பயனர்:Tshrinivasan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Shrinivasan

த.சீனிவாசன். காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பொறியியில் கல்விக்குப்பின் கட்டற்ற மென்பொருட்களின் அறிமுகம் கிடைத்தபோது, அதையே தனது வாழ்க்கைப் பாதையாகக் கொண்டவர்.

தமிழில் கட்டற்ற மென்பொருட்களுக்கான அறிமுகக் கட்டுரைகள் அதிகம் இல்லாததைக் கண்டு, கணியம் எனும் இணைய இதழை 1, ஜனவரி 2012 முதல் நடத்தி வருகிறார். கணியம் குழுவினர் பல்வேறு கட்டற்ற மென்பொருட்களுக்கான மின்னூல்களை, யாவரும் பகிரும் வகையிலான கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட்டு வருகின்றனர்.

தான் வாங்கிய கிண்டில் கருவியில் படிக்கும் வகையில் தமிழில் மின்னூல்கள் இல்லாததைக் கண்டு, பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், கிண்டில் படிக்கும் வகையில் 6 Inch PDF உருவாக்கினார். பலரும் கிண்டிலில் படிக்க, தமிழ் மின்னூல்களைத் தேடுவது கண்டு, எல்லாக் கருவிகளிலும் தமிழ் மின்னூல்கள் படிக்கும் வகையில் FreeTamilEbooks.com என்ற தளத்தை அமைத்தார். உலகெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து, மின்னூலாக்கம், செயலி உருவாக்கம், அட்டைப்படம் உருவாக்கம், எழுத்தாளர்கள் தொடர்பு என பல்வேறு பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர்.

கட்டற்ற மென்பொருட்களைப் பற்றிய பரப்புரை செய்வதோடு, பல கட்டற்ற மென்பொருட்களை உருவாக்கியும் வருகிறார். 2016ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் எழுத்துணரியையும் விக்கி மூலத்தையும் இணைக்க இவர் எழுதிய நிரல், இந்திய மொழிகளின் விக்கிமூலம் திட்டத்திற்கு பெரிதும் உதவியது. பொதுவகத்தில் படங்களை மொத்தமாகப் பதிவேற்றுதல், பல்வேறு விக்கி துப்பரவுப் பணிகள் செய்தல் என இவர் எழுதிய நிரல்கள் பல விக்கிப்பீடியர்களின் பணிகளை எளிதாக்குகின்றன.

சென்னை லினக்ஸ் பயனர் குழுவினருடன் இணைந்து, கல்லூரி மாணவர்கள், பொது மக்களுக்கு கட்டற்ற மென்பொருள் அறிமுக வகுப்புகள் நடத்தி வருகிறார். தமது வலைப்பதிவுகளாலும், நிரல்களாலும் பல மாணவர்களுக்கு நிரலாக்கத்தில் தேர்ச்சி பெற ஊக்குவித்து வருகிறார்.

தமிழில் கட்டற்ற உரிமையில் தமிழக வரைபடங்கள், உரைதிருத்தி, உரை ஒலி மாற்றி உருவாக்க, ஆய்வுகளைச் செய்து வருகிறார்.தொடர்புக்கு - tshrinivasan@gmail.com

பயனர்: Anbumani SLM DIET[தொகு]

நன்றி[தொகு]

நன்றி திரு.சீனிவாசன் அவர்களே நான் தற்போழுது தான் விக்கிபீடியாவில் எழுத துவங்கியுள்ளேன். ஆதலால் எனது கட்டுரைகளின் உரையாடல் பக்கத்திற்கு தவறாமல் வந்து தங்கள் மேலான விமர்சனங்களையும் கட்டுரையை மேம்படுத்த ஆலோசனைகளை அளித்தும் தவறுகள் இருப்பின் திருத்த வழிமுறைகளையும் அளித்து உதவுங்கள் எனது பங்களிப்பு என்றும் கண்டிப்பாகத் தொடரும், வளரும். தினம் ஒரு மொட்டேனும் மலரும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tshrinivasan&oldid=2394015" இலிருந்து மீள்விக்கப்பட்டது