விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  Wikimedia-Tamil-TVA-partnership-2015.svg

  இத்திட்டம் குறித்த உரையாடல் சூலை 7, 2015 அன்று ஆலமரத்தடியில் தொடங்கப்பட்டது. இது வளரும் திட்டமென்பதால், இங்கு முறையான திட்டப்பக்கத்தில் உரையாடலைத் தொடர்கிறோம். இவ்வுரையாடலின் முதல் தொகுப்பு இங்கு உள்ளது. இத்திட்டத்தினைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெற தொகுப்புப் பக்கங்களையும் வாசிக்க வேண்டுகிறோம்.

  செயற்றிட்டங்கள்[தொகு]

  பல்வேறு செயற்றிட்டங்கள் தொடர்பான முன்னெடுப்புகளைக் கீழே தனித்தனித் தலைப்புகளில் தருகிறோம். இவற்றில் புரிந்துணர்வு கூடக் கூட இவற்றைத் தனிப்பக்கங்களுக்கு நகர்த்தலாம்.

  குறிப்பு: நம்முடைய வழமையான தாங்குதிறன், இணையத்துக்கு வெளியேயான செயற்பாடுகளை ஒப்பிடும் போது இங்கு முன்வைக்கப்படும் செயற்றிட்டங்கள் மலைப்பைத் தருவன என்றே நானும் உணர்கிறேன். அதே வேளை, தமிழ்நாடு முழுவதும் சென்றடைவதற்கான, கொள்கை அளவில் தமிழ்விக்கிப்பீடியாவுக்குத் தேவையான விசயங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அரிதாக கிடைப்பனவே. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எந்த அளவுக்கு நம்மால் செயற்பட முடிகிறது என்று பார்ப்போம். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது மலைக்க வைக்கும் விசயங்கள், தனித்தனியாகப் பார்க்கும் போது சற்றே மேம்பட்ட தெளிவையும் நம்பிக்கையையும் தரவல்லன. எனவே, அத்தகைய அணுகுமுறையையே மேற்கொள்ள விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  செயற்றிட்டங்களுக்கான பரப்புரைப் பெயர்[தொகு]

  பின்வரும் பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் சேர்த்து பரப்புரை நோக்கில் ஒரு பெயர் வைக்கலாம் என்ற ஆலமரத்தடி உரையாடல் தொடர்பாக என் கருத்தை முன்வைக்கிறேன். இலக்கு ஓர் இலக்கம், இலட்சம் பதிவுகள் இலட்சியம் போன்ற எண்ணிக்கை சார் தலைப்புகளில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், தமிழ் விக்கிப்பீடியா ஒரு போதும் எண்ணிக்கையை முன்வைத்து இலக்குகளை வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 100 பங்களிப்பாளர்கள், விக்கிமாரத்தான் நிகழ்வு என்று சில இலக்குகள் என்று தான் வைப்போமே தவிர நீண்ட நாள் நோக்கில் கட்டுரை எண்ணிக்கையை மட்டும் ஒரு போதும் இலக்காக கொள்வதில்லை. இவ்வாறு இலக்குகள் கொண்ட பல்வேறு விக்கிப்பீடியாக்கள் எண்ணிக்கையைத் துரத்தி தரத்தைக் கோட்டை விட்டு விட்டன. எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலும், உளவியல் நோக்கில் எண்ணிக்கை தொடர்பாகவே நம் சாய்வு இருக்கும். நாம் பல்வேறு செயற்றிட்டங்களைத் திறம்பட முன்னெடுப்போம். அவற்றின் விளைவாக இலட்சம் வந்தாலும் சரி. அதற்கு மேலும் வந்தாலும் சரி :) ஆனால், இதற்குக் கால வரையறை தருவது கடினம். நம்மோடு இணைந்து பங்காற்றும் கூட்டாளிகளுக்கு இத்தகைய பல்வேறு எண்ணிக்கை சார் முன்னேற்ற அலகுகள் அவசியம் என்றாலும் அதனை விக்கிப்பீடியர்களின் உள்ளார்ந்த உந்துதலாக முன்னிறுத்துவது சரியில்லை. மாறாக, பொதுவான, பொதுமக்களிடம் ஊக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தலைப்புகளை முன்னிறுத்தலாம். ஒளிர் தமிழ் என்பது என் பரிந்துரை. இது போன்ற பொதுவான பல பெயர்களையும் முன்மொழிந்து முடிவு செய்யலாம். இப்பெயரானது எண்ணிக்கை, விக்கியை முன்னிறுத்தாது பொது மக்களிடம் உள்ளார்ந்து உள்ள தமிழார்வத்தைக் கிளறச் செய்யும் தலைப்பாக இருத்தல் நலம். --இரவி (பேச்சு) 06:45, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  பல்வேறு ஆக்கங்களைக் கட்டற்ற உரிமங்களில் பெறுதல்[தொகு]

  இதுவரை உரையாடலில் பலரும் சுட்டியுள்ள பல்வேறு ஆக்கங்களைக் கட்டற்ற உரிமங்களில் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பாக விக்கிமீடியா அறக்கட்டளை, கிரியேட்டிவ் காமன்சு, இந்திய பதிப்புரிமைச் சட்டத்தில் தேர்ச்சி உடையோரின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. இவ்வாறு ஆக்கங்களைப் பெற்ற பிறகு அவற்றை எப்படி எண்மியப்படுத்துவது என்பதை அடுத்த கட்டமாக உரையாட வேண்டும். இது தொடர்பான இற்றைகளை இங்கு பதிகிறேன். --இரவி (பேச்சு) 05:51, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  குறிப்பாக எந்த ஆக்கங்கள், எந்த ஆக்கங்களுக்கு முன்னுரிமை தருவது என்று பார்க்க வேண்டும். உள்ளடக்கங்களை விக்கியாக்கம் (விக்கிப்பீடியா, விக்கி மூலம், விக்சனரி, விக்கிப் பொதுவகம்) கவனம் செலுத்துவது மூலம் நாம் வீச்சை அதிகரிக்கலாம். இலகுவாக விக்கியாக்கம், மேற்கோள் காட்டும் வண்ணம் கருவிகள்/வழிகாட்டிகள் உருவாக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 13:40, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]
  கட்டற்ற உரிமத்தில் அறிவிக்கச் செய்வது பெரும்பாலும் குறிப்பிட்ட அலுவலர்கள், நிறுவனத்தலைமைகள் எந்த அளவு கட்டற்ற பண்பாட்டைப் புரிந்து கொண்டு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதைப் பொருத்தது. ஆனால், இவ்வாறு அறிவித்த பிறகு எவற்றை எண்மியமாக்குவது, விக்கித்திட்டங்களில் ஏற்றும் வகையில் உரை வடிவுக்கு மாற்றுவது என்பதற்கு நிச்சயம் முன்னுரிமை அளிக்கலாம். திட்டம் அக்கட்டத்தை எட்டும் போது, கூடுதல் விவரங்களை விக்கிப்பீடியாவில் முன்வைத்து முன்னுரிமையை முடிவு செய்யலாம்.--இரவி (பேச்சு) 07:34, 14 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  விக்கிமீடியா திட்டங்கள், கட்டற்ற மென்பொருள் தொடர்பான பயிற்சி வளங்கள் உருவாக்கம்[தொகு]

  நம்முடைய பல்வேறு செயற்பாடுகளுக்கும் பயிற்சியே அடிப்படையாக இருப்பதால், இது தொடர்பாக கையேடுகள், நிகழ்பட உதவிக் குறிப்புகள் என்று பல்வேறு பயிற்சி வளங்களைத் தொழில்நேர்த்தியுடன் உருவாக்க வேண்டியுள்ளது. இவற்றை உருவாக்குவதற்கான பட்டறைக்கான உத்தேச தேதிகளாக ஆகத்து 22, 23 அமையும். இப்பட்டறை சென்னை த. இ. க. வளாகத்தில் அமைவது அவர்களின் படப்பிடிப்புத் தளம் உட்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். இப்பட்டறையில் கலந்து கொண்டு பங்களிக்குமாறு அனைவரையும் வேண்டுகிறேன். கருத்துகளையும் பங்களிக்க விரும்புவோர் விவரங்களையும் கீழே பதிய வேண்டுகிறேன். சென்னைக்கு வெளியே இருந்து வந்து செல்வதற்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவு வசதிகள் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். --இரவி (பேச்சு) 05:51, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  ஏற்கனவே பல முயற்சிகள் உள்ளன. இவற்றை பூரணப்படுத்தும் வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் சிறப்பு. --Natkeeran (பேச்சு) 13:45, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]
  ஆகத்து 22, 23 அன்று சென்னையில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் இப்பட்டறை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இயன்றோர் கலந்து கொள்ள வேண்டுகிறேன். பொதுமக்கள் பார்வையில் இருந்து தமிழ் விக்கிப்பீடியா நோக்கிய கேள்விகள் என்ன, அவர்களுக்கு இலகுவாகவும் ஆர்வமூட்டும் வகையிலும் எப்படிப் பயிற்சி வளங்களை உருவாக்குவது என்ற அலசலுடன் தொடங்கி, அதன் அடிப்படையில் சில பயிற்சி வளங்களை உருவாக்க வேண்டும். இதனைச் செய்ய வரைகலை, தெளிவான பேச்சு, இத்தகைய பயிற்சி வளங்களை உருவாக்குவதில் அனுபவம், கற்பித்தல் அனுபவம் உள்ளோர் தேவை. விக்கிப்பீடியர்கள், கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் போக, தொழில்முறைச் சேவையாக இதில் சில திறன்களைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்றும் பார்க்கிறோம். எப்படியாயினும், இது இரு நாளில் முடிகிற வேலையாகத் தெரியவில்லை :) ஆனால், அதற்கான தொடக்கமாக அமையும். விவரங்களை இங்கு இற்றைப்படுத்துகிறோம். --இரவி (பேச்சு) 20:08, 20 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]
  இந்நிகழ்வின் போது நடந்த உரையாடல்களை இங்கு கவனிக்கலாம். இது ஒரு தொடர் முயற்சி என்பதால் விக்கிப்பீடியா:பயிற்சி வளங்கள்/உருவாக்கம் பக்கத்தில் தொடர்ந்து இற்றைப்படுத்தி வருவோம். இவ்வார இறுதிக்குள் ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வோருக்கு அளிக்கக்கூடிய 6,7 பக்க அளவிலான விக்கிப்பீடியா பயன்பாடு, பங்களிப்பு வழிகாட்டியை PDF வடிவில் உருவாக்க எண்ணியுள்ளோம்.--இரவி (பேச்சு) 12:32, 24 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  புரிந்துணர்வு ஒப்பந்தம்[தொகு]

  மேற்கண்ட செயற்றிட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் வகையிலும் விக்கிமீடியா அறக்கட்டளை, த. இ. க. , விக்கிமீடியா இந்தியா, தமிழ் விக்கிப்பீடியர்கள் சமூகம், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை ஆகிய அனைவருக்கும் இடையில் உள்ள புரிந்துணர்வைப் பதியும் வகையிலும் ஒரு முறையான புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்குவதற்கான தேவை உள்ளது. பல்வேறு திட்டங்களுக்கான நிதி, விக்கிமீடியா அறக்கட்டளையின் வணிக முத்திரைகளை முறையான ஒப்புதல் பெற்றுப் பயன்படுத்துவது ஆகிய தேவைகளுக்கு இது அடிப்படையாக அமையும். ஆகத்து 23க்குள் இதற்கான வரைவை உருவாக்கினால், மாதத்தின் இறுதியில் நடைபெறும் த. இ. க. நிருவாகக் குழு கூட்டத்தில் இதனை முன்வைத்து ஒப்புதல் பெறலாம். இதற்கான வரைவைத் தமிழ் விக்கிப்பீடியர்கள் சமூக ஒப்புதலுக்காக விரைவில் முன்வைக்கிறேன். அனைவரின் கருத்துகளையும் உள்வாங்கி வரைவை இறுதியாக்குவோம். --இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  பார்க்க - விக்கிப்பீடியா:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்/பு. ஒ/en. இந்த வரைவினைப் பற்றிய கருத்துகளைப் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வரைவினை இறுதி செய்த பிறகு தமிழில் மொழிபெயர்த்து இறுதி செய்வோம். அதன் பிறகு, இதற்கான முறையான சமூக ஒப்புதலைப் பெற்று தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக விக்கிச்சமூகம் முன்மொழிவோரும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஏற்பினை அளிக்க வேண்டுகிறேன். நன்றி.--Ravidreams (WMIN) (பேச்சு) 14:05, 2 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  குடிமைச் சமூக அறிஞர்கள் வழி பங்களிப்புகள்[தொகு]

  ஆழி. செந்தில்நாதன் முனைவில் பல்வேறு குடிமைச் சமூக அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முதலானோரை ஒருங்கிணைத்து அவர்களுக்கு முறையான பயிற்சிகள் அளித்து தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதக் கோர உள்ளோம். இதற்கான முதல் பயிற்சிப் பட்டறை உத்தேசமாக ஆகத்து 29, 30 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தது 30 முதல் 50 பேர் வரையில் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். தற்போதைய நிலையில் இது வழமையான விக்கிப்பீடியா பயிற்சியையே ஒரு குறிப்பிட்ட பரப்பினரைக் குவியம் கொண்டு நடத்துகிறோம் என்ற அளவில் புரிந்து கொள்ளலாம். இத்தகைய ஓரிரு பயற்சிகள் நடத்திப் பார்த்தாலே இவற்றின் விளைவுகள் என்ன, எப்படி அடுத்த கட்டச் செயற்றிட்டம் நோக்கி நகர்வது என்று புலப்படும். கருத்துகளையும் இதில் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க விருப்பமுள்ள விக்கிப்பீடியர்கள் கீழே பெயர் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். பயிற்சி அளிக்கும் விக்கிப்பீடியர்கள் சென்னைக்கு வெளியே இருந்து வந்து செல்வதற்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவு வசதிகள் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். --இரவி (பேச்சு) 05:51, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  இப்பயிற்சிப் பட்டறை வரும் 29, 30 தேதிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு குறிப்பிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்க விரும்பும் விக்கிப்பீடியர்கள் தங்கள் பெயர்களையும் பயிற்சி அளிக்க விரும்பும் தலைப்புகளையும் இங்கு பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:55, 25 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  தரவு வழி தானியங்கிக் கட்டுரையாக்கம்[தொகு]

  அரசிடம் உள்ள பல்வேறு தரவுகளைப் பெற்று அவற்றைக் கொண்டு தானியங்கிகள் மூலமாக கட்டுரைகள் ஆக்கலாமா என்று பார்க்கலாம். முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 12,000 ஊராட்சிகள் தொடர்பான தரவைப் பெற முனைந்து வருகிறோம். இத்தரவை அலசி, விக்கிப்பீடியாவுக்குத் தேவையற்றவற்றை வடிகட்டி, மேலும் கூடுதல் தரவுகளைப் பெற வாய்ப்பிருந்தால் அவற்றையும் பெற்று தானியங்கிக் கட்டுரையாக்கம் தொடர்பான தமிழ் விக்கிப்பீடியா கொள்கைக்கு உட்பட்டு சோதனைக்கட்டுரைகளை உருவாக்கிச் சரி பார்த்து அதன் பின் தொடரலாம். இதனைச் சரியாக செய்ய முடிந்தால், அதன் மூலம் அரசிடம் உள்ள பல்வேறு தரவுகளைப் பெற முனையலாம். இத்தகைய பணிகளில் அனுபவம் உள்ள சுந்தர் இப்பணியை ஒருங்கிணைப்பார் என்று எதிர்பார்க்கிறேன் :) --இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  இது தொடர்பான மாதிரிக் கட்டுரை ஒன்றை இங்கு இட்டுள்ளேன். இத்திட்டம் தொடர்பான விவரங்களைத் தொடர்ந்து அங்கேயே உரையாடுவோம். --இரவி (பேச்சு) 12:56, 24 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  தமிழ் விரும்பும் விக்கி - ஊடகப் போட்டி[தொகு]

  2012 இல் நாம் வெற்றிகரமாகச் செயற்படுத்திய ஊடகப் போட்டியின் தொடர்ச்சியாக இதனைக் கருதலாம். இவ்வூடகப் போட்டியின் மூலம் தமிழ் புலமைக் களத்தில் உள்ள பல்வேறு பகுதியினரைச் சென்றடையலாம். குறிப்பாக, இது வரை வலையேறாத அரிதான படங்களைத் திரட்டி வலையேற்ற முனையலாம். இது தொடர்பாக அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை, ஆவணக் காப்பகங்கள், அனைத்திந்திய வானொலி முதலிய பல்வேறு காப்புகளின் சேகரிப்புகளைப் பெற முனையலாம். இது ஒரு தொடக்க நிலைப் பரிந்துரையே. இது தொடர்பான கருத்துகளையும் பங்களிக்க விரும்புவோர் விவரங்களையும் கீழே தரலாம்.--இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  கணித்தமிழ் பேரவைகளுக்கான விக்கிப்பீடியா பயிற்சி[தொகு]

  தமிழகத்தில் குறைந்தது 100 முன்னணிக் கல்லூரிகளில் கணித்தமிழ் பேரவைகளைத் தொடங்க அரசு முனைந்து வருகிறது. இவற்றை 5 மண்டலங்களாகப் பிரித்து, ஒரு மண்டலத்துக்கு இரண்டு நாட்கள் ஒதுக்கி அங்கு கூடும் கணித்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர்களுக்கு விக்கிப்பீடியா தொடர்பான பயிற்சிகள் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ் விக்கிப்பீடியர்களும் தத்தம் பகுதிகளில் இவற்றில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். முதல் கணித்தமிழ் பேரவை செப்தம்பர் 5, 6 தேதிகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்க இருக்கிறது. குறிப்பு: இவை த. இ. க. தாமாக முன்னெடுக்கும் திட்டங்கள். இவற்றில் கலந்து கொண்டு தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பயிற்சியையும் அறிமுகத்தையும் வழங்குவதற்கான வாய்ப்பே வழங்கப்படுகிறது. மற்ற அனைத்து ஒருங்கிணைப்புகளையும் த. இ. க. மேற்கொள்ளும். --இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  இப்பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொள்ள விரும்புகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:59, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]
  பரந்த விக்கி கணித் தமிழ் தேவைகளை நாம் செயற்திட்டங்களாக வரைய வேண்டும். பார்க்க: விக்கிப்பீடியா:நுட்பத் தேவைகள் --Natkeeran (பேச்சு) 13:44, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]
  மதுரை மண்டலத்தில் உள்ள 30+ கல்லூரிகளுக்கான கணித்தமிழ் பேரவைகள் தொடக்க விழாவும், இக்கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பல்வேறு பயிற்சிகள் வழங்கும் முகாமும் எதிர்வரும் செப்தம்பர் 5, 6 தேதிகளில் மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள அனைத்து தமிழ் விக்கிப்பீடியர்களையும் வரவேற்கிறோம். இதற்குக் கிளம்பி வந்தால் அப்படியே மதுரை புத்தகக் காட்சியில் உள்ள தமிழ் விக்கிப்பீடியா கடையிலும் பங்கேற்று உதவலாம். இரு நாட்களும் கலந்து கொள்ள விரும்பும் பங்களிப்பாளர்களுக்கான போக்குவரத்து, உணவு, தங்கும் செலவுகள் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். நன்றி.--இரவி (பேச்சு) 10:30, 1 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  மேலே குறிப்பிட்டதுபோல், இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புகிறேன். ஏற்கனவே பிற நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளதால், பிற பயனர்களுக்கு வரும் வாய்ப்பு தடைபெறுமோ என்ற அச்சமும் உள்ளது. பயனர் எண்ணிக்கை பொருட்டல்ல என்றால் நிச்சயம் கலந்துகொள்கிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:54, 1 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  தினேஷ்குமார் பொன்னுசாமி, பயனர் எண்ணிக்கை பொருட்டன்று. கடந்த நிகழ்வுகள் அனைத்திலும் போதிய பயிற்றுநர்கள் இல்லாத குறையையே உணர்ந்திருக்கிறோம். கட்டாயம் கலந்து கொள்ளுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 14:46, 1 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  👍 விருப்பம். கண்டிப்பாக கலந்துகொள்கிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:54, 1 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  @ இரவி, தினேசு... பயிற்சிக்கான கையேடு தயாரிக்கும் பணியை செப்டம்பர் 5, 6 தேதிகளில் வீட்டிலிருந்து செய்யத் திட்டமிட்டுள்ளேன்; அடுத்த நிகழ்வில் கலந்துகொள்ள முயற்சி செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:47, 2 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  நானும் மதுரை நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 10:52, 4 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  அக்டோபர் 15, 2015 அன்று சேலம் பெரியார் பல்கலையில் கணித்தமிழ் பேரவையைத் தொடங்கினார்கள். இதில் பல்கலையின் கீழ் வரும் 90+ கலை அறிவியல் கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் என்று ஏறத்தாழ 500 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 45 நிமிட நேர அளவில் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தினோம். தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க வேண்டிய தேவையை அனைவரும் வலியுறுத்திப் பேசினார்கள். தமிழ்ப்பரிதி, தகவல் உழவன், நீச்சல்காரன், மணியன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். --இரவி (பேச்சு) 10:54, 19 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் சென்னையில் கணித்தமிழ்ப் பேரவைகள் தொக்க விழாக்கள் நடக்க இருக்கின்றன. இதில் கலந்து கொள்ள அனைத்து விக்கிப்பீடியர்ளையும் அழைக்கிறோம்.

  இடம்: TAG Auditorium, அண்ணா பல்கலைக்கழகம் (தமிழ்விக்கி10 நடந்த அதே இடம்) நேரம்: காலை 10 மணி (இரண்டு நாட்களும்)

  30 அன்று அண்ணா பல்கலை உறுப்புக் கல்லூரிகளும் 31 அன்று சென்னைப் பல்கலை உறுப்புக் கல்லூரிகளும் கலந்து கொள்ளும்.

  இவ்விரு நிகழ்வுகளிலும் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பொதுவான அறிமுகமும் இடம்பெறும். எனவே, வந்திருக்கும் நூற்றுக் கணக்கான கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்களிடையே தமிழ் விக்கி பற்றிய ஐயங்களைப் போக்க நல்ல வாய்ப்பு.

  பணிகள் மிகத் துரிதமாக நடப்பதால் இறுதி நேரத்திலேயே இவ்வழைப்பை விடுக்க முடிவதற்கு வருந்துகிறேன்

  கவனிக்க: @Selvasivagurunathan m, Shanmugamp7, Rsmn, Neechalkaran, Semmal50, Sengai Podhuvan, மற்றும் Sodabottle: @பரிதிமதி, Surya Prakash.S.A., Aswn, Vatsan34, உலோ.செந்தமிழ்க்கோதை, Nandhinikandhasamy, மற்றும் தமிழ்க்குரிசில்: @Seesiva, Iramuthusamy, மற்றும் கி. கார்த்திகேயன்:

  --இரவி (பேச்சு) 16:58, 29 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  மாவட்ட அளவில் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு துறையினருக்கு விக்கிப்பீடியா பயிற்சிகள்[தொகு]

  சேலம் சோனா டெக்னாலஜியில் நடந்த தமிழ் விக்கிப்பீடியாவுக்கானபயிற்சி பட்டரை

  தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு 100 பேர் என்று ஆர்வமுள்ள ஆசிரியர்கள், பல்வேறு அரசு துறையினரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விக்கிப்பீடியா அறிமுகமும் பயிற்சியும் அளிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பு: இவை த. இ. க. தாமாக முன்னெடுக்கும் திட்டங்கள். இவற்றில் கலந்து கொண்டு தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பயிற்சியையும் அறிமுகத்தையும் வழங்குவதற்கான வாய்ப்பே வழங்கப்படுகிறது. மற்ற அனைத்து ஒருங்கிணைப்புகளையும் த. இ. க. மேற்கொள்ளும். இவ்வாறான பெருமெடுப்பிலான பரப்புரைத் திட்டங்களுக்கான அடிப்படையாகவே முதலில் பயிற்சி வளங்களை உருவாக்க வேண்டியுள்ளது.--இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  விக்கிமூலம் குறித்த பயிற்சி வளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:59, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]
  த. இ. க. முன்னெடுக்கும் இத்திட்டம் தமிழிணையம்/இணையப் பயன்பாடு பற்றிய முழுமையான பயிற்சியின் ஒருபகுதியாக விக்கிப்பீடியா பற்றிய பயிற்சியா? அல்லது தனியே முழுமையாக விக்கிப்பீடிய பற்றியா பயிற்சியா? விக்கிச் சமூகத்துக்கு புதிய பயனர்களைக் கவர்வதற்கு விக்கிப்பீடியர்களின் அதிக பங்கேற்பு முக்கியம் எனக் கருதுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:22, 14 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]
  ஆம், தமிழிணையம் / இணையப் பயன்பாடு பற்றிய முழுமையான பயிற்சியின் ஒருபகுதியாக விக்கிமீடியா திட்ட அறிமுகம் அமையும். தமிழ்த்தட்டச்சு தொடங்கி, வலைப்பதிவுகள், முகநூல், கைப்பேசிகளில் தமிழ் பயன்பாடு என்று பரவலான பல தலைப்புகளில் அறிமுகம் இருக்கும். இத்தலைப்புகளில் தேர்ச்சி உள்ளோரும் இணைந்து பயிற்சி அளிப்பார்கள். ஆனால், கணித்தமிழ் பேரவையின் தொடர் செயற்பாடுகளின் விளைவுகள் விக்கிமீடியா திட்ட பங்களிப்புகள் நோக்கிக் குவிக்கப்படும். --இரவி (பேச்சு) 07:34, 14 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  கடந்த அக்டோபர் 13, 14 தேதிகளில், சென்னையில், தகவல் மற்றும் தொடர்பாடல் நுட்பம் மூலம் கல்வி கற்பிக்க தமிழ்நாட்டு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பார்வதி, தமிழ்ப்பரிதி, தகவல் உழவன் கலந்து கொண்டு விக்கிப்பீடியா அறிமுகம் அளித்தனர். அடுத்து இவ்வாசிரியர்களின் ஒருங்கிணைப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகையை பயிற்சிகளை அளிப்பதற்காக மாநில பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு வருகிறது. --இரவி (பேச்சு) 10:51, 19 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுத்த ஆசிரியர்களுக்கு (தோராயமாக 50 பேர்) முழு நாள் விக்கிப்பீடியா பயிற்சி அளிக்கும் பணி தொடங்கியுள்ளது. நேற்றும் இன்றும் தருமபுரியிலும் திண்டுக்கல்லிலும் பார்வதி இப்பயிற்சியை வழங்கினார். ஒரு அரசுப் பள்ளி ஆசிரியையான பார்வதியே இப்பயிற்சியை வழங்குவது மற்ற ஆசிரியர்களுக்கு உந்துதலாக இருப்பதை அறிய முடிகிறது. பலரும் தாங்கள் தொடங்கிய கட்டுரைகள் உடனே கூகுளில் வருவது கண்டு வியப்புற்று மேலும் பங்களிக்க முனைவதாக அறிய முடிகிறது. இதே காரணத்துக்காவே, மணல்தொட்டியில் பயிற்சி தொடங்கினாலும் சற்று சீரான கட்டுரைகளை முதன்மை வெளிக்கு நகர்த்த வழி காட்டலாம். ஏனெனில், பயிற்சி இடத்தை விட்டு வழமையான பணிகளுக்குத் திரும்பும் போது மணல் தொட்டியில் இருந்து நகர்த்தும் உந்துதல் இருக்காது. ஒரு முறை நேரடியாக செய்து பார்த்தால், அந்த அனுபவம் உதவும். நாளை சேலத்தில் நடைபெறுகிறது. அடுத்தடுத்து நடக்கும் பயிற்சிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள விக்கிப்பீடியர்கள் கலந்து கொண்டு உதவ வேண்டுகிறோம். இதற்கான அட்டவணை கிடைத்ததும் பகிர்கிறோம். மேலும் விவரங்களை அளிக்க பார்வதியை வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 17:05, 29 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  புதிதாக பதிப்புரிமை மீறல் படிமங்கள் பொதுவகத்திற்குப் பதிவேற்றப்படுகின்றன. அங்கு பிற திட்டங்கள்போன்று இல்லை. ஒருசில அறிவிப்பின் பின் முடிவிலித் தடை செய்யப்படுவதால் புதிய பயனர்களுக்கு பதிப்புரிமை மீறல் பற்றி அறிவுறுத்துவது நன்று. --AntanO 02:49, 30 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  விரிவான தகவல்களை இங்கு இற்றைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். பார்வதி, கவனிக்கவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:19, 30 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  ஆசிரியர்களுக்கான இப்பயிற்சி பற்றி முன்னறிவிப்பு விக்கிப்பீடியாவில் தரப்பட்டிருக்க வேண்டும். முன்னறிவிப்பு துப்பரவு செய்வோருக்கு உதவியாக இருந்திருக்கும். பல பயனர்கள் ஒரே நேரத்தில் புகுபதிகை செய்ததை அடுத்து ஏதோ பயிற்சி நடப்பதை ஊகித்துக் கொண்டேன்.--Kanags \உரையாடுக 06:57, 30 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  வணக்கம். பயிற்சி வேலையாக இருந்ததனால் விக்கியில் இதனைப்பற்றி அறிவிக்க முடியவில்லை. முதற்கட்டமாக சேலம் தருமபுரி, திண்டுக்கல். நாகப்பட்டிணம் மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ளது. விரிவான தகவல்களை இங்கு பதிகிறேன். நவம்பர் மாதம் முழுவதும் இன்னும் ஐந்து கட்டங்களில் நடைபெற உள்ளது.உங்களில் யராவது உங்கள் மாவட்டம் அல்லது அருகருகே அமைந்துள்ள மாவட்டங்களில் பயிற்சியளிக்க விருப்பமுடையவர்கள் செய்யலாம். ஒரு பயிலரங்கிற்கு இருவர் என அதற்கான படிகளும் உணவு மற்றும் தங்குமிட வசதியும் செய்து தரப்படுகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:40, 30 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  நன்றி ஆண்டன். பதிப்புரிமை பற்றி அறிவித்தும் சிலர் கூகுள் தேடலில் கிடைக்கும் படங்களை பயிற்சிக்காகப் பயன்படுத்தினர். தடை குறித்து அவர்களை எச்சரிக்க மறந்துவிட்டேன். நினைவூட்டியமைக்கு நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:14, 30 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  @Parvathisri:, வேறோர் இடத்தில் மதனாகரன் சுட்டிக்காட்டியது: பாமினி விசைப்பலகையைப் பயன்படுத்தும்போது, ர் (u;), ரி (up), ரீ (uP) எனப் பயன்படுத்தினாலேயே மேற்கூறிய எழுத்துகள் ஒருங்குறியில் சரியாக வரும். காலின் (h) மேல் புள்ளியையோ விசிறியையோ இணைப்பதைத் தவிர்க்கும்படி பயிற்சியில் வலியுறுத்த வேண்டும். சில புதிய கட்டுரைகளில் இப்பிழைகளைக் காணக்கூடியதாகவுள்ளது.--Kanags \உரையாடுக 20:10, 26 நவம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  கட்டற்ற அறிவு முனையம்[தொகு]

  இத்தகைய பல்வேறு செயற்பாடுகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் அடிப்படையை வலுப்படுத்தவும் த. இ. க. வில் கட்டற்ற அறிவு முனையம் ஒன்று தொடங்கப் பரிந்துரைத்துள்ளோம். இது முறையான அமைப்போ நிறுவனமோ அன்று. த. இ. க. உள்ளிருந்து செயற்படும் ஒரு செயற்றிட்ட ஏற்பாடாக நோக்கலாம். இம்முனையம் கட்டற்ற பண்பாடு, ஆக்கம், மென்பொருள் குறித்தான சட்ட ஆவணங்கள், நூல்கள், பரப்புரை வளங்கள் ஆகியவற்றை உருவாக்க முனையும். த. இ. க. உள்கட்டமைப்பு வளங்களைப் பயன்படுத்திச் சென்னையில் ஒவ்வொரு மாதமும் ஒரு பரப்புரைக் கூட்டம் நடத்தலாம். இதற்குச் சென்னையில் உள்ள கல்லூரிகள், அரசுத் துறைகளை அழைக்கலாம். இத்திட்டத்தில் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் பங்கு பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது.--இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  கட்டற்ற அறிவில் அரசு பங்கு அளிக்கலாம். ஆனால் எந்தளவு தலைத்துவம் வகிக்கலாம் என்பது சந்தேகமே. தணிக்கை தொடர்பாக நாம் எந்தவித விட்டுக் கொடுப்பலையும் செய்தல் கூடாது. தமிழ்நாடு/இந்திய அரசுகள் நூல்கள், திரைப்படங்கள், வலைத்தளங்கள் பலவற்றை தடை செய்துள்ளன. -- Natkeeran (பேச்சு) 13:47, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]
  Natkeeran, அரசு எதையும் தணிக்கை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஏற்கனவே பல வழிகள் உள்ளன :) நம்முடைய கூட்டு முயற்சியைப் பொருத்தவரை, தமிழ் விக்கித்திட்டங்களின் பயன்பாடும் தரமும் பெருக வேண்டும் என்பதைத் தவிர அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. இந்த இலக்கை எப்படி அடைவதில் என்பதில் மாறுபட்ட அணுகுமுறைகள் இருக்கலாம். அவ்வணுகுமுறைகளை நம்முடைய அனுபவத்தை முன்வைத்து செம்மைப்படுத்தவும் செய்யலாம். நாம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக விக்கிமுறைமைகளைப் பற்றி உள்வாங்கியுள்ளனர். அவற்றுக்கு உட்பட்டு விக்கித்திட்டங்களை வளர்க்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இதை விளக்கி உணர்வது கடினம். ஆனால், நேரடியாக சென்னை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் இதை உணர முடியும். இந்த நம்பிக்கை இருப்பதாலேயே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறோம். --இரவி (பேச்சு) 07:34, 14 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  கல்வியில் விக்கிப்பீடியா[தொகு]

  மேற்கண்ட பல்வேறு முயற்களின் ஊடாக சரியான முனைப்பு காட்டும் கல்லூரிகள், பள்ளிகளில் கல்வியில் விக்கிப்பீடியா திட்டத்தை முயன்று பார்க்கலாம். குறிப்பாக, நமக்கு கட்டற்ற உரிமங்களில் கிடைக்கும் ஆக்கங்களை உரை வடிவுக்கு மாற்றும் தட்டச்சுப் பணியில் இவை பெரும் பங்காற்ற முடியும். இவ்வாறான முயற்சிகள் கேரளத்தில் வெற்றிகரமாக பின்பற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுக்கு, கிறித்து பல்கலைக்கழக மாணவர்கள் பங்கு கொள்ளும் கல்வியில் விக்கிப்பீடியா திட்டத்தை இங்கு காணலாம்.--இரவி (பேச்சு) 06:31, 13 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்[தொகு]

  ஆண்டு முழுதும் தமிழகம் முழுக்க நடைபெறும் பல்வேறு புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் விக்கிப்பீடியா தர வாய்ப்பு உள்ளது. முதல் முயற்சியாக செப்தம்பர் மாதம் மதுரையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் அறிமுகப்படுத்த முனைந்து வருகிறோம். இதில் கலந்து கொண்டு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் தர விரும்புவோர் கீழே பெயர் பதிய வேண்டுகிறேன். 10 நாட்கள் நடக்கும் நிகழ்வில் தங்களால் இயன்ற நாட்கள் கலந்து கொள்ளலாம். குறைந்தது இரண்டு நாட்களாவது பங்களிக்க விரும்புபவர்களுக்கு தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்து வந்து செல்வதற்கான போக்குவரத்துச் செலவு, தங்குமிட வசமி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய முனைவோம். நன்றி. --இரவி (பேச்சு) 11:46, 25 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  அந்த 10 நாட்களில் வரும் சனி, ஞாயிறு நாட்களில் என்னால் கலந்துகொள்ள இயலும். கண்காட்சி நடக்கும் சரியான தேதிகள் தெரிந்தால், திட்டமிட ஏதுவாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:20, 25 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]
  மதுரையில் ஆகஸ்ட் 28 முதல் தொடங்குகிறது. தலா இரண்டு சனி, ஞாயிறு வந்து செல்கிறது. --நீச்சல்காரன் (பேச்சு) 00:43, 26 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]
  நாளை முதல் மூன்று நாட்கள் நான் பங்குபெற விரும்புகிறேன். மேலதிக தகவலை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:10, 27 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  மதுரை புத்தகக் காட்சியில் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு என்று ஒரு கடை உறுதியாகியுள்ளது. நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கும் நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியர்களின் தொடர் பங்களிப்பு தேவை. ஒவ்வொரு நாளும் ஒரு விக்கிப்பீடியராவது கடையில் இருந்தால் கூடுதல் உதவிக்கு சிலர் வரலாம். தற்போது பல்வேறு நாள்களில் பொறுப்பெடுத்துப் பார்க்க தினேசு, பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, பயனர்:Srithern, பயனர்:எஸ்ஸார் முன்வந்துள்ளார். நாளை களத்துக்குச் சென்று பார்த்தால் தான் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, வரும் கூட்டத்துக்கு ஏற்றவாறு என்னென்ன விசயங்களை முன்வைக்கலாம் என்று புரியவரும். --இரவி (பேச்சு) 15:53, 28 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  நிகழ்வு குறித்த தகவல்களை இங்கு தொடர்ந்து ஆவணப்படுத்துவோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:35, 29 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

  நல்கை வேண்டல்[தொகு]

  இக்கூட்டு முயற்சியினை தொடர, தனியொரு நல்கை வேண்டலை முன் வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. எளிய ஓராண்டுத் திட்ட நல்கையின் மூலம் உதவ விக்கிமீடியா அறக்கட்டளையினர் இசைவு அளித்துள்ளனர். இதற்கென தமிழ் விக்கிப்பீடியர்கள் தனியொரு பயனர் குழுவாக விண்ணப்பித்து ஏற்பு பெறுவது உதவியாக இருக்கும். இத்தேவையை விரிவாக எடுத்துரைத்து, மேற்கொண்டு நகர, ஒரு கூகுள் சந்திப்பு உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். அக்டோபர் 20, 2015 இந்திய நேரப்படி இரவு 9 மணி ஒத்து வருமா? bit.ly/tawiki-hangout என்ற முகவரியில் கூடலாம்.

  கவனிக்க: @AntanO, சஞ்சீவி சிவகுமார், Balurbala, Commons sibi, Mayooranathan, Sundar, மற்றும் Natkeeran:--இரவி (பேச்சு) 11:11, 19 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  அமீரகத்தில் 7.30. பெரும்பாலும் இந்த நேரம் வீட்டுக்கு வந்துவிடுவேன். எனக்குப் பிரச்சினை இல்லை. --மயூரநாதன் (பேச்சு) 12:27, 19 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  நன்றி, மயூரநாதன். காலம் கருதி, கூகுள் சந்திப்பை உறுதி செய்கிறேன். அக்டோபர் 20, 2015 இந்திய நேரப்படி இரவு 9 மணிக்குச் சந்திப்போம். வழமை போல் உரையாடல் குறிப்புகளை இங்கு இடுவோம். --இரவி (பேச்சு) 16:33, 19 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  நானும் கலந்துகொள்வேன். -- சுந்தர் \பேச்சு 05:28, 20 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  மேற்குறிப்பிட்ட உரையாடலில் மயூரநாதன் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது என்பதால் அலுவல்முறையில் குறிப்புகள் எடுக்கவில்லை. பொதுவாக, கூட்டு முயற்சியின் முன்னேற்றம் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டேன். --இரவி (பேச்சு) 11:17, 30 நவம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  தொண்டு[தொகு]

  • இளைஞர்கள் எழுச்சி பெற்றுள்ளனர்
  • வல்லவர்கள் தொண்டாற்ற முன்வருகின்றனர்
  • பயனர் எண்ணிக்கை மிகுந்துள்ளது
  • பங்களிப்பு போதிய அளவு பெருகவில்லை
  • நுழைவோருக்குத் தனித்தனி வழிகாட்டுதல்கள் வேண்டும்
  • அவரது கட்டுரையில் நுழைந்து வழிகாட்ட வேண்டும்
  • பொது வழிகாட்டு வார்ப்புருக்களை இடுவதைத் தவிர்க்க வேண்டும்
  • நுழைபவர்களுக்கு ஊக்கம் தரப்படாவிட்டால் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை
  • ஊக்கம் என்பது கட்டுரைகளையும், திருத்தங்களையும் எவ்வகையிலேனும் இடம்பெறச்செய்தல். முடிந்தவரை வல்லுநர்கள் திருத்திப் புகுந்தவர் கட்டுரைக்கு உயிர் தருதல்.
  • முயலும் வல்லவர்களை வாழ்த்துகிறேன்
  • அடியேன் அகவையை அறிவீர்கள் --Sengai Podhuvan (பேச்சு) 05:13, 30 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]
  Sengai Podhuvan, நிச்சயம் உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டு செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 13:07, 12 நவம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  விக்கிப் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவதற்கான ஆதரவு[தொகு]

  ஆவணப்படுத்தலுக்காக, கீழ்க்காணும் குறிப்பினை இடுகிறேன்.

  விக்கிப்பீடியா பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்குத் தேவையின் அடிப்படையில் முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ மாற்றுப் பணி ஒப்புதல் பெற்றுத் தர த. இ. க. உதவி வருகிறது.

  எடுத்துக்காட்டுக்கு,

  • ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சிகளை ஒருங்கிணைப்பதற்காக பார்வதிக்கு ஒரு முழு மாதம் மாற்றுப் பணி உத்தரவு வழங்கி உதவினார்கள்.
  • மதுரை புத்தகக் காட்சியில் விக்கிப்பீடியா அரங்கினை நடத்துவதற்காக சசிக்குமாருக்கு ஏறத்தாழ 10 நாட்கள் மாற்றுப் பணி உத்தரவு வழங்கி உதவினார்கள்.
  • அக்டோபர் மாதம் முதல் கி. மூர்த்தி தமிழ் இணையக் கல்விக்ழகத்தில் முழுநேரமாக மாற்றுப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு நாளும் வேலூரில் இருந்து சென்னை சென்று திரும்பி வருகிறார். அலுவல் பணியில் கிடைக்கும் நேரத்தில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொள்வது, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவது போக, த. இ. க. வின் இதர நிருவாகப் பணிகளிலும் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். இதன் காரணமாகவே, அவருடைய கட்டுரைகள் பலவும் விக்கிப்பீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சி பகுப்பின் கீழ் இடப்பட்டு வருகின்றன. இதைப் போலவே, த. இ. க. வின் அண்மைய பல முன்னெடுப்புகள் தொடர்பாக, தமிழ்நாடு முழுக்க தமிழார்வத்துடன் செயற்படக்கூடிய பல்வேறு துறையினரை இனங்கண்டு த. இ. க. வில் மாற்றுப் பணியில் அமர்த்தியுள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக இதனையும் கருதலாம். எனினும், தன்னுடைய உடல்நிலை காரணமாக இந்த மாற்றுப்பணியில் இருந்து விடுபட்டு தன்னுடைய வழமையான அரசுப் பணிக்கே திரும்பக்கூடிய சூழலும் உண்டு.--இரவி (பேச்சு) 11:26, 30 நவம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

  இற்றை: தனது உடல்நிலை காரணமாக இம்மாற்றுப் பணிப் பொறுப்பில் இருந்து விலகி மீண்டும் வேலூரில் இருந்து தனது வழமையான அரசு அலுவல் பணியைக் கவனித்து வருவதாக கி. மூர்த்தி தெரிவித்திருக்கிறார். --இரவி (பேச்சு) 12:16, 8 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]