உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:உழைப்பு அளவீடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியாவின் வளர்ச்சியைப் பொதுவாக பக்கப் பார்வைகள், தொகுப்புகள் அடிப்படையில் அளக்கிறோம். அதே வேளை, ஒட்டு மொத்த விக்கி சமூகமும் எவ்வளவு உழைக்கிறதோ அந்த அளவு விக்கியின் வளர்ச்சி இருக்கிறது என்றும் கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, 20 பேர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் உழைத்தாலும், ஒரு வாரத்துக்கு 20*2*7 = 280 மணி நேரம் ஆகிறது. ஒரு தொழில் நிறுவனத்தில் நாளைக்கு எட்டு மணி நேரம், வாரம் ஐந்து நாட்கள் பணியாற்றுகிறோம் என்றால், 8*5= 40 மணி நேரம் என்பது ஒரு முழு நேரப் பணியாளரின் உழைப்பு. ஆகவே, விக்கி சமூகத்தின் வாரம் 280 மணி நேர உழைப்பு என்பது ஏழு முழு நேர பணியாட்களின் உழைப்புக்கு ஈடானது. ஒரு பேச்சுக்கு, ஒவ்வொரு பணியாளரும் 25,000 இந்திய ரூபாய் சம்பளத்தில் பணியாற்றுகிறார் என்று கொண்டாலும், மாதம் 1,75,000 ரூபாய் அளவிலான உழைப்பை கொடையாக அளிக்கிறோம் என்று பொருள் ! இந்த நோக்கில் தமிழ் விக்கிப்பீடியாவின் இயங்கு நிலையை ஆய்ந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்க எந்த அளவிலான உழைப்பை இட்டிருக்கிறோம் என்பதும் புலப்படும்.

கீழே உள்ள அட்டவணையில் அவரவர் உழைப்பைப் பற்றிக் குறிப்பிடலாம். எடுத்துக்காட்டுக்கு, நான் ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் என்ற கணக்கில் வாரம் 10.5 மணி நேரம் என்று குறிப்பிட்டுள்ளேன். ஒவ்வொரு நாளும் சரியாக இவ்வளவு மணி நேரம் என்று குறிப்பிட முடியாது. ஆனால், சராசரியாக ஒவ்வொரு நாளும் இவ்வளவு மணி நேரம் செலவழிக்கிறோம் என்பதைக் கூற இயலும் என நினைக்கிறேன். அண்மைய மாற்றங்களைப் பார்ப்பது, கட்டுரைகளைப் படிப்பது போன்றவற்றுக்குச் செலவிடும் நேரத்தை ஒதுக்கி விடலாம். நேரடியாக விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதும் / திருத்தும் நேரம், பேச்சுப் பக்க உரையாடல்களுக்குச் செலவிடும் நேரம், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நேரம், நுட்பப் பணிகளுக்குச் செலவிடும் நேரம், கட்டுரைகளுக்குத் தேவையான ஆய்வுகள் / வாசிப்புகளைச் செய்வதற்கான நேரம் ஆகியவற்றைக் கூட்டிக் கொள்ளலாம்.

இந்த நேரம் என்பது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பயனர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்பவும் தமிழ் விக்கிப்பீடியாவில் நடக்கின்ற திட்டங்களைப் பொருத்தும் மாறலாம். எடுத்துக்காட்டுக்கு, பட்டறைகள் நடத்த, போட்டிகள் நடத்த மிக அதிக காலம் செலவாகும். எனவே, இது ஒரு துல்லியமான அளவீடு அன்று. எனினும், இது போன்ற ஒரு அளவீட்டை ஆண்டுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு மாதத்தில் செய்வதன் மூலம் தோராயமாக தமிழ் விக்கி சமூகத்தின் வளர்ச்சியை வேறு பார்வையில் நோக்க முடியும் என்று கருதுகிறேன்.

எனவே, மே 2012 மாதத்தில் மட்டும் பயனர்கள் தந்துள்ள உழைப்பின் அளவை சராசரியாக ஒரு வார அடிப்படையில் கணக்கிட்டு கீழே தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.

குறிப்பு 1: இது ஒரு பயனர் தர வரிசை அன்று :) ஒருவர் இவ்வளவு மணி நேரம் உழைத்தார் என்பதற்கான சான்றும் கோர முடியாது :) ஒட்டு மொத்த சமூகத்தின் உழைப்பை அளப்பது மட்டுமே இம்முயற்சியின் நோக்கம் !

குறிப்பு 2: மாதம் எத்தனை வேலை நாட்கள் என்ற குழப்பம் வரும் என்பதால் வார அளவில் உழைப்பைப் பற்றிய விவரத்தை இட்டுள்ளேன். ஆனால், விக்கிப்பீடியர் அனைத்து நாட்களும் உழைப்பதால், வாரம் ஏழு நாட்களுக்கான உழைப்பாகக் குறிப்பிடலாம்.

குறிப்பு 3: இது தமிழ் விக்கிப்பீடியாவில் செலுத்திய உழைப்பை மட்டுமே கணக்கில் கொள்கிறது. தமிழ் விக்சனரி, விக்கிமூலம், திரான்சுலேட்டு விக்கி போன்ற பிற முயற்சிகள் அடங்கா.

--இரவி (பேச்சு) 10:22, 31 மே 2012 (UTC)[பதிலளி]

இதற்கு மதிப்பீடு செய்யும் நேரத்தையும் சேர்த்துக்கொள்ளலாமா? :) இதனை மதிப்பிடுவது சற்று கடினம், ஏனெனில், செயற்படுவதில், எழுதியவற்றைப் படித்தல், சிந்தனை செய்தல், கட்டுரைக்கான செய்திகள் தொகுப்பு முதலியனவும் அடங்கும்; அவற்றை மதிப்பிடுவது சற்று கடினம். எனினும் எப்படியாவது மதிப்பிட்டுக் குறிப்பிடுகின்றேன். --செல்வா (பேச்சு) 13:46, 31 மே 2012 (UTC)[பதிலளி]

செல்வா, முன்கூட்டியே அறிவித்திருந்தால் கூட துல்லியமாக மணி நேரத்தை அளப்பது கடினமே. இது தோராயமான கணக்கு தான். எனவே, பரவாயில்லை--இரவி (பேச்சு) 14:09, 31 மே 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா பயனர் புகுபதிகை மற்றும் விடுபதிகை நேரம் பதிவு வரலாறு தொகுக்கும் கருவி இருந்தால் சுலபமே! --ஸ்ரீதர் (பேச்சு) 15:16, 31 மே 2012 (UTC)[பதிலளி]
ஸ்ரீதர், நீங்கள் சொல்லிய முறைப்படி செய்தால், சரியான தகவல் கிடைக்காமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. எ. கா. என்னுடைய கணினியில் மிக அரிதாகவே, விக்கிப்பீடியா திட்டங்களில் இருந்து விடுபதிகை செய்வேன். ஒரு சில சமயம் என்னுடைய மடிக்கணினியில் இருந்தும் செய்வேன், அதனால், புகுபதிகை விடுபதிகை கணக்கு சரியாக வராது. ஆனால் தொகுப்புகளின் அடிப்படையில் கணக்கிட வாய்ப்பு இருக்கு என்று எண்ணுகிறேன், அவற்றுள் ஆதாரம் திரட்டுதல், கட்டுரையை தொகுப்பதற்கு முன்பே அதனை திருத்துவதற்காக படித்து பார்த்தல் போன்றவை கணக்கில் வராது, அதனால், அவரவர் தாமாக சொன்னால் மட்டுமே, சரியான தகவல் கிட்டும். விக்கியின் மூலதனமே நம்பிக்கை தானே :-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:41, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]


உழைப்பு அளவீடு

[தொகு]
வ.எண் பயனர் பெயர் மே 2012இல் ஒரு வார உழைப்பு (மொத்த மணி நேரத்தில்)
1 இரவி 10.5
2 தென்காசி சுப்பிரமணியன் 40
3 தினேஷ்குமார் பொன்னுசாமி 24 (தோராயமாக)
4 சிவகோசரன் 1
5 சண்முகம் ~35 (தமிழ் விக்கி மட்டும்)
6 மணியன் ~28 (தமிழ் விக்கி மட்டும்)
7 பார்வதிஸ்ரீ 40 (தோராயமாக)
8 சிவக்குமார் 15 (தோராயமாக)
9 மதனாகரன் 10.5
10 பவுல்-Paul ~30
11 ஸ்ரீதர் ~30
12 Anton ~6
13 மயூரநாதன் ~15
14 செல்வா ~9

மேலே உள்ள 14 பேரின் மொத்த உழைப்பு மட்டும் வாரம் 294 மணி நேரங்கள். மே 2012 புள்ளிவிவரத்தின் படி, கட்டுரைப் பெயர்வெளியில் மிக முனைப்பாக பங்களித்த பங்களிப்பாளர்கள் மட்டும் 20 பேர். எனவே, ஒவ்வொரு பங்களிப்பாளரின் நேரத்தையும் கணக்கில் கொண்டால், மிக இலகுவாக 400+ மணி நேர உழைப்பு இருக்கும் எனக் கருதலாம். இது கிட்டத்தட்ட, 10 முழு நேரப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு ஈடாகிறது ! எனது வேண்டுகோளை ஏற்று இந்த அளவீட்டில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி ! ஆண்டுக்கு ஒரு முறை இது போன்று எண்ணிப் பார்ப்பதன் மூலம், தமிழ் விக்கிச் சமூகத்தின் வளர்ச்சி பற்றிய மாறுபட்ட பார்வை கிடைக்கும் என நம்புகிறேன். --இரவி (பேச்சு) 14:41, 24 சூன் 2012 (UTC)[பதிலளி]