உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Sundar

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழைய உரையாடல்களின் தொகுப்பு[தொகு]

/தொகுப்பு01 /தொகுப்பு02 /தொகுப்பு03 /தொகுப்பு04 /தொகுப்பு05

புதிய செய்திகளைத் தெரிவிக்க இங்கே அழுத்தவும்.

முதற்பக்கக் கட்டுரை[தொகு]நன்றி. இக்கட்டுரையை நான் தொடங்கியிருந்தாலும் பலர் இணைந்து செயல்பட்டதாலேயே இவ்வளவு வளர்ந்துள்ளது. -- சுந்தர் \பேச்சு 06:33, 10 செப்டம்பர் 2013 (UTC)

உ.தெ. அறிவிப்பு[தொகு]


நன்றி. :) -- சுந்தர் \பேச்சு 13:39, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]நன்றி. :) -- சுந்தர் \பேச்சு 16:59, 22 சூன் 2011 (UTC)[பதிலளி]
சிறப்பு வாழ்த்துகள் சுந்தர். EKSI.
நன்றி தென்காசி சுப்பிரமணியன். -- சுந்தர் \பேச்சு 12:20, 22 பெப்ரவரி 2012 (UTC)
ஒன்பது ஆண்டுகள் நிறைவு[தொகு]

நான் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து இன்றுடன் ஒன்பது ஆண்டுகாலம் நிறைவடைகிறது (ஆங்கில விக்கியில் ஒன்பதேகால் ஆண்டுகள்). இந்தக் காலகட்டத்தில் என் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட தமிழ் விக்கிப்பீடியாவின் அருமையான வளர்ச்சியினைக் கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். நான் இணையும்போது 600 கட்டுரைகள் இருந்தன, இன்று 55,000 கட்டுரைகளை நெருங்கியுள்ளோம். அப்போது மயூரநாதன் மட்டும் தனியாகப் போராடிக் கொண்டிருந்தார், இன்று 300 பேருக்கும் மேலாக அக்கறையுடன் தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்து வருகிறோம். நான் பெரிதும் விரும்பும் பல்வகைமையை நம் முதற்பக்கத்திலேயே இன்று காண முடிகிறது. இது இன்னும் பல மடங்கு பெருகிட வேண்டும். இதைவிடவும் தரமான கலைக்களஞ்சியமாக நாம் வளர்வோம் என்பதில் ஐயமில்லை. தமிழ்மொழியின் நெடிய வரலாற்றில் தமிழ்விக்கிப்பீடியாவுக்குத் தலையான இடமுண்டு. தனிப்பட்ட அளவில் என்னால் பெரிய அளவில் பங்காற்றவியலாவிட்டாலும் இந்த வளர்ச்சியில் என்னாலான ஆக்கத்தை நல்கிட விரும்புகிறேன். கூட்டுழைப்பைப் பற்றி நான் அறிந்து கொண்டதனைத்தும் இங்கேதான். இதன்வழியாக என் வாழ்க்கை நோக்கே செம்மையடைந்துள்ளதாக உணர்கிறேன். -- சுந்தர் \பேச்சு 04:57, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]


தங்களுக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்! தமிழ் விக்கிப்பீடியா குமுகாயத்தின் நன்றிகளும் உரித்தாகுகின்றன! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:16, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]

எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்! --Anton (பேச்சு) 05:21, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]
பாராட்டுகளும், வாழ்த்துகளும் சுந்தர். --192.248.66.5 06:58, 19 சூலை 2013 (UTC)--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:59, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள்--Nan (பேச்சு) 07:20, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்களுக்கு நன்றி செல்வகுருநாதன், அன்றன், சஞ்சீவி சிவகுமார், நந்தகுமார். -- சுந்தர் \பேச்சு 08:25, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]

என் இனிய நல்வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 08:28, 19 சூலை 2013 (UTC) 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:35, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் வாழ்த்துகள் சுந்தர்! நானும் என் ஒன்பதாவது ஆண்டு நிறைவு வரும் போது இது போன்ற செய்தி ஒன்றை இடுவேன். :0 அப்போது நாம் பல மடங்கு தரத்தில் உயர்ந்து நின்று, நிறைய வளர்ச்சிகள் அடைந்திருப்போம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:57, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி, தேனி. மு. சுப்பிரமணி, பார்வதி, தமிழ்க்குரிசில். கட்டாயமாக நடக்கும் தமிழ்க்குரிசில். -- சுந்தர் \பேச்சு 14:51, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள், சுந்தர். இங்கு நானும் கற்றுக் கொண்டது ஏராளம். தொடர்க உங்கள் பயணம்! --சிவக்குமார் \பேச்சு 20:51, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]
இந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் எத்தனை பேர் முனைப்புடன் வந்து சோர்ந்து விலகியிருக்கிறார்கள் என்பதலிருந்தே உங்கள் குறிக்கோள் தழுவிய நோக்கும் விடாமுயற்சியும் தெளிவாகின்றன. செல்வமீட்டலையே நோக்காகவும் பெருமையாகவும் கருதும் தற்காலக் குமுகத்தில் தன்னார்வலப் பணி ஒன்றில் ஒன்பதாண்டுகள் நிலைத்துச் செயல்படுவது போற்றுதற்குரியது. வாழ்க நும் பணி !! வளர்க நும் திறத்தோர் !!--மணியன் (பேச்சு) 04:05, 20 சூலை 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி சிவா, மணியன். :) -- சுந்தர் \பேச்சு 08:53, 20 சூலை 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவின் வயதும் மயூரநாதனின் பங்களிப்புக் காலமும் 10. அதில் இருந்து ஒன்று கழித்தால் உங்கள் பங்களிப்புக் காலம் என்று நினைவில் இருந்தாலும் இந்தப் பேச்சுப் பக்கச் செய்தியை இப்பொழுது தான் பார்க்கிறேன். வாழ்த்துகள், சுந்தர். உங்கள் பங்களிப்பு குறைந்தாலும் வீட்டுக்கு ஒருவரை அனுப்பி வைக்கும் திட்டத்தின் மூலம் பலராமனையோ முகிலையோ அனுப்பி வைக்க வேண்டுகிறேன் :) --இரவி (பேச்சு) 19:33, 2 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி இரவி. சொன்னால்தான் வாழ்த்தா? :) முகிலன் பங்களிக்க இன்னும் சில ஆண்டுகாலமாகும் பலராமனை வேண்டுமானால் அனுப்பலாம். ஆனால், அதுக்குள்ள எனக்கு முடிவு கட்டிடாதீங்க. ;) -- சுந்தர் \பேச்சு 16:41, 3 செப்டம்பர் 2013 (UTC)

நிரல்கள் - பாகம் 2[தொகு]

வணக்கம் சுந்தர்! ஏற்கனவே, இது குறித்த உரையாடல் தங்களின் முந்தைய தொகுப்பில் உள்ளது. தாங்கள் கூறியவற்றையும் கண்டேன். நானே ஒரு மென்மம் எழுத விரும்புகிறேன். அது word prediction க்கானது. ஒரு எழுத்தை அடித்தால் அதைத் தொடர்ந்து வரும் எழுத்துகளை (அதாவது, அகராதியில் உள்ள சொற்களை) அது காட்ட வேண்டும். இதன் மூலம், வெகு விரைவாக, என்னால் தட்டச்சிட முடியும். கிட்டத்தட்ட செல்போனில், ஆங்கிலத்தில் t9 (டிக்சனரி) மோடில் எழுதுகிறோமே, அதே தான். நான் நிரல் எழுதத் தயாராக உள்ளேன். இது குறித்து உரையாட விருப்பம். ஸ்கைப் ஐடி தாருங்களேன். மேலோட்டமாக எனது திட்டத்தை முன்வரைவாக அனுப்புகிறேன். அதை சரி பார்த்து திருத்தி தந்தால், மீண்டும் ஆழமான முன்வரைவை உருவாக்கி தருவேன். அதையும் சரி பார்த்து திருத்தித் தரவும். பின்னர், என் நிரல் வேலைகளை தொடங்குவேன். ஓராண்டு காலம் ஆனாலும் பரவாயில்லை. எனக்கு இந்தக் கருவி தேவை. உங்களின் வழிகாட்டுதல் மட்டும் தேவை. நிரலாக்கம் நான் செய்து கொள்வேன். :) விரைவான பதிலை எதிர்நோக்கி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:48, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]

தமிழ்க்குரிசில், உங்கள் திட்டத்துக்கு வாழ்த்துகள். நீங்கள் குறிப்பிட்டது போல வருஞ்சொல்லுரைத்தற் கருவி ஒன்றை எழுதலாம். உங்கள் விக்கிமடல் வழியாக என்னுடைய கைப்பு வரியை அனுப்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:54, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]
நன்றி சுந்தர்! இதை திற மூலத்தில் வெளியிடவே விருப்பம். என்ன மாதிரி செய்ய வேண்டும் என்று முன்மாதிரி நிரல், மென்மங்களை காட்டினால் இன்னும் தன்னம்பிக்கையுடன் துவங்குவேன். :) விரைவில் அனுப்புக! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:07, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]
உங்களுக்கு மடலொன்றை அனுப்பியுள்ளேன், சிபி. கிடைக்காவிட்டால் எரிதப் பகுதியில் (spam) பாருங்கள். கீழேயுள்ள திறமூலத் திட்டங்களை முன்மாதிரியாகக் கொள்ளலாம்.
என்னாலான வேறு உதவிகளைச் செய்ய அணியமாகவுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 15:48, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]
பதில் அளித்துவிட்டேன். உங்களுடைய *****becse@yahoo.com என்ற முகவரிக்கு பார்க்கவும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:05, 20 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஐயம்-2 என்பதில் # குறியீடு இடுதலில் உள்ள தேவைக்கு வழிகாட்டுக--≈ உழவன் ( கூறுக ) 01:52, 1 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைக் வேண்டுதல்[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தரவுகளின் அடிப்படையில் எழுதக்கூடிய தலைப்புகளில் ஒன்றாவது எழுதுகிறேன், நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 12:46, 13 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

ஐயம்[தொகு]

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/வடிவமைப்புப் பணிகள் பக்கத்தில் அஞ்சல் தலை மாதிரிகள் பார்க்கவும், சுந்தர். தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகள் என்பதைக் குறிக்கும் ஆங்கில வாசகம், முறை எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை தேவை. 10 years of Tamil Wikipedia, 10th year of Tamil Wikipedia, 10 year of Tamil Wikipedia 2003 - 2013, 2003 குறிக்காமல் வெறும் 2013 என்று பல்வேறு வகைகள் உள்ளன. நீங்கள் பரிந்துரைக்கும் முறையை இறுதி செய்யலாம்.--இரவி (பேச்சு) 19:36, 2 செப்டம்பர் 2013 (UTC)

ஊடக அறிக்கை[தொகு]

சுந்தர், அஞ்சல் தலை வாசகம் குறித்த உதவிக்கு நன்றி. விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/இதழாளர் சந்திப்பு/அறிக்கை எழுதுவதிலும் உங்கள் உதவி தேவைப்படுகிறது. வரும் 15ஆம் தேதித்துக்குள் எழுதி முடித்துவிட்டால் நன்றாக இருக்கும். பாலாவின் உதவியையும் கோரியுள்ளேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:03, 12 செப்டம்பர் 2013 (UTC)

சரி இரவி. என்னென்ன வரவேண்டும் எனப் புள்ளிகளைத் தந்தால் உதவியாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 10:48, 12 செப்டம்பர் 2013 (UTC)
எதிர்வரும் திங்கட்கிழமையன்று இதையும் புள்ளிவிவரக் கட்டுரையையும் எழுதலாம் என எண்ணியுள்ளேன், இரவி. -- சுந்தர் \பேச்சு 05:42, 14 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி, சுந்தர். முதலில் விக்கிப்பீடியா - தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், அடுத்து நமது வளர்ச்சியைப் பற்றிய குறிப்பு, இந்திய திட்டங்களுடன் சிறு ஒப்பீடு, பத்தாண்டு சென்னைக் கூடல் நிகழ்வு, அதற்குப் பல ஊர்கள், நாடுகளில் இருந்து விக்கிப்பீடியர் வருதல், தொடர் கட்டுரைப் போட்டி ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடலாம். மேற்கொண்டு என்ன சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று நீங்களே எழுதிவிடுங்கள் :)--இரவி (பேச்சு) 06:17, 14 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:56, 18 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரை[தொகு]

வணக்கம் சுந்தர். உங்கள் கட்டுரையின் நிலை குறித்து ஒரு இற்றை தர முடியுமா.

--Natkeeran (பேச்சு) 03:27, 22 செப்டம்பர் 2013 (UTC)

தகவல்களைச் சேர்த்துள்ளேன். எழுதத் தொடங்கவுள்ளேன். பல்வேறு தனிப்பட்ட சிக்கல்களால் காலம் தாழ்ந்துவிட்டது. :( -- சுந்தர் \பேச்சு 09:43, 22 செப்டம்பர் 2013 (UTC)

உதவி தேவை[தொகு]

விக்கிப்பீடியா பேச்சு:இந்திய விக்கிமீடியப் பிரிவுக்கான முன்மொழிவுகள் 2013/en

சுருக்கமாக. --Natkeeran (பேச்சு) 13:23, 23 செப்டம்பர் 2013 (UTC)

உதவி தேவை...[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கியில் பல ஆண்டுகளாக பங்களித்துவரும் பங்களிப்பாளர் எனும் முறையில், தங்களின் உதவி தேவைப்படுகிறது…

 • தமிழ் விக்கியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களித்த / பங்களித்துவரும் பயனர்களுக்கு 'பாராட்டுச் சான்றிதல்' வழங்கிட நாம் முடிவு செய்ததை தாங்கள் அறிவீர்கள். இதற்கான தெரிவு செய்தலில் உங்களின் உதவியினை நாடுகிறோம்.
 • 'முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகம்' எனும் காப்பகத்திலிருந்து பயனர்களின் பெயர்களை எடுத்து முதற்கட்ட பட்டியல், இங்கு இடப்பட்டுள்ளது. ஆனால் இது முழுமையடைந்த பட்டியலன்று… இந்தப் பட்டியலை நிறைவு செய்திட தங்களின் உதவி தேவைப்படுகிறது!
 • சிலர் 'முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகத்தில்' இடம்பெறவில்லை; சிலர் அதற்குரிய தகவலை இன்னும் தரவில்லை. இன்னும் பலர் கடந்த சில மாதங்களில் நல்ல பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு சான்றிதழ் பெற இருப்போரின் பட்டியலை தாங்கள் முழுமை செய்து தந்தால் உதவியாக இருக்கும். தொகுப்புகள் எண்ணிக்கை, ஒட்டு மொத்தப் பங்களிப்பு என்பது போல் ஏதேனும் ஒரு வரையறையைக் கொள்ளலாம்.
 • வேறு ஏதேனும் காரணிகள் உங்கள் எண்ணத்தில் தோன்றினால்... அதனையும் கருத்தில்கொண்டு தெரிவினை செய்யலாம்.
 • மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:32, 26 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:50, 27 செப்டம்பர் 2013 (UTC)

நீங்கள் எனக்கு விடுத்திருந்த செய்தியை இன்றுதான் பார்க்க முடிந்தது, செல்வகுருநாதன். காலம் தாழ்ந்தமைக்கு வருந்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 10:20, 30 செப்டம்பர் 2013 (UTC)

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை[தொகு]

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:33, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சுந்தர், "இந்தக்கூடலைத் திட்டமிடலுக்குப் பயன்படுத்தியிருக்கலாம்" என்ற படத்திற்கான தலைப்பு சற்று குழப்புவது போல் உள்ளது. அது கூடல் நிகழ்வு முடிந்த ஞாயிறு மாலை எடுத்த படம். வருங்கால தமிழ் விக்கிப்பீடியா திட்டமிடலுக்கு என்று தெளிவுபடுத்தினால் நலம். இல்லையென்றால், கூடலுக்கு முன்பே திட்டமிடலுக்கான வாய்ப்பு இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்ற பொருள் வருகிறது.--இரவி (பேச்சு) 17:49, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பயனர்:Sundar/தமிழ் விக்கிப்பீடியா - ஒரு புள்ளிவிபர ஆய்வு[தொகு]

பயனர்:Sundar/தமிழ் விக்கிப்பீடியா - ஒரு புள்ளிவிபர ஆய்வு

நேரம் கிடைக்கும் போது இந்த அருமையான ஒரு பதிவை பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 16:00, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டாயம் செய்கிறேன், நற்கீரன். என் ஒலாவியில் அந்தப்பக்கம் திறந்தே இருக்கிறது. :) -- சுந்தர் \பேச்சு 02:28, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பயனர் அசுவின் நிர்வாக அனுக்கம் குறித்து[தொகு]

வணக்கம் நண்பரே, விக்கிப்பீடியாவில் கடந்த எட்டு மாதங்களாகவே நான் தொடர்நிலை பங்களிப்பாளனாக உள்ளேன். அதன் காரணமாக அசுவின் உள்ளிட்ட சிலரை அறிந்திருக்க வாய்ப்பின்றி போனது. என்னுடைய கவனத்திற்கு அவருடைய பங்களிப்புகள் வராமல் இருந்தமையால் நடுநிலை வாக்கினை இட்டேன். தற்போது அசுவின் அவர்களின் நிர்வாக அனுக்கத்திற்கான கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்னுடைய நடுநிலை வாக்கு காரணமோ என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் \\ஒரு மறுப்பு வாக்காவது வந்திருப்பவர்களின் தேர்வை வேண்டுகோள்களை நீட்டிக்கிறேன்.\\ என்றே தாங்கள் வாக்குப்பதிவு நிறைவுப் பகுதியில் கூறியுள்ளீர்கள். எனவே அசுவின் நிர்வாக அனுக்கம் குறித்து மீண்டும் ஆலோசிக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:47, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றிங்க. (இம்முறை வந்த நடுநிலை வாக்குகள் அனைத்தும் என்னைப் போல அவர்களின் விக்கிப்பீடியா பங்களிப்புகள் குறித்து அறிமுகம் இல்லாமயாலேயே இடப்பட்டுள்ளன. அறியாதோரை ஆதரித்தல் வேண்டாம் என்றே நடுநிலை வாக்கினை உபயோகித்திருக்கிறோம்) உடனே வேண்டுகோளை செயல்படுத்தியமைக்கு மீண்டும் நன்றிகள் :-).--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:28, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
விளக்கத்துக்கு நன்றி செகதீசுவரன். அசுவினை வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளேன். எஞசியுள்ள மற்றவர்களின் பரிந்துரைகளும் எவ்விதத்திலும் குறைந்தவையல்ல. கால நீட்டிப்பு என்பது அவர்கள் விளக்கமளிக்கவும் மற்ற பங்களிப்பாளர்களின் கருத்துக்களை ஏற்கவும் வாய்ப்பாகச் செய்தது மட்டுமே என்றும் பொதுவாகக் கூற விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 17:30, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் (இது நிர்வாக அனுக்க நீக்கம் இல்லை காலநீட்டிப்பு என்று அறிவேன். இருப்பினும் எனது நடுநிலை வாக்கு அசுவினுக்கு எதிராக அமைந்துவிட்டதோ என்ற மன உறுத்தலே இங்கு இட்டுவந்தது. இப்பொழுது நிம்மதியா உறங்குவேன். :-) நன்றி )--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:39, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நானும் :) -- சுந்தர் \பேச்சு 18:04, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நீங்கள் குறிப்பிட்ட ஐந்து பேருக்கும் நிர்வாக அணுக்கம் ஏதுவாக்கப்பட்டுள்ளது. --Natkeeran (பேச்சு) 18:14, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தங்களின் கருத்துப் பதிவுக்கு மிக்க நன்றி...[தொகு]

அன்பு நண்பர் சுந்தர்... தங்கள் பதிவைக் கண்டேன்... மகிழ்ந்தேன். இணைந்து செயலாற்ற எவ்வளவோ இருக்கின்றன. விக்கிகூடல் இந்த முறை புதுவையில் நடந்தால் தங்களிடம் நிறையப் பகிர்ந்து கொள்ள வேண்டும்... சந்திக்க விரும்புகிறேன்.. புதுவைக்கு வாருங்கள்... அன்புடன் அருணன் கபிலன்

நன்றிங்க. புதுவையில் கூடல் நடந்தால் கட்டாயம் கலந்து கொள்ள முயல்வேன். உங்களைச் சந்தித்துப்பேச எனக்கும் ஆவல்தான். -- சுந்தர் \பேச்சு 12:45, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கருத்துக்கணிப்பு[தொகு]

இக்கருத்துக்கணிப்பு ஒரு பேச்சுப்பக்கத்தில் நடக்கின்றதே. இதனை தனியாக ஒரு விக்கிப்பீடியா பக்கத்துக்கு நகர்த்த வேண்டுமா? இது பற்றி ஆலமரத்தடியில் நிங்கள் பதிவு இட வேண்டும் அல்லவா?--செல்வா (பேச்சு) 21:06, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இதை எந்தப் பக்கத்தில் வைத்து உரையாடுவது எனத் தெரியவில்லை, செல்வா. ஏற்கனவே தொடர்புடைய இழையில் மட்டும் அவ்வாக்கெடுப்புக்கு இணைப்பு ஒன்றைத் தந்திருந்தேன். இப்போது தனியாகவும் குறிப்பிட்டு கருத்து வேண்டியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 06:34, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விளக்கப்படம் திட்டம் தொடர்பாக[தொகு]

விளக்கப்படத்திட்டத்தின் பங்களிப்பாளர் என்ற முறையில் தேவைப்படும் படங்கள் பக்கத்தினைத் தங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 07:30, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி சூரியா. நமது திட்டம் களைகட்டி முதல்கட்டப் பணி தொடங்கியுள்ளதைக் கண்டு மகிழ்ச்சி. நானும் எனக்குத் தெரிந்து தேவைப்படும் படங்களை அங்கு சேர்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:42, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அருமையான முன்னெடுப்பு. பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் தருவதற்கு படங்களைச் சேகரித்துக் கொண்டுள்ளேன் :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 07:48, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
:) -- சுந்தர் \பேச்சு 07:49, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கருத்து...[தொகு]

வணக்கம்! உங்களுடன் அவ்வளவாக உரையாடியதில்லை; பொதுவாகச் சொல்கிறேன்... உங்களின் மேலாண்மைத் திறன் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:41, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

செல்வகுருநாதன், உங்கள் பாராட்டுக்கு நன்றி. நான் பெற்ற திறனனைத்தும் பெரும்பாலும் விக்கிப்பீடியாவில் தான். அதற்கு விக்கிச்சமூகத்துக்குத்தான் நன்றிகூற வேண்டும். தமிழ் விக்கியிலும் ஆங்கில விக்கியிலும் சிறந்த சிந்தனையாளர்களுடன் கூட்டாக உழைத்ததன் பேறு. மற்றபடி எனது அண்மைய செயற்பாடுகளை மேலாண்மையாகப் பார்ப்பதைக் காட்டிலும் சிக்கல்தீர்க்கும் அணுகுமுறையாகத்தான் நான் நினைக்கிறேன். :) -- சுந்தர் \பேச்சு 03:48, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வேறுபாட்டினை நீக்க வேண்டுகோள்[தொகு]

சுந்தர், பத்தாண்டு விழா கருத்துப் பக்கத்தில் நான் இவ்வாறு எழுதி பின்னர் தொகுத்து/நீக்கி எழுதியது என் கல்வி-வாழ்க்கை நலனுக்காக. இது போன்ற பொதுவெளியில் வெளியிடக்கூடாத கருத்தாயினும் இக்கட்டான கட்டத்தில் வெளியிட்டேன். பின்னர், அதன் விளைவுகள் கருதி அதனை நீக்கினேன். ஆனால், அந்த திருத்தமும் அதனோடு தொடர்புடைய வேறுபாடும் தற்போது என் நலனுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாக அஞ்சுகிறேன். எனவே, அருள் கூர்ந்து இந்த இரு இடங்களிலும் உள்ள இந்த மாற்றத்தை வரலாற்றிலிருந்து நீக்கப் பணிக்கிறேன். மேலும், கருத்துப் பக்க வேறுபாட்டை வருங்காலத்தில் யாரும் மீட்டுருவாக்கா (reproduce) வகையில் நீக்கப் பணிக்கிறேன். என் கல்வியை நலனில் கொண்டு இதனைச் செய்ய வேண்டுகிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 08:01, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சூரியா தனிநபர் பற்றிய தகவலை வேறொருவர் நீக்கினால் முற்றாக அந்த பதிப்பே இல்லாது செய்துவிடலாம். இந்த விசயமும் அது போன்றதே. நிலையின் தீவிரத்தை முழுவதுமாக உணர்ந்துள்ளேன். ஆனாலும், நான் தன்னிச்சையாக முடிவெடுக்கவியலாது என்பதால் இப்போது அதை இடைநீக்குகிறேன். -- சுந்தர் \பேச்சு 08:09, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சுந்தர், எனக்கும் சூர்யப்பிரகாஷ் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதில் உடன்பாடில்லை. அவருடைய அவசரத்தாலும், குறுகிய மனப்பான்மையாலும் செய்யும் செயல்பாடுகளை அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் பதிவு செய்த கருத்தை வெளியிட வேண்டியதாகி விட்டது. தாங்கள் குறிப்பிட்ட செய்தியை மட்டும் மறைக்காமல், என்னுடைய கருத்தை முற்றிலுமாக மறைத்து விட்டீர்கள். தாங்கள் அவருடைய அனைத்து நலனுக்கும் பாதிப்பில்லாமல் என்னுடைய கருத்தை மீண்டும் பதிவு செய்திட வேண்டுகிறேன். அதாவது, நான் பதிவு செய்த கருத்தில் “உதாரணமாக... என்பதில் தொடங்கி இதை நான் இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்” என்பது வரையிலான செய்தியை மட்டும் மறைத்து விட்டு என்னுடைய மற்ற கருத்துக்களை மீண்டும் பதிவு செய்து விடுங்கள். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:00, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி தேனி மு. சுப்பிரமணி. எனக்கிருக்கும் அணுக்க வசதியைக் கொண்டு நீங்கள் குறிப்பிட்டபடி செய்ய முயலுகிறேன். -- சுந்தர் \பேச்சு 09:13, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
செய்துள்ளேன். இப்போது தொடர்பறுந்துபோனதால் சிறீதரனின் குறிப்பை நீக்க வேண்டுமா தெரியவில்லை. அதை அவரது முடிவுக்கே விட்டுவிடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 09:19, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சூரியாவின் கருத்தை நீக்குவதற்கு எனது ஆதரவு. அதனோடு தொடர்புள்ள எனது செய்தியையும் நீக்கலாம்.--Kanags \உரையாடுக 11:23, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி சிறீதரன். இப்போது நீக்கியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 11:29, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிருவாகிகள் தேர்வைச் சிறப்பாக செய்தமை[தொகு]

சுந்தர், மிகப்பல கடுஞ்சிக்கல்களுக்கிடையே நிருவாகிகள் தேர்வை மிகச் சிறப்பாக, ஏறத்தாழ கடைசி நிலை வரை, ஏற்று நடத்தி, தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசியில் நற்கீரன் பங்கு பற்றி நிறைவு அடைந்தது மகிழ்ச்சியைத் தருகின்றது. நன்றி!--செல்வா (பேச்சு) 18:05, 23 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா. ஓர் இக்கட்டில் நற்கீரன் வந்து பொறுப்பேற்றதற்கு அவருக்கும் நன்றி. -- சுந்தர் \பேச்சு 01:17, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வேதனை! வேதனை!![தொகு]

அன்புள்ள அய்யா! சென்னை கூடலுக்குப் பின் கருத்து மற்றும் கலந்துரையாடல் வேதனையளிக்கிறது. புதுப்பயனரான நான் (இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன்) மிகுந்த வேதனைப் படுகிறேன். தயவுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் அன்புடன் --யோகிசிவம் (பேச்சு) 02:23, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சுந்தர் தனிப்பட்ட காரணத்தினால் இன்னும் சில நாட்களுக்கு இணையப்பக்கம் வரவியலாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ---மயூரநாதன் (பேச்சு) 15:25, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தானியங்கி அணுக்கம் வேண்டல்[தொகு]

(இச்செய்தி அதிகாரி அணுக்கம் உடையவர்களுக்கு) எனது கணக்கின் பெயர் NeechalBOT. நான் விக்கித் திட்டங்களுக்குப் புதிது. தற்போதைக்கு எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள பணிகளை என் பயனர் பக்கத்தில் காணலாம். எனக்குத் தானியங்கி அணுக்கம் வேண்டி நீச்சல்காரன் இங்கு இட்டுள்ள கோரிக்கை தொடர்பாக உங்கள் கருத்தையிட உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். --NeechalBOT (பேச்சு) 07:19, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சுந்தர் தனிப்பட்ட காரணத்தினால் இன்னும் சில நாட்களுக்கு இணையப்பக்கம் வரவியலாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ---மயூரநாதன் (பேச்சு) 15:26, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:05, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விடுப்புக்கான காரணம்[தொகு]

தெங்குக் காய்ச்சலில் எனது மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் திடீரென இணையத்தில் இருந்து விலக நேர்ந்தது. அதனால் என்னால் சிக்கல் தீர்வுப் பணியைத் தொடர முடியவில்லை. இந்நிலையில் பொறுப்பெடுத்துக் கொண்ட நற்கீரனுக்கு நன்றி. இப்போதுதான் அவனது உடல்நிலை தேறிவருவதாலும், என்னுடைய பிற அலுவல்கள் தேங்கியுள்ளதாலும் என்னால் உரையாடல்களைக் கவனிக்க முடியவில்லை. இயன்றபொழுது சில உரையாடல்களைப் படித்து கருத்திடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 12:16, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நடவடிக்கை தேவை[தொகு]

(கீழ்க்காணும் குறிப்பைப் பயனர் இராசன் (Rajan s) பக்கத்தில் இட்டுள்ளேன்)

இராசன் நீங்கள் //எனக்கு ஏற்கெனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அசிங்கமான மின்னஞ்சல்கள் வந்துள்ளன. பாலியல் அசிங்கமாக (ஆண் ஆணுடன் உடலுறவு கொள்ளும்) படங்கள் தாங்கிய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. இதைச் செய்தது யார்? தேனி சுப்பிரமணியின் மின்னஞ்சல் முகவரியில் இருந்தும் வந்துள்ளன.// என்று எழுதியுள்ளீர்கள். இவை கடுமையான குற்றச்சாட்டுகள். கொலை மிரட்டல் அனுப்பியது யாராக இருந்தாலும் அவர்கள் மீது விக்கிப்பீடியா தக்க நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். விக்கிப்பீடியாவையும் தாண்டி காவல் துறையினரிடம் முறையீட்டை வைக்கவேண்டும். நீங்கள் முன் வைத்திருப்பது மிகவும் கவலைதரும் குற்றச்சாட்டு. தக்க ஆதாரங்களை விக்கிப்பீடியாவின் அதிகாரிளின் ஒருவரிடம் (மயூரநாதன், சுந்தர், இரவி, நற்கீரன்) சமர்ப்பியுங்கள். --செல்வா (பேச்சு) 18:55, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அங்கு கருத்திட்டுள்ளேன், செல்வா. -- சுந்தர் \பேச்சு 06:56, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பெயரிடல் மரபு கொள்கை மாற்றம் - கருத்து வேண்டல்[தொகு]

வணக்கம். பேச்சு:புத்தா கொலாப்சுடு அவுட் ஆஃப் சேம் (திரைப்படம்) போன்ற உரையாடல்களைத் தொடர்ந்து இங்கு வேண்டப்படும் கொள்கை மாற்றம் குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவித்தால் உதவியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 17:12, 24 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

50,000+ வரிசை[தொகு]

வணக்கம் சுந்தர்,

ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தில் 50,000+ வரிசையில் தமிழை நீங்கள் இணைத்திருந்தீர்கள் (18 December 2012). உடனே எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் 20 May 2013‎ அன்று David Levy என்பவரால் தமிழ் விக்கிபீடியா அகற்றப்பட்டுள்ளது. அதற்கு கூறப்பட்ட காரணங்கள் சரியானவையா என்பதில் குழப்பமாக உள்ளது. https://en.wikipedia.org/w/index.php?title=Template:Wikipedia_languages&action=history

David Levyயின் அணுகு முறை சரியானதா? இந்தி மொழி சேர்க்கப்படாத காரணத்தை முன்னிறுத்தி ஒரு பயனர் அங்கு இணைத்துள்ள தரவுகள் சரியானவையா (50 article test stats) என்பதை அறிய முயல்கிறேன்.

"Tamil's sole long article was tagged as a machine translation. Tamil avoided the geo stub temptation, but made up for it with tons of 1-2 lines on cricket players (in my test)."-ThaddeusB
பார்க்க: Should_Hindi_Wikipedia_be_included_on_the_mainpage?

https://en.wikipedia.org/wiki/Template_talk:Wikipedia_languages/Archive_6#

I just noticed that the Tamil Wikipedia was inserted by Sundar (a bureaucrat there), who evidently was under the impression that it automatically qualified for inclusion when it reached 50,000 articles (despite the documentation's explanation to the contrary). I've removed it from Template:Wikipedia languages. (For some reason, it wasn't added to Template:Main Page interwikis.)
According to your analysis, all of the other Wikipedias tested contain significantly more "decent articles" than the Hindi Wikipedia does. —David Levy 12:36, 20 May 2013 (UTC)
According to your analysis, all of the Wikipedias tested (excepting the Tamil Wikipedia, which I've removed) contain significantly more "decent articles" than the Hindi Wikipedia does. —David Levy 12:36, 20 May 2013 (UTC)

-நன்றி, --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 05:41, 5 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஆம் செந்தி. அவருடன் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் விட்டுவிட்டேன். இந்திமொழி விக்கிப்பீடியர்களே அதை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் விக்கிக் கட்டுரைகள் இந்தியைக் காட்டிலும் தரமானவை என உறுதிபடக் கூறமுடியும். தவிர, மே மாதத்துக்குப் பின் கட்டுரைப்போட்டியின் பயனாக பல கட்டுரைகள் மேம்பட்டுள்ளன. இப்போது அவர் பழைய சோதனையை மீண்டும் செய்தால்கூட மேம்பாடு தெரியும். -- சுந்தர் \பேச்சு 07:11, 5 சனவரி 2014 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பு[தொகு]

வணக்கம், சுந்தர். நீங்கள் அடிக்கடி தமிழ் விக்கிப்பீடியா பக்கம் வர முடிவதில்லை என்று குறிப்பிட்டிருந்ததால், நிருவாக அணுக்க நீக்கல் வாக்கெடுப்பு நடந்து வருவதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:37, 5 மார்ச் 2014 (UTC)

நன்றி இரவி. நாளை மதியம் வாக்கிடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:46, 6 மார்ச் 2014 (UTC)

ஒரு வேண்டுகோள்[தொகு]

வணக்கம் Sundar! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:47, 17 மே 2014 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி, தினேசு. இயன்றபொழுது செய்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:27, 17 மே 2014 (UTC) 👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:37, 17 மே 2014 (UTC)[பதிலளி]

10 ஆண்டுகள் பங்களிப்பு பதக்கம்[தொகு]

10 ஆண்டுகள் பங்களிப்பு பதக்கம்
சூலை 19, 2004 தொடங்கி பத்து ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருவதைப் பாராட்டி தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவர் சார்பாகவும் இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். தொடக்கம் முதலே ஆங்கில விக்கிப்பீடியா நெறிமுறைகளைத் தமிழில் நடைமுறைப்படுத்தியது, விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்களை ஏற்றியது, இந்திய விக்கிமீடியா கிளையைத் தோற்றுவித்தது என்று உங்கள் பங்களிப்புகள் பட்டியல் நீளும் :) வாழ்த்துகள் !--இரவி (பேச்சு) 09:46, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 09:53, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் மகிழ்ச்சி! வாழ்த்துகிறேன். :) :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:27, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
இரவி, இந்தப்பதக்கத்தையும் அதன்பின்னால் இருந்த எனது விக்கிவாழ்வையும் என்வாழ்நாளில்பெற்ற மிகச்சிறந்த வெகுமதியாகக் கருதுகிறேன். அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி. -- சுந்தர் \பேச்சு 10:41, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
விருப்பத்துடன் வாழ்த்துகள் சுந்தர்.--Kanags \உரையாடுக 10:57, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துகள் சுந்தர் அவர்களே.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:14, 2 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்களுக்கு நன்றி நணபர்களே. (சிரீகர்சன், விக்கி வழக்கப்படி சுந்தர் என்று மட்டும் என்னை அழையுங்கள் :)) இங்கு நான் பெற்ற அனுபவங்களையும் உடன்பழகிய அனைத்து விக்கிநண்பர்களையும் பற்றி எழுதி முடியாது. நான் பெயரையோ, நிகழ்வையோ குறிப்பிடாவிட்டாலும் உங்கள் ஒவ்வொருவரையும் நினைத்துக்கொள்கிறேன் என்றுமட்டும் கூறிக்கொள்கிறேன். இனி சற்றேனும் பங்களிக்கத்தொடங்குகிறேன். :) -- சுந்தர் \பேச்சு 05:57, 3 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் @சுந்தர் அவர்களே! ஆலோசனைக்கு நன்றி :)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:08, 3 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
திரும்பவும் அவர்களேவா? :) -- சுந்தர் \பேச்சு 06:07, 5 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் சுந்தர்.--கலை (பேச்சு) 12:03, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்வாழ்த்துக்கள் சுந்தர்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:49, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் சுந்தர். பத்து ஆண்டுகளுக்கு முன் உங்களுடைய வருகை தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல்லாக இருந்தது. உங்களுடைய தகவல் தொழில்நுட்பப் பின்னணியும், விக்கிப்பீடியா குறித்த அறிவும், ஆங்கில விக்கி அனுபவங்களும், தமிழ்மூல அறிவு வளர்ச்சியில் உங்களுக்கு இருந்த ஆர்வமும் தமிழ் விக்கியைச் சரியான பாதையில் அழைத்துச் செல்ல உதவின. இதுவரையில் தமிழ் விக்கியில் நீங்கள் ஆற்றிய பணி அளப்பரியது. தொடர்ந்தும் உங்களுடைய பணி விக்கிப்பீடியாவுக்குத் தேவை. -- மயூரநாதன் (பேச்சு) 19:07, 4 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்களுக்கு நன்றி, மயூரநாதன், பார்வதி, கலை, சிரீகர்சன், சிறீதரன், தமிழ்க்குரிசில் :) உங்கள் ஒவ்வொருவருடனும் மற்ற விக்கிநண்பர்களுடனும் தொடர்ந்து பணியாற்றுவேன். -- சுந்தர் \பேச்சு 06:07, 5 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

An important message about renaming users[தொகு]

Dear Sundar, My aplogies for writing in English. Please translate or have this translated for you if it will help. I am cross-posting this message to many places to make sure everyone who is a Wikimedia Foundation project bureaucrat receives a copy. If you are a bureaucrat on more than one wiki, you will receive this message on each wiki where you are a bureaucrat.

As you may have seen, work to perform the Wikimedia cluster-wide single-user login finalisation (SUL finalisation) is taking place. This may potentially effect your work as a local bureaucrat, so please read this message carefully.

Why is this happening? As currently stated at the global rename policy, a global account is a name linked to a single user across all Wikimedia wikis, with local accounts unified into a global collection. Previously, the only way to rename a unified user was to individually rename every local account. This was an extremely difficult and time-consuming task, both for stewards and for the users who had to initiate discussions with local bureaucrats (who perform local renames to date) on every wiki with available bureaucrats. The process took a very long time, since it's difficult to coordinate crosswiki renames among the projects and bureaucrats involved in individual projects.

The SUL finalisation will be taking place in stages, and one of the first stages will be to turn off Special:RenameUser locally. This needs to be done as soon as possible, on advice and input from Stewards and engineers for the project, so that no more accounts that are unified globally are broken by a local rename to usurp the global account name. Once this is done, the process of global name unification can begin. The date that has been chosen to turn off local renaming and shift over to entirely global renaming is 15 September 2014, or three weeks time from now. In place of local renames is a new tool, hosted on Meta, that allows for global renames on all wikis where the name is not registered will be deployed.

Your help is greatly needed during this process and going forward in the future if, as a bureaucrat, renaming users is something that you do or have an interest in participating in. The Wikimedia Stewards have set up, and are in charge of, a new community usergroup on Meta in order to share knowledge and work together on renaming accounts globally, called Global renamers. Stewards are in the process of creating documentation to help global renamers to get used to and learn more about global accounts and tools and Meta in general as well as the application format. As transparency is a valuable thing in our movement, the Stewards would like to have at least a brief public application period. If you are an experienced renamer as a local bureaucrat, the process of becoming a part of this group could take as little as 24 hours to complete. You, as a bureaucrat, should be able to apply for the global renamer right on Meta by the requests for global permissions page on 1 September, a week from now.

In the meantime please update your local page where users request renames to reflect this move to global renaming, and if there is a rename request and the user has edited more than one wiki with the name, please send them to the request page for a global rename.

Stewards greatly appreciate the trust local communities have in you and want to make this transition as easy as possible so that the two groups can start working together to ensure everyone has a unique login identity across Wikimedia projects. Completing this project will allow for long-desired universal tools like a global watchlist, global notifications and many, many more features to make work easier.

If you have any questions, comments or concerns about the SUL finalisation, read over the Help:Unified login page on Meta and leave a note on the talk page there, or on the talk page for global renamers. You can also contact me on my talk page on meta if you would like. I'm working as a bridge between Wikimedia Foundation Engineering and Product Development, Wikimedia Stewards, and you to assure that SUL finalisation goes as smoothly as possible; this is a community-driven process and I encourage you to work with the Stewards for our communities.

Thank you for your time. -- Keegan (WMF) talk 18:24, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

--This message was sent using MassMessage. Was there an error? Report it!

Thanks Keegan (WMF). I'll read the documentation and update our messaging accordingly. -- சுந்தர் \பேச்சு 03:07, 26 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

India Community Consultation 2014[தொகு]

வணக்கம், சுந்தர். நீங்கள் m:India Community Consultation 2014 நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக பரிந்துரைக்க இருக்கிறோம். நாம் பரிந்துரைக்கும் அனைவரையும் அவர்கள் அழைப்பார்களா என்று தெரியாது. ஒரு வேளை, அவர்கள் அழைத்து நம்மில் யாராவது கலந்து கொள்ள இயலாமல் போனாலும் கூட தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக சரியான முன்னிறுத்தலைச் செய்ய வேண்டும். ஏனெனில், இந்திய விக்கிச் சமூகங்கள் எப்படி முறைப்படி கூடி உரையாடி முடிவெடுக்கிறார்கள் என்பதனை ஆழம் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இதனைப் பார்க்கிறார்கள் :) எனவே, இப்பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 19:13, 8 செப்டம்பர் 2014 (UTC)

இதுதொடர்பான ஆலமரத்தடி உரையாடலை ஒருமுறை பார்த்திருந்தேன் இரவி. அதன் முக்கியத்துவத்தை உணர்கிறேன். ஆனால் இன்றுதான் தேதியைப்பார்க்கிறேன். அது வேலைநாள்களில் வருகிறது. நான் புதிதாக இணைந்துள்ள பணியில் இருநாள்கள் இப்போது விடுப்பு கிடைப்பது கடினம். தவிர முபையில் என்றால் போய்வர இன்னும் ஒருநாளோ இரு நாள்களோ ஆகக்கூடும். அதுமட்டும் தயக்கமாகவுள்ளது இரவி. -- சுந்தர் \பேச்சு 01:33, 9 செப்டம்பர் 2014 (UTC)
சரி, சுந்தர். பெங்களூரில் நிகழ்வு நடக்க கூடுதல் வாய்ப்புள்ளது என்றே கருதுகிறேன். பார்ப்போம். முன்கூட்டியே நிறைய பெயர்களைக் கொடுத்து வைப்பது நல்லது. இறுதி நேரத்தில் யாருமே கலந்து கொள்ள இயலாமல் போய் விடக்கூடாது அல்லவா? ஞாயிறு அன்று மட்டுமாவது கலந்து கொள்ள இயலுமானால் அதுவும் நன்றே. நன்றி.--இரவி (பேச்சு) 19:22, 9 செப்டம்பர் 2014 (UTC)
புரிகிறது இரவி. பெங்களூரில் என்றால் இன்னும் எளிது. அதிலும் ஞாயிறன்று கட்டாயம் கலந்துகொள்ள முயல்வேன். -- சுந்தர் \பேச்சு 03:37, 10 செப்டம்பர் 2014 (UTC) பி.கு. சில சனிக்கிழமைகளிலும் வேலைநிலவரத்தைப்பொருத்து விடுப்பு எடுத்துக்கொள்ளமுடியும்.

பெண்ணியம் வலைவாசல்[தொகு]

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:27, 27 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

நன்றி பொதுவர் சிபி. நல்ல முனைவு. பார்த்துவிட்டு கருத்து எதுவும் இருந்தால் அங்கு இடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 07:11, 29 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Sundar!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--ஆதவன் 07:39, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

சுந்தர், பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--இரவி (பேச்சு) 08:24, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள் :) இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:53, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]
கட்டாயமாக இரவி. இலக்கை இன்றே எட்ட முயல்கிறேன். அனைத்துப்பெயர்வெளித்தொகுப்புகளும் கணக்கில் வருமா? -- சுந்தர் \பேச்சு 02:37, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]
நன்றி, சுந்தர். கட்டுரை வெளியில் வரும் தொகுப்புகள் மட்டுமே விக்கிமீடியா வரையறையின் படி "100 தொகுப்புகளுக்கு மேல் செய்த மிக முனைப்பான பயனர்" கணக்கில் வரும்.--இரவி (பேச்சு) 05:36, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]
நன்றி இரவி. -- சுந்தர் \பேச்சு 07:09, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தேரி[தொகு]

சுந்தர், நீண்ட நாட்களுக்குப் பின் :)

தூத்துக்குடி கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளேன். பார்க்க. --சிவக்குமார் \பேச்சு 13:50, 23 சனவரி 2015 (UTC)[பதிலளி]

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு[தொகு]

சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:04, 5 பெப்ரவரி 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:48, 7 மே 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற ஆதரவு கோரிக்கை[தொகு]

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில், உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:30, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்[தொகு]

சுந்தர் உங்கள் தமிழ் விக்கிப் பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள். தமிழ் விக்கிக்கு உங்கள் 11 ஆண்டுக்காலப் பங்களிப்புக்கள் மிகவும் முக்கியமானவை. விக்கித் திட்டங்கள் தொடர்பான உங்கள் அறிவினாலும், தமிழ் வளர்ச்சி மீது நீங்கள் கொண்டுள்ள ஆர்வத்தினாலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி தொடர்பில் மிகப்பொருத்தமான ஒருவராக உங்களை அடையாளம் காட்டிக்கொண்டீர்கள். நேரடியாகப் பங்களிப்புக்களைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் சுந்தர் பக்கத்திலேயே இருக்கிறார் என்னும் உணர்வை மற்றப் பயனர்களுக்குள் ஏற்படுத்தி வந்துள்ளீர்கள். தொடர்ந்து உங்கள் தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும் உயர் நிலைகளை எட்டுவீர்கள். அதே வேளை உங்கள் பங்களிப்புக்களால் தமிழ் விக்கித் திட்டங்கள் நீண்ட காலம் பயன்பெற வேண்டும் என்பது எனது ஆசை. உங்கள் 11 ஆண்டுகள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த இன்றைய எனது விக்கி மாரத்தான் பங்களிப்புக்களை உங்களுக்கு உரித்தாக்க விரும்புகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 02:59, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் சுந்தர்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 18:05, 19 சூலை 2015 (UTC)[பதிலளி]

உளங்கனிந்த நன்றி![தொகு]

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:50, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

பட்டாம்பூச்சி[தொகு]

பட்டாம்பூச்சி கட்டுரைகளுக்கு வாழ்த்துக்கள். நான் உருவாக்கிய கட்டுரைகள் சில இங்கே உள்ளன. "வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு" குறிப்பிடும் பெயர்களுக்கு ஏற்ப அவற்றை நகர்த்திவிடுங்கள். சில பெயர்களை மாற்றியுள்ளேன். --AntanO 18:05, 11 செப்டம்பர் 2015 (UTC)

செய்கிறேன் அன்ரன், நன்றி. -- சுந்தர் \பேச்சு 04:47, 12 செப்டம்பர் 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

 • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
 • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
 • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:50, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை[தொகு]

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:52, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

மீடியாவிக்கி:Sitenotice பக்கத்தில் கீழே உள்ள விடயத்தினை இற்றை செய்ய வேண்டுகின்றேன்.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:01, 11 மார்ச் 2017 (UTC)

இப்போதுதான் பார்க்கிறேன், �ஸ்ரீஹீரன். ஏற்கனவே பயனர் நன் செய்துவிட்டார் போலிருக்கிறது. -- சுந்தர் \பேச்சு 14:10, 12 மார்ச் 2017 (UTC)
ஆமாம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:00, 12 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:32, 10 ஏப்ரல் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு[தொகு]

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:02, 27 ஏப்ரல் 2017 (UTC)

https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:தானியங்கி_வேண்டுகோள்கள் இங்கும் கவனிக்க--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:02, 27 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

உதவி...[தொகு]

வணக்கம். பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்#விலங்கியல் என்பதனைக் கவனித்து, தங்களால் இயன்ற பங்களிப்பினை தர வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:33, 28 மே 2017 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி, செல்வகுருநாதன். ஒரு கட்டுரையை திருத்தியிருக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:03, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

Sundar sir pls to convert Tamil Wikipedia article. I do know how to create Tamil Wikipedia so please to translate this article. Help me sir please.

Goutham Vannar (பேச்சு) 02:32, 11 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

Offline Wikipedia distribution in the languages of India[தொகு]

We are working on this offline system for Wikipedia. https://meta.wikimedia.org/wiki/Internet-in-a-Box

Am hoping that I could get you to translate these three sentences into ta.

https://meta.wikimedia.org/wiki/Internet-in-a-Box/India#Tamil

Thanks James Heilman, MD (talk · contribs · email)(please leave replies on my talk page) 09:32, 28 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 00:54, 29 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:46, 18 பெப்ரவரி 2018 (UTC)

மகிழ்ச்சி, சிவகோசரன். என்னால் பங்காற்றவியலா நிலையிலுள்ளேன். ஏதும் இயன்றால் கட்டாயம் உதவுவேன். நன்றி. -- சுந்தர் \பேச்சு 06:59, 20 பெப்ரவரி 2018 (UTC)
பரவாயில்லை. நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:21, 21 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு[தொகு]

அன்புள்ள சுந்தர்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 18:28, 18 மார்ச் 2018 (UTC)

நன்றி இரவி, என்னாலியன்ற அளவு பங்களிக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:27, 14 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்[தொகு]

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)[பதிலளி]


Would you like to help me a bit?[தொகு]

Greetings!

Would you like to help me with writing some Tamil lyrics from songs and translating them into English? Unfortunately, I only know some words in Tamil and I cannot do it myself. Eniisi Lisika (பேச்சு) 17:56, 24 மே 2018 (UTC) Eniisi[பதிலளி]

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்![தொகு]

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

பொங்கல் வாழ்த்துக்கள்[தொகு]

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 18:37, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கு நன்றி, கௌதம். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். -- சுந்தர் \பேச்சு 05:58, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:05, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

Kanags பற்றி நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகையில் முறையிடப்பட்டுள்ளது[தொகு]

விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை உங்கள் கருத்தினையும் தெரிவியுங்கள். --Ramsey1982 (பேச்சு) 09:56, 22 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்![தொகு]

குறுக்கு வழி:
WP:TIGER2

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:07, 25 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி[தொகு]

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:51, 4 சனவரி 2020 (UTC)[பதிலளி]

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020[தொகு]

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!---- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:35, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

Translation request[தொகு]

Hello.

Can you translate and upload the article en:List of mammals of Azerbaijan in Tamil Wikipedia?

Yours sincerely Karalainza (பேச்சு) 00:37, 28 ஏப்ரல் 2020 (UTC)

Will try, but I'm not active these days, @Karalainza: -- சுந்தர் \பேச்சு 07:36, 7 மே 2020 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients[தொகு]

tiger face
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

Hi!

Wikimedia Foundation Board decided in 2009 to stop using GFDL as a sole license per this resolution.

GFDL is not a good license because it makes it hard to reuse the images (and the articles where the image is used).

You have uploaded one or more files with GFDL. You can see the files in Category:Wikipedia license migration candidates. You can also click this link and scroll down to see your name.

If you are the photographer/creator you can help to relicense the file(s). You can do so by changing {{GFDL}} to {{self|GFDL|cc-by-sa-4.0}}.

If you are not the photographer/creator please check if you have added a source and author. --MGA73 (பேச்சு) 11:34, 6 சூன் 2021 (UTC)[பதிலளி]

Thanks. Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 08:59, 7 சூன் 2021 (UTC)[பதிலளி]

அணங்கு (உயிரியல்)--தலைப்பு குறித்த கருத்து[தொகு]

பேச்சு:அணங்கு (உயிரியல்) -- தங்கள் கருத்துகளை வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.--PARITHIMATHI (பேச்சு) 02:41, 20 சூன் 2021 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities[தொகு]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

 • Bangladesh: 4:30 pm to 7:00 pm
 • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
 • Nepal: 4:15 pm to 6:45 pm
 • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
 • Live interpretation is being provided in Hindi.
 • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)[பதிலளி]

re: Candidates meet with South Asia + ESEAP communities[தொகு]

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)[பதிலளி]

Thank you. -- சுந்தர் \பேச்சு 04:45, 25 சூலை 2021 (UTC)[பதிலளி]

Invitation for Wiki Loves Women South Asia 2021[தொகு]

Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021view details!


Wiki Loves Women South Asia is back with the 2021 edition. Join us to minify gender gaps and enrich Wikipedia with more diversity. Happening from 1 September - 30 September, Wiki Loves Women South Asia welcomes the articles created on gender gap theme. This year we will focus on women's empowerment and gender discrimination related topics.

We are proud to announce and invite you and your community to participate in the competition. You can learn more about the scope and the prizes at the project page.

Best wishes,
Wiki Loves Women Team HirokBot (பேச்சு) 22:02, 18 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங[தொகு]

அன்புடையீர் Sundar,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021[தொகு]

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

How we will see unregistered users[தொகு]

Hi!

You get this message because you are an admin on a Wikimedia wiki.

When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.

Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.

If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.

We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.

Thank you. /Johan (WMF)

18:19, 4 சனவரி 2022 (UTC)

செங்கால் நாரை பெயர் குறித்து[தொகு]

@Sundar: சூழலியல் எழுத்தாளர்களில் முன்னோடிகளான மா. கிருஷ்ணனும் தியோடர் பாஸ்கரனும் தம் குறிப்புகளில் தெளிவாகத் தந்துள்ள பறவைப் பெயர்கள்: (தரவுகள் உடன் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் இணைக்கின்றேன்)
செங்கால் நாரை = White stork; பூநாரை = Flamingo
மஞ்சள்மூக்கு நாரை (Painted stork) ஓர் உள்ளூர்ப் பறவை; உள்ளூரிலேயே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயரும் இயல்புடையது; இதுவும் கூட ஒரு வகையில் வலசை போதலே. இருப்பினும், அயல் நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வலசை வரும் இயல்புடைய பறவை White stork மட்டுமே. சத்திமுத்தப் புலவரின் பாடலில் வலசை போகும் தன்மை முதன்மையாகத் தெரிவதால், அப்பறவை (அதாவது, செங்கால் நாரை) White stork என்றே புரிகிறது. -PARITHIMATHI (பேச்சு) 10:01, 23 சனவரி 2022 (UTC)[பதிலளி]
விளக்கத்துக்கு நன்றி, பரிதிமதி. இது ஒருவேளை தமிழர் பகுதிகளில் பரவலாக வலசைவந்த பறவையோ என்னவோ, இப்போது மிக அரிதென்று அறிகிறேன். தவிர பனங்கிழங்கு பிளந்த தோற்றம் சட்டென மஞ்சள்மூக்கு நாரையையே எனக்கு நினைவூட்டியது. இருப்பினும் துறை அறிஞர்களின் குறிப்புகளில் நீங்கள் கண்டுள்ளதால் அதுவே சரியாக இருக்கக்கூடும். -- சுந்தர் \பேச்சு 11:08, 23 சனவரி 2022 (UTC)[பதிலளி]

வேங்கைத்திட்டப் பயிற்சி 2022[தொகு]

வணக்கம்.

இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --உழவன் (உரை) 11:09, 9 சூன் 2022 (UTC)[பதிலளி]

பரிந்துரைகள் வேண்டல்[தொகு]

வணக்கம், வேங்கைத் திட்ட மூன்று நாள் பயிற்சி நடைபெற உள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது விக்கிப்பீடியர்களுக்கான திறன் மேம்பட்டுப் பயிற்சி. தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்தெடுக்கக் கிடைத்துள்ள மிகச் சிறப்பான வாய்ப்பாகக் கருதுகிறேன். தொடக்கக் காலப் பயனர் என்றவகையில் இதில் இத்திட்டம் வளர என்ன மாதிரியான பயிற்சிகளை அமைக்கலாம் என்ற பரிந்துரையை நீங்கள் அளிக்க இயலுமா? எதை நோக்கி இத்திட்ட வளரவேண்டும் எங்கெல்லாம் கவனம் செலுத்தலாம் போன்ற பரிந்துரைகளையும் வரவேற்கிறோம். -நீச்சல்காரன் (பேச்சு) 05:26, 10 சூன் 2022 (UTC)[பதிலளி]

தமிழ்[தொகு]

விஞ்ஞான வளர்ச்சியும் மெய்ஞ்ஞான வீழ்ச்சியும் 27.62.26.114 11:04, 11 சூலை 2022 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு[தொகு]

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு[தொகு]

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2022
விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்

உதவி[தொகு]

வணக்கம். இந்தப் பக்கத்தில் வேண்டுகோள் பதிந்துள்ளேன். கவனித்து உரியன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:31, 19 சனவரி 2023 (UTC)[பதிலளி]

உடனடியாக செய்த உதவிக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:16, 20 சனவரி 2023 (UTC)[பதிலளி]

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு[தொகு]

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)

- ஒருங்கிணைப்புக் குழு

நல்ல கட்டுரை- அழைப்பு[தொகு]

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,65,962 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)[பதிலளி]

கருத்தினைப் பதிவுசெய்ய வேண்டுகோள்[தொகு]

வணக்கம். இந்த நிகழ்வை நடத்துவதற்காக, நிதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் தந்தோம். இந்த விண்ணப்பம் தற்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. மேல்-விக்கிப் பக்கத்தின் இறுதியில் இருக்கும் Endorsements and Feedback எனும் பகுதியில் உள்ள Endorse விசைப்பட்டையைச் சொடுக்கி, உங்களின் ஆதரவு (அல்லது) எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விசைப்பட்டையைச் சொடுக்கும்போது, உதவிக் குறிப்புகள் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:23, 5 சூன் 2024 (UTC)[பதிலளி]

ஆதரவளித்துள்ளேன், செல்வகுருநாதன். நிகழ்வு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். -- சுந்தர் \பேச்சு 06:48, 5 சூன் 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sundar&oldid=3995605" இலிருந்து மீள்விக்கப்பட்டது