உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறுக்கு வழி:
WP:10tour

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 28 செப்டம்பர் சனி அன்று பண்பாட்டுச் சுற்றுலா செல்கிறோம். விக்கிமீடியா காமன்சுக்கான படங்களைப் பெறுதல், தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாதல், தமிழ் விக்கிப்பீடியாவின் வருங்கால நடவடிக்கைகளைப் பற்றி கலந்துரையாடுதல் ஆகியவை இச்சுற்றுலாவின் நோக்கம் ஆகும்.

இயன்றவரை, கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புள்ள எல்லாப் பங்களிப்பாளர்களையும் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். எனினும் பேருந்தில் இட வசதி, ஆழமான உரையாடல்களை மேற்கோள்வதற்கு உகந்த பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை முதலிய நடைமுறைக் காரணங்களுக்காக, இச்சுற்றுலா "அழைப்புள்ளவர்களுக்கு மட்டுமே" என்ற முறையில் ஒழுங்கு செய்யப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்கான அழைப்பு தங்கள் பேச்சுப் பக்கத்தில் இடப்படும். இது தங்களுக்கான அழைப்பு மட்டுமே. உறவினர்கள், நண்பர்களை உடன் அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டுகிறோம்.

இடம், நேரம்[தொகு]

இடம்:

MSSRF நிறுவனத்தில் தங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளோரை அங்கு வந்தே பேருந்து ஏற்றிக் கொள்ளும். அண்ணா பல்கலைக்குள் பேருந்தை விடுவார்களா என்பது ஐயமே. எனவே, இங்கு தங்கியுள்ள அனைவரும் கோட்டூர்புரம் வாயில் அருகே கூடலாம். சென்னையில் இருந்து சனியன்று இணைந்து கொள்பவர்கள் நேரே அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வந்து விடுங்கள்.

நேரம்:

காலை 10.30 மணி - MSSRF விருந்தினர் விடுதி.

காலை 10.40 மணி - அண்ணா பல்கலை கோட்டூர்புரம் வாயில.

காலை 11.30 மணி - அண்ணா நூற்றாண்டு நூலக வாயில்.

இரவு 7.30 மணிக்கு அறைகளுக்குத் திரும்ப முனைவோம்.

பகல் உணவு வேளை வரை சென்னையின் சில பகுதிகளைப் பார்ப்போம். பகல் உணவை முடித்த பிறகு மாமல்லபுரம் சென்று திரும்புவோம்.

சுற்றுலாவுக்கு கட்டணம் ஏதும் இல்லை. உங்கள் படம்பிடி கருவிகளை எடுத்து வாருங்கள். கடற்கரை மணலில் கபடி விளையாடலாம் என்று நினைப்பவர்கள் அதற்கான மாற்றுச் சட்டைகளையும் எடுத்து வாருங்கள் :)

இரவு ஊர் திரும்பிய பிறகு மீண்டும் சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரைக்குப் போக ஆர்வமுள்ளவர்கள் ஒன்றாகப் போய் கதை பேசி விட்டு வரலாம்.

தொடர்புக்கு:

இரவி - 9943168304, செகதீசுவரன் - 9566157066, சூரியா - 8148446213

உங்கள் வரவை / தொலைப்பேசி எண்ணை முன்கூட்டியே இரவியின் செல்பேசி முகவரிகு உறுதிப்படுத்தி விடுங்கள்.

உதவித்தொகை வேண்டுபவர்கள்

சனி-ஞாயிறு தங்குமிட, போக்குவரத்துச் செலவு உதவி வேண்டுவோரில் தேர்ந்தெடுத்த சிலருக்கு உதவித் தொகை வழங்க இயலும். தங்குமிட உதவி வேண்ட இங்கும், பயண உதவித் தொகை வேண்ட இங்கும் விண்ணப்பியுங்கள்.

வருகைப் பதிவு[தொகு]

இச்சுற்றுலாவில் கலந்து கொண்டவர்கள்

 1. செங்கைப் பொதுவன்
 2. செங்கைச் செல்வி
 3. இரவி
 4. சஞ்சீவி சிவகுமார்
 5. வி.பி.மணிகண்டன்
 6. நீச்சல்காரன்
 7. சிவகோசரன்
 8. சகோதரன் ஜெகதீஸ்வரன்
 9. ஸ்ரீதர்
 10. மயூரநாதன்
 11. ஹிபாயத்துல்லா
 12. கி. கார்த்திகேயன்
 13. ஹரீஷ் சிவசுப்பிரமணியன்
 14. பார்வதிஸ்ரீ
 15. அபிராமி நாராயணன்
 16. நந்தினிகந்தசாமி
 17. புருனோ
 18. மா. தமிழ்ப்பரிதி
 19.  சூர்யபிரகாஷ் 
 20. யோகிசிவம்
 21. சண்முகம்ப7
 22. சுந்தர்
 23. ஸ்ரீனிவாசன்
 24. விசுணு வர்தன் (CIS-A2K திட்ட இயக்குநர்) - நமது அழைப்பினை ஏற்று கலந்து கொள்கிறார்.
 25. சௌம்யன் திருமூர்த்தி (விக்கிமீடியா இந்தியக் கிளை மேலாளர்) - நமது அழைப்பினை ஏற்று கலந்து கொள்கிறார்.
 26. தேனி. மு. சுப்பிரமணி.
 27. சௌந்தர மகாதேவன்
 28. அருணன் கபிலன்
 29. ரகீம் (தெலுங்கு விக்கிப்பீடியர்) - நமது அழைப்பினை ஏற்று கலந்து கொள்கிறார்.
 30. --செல்வா (பேச்சு) 04:53, 23 செப்டம்பர் 2013 (UTC)

இற்றை[தொகு]

 • சென்னை திருவான்மியூரை விட்டு வண்டி தாண்ட பகல் ஒரு மணிக்கு மேலாகி விட்டது. வந்து இணைந்து கொள்ள வேண்டிய பலரும் பல்வேறு இடங்களில் தாமதப்படுத்தியதால் இந்த நிலை.
 • நன்பகல் உணவு முடிந்த சுற்றிப் பார்க்கத் தொடங்கிய போது 3:00 மணி ஆகி விட்டது. அனைவரும் சிற்பங்கள், கடற்கரைக் கோயிலைப் பார்த்து விட்ட கடற்கரையில் ஒன்று கூட 6.30 ஆகி விட்டது. சிறிது நேரம் அளவளாவி விட்டு சென்னை திரும்ப 08:30 ஆனது. அனைவரும் களைத்துப் போயிருந்த நிலையில் முறைப்படுத்திய உரையாடல் ஏதும் மேற்கொள்ள இயலவில்லை. எனினும், ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாக நல்ல வாய்ப்பாக இருந்தது. பங்களிப்பாளர்களின் அறிமுகத்துக்கான ஒளிப்படங்கள், நிகழ்படங்களை மாமல்லபுரம் பின்னணியில் எடுத்தோம்.

(தொழில்முறையாக எடுத்த படங்கள் கிடைத்தவுடன் இங்கு சேர்க்கப்படும். அது வரை மற்ற பயனர்கள் தத்தம் சொந்தப் படங்களைச் சேர்த்தால் நிகழ்வுக்கு வராதவர்கள் கண்டு இரசிக்கலாம்)