விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் உடையவர்களின் கவனத்துக்கு வர வேண்டிய விசயங்களைப் பற்றி குறிப்பிடலாம்.

இங்குள்ள முந்தைய உரையாடல்களின் தொகுப்பு ஒன்றைக் காண்க.

அச்சுறுத்தும் செயற்பாடுகள் - அன்டன்[தொகு]

அண்மைய உரையாடல்களில் தொடர்ந்து கருத்து முரண்கள் பதிவாகி வரும் வேளையில், அன்டன் தன்னுடைய பேச்சுப் பக்கத்தில் //நான் முழுமையான விக்கிவிடுப்பு எடுக்கும் நாளில் யாரும் கட்டாய விக்கிவிடுப்பு எடுக்கும் நிலை வரலாம்.// என்று கூறியுள்ளதை பயனர்களுக்கான அச்சுறுத்தலாகவே காண இயலும். மற்றவர்கள் மாற்றுக் கருத்து/அறிவிப்புகள்/ஆலோசனைகள் வழங்கும் போதும், இதே போக்கு அவரது முந்தைய உரையாடல்களிலும் காணப்படுகிறது. முதுகில் குத்துதல் போன்ற சொல்லாடல்களின் மூலம் துரோகம் போன்ற கருத்துத் தோற்றங்களை உருவாக்க முனைவதும் பங்களிப்புக்கு இணக்கமாக சூழலை உறுதி செய்யாது. ஒரு நிருவாகியிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நல்லிணக்கச் செயற்பாடாக இதனைக் காண முடியவில்லை. மற்ற நிருவாகிகள், அதிகாரிகள் தலையிட்டு அறிவுறுத்த வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:42, 4 சூன் 2017 (UTC)

உங்கள் முறையீட்டினை நாம் பதிவுசெய்துள்ளோம். தமிழ் விக்கியில் அச்சுறுத்தல்களை நாம் மிகவும் serious ஆக எடுத்துக் கொள்கிறோம். அந்த வகையில் உங்கள் முறையீட்டினை சுந்தர், மயூரநாதன், நான் ஆகியோர் பரீலித்து வருகிறோம். 1-3 நாட்களில் நாம் தகுந்த செயற்பாட்டினை அறியத் தருகிறோம். இந்தச் செயற்பாட்டுக்கு உதவ அல்லது அவதானிக்க வேறு நிர்வாகிகள் முன்வருவதை வரவேற்கிறோம். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:48, 5 சூன் 2017 (UTC)
நிலைத்தகவலுக்கு நன்றி. --இரவி (பேச்சு) 14:00, 5 சூன் 2017 (UTC)
நாம் விக்கியூடக நிறுவனத்திடம் இந்த விடயத்தை அணுகும் முறை, பரீசீலுக்கும் செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகள் கேட்டுள்ளோம். அவர்கள் வரும் சில நாட்களில் பதில்தருவதாகக் கூறி உள்ளார்கள். அவர்கள் பதில்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவோம். நன்றி. --Natkeeran (பேச்சு) 20:03, 6 சூன் 2017 (UTC)
@Ravidreams: நாம் எம்மிடம் இருந்த தகவல்களைத் தொகுத்து வழங்கி உள்ளோம். நீங்கள் விக்கிமீடியாவின் SuSa (https://meta.wikimedia.org/wiki/Support_and_Safety ) வினைத் தொடர்பு கொண்டு தகவல்கள் வழங்க விரும்பின் ca@wikimedia.org முகவரியைப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வதை நாம் ஊக்கப்படுத்துகிறோம். நன்றி. --Natkeeran (பேச்சு) 12:28, 8 சூன் 2017 (UTC)
தற்போதைய நிலையில், நான் இது தொடர்பாக SuSa (https://meta.wikimedia.org/wiki/Support_and_Safety) -வினை அணுக விரும்பவில்லை. அதே வேளை, அவர்கள் ஏதும் விளக்கம் கோரினால் ஒத்துழைக்கத் தயாராக உள்ளேன். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இது தொடர்பாக மற்ற தமிழ் விக்கிப்பீடியா அதிகாரிகள், நிருவாகிகள் தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுத்தால் போதுமானது. அனைத்துப் பயனர்களும் அனைவருடனும் கனிவுடன் பழகி பங்களிக்குமாறு இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. நன்றி. --இரவி (பேச்சு) 11:16, 11 சூன் 2017 (UTC)

ரவியின் விரோதச் செயற்பாடுகள்[தொகு]

ரவி என்மீது வன்மம் கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதில் ஒரு நடவடிக்கையாக விக்கிவிடுப்பு எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. என் உழைப்பை உறிஞ்சிவிட்டு, “வெளியே போ” என்பது போன்றது இரவியின் “விக்கி விடுப்புக் கோரிக்கை”.

"கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு" என்னும் உரையாடலில் எனக்கு மாற்று ஏரணம் கற்பிப்பதிலேயே குறியாக உள்ளார்.

பேச்சு:ஹிஸ்புல்லா - இங்கும் என்னை சண்டைக்கு இழுத்ததையும், ஏரணச் சுழற்சியில் உரையாடுவதையும் காணலாம்.

ஆங்கில விக்கி விதிகளைக் கொண்டு, இங்கு இறுக்கமாக நடந்து கொள்வதாகக் குற்றம்சாட்டும் இவர், அதே ஆங்கில விக்கி விதிகளை எனக்கெதிராக் திருப்பிவிடுகிறார். ரவிக்கு என்று ஒரு நியாயம் உள்ளதா? ரவி ஆலமரத்தடியில் கருத்துத் தெரிவித்தால், அது கொள்கையாகிவிடுகிறது. மற்றவர்கள் ஏதாவது தெரிவித்தால் அதற்கு காரணம் கற்பிக்கப்படுகிறது. தமிழ் விக்கியில் அதிகாரப்படிநிலை உள்ளதா?

எனக்கு பாதுகாப்புச் சிக்கல் ஏற்பட்ட வேளையில் அது குறித்து இங்கு கருத்திட, அதனைக் கருத்தில் எடுக்காது பதில் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு நபர் ரவி. நான் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் செய்த பின்பே, "அப்படியா விடயம்" என்றவாறு செயற்பட்டார்.

ஆலமரத்தடியில் “தமிழக ஆசிரியர்களின் பயிலரங்குக் கட்டுரைகளை நீக்குதல் குறித்து” என்பதன் கீழ் நானும் சிறிதரனும் தெரிவித்த கருத்துக்கள் ரவியினால் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டது ஏன்? பந்தி பந்தியாகக் கருத்திட்ட ரவி, இறுதியில் இதைத் தெரிவிப்பதில் ஏதேனும் தொடர்பாடல் குழப்பம் இருந்தால் வருந்துகிறேன். என்றுள்ளார். சாதாரண உரையாடலை இவரால் விளங்கிக் கொள்ள முடியாதா? அல்லது நான் எதுவும் பேசக்கூடாது என்று நினைக்கிறாரா? ஆக, நான் என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதில் இவர் குறியாகவுள்ளார்.

புன்னியாமீன் கட்டுரைகள் சிலவற்றை நீக்க விக்கி விதிகள் பேசிய ரவி தமிழக ஆசிரியர்களின் பயிலரங்குக் கட்டுரைகள் விடயத்தில் நெகிழ்வு காட்டுகிறார். தேனி சுப்பிரமணி அரசுடன் கொண்ட தொடர்பை விளக்குமாறு தெரிவித்த ரவி, அரசு பெரும் பொருட் செலவில் தமிழக ஆசிரியர்களின் பயிலரங்கு நடப்பதாகக் கருத்திட்டுள்ளார். இது எவ்வாறு இவருக்குத் தெரியும்? விக்கிக்கு வெளியில் என்ன உரையாடப்படுகிறது? ரவி விக்கியூடகத்தில் தொழில் செய்த/செய்யும் ஒருவர் தன்னார்வலர் செயற்பாடுகளில் சிலவற்றை திணிக்க முயல்வதாகவே உணர்கிறேன். இவர் தன் தொழில்சார் முன்னேற்றத்திற்கு த.வி.யை பயன்படுத்துகிறாரோ என ஐயமுள்ளது. பொருளாதார நன்மை, பணம், சலுகை என்பவற்றுடன் ஈடுபடும் ஒருவர் ஒரு உண்மையான தன்னார்வலராக இருக்க முடியாதது.

//நான் முழுமையான விக்கிவிடுப்பு எடுக்கும் நாளில் யாரும் கட்டாய விக்கிவிடுப்பு எடுக்கும் நிலை வரலாம்.// என்று கூறியுள்ளதை பயனர்களுக்கான அச்சுறுத்தலாகவே காணுவதாக குறிப்பிடும் இவர் விக்கிக்கு வெளியில் என்னைப்பற்றி விமர்சனங்கள் இடம்பெறுவதாகவும் ஆகவே நான் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என, தனிப்பட்ட ரீதியாக மறைமுக அச்சுறுத்தல்கள் விடுத்துள்ளார். தற்போது அப்பயனர்கள் குறிப்பிட்டார்களா அல்லது வேண்டுமென்றே முரண்பாடு கொள்ளவதற்காச் சொன்னாரா என ஐயமுறவுள்ளது.

மேலும், பல இங்கு தெரிவிக்க முடியாத, என் பாதுகாப்பு தொடர்புள்ள கருத்துகள் இருப்பதால், என்னை நேரடியாச் சந்திக்கும் அதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் என்னால் தெரிவிக்க முடியும். அவ்வாறு ஒருநிலை வரும்போது, நான் விக்கிவிடுப்பு எடுக்கிறேன். ரவி கட்டாய விக்கிவிடுப்பு எடுக்க வேண்டும். --AntanO 02:46, 5 சூன் 2017 (UTC)

//ரவி என்மீது வன்மம் கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.//
இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியையும் இணக்கச் சூழலையும் கருத்திற் கொண்டு எப்பயனர் ஆயினும் தயங்காது கருத்துகளை முன்வைப்பேன்.
//இதில் ஒரு நடவடிக்கையாக விக்கிவிடுப்பு எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.//
ஒரு நெடுநாள் பயனரும் பள்ளி மாணவருமான சிறீகர்சனிடம் தேவையின்றி மிகக் கடுமையாக நீங்கள் நடந்து கொண்டது எனக்கு உறுத்தலாக அமைந்தது. மாற்றுக் கருத்து கூறும் அனைவரிடமும், இதே போன்ற உரையாடல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். இத்தகைய போக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் இணக்கச் சூழலுக்கு உதவாது. ஒரு வேளை, உங்கள் தனிப்பட்ட சூழல் காரணமாக நீங்கள் விக்கி உளைச்சலில் இருந்தால், விக்கி விடுப்பு எடுத்து மீண்டும் புத்துணர்வுடன் திரும்பி வருவது என்று கருதியே விக்கி விடுப்பு ஆலோசனையை முன்வைத்தேன். இவ்வாறு ஆலோசனைகள் வழங்குவது விக்கியுலகில் இயல்பே. இதனையும், தாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் முதலில் தனிப்படவே உங்களுக்குத் தெரிவித்தேன். நீங்கள் பொதுவில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதன் பெயரிலேயே உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதிவு செய்தேன்.
//என் உழைப்பை உறிஞ்சிவிட்டு, “வெளியே போ” என்பது போன்றது இரவியின் “விக்கி விடுப்புக் கோரிக்கை”. //
விக்கிப்பீடியா ஒரு படைப்பாக்கப் பொதுமத் திட்டம். இங்கு பங்களிப்பவர்கள் தாமாக விரும்பித் தன்னார்வமாகப் பங்களிப்பவர்கள். அனைவரின் உழைப்பும் பொதுச் சொத்து. இங்கு யாரும் யாரையும் வெளியேறக் கோர முடியாது.
//"கிறிஸ்தவ சொற்களில் கிரந்தப்பயன்பாடு" என்னும் உரையாடலில் எனக்கு மாற்று ஏரணம் கற்பிப்பதிலேயே குறியாக உள்ளார்.
பேச்சு:ஹிஸ்புல்லா - இங்கும் என்னை சண்டைக்கு இழுத்ததையும், ஏரணச் சுழற்சியில் உரையாடுவதையும் காணலாம். //
விக்கி விதிகளுக்கு உட்பட்டு உங்களுடன் உரையாடுவதையே சண்டைக்கு இழுப்பதாக நினைத்தால் ஒன்றும் செய்ய இயலாது.
//தமிழ் விக்கியில் அதிகாரப்படிநிலை உள்ளதா? //
இல்லை. ஆனால், ஒருவர் கருத்தை முன்வைக்கும் முறையின் காரணமாக இணக்க முடிவை எட்ட வைக்க முடியும். கிறித்துவம் தொடர்பான உரையாடலில் பவுல் கருத்தினை முன்வைத்த முறையைக் கவனியுங்கள்.
//எனக்கு பாதுகாப்புச் சிக்கல் ஏற்பட்ட வேளையில் அது குறித்து இங்கு கருத்திட, அதனைக் கருத்தில் எடுக்காது பதில் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு நபர் ரவி. நான் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் செய்த பின்பே, "அப்படியா விடயம்" என்றவாறு செயற்பட்டார். //
இலங்கையின் சூழலை நேரடியாக உணராத பயனர்களுக்கு அங்குள்ள பாதுகாப்பு நுணுக்கங்கள் சட்டெனப் புரியும் என எதிர்பார்க்க முடியாது. நீங்கள் மின்மடலில் கோரிக்கை விடுத்த பின் உடனடியாக அவசரம் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
//ஆலமரத்தடியில் “தமிழக ஆசிரியர்களின் பயிலரங்குக் கட்டுரைகளை நீக்குதல் குறித்து” என்பதன் கீழ் நானும் சிறிதரனும் தெரிவித்த கருத்துக்கள் ரவியினால் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டது ஏன்? பந்தி பந்தியாகக் கருத்திட்ட ரவி, இறுதியில் இதைத் தெரிவிப்பதில் ஏதேனும் தொடர்பாடல் குழப்பம் இருந்தால் வருந்துகிறேன். என்றுள்ளார். சாதாரண உரையாடலை இவரால் விளங்கிக் கொள்ள முடியாதா? அல்லது நான் எதுவும் பேசக்கூடாது என்று நினைக்கிறாரா? //
தொடர்பாடல் பிழை என்று ஏற்கனவே வருத்தம் தெரிவித்துள்ளேன். இணையம் மூலமாகச் செயற்படும் விக்கிப்பீடியா போன்ற சிக்கல் மிகுந்த திட்டங்களில் தொடர்பாடல் பிழைகள் ஏற்படுவது இயல்பு. திறந்த மனதுடன் செயற்படும் தன்மை இருந்தால் போதுமானது.
//புன்னியாமீன் கட்டுரைகள் சிலவற்றை நீக்க விக்கி விதிகள் பேசிய ரவி தமிழக ஆசிரியர்களின் பயிலரங்குக் கட்டுரைகள் விடயத்தில் நெகிழ்வு காட்டுகிறார். //
புன்னியாமீனுக்கு விக்கி விதிகள் பற்றி பலரும் எடுத்துரைத்தார்கள். அதே போல் அரசுக்கும் பலர் எடுத்துரைத்து வருகிறார்கள். அரசு ஆசிரியர்களும் அதிகாரிகளும் பங்கேற்றுள்ள வாட்சாப்பு குழுமத்தில் பங்கேற்கும் பயனர்கள் இதனை அறிவர். விக்கியிலேயே பேச்சுப் பக்கங்களில் பல்வேறு குறிப்புகள் பகிரப்பட்டு வருகின்றன. அரசும் நமது ஆலோசனைகளை ஏற்று தக்க மாறுதல்களைச் செயற்படுத்தி வருவதால் கூட்டுறவின் முழுக்கால, தொலைநோக்கு முக்கியத்துவம் கருதி நெகிழ்வு காட்டுகிறோம். அரசு தரவுகளைத் தந்து ஓர் ஆண்டு காலம் வரை காத்திருந்து தக்க தரக் கண்காணிப்பு முறைகளுடன் கோயில் கட்டுரைகளைப் பதிவேற்றியதற்கு ஒத்துழைப்பு நல்கியது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முறையாக உறவாடி வரும் ஒரு நிறுவனத்துடன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயற்பட முடியாது. விக்கிமீடியா இயக்கத்தில் இத்தகைய கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனுபவம் உள்ளவர்கள் இதனை அறிவர்.
//தேனி சுப்பிரமணி அரசுடன் கொண்ட தொடர்பை விளக்குமாறு தெரிவித்த ரவி, அரசு பெரும் பொருட் செலவில் தமிழக ஆசிரியர்களின் பயிலரங்கு நடப்பதாகக் கருத்திட்டுள்ளார். இது எவ்வாறு இவருக்குத் தெரியும்? //
30 மாவட்டங்களில் மொத்தம் 3000 ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்க உணவு, தங்கும் இடம், போக்குவரத்து என்று எவ்வளவு செலவாகும் என்று இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி அனுபவம் உள்ள கணக்கு போடத் தெரிந்த எல்லாருக்கும் ஊகிக்கத் தெரியும்.
//விக்கிக்கு வெளியில் என்ன உரையாடப்படுகிறது? ரவி விக்கியூடகத்தில் தொழில் செய்த/செய்யும் ஒருவர் தன்னார்வலர் செயற்பாடுகளில் சிலவற்றை திணிக்க முயல்வதாகவே உணர்கிறேன்.//
தமிழ் விக்கிப்பீயா - தமிழக அரசு செயற்பாடுகள் யாவும் நாம் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செயற்படுத்தப்படுகிறது. உலகத்திலேயே இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தந்ததைக் கூட்டாக எழுதி விக்கிச் சமூகம் இணையத்திலும் நேரிலும் கையெழுத்திட்டு வழிநடத்துவது நாம் மட்டும் தான்.

நடைமுறையில் இதில் என் பங்கு மிகவும் குறைவு. விக்கி முறைகள் பற்றி சில ஆலோசனைகள் வழங்குவதோடும் இயன்றால் சில பயிற்சிகளுக்குச் செல்வதோடும் சரி. இந்தக் கூட்டுறவில் தங்களுக்கு உடன்பாடு இல்லையெனில், கூட்டுறவை எப்படி முறித்துக் கொள்வது என்பற்கான வழிமுறையும் ஒப்பந்தத்திலேயே உள்ளது. அதற்கான முன்னெடுப்பை நீங்கள் மேற்கொள்ளலாம்.

//இவர் தன் தொழில்சார் முன்னேற்றத்திற்கு த.வி.யை பயன்படுத்துகிறாரோ என ஐயமுள்ளது. பொருளாதார நன்மை, பணம், சலுகை என்பவற்றுடன் ஈடுபடும் ஒருவர் ஒரு உண்மையான தன்னார்வலராக இருக்க முடியாதது.//
என்னுடை தற்போதைய விக்கிமீடியா அறக்கட்டளைப் பணிக்கும் தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு முயற்சிகளுக்கும் தொடர்பு இல்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இக்கூட்டுறவுக்குத் தமிழ் விக்கிப்பீடியா சமூகமே முதன்மை stakeholder. 2005 முதலே பரப்புரை, நிறுவனக் கூட்டுகளில் தன்னார்வமாக ஈடுபட்டு வந்துள்ளேன். அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய என் செயற்பாடுகளைப் பார்க்கிறேன். நிச்சயம் ஒரு கட்டத்தில் என் பணியும் தன்னார்வப் பங்களிப்பும் இவ்வாறு நோக்கப்படும் என்பதால் இன்னும் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயற்பட்டே வந்திருக்கிறேன்.
இக்கூட்டுறவின் பெறுமதியை மதிப்பிட வேண்டுமெனில் ஒட்டுமொத்தமாக அணுகுவதே தகும். தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் ~20000 கட்டுரைகள் ஊராட்சிகள், கோயில்கள் தொடர்பாகப் பதிவேறி உள்ளன. 2000 நாட்டுடைமையான நூல்கள் விக்கிமூலத்தில் பதிவேறியுள்ளன. 5,00,000 பக்கங்கள் விக்கிமூலத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. ஆயிரணக்கணக்கான ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆக்கங்கள் அனைத்தும் படைப்பாகப் பொதும உரிமத்தில் வெளியாகியுள்ளன. உலகிலேயே இவ்வாறு செய்த இன்னொரு அரசு கிடையாது. எனவே, ஆசிரியர் பயிற்சிகள் மூலம் வரும் கட்டுரைகளின் போதாமைகளை மட்டும் கருத்தில் கொண்டு இக்கூட்டு முயற்சியைப் பார்ப்பது முழுமையான அணுகுமுறையாக இருக்காது.
//இவர் விக்கிக்கு வெளியில் என்னைப்பற்றி விமர்சனங்கள் இடம்பெறுவதாகவும் ஆகவே நான் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என, தனிப்பட்ட ரீதியாக மறைமுக அச்சுறுத்தல்கள் விடுத்துள்ளார். தற்போது அப்பயனர்கள் குறிப்பிட்டார்களா அல்லது வேண்டுமென்றே முரண்பாடு கொள்ளவதற்காச் சொன்னாரா என ஐயமுறவுள்ளது.//
தனிப்பட்ட உரையாடல்களில் பகிர்ந்த செய்திகளை out of context எடுத்துரைப்பது முறையன்று. தவிர்க்க வேண்டுகிறேன். உண்மைக்கு மாறான எதனையும் யாரிடமும் தனிப்படவோ பொதுப்படவோ குறிப்பிடும் வழக்கம் எனக்கு இல்லை. உங்கள் நலனிலும் செயற்பாட்டிலும் அக்கறை கொண்டு தனிப்பட விடுத்த செய்திகளை அச்சுறுத்தலாக நீங்கள் புரிந்து கொண்டதற்கு வருந்துகிறேன்.
//ரவி கட்டாய விக்கிவிடுப்பு எடுக்க வேண்டும்.//
@Mayooranathan, Sundar, and Natkeeran:இதனை நேரடி மிரட்டலாகக் கருதி தக்க நடவடிக்கை எடுக்குமாறு மற்ற நிருவாகிகளையும் அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:09, 5 சூன் 2017 (UTC)
ஏரணச் சுழற்சி முறையில் பக்கப் பக்கமாக உரையாடுவதைத் தவிர்த்து, சுருக்கமாக குறிப்பிடுகிறேன். நான் காரணமின்றி இங்கு அறிக்கையிடவில்லை. ஒரு பிரச்சனைக்கு எப்போதும் மூலம் இருக்கும். ஆகவே அது விக்கிக்குள்ளும் இருக்கலாம் வெளியிலும் இருக்கலாம். ஆகவே என் தரப்பு நிலையை நியாயப்படுத்த எனக்குள்ள உரிமையை மறுக்கக்கூடாது. --AntanO 06:42, 5 சூன் 2017 (UTC)
அன்ரன், உங்கள் குற்றச்சாட்டுக்களுக்கு இரவி விளக்கம் அளித்துள்ளார். தனிப்பட்ட அளவில் அரசின் ஊடாட்டத்தில் சந்திக்கக்கூடிய கட்டுப்பாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவையே. இதை நானும் இத்தகைய ஒருங்கிணைப்பில் ஈடுபட்டிருந்த பிற விக்கியர்களும் சந்தித்திருக்கிறோம். இதுபோன்ற ஒத்துழைப்புக்களில் நமது புரிந்துணர்வு ஒப்பந்தத்தையொட்டி, விக்கியின் அடிப்படைக்கொள்கைகளுக்கு ஊறுவிளைவிக்காமல் அதேவேளை அவர்கள் இடத்திலிருந்துபார்த்து இணக்கமாக வழிநடத்தவேண்டியிருக்கும். அந்த நோக்கில் பல விக்கிப்பீடியர்களும் அதுதொடர்பில் கருத்திட்டிருக்கிறார்கள். நான் அடிக்கடி பார்க்காவிட்டாலும் ஓர் உரையாடலில் மயூரநாதன் சில பரிந்துரைகளை வைத்திருந்தார் என நினைவுள்ளது. விக்கி விடுப்பைப்பொருத்தவரை உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, கட்டாயப்படுத்தவும் இயலாது.
இரவி, உங்களைக்கட்டாய விடுப்பு எடுக்கவேண்டும் என்று அன்ரன் எழுதியது சரியன்று எனினும் அதைமட்டும் பார்க்கையில் நடவடிக்கை எடுக்கவேண்டியதிருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் மொத்தத்தில் நன்னயம் கருதலில் குறையுள்ளது. இங்கு பல இழைகளிலுள்ள உரையாடல்களைக் கவனித்துள்ள விக்கியர்களின் கருத்தை அறிந்து தேவையேற்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம். -- சுந்தர் \பேச்சு 06:54, 5 சூன் 2017 (UTC)

அன்டன், நீங்கள் தொடர்ந்தும் எல்லா விடயங்களிலும் புரிந்துணர்வு இன்றி எதிர்மறையாகவும், இடக்கு முடக்காகவுமே கருத்துக்களைத் தெரிவித்து வருகிறீர்கள். பயனர் ஒருவர் கூறிய ஆலோசனை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தேவையற்ற விதத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. விக்கி விடுப்பு எடுக்கும்படி ஆலோசனை கூறியதற்காகக் கோபப்படுகிறீர்கள். எந்தவொரு பயனரையும் விக்கி விடுப்பு எடுக்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது என நானும், பிற பயனர்களும் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருக்கிறோம். ஆனால், நீங்கள் இரவி "கட்டாய" விக்கி விடுப்பு எடுக்க வேண்டும் என்கிறீர்கள். அது என்ன "கட்டாய விக்கிவிடுப்பு"? அவ்வாறு கட்டாயமாக விக்கிவிடுப்பு எடுக்குமாறு கூற எவருக்கும் உரிமை கிடையாது. தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்துவதில் உங்களது பணிகள் குறித்து எனக்கு உங்கள் மீது மதிப்பு உண்டு என நான் உங்களுக்கு ஏற்கெனவே கூறியுள்ளேன். ஆனால், இவ்வாறான செயற்பாடுகளின்போது பிற பயனர்களுடன் நீங்கள் உரையாடும் விதம் எல்லா நேரங்களிலும் எனக்கு ஏற்புடையது அல்ல. பல ஆர்வமுள்ள நீண்டகாலப் பயனர்களின் மனது புண்படும்படியாக உங்கள் கருத்துக்கள் இருந்ததைப் பலரும் கவனித்திருப்பார்கள். இவ்வாறான சூழ்நிலையில் வெளியில் விமர்சனங்கள் வருவதைத் தடுக்க முடியாது. நாம் எல்லா நேரங்களிலும் இணையத்தில் மட்டும் விக்கிப்பணி புரிவதில்லை. பரப்புரை தொடர்பாக வெளியிலும் பலரைச் சந்திக்க வேண்டியுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டியும் உள்ளது. இவ்வாறான குற்றச்சாட்டுகளைக் கவனத்துக்கு எடுத்து உரிய முறையில் கையாளவேண்டியது தமிழ் விக்கி மேம்பாட்டில் ஆர்வமுள்ள எல்லோரதும் கடமை. எனவே உங்களைப்பற்றிய வெளி விமர்சனங்கள் குறித்து இரவி உங்களிடம் தெரிவித்தது ஒரு நேர்மையான நடவடிக்கைதான். உங்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக இரவி இது குறித்துப் புனைந்து கூறுகிறார் என்று நீங்கள் கருதுவது தவறு. இத்தகைய விமர்சனங்கள் என்னுடைய காதுக்கும் எட்டியுள்ளன. எனவே இத்தகைய விமர்சனங்களைத் தடுக்க வேண்டுமானால் நீங்கள்தான் முயற்சி செய்யவேண்டும். முன்னர் உங்களுக்குப் பாதுகாப்புப் பயமுறுத்தல் ஏற்பட்டபோது மற்ற அதிகாரிகளும் நமது செயற்பாடுகள் குறித்துக் கலந்து பேசியபோதும் முன்னின்று தேவையான நடவடிக்கைகளை எடுத்தவர் இரவியே. எனவே இது குறித்து இரவி மீது குற்றம் சுமத்துவது வருந்தத்தக்கது. இது போன்ற பிரச்சினைகளில் எவரது பாதுகாப்பையும் விக்கிப்பீடியா உறுதி செய்ய முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இத்தகைய சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதபடி கவனமாக நடந்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பு. ஆனால் நீங்கள் தொடர்ந்தும் இவ்வாறான விடயங்களில் வாக்குவாதங்களில் ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது. இது உங்களுக்கு மட்டுமன்றித் தமிழ் விக்கிப்பீடியாவுக்கே ஆபத்தானது. தயவு செய்து மற்றவர்களுடைய கருத்துக்களையும் செவிமடுங்கள். பிற பயனர்கள் உங்களுடன் நன்நோக்கில் உரையாடுவதற்கு இடமளியுங்கள். உங்களுடன் உரையாடுவதற்கு மற்றவர்கள் தயங்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டாம். ---மயூரநாதன் (பேச்சு) 08:06, 5 சூன் 2017 (UTC)

திருத்த வேண்டியிருந்தால், திருத்திக் கொள்ள என் ஆளுமையில் இடமுள்ளது. பொதுவாகக் குறிப்பிடாமல், குறிப்பிட்டுச் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பதிலைப் பார்க்கும்போது, ஏற்கெனவே என்மீது கொண்டிருந்த எதிர்மறை எண்ணங்களை வெளிப்பட்டது போன்று உள்ளது. அவ்வாறு இல்லையாயின் என் கூற்றினை நிராகரித்துவிடுங்கள். //பயனர் ஒருவர் கூறிய ஆலோசனை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தேவையற்ற விதத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.// இல்லை, நீங்கள் அவ்வாறான முன்கருத்தைத் கொண்டுள்ளீர்கள். என் பக்க நியாயத்திற்கான காரணத்தை தெளிவாகக் காட்ட உங்களைச் சந்திக்கலாமா எனக் கேட்டுள்ளேன் என்பதையும் கருத்திற் கொள்ளுங்கள். அல்லது, என்மீது குற்றம் மட்டும்தான் தெரிவிக்கப் போகிறீர்கள் என்றால், இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. ரவி கேட்டுக் கொண்டபடி நடவடிக்கை எடுங்கள். அப்போதும் நான் பதிலளிக்கலாமா என்பதையும் தெளிவுபடுத்தினால் நல்லது. நன்றி. --AntanO 09:16, 5 சூன் 2017 (UTC)
"எந்தவொரு பயனரையும் விக்கி விடுப்பு எடுக்கும்படி நிர்ப்பந்திக்க முடியாது என நானும், பிற பயனர்களும் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருக்கிறோம்." என்று உங்களுக்குத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் உங்களை தனிப்பட சந்திக்க முடியாது. இருப்பினும் நீங்கள் இதுவரை பகிர்ந்து கொண்ட விபரங்களைத் தவிர்த்து மேலதிக விபரங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பின் தயந்து பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 15:54, 5 சூன் 2017 (UTC)

மின்னஞ்சலை உங்கள் மூவருக்கும் அனுப்பியபோது ரவிக்கும் அதன் பிரதியிட்டிருந்தேன். ஆனால் என்னைத் தவிர்த்து உங்கள் மூவருக்கும் பதில் அனுப்பியிருந்தார். அதில் என்ன இருந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் இதுவரைக்கும் உங்களில் யாருக்கும் தனிப்பட எழுதி தன்னிலை விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், சில செயற்பாடுகள் "பழைய கணக்கை" தீர்த்துவிட வேண்டும் என்பதுபோல் உள்ளது. சட்டம் இயற்றுபவரும் அதை செயற்படுத்துபவரும் ஒன்றானால் நீதி என்பது கேள்விக் குறிதான். நீயொரு பயங்கரவாதி என முத்திரை குத்துவது என்று முடிவெடுத்துவிட்டால், அந்தப் பயங்கரவாதி என்ற பெயரைத் தயங்காமல் ஏற்றுக் கொள்வேன். நான் ஏற்கெனவே குறிப்பிட்டுவிட்டேன். சில சிக்கலான விடயங்களும், பாதுகாப்புத் தொடர்பான அம்சங்களும் இருப்பதால் பொதுவெளியிலோ, தனிப்பட்ட விதத்தில் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது. இதனையே உங்கள் எல்லோருக்கும் மின்னஞ்சலில் தெரிவிக்க, ரவி அதற்கு "out of context" என மறுப்புத் தெரிவித்திருந்தார். இப்போது நீங்களும் சந்திக்க முடியாது என்றுவிட்டீர்கள். எனவே இதற்குமேல் நான் இது தொடர்பில் உரையாடுவதில் அர்த்தம் இல்லை என்றாகிவிட்டது. --AntanO 18:04, 6 சூன் 2017 (UTC)

அன்ரன். தயவுசெய்து. துரோகம், பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தல் உருவாக்கும் சொல்லாடல்களைத் தவிர்க்கவும். அவ்வாறு நீங்கள் பயன்படுத்துவது அச்சுறுத்தலாக அமைவதாக பிற பயனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவ்வாறே நானும் உணர்கிறேன். நீங்கள் தனிப்பட மடல் அனுப்பி இருந்தாதேலேயே நாம் தனிப்பட்ட அணுக வேண்டி உள்ளது. ரவி இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளதால், இந்தச் முறையீடுகள் பற்றிய உரையாடல்களில் அவர் இணைக்கப்படவில்லை. நாம் விக்கியூடக நிறுவனத்திடம் இந்த விடயத்தை அணுகும் முறை, பரீசீலுக்கும் செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகள் கேட்டுள்ளோம். அவர்கள் வரும் சில நாட்களில் பதில்தருவதாகக் கூறி உள்ளார்கள். அவர்கள் பதில்களைக் கருத்தில் கொண்டு செயற்படுவோம். நன்றி. --Natkeeran (பேச்சு) 20:03, 6 சூன் 2017 (UTC)
@AntanO: நாம் எம்மிடம் இருந்த தகவல்களைத் தொகுத்து வழங்கி உள்ளோம். நீங்கள் விக்கிமீடியாவின் SuSa (https://meta.wikimedia.org/wiki/Support_and_Safety ) வினைத் தொடர்பு கொண்டு தகவல்கள் வழங்க விரும்பின் ca@wikimedia.org முகவரியைப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வதை நாம் ஊக்கப்படுத்துகிறோம். நன்றி. --Natkeeran (பேச்சு) 12:28, 8 சூன் 2017 (UTC)

Improved search in deleted pages archive[தொகு]

Please help translate to your language

During Wikimedia Hackathon 2016, the Discovery team worked on one of the items on the 2015 community wishlist, namely enabling searching the archive of deleted pages. This feature is now ready for production deployment, and will be enabled on all wikis, except Wikidata.

Right now, the feature is behind a feature flag - to use it on your wiki, please go to the Special:Undelete page, and add &fuzzy=1 to the URL, like this: https://test.wikipedia.org/w/index.php?title=Special%3AUndelete&fuzzy=1. Then search for the pages you're interested in. There should be more results than before, due to using ElasticSearch indexing (via the CirrusSearch extension).

We plan to enable this improved search by default on all wikis soon (around August 1, 2017). If you have any objections to this - please raise them with the Discovery team via email or on this announcement's discussion page. Like most Mediawiki configuration parameters, the functionality can be configured per wiki. Once the improved search becomes the default, you can still access the old mode using &fuzzy=0 in the URL, like this: https://test.wikipedia.org/w/index.php?title=Special%3AUndelete&fuzzy=0

Please note that since Special:Undelete is an admin-only feature, this search capability is also only accessible to wiki admins.

நன்றி! CKoerner (WMF) (talk) 18:40, 25 சூலை 2017 (UTC)

அன்டனின் பயனர் தடைச் செயற்பாடுகள்[தொகு]

அன்டனின் துப்புரவுப் பணிகளும் விக்கிப்பீடியா மீதான அக்கறையும் அனைவரும் அறிவோம். ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் என்பதை முன்வைத்து அவர் புதுப்பயனர்களை அணுகும் விதம் ஏற்புடையதன்று. ஒரு புதுப்பயனர் வந்து நான்கு கட்டுரைகள் எழுதுவதற்குள் அவரைத் தடை செய்து விடுவோம் என்று அச்சுறுத்திக் கொண்டே இருப்பது சரியா? (காண்க - பயனர் பேச்சு:TNSE SIVA VLR#May 2018 மற்றும் பயனர் பேச்சு:TNSE SIVA VLR#குறிப்பு 2 வருகிற பயனர்களை எல்லாம் இப்படி விரட்டியடித்தால் யார் தான் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது? விக்கிப்பீடியாவின் புதியவர்களை ஈர்க்க மிகவும் சிரமப்படுகிறோம். இது போன்ற மிகக் கடுமையான அணுகுமுறைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து ஏற்கனவே பலரை மன உளைச்சல் அடையச் செய்து பங்களிப்புகளை நிறுத்திக் கொள்ளச் செய்து விட்டது. தமிழ் விக்கிப்பீடியா போன்ற வளரும் விக்கிக்கு இது மிகவும் பாதகமான செயல். ஏற்கனவே அன்டனுக்கும் எனக்கும் கடந்த காலத்தில் முரண்கள் தோன்றியுள்ளதால் இது தொடர்பாக நான் தொடர்ந்து உரையாடத் தயங்குகிறேன். மற்ற நிருவாகிகள் கவனித்து உரிய அறிவுறுத்தல்களைத் தர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 06:12, 29 மே 2018 (UTC)

பதில்கள் குறித்த பயனரின் பேச்சுப் பக்கத்தில் உள்ளது. //இது போன்ற மிகக் கடுமையான அணுகுமுறைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து ஏற்கனவே பலரை மன உளைச்சல் அடையச் செய்து பங்களிப்புகளை நிறுத்திக் கொள்ளச் செய்து விட்டது. // எது செய்யலாம், எது செய்யக்கூடாது என்ற நடைமுறைக்கேற்பவே இங்கு செயற்படுகிறேன். அல்லது புதிதாக எது செய்யலாம், எது செய்யக்கூடாது என்ற நடைமுறையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 06:32, 29 மே 2018 (UTC)
 • தகவலுழவனின் முன்மொழிவு ; இதுபோல வழிகாட்டுதல்களை ஆன்டன் பயனர்களிடம் பின்பற்றக் கோருகிறேன். எனக்கும், செல்வாவுக்கும் கருத்துமுரண் வந்தபோது, சுந்தர் எனக்குக் காட்டிய அறிவுறுத்தல் இங்கும் பொருந்தும். அதன் சுருக்கம்: "இணையத்தில் செயற்படும் போது, சொற்களின் ஆழத்தை விட, ஒரு பயனர் என்ன சொல்ல வருகிறார்? என்பதையே புரிந்து கொள்ளவேண்டும்" என்பதன் படியே மேற்கண்ட உரையாடலில் இணக்கம் கண்டேன். ஆனால் ஒரு புது பயனரோ ஏற்கனவே குறிப்பிட்ட துறையில் செயற்படுபவர்களோ, அனைத்து விக்கி விதிகளையும் அறிந்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனவே, யாரிடமும் சற்று பொறுமையாக செயற்பட அவரை கோருகிறேன். தமிழும், தமிழரும் பல்வேறு துறைகளில் பின்னுக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் நமது விக்கிக் குடும்பத்தில் ஒரு பங்களிப்பாளரை எப்படி பேணவேண்டும் என்பதில் புதிய நடைமுறைகள் உருவாக்கப் பட்டே ஆக வேண்டும். பல ஆங்கில விதிகள் விரிந்த, பெருத்த ஆங்கில விக்கிப்பீடியாவின் சமூகத்தினை காக்க மட்டுமே உதவும். இங்கு நமக்கான பேணல் விதிமுறைகளை உருவாக்குதலும், விக்கியின் தூண்களில் ஒன்றே. இனி ஒரு விதி செய்வோம். ..உங்களுக்கு செயற்பட எது தடையாக உள்ளது? என்ற வினாவை பலர் தொடர்ந்து, என்னிடம் கேட்டதால் தான், நான் ஓரளவு பங்களிப்புகளை நிறைவாகச் செய்துள்ளேன். அதையே நாம் புதிய விதியாக அமைக்கக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 06:46, 29 மே 2018 (UTC)

@Info-farmer: சற்றுத் தள்ளிப்போட்டு, பதிலளிக்க எண்ணியிருந்தேன். இங்குள்ள குற்றச்சாட்டானது புதுப்பயனர்களை அணுகும் விதம் ஏற்புடையதன்று என்றும் அதற்கு வலுவாக அச்சுறுத்தல், விரட்டியடித்தல் போன்ற சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டன. நீங்கள் பதிலுக்கு பொறுமையாக செயற்படுமாறும், மேலும் அதற்கு சில எடுத்துக்காட்டுக்களைத் தந்திருந்தீர்கள். எது சரி, எது பிழை என்பது ஒரு புறமிருக்க, என்னுடைய பொதுவான (உங்களை மட்டும் அல்ல) சில கேள்விகளும் கருத்துக்களும் பின்வருமாறு:

 • 29 மே 2018 அன்று இங்கு முறையிடப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட என் பங்களிப்பை வெகுவாகக் குறைத்திருந்தேன். பதிலுக்கு பயனர்களிடம் எவ்விதம் அணுகுகிறார்கள் என்பதைக் கவனித்தேன். கவனித்ததில் நான் பெற்றுக் கொண்டது பூச்சியம். மேலும், ஆசியர்கள் உருவாக்கும் கட்டுரைகள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டினாலும் ஏறக்குறைய ஒரு வருடம் குறைவாகப் பங்களித்தேன் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
 • குறிப்பிட்ட பயனர் 3 வரிக்குக் குறைவான கட்டுரைகள் உட்பட, கலைக்களஞ்சியத்திற்கு அமையாத கட்டுரைகளை எழுதிக் குவிக்கிறார். யாரும் இதைப் பற்றி அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. யார் அவருக்கு வழிகாட்டினீர்கள்? அவர் எழுதும் கட்டுரைகளில் எந்தளவுக்கு உதவி செய்துள்ளீர்கள்?
 • இந்தப் பயனர் ஒரு வருடமாகப் பங்களிக்கிறார். மேலும். இவர் போன்ற ஆசியர்களினால் தொடங்கப்பட்ட, ஒரு வருடத்திற்கு முன்பான பல நூற்றுக் கணக்காக கட்டுரைகள் பல அப்படியே உள்ளன. என்ன தீர்வு?
 • அன்று, 3 வரிக் கட்டுரைகள் உட்பட புண்யமீன் போன்றோர் உருவாக்கிய கட்டுரைகளுக்காக வாதப் பிரதிவாதம் செய்தவர்களின் நிலை என்ன? இன்று, ஆசியர் பயிற்சி மூலம் உள்வாங்கப்பட்ட கட்டுரைகள் எவ்விதம் கலைக்களஞ்சியக் கட்டுரையாகிறன?
 • தரம் தொடர்பில் த.வி நிலைப்பாடு/கொள்கை என்ன?
 • ஒரு நிருவாகி செயற்படாமல் இருக்க வேண்டும் என்று அல்லது நீங்கள் சொல்வது போல்தான் செயற்பட வேண்டும் என்கிறீர்களா? கருத்துக்குச் செயற்படாத பயனரை என்ன செய்ய வேண்டும்? நீங்கள் என்ன செய்வீர்கள்? என்ன செய்தீர்கள்?
 • ஒரு நிருவாகியின் செயற்பாட்டில் தலையீடு செய்ய இங்கு எவ்வகையான கொள்கை இருக்கிறது? தடை மீளாய்வுக் கொள்கை என்ன? அல்லது அந்தந்த இடத்தில் முடிவு எடுக்கப்படுமா? ஆம் என்றால் கொள்கைப் பக்கம் காட்டுக.
 • ஒரு நிருவாகி பிழை செய்கிறார் என கொள்கைசாரா நிலையில் முறையிடல் அச்சுறுத்தல், விரட்டியடித்தல் போன்றவற்றிற்கான படிமுறையா?
 • புதுப் பயனர் அணுகுமுறை என்ன? அது எவ்விதம் இங்கு மேற்கொள்ளப்படுகிறது? 10 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் விக்கியை வளரும் விக்கி என குறைத்து மதிப்பிட்டு, தயவு செய்து சாக்குப் போக்குச் சொல்லாதீர்கள்.
 • இப்படிச் செய்வோம், அப்படிச் செய்வோம் என்று தயவுசெய்து குறிப்பிடாதீர்கள். இது ஒரு தவறாக மன அமைவு. “நன்றே செய், அதை இன்றே செய்!”
 • கட்டுரைகளின் தரம் இன்மை, போதிய உள்ளடக்கம் இன்மை, அடிப்படை அமைப்பு இன்மை என்பன யாருக்கும் உதவப் போவதில்லை. ஆண்டாண்டு காலமாக பல கட்டுரைகள் அவ்வாறே இங்குள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். நாம் ஒரு ஒரு வலைத்தளம் வைத்திருக்கிறீர்கள் என்றால், இவ்வாறு கட்டுரைகளை உருவாக்குவோமா? பொதுச் சொத்து என்பதால் சிரத்தை இல்லாது செயற்படுகிறோமா?
 • ஒரு முறை ஆங்கில விக்கிபோன்று தரமுள்ள கட்டுரைகளை உருவாக்கும் யோசனையைத் தெரிவிக்க அதற்கு மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து (இதுவும் ஒருவித விரட்டியடித்தலோ) நானும் 3 வரிக் கட்டுரைகளை உருவாக்குகிறேன். ஆனாலும், என் திருப்திக்காக ஒரு வலைப்பூவைக் கொண்டுள்ளேன். அங்கு இருக்கும் கட்டுரைகள் இங்குதான் இருந்திருக்க வேண்டியவை. அங்கு சில $$$ கிடைக்கும் என்பது மேலதிகச் சிறப்பு. இருக்கும் பயனர்களை தக்க வைத்துக் கொள்ள என்ன முறை உள்ளது?
 • விக்கிக்கு வெளியில் பயனர் பற்றி கருத்துச் சொல்வது அல்லது முறையிடுவது அல்லது வரையறுக்கப்படாத விக்கி தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்வது ஒரு மிகவும் தீமையாகப் பார்க்கிறேன். உறவை வலுப்படுத்த, சமூக ஒன்றுமை என பல காரணங்கள் கூறினாலும், இதில் பல தீமைகள் உள்ளது. இது ஒரு பயனர் தொடர்பான நலமுரண். உங்களுக்குத் தெரிந்த நபர்/நண்பர் என்பதற்கா நீங்கள் சில விடயங்களை முன்னெடுக்கவில்லை என்பதை பல நூறு மைல் தொலைவில் உள்ள ஒரு பயனர் எப்படிக் கண்டுகொள்வது?

இங்குள்ளவற்றை மறுப்பதும் ஏற்பதும் உங்களை விருப்பம், ஆனால் (எல்லாவற்றுக்குமான) பதிலை விக்கியின் வழிகாட்டலின்படி தர கேட்கிறேன். இல்லாவிட்டால், ஏரணச் சுழற்சிதான் மிஞ்சும். குறிப்பிட்ட பயனர் (TNSE SIVA VLR) தொடர்பில் என்ன செய்வது? எதுவுமே செய்யாமல் இருந்து, நான் நடவடிக்கை எடுக்கும்போது, என் மீது வன்மம் காட்ட வேண்டாம். நன்றி.--AntanO (பேச்சு) 12:37, 11 சூன் 2018 (UTC)

I need help reviewing a Global RFC[தொகு]

Dear admins, I am preparing a Global Request for Comments about financial support for admins that might be relevant for you .

Can you please review the draft and give me some feedback about how to improve it? Thank you.

MassMessage sent by Micru on 18:00, 7 சூன் 2018 (UTC)

எண்ணங்கள்[தொகு]

 1. 👍 விருப்பம் - ஒரு முறை வாசித்தேன். இவற்றின் பல கூறுகள் ஏற்புடையதாகவே உள்ளன. உதவிகள் (ஆலோசனை, கலந்தாய்வு, பணம்) சமூகத்தினை வளர்க்கவே செய்கின்றன. அவ்வாறே நான் வளர்ந்துள்ளேன். 9வருடங்களுக்கு முன், நான் புதுபயனராக வந்த போது, என்னை பேணிய விதத்தால் மட்டுமே இன்றும் நிலைபெற்றுள்ளேன். அன்றைய நிலை இன்று மிகவும் குறைந்து விட்டது. பல பணியடர்வுகளால், நாம் பிரிந்துள்ளோம் என்பதை நாம் மாற்ற முயல்வோம். வளர்க நம் விக்கிக்குடும்பம்.--உழவன் (உரை) 02:42, 8 சூன் 2018 (UTC)
 2. புதுப் பயனரின் மனநிலை: நான் தமிழ் விக்கியில் முனைப்பாகப் பங்களிக்கத் தொடங்கி ஐந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும் முதன் முதலில் தமிழ் விக்கியில் பங்களிக்கத் தொடங்கி 10 வருடங்கள் தாண்டிவிட்டது. 2008 ஆம் ஆண்டில் நான் செய்த தொகுப்பு இல்லாமலாக்கப்பட்டது. அது தொடர்பாக இரவி என்னிடம் உரையாடினார். சிக்கல் என்னவெனில் அவர் என்னிடம் உரையாடியதையே நான் ஐந்து வருடங்கள் கழித்து 2013 ல் தான் கண்டேன். அதற்கிடையே சோடா பாட்டில் 2011 லும் இரவி 2012 லும் என் உரையாடல் பக்கத்தில் செய்தி அனுப்பியிருந்தனர். 2013 ஆம் ஆண்டில் விக்கியில் தவறாக நான் செய்த தொகுப்பினை செல்வசிவகுருநாதன் தெரிவித்த போதுதான் உரையாடல் என்ற பக்கம் இருப்பதே தெரிந்தது. உரையாடல் பக்கம் இருப்பதைக் கண்டுணர ஒரு பயனராக எனக்கு ஐந்து வருடங்கள் ஆகியிருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக தமிழ்க்குரிசில், கனக்ஸ், தென்காசி சுப்பிரமணியன், செல்வசிவகுருநாதன், மணியன், இரவி, Booradley, தகவல் உழவன் ஆகியோர் வழிகாட்டியதால்தான் விக்கியில் என்னால் நிலைத்து நிற்க முடிந்தது. அன்றே என்னை தடை செய்திருந்தால் (தடை செய்வதற்கான முகாந்திரம் இருந்ததாகவே இப்போது தோன்றுகிறது, காரணம் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களைக் கணக்கில் கொள்ளாமல் செயல்பட்டேன், உண்மையில் என் பேச்சுப் பக்கத்தினை நான் பார்க்கவில்லை) தமிழ் விக்கிப்பீடியாவில் நான் தொடர்ந்திருக்க முடியாது.--இரா. பாலாபேச்சு 16:04, 11 சூன் 2018 (UTC)
கருத்துக்கள் தெரிவிக்கப்பட வேண்டிய இடம் இதுவல்ல. காண்க: Global Request for Comments about financial support for admins --AntanO (பேச்சு) 16:14, 11 சூன் 2018 (UTC)

நிருவாகிகள் கவனத்திற்கு[தொகு]

ஆக்னல், தேவசகாயம் பிள்ளை கட்டுரையில் நான் செய்த திருத்தங்களும் மேலதிக தகவல்களும் மதவெறியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டதாகக் குற்றம் கூறுகிறார். நான் இந்து - கிறுத்தவர் பதட்டம் நிறைந்த பகுதியில் வசிப்பதால் இவர் பயன்படுத்திய மதவெறி எனும் சொல்லை எனக்கான மறைமுக அச்சுறுத்தலாகவே கருதுகிறேன். இதனால் என்றாவது எனக்கு இடையூறு வரலாம் என நினைக்கிறேன். இவ்வாறு முத்திரை குத்துவதன் மூலம் நான் பங்களித்துள்ள கட்டுரைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது. ஆக்னலின் இத்தகைய போக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் சுதந்திரமான பங்களிப்பினை முடக்கும் செயலாகும். எனவே நிருவாகிகளும் அதிகாரிகளும் தலையிட்டு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கோருகிறேன். நன்றி--இரா. பாலாபேச்சு 15:07, 17 சூன் 2018 (UTC)

மற்றப்பயனர்கள் கருத்தினைப் பதிவு செய்த பின் என்னுடைய கருத்தைப் பதிவு செய்யக் காத்திருக்கிறேன். அதன்பின் நடவடிக்கை பற்றி யோசிக்கலாம். மேலும், முறையிட்டுள்ள பயனர் தனக்கு அச்சுறுத்தல், இடையூறு ஏற்படலாம் எனக்கருதுவதால், இங்கு கலந்துரையாடப்படும் விடயங்கள் மேலும் சிக்கல் ஏற்படுத்தலாம். எனவே பொதுவெளியில் உரையாடலைத் தொடர்வது உகந்ததா? நிற்க, இங்கு முறையிட்டுள்ளது பற்றி குறித்த பயனருக்கு அறிவிப்பது அவசியம். --AntanO (பேச்சு) 21:30, 17 சூன் 2018 (UTC)

தேவசகாயம் பிள்ளை கட்டுரையில், "அவரது நினைவு நாள் (சனவரி 14) பொங்கல் திருநாளை சீரழிக்கும் முயற்சி" என்ற கருத்தை மட்டுமே நான் குறை கூறியுள்ளேன். மற்றபடி, பாலா தவறாக புரிந்து கொண்டிருக்கிறார். ஆக்னல் (பேச்சு) 21:30, 18 சூன் 2018 (UTC)