உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:கார்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் ராஜ.கார்த்திக் கோவை தனியார்க் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியராக உள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கூக்கல்துறையில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது விக்கிமூலம் பயிற்றுநராக இருக்கிறார்.

வ.உ.சி விருதுப் போட்டிகள், இந்திய அளவிலான பிழை திருத்தம் போட்டிகள் போன்றவற்றை நடத்தி, இணையத் தமிழின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருகிறார். இவரது முயற்சியால் கோவையில் பிபிஜி கல்லூரி, காமதேனு க.அ.கல்லூரி-சத்தியமங்கலம், போன்ற பல கல்லூரிகளில் கணித்தமிழ்ப்பேரவை தொடங்கப்பட்டு வருகிறது. அவற்றிற்கு இவரே இலவசப் பயிற்சி வழங்கி வருகிறார். தமிழ்க்கலைக் கழகம் - சென்னை உடன் இணைந்து தமிழ்நாட்டில் 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள தன்னார்வலர்களுக்கு இவர் இலவசப் பயிற்சி வழங்கி வருகிறார். ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் மன்றம் உறுப்பினர்களுக்கும் இலவசமாக விக்கிமூலம் பிழை திருத்தம் பயிற்சி அளித்து வருகிறார். விக்கித் திட்டங்கள் எதற்கும் இலவசப் பயிற்சி மட்டுமே இதுவரை வழங்கி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கார்தமிழ்&oldid=3397820" இலிருந்து மீள்விக்கப்பட்டது