச்சு) 07:54, 18 திசம்பர் 2015 (UTC)
நிரல் வேலைசெய்கிறது. மிக்கநன்றி.--உழவன் (உரை) 08:35, 18 திசம்பர் 2015 (UTC)
கனக்சு சார் மரிகாட் செயிண்ட் மார்டின் தலைப்பில் உள்ள செயின்ட் மார்டினில் ’ன்’ திருத்தப்பட வேண்டும்.--கி.மூர்த்தி 08:59, 22 திசம்பர் 2015 (UTC)

உதவி[தொகு]

கனக்சு சார் , ஆக்ரா கோட்டை என்ற பகுப்பு உருவாக்க வேண்டும். கற்றுத் தரவும். செயின்ட் மார்டின் உள்ள ன், ண் ஆக மாற வேண்டும் --கி.மூர்த்தி 05:21, 24 திசம்பர் 2015 (UTC)

சிறிதரன்,

நான் காயகல்ப மூலிகைகள் என்றொரு கட்டுரை எழுதியுள்ளேன். அதனோடு ஏற்கனவே விக்கியில் இருக்கும் 'காயகற்பம்' எனும் கட்டுரையை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. கட்டுரைகளை எவ்வாறு இணைப்பது என்பது பற்றி எனக்கு அறிவியுங்கள். அல்லது தாங்களாகவே அவற்றை இணைத்து விடுங்கள். நன்றி.

அப்துல் றஸ்ஸாக், 11:48, 29.12.2015

சிறிதரன்,

நல்லூர் இராசதானி பற்றிய கட்டுரை தொடர்பான தகவல்களுக்கு நன்றி. ஆனால் அதிலுள்ள எதுவுமே எந்த வலைப்பதிவிலிருந்தும் என்னால் எடுக்கப்படவில்லை என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும். தேவையான மேற்கோள்கள் கட்டுரையின் அடியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அறிவுறுத்தல்களை எதிர்பார்த்து,

அப்துல் றஸ்ஸாக் 09:24, 02.01.2016

பரிந்துரை/உதவி தேவை[தொகு]

வணக்கம்! இந்தப் பகுதியில் உள்ள அட்டவணையில் எண்களை வலதுபுறமாக 'align' செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டேன். அதாவது ஒவ்வொரு தரவுக்கும் முன்பாக align=right என்பதனை சேர்க்கவேண்டிய நிலை. அவ்வாறில்லாமல் 'wikitable' என்பதிலேயே இதனை வடிவமைக்க இயலுமா? எதிர்காலத்தில் 234 வரிசைகளைக் கொண்ட அட்டவணை ஒன்றினை தயார் செய்ய வேண்டிய வாய்ப்பு ஒன்றுள்ளது; அப்போது எளிதாக இருக்கவேண்டும், அல்லவா?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:20, 2 சனவரி 2016 (UTC)

இங்குள்ள அட்டவணையில் ஏறுமுகமாக / இறங்குமுகமாக வரிசை செய்யும் அம்புக்குறிகள் கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் cursorஐ அவ்விடங்களில் வைத்து சொடுக்கினால் வரிசைப்படுத்த முடிகிறது. அம்புக்குறிகளை தெரியப்படுத்த உரிய திருத்தம் செய்து உதவுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:23, 10 சனவரி 2016 (UTC)

முயன்று, திருத்தம் செய்தேன்; அம்புக்குறிகளுடன் sorting இப்போது சரியாகவுள்ளது. left align, right align போன்றவற்றை 'wikitable' என்பதிலேயே எவ்வாறு வடிவமைப்பது?--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:49, 10 சனவரி 2016 (UTC)

கட்டுரை மதிப்பீடு வேண்டுதல்[தொகு]

கடைசியாக நான் மொழிபெயர்த்துள்ள கட்டுரையான நிர்மலா ஜோஷியை மதிப்பிட்டு, தாங்கள் முன்பு கூறிய தவறுகள் தவிக்கப்பட்டுள்ளனவா என்று கூற முடியுமா?--கலைவாணன் (பேச்சு) 11:38, 4 சனவரி 2016 (UTC)

பார்த்தேன், தவறு எதுவும் புலப்படவில்லை. வாழ்த்துகள்:)--Kanags \உரையாடுக 11:45, 4 சனவரி 2016 (UTC)
நன்றி!! :)-−முன்நிற்கும் கருத்து Kalaivanan S (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம் சிறிதரன்,

நான் "மட்டக்களப்பு மாவட்ட இடப்பெயர்கள்" என்று விக்கிக்கோப்பை க்காக கட்டுரையொன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில்,

1. அக் கட்டுரையை விக்கிப்படுத்துமாறு வேண்டப்பட்டிருக்கின்றது. தங்களால் விக்கிப்படுத்த முடியுமா? அல்லது நான் விக்கிப்படுத்த ஏதேனும் உதவி செய்ய இயலுமா?

2. அந்தக் கட்டுரையில் மேற்கோள்களை எப்படி நிரல்படுத்துவது என்பதையும் முடிந்தால் சொல்லித் தரவும்.

நன்றி. அப்துல் றஸ்ஸாக், 11:23, 01.08.2016

நன்றி[தொகு]

சரிசெய்கிறேன். உதவிக்கு நன்றி. என்றும் வழிகாட்டுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 11:58, 13 சனவரி 2016 (UTC)

புனோம் பென் அமெரிக்கப் பல்கலைக்கழகம் கட்டுரையில் படம் பதிவேற்றம் செய்யவும் --கி.மூர்த்தி 11:09, 15 சனவரி 2016 (UTC)

கருத்திடுக[தொகு]

https://ta.wikisource.org/s/4l8 என்பதில் உங்களின் கருத்திடக் கோருகிறேன்.--உழவன் (உரை) 04:20, 16 சனவரி 2016 (UTC

உதவி[தொகு]

ஜொஹான்னஸ் வில்ஹெம் ஜென்சன் என்ற தலைப்புள்ள கட்டுரையை எவ்வாறு பெயர் மாற்றம் செய்யலாம்?--கி.மூர்த்தி 07:25, 19 சனவரி 2016 (UTC)
county என்பதன் சரியான தமிழ்பதம் தேவை.-- மாதவன்  ( பேச்சு ) 11:58, 19 சனவரி 2016 (UTC)

நியூ அயர்லாந்து (தீவு)[தொகு]

புவியியல் எனும் தலைப்பின்கீழ் தொடங்கும் வரியில் திருத்தம் தேவைப்படுகிறது. கருத்தினை புரிந்துகொள்ள இயலாததால் என்னால் செய்ய இயலவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:05, 22 சனவரி 2016 (UTC)

திருத்தியுள்ளேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:46, 22 சனவரி 2016 (UTC)