விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருத்துக்களை இங்கு இடவும்.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:47, 26 திசம்பர் 2014 (UTC) [பதில் அளி]

புத்தாண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் மாதம் 100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள்[தொகு]

வணக்கம். வரும் சனவரி 2015ல், விக்கித் திட்டம் 100 தொடங்கி 100 வாரங்கள் நிறைவு பெறுகிறது. இது வரை, மாதம் 100 தொகுப்புகள் செய்யக்கூடிய 94 பயனர்களை இனங்கண்டுள்ளோம். இது வரை, அனைவரும் கூடி ஒரே மாதத்தில் தொகுக்கவில்லை என்றாலும், சனவரி 2014ல் 34 பேர் தொகுத்துள்ளோம். இது இந்திய மொழிகள் விக்கிப்பீடியாக்களில் ஒரு சாதனை ஆகும். அடுத்து என்ன? வரும் சனவரி 2015ல் நாம் அனைவரும் ஒன்று கூடி தொகுத்து ஒரே மாதத்தில் 100 பேர் 100 தொகுப்புகள் செய்தார்கள் என்ற சாதனை இலக்கை எட்ட வேண்டும் என்பது என் கனவு :) அடுத்தடுத்து வரும் மாதங்களில் இந்த புத்துணர்வைத் தக்க வைக்கவும் முனைய வேண்டும். 2003ல் தொடங்கிய தமிழ் விக்கிப்பீடியா 2010ல் ஒரு திருப்புமுனை கண்டது. அது போல், இம்முனைவு அடுத்த பாய்ச்சலுக்கு நம்மை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வழமையான பங்களிப்பாளர்களுடன் இடையில் பங்களிக்காமல் விட்டுப் போன பலரையும் அழைத்து வந்து ஒன்றாக உழைக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. என்ன சொல்கிறீர்கள் ? :)--இரவி (பேச்சு) 12:42, 25 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]

மிக 👍 விருப்பம் ! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:18, 25 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]
Symbol support vote.svg ஆதரவு , என்ன சொல்கிறீர்கள்????, சொல்கிறேன் :P, தனிப்பக்கம் உருவாக்க வேண்டியது முதல் தேவை. விக்கித்திட்டம் 100, சனவரி 2015 போன்று. பங்குகொள்ளும் பயனர்களை முதலே இனம் காண்பதின் ஊடாக இலக்கை அடைவதை முதலே உறுதிப்படுத்திக்கொள்ளலாம். மற்றப் பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதை தானியங்கி மூலம் செய்யலாமா??? செய்தால் நன்று. முகநூலிலும் அழைப்பு விடுப்போம். 100 பயனர்கள் 100 தொகுப்புக்கள் என்பது இலகுவான இலக்கல்ல. அனைவரும் ஒன்றாய் சேர்ந்ததால் தான் அடையமுடியும். இத்திட்டத்தில் உழைக்கவும் பயனர் குழு தேவை. :) , பக்கத்தை தொடங்கினா அங்க எங்க பெயரையும் சேர்ப்பம். என்ன சொல்கிறீர்கள்? :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:15, 25 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]
♥ ஆதவன் ♥, அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேனோ, அதை நீங்களே கூறி விட்டீர்கள் ! இந்த ஒத்த சிந்தனை பெரும் ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கிறது. பணிகளைத் தொடங்குவோம் :)--இரவி (பேச்சு) 14:04, 26 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]
ஆம் :) , ஆரம்பிக்கிறேன் :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:19, 26 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 06:02, 30 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]
♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀, உங்கள் ஒருங்கிணைப்பும் முனைப்பும் திக்குமுக்காடச் செய்கிறது. கடந்த சில நாள்களாக கடுமையான பணிப்பளு இருந்தமையால் இந்தப் பக்கம் வர முடியவில்லை. இனி, மாதம் முழுக்க இங்கே தான். அனைவரும் இணைந்து கலக்குவோம். --இரவி (பேச்சு) 15:02, 31 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]
இரவி , தாங்கள் மீண்டும் எங்களோடு இருப்பது மகிழ்ச்சி....., அனைவரையும் அழைத்துவரவேண்டும் என்றால் அது உங்களாலேயே முடியும்........., எல்லாரும் விலகுங்கோ, விலகுங்கோ :) :) வருக இரவி...!!!!, நான் ஆலமரத்தடியில் கேட்ட உதவிகளை செய்துதர முடியுமா??? நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:11, 31 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]

பயணத்தில் இருப்பதால் காலையில் தொடர்கிறேன். அன்டன், தாரிக்கை பதாகைகள் செய்து தரச்சொல்லி உள்ளேன். அவற்றைப் பரப்புரைக்கும் தள அறிவிப்புக்கும் பயன்படுத்துவோம். நல்ல எழுச்சி முழக்கங்களாக பரிந்துரையுங்கள் :) --இரவி (பேச்சு) 15:17, 31 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]

நன்றி இரவி...........--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:27, 31 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]
முடிந்தால், நாளை அவர்களிடம் பதக்கங்களையும் உருவாக்கித்தரக் கோருங்கள்....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:32, 31 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]

துணைத் தலைப்பில் செய்யப்பட்ட மாற்றம்...[தொகு]

பங்கேற்கும் பயனர்கள் என்பதனை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என மாற்றியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:00, 30 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]

இலக்கடைவு[தொகு]

திட்டத்திற்கான 20% பயனர்களை பெற்றுவிட்டோம். மேலும் முயல்வோம். அனைவரும் வருக, இணைக.......!!! :)--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:05, 30 திசம்பர் 2014 (UTC) [பதில் அளி]

என் பெயரையும் இத்திட்டத்தில் இணைத்துள்ளேன். முடியுமா என்ற எண்ணம் எழுந்தபோதிலும் முயற்சித்து சாதிப்போம் என்ற நிலையில் களம் இறங்கியுள்ளேன். உங்கள் அனைவரின் அன்பையும் ஒத்துழைப்பையும் அன்புடன் எதிர்நோக்குகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 00:36, 31 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]
வாருங்கள் பா.ஜம்புலிங்கம். நீங்கள் எல்லாமே இயல்பாகவே பல மாதங்களில் இந்த இலக்கைக் கடப்பவர் தான். அதையே மீண்டும் இம்மாதம் இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். நன்றி :)--இரவி (பேச்சு) 15:00, 31 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]
இரவி, வணக்கம். இன்றுதான் தங்களது கருத்தினைப் படித்தேன். தங்களைப் போன்றோரின் ஊக்கத்தால் இது சாத்தியமாகிறது என்று நம்புகிறேன். நன்றி. தொடர்வேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:51, 4 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]

ஐயம்...[தொகு]

இந்தியாவில் இருப்பவர், 00:01 (01.01.2015) மணியளவில் தனது தொகுப்பினைத் தொடங்கினால், அது... ஜனவரி 1 அன்றைக்கான கணக்கில் வருமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:21, 31 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]

புள்ளிவிவரங்களைப் பொருத்த வரை, UTC நேரம் தான் கணக்கில் வரும். காலை 05.30க்குப் பிறகு முயலுங்கள்.--இரவி (பேச்சு) 14:11, 31 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]

திட்ட ஏற்பாடுகள்[தொகு]

  • பயனர் இலக்கை எட்டும் பயனர்களுக்கு பதக்கங்களை வழங்கல்.
  • இலக்கை முதல் நாளில் எட்டும் பயனர்களுக்கு சிறப்புப் பதக்கங்களையும் வழங்கல்.

சிறு இலக்குகளுக்கு பதங்கம் வழங்கினால் பதக்கம் என்பதே மலிவானதாகிவிடும் ({{User wikilove}}). துப்புரவாக்கத்தில் ஈடுபடும்போது ஒரு நாளில் 100 தொகுப்புக்கள் செய்வதென்பது இலகுவான விடயம் ({{Edit Count Usefulness}}). எனவே, என்னுடைய கருத்துக்கள்.

  • பாராட்டுக் குறிப்பை பயனர் பக்கத்தில் இடலாம்.
  • 1000, 2000 அல்லது அதற்கு மேல் தொகுப்புக்களைச் செய்பவர்களுக்கு வழங்கலாம்.
  • இங்கு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவதுபோல் முகநூலில் இலக்கை எட்டும் பயனர்கள் பற்றி வாரத்திற்கு ஒரு குறிப்பு இடலாம். அவர்களின் பயனர் பக்கத்தையும் பகிரலாம்.

--AntonTalk 16:08, 31 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]

Symbol support vote.svg ஆதரவு--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:21, 31 திசம்பர் 2014 (UTC)[பதில் அளி]
Symbol support vote.svg ஆதரவு--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:38, 1 சனவரி 2015 (UTC)[பதில் அளி]
Symbol support vote.svg ஆதரவு--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:12, 1 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

இலக்கு[தொகு]

பயனர்:Aathavan jaffna, திட்டத்தின் இலக்குகள் குறித்த விவரிப்பில் சில மாறுதல்கள் செய்ய விரு்ம்புகிறேன்.

  • 100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள் என்பது தான் இலக்கு. ஆனால், ஒவ்வொரு மாதமும் இது போல் சாதனை ஓட்டம் முயன்றால் புத்துணர்வு குறையலாம். இம்மாதம் மட்டும் முயல்வோம். பிறகு, ஆண்டு முழுவதும் சாதனை நோக்கு ஏதும் இல்லாமல் பொதுவாக மேலும் பல பயனர்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வோம். மீண்டும் 2015 சனவரியில் அடுத்த சாதனை ஓட்டத்தில் இறங்கலாம் :) ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு / தை மாதத்தில் முழு வீச்சுடன் தமிழ் விக்கிப்பீடியர் களமிறங்கிப் பார்க்கலாம் :) இது வரை ஆக அதிகமாக 34 பேர் பங்களித்ததும் 2014 சனவரியில் தான். இது ஒரு நல்ல தொடர்ச்சியாக இருக்கும்.
  • பக்கத்தில் இலக்குகள் பற்றிய விவரிப்பு சுருக்கமாக, தெளிவாக, உறுதியாக இருப்பது நல்லது என்று தோன்றுகிறது. 100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள் என்பதை மட்டும் குறிப்பிடுவது போதுமானதாக இருக்கும். குறு, சிறு இலக்குகளை விவரிக்காவிட்டாலும், முயற்சியின் பயன்கள் தெரிந்தவையே--இரவி (பேச்சு) 04:34, 4 சனவரி 2015 (UTC)[பதில் அளி]
நான் சிறியவன். என்னதான் சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்று பதக்கம் தந்தாலும், அனுபவத்தாலும் அறிவாலும் என்றும் சிறியவனே. :) :) , இரவி, நீங்கள் வரததால தான் இவளவும் செஞ்சன். அதான் நீங்க வந்திட்டிங்க. அனைத்து மாற்றங்களையும் செய்துவிடுங்கள். இரண்டாம் குறிப்புக்கு Symbol support vote.svg ஆதரவு :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:13, 4 சனவரி 2015 (UTC)[பதில் அளி]
அப்படி எல்லாம் இல்லை. தொடக்கத்தில் இருந்தே இத்திட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அதன் அடிப்படையில் சில கருத்துகளைத் தெரிவித்தேன். நீங்கள் தொடர்ந்து கலக்குங்கள். உரிய மாற்றங்களைச் செய்து விடுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:37, 4 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

பதாகைகள், அறைகூவல் வாசகங்கள் தேவை[தொகு]

திட்டத்தின் பரப்புரை தொடர்பாக சில பதாகைகள் தேவைப்படுகின்றன. அன்டன், தாரிக் உதவ முடியுமா? https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Wikimedians , https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_wikipedia_10_years_celebrations - இங்குள்ள படங்களை இதற்குப் பயன்படுத்தலாம். பதாகைகள் பயனர்களின் குழுப்படங்களாகவும் தனிப்படங்களாகவும் இம்மாத இலக்கை நினைவூட்டுவதாகவும் அமைய வேண்டும். இது தொடர்பான அறைகூவல் வாசகங்களையும் பரிந்துரைக்குமாறு அனைவரையும் கோருகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:11, 8 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

பரிந்துரை இருந்தால் பதாகைகள் வடிவமைக்கலாம். --AntonTalk 18:43, 9 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

100 தொகுப்புகள் முடித்தவர்களுக்கான அடுத்தடுத்த இலக்குகள் :)[தொகு]

இம்மாதம் 100 தொகுப்புகள் முடித்த அசகாய சூரர்கள் கவனத்துக்கு :) - 100 முடித்தவர்கள் 250, 1000, 2500 என்று தத்தம் சொந்த இலக்குகள் நோக்கியும் முன்னேறலாமே :) அப்புறம், 100 தொகுப்புகள் என்பது கட்டுரை பெயர்வெளியில் உள்ள தொகுப்புகளுக்கே பொருந்தும். எனவே, மொத்தம் 100 தொகுப்புகளுக்கு மேலாக இன்னும் சில 10 தொகுப்புகளைக் கொசுறாகவும் செய்து வைக்கலாம் :)

வேறு எப்படிப் பங்களிக்கலாம்?

  • நீண்ட நாட்களாக உங்கள் நண்பர்கள், உறவினர்கள், முகநூல் வட்டத்தினரை தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அழைத்து வரலாம் என்று ஆர்வம் உள்ளதா? இம்மாதம் அவர்களை அழைத்து வர நல்ல நேரம். 100 தொகுப்புகளில் மட்டுமல்லாது இன்னும் பல்வேறு அடிப்படைகளிலும் இம்மாதம் ஒரு சாதனை மாதமாக அமைய உதவும்.
  • அண்மைய மாற்றங்களைக் கவனித்துப் புதிதாக பங்களிக்கும் பயனர்களுக்குத் தேவையான உதவியையும் ஊக்கத்தையும் அளிக்கலாம்.
  • உடன் பங்களிக்கும் பயனர்களுக்குப் பதக்கங்கள் தந்தும் நன்றி தெரிவித்தும் ஊக்குவிக்கலாம். --இரவி (பேச்சு) 20:18, 8 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

இலக்குத் தொகுப்புகளை உடன் பங்களிப்போருக்கு உரித்தாக்குதல்[தொகு]

இம்மாதம் நான் செய்யும் இலக்குத் தொகுப்புகளை செங்கை செல்விக்கு உரித்தாக்கலாம் என்று எண்ணியுள்ளேன். தானும் பங்களிப்பதோடு அல்லாமல் செங்கை பொதுவனுக்கு உற்ற துணையாகவும் விளங்கும் அவர்களின் பெருமைக்கு இதன் மூலம் என்னால் இயன்ற சிறு சிறப்பைச் சேர்க்க இயலும் என்று எண்ணுகிறேன். இது போல் ஒவ்வொரு பங்களிப்பாளரும் தங்கள் மனம் கவர்ந்த பங்களிப்பாளருக்குத் தம் இலக்குத் தொகுப்புகளை உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகமூட்டி இந்த இலக்குப் பயணத்தில் பங்கேற்கச் செய்ய முடியும். இத்தகைய உரித்தாக்குதலை குறிப்பிட்ட பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் தெரிவிக்கலாம். எல்லாருக்கும் புரிகிற மாதிரி தமிழில் சொல்வதென்றால் உங்க editsஐ dedicate பண்ணுங்க ;) --இரவி (பேச்சு) 20:25, 8 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

இம்மாதம் (சனவரி, 2015) நான் செய்யும் தொகுப்புகளை மலேசியாவைப் பற்றி சிறப்பான கட்டுரைகளை எழுதிவரும் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 14:51, 16 சனவரி 2015 (UTC)[பதில் அளி]
இம்மாதம் நான் செய்யும் தொகுப்புகளை மிகப் பயனுள்ள உயிரியல்/ மருத்துவ கட்டுரைகளை உள்ளிட்ட, விக்கிப் பரப்புரையை ஐரோப்பியக் கண்டத்தில் தனியாக மேற்கொண்ட கலை அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். இப்புத்தாண்டில் அவர்கள் வளமும் நலமும் பெற இவ்வமயத்தில் வாழ்த்துகிறேன் !! --மணியன் (பேச்சு) 04:13, 17 சனவரி 2015 (UTC)[பதில் அளி]
நான் செய்யும் தொகுப்புகளை கி. கார்த்திகேயன் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். சு.க.மணிவேல் 22:26, 19 சனவரி 2015 (UTC)[பதில் அளி]
தம்பி மிகுந்த மகிழ்வாய் உணர்கிறேன்! மென் மேலும் பங்களித்து சீரிய உயரங்களை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!. அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 14:15, 27 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

சனவரியில் நான் செய்யும் தொகுப்புகளை ஸ்ரீகர்சனுக்கு உரித்தாக்குகிறேன். இந்த ஆண்டின் மற்ற மாத தொகுப்புகளை ஆன்டனுக்கும் சேலம் & கோவை வாத்தியாரம்மாக்களுக்கும் உரித்தாக்குகிறேன். --குறும்பன் (பேச்சு) 17:27, 20 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

மிக்க நன்றி குறும்பன் அவர்களே! உங்கள் ஊக்குவிப்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்:) சனவரியில் நான் செய்யும் தொகுப்புகளை, விக்கிப்பீடியாவில் நுட்பம் தொடர்பான என் பங்களிப்பிற்குப் பிள்ளையார் சுழி போட்டு ஊக்குவித்த சூர்யா அண்ணாவிற்கு உரித்தாக்குகிறேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:46, 22 சனவரி 2015 (UTC)[பதில் அளி]
குறும்பன், இப்போதைக்கு உரித்தாக்கங்களுக்கு முன்பதிவு இன்னும் தொடங்கவில்லை :) நிற்க ! இந்த வழமை பயனர்களுக்கு உந்துதல் அளிக்கிறது எனில் விக்கியன்பு போல் இதற்கும் ஒரு திட்டப்பக்கம் உருவாக்கி அந்தந்த மாத இறுதியில் தங்கள் பங்களிப்புகளை விவரித்து உரித்தாக்கங்களைச் செய்யலாம். பங்களிப்பவர், அதற்கு உரியவர் இருவருக்கும் இது நல்ல உந்துதலைத் தரும் என்று எதிர்பார்க்கிறேன். --இரவி (பேச்சு) 12:32, 22 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

பல்வேறு எதிர்ப்புக்களையும் குற்றச்சாட்டுக்களையும் தாங்கிக் கொண்டு, சோர்ந்துவிடாமல், த.வி.யின் கலைக்களஞ்சியத்தன்மை ஒன்றையே மனதிலிருத்தி, எழுதப்பட்டதும் கட்டுரைகள் விக்கிப்பீடியாக்குரியவையேயொழிய தனியாட்களினுடையவை அல்ல என்ற புரிதலுடன் சலிக்காமல் அஞ்சாமல் குப்பைகளை நீக்கும் என்சக துப்பரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் எனது இம்மாத தொகுப்புக்களை உரித்தாக்குகிறேன். எவ்வளவ பார்த்துட்டோம் :) விடாது முன்னேறுவோம். கோபி (பேச்சு) 12:59, 22 சனவரி 2015 (UTC)[பதில் அளி]


நந்தக்குமார் அவர்கள் ஜனவரி மாதத் தொகுப்புகளை எனக்கு உரித்தாக்கி இருக்கிறார். மிகவும் நன்றி ஐயா. என்னுடைய தொகுப்புகளை யாருக்கு உரித்தாக்குவது என்று ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்தேன். கடைசியில், இரவி அவர்களைத் தேர்ந்தெடுத்து, அவருக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். அதற்கு காரணம் இருக்கிறது.

சென்ற ஆண்டு (2014), விக்கிப்பீடியாவைப் பற்றி விளக்கவுரைகள் செய்ய திரு. இரவி மலேசியா வந்திருந்தார். அவரைச் சந்திக்க முடியாமல் போய் விட்டது. சுங்கை சிப்புட் நகரில் நடந்த விளக்கக் கூட்டத்தில் நிறைய விளக்கங்களைக் கொடுத்து இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு பயிலும் என் பேத்தியும் (ஸ்ரீ லேகா) கலந்து கொண்டார். ரவி அவர்களுக்கு என் பேத்தியைத் தெரியாது என்று நினைக்கிறேன்.

ஆரம்ப காலங்களில், விக்கிப்பீடியாவில் தட்டுத் தடுமாறி எழுதிக் கொண்டு இருக்கும் போது, எனக்கு உதவி செய்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கனக்ஸ், குறும்பன், சோடாபாட்டில், இரவி, செல்வசிவகுருநாதன், மகிழ்நன், நற்கீரன், சிவக்குமார், தமிழ்க்குரிசில், தென்காசி சுப்பிரமணியன், கார்த்திக் இராமானுஜம், அண்டன், சஞ்சீவி சிவகுமார், புன்னியாமீன், பாஹிம். இப்படி நிறைய பேர்.

இன்னும் சிலரின் பெயர்கள் விடுபட்டு போய் இருக்கலாம். பொறுத்தருளவும். ஒரு குடும்பமாக நின்று தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறோம். இந்த நிலை தொடர்ந்து நிலைக்க வேண்டும். நமக்குள் குறை நிறைகள் இருக்கலாம். அதை எல்லாம் பெரிது படுத்தாமல், நம்முடைய சேவைகளைத் தொடர்ந்து செய்வோம். அதுவே தமிழ் அன்னைக்கு நாம் செய்யும் கைமாறு.

ஆக, என்னுடைய தொகுப்புகளை இரவி அவர்களுக்கு உரித்தாக்குகிறேன். நந்தக்குமார் அவர்களுக்கு நன்றிகள். நன்றிகள். மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 13:39, 22 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

உங்களது பணிவு கண்டு மனம் மகிழ்ந்தேன். நான் மீண்டும் மலேசியா வரும் போது உங்களைச் சந்திக்க முயல்கிறேன். எனக்கு உங்களது சொந்த ஊர்ப் பகுதியிலும்--பாஹிம் (பேச்சு) 14:12, 22 சனவரி 2015 (UTC) (முவார் நகரில்) சில நண்பர்கள் இருக்கிறார்கள்.[பதில் அளி]
மலாக்கா முத்துக்கிருஷ்ணன், உங்கள் உரித்தாக்கம் கண்டு நெகிழ்ந்தேன். ஏதாவது ஒரு மாதம் ஆயிரம் தொகுப்புகள் செய்ய முடிந்தால் அன்று உங்களுக்கு என் தொகுப்புகளை உரித்தாக்கம் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மலேசியா நிகழ்வில் உங்கள் பேத்தியும் இருந்தது தெரியாமல் போய்விட்டதே ! மீண்டும் அனைவரும் சந்திக்க முனைவோம். நன்றி--இரவி (பேச்சு) 12:50, 24 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

கனக சிறிதரனும் இரவியும் ஏற்கனவே இதில் பங்களிப்பதாலும் சோடா சூரியா போன மாதம் தான் விக்கிக்கு எட்டிப் பார்த்துட்டு போனதாலும் சில மாதங்களாக விக்கியில் பங்களிக்காமல் இருக்கும் தலையைக் காட்டாத வாத்தியார் அம்மாக்கு நான் என் பங்களிப்புகளை உரித்தாக்குகிறேன். ஒழுங்கா வரலைனா பங்களிப்புகளை வேரு யாருக்காவது கொடுத்துபுடுவேன். அக்காங்...... --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:10, 27 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 00:14, 28 சனவரி 2015 (UTC)[பதில் அளி]
தென்காசி சுப்பிரமணியன், அபிராமியின் +2 தேர்வு, இணைய இணைப்பு பிரச்சினைகளை முன்னிட்டு தற்போது விக்கி பக்கம் வர இயலவில்லை என்று பார்வதி தெரிவித்திருக்கிறார். கோடை விடுமுறையில் எதிர்பார்ப்போம் :)--இரவி (பேச்சு) 07:36, 29 சனவரி 2015 (UTC)[பதில் அளி]
என்னுடைய இம்மாத பங்களிப்பினை, புகுபதிகை செய்து புதிய பக்கம் உருவாக்கிய புதிய பயனர் பயனர்:தமிழ்கவிஞன் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். (தற்போது இறுதியாக உருவாக்கப்பட்ட புதிய பக்கத்தினை உருவாக்கியவர்) . மேலும் புதிய பயனர்கள் வருகை தந்து விக்கியை மேம்படுத்த இச்சமர்ப்பனம் உந்ததுதலாக இருக்க பிராத்தனைகள்.. நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:58, 31 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

சனவரி மாதம் நான் செய்திருந்த 500 அதிகமான தொகுப்புகளை இருவருக்கு உரித்தாக்குகிறேன். தமிழ் விக்கியில் இணைந்த மிகக் குறுகியகாலத்திலேயே பயனுள்ள பங்களிப்பை வழங்கிவரும் பயனர் திரு.பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கும் மற்றும் தமிழ் விக்கிப்பீடியாவிற்காகவே தனது வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுவரும் நண்பர் இரவி அவர்களுக்கும் எனது சனவரி மாதத் தொகுப்புகள் உரித்தாகுகிறது.--இரா.பாலா (பேச்சு) 02:27, 3 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]

இரா.பாலா, உங்கள் அன்புக்கு நன்றி. ஆனால் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் தமிழ் விக்கிப்பீடியாவுக்காக உழைக்கும் பலர் இருக்கும் போது //தமிழ் விக்கிப்பீடியாவிற்காகவே தனது வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுவரும் நண்பர்// என்பது "இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது" வகையறாவில் வரும் :) உருப்படியாக ஏதாவது செய்துவிட்டு, உங்கள் உரித்தாக்கத்தை இன்னொரு மாதம் உரிமையுடன் கோருவேன் :) --இரவி (பேச்சு) 05:49, 3 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]

தொடரும் உரித்தாக்கங்களை இதற்கான திட்டப் பக்கத்தில் பகிரலாம். பார்க்க: விக்கிப்பீடியா:உரித்தாக்கம்--இரவி (பேச்சு) 05:57, 3 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]

இரா.பாலா உங்களின் அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது. விக்கி நடைமுறைகளில் சிலவற்றை இன்னும் புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன். சில பொருண்மைகளில் எனக்குத் தெளிவு ஏற்படாத நிலையில் நான் பதிய தாமதமாகிறது. இருப்பினும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து இன்னும் எழுதுவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:46, 4 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]

கணக்கிடுவது எப்படி?[தொகு]

இந்த மாதம் ஒரு பயனர் எவ்வளவு தொகுப்பு செய்துள்ளார் என்பதை எப்படி அறிவது? -−முன்நிற்கும் கருத்து Tshrinivasan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சீனிவாசன், இங்கு பாருங்கள். --இரவி (பேச்சு) 06:22, 17 சனவரி 2015 (UTC)[பதில் அளி]

முடிவுகள்[தொகு]

தொடர்பங்களிப்பாளர்களின் பட்டியலில் அலசி ஆராய்ந்து edit counter களின் மூலம் பரிசோதித்து 100 தொகுப்புகள் செய்த 15 பேரை இணைத்துள்ளேன். தற்போது மொத்தம் 49 பேர் கடந்த மாதம் 100 தொகுப்பு இலக்கை அடைந்துள்ளனர். சனவரி 2014 இல் 34 பெர் தொகுத்ததைவிட இது அதிகம்:) யாராவது விடுபட்டிருந்தால் சேர்த்துவிடுங்கள் (பெரும்பாலும் அனைவரையும் சேர்த்துவிட்டேன்).--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:06, 1 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]

நன்றி, சிறீகர்சன். இங்கு உள்ள புள்ளிவிவரத்தில் கட்டுரை வெளியில் செய்யும் தொகுப்புகள் மட்டுமே 100+ தொகுப்புக் கணக்கில் வரும். எனினும், கடந்த இரு ஆண்டாக நாம் அனைத்து பெயர் வெளிகளில் தொகுப்புகள் செய்தவர்களையும் கணக்கில் எடுத்து வருகிறோம். அந்த வகையில் 62 பேர் பெயர் பதிந்து 49 பேர் இலக்கை எட்டியுள்ளனர் என்பது சிறப்பான தேர்ச்சி :) விக்கிமீடியா புள்ளி விவரக் கணக்கு என்ன சொல்கிறது என்று இன்னும் ஓரிரு மாதங்களில் சனவரி தரவுகள் கிடைக்கும் போது உறுதி செய்து கொள்ளலாம். என்ன இருந்தாலும், நவம்பர் 2014ல் இந்த எண்ணிக்கை 13 ஆக வீழ்ந்த பிறகு, மீண்டும் முனைப்பைக் கூட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்ந இலக்கை அடைய உதவிய, ஒருங்கிணைத்த, உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
சனவரியில் இத்திட்டத்தின் மூலம் பல புதிய பங்களிப்பாளர்களைப் பெற்றிருக்கிறோம். ஓய்வில் இருந்த பல பங்களிப்பாளர்கள் திரும்பியிருக்கிறார்கள். இந்த உற்சாகத்தை அடுத்த சில மாதங்களுக்குத் தக்க வைப்போம். கூடவே, 2016 சனவரியில் மீண்டும் இம்முயற்சியை மேற்கொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலுக்கு ஊருக்குத் திரும்புவோர் போல, ஆண்டு முழுதும் பல வேலைகளில் கவனம் செலுத்த வேண்டி இருந்தாலும் சனவரி / தை வந்தால் விக்கிப்பீடியா பணிக்குத் திரும்பி ஒன்றுகூடுவது போன்ற ஒரு நிகழ்வாக இதனை வளர்க்க இயன்றால் நன்றாக இருக்கும்.
இத்திட்டத்தின் மூலம் பல மாதங்களுக்குப் பிறகு ஒரே மாதத்தில் 300 பயனர்கள் தொகுக்கும் எண்ணிக்கையை மீண்டும் எட்டிப் பிடித்திருக்கிறோம். நம்மை விட பல மடங்கு கூடுதல் பங்களிப்பாளர்கள் கொண்ட விக்கிப்பீடியாக்களுக்குக் கூட மாதம் 100 தொகுப்புகள் செய்யும் 100 பயனர்கள் என்பது இலகுவான இலக்கு அன்று. எடுத்துக்காட்டுக்கு, தாய், கிரேக்கம், ஈபுரு மொழி விக்கிப்பீடியா தரவுகளைக் காணலாம். இவர்களை ஒப்பிடுகையில் நாம் சிறப்பான விகிதத்தில் பயனர்களை முனைப்புடன் பங்களிக்கச் செய்து வருகிறோம். இம்மாதத்துடன் 100 தொகுப்புகளுக்கு மேல் செய்யும் 100 விக்கிப்பீடியர்களையும் இனங்கண்டிருக்கிறோம். இவர்களில் பலர் 250, 1000 என்று தொகுப்புகள் செய்பவர்கள் என்பது நல்ல சேதி. இவர்கள் அனைவரையும் தக்க வைத்து இதே போல் இன்னும் பலரையும் ஊக்குவிப்பதில் நமது வளர்ச்சி அடங்கியிருக்கிறது. தற்போது உள்ள போக்கைப் பார்த்தால், நமது இலக்கை எட்ட ஒவ்வொரு மாதமும் பங்களிக்கும் 1000 பயனர்களையாவது நாம் உருவாக்க வேண்டும். இவர்களில் 100 பேரை முனைப்பான பங்களிப்பாளர்களாக மாற்ற முடியும். இதை ஒரே மாதத்திலும் செய்ய முடியாது. ஒரு சில பயனர்களும் செய்ய முடியாது. ஆண்டு முழுதும் இதற்கான பல பின்னணி வேலைகளைச் செய்ய வேண்டும். இதற்கான ஆலோசனைகள், முனைப்புகளை வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 15:49, 1 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம் இது ஒரு சிறந்த திட்டம். தனிப்பட்ட அளவில் நெடுநாள் கழித்து நானும் பங்களிக்க வாய்ப்பாகியது. இந்த ஒரு மாதத்திலாவது தற்போது அதிகமாக பங்களிக்காத நிலையில் இருக்கும் பயனர்களும் மற்றோரும் கூட்டாக இயங்கினால் இரவி குறிப்பிட்டதுபோல பொங்கலுக்கு ஊருக்குச்செல்லும் அனுபவமாக இருக்கும். உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் என்ற குறள்வழி பொருந்தும். -- சுந்தர் \பேச்சு 07:24, 3 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 16:02, 4 பெப்ரவரி 2015 (UTC)[பதில் அளி]