உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Ravidreams

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

தாங்கள் வழிகாட்டுதல் தேவை

[தொகு]

தாங்களின் வழிகாட்டுதல்கள் மூலம் விக்கிபீடியாவின் அடிப்படை விதிகளை புரிந்துகொண்டேன். மேலும் புரித்துக்கொள்ள உங்கள் தொடர் வழிகாட்டுதலை விரும்புகிறேன். மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி . ராம்குமார் கல்யாணி 🌿 03:54, 4 ஏப்ரல் 2025 (UTC)Reply

மிக்க மகிழ்ச்சி. நன்றி. - இரவி (பேச்சு) 04:49, 4 ஏப்ரல் 2025 (UTC)Reply

உதவி

[தொகு]

பெண்டைல் நைட்ரைட்டு கட்டுரையை ஆங்கில விக்கிப்பீடியாவின் Pentyl nitrite கட்டுரையுடன் இணைத்து உதவவும்.(ஆங்கிலத்தில் கட்டுரை உள்ளது. ஆனால் சிவப்பாக காட்டுகிறது.) --கி.மூர்த்தி (பேச்சு) 13:08, 10 ஏப்ரல் 2025 (UTC)Reply

Y ஆயிற்று. தமிழ் கட்டுரை தவறான விக்கித்தரவு பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அதை நீக்கி சரியான ஆங்கிலக் கட்டுரையுடன் சேர்த்துள்ளேன். தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் பேச்சுப் பக்கத்தில் இணைப்பு தரும்போது [[:en:Pentyl nitrite|Pentyl nitrite]] என்பது போல் தர வேண்டும். அப்போது தான் நீல இணைப்பாக வரும். நீங்கள் இட்ட இணைப்பை மேலே சீராக்கியிருக்கிறேன். கவனியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 13:14, 10 ஏப்ரல் 2025 (UTC)Reply
நன்றி--கி.மூர்த்தி (பேச்சு) 13:31, 10 ஏப்ரல் 2025 (UTC)Reply

Notice of expiration of your translator right

[தொகு]
Hi, as part of Global reminder bot, this is an automated reminder to let you know that your permission "translator" (Translators) will expire on 2025-04-22 17:39:27. Please renew this right if you would like to continue using it. In other languages: click here Leaderbot (பேச்சு) 19:43, 15 ஏப்ரல் 2025 (UTC)Reply

Question from THIYAGARAJAN MANOGAR on பயனர் பேச்சு:THIYAGARAJAN MANOGAR (04:36, 25 ஏப்ரல் 2025)

[தொகு]

I am Indian country Tamil Nadu state chengalpattu district Tamil and English language my name is --THIYAGARAJAN MANOGAR (பேச்சு) 04:36, 25 ஏப்ரல் 2025 (UTC)Reply

ஒரு கோரிக்கை

[தொகு]

தங்களிடம் ஒரு கோரிக்கை.... அளிக்கலாமா? இரவி ஐயா.. "அருணன் கபிலன்" 03:32, 7 மே 2025 (UTC)

வணக்கம் @Arunankapilan:, என்ன இது ஐயா கிய்யான்னுட்டு... இரவின்னே அழையுங்கள். என்ன கோரிக்கை? --இரவி (பேச்சு) 05:27, 7 மே 2025 (UTC)Reply

டூரிசுட்டு பேமிலி தலைப்பு தொடர்பாக

[தொகு]

வணக்கம். டூரிசுட் பேமிலி எனும் கட்டுரையின் தலைப்பினை டூரிஸ்ட் ஃபேமிலி என நகர்த்தியதற்கு காரணத்தினை அறிய விரும்புகிறேன். படத்தலைப்பினை படத்தின் நிறுவனம் வெளியிடாத நிலையில் இதனைத் தூயத் தமிழில் எழுதுவதாக இருந்தால் இசுடூரிசுடு/இசுடூரிசுட் பேமிலி என்றுதானே எழுத வேண்டும்?. வடமொழி எழுத்தினை ஏன் சேர்க்க வேண்டும். நன்றி Chathirathan (பேச்சு) 00:18, 8 மே 2025 (UTC)Reply

பக்கத்தை நீக்கிவிடலாமா?

[தொகு]

பயனர்:Ravidreams/sandbox/முகுந்த் வரதராஜன் இப்பக்கத்தை நீக்கிவிடலாமா? - பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:51, 8 மே 2025 (UTC)Reply

விக்கிப்பீடியாவில் AI பயன்பாடு குறித்து ஆய்வதற்காக இது போன்ற சில சோதனைப் பக்கங்களை உருவாக்கியிருக்கிறேன். இன்னும் சில காலத்துக்கு இருந்தால் நலம். பயனர்களின் sandboxல் உள்ள பக்கங்களை நீக்கத் தேவையில்லையே? - --இரவி (பேச்சு) 13:23, 9 மே 2025 (UTC)Reply

sandboxஇல் இருக்கும் கட்டுரையில் பகுப்புகள் நீக்கம் அல்லது nowiki இட்டால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். - பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:17, 10 மே 2025 (UTC)Reply
இப்போது தேவையில்லாத sandbox பக்கங்களை நீக்கியிருக்கிறேன். தேவைப்படக்கூடிய பக்கங்களில் பகுப்புகளை நீக்கியிருக்கிறேன். இப்ப ok தான்னு நினைக்கிறேன். நன்றி. - இரவி (பேச்சு) 12:58, 11 மே 2025 (UTC)Reply

Notice of expiration of your translator right

[தொகு]
Hi, as part of Global reminder bot, this is an automated reminder to let you know that your permission "translator" (Translators) will expire on 2025-05-17 09:13:41. Please renew this right if you would like to continue using it. In other languages: click here Leaderbot (பேச்சு) 19:42, 10 மே 2025 (UTC)Reply

Removal of GFDL

[தொகு]

Hi! In 2009 WMF facilitated that Wikis changed from GFDL to Creative Commons and since then I have tried to make all Wikis remove GFDL as an option during upload. Per c:Commons:Village_pump/Proposals#List_of_wikis_with_files_and_GFDL-only_in_MediaWiki:Licenses_(change_GFDL_cut-off_date) there are very few wikis left. Including ta.wikipedia, ta.wikisource and ta.wiktionary. Is there any chance that you can have a look at மீடியாவிக்கி பேச்சு:Licenses and remove the two remaining lines suggesting GFDL from மீடியாவிக்கி:Licenses? MGA73 (பேச்சு) 15:37, 13 மே 2025 (UTC)Reply

Question from தஞ்சை இனியன் (16:35, 25 மே 2025)

[தொகு]

sir how to delete the article that i recently created --தஞ்சை இனியன் (பேச்சு) 16:35, 25 மே 2025 (UTC) or please delete the article பயனர்:தஞ்சை இனியன்Reply

நீங்கள் உருவாக்கிய தஞ்சை இனியன் பக்கத்தை நீக்கியிருக்கிறேன். வேறு ஏதேனும் உதவி தேவையெனில் குறிப்பிடுங்கள். நன்றி. - இரவி (பேச்சு) 18:58, 25 மே 2025 (UTC)Reply
வணக்கம் இரவி,
please delete the article பயனர்:தஞ்சை இனியன்
பயனர்:தஞ்சை இனியன் என்னும் பக்கத்தையே நீக்கக்கேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள் தஞ்சை இனியன் என்கிற பக்கத்தை தவறுதலாக நீக்கிவிட்டீர்கள் தஞ்சை இனியன் (பேச்சு) 08:42, 26 மே 2025 (UTC)Reply
பயனர்:தஞ்சை இனியன் பக்கத்தை நீக்கத் தேவையில்லை. உங்கள் பெயரில் நீங்களே கட்டுரை எழுதிக் கொள்ள முடியாது என்பதால் தஞ்சை இனியன் என்கிற கட்டுரைப் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. - இரவி (பேச்சு) 10:11, 26 மே 2025 (UTC)Reply
தஞ்சை இனியன் என்கிற பக்கத்தை நான் உருவாக்கவில்லை. Shaamanbuselvam என்பவர் உருவாக்கியது.. பயனர்:தஞ்சை இனியன் என்கிற கட்டுரையே நான் உருவாக்கியது. எனவே தயவுசெய்து "பயனர்:தஞ்சை இனியன்" என்னும் கட்டுரையை நீக்கவும். இயன்றால் Shamanbuselvam உருவாக்கிய தஞ்சை இனியன் பக்கத்தை மீள பதிப்பிக்கவும். 2402:3A80:48:F4CC:0:E:69F7:9A01 10:31, 26 மே 2025 (UTC)Reply
அது இன்னொருவர் உருவாக்கியதாகவே இருந்தாலும் விளம்பரக் கட்டுரையாகவே உள்ளது. எனவே, அது எப்படியிருந்தாலும் நீக்கப்பட வேண்டிய கட்டுரையே. நன்றி. - இரவி (பேச்சு) 10:39, 26 மே 2025 (UTC)Reply
தஞ்சை இனியன் பக்கத்தை நீக்கியதில் ஆட்சேபணை இல்லை. நான் வேண்டியது “பயனர்:தஞ்சை இனியன்” என்ற பக்கத்தை நீக்கவே...விளம்பரக் கட்டுரை என்று எப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் விக்கிபீடியாவில் நீடிக்க விரும்பவில்லை. தயவுசெய்து “பயனர்:தஞ்சை இனியன்” என்ற பக்கத்தை நீக்கவும். தஞ்சை இனியன் (பேச்சு) 14:41, 26 மே 2025 (UTC)Reply
உங்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப பயனர் பக்கம் நீக்கப்பட்டது. - இரவி (பேச்சு) 16:13, 26 மே 2025 (UTC)Reply

பதிலுரை

[தொகு]

வணக்கம், நான் அனுப்பிய பதில் தங்களுக்கு வந்ததா என தெரியவில்லை என் பேச்சுப் பக்கத்தை பார்த்து பதிலளிக்கவும், மேலும் ஒருவருக்கு Reply மூலம் அனுப்பும் செய்தி உடனே வந்து சேருமா? நன்றி A.Muthamizhrajan (பேச்சு) 15:41, 27 மே 2025 (UTC)Reply

Question from வ. செல்வமாரிமுத்து on பயனர்:வ. செல்வமாரிமுத்து (17:43, 30 மே 2025)

[தொகு]

நான் எழுதியவை அழிந்து போனது ஏன்...? --வ. செல்வமாரிமுத்து (பேச்சு) 17:43, 30 மே 2025 (UTC)Reply

நீங்கள் இது வரை பங்களித்தவற்றை இங்கு காணலாம். ஒருவேளை, உங்களைப் பற்றி நீங்களே விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுத முனைந்தால், அது நீக்கப்படும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். நன்றி. - இரவி (பேச்சு) 17:54, 30 மே 2025 (UTC)Reply

கட்டுரையின் தலைப்பை நகர்த்துவதற்கான எளிய வழிமுறை

[தொகு]

வணக்கம். அடைப்புக் குறிகளுக்குள் தேவையற்ற விளக்கத்தைக் கொண்டுள்ள தலைப்புகளை நகர்த்தி, செம்மைப்படுத்துவதற்கு நன்றி!

நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றாலும், ஒரு நினைவூட்டலுக்காக இதனைக் குறிப்பிடுகிறேன். கீழ்க்காணும் இந்த வழிமுறையைப் பின்பற்றினால், ஒரு செயலை நாம் தவிர்த்துவிடலாம். உதாரணம்: நீக்கப்பட்ட தேவையற்ற வழிமாற்று

  1. கட்டுரையின் தலைப்பை வழிமாற்றுடன் நகர்த்தவேண்டும்.
  2. கட்டுரைக்கு உரையாடல் பக்கம் இருந்தால், அதனை வழிமாற்று இல்லாது நகர்த்தவேண்டும். (ஏனெனில் கட்டுரையின் உரையாடல் பக்கத்திற்கு வழிமாற்று தேவையில்லை)
  3. உரையாடல் பக்கமே இல்லையென்றால் இரண்டாவது வேலையை செய்யவேண்டியது இல்லை!

எடுத்துக்காட்டு:

சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இனி வரும் தொகுப்புகளில் கவனத்தில் கொள்கிறேன். - இரவி (பேச்சு) 10:21, 19 சூன் 2025 (UTC)Reply

Oversized non-free files

[தொகு]

Hi! Non-free files should not be too big per விக்கிப்பீடியா:கட்டுப்பட்ட உள்ளடக்கம். English Wikipedia have set a limit at 100,000 px. I made a script that can downsize the files like on சிறப்பு:ListFiles/MGA73. Perhaps you can find a good place do discuss if tawiki would like to downsize files by a script? MGA73 (பேச்சு) 17:35, 19 சூன் 2025 (UTC)Reply

Thanks for informing us. We will discuss with the community and let you know our preference. - இரவி (பேச்சு) 08:51, 21 சூன் 2025 (UTC)Reply
Sounds good. When you have a result you and other users are welcome to copy the script and modify. --MGA73 (பேச்சு) 12:57, 21 சூன் 2025 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ravidreams&oldid=4295699" இலிருந்து மீள்விக்கப்பட்டது