பயனர் பேச்சு:Jagadeeswarann99
ஜெகதீஸ்வரன் நடராஜன் | |||||||
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() | |
முகப்பு | உரையாடல் | உருவாக்கப்பட வேண்டியவை | பங்களித்துள்ள கட்டுரைகள் | பதக்கங்கள் | திட்டங்கள் | மணல்தொட்டி |
என் விக்கி வாழ்க்கையை மேம்படுத்த தங்களின் மேலான கருத்துகளை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன். தங்களின் வழிகாட்டுதல்களை இங்கே பதியுங்கள்.
நன்றி.
![]() |
---|
1 2 3 4 5 6 7 8 |
என் வசதிக்காக சில குறிப்புகள்[தொகு]
- சிறப்பு:RecentChangesLinked/Category:வாழும் நபர்கள்
- Wikipedia Statistics Tamil
- விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை
- [நிர்வாக பயன்பாடு]
- [|பயனின் தொகுப்பு புள்ளிகளை அறிதல்]
- [வார அளவீட்டில் புள்ளிகள்]
- [REFILL]
உளங்கனிந்த நன்றி![தொகு]
வணக்கம்!
விக்கி மாரத்தான் 2016 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:18, 22 ஆகத்து 2016 (UTC)
விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:45, 22 ஆகத்து 2016 (UTC)
படிமம்[தொகு]
பொதுவகத்தில் நீங்கள் பதிவேற்றிய படங்கள் சில பதிப்புரிமைச் சிக்கல் உள்ளதால் நீக்கப் பரிந்துரைத்துள்ளேன். காரணம் அறியாவிட்டால் கேளுங்கள். மேலும் பல படிங்களும் நீக்கலுக்கான காரணங்களைக் கொண்டுள்ளன. எ.கா: தெளிவற்ற படிமங்கள், பிரதிகள், கல்வி நோக்கத்திற்கு பயன்படாதவை. --AntanO 02:06, 9 செப்டம்பர் 2016 (UTC)
- செய்யுங்கள். எப்படிமம் ஏற்றவை என மிச்சமிருப்பதைக் கண்டு தெளிவுற்றுக்கொள்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:19, 9 செப்டம்பர் 2016 (UTC)
Shore Temple[தொகு]
en:Shore Temple என்பதற்கு ஒத்த கட்டுரை த.வி.யில் உள்ளதா? இல்லையென்றால் உருவாக்கிவிடுங்கள். --AntanO 02:21, 19 செப்டம்பர் 2016 (UTC)
- மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் இணைத்துள்ளேங்க.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:47, 19 செப்டம்பர் 2016 (UTC)
Video links[தொகு]
நீங்கள் நேற்று கேட்டதற்கு ஓர் எ.கா: இத்தொகுப்பை en:Wikipedia:Video links என்பதன் அடிப்படையில செய்துள்ளேன். --AntanO 12:36, 11 அக்டோபர் 2016 (UTC)
ஓவியங்கள்[தொகு]
அண்மையில் தமிழ் தொடர்பான கட்டற்ற ஓவியங்களைத் தேடிய பொழுது, உங்களின் பல படைப்புக்கள் தேடலில் வந்தன. நன்றி. --Natkeeran (பேச்சு) 16:24, 13 சனவரி 2017 (UTC)
- மகிழ்ச்சிங்க. https://www.flickr.com/photos/sagotharan_1 என்ற தளத்தில் என்னால் வரையப்பட்ட ஓவியங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறேன். தேவையென்றால் உபயோகம் செய்து கொள்ளவும். :-) -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:42, 13 சனவரி 2017 (UTC)
விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:13, 13 சனவரி 2017 (UTC)
விருப்பம் --இரவி (பேச்சு) 18:21, 13 சனவரி 2017 (UTC)
15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு[தொகு]
அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:33, 27 ஏப்ரல் 2017 (UTC)
துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு[தொகு]
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
- துப்புரவுப் பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருவதற்கு நன்றி. தேவைப்படும் இடங்களில் கட்டுரை அல்லது பயனரின் பேச்சுப் பக்கத்தில் உரிய வழிகாட்டலையும் அளித்து விடுங்கள். குறிப்பாக, கட்டுரைகளை நீக்கும் போது இந்த வழிகாட்டல் அவசியம் ஆகிறது. நன்றி. --இரவி (பேச்சு) 16:25, 15 மே 2017 (UTC)
- சரிங்க--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:19, 17 மே 2017 (UTC)
- வணக்கம்! பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்#கோவில்கள் குறித்த கட்டுரைகள், பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்#இந்து மதம் ஆகியவற்றைக் கவனித்து, தங்களால் இயன்ற பங்களிப்பினை தர வேண்டுகிறேன்; நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:00, 4 சூன் 2017 (UTC)
காதணி விழா குறித்து[தொகு]
வணக்கம் தோழரே, காதணி விழா குறித்து தமிழ் சங்க இலக்கியங்களில் அல்லது சைவ சமைய இலக்கியங்களில் ஏதாவது குறிப்பு உண்டா? நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:22, 22 சூன் 2017 (UTC)
- இது வரை தேடியதில்லைங்க. கிடைத்தால் பகிர்கிறேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:24, 28 சூன் 2017 (UTC)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு[தொகு]
அன்புள்ள செகதீசுவரன், உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல். 2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
நன்றி.--இரவி (பேச்சு) 18:27, 18 மார்ச் 2018 (UTC)
- வணக்கம் நண்பரே, மென்பொருள் வேலையை விடுத்து குடும்ப சூழல் காரணமாக சுயதொழிலாக கோழி மற்றும் பண்ணை உயிர்களை வளர்க்க தொடங்கியுள்ளேன். தொடக்கம் என்பதால் அதிலேயே கவனம் செலுத்த வேண்டியுள்ளது.மடிக்கணினியை தொட்டே வருடம் ஆகிறது. சூழலை மாற்றி விக்கியில் உழைக்க காத்திருக்கிறேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 01:31, 10 சூலை 2018 (UTC)
அறிவு திருக்கோவில் பக்க உருவாக்கத்திற்கு உதவி தேவை. ராம்குமார் கல்யாணி 10:00, 18 பெப்ரவரி 2020 (UTC)
உங்கள் கவனத்திற்கு[தொகு]
வணக்கம். காதல் கவிதை, விடுகதை (1997 திரைப்படம்) ஆகிய கட்டுரைகளில் மேற்கோள்கள் வேலை செய்யவில்லை. உரியன செய்யவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:06, 19 சனவரி 2019 (UTC)
- நன்றிங்க. வெற்று மேற்கோளை நீக்கியுள்ளேன். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:35, 19 சனவரி 2019 (UTC)
வணக்கம். மீண்டும் பங்களிக்கத் தொடங்கியமைக்கு நன்றி. உங்களின் அண்மையக் கட்டுரைகள் முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளன. உதாரணமாக யாசிகா ஆனந்த், ஆர். எஸ். கார்த்திக் போன்ற கட்டுரைகளில் பகுப்புகள் திருத்தப்படல் வேண்டும். மற்ற கட்டுரைகளில் மிகப் பொருத்தமான பகுப்புகள் இல்லாத நிலை உள்ளது. உங்களுக்குத் தெரிவிக்காமலேயே நான் திருத்தலாம்தான். ஆனால், போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகள் எழுதும் புதிய பயனர்களை வழிநடத்தும் பணி கடுமையாக இருப்பதால் எனது ஆற்றலை வேறு பணிகளில் செலவழிக்க இயலவில்லை. தவறாக எடுத்துக் கொள்ளாமல் உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:55, 21 சனவரி 2019 (UTC)
செல்வம் (2005 திரைப்படம்) கட்டுரையை எழுதிவிட்டு நீங்களே 'சான்றில்லை' வார்ப்புரு இட்டுள்ளீர்கள். சான்றில்லாமல் ஏற்கனவே பல ஆயிரம் கட்டுரைகள் இருக்கும் நிலையில், புதிய கட்டுரைகளை சான்றுடன் எழுதுவது நமது கடமையல்லவா? ஆரம்ப காலங்களில் சான்றில்லாத கட்டுரைகளை நானும் எழுதியுள்ளேன். விக்கி பற்றிய புரிதல் நன்கு ஏற்பட்ட பிறகு... சான்றுகள் இல்லையென்றால், எவ்வளவு முக்கியத் தலைப்பாக இருந்தாலும் நான் எழுதுவதில்லை. புரிதலுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:02, 21 சனவரி 2019 (UTC)
- வழிகாட்டலுக்கு நன்றிங்க. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:05, 21 சனவரி 2019 (UTC)
விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:13, 21 சனவரி 2019 (UTC)
சந்தேகம்[தொகு]
சுலோச்சனா என்ற கட்டுரை தலைப்பு சுலக்சனா என்று இருக்க வேண்டும். கவனிக்கவும். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 12:23, 23 சனவரி 2019 (UTC)
- ஏற்றதாக இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள் நண்பரே. இந்தி அல்லது சமஸ்கிருத ஒலி குறித்தான அறிவு எனக்கில்லை. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:47, 23 சனவரி 2019 (UTC)
- @Jagadeeswarann99: ஆங்கிலத்தில் Sulakshana என்றுதான் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் ஆங்கில விக்கிக் கட்டுரையில் இருந்து மொழிபெயர்த்தீர்களா? அல்லது இவர் தமிழில் சுலோச்சனா என்றுதான் ஊடகங்களில் அறியப்படுகிறாரா? அவ்வாறில்லாவிட்டால் நீங்களே திருத்தி வழிமாற்றின்றி நகர்த்துங்கள்.--Kanags (பேச்சு) 21:24, 23 சனவரி 2019 (UTC)
- தமிழில் சுலக்சனா என்றுதான் அறியப்படுகிறார். தூறல் நின்னு போச்சு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:28, 23 சனவரி 2019 (UTC)
- முதலில் மகாபாரத கதாப்பாத்திரத்திற்கு பெயர் மாற்றம் செய்ய என நினைத்தேன். மாற்றிவிட்டேன். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:13, 24 சனவரி 2019 (UTC)
உதவிக் குறிப்பு[தொகு]
வணக்கம். உங்களின் உதவிக்கு: விக்கிப்பீடியா:பயிற்சி (பகுப்புகள்) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:49, 6 பெப்ரவரி 2019 (UTC)
- நன்றிங்க--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:04, 6 பெப்ரவரி 2019 (UTC)
உங்கள் கவனத்திற்கு[தொகு]
[1], [2] இவ்விரு மாற்றங்களைக் கவனித்து இனிவரும் தங்களது கட்டுரைகளில் சரியான பகுப்பினைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:54, 14 பெப்ரவரி 2019 (UTC)
- அம்மா ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புச் செய்யும் போது இவ்வாறு நிகழ்கிறது. கவனம் கொள்கிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:28, 14 பெப்ரவரி 2019 (UTC)
பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்[தொகு]
வணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:34, 19 சூன் 2019 (UTC)
விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 14:48, 19 சூன் 2019 (UTC)
- அழைப்புக்கு நன்றி நீச்சல்காரரே. பணிச்சுமை காரணமாக கலந்து கொள்ள இயலாது. இப்போதுதான் பத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது போல இருக்கிறது. :-) -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:15, 19 சூன் 2019 (UTC)
{{subst:fdw-puf|1=உமாபதி சிவாச்சாரியார்.jpg}} பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:37, 24 சூலை 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]
சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
அறிவுத் திருக்கோவில் பக்கம் குறித்த விபரம் குறித்த ஐயம்[தொகு]
விவரிக்க இயலுமா? ராம்குமார் கல்யாணி 09:59, 18 பெப்ரவரி 2020 (UTC)
'அறிவுத் திருக்கோவில்' என்ற பக்கம் குறித்த குறைபாடுகள் பற்றி தாங்கள் விவரிக்க இயலுமா? ராம்குமார் கல்யாணி 12:34, 18 பெப்ரவரி 2020 (UTC)
அறிவுத் திருக்கோவில்[தொகு]
இந்த பக்கத்தில் போதிய உள்ளடக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என நம்புகிறேன். நான் விக்கிப்பீடியாவில் அதிகமாக எழுதி பழக்கமில்லாத காரணத்தால் தாங்களின் வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கின்றேன். நன்றி ராம்குமார் கல்யாணி 12:32, 18 பெப்ரவரி 2020 (UTC)
"வேதாத்திரியம்" என்ற பக்கம் குறித்த ஆலோசனைகள் வழங்கவும்[தொகு]
இது ஒரு பயனளிக்கக்கூடிய பக்கமாக கருதி வடிவமைத்துள்ளேன். நான் விக்கிப்பீடியாவில் அனுபவமில்லாதால் இந்த பக்கம் சார்ந்த மாற்றம் செய்ய வேண்டியதைக் குறித்து தாங்களது ஆலோசனைகளையும் உதவிகளையும் வேண்டுகிறேன். நன்றி ராம்குமார் கல்யாணி 17:08, 18 பெப்ரவரி 2020 (UTC)
வணக்கம் நண்பரே, 1) சேவை எனக் குறிப்பிட காரணம் : கட்டணம் என்பது அங்கு வேலை செய்யும் அங்கு பயனாளர்கள் தங்கும் விடுதி வசதி, உணவு ஆகியவற்றிக்காக கொடுக்கப்படுவது ஆகும். 2)சேவை என்பது: அங்கே கொடுக்கப்படும் மெய்ஞான விளக்க பயிற்சிகள் ஆகும். இருப்பினும் விக்கியின் தரம் கெடாமல் எழுத எனது தவறுகளை சுட்டிக் காட்டியமைக்கு எனது மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
மேலும், இந்த பக்கத்தை சரியான விதத்தில் வடிவமைக்க தாங்களுடைய உதவியை நாடுகிறேன். நன்றி ராம்குமார் கல்யாணி 05:11, 19 பெப்ரவரி 2020 (UTC)
- வேதாத்திரியம் கொள்கை என்பதால் அதனை முழு கட்டுரையளவு விரிவு செய்திட இயலாது. அதனால் வேதாத்திரி மகரிசி கட்டுரையில் வேதாத்திரியம் பற்றி தலைப்பிட்டு சுருக்கி எழுதிடுங்கள் நண்பரே. நன்றி -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:35, 19 பெப்ரவரி 2020 (UTC)
மனவளக்கலை பாகம் 1 (நூல்) என்ற பகுதிக்கு எத்தகைய சான்றுகள் தேவை என்பதை நான் அறிந்து கொள்ளலாமா? ராம்குமார் கல்யாணி 11:44, 25 பெப்ரவரி 2020 (UTC)
விக்கி பக்கத்திற்கு புகைப்படத்தை இணைப்பது எவ்வாறு?[தொகு]
உதவி தேவை நண்பரே ராம்குமார் கல்யாணி 04:10, 23 பெப்ரவரி 2020 (UTC)
- வணக்கங்க @Ramkumar Kalyani:. விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம் மற்றும் விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி ஆகிய பக்கங்களில் புகைப்படத்தினை எவ்வாறு பதிவேற்றுவது, விக்கி கட்டுரையில் எவ்வாறு இணைப்பது என தகவல் உள்ளது. விக்கிப்பீடியாவில் நீங்கள் எடுத்த புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும் நண்பரே. அதனை கவனத்தில் கொள்ளுங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:25, 23 பெப்ரவரி 2020 (UTC)
விக்கித்திட்டம் சமணத்தில் இணைந்து பங்களிக்க அழைப்பு[தொகு]
வணக்கம், Jagadeeswarann99!
தமிழ் விக்கிப்பீடியாவில் சமணம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சமணம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சமணம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சமணத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.
- உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
- சமணம் தொடர்பான குறுங்கட்டுரைகள் என்ற பகுப்பிலுள்ள குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.
- ஏற்கனவே உள்ள சமணம் தொடர்பான கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.
- விக்கித்திட்டம் சமணத்தில் பங்களிப்பவர்களுக்கு வழிகாட்டலாம். சிறப்பாக பங்களிப்போருக்கு பதக்கங்களை கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.
--பிரஷாந் (பேச்சு) 15:16, 8 செப்டம்பர் 2021 (UTC)
- அழைப்பிற்கு நன்றி நண்பரே. இணைந்துள்ளேன். -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:27, 22 செப்டம்பர் 2021 (UTC)
Files without information about copyright status[தொகு]
Hi!
Perhaps you could take a look at those files:
- File:அபிவித்தம்.jpg
- File:அர்த்தநிகுட்டம்.jpg
- File:அர்த்தரேசிதகம்.jpg
- File:அலாதம்.jpg
- File:ஆக்ஷிப்த_ரேசிதம்.jpg
- File:உத்கட்டிதம்.jpg
- File:உமாபதி_சிவாச்சாரியார்.jpg
- File:ஊர்த்தவ_தாண்டவம்.jpg
- File:கங்காவதரணம்.jpg
- File:கடிச்சின்னம்.jpg
- File:கடிஸமம்.jpg
- File:சகடாஸ்யம்.jpg
- File:சமநகம்.jpg
- File:தாளபுஷ்பபுடம்.jpg
- File:திக்_ஸ்வஸ்திகம்.jpg
- File:நாகாபஸர்ப்பிதம்.jpg
- File:நிருட்டகம்.jpg
- File:ப்ருஷ்டஸ்வஸ்திகம்.jpg
- File:மண்டலேஸ்வஸ்திகம்.jpg
- File:லிதிதோருகம்.jpg
- File:லீனம்.jpg
- File:லோலிதம்.jpg
- File:வர்த்திதம்.jpg
- File:விஷ்கம்பம்.jpg
- File:ஸம்ப்ராந்தம்.jpg
- File:ஸ்வஸ்திகம்.jpg
- File:ஸ்வஸ்திகரேசிதம்.jpg
They probably do not have information about the copyright status. --MGA73 (பேச்சு) 16:42, 16 அக்டோபர் 2021 (UTC)
How we will see unregistered users[தொகு]
Hi!
You get this message because you are an admin on a Wikimedia wiki.
When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.
Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.
If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.
We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.
Thank you. /Johan (WMF)
18:19, 4 சனவரி 2022 (UTC)