விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை)
கொள்கை | தொழினுட்பம் | அறிவிப்புகள் | புதிய கருத்துக்கள் | ஒத்தாசைப் பக்கம் |
பகுப்பு:விக்கிப்பீடியா கொள்கை முன்மொழிவுகள் | தமிழ் விக்கிப்பீடியாவில் கொள்கைகள், வழிகாட்டல்கள் தொடர்பான உரையாடல்கள் இங்கு நடைபெறும். மேலும் பார்க்க:
« பழைய உரையாடல்கள் |
கிரந்த எழுத்துக்கள் - தரப்படுத்துதல்[தொகு]
மு. க. ஸ்டாலின், ஜெயலலிதா ஆகிய பக்கங்களில் கிரந்த எழுத்துக்கள் அனுமதிக்கப்படுகையில் பிற ஆளுமைகளின் பெயர்களில் உள்ள கிரந்த எழுத்துக்களைத் திருத்தலாமா? சக அரசியல்வாதி ஒருவரின் (விஜயகாந்த்) பெயரில் கிரந்தம் நீக்கப்படுவதுடன் ஒலிக்குறிப்பும் தமிழுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது -விசயகாந்து என. விக்கிப்பீடியா முழுமைக்கும் ஒரே கொள்கையைக் கடைபிடிக்க வேண்டாமா? ஏன் இந்த வேறுபாடு? உண்மையில் விக்கிப்பீடியாவில் கிரந்தச் சொற்களை நீக்குவதில் அடிப்படை விதிகள் எவை? -- CXPathi (பேச்சு) 12:30, 4 சூன் 2021 (UTC)
ஆனால் பிறவாறு எழுதினால் அந்தத் திருத்தம் நீக்கப்படுகிறதே (பார்க்க: https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3163108) CXPathi (பேச்சு) 17:06, 10 ஆகத்து 2021 (UTC)
- இதற்கு என்ன தான் கடைசி தீர்வு. தமிழ் விக்கிப்பீடியா வழக்கிற்கு வெகுதூரத்தில் இயங்குகிறதோ என்ற ஐயத்தினை ஏற்படுத்துகிறது. மாற்றங்களை மக்கள், சமூகம் மற்றும் பொதுவெளியில் கொண்டுவராமல், விக்கியில் செய்து என்ன பயன்? --சத்தியராஜ் (பேச்சு) 11:42, 25 செப்டம்பர் 2022 (UTC)
- "தமிழ் விக்கிப்பீடியா ஓர் சீர்திருத்தக் களம் அன்று" என இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் "கிரந்தம் தவிப்போம்" என்னும் சீர்திருத்தத்தினை வலிந்து செய்வது போல் உள்ளது. மேலும், இவ்வாறான மாற்றங்கள் அனைத்து இடத்திலும் ஒரே அளவுகோளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தெளிவான வழிகாட்டுதலைக் கோருகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 15:35, 28 செப்டம்பர் 2022 (UTC)
Edit warring[தொகு]
சில செயற்பாடுகள் இங்கு en:Wikipedia:Edit warring என்பது தேவையென்பதை உணர்த்துகின்றன. நிர்வாகிகளானாலும் 3 மீளமைப்புச் செய்தால் தடை செய்யப்பட வேண்டும். கருத்துக்கள் தேவை. --AntanO (பேச்சு) 07:50, 15 சனவரி 2018 (UTC)
- ஆதரவு. அவர் அதிகாரி என்றாலும் நிரந்தரத் தடை செய்யப்பட வேண்டும்.--Kanags (பேச்சு) 11:13, 15 சனவரி 2018 (UTC)
- ஆதரவு.--நந்தகுமார் (பேச்சு) 10:21, 11 பெப்ரவரி 2018 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா/விக்சனரி அகரவரிசை சீராக்கம்[தொகு]
தமிழ் விக்கி, விக்சனரி உள்ளிட்ட திட்டங்களில் அகரவரிசைப்படுத்தல் சீராக இல்லை. அதற்காக phabricator.wikimedia.orgல் வழுவும், அதற்கான முறையையும் நாம் பரிந்துரைக்க விரும்புகிறேன். ஏற்கனவே இது தொடர்பாக விக்கிப்பீடியா மீது சமூகத்தளத்தில் விமர்சனத்தைச் சிலர் வைத்துள்ளதை நாம் அறிந்திருக்கலாம். கீழ்க்கண்ட சில வழுக்களை ஆய்ந்து -ஆலோசனைகளோ, ஆதரவையோ தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- தமிழ்மெய் இடையே கிரந்தம் புகுதல்: பகுப்பு:ஐரோப்பிய_நாடுகள் போல பகுப்புகளில் சரியாக இருந்தாலும் [1] சிறப்புப் பக்கங்களில் வெளிப்படுவதில்லை.
- தமிழின் முதலெழுத்தாக அகரத்திற்கு முன் ஃ வருதல் : [2]
- ஔகாரத்திற்குப் பின் மெய் வராதல் : [3] இங்கே சரியாக வந்தாலும் பகுப்பு:வாழும்_நபர்கள் இங்கே அக்பருக்குப் பின்னே அகமது வருகிறது.
பரிந்துரைக்கும் வரிசை (பொதுவாகத் தமிழ் அகரவரிசைப்படுத்தல் தொடர்பாக மேலும் அறிய இங்கே செல்லலாம் http://tech.neechalkaran.com/2018/02/tamil-sorting.html) அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ க கா கீ கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க் ங் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ஜ ஜா ஜ் ஷ் ஸ் ஸ்ரீ ஹ் -நீச்சல்காரன் (பேச்சு) 06:57, 11 பெப்ரவரி 2018 (UTC)
விருப்பம்--Kanags (பேச்சு) 07:13, 11 பெப்ரவரி 2018 (UTC)
- --த♥உழவன் (உரை) 08:34, 11 பெப்ரவரி 2018 (UTC)
விருப்பம்--கலை (பேச்சு) 10:03, 11 பெப்ரவரி 2018 (UTC)
விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 10:19, 11 பெப்ரவரி 2018 (UTC)
விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 15:02, 11 பெப்ரவரி 2018 (UTC)
விருப்பம்--பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:50, 8 செப்டம்பர் 2018 (UTC)
பெயர் வைக்க என்ன விதிமுறை[தொகு]
Snake River, Bear river என்று உள்ளதை பாம்பு ஆறு, கரடியாறு என்பதா இசுனேக் ஆறு பியர் ஆறு என்பதா? --குறும்பன் (பேச்சு) 19:54, 6 நவம்பர் 2018 (UTC)
தீர்மானம் எதுவானாலும் தமிழில் பெயர்த்து வழங்குவதானால் "பாம்பு ஆறு" என்று பிரிக்காமல் "பாம்பாறு" என்றே வழங்கவேண்டும். "பாம்பு ஆறு"என்பது ஒரு வாக்கியம்; பாம்பே ஆறு என்பதுபோல் பொருட்படும்.
3 வரிக் கட்டுரைகளை நீக்குவது குறித்த கொள்கை உரையாடல்[தொகு]
3 வரிக் கட்டுரைகளை நீக்குவது குறித்த கொள்கையை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டுகிறேன். இங்கு இது தொடர்பான உரையாடலில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 14:03, 18 சூன் 2018 (UTC)
Inscription Stones of Bangalore - A Citizen Project[தொகு]
In Kannada Wikipedia we did a project on Inscription stones of Bangalore. In that project we added 30 articles about inscription stones which are intact in Bengaluru. In that Tamil inscription stones are also included.
This weekend i.e on 3rd November at 5:30PM there is a talk about inscription stones. This is hosted by Tamil Heritage Trust at Arkay Convention Center (ACC), Chennai. Inscription stone team would like to add articles on Tamil Wikipedia. There are bunch of enthusiasts who wants write on Tamil Wikipedia but have less Tamil typing skills. I kindly request interested Tamil Wikipedians/ Wikipedians around Chennai to attend this event. --Gopala Krishna A (பேச்சு) 07:51, 31 அக்டோபர் 2018 (UTC)
கிரந்த நீக்க முறைகள்[தொகு]
தமிழில் கலந்துள்ள கிரந்த சொற்களை மற்றும் எளிய வழிமுறையை நன்னூல் விளக்குகிறது. அதனைக் கொண்ட JavaScript இங்கு காணக் கிடைக்கிறது. எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் இங்கு உள்ளது. இந்த Library விக்கிபீடியா'வுக்கு உதவலாம் எனும் நோக்கில் ஆலமரத்தடியில் இந்தச் செய்தியை வைக்கிறேன்.
வழிமாற்று கொள்கை - மறு ஆய்வு கோரிக்கை[தொகு]
வணக்கம். வழிமாற்று கொள்கையில் மறு ஆய்வு செய்ய வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:வழிமாற்று#எதற்கு_பயன்படுத்தக்_கூடாது என்ற தலைப்பில் சிறு மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை உள்ளது என நம்புகிறேன்.
புதிய சொற்களை உருவாக்கும் போது, தற்போது பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கு வழிமாற்று உருவாக்குவது வழமையானது என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் வார்த்தைகளில் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கின்றது. க், த், ட், ப், உள்ளிட்ட எழுத்துகளில் கட்டுரை வழிமாற்றுகள் நேற்று வரை இருந்தது. இன்று ஒருவேளை அழிக்கப்பட்டிருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, ப்ளாக்செயின் என்று பரவாலாக[1][2][3][4] அறியப்பட்ட ஒரு சொல்லை, தமிழில் தொடரேடு என்று புதியதாக ஒரு இணையான சொல்லை உருவாக்கி கட்டுரை எழுதும்போது பயன்பாட்டில் உள்ள ஒரு சொல்லிற்கு வழிமாற்றாவது உருவாக்க வேண்டும். இதற்கு பிற விக்கி பயனர்களின் கருத்தும் ஆதரவும் தேவை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:51, 3 நவம்பர் 2018 (UTC)
[1] இந்திய நடுவண் அரசு இணையத்தளம் [2] பிபிசி தமிழ் [3] விகடன் குழுமம் [4] தமிழ் கிசுபாட்
ஆதரவு[தொகு]
- --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:30, 3 நவம்பர் 2018 (UTC)
- -- நீச்சல்காரன் (பேச்சு) 00:55, 6 நவம்பர் 2018 (UTC)
- --சிவகோசரன் (பேச்சு) 15:16, 7 நவம்பர் 2018 (UTC)
எதிர்ப்பு[தொகு]
- தமிழில் ஒற்று எழுத்துடன் சொற்கள் ஆரம்பிப்பது இலக்கணப் பிழையாகும். இலக்கணப்பிழையான வழிமாற்றங்கள் தேவையற்றது.--நந்தகுமார் (பேச்சு) 03:04, 4 நவம்பர் 2018 (UTC)
கருத்துக்கள்[தொகு]
இவ்வாறான நடைமுறை சொற்களைக் கொண்டு தேடுபவர்களுக்கு சரியான கட்டுரையை அடைய இந்த முயற்சி வழிவகுக்கும் எனக்கருதுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:29, 3 நவம்பர் 2018 (UTC)
- இக்கோரிக்கை தெளிவற்றதும், தமிழ் இலக்கண, தமிழ் மொழித்தனித்துவம் அற்று இருப்பதால் இதனை மறு ஆய்வு செய்யத் தேவை இல்லை. --AntanO (பேச்சு) 18:16, 3 நவம்பர் 2018 (UTC)
- தமிழில் மெய் எழுத்துக்களில் சொற்கள் ஆரம்பிக்காது எனவே கட்டுரைகளோ வழிமாற்றுப்பக்கங்களோ மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கவேண்டாம். தேவையானவர்கள் ஆங்கிலத்தில் தேடி தமிழைத் தெரிவுசெய்து படிக்கலாம். அல்லத்து பிளக்செயின் என்னும் வழிமாற்றுப் பக்கத்தை உருவாக்கியும் விடலாம். இலக்கணப்பிழையான வழிமாற்றங்கள் தேவையற்றது அது கலைக்கழஞ்சியத்தின் தரத்தைக் குறைத்துவிடும்.
தடை செய்க.[தொகு]
பயனர்:SIVAN Meenakshi, பயனர்:Sivansakthi இவ்விரு கணக்குகளையும் தற்காலிகத் தடைசெய்க. இவர் உரையாடல் செய்கையில் கீழ்தனமாகவே உரையாடல் செய்து வருகிறார். பிறபயனருக்கு மரியாதை கொடுக்காமல், தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்ர
உதாரணம்:
புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரை[தொகு]
பார்க்க - விக்கிப்பீடியா பேச்சு:விக்கி நிர்வாகிகள் பள்ளி. புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரை ஒன்றை அளித்துள்ளேன். முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொள்கை குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:09, 6 திசம்பர் 2018 (UTC)
- இக்கொள்கை முன்மொழிவு மீதான வாக்கெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது. அனைவரும் சனவரி ஒன்றாம் தேதிக்கு முன் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 04:44, 25 திசம்பர் 2018 (UTC)
முரண்பாடு[தொகு]
விக்கிப்பீடியா:விக்கி நிர்வாகிகள் பள்ளி என்பதில் முன்மொழியப்பட்டு, 20-1-0 என்ற வாக்குகள் அடிப்படையில் ஒப்புதல் பெறப்பட்டிருந்தாலும் விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்பதில் முன்மொழிவில் இல்லாத பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பது ஏன்? இங்கு விக்கிச் சமூக ஒப்புதல் பெறப்பட்டதா? இங்கு என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது? --AntanO (பேச்சு) 00:13, 6 சனவரி 2019 (UTC)
- என்ன முரண்பாடு?--இரவி (பேச்சு) 01:14, 6 சனவரி 2019 (UTC)
- நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்பதில் முன்மொழிவில் (விக்கி நிர்வாகிகள் பள்ளி) இல்லாத பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பது. --AntanO (பேச்சு) 03:41, 6 சனவரி 2019 (UTC)
- நேரடியாக முரண்பாட்டைச் சுட்டிக்காட்டவும். --இரவி (பேச்சு) 08:22, 6 சனவரி 2019 (UTC)
- நியமன முறை, படிமுறைகள் ஆகிய தலைப்புக்களின் கீழ் நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்பதில் முன்மொழிவில் இல்லாத பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பின் மாற்றத்திற்கும் உள்ளாகியுள்ளன. காண்க: மாற்றம். --AntanO (பேச்சு) 16:20, 14 சனவரி 2019 (UTC)
- இந்த மாற்றம் பார்க்கவும். இது 2016க்குப் பிறகு அந்தப் பக்கத்தை இற்றைப்படுத்தி முதல் வேட்பு மனுவைக் கோரும் போது நிகழ்ந்த மாற்றம். முன்பும் இப்போதும் 80% ஆதரவு வேண்டும் என்று அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. // இக்காலம் அதிகாரி (Bureaucrat) களினால் நீட்டிக்கப்படலாம் (பொதுவாக 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது).// என்ற சொற்றொடரைப் பார்க்கவும். அதற்குப் பிறகு, clarify, what என்று இரு வார்ப்புருக்களை இட்டு நீங்கள் தான் விளக்கம் கோரியுள்ளீர்கள். நீங்கள் கோரிய விளக்கத்துக்குப் பதிலாக, உரையைத் திருத்தித் தெளிவுபடுத்தினேன். இந்தத் தெளிவுபடுத்தல் ஏற்கனவே இருந்த 80% விதி மற்றும் அடையாளம் அற்றவர்கள் என்று நாம் கூறுவது பயனர் கணக்கற்றவர்கள் (2005 முதல் அவ்வாறு தான் கூறி வருகிறோம்) என்பதைத் தான் தெளிவுபடுத்துகிறது. புதிதாக எந்த விதியையும் நுழைக்கவில்லை. உரையைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அதுவும் நீங்கள் விளக்கம் கோரியதால். புதிய கொள்கை முன்மொழிவு என்பது வேட்பாளரின் பண்புகள், தகுதிகள் குறித்தே அமைந்தது. ஏன் எனில், பண்புகள், தகுதிகள் குறித்த குழப்பமே கடந்த ஐந்து ஆண்டுகளாக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க விடாமல் தடுத்தது. படிமுறைகள், நியமன முறையில் மாறுதல்கள் தேவைப்படுகின்றன என்ற கொள்கை உருவாக்கக் காலத்தில் யாரும் சுட்டிக் காட்டவில்லை. எனவே, அவற்றைப் பயன்படுத்திக் கொண்டோம். இதில் நான் எந்த முரண்பாட்டையும் காணவில்லை. --இரவி (பேச்சு) 16:56, 14 சனவரி 2019 (UTC)
- நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்பதில் முன்மொழிவில் (விக்கி நிர்வாகிகள் பள்ளி) இல்லாத பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பது. --AntanO (பேச்சு) 03:41, 6 சனவரி 2019 (UTC)
- ஒரு முன்மொழிவு எவ்வித மாற்றமும் இன்றி சட்டமாக்கப்பட / அமுலாக்கப்பட வேண்டும். அவ்வளவே. அல்லது முன்மொழிவில் முன்னை பகுதிகள் பின்பற்றப்படும் எனத் தெரிவித்திருக்க வேண்டும். இதனாலேயே, முன்மொழிவில் தெளிவு, விரிவாக்கம் தேவை என்று அப்பொழுதே கூறினேன். சட்டமும் இயற்றுபவரும், மாற்றுபவரும், அமுலாக்குபவரும் ஒன்றாயிருப்பது நல்லதல்ல. முரண்பாட்டை இல்லை என்றால் இனி இங்கு பேசுவதற்கு தேவையுமில்லை. --AntanO (பேச்சு) 17:09, 14 சனவரி 2019 (UTC)
விக்கி நிர்வாகிகள் பள்ளி கொள்கை மீளாய்வு[தொகு]
பார்க்க - விக்கிப்பீடியா பேச்சு:விக்கி நிர்வாகிகள் பள்ளி#கொள்கை மீளாய்வு --இரவி (பேச்சு) 17:53, 5 ஏப்ரல் 2019 (UTC)
விக்கி அதிகாரிகள் பள்ளி - கொள்கை முன்மொழிவு[தொகு]
பார்க்க - விக்கிப்பீடியா பேச்சு:விக்கி அதிகாரிகள் பள்ளி --இரவி (பேச்சு) 18:16, 5 ஏப்ரல் 2019 (UTC)
பயனர் பக்கக் கட்டுப்பாடுகள்[தொகு]
விக்கிப்பயனர் பக்கத்தில் எந்தக் கட்டுப்பாடுகள் இல்லாமலிருந்தாலும் பொதுவாக விளம்பரப் பயன்பாட்டைத் தவிர்க்க சில விதிமுறைகளைக் கொண்டுள்ளோம். விக்கியில் பங்களிப்பு செய்பவர் பக்கங்களை விட்டுவிடலாம். அவ்வாறில்லாமல் சுமார் ஐம்பதற்கும் மேற்பட்ட பயனர் பக்கங்களில் தேவையற்ற அல்லது சுய விளம்பரக் குறிப்புகள்(விக்கியல்லாதவை) இருக்கின்றன. உதாரணம்:) @Joseph anton george, இயக்குனர் ஆபிரகாம் லிங்கன், MOHAMED YOOSUF, Compcare K. Bhuvaneswari, Balagangadharan, மற்றும் Kavignarthanigai: இவை போன்றவற்றை எவ்வாறு கையாளலாம்? இரு பக்கங்களுக்கு மேல் விக்கி தொடர்பில்லாதவற்றை எழுதக் கூடாது என்ற அடிப்படையில் நீக்கச் சொல்லிக் கேட்கலாமா? அல்லது பக்கத்தை நாமே திருத்திக் குறைக்கலாமா? மேலுமறிய கொரி பக்கம் -நீச்சல்காரன் (பேச்சு) 13:23, 7 மே 2019 (UTC)
@Neechalkaran: இது தொடர்பாக நிருவாகிகள் ஏதேனும் முடிவு எடுத்துள்ளீர்களா அல்லது நாமே நீக்கலாமா?ஸ்ரீ (talk) 14:56, 2 சூன் 2019 (UTC)
- இது நிர்வாகிகள் மட்டும் முடிவு செய்ய வேண்டியதில்லை. யாவரும் கருத்திடலாம். மேலே குறிப்பிட்டவாறு பொதுவாக இவர்கள் விக்கியில் பங்களிப்பதில்லை என்னும் போது அவர்களாகத் திருத்தி எழுதவாய்ப்பில்லை. அதே வேளையில் பக்கத்தை நீக்கி அவர்களுக்கு ஒரு இடைவெளியை உருவாக்காமல் எல்லாப் பயனர் பக்கத்தையும் உள்ளடக்கத்திலுள்ள தேவையற்றதை நீக்கப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 20:46, 2 சூன் 2019 (UTC)
- பயனர் பக்கங்களை நாமே திருத்தி அல்லது குறைத்து எழுத முடியாது. பயனர் தகவல்கள் சுருக்கமாக இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட பக்கங்களை முழுமையாக நீக்கலாம்..--Kanags \உரையாடுக 08:18, 3 சூன் 2019 (UTC)
சரி. @Neechalkaran மற்றும் Kanags: புதுப்பயனர்களை வரவேற்கும் செய்தியில் அல்லது பயனர் பக்கத்தினை துவக்கும் போதோ பயனர் பக்கம் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பது பற்றி ஏன் சுருக்கமாக செய்திகளை இடம் பெறச் செய்தல் கூடாது? அது பற்றிய தகவல்கள் தெரியாமலும் சிலபேர் இவ்வாறு எழுதுகிறார்கள் தானே? ஸ்ரீ (talk) 14:02, 4 சூன் 2019 (UTC)
[தொகு]
I recently organized a project to share templates and modules between wikis. It allows modules and templates to be “language-neutral”, and store all text translations on Commons. This means that it is enough to copy/paste a template without any changes, and update the translations separately. If someone fixes a bug or adds a new feature in the original module, you can copy/paste it again without any translation work. My bot DiBabelYurikBot can help with copying. This way users can spend more time on content, and less time on updating and copying templates. Please see project page for details and ask questions on talk page.
P.S. I am currently running for the Wikimedia board, focusing on content and support of multi-language communities. If you liked my projects like maps, graphs, or this one, I will be happy to receive your support. (any registered user group can vote). Thank you! --Yurik (🗨️) 06:33, 11 மே 2019 (UTC)internetarchivebot ஐ தமிழ் விக்கிப்பீடியாவில் செயல்படுத்துவது.[தொகு]
விக்கிப்பீடியாவில் தகவல்கள் சேர்க்கப்படும் பொழுது அதற்கான தக்க சான்றுகள் வழங்கப்படவேண்டும்/வழங்கப்படுகிறது. அப்படியான சான்றுகள் பெரும்பாலும் இணைய செய்திகளாக உள்ளன. இப்படியான இணைய இனைப்புகள் பல சமயங்களில் Link rotகளாக மாறிவிடுகிறது. அதாவது சான்றுகள் சேர்த்து சில காலங்களுக்கு பின்பு அந்த இணைய இணைப்புகள் இல்லாமல் போகின்றன. இதனால் பின்னால் சேர்க்கப்பட்ட தகவல்கள் சரியா தவறா என்று சரிபார்க்க முடிவதில்லை. இதனை தவிர்க்கும் பொருட்டு இணைய இணைப்புகளை 100 ஆண்டுகளுக்கு மேல் சேமிப்பதற்கு Internet archive way back machine என்னும் இணைய தளம் பயன்படுத்தப்படுகிறது. சான்று தரப்பட்ட ஒரு இணைய பக்கத்தை இந்த இணைய தளத்தில் சேமித்துக் கொள்ளலாம். சேமித்து அதற்கான ஒரு உரலி கிடைக்கும். அந்த உரலியை சான்று தரும் பொழுது cite web போன்ற வார்ப்புருவில் "archive-url" மற்றும் "archive-date" களங்களில் அப்படி archiveவில் சேமித்த உரலியையும் சேமித்த தேதியையும் இட வேண்டும். இப்படியாக நாம் தகவல்களில் நம்பகத் தன்மையை மேம்படுத்தலாம். இப்படி தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து கட்டுரைகளிலும் ஒவ்வொரு இணைப்பாகச் சோதித்து மாற்றங்களைச் செய்வது மிகவும் கடினமான மற்றும் அயற்சியான பணி. இந்த மாதிரி பணிகளைச் செய்வதற்கு InternetArchiveBot என்னும் ஒரு தானியங்கி உள்ளது. இதன் மொத்த விவரங்களும் கொடுக்கப்பட்ட மேல் விக்கி இணைப்பில் உள்ளது. இந்த தானியங்கி இங்கு செயல்படுகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்திலும் fix dead links என்னும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுலபமாக இந்தத் தானியங்கியை இயக்கலாம். இந்த தானியங்கியைப் பயன்படுத்தி ஒரு பக்கம் அல்லது பல பக்கங்களை மேம்படுத்தலாம். இக்கருவியால் ஆங்கில விக்கியில் செய்யப்பட்ட ஒரு எடுத்துக்காட்டுத் தொகுப்பு. இந்த மாதிரி வசதி தற்பொழுது இந்திய விக்கிகளில் பெங்காளி மற்றும் தெலுங்கு விக்கிப்படியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தானியங்கியை தமிழில் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும். இதனைக் குறித்து தமிழ் விக்கி சமூகத்தின் ஆதரவு கிடைத்தால் வேலைகளை முன்னெடுத்து செய்யலாம். இதற்காக இந்த உரையாடலைத் தொடங்கியுள்ளேன். முதலில் ஆலமரத்தடியில் ஆலோசிக்க வேண்டும். பின்பு செயல்படுத்தலாம் என்னும் முடிவு ஏற்பட்டால் இதற்காக InternetArchiveBot நிரலாளருக்கு தமிழ் விக்கியை சேர்க்கச்சொல்லி ஒரு கோரிக்கையை எழுப்ப வேண்டும். பின்பு இத்தளத்தில் தமிழ் விக்கியும் சேர்க்கப்படும். தமிழ் விக்கியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:37, 2 சூலை 2019 (UTC)
- ஆதரவு அளித்ததற்கு நன்றி. இடைமுகத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைச் சேர்ப்பதற்கு இங்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:44, 14 சூலை 2019 (UTC)
ஆதரவு[தொகு]
- இந்த வசதியும் சேவையும் தமிழ் விக்கியில் இருத்தல் மிக அவசியம். முன்னெடுப்புக்கு நன்றி. த.சீனிவாசன் (பேச்சு) 08:42, 2 சூலை 2019 (UTC)
ஆதரவு --Kanags \உரையாடுக 11:16, 3 சூலை 2019 (UTC)
ஆதரவு--அருளரசன் (பேச்சு) 11:19, 3 சூலை 2019 (UTC)
ஆதரவு--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:38, 3 சூலை 2019 (UTC)
ஆதரவு----TNSE Mahalingam VNR (பேச்சு) 00:18, 5 சூலை 2019 (UTC)
ஆதரவு சந்தேகங்களுக்குக் கிடைத்த தெளிவு நிறைவாக இருப்பதால் ஆதரிக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:47, 9 சூலை 2019 (UTC)
ஆதரவு நல்ல முயற்சி. வாழ்த்துகள் ஸ்ரீ (talk) 07:08, 9 சூலை 2019 (UTC)
எதிர்ப்பு[தொகு]
பொதுவான கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள்[தொகு]
- பொதுவாகவே கெடு உரலிகளை(link rot) மாற்றும் தேவை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. குறிப்பாக ஆங்கில இந்து நாளிதழின் கடந்த கால இணைப்புகள் எல்லாம் தற்போது கட்டணப் பக்கங்களாக மாற்றப்பட்டுள்ளதால் இத்தகைய மாற்று வாய்ப்புகளை நோக்க வேண்டிய தேவையுமுள்ளது. இது internetarchivebot தானியங்கிக்கான அனுமதி கோரலா அல்லது https://tools.wmflabs.org/iabot கருவிக்கான அனுமதியா? internetarchivebot தானியங்கி தெலுங்கில் இல்லை. மேலும் தானியங்கி அணுக்கம் வழங்கும் முன் அதனைத் தமிழில் சோதிக்க வேண்டும். எனவே internetarchivebot தானியங்கி தவிர்த்து, iabot தானியங்கி இடைமுகத்தை முதலில் அனுமதிக்கலாமா என விவாதிக்கலாம். சில சந்தேகங்கள். ஒரு இணைப்பானது ஆவணமாகப்பட்டால் தான் அதனை இக்கருவி மாற்ற உதவுமா அல்லது archive தளத்தில் ஆவணமாக்கிவிட்டு, பின்னர் அந்த உரலியை மாற்றுமா? நான் புரிந்து கொண்டவரை ஆவணமாக்கப்பட்ட இணைப்புகளை மட்டுமே இது மாற்றுகிறது அப்படியெனில் தமிழ் மேற்கோள் பக்கங்கள் பெரும்பாலும் ஆவணமாக்கப்படாத நிலையில் தமிழ் விக்கிக்கென்று பிரத்தியேகப் பலன் இல்லையா? -நீச்சல்காரன் (பேச்சு) 12:39, 3 சூலை 2019 (UTC)
-
- //இது internetarchivebot தானியங்கிக்கான அனுமதி கோரலா அல்லது https://tools.wmflabs.org/iabot கருவிக்கான அனுமதியா?// இது இடைமுகத்துக்கான அனுமதி. கொஞ்சம் குழப்பமாக எழுதிவிட்டேன். இடைமுகத்தில் ஒரே முறை 5 பக்கங்கள் வரை நமது விக்கி கணக்கிலேயே மாற்றங்கள் செய்யலாம். இக்கருவியால் ஆங்கில விக்கியில் செய்யப்பட்ட ஒரு எடுத்துக்காட்டுத் தொகுப்பு.
- //internetarchivebot தானியங்கி தெலுங்கில் இல்லை.// ஆம். இக்கருவியை சோதனை செய்து பின்னர் தேவையானால் internetarchivebot தானியங்கிக்கு அனுமதி தரலாம். ஆனால் அதற்கு தனியாக ஒரு உரையாடல் நடைபெற வேண்டும்.
- //iabot தானியங்கி இடைமுகத்தை முதலில் அனுமதிக்கலாமா என விவாதிக்கலாம்.// அப்படியே.
- //ஒரு இணைப்பானது ஆவணமாகப்பட்டால் தான் அதனை இக்கருவி மாற்ற உதவுமா அல்லது archive தளத்தில் ஆவணமாக்கிவிட்டு, பின்னர் அந்த உரலியை மாற்றுமா? // இக்கருவி செயல்படும் விதம். ஒரு பக்கத்தை ஆராய்ச்சி செய்யக் கொடுத்தால் பின்வரும் காரியங்களை அது செய்யும்.
- ஒவ்வொரு சான்று உரலியாக பரிசோதனை செய்யும்.
- உரலி வேலை செய்கிறாதா என்று பார்க்கும்.
- அப்படி வேலை செய்தால் அது internet archiveயில் உள்ளதா என்று பார்க்கும். அப்பக்கம் internet archiveயில் இல்லையென்றால் archiveயில் சேமித்துவிடும். விக்கியில் எந்த மாற்றமும் ஏற்படாது.
- உரலி கெடு உரலியாக இருந்தால் அந்தப்பக்கம் internet archiveயில் உள்ளதா என்று பார்க்கும். அப்படி இருந்தால் archive உரலியை சான்றோடு சேர்த்து "dead link=yes" என்று விக்கியில் குறித்துவிடும்.
- உரலி கெடு உரலியாக இருந்து internet archiveயில் பக்கம் சேமிக்கப்படவில்லை என்றால் விக்கி சான்றில் "dead link=yes" என்று சேமிக்கும். இது பொதுவான நடிவடிக்கை. இதனை இயக்கும் பொழுது சில மாற்றங்களைச் செய்யலாம். உரலி வேலை செய்தாலும் காப்பு உரலியையும் இணைக்குமாறு செய்யலாம்.
- 5. //நான் புரிந்து கொண்டவரை ஆவணமாக்கப்பட்ட இணைப்புகளை மட்டுமே இது மாற்றுகிறது அப்படியெனில் தமிழ் மேற்கோள் பக்கங்கள் பெரும்பாலும் ஆவணமாக்கப்படாத நிலையில் தமிழ் விக்கிக்கென்று பிரத்தியேகப் பலன் இல்லையா?// நிறைய கட்டுரைகளின் சான்றுகள் ஆங்கில விக்கிப்பீடியாவிலும் அப்படியே இருக்கும். ஆங்கில விக்கிப்பீடியாவில் சான்றுகள் இருந்தால் கண்டிப்பாக சேமிக்கப்பட்டிருக்கும். அதனால் நமக்கு பயன்தான். கெடு உரலியாக இருந்து சேமிக்கப்படாவிட்டாலும் அது கெடு உரலி என்றாவது தெரிந்துக் கொள்ளலாம். மேலும் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் உரலிகள் archiveயில் படியெடுக்கப்படும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:43, 9 சூலை 2019 (UTC)
- தேவைப்பட்டால் சோதனை செய்த பிறகு செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம். IABot, InternetArchiveBot என இரண்டும் தேவைப்பட்டால் இரண்டையும் செயல்படுத்தலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:41, 3 சூலை 2019 (UTC)
- அப்படியே. முதலில் இடைமுகத்தைச் செயல் படுத்தலாம். பின்னர் InternetArchiveBotயை அனுமதிக்கலாமா என்ற தனியாக ஆலோசிக்கலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:43, 9 சூலை 2019 (UTC)
சந்தேகம்[தொகு]
வணக்கம் @Balajijagadesh: அண்ணா ,உடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரை எனும் பகுப்பில் உள்ள சில கட்டுரைகளில் archive url மற்றும் archive date , url , title ஆகிய அனைத்து தகவல்களுமே உள்ளது. இருந்தபோதிலும் அது உடைந்த மேற்கோள்கள் உள்ளதாகவே கருதப்படுகிறது. ஆனால் archive url என்பதனை நீக்கினால் அந்த பிழை போய்விடுகிறது. உதாரணத்திற்கு பொண்டாட்டி பொண்டாட்டிதான் எனும் கட்டுரையில் உள்ள 5 ஆவது சான்று. இதற்கும் நீங்கள் மேலே குறிப்பிட்டதற்கும் தொடர்பு உள்ளதா? இருந்தால் தெளிவுபடுத்தவும். நன்றிஸ்ரீ (talk) 15:13, 10 சூலை 2019 (UTC)
- @ஞா. ஸ்ரீதர்: archive-url என்று இருக்க வேண்டும். அவ்வாறு மாற்றிய பிறகு தற்பொழுது சரியாகிவிட்டது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:53, 14 சூலை 2019 (UTC)
- @ஞா. ஸ்ரீதர்:நமது வார்ப்புரு:Cite web மற்றும் en:template:Cite web இரண்டுக்கும் நிரல் அளவில் வேறுபாடு உள்ளது. இந்த இரண்டு பக்கங்களும் ஒரே மாதிரியில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் en:Template:Citation Style documentation/url என்னும் பக்கத்தில்
archive-url: The URL of an archived snapshot of a web page. Typically used to refer to services such as Internet Archive , WebCite and archive.is ; requires archive-date and url. By default (overridden by |dead-url=no
) the archived link is displayed first, with the original link at the end. Alias: archiveurl.
என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது "Alias: archiveurl" என்று குறிப்பிட்டுள்ளனர். ஆங்கில விக்கிப்பீடியாவில் archiveurl என்று இட்டால் பிழை வருவதில்லை.
இதனால் பல சான்றுகளை ஆங்கிலத்திலிருந்து இறக்குமதி செய்யும் பொழுது பிழை என்று வருகிறது. அதனால் இவ்வார்ப்புருவைச் சரி செய்தால் இப்பிரச்சனை தீரும். இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் archiveurl என்பதை archive-url என்ற மாற்ற வேண்டும். அலுப்பு மிகுந்த செயல். @Neechalkaran: @Kanags: @Aswn: கவனத்திற்கு. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:35, 14 சூலை 2019 (UTC)
- archiveurl என்பதை archive-url என மாற்ற முடியாது. archive-url என்பது cite web நிரலில் இல்லை.--Kanags \உரையாடுக 09:37, 14 சூலை 2019 (UTC)
- @Kanags: தமிழில் எப்படி என்பது தெரியவில்லை. ஆங்கிலத்தில் முதன்மையான வழிமுறை archive-url என்பது. archiveurl என்பதை Alias என்று கூறுகிறார்கள். archiveurl என்றும் குறிப்பிடலாம் என்கின்றனர். தமிழிலும் archive-url என்று இட்டால் தவறு மறைந்துவிடுகிறது. இது எப்படி நிகழ்கிறது. ? மேலும்
{{cite web|url=http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=pondati%20pondattidhan|title=Filmography of pondati pondattidhan|archiveurl=https://web.archive.org/web/20061029131550/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=pondati%20pondattidhan|archive-date=2006-10-29|accessdate=2017-01-24|publisher=cinesouth.com}} இப்படி உள்ள சான்றில் archive உரலியை url களத்தில் பின்வருமாறு இடுவது பொருத்தமாகாது என்று கருதுகிறேன்.
{{cite web|url= https://web.archive.org/web/20061029131550/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=pondati%20pondattidhan |title=Filmography of pondati pondattidhan|accessdate=2017-01-24|publisher=cinesouth.com}}
நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:08, 14 சூலை 2019 (UTC)
- @Balajijagadesh: archive-url ஐ மேலே சேர்க்கும் போது வழு மறைகிறது. ஆனால் இணையதளத்துக்கான இணைப்பு வேலை செய்யவில்லை கவனித்தீர்களா? அதனாலேயே கீழே நீச்சல்காரன் குறிப்பிட்டது போல வார்ப்புருவில் சிறு திருத்தம் செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 08:26, 15 சூலை 2019 (UTC)
- {{{archive-url|}}} என்று நிரலில் மாறுதல் செய்தால் இருவகை paramaterகளையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வார்ப்புரு அளவில் திருத்திக் கொள்ளலாம். எனக்கு அணுக்கம் இல்லாததால் என்னால் வார்ப்புருவை திருத்த இயலவில்லை. -நீச்சல்காரன் (பேச்சு) 06:54, 15 சூலை 2019 (UTC)
- @Neechalkaran: cite web இன் காப்பை மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:19, 15 சூலை 2019 (UTC)
- நனி நன்றி. மாற்றிவிட்டேன். archive-url, archive-date இரண்டும் இனி வழு காட்டாமல் ஏற்றுக்கொள்ளப்படும். நான் பார்த்தவரை சரியாக உள்ளது. வேறு எங்கேனும் வழுவந்தால் குறிப்பிடுங்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 09:16, 15 சூலை 2019 (UTC)
துரித நீக்கல் கொள்கை மீளாய்வு[தொகு]
துரித நீக்கல் கொள்கையை மீளாய்வு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை இங்கு தெரிவியுங்கள். நன்றி --இரவி (பேச்சு) 14:28, 25 அக்டோபர் 2019 (UTC)
பயனர் தடை செய்தல் - தீக்குறும்பு + கைப்பாவை[தொகு]
இப்பயனர் , தொடர்ந்து நான் இடும் {{delete|advertisement}} என்னும் வார்ப்புருவை அவரது பயனர் பக்கதில் இருந்து உரையாடல் ஏதுமின்றி நீக்குகிறார் .
மேலும் புதுப்புது பயனர் கணக்கு துவங்கி அதே உள்ளடக்கத்தை இடுகிறார் . நிர்வாகிகள் உதவவும் .
ஆதாரங்கள்
- பயனர் : https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Goldenvimal
- {{delete|advertisement}} என்னும் வார்ப்புருவை நீக்கல் : https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Goldenvimal&diff=prev&oldid=2853905
- https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%3AGoldenvimal&type=revision&diff=2854416&oldid=2854403
- கைப்பாவை பயனர் :https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:N.S.Vimal
--Commons sibi (பேச்சு) 07:42, 21 நவம்பர் 2019 (UTC)
IP தடை செய்தல் - தீக்குறும்பு[தொகு]
கைப்பாவை என சந்தேகம்[தொகு]
இவ்விரு பயனர் கணக்குகளும் ஒருவராகவே இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன் .
- https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Selvan1164
- https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_1164
--Commons sibi (பேச்சு) 07:24, 27 நவம்பர் 2019 (UTC)
- @Commons sibi: ஏதேனும் விசமத் தொகுப்புகள் நிகழ்ந்துள்ளனவா?-நீச்சல்காரன் (பேச்சு) 08:18, 27 நவம்பர் 2019 (UTC)
- @Neechalkaran:இதுவரை இல்லை .--Commons sibi (பேச்சு) 09:24, 27 நவம்பர் 2019 (UTC)
- அப்படியெனில் எதுவும் செய்யச் தேவையில்லை. அறிந்தோ அறியாமலோ ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை ஒருவர் உருவாக்கியிருக்கலாம். இது இயல்புதான். விசமத் தொகுப்பு அல்லது கைப்பாவையாக விவாதம் செய்தல் போன்ற நேரத்தில் மட்டும் நடவடிக்கை எடுத்தால் போது. -நீச்சல்காரன் (பேச்சு) 09:47, 27 நவம்பர் 2019 (UTC)
- @Neechalkaran:இதுவரை இல்லை .--Commons sibi (பேச்சு) 09:24, 27 நவம்பர் 2019 (UTC)
வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டத்தின் பரிசுப் போட்டி[தொகு]
வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டிக்கு வலு சேர்க்க, புதியவர்களை ஊக்குவிக்க வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டம் என்ற அமைப்பு ஒரு போட்டி நடத்துகிறது. அது தொடர்பான விக்கிச் சமூகத்தின் ஒப்புதல் இங்கே கோரப்பட்டுள்ளது. -20:48, 9 திசம்பர் 2019 (UTC)
சொந்தக் கருத்துக்களை எழுதுகையைத் தவிர்க்கவும்[தொகு]
அன்பர்களே தமிழ்விக்கிப்பீறியாவின் பல கட்டுரைகள் குறிப்பாக மரபுதொடர்பானவை பலவற்றில் விக்கிப்பீறியாவின் முதிர்ச்சிநிலைக்கும் தாழ்ந்து உள்ளன. அவற்றில் சொந்தக் கருத்துக்களை எழுதுகின்றனர் பலர். சான்றாக எண்குணத்தான் என்ற இந்தக் கட்டுரையின் தொடக்கவுரையைக் கவனிக்க. அது ஏதோ ஆன்மீக எழுத்தாளரின் போதனைபோல் உள்ளது.
எண்குணத்தான்
"இறைவனுக்குக் குணம் உண்டு. நம் எண்ணந்தான் அவன் குணம். எப்படி இருப்பான், எப்படி நடந்துகொள்வான் என நாம் எண்ணுகிறோமோ அப்படி இருப்பான். அப்படி நடந்துகொள்வான். கண் தெரியாத ஒருவனுக்கு வெள்ளைநிறம் என்பது என்ன என்று தெரியாது. காது கேளாத ஒருவனுக்கு ஆங்கிலமோ, தமிழோ எந்த மொழி பேணினாலும் தெரியாது. இவை ‘கோள்-இல் பொறி’கள் . என் மனத்துக்குத் தெரியும் இறைவன் இன்னொருவர் மனத்துக்குத் தெரிவதில்லை. இப்படித்தான் இறைவனைப்பற்றிய எண்ணங்களும் அவரவர் எண்ணத்தின் அளவினவே."
அங்கே "இறைவனுக்குக் குணம் உண்டு" என்ற முதன்முதல் வாக்கியத்திலிருந்தே பிசகல். அது இறைவன் என்பதைத் தானும் நம்பிப் படிப்போரும் ஏற்றுக்கொண்டாற்போலவும் மேலும் தான் அவன் தன்மைகளைக் கண்டறிந்து வாசகர்க்குப் போதிப்பதுபோலவும் உள்ளது. இது ஆனந்தவிகடனில் சுகி சிவம், நெல்லைக்கண்ணன் எழுதுவதுபோல் உள்ளது. இது விக்கிப்பீறியாவிந் நெறிமுறைக்கு மீறலாகும். விக்கிப்பீறியாவின் கட்டுரைகளின் கூற்றுக்கள் மெய்ம்மை சார்ந்தவையாக செய்திகளாகமட்டுமே இருத்தல்வேண்டும். இறைவன் என்ற கொள்கையையோ எண்குணங்களையோ நம்பவேண்டியதில்லை; ஆனால் அவற்றின் வரலாற்றினையும் வரலாற்றின்படி அவற்றின் வரையறையையும் மெய்யாகத் தெரிவிக்கவேண்டியது கடமை. அதுமட்டுமே கடமையாகும்.
கட்டுரையை எழுதியார் செய்திருக்கவேண்டியது இதுவே: "எண்குணத்தான் என்பது திருக்குறளில் கடவுள்வாழ்த்து என்ற அதிகாரத்தில் 9ஆம் குறளாகிய
"கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" (திருக்குறள்: கடவுள்வாழ்த்து:9)
என்பதில் வழங்கும் ஒரு தொடர். அந்தச் சொற்கு எண்குணம் என்னும் எட்டுக்குணத்தொகுதியினை உடையவன் என்று பெரும்பாலான பண்டை உரையாசிரியர்கள் உரைகூறுகின்றனர். அந்த உரையாசிரியர்கள் அந்த எட்டுக்குணங்களை இந்தியத் துணைக்கண்டத்தில் வழங்கும் மரபான குணங்களை மேற்கோள் காட்டி விளக்குகின்றனர்." என்று அறிமுகப்படுத்தி இருக்கவேண்டும். அப்படியே செய்துள்ளேன். --Perichandra (பேச்சு) 15:34, 27 மார்ச் 2020 (UTC)
விக்கி பெண்களை நேசிக்கிறது! என்பதைவிடப் பேணுகிறது என்பதே உகந்தது[தொகு]
அன்பர்களே "விக்கி பெண்களை நேசிக்கிறது!" என்ற முழக்கம் ஆங்கில மூலத்திலே எப்படி ஒலித்தாலும் நேசிக்கிறது என்று பெயர்ப்பது தமிழில் தகுதியாக ஒலிக்கவில்லை. இன்று ஒரு பெண்ணை நேசித்தல் என்பது காதலென்ற சூழலுக்கு நெருங்கி வழங்குவதால் ஆகாது. எனவே "விக்கி பெண்களைப் பேணுகிறது" என்பது ஆங்கிலமூலத்தின் குறிப்பைத் தமிழ்மரபிற்கு இணங்க மொழிபெயர்க்கிறது. இன்னும் நயமாக "விக்கி பெண்டிரைப் பேணுகிறது", "விக்கி மகளிரைப் பேணுகிறது" என்று மிடுக்கையும் நயத்தையும் கூட்டி முழக்கலாம். பெண்டிர், மகளிர் போன்ற சொற்கள் அழகைக் கூட்டும்; உயர்நிலைச் சூழலையும் உணர்த்தும். --Perichandra (பேச்சு) 15:34, 27 மார்ச் 2020 (UTC)
- தகப்பன் தன் மகளை நேசிப்பதையும், ஒரு மகன் தன் தாயை நேசிப்பதையும் தமிழ்ச் சூழல் தகுதியாகத்தாகே பார்க்கிறது? தற்போதுள்ள தலைப்பே சிறந்தது. --AntanO (பேச்சு) 10:24, 29 மார்ச் 2020 (UTC)
Universal Code of Conduct consultation[தொகு]
(Apologies for writing this in English. Please consider translating this message in Tamil. Thank you.)
Together we have imagined a world in which every single human being can freely share in the sum of all knowledge. Every single person associated with the Wikimedia movement is committed to this vision. The journey towards this enormous goal is not effortless. While we have always adhered to high standards of content policies on our projects, we have fallen considerably short in addressing challenges around maintaining civility. There have been numerous incidents where our contributors have faced abuse, harassment, or suffered from uncivil behaviours of others. Because of such an unfriendly atmosphere, many users have often refrained from contributing to Wikimedia projects, and thus, we have missed out on important knowledge on our platform. One of the many reasons for this has been a lack of behavioural guidelines in many of our projects. And, Universal Code of Conduct aims to cover such gaps.
The idea behind Universal Code of Conduct is to harmonize the already existing behavioural guidelines on various projects and collectively create a standard set of behavioural policies that are going to be binding throughout the movement. These will be equally applicable to all the projects, all the community members, and all the staff members. Everyone will be equally accountable for maintaining friendly and cordial behaviour towards others. This will help us collectively create an environment where free knowledge can be shared safely without fear.
This is an upcoming initiative and will be applicable to every single Wikimedia project. It is at an initial stage as of now. The Foundation has launched consultations on it on different language Wikimedia projects. My post here is an attempt in that direction. The project highly depends on ideas and feedback from the community. And thus we highly encourage community members to participate in the discussions. We have already started to individually reach out to members of Tamil Wikipedia communities. However, we would welcome comments here as well.
We understand that it is extremely difficult to have a ‘universal’ set of values that are representative of all the cultures and communities, however, it is definitely possible to come up with the most basic set of guidelines that can ensure that we have a safe space for everyone to be able to contribute. This is your chance to influence the language and content of the code of conduct and contribute to leading the movement to become a harassment-free space.
More information on UCoC is available here. We look forward to your comments here.
வணிக நிறுவனங்களின் பெயர்கள்[தொகு]
வணிக நிறுவனங்களின் பெயர்களை வைப்பது எப்படி என்பதில் பல குழப்பங்கள் உள்ளது. உதாரணத்திற்கு பேச்சு:எம்.டி.வி இதில் ஏதேனும் ஒரு கொள்கை முடிவினை எடுக்க அனைவரும் உதவவும். நன்றி ஸ்ரீ (✉) 03:46, 18 ஏப்ரல் 2020 (UTC)
நியாயப் பயன்பாடு[தொகு]
நியாயப் பயன்பாடு என்று கூறி கோப்புகளைப் பதிவேற்றப்படுகிறது. ஆனால் சில பல நேரத்தில் அப்படங்கள் பல கட்டுரைகள், முதற் பக்கக் கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன இக்கோப்பைப் போல. நியாயமான பயன்பாடு எந்தக் கட்டுரைக்கு பயன்படுத்தப்பட்டதோ அதில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி என்று கருதுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:02, 7 சூன் 2020 (UTC)
- நன்றி. இவ்வாறான படிமங்கள் முன்னர் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. அதனை நீக்கி விடுகிறேன். வேறு இருந்தால் தெரியப்படுத்துங்கள். அல்லது நீங்களே நீக்கி விடலாம்.--Kanags \உரையாடுக 10:50, 7 சூன் 2020 (UTC)
புத்தகம் பற்றிய கொள்கை மாற்றம் தேவை[தொகு]
புத்தகம் என்பது மனித அறிவு வளர்ச்சிக்கு பயன் படுவது விக்கிப்பீடியாவில் புத்தகம் பற்றி கட்டுரை எழுத இங்கு விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) சில கொள்கை உள்ளது. இந்த கொள்கையில் மாறுதல் தேவை . விக்கிப்பீடியா என்பது கட்டற்ற கலைக்களஞ்சியம் இதில் அனைத்து வகையான தகவலும் உள்ளடக்க வேண்டும். --பாலாசி (பேச்சு) 13:52, 10 சூன் 2020 (UTC)
- @Eeebalaji82: தற்போதைய கொள்கையில் என்ன மாதிரியான மாறுதல்கள் தேவை? என்ன மாதிரி என்று பரிந்துரைக்கலாம். மனித அறிவு வளர்ச்சிக்கு உதவும் புத்தகங்களுக்கென்றே விக்கிமூலம், விக்கிநூல் என்று தனியான தளங்கள் வைத்துள்ளோம். அதில் முழுப் புத்தகத்தையே ஏற்றலாமே எழுதலாமே.-நீச்சல்காரன் (பேச்சு) 10:20, 11 சூன் 2020 (UTC)
@Neechalkaran:விக்கிமூலம், விக்கிநூல் என்று தனியான தளங்கள் மூலம் முழு புத்தகம் படிக்க உதவும் விக்கிப்பீடியாவில் புத்தகம் பற்றி அறிமுக கட்டுரை எழுத நூலுக்கு ஏதேனும் முதன்மையான இலக்கிய விருது வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது இலக்கிய விருது வாங்கிய புத்தகம் மட்டுமே நல்ல புத்தகம் என்று விக்கிப்பீடியா கொள்கை கொண்டுள்ளது.இந்த கொள்கை முரண்பாடக உள்ளது.
நூலின் ஆசிரியர் மிகவும் வரலாற்றுச் சிறப்பு பெற்றவராக,என்ற கொள்கை நூலின் ஆசிரியரின் புகழை வைத்து அவர் நூலில் கூறியுள்ள கருத்தை மதிப்பிடுவது சரியானது அல்ல
- குறிப்பிடப்பட்ட 5 வரைமுறைகளில் ஏதாவதொன்று நூலொன்றுக்குப் பொருந்தினால், நீங்கள் அது பற்றிய கட்டுரை எழுதலாம் என்பதே விதிமுறை. அனைத்தும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழில் எழுதியது விளக்கமில்லை என்றால், ஆங்கிலப் பக்கத்துக்குச் சென்று படித்தறியலாம்.--Kanags \உரையாடுக 11:22, 11 சூன் 2020 (UTC)
- @Eeebalaji82: நீங்கள் கூறுவது சரியே, விருதோ புகழோ புத்தகத்தின் மதிப்பைக் காட்டுவதில்லை. ஆனால் நடைமுறையில் ஒரு விக்கிப்பீடியாவில் ஒரு வழிகாட்டல் தேவைபடுகிறது. அதற்காகத் தான் இந்த ஐந்து காரணிகளை வைத்துள்ளோம். மாறாக வேறு காரணிகளையும் பரிந்துரைக்கலாம். ஆனால் முழுதாகக் கட்டுபாடு இல்லாமல் நூல்களை அனைத்தையும் ஏற்பது சாத்தியமில்லை. எனக்குத் தெரிந்தளவில் சில ஆயிரம் ரூபாய் இருந்தால் யாரும் நூல் வெளியிட முடியும், தெரிந்தவர்கள் இருந்தால் நூல் வெளியீடு/விமர்சனக் கூட்டமும் நடத்திவிடமுடியும். இப்படி வெளிவந்த நூல்கள் பல லட்சம் இருக்கலாம். இந்தக் குறிப்பிடத்தக்கமை இல்லாவிட்டால் அடுத்த நாளே சுமார் லட்சம் புத்தகம் கூட விக்கியில் ஏற்றப்படலாம். இதை ஏற்கிறீர்களா? -நீச்சல்காரன் (பேச்சு) 11:25, 11 சூன் 2020 (UTC)
அவர்கள்[தொகு]
நோக்கர் எனும் முகநூல் பதிவில் கண்ட குறிப்பு இது. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு நபரைப் பற்றி எழுதுகையில் "அவர்கள்" என்று எழுதுவதில்லை. கடவுள் பெயர்கள், நாட்டின் அதிபர்களுக்கும் இது பொருந்தும். ஆனால் சில கட்டுரைகளில் இது தவறவிடப்படுகிறது. எ.கா: தொழுகை என்ற கட்டுரையில் 15 "அவர்கள்" உள்ளன. சில கோயில்களின் பெயரிலும் பெரியவர்களின் பெயர்களுக்கும் முன்னெட்டுக்களையும் பின்னெட்டுக்களையும் மாற்றிய விக்கிப்பீடியா BOT மூலம் "அவர்கள்" என்பதையும் மாற்றுங்கள்.
வீரத்தமிழர் முன்னணி[தொகு]
இந்த கட்டுரை முழு பக்க அளவில் எழுதியதை சுருக்கி சுருக்கி கால் பக்கத்திற்கு கொன்டு வந்துள்ளார்கள் இப்படி செய்வதை விட நேராக இந்த அரசியல் கட்டுரைக்கு விக்கிபீடியாவில் இடம் இல்லை என்று சொல்லி நீக்கி விடுவது நன்று இக் கட்டுரையுடன் எனது விக்கிபீடியா பங்களிப்பை நிறுத்தி கொள்கிறேன் எனக்கு ஊக்கம் அளித்த அனைத்து விக்கிபீடியர்களுக்கும் நன்றி--பாலாசி (பேச்சு) 15:19, 25 சூன் 2020 (UTC)
அண்மையில் தமிழ் விக்கிமூலத்தில் இடப்பக்கப் பட்டையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து.[தொகு]
அண்மையில் இடப்பக்கப் பட்டையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவில் random page என்று உள்ளதை தமிழ் விக்கிப்பீடியாவில் 'ஏதாவது ஒரு பக்கம்' என்று இருக்கும். அதுவே தமிழ் விக்கிமூலத்தில் 'ஏதாவது ஒரு படைப்பு' என்று இருக்கும். அது 'ஒரு படைப்பு காட்டு' என்று மாற்றப்பட்டுள்ளது. இது சரியாக பெயர்ப்பு இல்லை என்று தோன்றுகிறது. ஏதாவது ஒரு அட்டவணைக்கு செல்லும் இணைப்பை 'அட்டவணைக்குச் செல்' என்று மாற்றப்பட்டுள்ளது சரியான மாற்றமாகத் தெரியவில்லை. wikidata விற்கு தமிழில் அனைத்து விக்கி இடங்களிலும் விக்கித்தரவு என்று குறிப்பிடும் பொழுது இங்கு மட்டும் 'விக்கித்தரவுகள்' என்று மாற்றுவது சரியாகத் தெரியவில்லை. அப்படி மாற்றம் செய்ய வேண்டுமென்றால் நிறைய தமிழ் பயனர்கள் இருக்கும் தமிழ் விக்கிப்பீடியாவில் இதற்கான முன்னெடுப்பைச் செய்யலாம். அதன் பிறகு மாற்றுவது சரியாகும். கணியம் அறக்கட்டளையின் கணியம் திட்டம், வள்ளுவர் வள்ளலார் வட்டதின் நிகண்டியம் திட்டம், (நாட்டுமை நூல்கள் கூட) போன்ற திட்டப் பக்கங்களை இடப்பக்க கருவிப்பட்டையில் இணைப்பது சரியான வழிமுறை என்று தோன்றவில்லை. இவ்வாறு ஒவ்வொரு விக்கிமீடிய அறக்கட்டளைக்கு தொடர்பில்லாத அறக்கட்டளை அல்லது குழுக்களின் திட்டப்பணிகளை இடப்பக்கதில் இணைப்பது சரியாது அல்ல என்று தோன்றுகிறது. சில பலருக்கு இந்த இணைப்பு உபயோகமாக இருந்தாலும் இதனால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் வரும். அதனால் இந்த இணைப்புகளைப் பயன்படுத்துவோர் தங்களது உலவியில் நூல்குறி செய்து பயன்படுத்துவது சரியாக முறையாக இருக்கும் என்று கருதுகிறேன். அதனால் இந்த மாற்றங்கள் திருத்தப்பட வேண்டும் என்று கருதுகிறேன். இதைப் பற்றி மீடியாவிக்கியின் பேச்சு பக்கத்திலும் தெரிவித்துள்ளேன். மேலும் பலரும் அங்கு தங்களது கருத்து தெரிவித்தால் உதவியாக இருக்கும்.நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:47, 26 சூலை 2020 (UTC)
ஆதரவு. குறிப்பாக விக்கிமீடியாவுக்குத் தொடர்பற்ற திட்டப்பணிகளை இடப்பக்கத்தில் இணைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. மேலே குறிப்பிட்ட அனைத்தும் மீள்விக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 08:42, 27 சூலை 2020 (UTC)
ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 11:49, 27 சூலை 2020 (UTC)
வாக்கெடுப்பில் வழிகாட்டுக[தொகு]
விக்கிமூலத்திலேயே இது குறித்த உரையாடல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் உரையாடல் நிகழ்த்துவது நல்ல நடைமுறை ஆகும். எனவே, அங்கேயே தொடர வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இருப்பினும் இங்கும் தெரிவிக்கப்பட்டதால், நானும் எனது எண்ணங்களைத் தெரிவிக்கிறேன்.
- விக்கிமூலத்தில் இப்பக்கத்தில் உரையாடல் தொடக்கப்பட்டதுக் குறித்துத் தெரியப்படுத்தாது ஏன்?
- //விக்கிமீடியாவுக்குத் தொடர்பற்ற திட்டப்பணிகளை இடப்பக்கத்தில் இணைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. // இதனைதான் நானும் விரும்புகிறேன். முகநூல், டுவிட்டர் என்பதற்கு மட்டும் இணைப்புகள் தருதல் ஏன்? நான் டெலிகிராம், வாட்சுஅப் பயன்படுத்துகிறேன். அவற்றை தரலாமா? மேலும் பல சமூக ஊடகங்கள் உள்ளன, அவற்றை தர பிறர் கேட்டால் என்ன செய்வது? சமூக ஒப்புதல் இன்றி, டுவிட்டர் மட்டும், ஏன் இணைக்கப்பட்டது.
- வளர்ச்சி : இதுவரை விக்கிமூலத்தில் 225 நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 149 நூல்கள், s:விக்கிமூலம்:கணியம் திட்டம் வழியே முடிக்கப்பட்டுள்ளன. s:விக்கிமூலம்:நிகண்டியம் திட்டம் வழியே அனைத்து அகரமுதலிகள் நூல்கள் முடியும் நிலையிலுள்ளன. s:அட்டவணை:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf எடுத்துக்காட்டுக்கு,ஒரு அகரமுதலி நூல் . இதனால் விக்சனரியில் 2இலட்சம் சொற்கள் அதிகரிக்க உள்ளது.
- மொத்தம் இரு திட்டங்களிலும் ஏறத்தாழ 70 பங்களிப்பாளர்கள் உள்ளனர். ஓராண்டிற்க்கும் மேலாக உழைக்கும் அவர்கள் இணைந்து செயலாற்ற வாட்சுஅப், டெலிகிராம் பயன்படுத்துகின்றனர்.இக்குழவினர் இணையத்தில் பல்வேறு குழுக்களில் இருப்பது அவர் தனியுரிமை, அதுகுறித்து இங்கு பேசப்பட்டது பொருத்தமல்ல. அவர்களால் தமிழ் விக்கித்திட்டத்திற்கு ஏற்பட்ட நன்மை குறித்து மட்டும் உரையாடுதல் நலம்.
- இங்கு ஒரு பயனரின் படத்துடன் நாம் முதற்பக்கத்தில் அறிமுகம் செய்தோம். அதுபோல ஓராண்டிற்கும் மேலாக கடுமையாக உழைக்கும் அவர்கள் குறித்த விக்கிமூல திட்டங்களின் கூட்டுப்பணிகளுக்கு இணைப்பு தருவது தவறு எனக்கூறுவது, அவர்கள் மனதை வேதனை படுத்தும் என்றே எண்ணுகிறேன். இதனால் அவர்கள் விக்கிமூலத்தில் இருந்து விலகும் சூழ்நிலை உருவாகலாம். அதனைத்தவிர்க்க வாக்கெடுப்பில் கலந்து கொள்க. அவர்களையும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அழைப்பதும் விக்கி நடைமுறை ஆகும். --த♥உழவன் (உரை) 03:38, 12 ஆகத்து 2020 (UTC)
100% இயந்திர மொழிபெயர்ப்பு[தொகு]
@Neechalkaran: 100% இயந்திர மொழிபெயர்ப்புக்கள் விக்கிப்பீடியாவில் ஏற்றுக் கொள்வதில்லை எனும் போது Content Translation கருவியில் திருத்தம் ஏதும் செய்யாமல் கட்டுரையினை வெளியிடும் போது அதனை கருவி வெளியிடாமல் தடுப்பதற்கு ஏதேனும் வழிகள் உள்ளதா? ஸ்ரீ (✉) 15:48, 11 அக்டோபர் 2020 (UTC)
- தெரிந்தவரையில் அப்படியில்லை. சிறிய புள்ளி வைத்துக்கூட, திருத்தம் செய்ததாகக் காட்டலாம். அதனால் தொழில்நுட்பரீதியில் தடுக்க இயலாது, படித்துத் தான் நீக்க வேண்டும். -நீச்சல்காரன் (பேச்சு) 03:25, 12 அக்டோபர் 2020 (UTC)
நம்பகமான மூலங்கள்[தொகு]
விக்கிப்பீடியா:நம்பகமான மூலங்கள் - இது ஒரு மிக முக்கியமான கொள்கைப்பக்கம். இயலுமானவர்கள் முக்கியமான பகுதிகளை மொழிபெயர்த்து உதவலாம். --AntanO (பேச்சு) 03:14, 21 அக்டோபர் 2020 (UTC)
IMPORTANT: Admin activity review[தொகு]
Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, interface administrator, etc.) was adopted by global community consensus in 2013. According to this policy, the stewards are reviewing administrators' activity on all Wikimedia Foundation wikis with no inactivity policy. To the best of our knowledge, your wiki does not have a formal process for removing "advanced rights" from inactive accounts. This means that the stewards will take care of this according to the admin activity review.
We have determined that the following users meet the inactivity criteria (no edits and no logged actions for more than 2 years):
- Surya Prakash.S.A. (administrator)
- ஜெ.மயூரேசன் (administrator)
- மதனாஹரன் (administrator)
These users will receive a notification soon, asking them to start a community discussion if they want to retain some or all of their rights. If the users do not respond, then their advanced rights will be removed by the stewards.
However, if you as a community would like to create your own activity review process superseding the global one, want to make another decision about these inactive rights holders, or already have a policy that we missed, then please notify the stewards on Meta-Wiki so that we know not to proceed with the rights review on your wiki. Thanks, --علاء (பேச்சு) 19:04, 7 பெப்ரவரி 2021 (UTC)
கட்டுரை மாற்றம் ஏன்[தொகு]
வணக்கம்! எனது ஐஇலேபி கட்டுரை/ மாற்றம் ஏன் அழிக்கபட்டுள்ளது? ஜிலேபி தேண்குழள் மாதிரி இருக்கையில்... சரி நண்டுக்கு என்ன நடந்த்து? ஒரு கட்டுரையை மாற்ம் செய்பவர்கள் கட்டாயம் பதிவு செய்யதல் தேவையா?--−முன்நிற்கும் கருத்து முகுந்தன்78 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
பயனர் பெயர், தேதி மற்றும் நேரம்[தொகு]
பேச்சு பக்கங்களில் பேசும் போது பயனர்பெயர், தேதி மற்றும் நேரம் தானாகவே வருவதில்லை. இரண்டு முறை தொகுக்க வேண்டியுள்ளது. [பதில் அளி] இதை சொடுக்கும் போது எல்லாம் சரியாக வருகிறது. புதிதாக பேசும் போது சிக்கல் ஏற்படுகிறது. உதவுங்கள் நன்றி சா அருணாசலம் (பேச்சு) 16:33, 14 அக்டோபர் 2021 (UTC)
- மன்னிக்கவும் ஒத்தாசை பக்கத்தில் கேட்பதற்கு பதிலாக (கொள்கை) பக்கத்தில் கேட்டுவிட்டேன் சா அருணாசலம் (பேச்சு) 16:42, 14 அக்டோபர் 2021 (UTC)
பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்[தொகு]
பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும் என்ற வழிகாட்டல் பக்கத்தை ஆ.வியில் இருந்து மொழிபெயர்த்துள்ளேன். துப்புரவுப்பணியில் இது ஒரு சிக்கல் மிக்கதாக இருப்பதால் பல/சில பயணர்களுக்கு வழிகாட்ட உதவியாக இருக்கும். தற்போதுள்ள இரு முக்கிய சிக்கல்கள்.
- பொருத்தமான விக்கித்தரவில் புதிதாக உருவாக்கும் பகுப்புக்களை இணைக்காமை.
- அளவுக்கதிகமாக, தேவையற்று பகுப்புக்களை உருவாக்குதல்.
--AntanO (பேச்சு) 02:47, 5 பெப்ரவரி 2022 (UTC)
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்[தொகு]
விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல் - இப்பக்கம் காலாவதியானதாகவும் சரியான வழிகாட்டுதல் இன்றியும் உள்ளது. ஆகவே, இற்றைப்படுத்தி விக்கிச்சமூக ஒப்பதல் பெற்று முறையான கொள்கையாக மாற்ற வேண்டும்.
@Ravidreams: முறையான கொள்கையாக மாறும் வரைக்கும் தற்காலிகமாக தனிநபர் விமர்சனங்களைச் செய்வோரை தடை செய்வதில்லை என அனைவரின் கருத்துப் பெறலாமா? மேலும், நீஙகள் முன்னர் குறிப்பிட்டபடி, ஒரு பயனர் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபட்டால், முதல் முறை எச்சரித்து மற்ற நிருவாகிகளின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். அவர் அதைப் புரிந்து கொள்ளாமல் மீண்டும் தாக்குதல்களைத் தொடர்ந்தால் இரண்டாம் முறை மற்ற நிருவாகிகள் எச்சரிக்கலாம். தொடர்ந்து மூன்றாம் முறையும் அவர் தன் போக்கைத் தொடர்ந்தால், தாராளமாக அவர் கணக்கைத் தடை செய்யலாம். இங்கு தாக்குதல் அளவு எது என்பது முக்கியம். ஏனென்றால் சில தாக்குதல்களை விக்கிமீடியா நிறுவனத்தினதும் ஜிம்மி வேல்சிக்கும் கொண்டு செல்ல இடமுண்டு. எ.கா: உங்களை ஒருவர் ISIS உடன் தொடர்புபடுத்தி எழுதினால் 1, 2, 3 என எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருப்பதா அல்லது தடுப்பதா? மேலும், f*** போன்ற கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தும்போது 1, 2, 3 எச்சரிக்கை பாதிக்கப்பட்டவரின் நிலைக்கு என்ன செய்யவது?
ஆகவே, விக்கிச்சமூகத்தின் ஒப்புதலுடனான கொள்கை அவசியம். தனிநபர் விமர்சனம் செய்பவரைத் தடுப்பதில்லை என்றாலும் எனக்கு சம்மதமே. ஆனால் முறையான கொள்கை தேவை. --AntanO (பேச்சு) 18:56, 6 மார்ச் 2022 (UTC)
- en:Wikipedia:No personal attacks போதுமான வழிகாட்டல்களுடன் நடைமுறையில் உள்ளது. அதைத் தமிழ்ப்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவில் பின்பற்றினாலே போதுமானது. இதில் தனியே தமிழ் விக்கிபீடியாவில் உரையாடி முடிவெடுப்பதற்கான தேவை இருப்பதாக நான் கருதவில்லை. உணர்ச்சி வேகத்தில் ஒரு புதுப்பயனர் விக்கிமீடியா நடைமுறைகளைப் புரிந்து கொள்ளாமல் வார்த்தைகளை விடுவதை ஒப்பிட மிகவும் தீவிரமான எடுத்துக்காட்டுக்களைத் தந்து உரையாடலைப் பக்கச் சாய்வாக மாற்ற முனையாதீர்கள். சேதங்களைத் தடுக்க தற்காலிகத் தடை விதிப்பது வேறு. ஒரு பயனரை முற்றிலும் முடிவிலியாகத் தடை செய்வது என்ற நிலையை நோக்கி நகர்வது வேறு. உயிர், உடைமை, பணி ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய அச்சுறுத்தல்களுக்கு உடனடியாக விக்கிமீடியா அறக்கட்டளையின் Trust and Safety teamஐ அணுக வேண்டும். அவர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள். அப்படி உங்களை நோக்கிச் சில பயனர்கள் கடந்த காலங்களில் அச்சுறுத்தல் விளைவித்த போது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சில பயனர்களை ஒரு ஆண்டுக்கும் / முடிவிலியாகவும் தடை செய்ததையும் நினைவு கூர விரும்புகிறேன். ஆகவே, தனி நபர் தாக்குதல்களில் ஈடுபடுவோரைத் தடுக்கவே கூடாது என்பது என் நிலைப்பாடு அல்ல. அவர்களை எதிர்கொள்ள ஏற்கனவே போதுமான பொறிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே போதும். மாறாக, ஒருவர் பயனர் பேச்சுப் பக்கத்தில் வந்து மன்னிப்பு கேட்காவிட்டால் தடை போன்ற வழக்கம் எல்லாம் உலக விக்கிமீடியா நடைமுறைகளில் உள்ளதா தெரியவில்லை. நன்றி--இரவி (பேச்சு) 19:13, 6 மார்ச் 2022 (UTC)
- என் கருத்தினை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். எனது கேள்வி தனிநபர் விமர்சனத்தின் பின்னான தடை பற்றியது. ஆ.வியிலும் தெரிவில்லை. பயனர் எச்சரிப்பு 1, 2, 3 பின்னர் தடை என்பது சரியாகுமா அல்லது தனிநபர் விமர்சனத்தின் தீவிரத்தின் அடிப்படையில் ஆரம்பமே தடைசெய்யலாமா? அவ்வாறாயின் அதன் அளவுகோல் என்ன? AntanO (பேச்சு) 19:23, 6 மார்ச் 2022 (UTC)
- உயிர், உடைமை, பணி ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய அச்சுறுத்தல்களுக்கு உடனடியாக விக்கிமீடியா அறக்கட்டளையின் Trust and Safety teamஐ அணுக வேண்டும். அவர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள். நீங்கள் சொல்கிற தீவிர தாக்குதல்கள் எல்லாம் இந்த வகைப்பாட்டில் அடங்கும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு பயங்கரவாத நிறுவனத்துடன் தொடர்புப்படுத்தி எழுதினால், உடனடியாக அவரது கணக்கைத் தற்காலிகமாக தடை செய்து விட்டு, விக்கிமீடியா அறக்கட்டளைக்குத் தெரிவிக்க வேண்டும. ஆனால், ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டுவதை எல்லாம் அறக்கட்டளையிடம் புகார் அளிக்க முடியாது. அது நாம் தான் இங்கு கையாள வேண்டும்.
- என் கருத்தினை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். எனது கேள்வி தனிநபர் விமர்சனத்தின் பின்னான தடை பற்றியது. ஆ.வியிலும் தெரிவில்லை. பயனர் எச்சரிப்பு 1, 2, 3 பின்னர் தடை என்பது சரியாகுமா அல்லது தனிநபர் விமர்சனத்தின் தீவிரத்தின் அடிப்படையில் ஆரம்பமே தடைசெய்யலாமா? அவ்வாறாயின் அதன் அளவுகோல் என்ன? AntanO (பேச்சு) 19:23, 6 மார்ச் 2022 (UTC)
- "தாக்குதல் அளவு" போலவே "பயனர் தடைக் காலமும்" முக்கியத்துவம் வாய்ந்ததே. உணர்ச்சி வேகத்தில் உரையாடல்களில் தாக்குதல் நடக்கும் போது, உரிய எச்சரிக்கைகளைத் தந்து தேவைப்பட்டால் குறிப்பிட்ட காலம் தற்காலிகத் தடை விதித்து அந்தச் செயற்பாட்டைத் தடுப்பது தான் நோக்கமாக இருக்க வேண்டுமே ஒழிய, பயனருக்குத் தண்டனை கொடுக்கும் நோக்கில் நிரந்தரமாகத் தடுக்க முற்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. நன்றி. --இரவி (பேச்சு) 19:43, 6 மார்ச் 2022 (UTC)
குறிப்பிடத்தக்கமை கொள்கை[தொகு]
அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வெளியில் நிகழும் விமர்சனங்களைக் கண்டேன். அதில் குறிப்பாகச் சமகால எழுத்தாளர்கள் படைப்பாளர் குறித்த கட்டுரைகள் இடபெறுவதில்லை என்ற வாதம் சிந்திக்கவைக்கிறது. உரிய மேற்கோள்கள் இல்லாத போது குறிப்பிடத்தக்கமை இல்லாத நிலையில் பல கட்டுரைகளை நாம் நீக்கியிருக்கிறோம். வாழும் நபர்களை ஆவணப்படுத்த முடிவதில்லை. பொதுவாக இணையம் பல படைப்பாளிகளை உருவாக்கியுள்ளது அதே அளவிற்கு வாசகர்கள்/படிப்பவர்களையும் உருவாக்கியதாக நினைக்கிறேன். இந்நிலையில் அதிகப் படைப்பாளிகள் குறித்த ஆவணமாக்கலை தமிழ் விக்கிப்பீடியா செய்ய வேண்டும் அதனைக் கருத்தில் கொள்ளும் அதே வேளையில் வணிக/விளம்பர நோக்கில் பயன்படாதவாறு குறிப்பிடத்தக்கமை கொள்கைகளில் மறு ஆய்வு செய்வோமா? முதலில் குறிப்பிடத்தக்கமை கொள்கைகளைத் தமிழ்ப்படுத்திவிட்டு அதில் கூடுதல் விதிகளையும் இணைக்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். எதை நோக்கி கொள்கை வகுக்கலாம், அதன் சாதக பாதகங்கள் என்ன? இதுவரை குறிப்பிடத்தக்கமையில் உள்ள சிக்கல்கள் குறித்து உரையாடுவோம். கொள்கையில் மேம்பாட்டுத் திருத்தம் தேவை என்பதில் ஆதரவிருந்தால் அதன் பின்னர் வரைவுகளை முன்வைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 05:24, 7 மே 2022 (UTC)
- தமிழ் எழுத்தாளர்களைப் பொருத்த வரையில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருந்தாலும் ஏற்றுக் கொண்டு கட்டுரைகளை வைத்திருக்கிறோம். ஆகவே, இதில் குறிப்பிட்டத்தக்கமையை ஒரு சிக்கலாகக் கருதவில்லை. அந்தத் துறையில் ஆர்வம் உள்ள யாராவது இத்தகையை கட்டுரைகளைத் தேடிச் சேர்க்க வேண்டும். குறை சொல்லும் எழுத்தாளர்கள் தாங்கள் ஏதோ நோபல் பரிசு வென்றவர்கள் போலவும், இந்த உலகமே தங்களைப் போற்றிப் பாடக் கடமைப்பட்டுள்ளது போலவும் எண்ணிக் கொள்கிறார்கள். தங்கள் சக படைப்பாளரைப் பற்றி கூட இரண்டு வரி விக்கிப்பீடியாவில் சேர்க்க முன் வராத அளவு அவர்கள் ego தடுக்கிறது. அவர்கள் எதையாவது உருப்படியாக எழுதியிருந்தால் அவர்கள் ரசிகர்கள் வந்து விக்கிப்பீடியாவில் சேர்க்கட்டும். இவர்களை மகிழ்விப்பதற்காக நாம் வேலை மெனக்கெட்டு எழுதுவதை விட ஒரு ஆறு / மலை / தவளை பற்றி எழுதுவது கூடுதல் பயன் மிக்கது. நாம் என்ன செய்தாலும் குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். இது திட்டமிட்ட, உள் நோக்கமுடைய அவதூறு. இந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. --இரவி (பேச்சு) 09:24, 7 மே 2022 (UTC)
- இல்லை. தமிழ் எழுத்தாளர்களுள் பலரைப் பற்றி கட்டுரைகள் உள்ளன. பலரைப் பற்றி குறுங்கட்டுரைகளும் உள்ளன. அந்தக் குறுங்கட்டுரைகள் எல்லாம் 2011,12 வாக்கில் எழுதப்பட்டவை. அப்பொழுது குறிப்பிடத்தக்கமை ஒரு பொருட்டாக இருக்கவில்லை. ஆனால், இப்பொழுது கட்டுரைகள் உருவாக்க குறிப்பிடத்தக்கமை ஒரு தேவையாக உள்ளது. பல கட்டுரைகள் குறிப்பிடத்தக்காமையினால் நீக்கப்படுகின்றன. இன்றுகூட மோனிகா மாறன் பற்றிய கட்டுரை நீக்கப்பட்டது. (மோனிகா மாறனே எழுதியிருந்தார் - அதுவும் ஒரு காரணம் தான்) நான் விரிவாக எழுதுகிறேன். -CXPathi (பேச்சு) 10:41, 7 மே 2022 (UTC)
- @CXPathi: பேச்சு:மோனிகா மாறன் பக்கத்தில் என் கருத்தை இட்டுள்ளேன். அங்கு உரையாடலைத் தொடர்வோம். --இரவி (பேச்சு) 12:44, 7 மே 2022 (UTC)
- நன்றி அண்ணா! நான் சொல்லவந்தது அக்கட்டுரை தேவை என்று அல்ல அண்ணா. பொதுவாக இங்கு எழுத்தாளர் பற்றிய கட்டுரைகளுக்கு குறிப்பிடத்தக்கமை தேவைப்படுகின்றது என்றுதான். @Kanags:, @AntanO: ஆகியோர் பெரும்பாலும் கட்டுரைகளை நீக்கி விடுவார்கள். இவர்களின் விக்கி தூய்மைவாதத்தை நான் மதிக்கிறேன். இவர்களைப் போன்றோரால்தான் விக்கிப்பீடியா ஒரு குப்பைத் தொட்டி ஆகாமல் ஒரு கலைக் களஞ்சியமாகவே இருக்கிறது. (ஆனால் குறிப்பிடத்தக்கது என நம்பும் கட்டுரைகளுக்காக இவர்களிடம் வாதாட எப்போதும் தயாராக உள்ளேன்!) நான் கோருவதெல்லாம் குறிப்பிடத்தக்கமை கொள்கையில் சில மாற்றங்கள். இத்தனைக்கும், விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை பக்கத்தின் முதல் வரியே விக்கிப்பீடியாவிற்கு குறிப்பிடத்தக்கமை குறித்து கொள்கை எதுவும் இல்லை என்பதுதான். அதைச் சொன்னால் அப்பக்கம் காலாவதி ஆகிவிட்டது என்பதுதான் பதிலாக வருகிறது. எனவே, விக்கிப்படியாவின் அனைத்து கொள்கைகள் பக்கங்களையும் மீளாய்வு செய்ய வேண்டும். சில பக்கங்கள்/ பகுதிகள் மொழிபெயர்க்கப்படாமல் உள்ளன. அவற்றையும் மொழிபெயர்க்க வேண்டும். நடைமுறையில் (சில கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் பொதுவான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன) சில கொள்கைகள் மாறியிருந்தால், அவற்றையும் கொள்கை பக்கத்தில் சேர்க்க வேண்டும். நன்றி! -CXPathi (பேச்சு)
//இவர்களை மகிழ்விப்பதற்காக நாம் வேலை மெனக்கெட்டு எழுதுவதை விட ஒரு ஆறு / மலை / தவளை பற்றி எழுதுவது கூடுதல் பயன் மிக்கது.// விருப்பம் --AntanO (பேச்சு) 15:29, 7 மே 2022 (UTC)
முதலில் தமிழ் இலக்கியப்போக்குகளைப் பற்றிய சுருக்கமான வரைபடத்தை முன்வைக்க விரும்புகிறேன். நவீன தமிழ் இலக்கியத்தை பாரதியில் இருந்து துவங்குவதே வசதியானது. ஏனென்றால் அவனுடைய கவிதைகளில் ஒரு பகுதி பழைய கவிராய மரபில் நிலைகொண்டது. இன்னொரு பகுதி அக்காலத்தின் சமூகக் கொந்தளிப்புகளையும், ஐரோப்பிய இலக்கியங்களையும் பிரதிபலிப்பது. அவனில் இருந்து துவங்கும் தமிழ் இலக்கியப் போக்குகளை நான்காகப் பகுக்கலாம் ― 1. மரபுக்கவிதைகள். பாரதியின் பெரும்பாலான கவிதைகள் மரபுக்கவிதைகளாக இருந்தாலும் இப்போக்கின் முதன்மையான கவிஞர் பாரதிதாசனே. இவர்கள் கவிதை என்பதை யாப்பு என்றும் கவிதையில் சொல்லப்படும் கருத்துக்கள் என்றும் நம்புகின்றனர். முடியரசன், சுரதா, புலவர் குழந்தை, ஈரோடு தமிழன்பன் என இவர்களில் முக்கியமானவர்களின் வரிசை நீளும். இன்றும் தனி இதழ்களையும் இணைய இதழ்களையும் மரபுக்கவிதைக்காக நடத்துகின்றனர். 2. கொள்கை இலக்கியம். இலக்கியம் என்பது வடிவம் அல்ல, அதிலிருந்து வாசகன் பெறும் கொள்கைகளும் கருத்துக்களும் மட்டுமே என்பது இப்போக்கின் நம்பிக்கை. இப்போக்கின் முதன்மைத் தரப்பு மார்க்சிய இலக்கியம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இவர்களுடையது. இப்போக்கின் மற்ற தரப்புகள் திராவிட இலக்கியமும் தேசிய இலக்கியங்களும். திராவிடக் கட்சிகள் தத்தம் பரப்புரைக்காக காட்சி ஊடகங்களுக்கும் சமூக ஊடங்களுக்கும் மாறியபின் திராவிட இலக்கியம் வலுவிழந்து. இந்திய சுதந்திர போராட்டமும் அதன் லட்சியவாதமும் அடங்கியபின் தேசிய இலக்கியம் முழுவதுமாக நின்றே விட்டது. மரப்புக்கவிஞர்கள் யாப்பைக் கைவிட்டுவிட்டு உரைநடையும் புதுக்கவிதையும் எழுதுகையில் இயல்பாக இப்போக்கிற்குள் வந்தனர். தொ. மு. சி. ரகுநாதன், கே. முத்தையா, சி. என். அண்ணாதுரை (சில படைப்புகள்), சு. சமுத்திரம், வேழவேந்தன், தென்னரசு மேலாண்மை பொன்னுச்சாமி, மு. மேத்தா, அப்துல் ரகுமான், நா. காமராசன் என இவர்களது வரிசை பெரியது. தனித்தமிழ் இயக்கம் இப்போக்கின் சிறுபகுதி (அவர்கள் இலக்கியத்தைவிட ஆய்வுக்கே முன்னுரிமை அளிப்பதால்.) 3. வணிக இலக்கியம். இலக்கியம் என்பது அதிக வாசகர்களை சென்றடைய வேண்டும் என்பதும் அதிக மக்கள் ரசிப்பதே நல்ல இலக்கியம் என்பதும் இப்போக்கின் நம்பிக்கை. தமிழின் பெரும்புகழ் அடைந்த எழுத்தாளர்கள் பலர் இப்போக்கைச் சார்ந்தவர்கள். மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வடுவூர் துரைசாமி ஐயங்கார், கல்கி, சாண்டில்யன், அகிலன், தேவன், ஜெகசிற்பியன், நா. பார்த்தசாரதி, பிவிஆர், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, சி. என். அண்ணாதுரை (சில படைப்புகள்), மு. கருணாநிதி, ரமணி சந்திரன், அனுத்தம்மா, மு. வரதராசன், சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி, இந்துமதி, ராஜேஷ்குமார், சுபா, இந்திரா சொந்தரராஜன் என்று இவர்களது வரிசை பெரியது. 4. தீவிர இலக்கியம். இலக்கியம் என்பது வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும் என்பது இவர்களது நம்பிக்கை. இவர்களுக்கு வடிவம் முக்கியம் இல்லை. இலக்கியத்தில் இருந்து வாழ்வுண்மைகளை கற்பனை மூலம் பெற வேண்டும் என்று இவர்கள் விரும்புவதால், கருத்துக்களை வலியுறுத்தும் எழுத்துக்களை இப்போக்கினர் விரும்புவது இல்லை. அனைவருக்கும் பிடிக்கும்வண்ணம் மட்டும் எழுதினால் வாழ்க்கையைத் தட்டையாக எழுத நேரிடும் என்பதாலும் அனைவருக்கும் தெரிந்ததையே மீண்டும் மீண்டும் எழுத வேண்டும் என்பதாலும் வணிக இலக்கியத்தையும் இவர்கள் பொருட்படுத்துவதில்லை. புதுமைப்பித்தன் இப்போக்கின் தலைமகன். கு. அழகிரிசாமி, கநாசு, கி. ராஜநாராயணன், ஜி. நாகராஜன், சுந்தர ராமசாமி, குபரா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, பிரமிள், ஞானக்கூத்தன், தேவதேவன், தேவதச்சன், வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில்நாடன், பூமணி, சோ. தர்மன், மனுஷ்யபுத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், இமையம் பா. வெங்கடேசன், இசை, இளங்கோ கிருஷ்ணன் எனத் தொடர்வது இவர்களது வரிசை.
இவை பொதுவான போக்குகள். அண்ணாதுரை, ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி முதலியவர்களை ஒன்றுக்கு மேற்பட்ட போக்குகளில் இருப்பவர்களாக வகைப்படுத்த முடியும். ஒவ்வொரு போக்கிற்குள்ளும் பல வேறுபாடுகளை, தனி இயக்கங்களை அடையாளம் காண முடியும்.
―
தமிழ் விக்கிப்பீடியாவில் படைப்பாளர்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டை இப்போது முன்வைப்பவர்கள் தீவிர இலக்கியப் போக்கினர். இவர்கள் எழுத்தாளர் என்று சொல்லும்போது தீவிர இலக்கியப் போக்கினரையே குறிக்கின்றனர். நானும் இவ்விலக்கியப்போக்கைச் சேர்ந்தவனே. நாங்கள் ஏன் பிற இலக்கியப் போக்குகளை நிராகரிக்கிறோம்? 1. இலக்கியம் வடிவம் சார்ந்தது இல்லை. நாளிதழில் வந்த ஒரு செய்தியை யாப்பில் அமைத்து எழுதினால் அது கவிதையாகாது. 2. இலக்கியங்கள் கொள்கைகளை, அறக்கருத்துக்களை வலியுறுத்த தேவையில்லை. கற்பனை உள்ளவனுக்கு “திருடாதே!” என்று மட்டும் சொன்னால் போதும். திருட்டினால் வரக்கூடிய தீமைகளை அவனால் புரிந்துகொள்ள முடியும். அவனுக்கு திருட்டினால் வரக்கூடிய தீமைகளை நானூறு பக்க நாவலில் விளக்கத் தேவையில்லை. 3. நாம் உணரும் உண்மைகளை, வாழ்க்கைக்குழப்பங்களை எழுதினால் போதும். அவை அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாசிக்கக்கூடிய அனைவரும் குவாண்டம் இயற்பியல் பற்றிய ஒரு நூலினை வாசித்து முடிக்க முடியும். ஆனால், அந்நூல் புரிய வேண்டும் என்றால் இயற்பியலில் நல்ல பயிற்சி இருந்திருக்க வேண்டும். அதுபோல, இலக்கிய ரசனைக்கும் பயிற்சி தேவை.
உண்மையில் தீவிர இலக்கியம் முக்கியமான தரப்பா? தீவிர இலக்கியம் என்றும் அதிக வாசகர்களைக் கொண்டதில்லை. வணிக இலக்கியம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றபோதும், ஊர்தோறும் அரசியல் அமைப்புகள் கொள்கை இலக்கியங்களைக் கொண்டாடிய போதும் எங்கள் இதழ்கள் முன்னூறு பிரதிகளுக்குள்தான் அச்சிடப்பட்டன. நூல்கள் ஆண்டுக்கு ஐந்தும் பத்துமாகத்தான் விற்றன. ஆனால் எங்களால் ஒரு இலக்கிய மதிப்பீட்டை முன்னிறுத்த முடிந்தது. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்த புதுமைப்பித்தனின் கதைகளை மதிப்பிட்டு இன்றும் ஆண்டுக்கு ஐம்பது கட்டுரைகளாவது எழுதப்படுகின்றன. இன்றுவரை அதிகம் விற்கும் படைப்பான பொன்னியின் செல்வனைப் பற்றிக்கூட அவ்வளவு எழுதப்படுவதில்லை. (நான் அறிமுகக் கட்டுரைகளைச் சொல்லவில்லை. மதிப்பீட்டுகள் - விமர்சனங்களையே சொல்கிறேன்). நான் மேலே பல எழுதாளர்களைப் பட்டியல் இட்டுள்ளேன். அவர்களில் எத்தனை பேரின் படைப்புகளைப் பற்றிய தொடர்ச்சியான கவனம் எழுத்தில் பதிவு செய்யப்பட்டுகிறது? தீவிர இலக்கியத்தைச் சாராத படைப்பாளிகளில் பாரதிதாசனைத் தவிர வேறுயார் மேற்கோள் காட்டப்படுகின்றனர்? திரையிசை மன்னர்களான வாலி, கண்ணதாசன், வைரமுத்து ஆகியோரின் திரைப்படப் பாடல்கள் பேசப்படுவதில் நூறில் ஒரு பங்காவது அவர்களது பிற நூல்கள் பேசப்படுகின்றனவா? அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரின் அரசியல் கருத்துக்கள் மேற்கோள் காட்டப்படுவதில் ஆயிரத்தில் ஒரு பங்காவது அவர்களது இலக்கியப் படைப்புகளில் இருந்து மேற்கோள் காட்டப்படுகிறதா? ஆனால் பிரமிளும் ஜி. நாகராஜனும் இன்னும் இலக்கிய உரையாடல்களில் இருக்கிறார்கள்.
இது மிக இயல்பானது. தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 150-200 படங்கள் வெளியாகின்றன. ஆனால் நாம் அவற்றில் எத்தனை படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தயாராக இருக்கிறோம்? நாம் பிறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன் வெளியான சினிமாக்களில் எத்தனையை நாம் முதன்முறையாக பார்க்கத் தயாராக இருக்கிறோம். அதற்கு நமக்கு வலுவான பரிந்துரைகள் தேவைப்படுகின்றன. வணிக இலக்கியத்தால் அடிப்படையில் பரிந்துரைகளைச் செய்து ஒரு இலக்கிய மூலநூல் வரிசையை உருவாக்க முடியாது. அது அடிப்படையில் அன்றைய சமூகத்தின் ரசனையைக் கவர்ந்து அதிக புத்தகங்கள் விற்கப்பட வேண்டும் என்று விரும்புவது. பழைய புத்தங்களைப் படிக்க ஆளனுப்பினால், அது தற்போதைய வாசகர்களின் நேரத்தையும் பணத்தையும் திசை திருப்பும் வேலை. கொள்கை இலக்கியங்களின் ஒருபகுதி அன்றைய அரசியலின் ஆளுகைக்கு உட்பட்டது. உதாரணமாக, திராவிட அரசியலைக் கடுமையாக விமர்சிக்கும் இலக்கிய நூல்கள் அன்று மார்க்சியர்களால் எழுதப்பட்டன. இன்று அவற்றை ஒரு வாசகனுக்குப் பரிந்துரைக்க அவர்களால் முடியாது. இவற்றை மீறி இவ்விரு தரப்பாலும் பரிந்துரைக்கப்படும் நூல்கள் அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கவேண்டும். பொதுவாக, இவற்றின் மொழி கொஞ்சம் பழயதாகி விடுகின்றது. ஒரு திரைப்படத்தைவிட, ஒரு முகநூல் பதிவைவிட அந்நூலின் சுவாரசியமும் அதிகமாக இருக்க வேண்டியுள்ளது. இந்நான்கு தடைகளையும் கடந்து ஒரு தீவிர இலக்கியவாதி தன் மதிப்பீட்டை முன்வைக்கிறான். எவ்வாறென்றால் அவனுக்கு என்றுமே அதிக வாசகர்கள் வரப்போவதில்லை. எனவே, அவனது முதன்மை என்பது அவனது இலக்கியக் கருத்துக்களால் அமைவது மட்டுமே. ஆகவேவே அவன் அவனுடைய முன்னோடிகளைத் தொடர்ச்சியாக மதிப்பிட்டு முன்வைக்கும் தேவை அவனுக்கு இருக்கிறது. அவனுக்கு மொழியின் பழமையைத் தாண்டி படிப்பதற்கு பயிற்சி இருக்கிறது. அவனுக்குப் பிடித்த படைப்பை அன்றைய அரசியலின் அடிப்படையில் ஒதுக்கி வைப்பதில்லை. இப்போக்கின் பெரும்பாலான நூல்கள் அரசியல் அற்றவை. எனவே, அவனுக்கு சுவாரசியமாக இருந்த படைப்பு அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது. இவ்வாறாக தீவிர இலக்கியம் காலத்தில் நிலைநிறுத்தப்படுகிறது. எல்லா மொழியிலும் இவ்வாறுதான். நோபலும் புக்கரும் புட்லிசரும் தத்தம் மதிப்பை அவை அளிக்கும் விருதுத் தொகையினால் ஈட்டுவதில்லை. அவ்வவ்விருதுக்குப் பின்னுள்ள கறாரான மதிப்பீடு மூலமாகவே ஈட்டுகிறது.
எங்கள் தரப்பில் வைக்கப்படும் மதிப்பீடுகளிலும் தனிநபர் சாய்வுகள் உள்ளன. சிலர் காழ்ப்பினால் ஒத்துக்கப்படுகிறார்கள். சிலர் தகுதிக்கு மீறி புகழப்படுகின்றனர். ஆனால் சூழலில் திரண்டுவரும் கருத்து ஒத்துக்கக்கூடியதல்ல.
―
நான் பிற இலக்கிய போக்குகளைச் சார்ந்த எழுத்தாளர்களுக்கு விக்கியில் இடம் இருக்கக்கூடாது என்று வாதாடவில்லை. அனைத்து வகை எழுத்தாளர்களும் தமிழ்ப் பண்பாட்டிற்கு முக்கியமானவர்கள்தான். ஆனால், ஆண்டுக்கு இருநூறு பேராவது புதிதாக நூலை வெளியிடுகிறார்கள். அனைவருக்கும் ஒரு கட்டுரையையும் அவர்கள் வெளியிட்ட நூலுக்கு ஒரு கட்டுரையும் வெளியிடுவது சாத்தியமற்றது. எனவே, விக்கிப்பீடியாவின் குறிப்பிடத்தக்கமை கொள்கைக்கு தீவிர இலக்கிய மரபினரின் மதிப்பீடுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றே பரிந்துரைக்கிறேன். இலக்கிய சிற்றிதழ்களில் எழுதப்பெரும் கட்டுரைகள் யாரோ ஊர்பேர் தெரியாதவர்கள் தங்களுக்குள் எழுதிக் கொள்ளும் புகழ் மொழிகள் இல்லை. அவற்றுக்குப் பின்னால் ஒரு மூலநூல் தொகை உள்ளது. மதிப்பீடுகளின் பின்னால் விமர்சன நோக்கும் உள்ளது. என்ன இருந்தாலும் 600 சிறுகதைகளும் பல நாவல்களும் எழுதி, அக்காலத்தில் பல குழந்தைகளுக்குப் பெயர்கள் வைக்கப்படும் அளவிற்கு புகழ்பெற்ற பாத்திரங்களை உருவாக்கிய நா. பார்த்தசாரதி முதலியோர் காலத்தில் எங்கோ மறைகையில், வெறும் எட்டு சிறுகதைகள் மட்டும் எழுதிய மௌனியை தமிழின் முதன்மை சிறுகதை ஆசிரியர்களுள் ஒருவராக நிலைநிறுத்தியது புதுமைப்பித்தனும் அவனது மதிப்பீட்டை ஏற்றுக்கொண்ட தீவிர இலக்கிய மரபும் தானே?
―
தமிழ் விக்கியில் எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் குறிப்பிடத்தக்கமையை பரிசீலிப்பதற்கு நான் முன் வைக்கும் பரிந்துரைகள்:
ஆங்கில விக்கி படைப்பாளிகளின் குறிப்பிடத்தக்கமையை ஏற்றுக்கொவதற்குத் தனியான தகுதிகளை முன்வைக்கிறது. அவை:
1. அந்நபர் முக்கியமானவராகக் கருதப்பட வேண்டும். சக படைப்பாளிகளாலும் அந்நபரைப் பின்பற்றுபவர்களாலும் பாவளாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அல்லது
2. அந்நபர் குறிப்பிடத்தகுந்த கருத்தையோ வழிமுறையையோ கோட்பாட்டையோ உருவாக்கியிருக்க வேண்டும். அல்லது
3. அந்நபர் குறிப்பிடத்தகுந்த மற்றும் பரவலான அறிமுகத்தைப் பெற்ற படைப்பை உருவாக்கியிருக்கவோ அல்லது அதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்களிப்பை அளித்திருக்கவோ வேண்டும். மேலும் அப்படைப்பிற்கு பல மதிப்புரைகள் வெளியாகியிருக்கவோ அல்லது அப்படைப்பை வைத்து பல கட்டுரைக்களோ பிற படைப்புகளோ வெளியாகியிருக்க வேண்டும். அல்லது
4. அந்நபரின் படைப்பானது முக்கியமான நினைவுச் சின்னமாகவோ அருங்காட்சியத்தில் நிறந்தரமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவோ வேண்டும்.
மேலும் புத்தகங்களுக்கான குறிப்பிடத்தக்கமை விதி எண் ஒன்று இவ்வாறு சொல்கிறது.
1. புத்தகமானது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நல்ல படைப்புகளுக்கு மூலமாக இருக்க வேண்டும். இங்கு படைப்பு என்பது செய்தித்தாள் கட்டுரைகள், பிற புத்தகங்கள், திரைப்படங்கள், மதிப்புரைகள், திரைத் தொடர்கள், நூல்களின் பட்டியல்கள் ஆகியன. அப்புத்தகத்தின் பிறவடிவங்கள் (மறுபதிப்பு, மின்நூல்கள்) மற்றும் விளம்பரங்கள் கணக்கில் கொள்ளப்படமாட்டாது.
இவற்றை மட்டும் வைத்தே நாம் எழுத்தாளர்களுக்கும் புத்தகங்களுக்கும் கட்டுரைகள் உருவாக்க முடியும். ஆனால் இவ்விதிகளுக்கு ஏற்ப சான்றுகளை முன்வைக்கும்போது, அவை நம்பத்தகுந்த மூலம் இல்லை என்று நிராகரிக்கப்படுகிறது. தீவிர இலக்கியம், மரபு கவிதைகள், கொள்கை இலக்கியம் ஆகியன பெரும்பாலும் சிற்றிதழ்களிலேயே எழுதப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன. அவ்விதழ்களை நம்பத்தகுந்த மூலங்கள் அல்ல என்று ஒதுக்கி வைத்துவிட்டால் வேறு எந்த சான்றாதாரத்தையும் இணைக்க முடியாது. எனவே, நம்பத்தகுந்த மூலங்கள் என்று ஒரு பட்டியல் இட வேண்டும். வேண்டுமானால், அப்பட்டியலில் உள்ள மூலங்களில் அதிகமுறை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் (உதாரணமாக, ஆங்கில விக்கியில் இரண்டு முறை என்று இருப்பதை ஐந்து அல்லது ஐந்திற்கும் மேற்பட்ட முறை என்று அதிகரித்துக் கொள்ளலாம்.) என்ற விதியினைச் சேர்த்துக்கொள்ளலாம்.
நம்பத்தகுந்த மூலங்களுக்கு நான் முன்வைக்கும் பரிந்துரைகள்:
1. இணைய இதழ்கள்: தமிழினி, யாவரும்.காம், அகழ், வனம், ஓலைச்சுவடி, வாசகசாலை, சொல்வனம், பதாகை, மயிர், கனலி, வல்லினம், கவிதைகள், தி இந்து தமிழ்திசை, அருஞ்சொல்.
2. எழுத்தாளர்களின் இணைய தளங்கள்: ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், இசை, இளங்கோ கிருஷ்ணன், பாவண்ணன், எம். கோபாலகிருஷ்ணன், சுனில் கிருஷ்ணன், ம. நவீன், காளிப்ரஸாத், லஷ்மி மணிவண்ணன், ஆர். அபிலாஷ் முதலியோரின் இணைய தளங்கள்.
3. அச்சு இதழ்கள்: காலச்சுவடு, உயிர்மை, மணல்வீடு, புரவி, கல்குதிரை, நீலம் முதலிய அச்சு இதழ்களில் வந்தவற்றின் மறுவெளியீடு இணையத்தில் கிடைத்தால்.
4. இலக்கிய விருதுகள். ஏற்க்கனவே சாகித்திய அகாதமி விருது முக்கிய விருதாகக் கருதப்படுகிறது. சாகித்திய அக்காதமியின் யுவபுரஸ்கார் விருதும் கவனிக்கப்படவேண்டும் மொழிபெயர்ப்பு விருது ஆகியவற்றையும் விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் நினைவு விருது, ஆத்மாநாம் விருது, சிறுவாணி வாசகர் மையத்தின் நாஞ்சில்நாடன் விருது, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுகள், தன்னறம் விருது, ஸ்பாரோ இலக்கிய விருது, கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் இலக்கிய விருது ஆகியவற்றையும் குறிப்பிடத்தக்க விருதுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
4. யூடியூப் காணொளிகள். பொதுவாக இவை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அந்தந்த எழுத்தாளர்களின் நூல்வெளியீட்டு நிகழ்ச்சிகளில் பேசப்படுபவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஆனால் பிற நிகழ்வுகளில் ஒரு எழுத்தாளரின் பங்களிப்பு குறிப்பிடப்பட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டும். Shruti TV literature -இல் பெரும்பாலான இலக்கிய நிகழ்வுகளின் காணொளிகள் கிடைக்கின்றன.
மேலே நான் தீவிர இலக்கிய மரபின் மதிப்பீடு எவ்வாறு காலத்தில் நிலைபெறுகிறது என சுருக்கமாகக் கூறியது இப்பட்டியலுக்குத் வலு சேர்க்கவே. பிற இலக்கியப் போக்குகளின் மதிப்பீட்டை முன்வைக்கும் எழுத்தாளர்களையும் இதழ்களையும் இப்பபட்டியலையும் சேர்த்துக்கொள்ளலாம். -CXPathi (பேச்சு) 17:29, 7 மே 2022 (UTC)
கலைக்களஞ்சியம் என்பதை நம்பகமான, தேவையான தகவலை தேவையானவர்களுக்கு வழங்குவதேயாகும். என்சைக்லோபீடியா, பிரிட்டானிக்கா போன்ற வரிசையில் இலவச முயற்சியே விக்கிப்பீடியா. ஆனால் இதனை தங்களுக்கும் (தன்னைப் பற்றி எழுதுவது), தங்களைச் சார்ந்தோருக்கும், நலமுரண் ஆதாயமாகவும் (நூல்கள், சினிமா, பிற) தங்களுக்குப் பிடித்த விடயங்களை (சமயம், சாதி, இனம், மொழி, பிரதேசம், பிற) மிகைப்படுத்தி / உயர்வாக அல்லது தனக்கும் பிடிக்காததை தாக்கி எழுத விக்கிப்பீடியாவினைப் பயன்படுத்துவது மிகவும் கவலைக்குரியது. விக்கிப்பீடியாவை விமர்சிப்பவர்கள் ஏன் விக்கிப்பீடியாவில் தங்களைப் பற்றி எழுத விரும்புகிறார்கள் என்பது முரண்நகை.
எழுத்தாளர் xyz, சினிமா 123, அரசியல்வாதி abc, என்ற கட்டுரைகளில் பல மணிநேரம் செலவிடுவதைவிட, அறிவியல், இலக்கணம், மொழி தொடர்வுபட்ட கட்டுரைகளை உருவாக்கி, விரிவுபடுத்தி, மேம்படுத்தினால் அது பலருக்கும் உதவும். தமிழ் விக்கிப்பீடியா அறிவுப் பெட்டகமா இல்லது இலவச விளம்பரமா என்பதை அனைவரும் மீளாய்வு செய்ய வேண்டும்.
அறிவை வளர்க்க விக்கிப்பீடியா உதவுமாயின் அது பல தமிழ் (தமிழ் மட்டுமே) தெரிந்த பலருக்கு உதவும். அல்லது இதுவும் அரசியல் கூடாரமாகி, பலரின் விளம்பரப்பலகையாகிவிடும். அதற்கு நாமும் உடந்தையாகிவிடக் கூடாது. நாம் இல்லாத எதிர்காலத்திற்கும் அப்படி நடக்கதவாறு திட்டங்களை உருவாக்க வேண்டும்.
10 வருடங்களுக்கு மேலாக நான் இங்கு என் நேரம் உட்பட்ட வளங்களை செலவிடுவது "தமிழ் விக்கிப்பீடியா" என்ற இலவச கலைக்களஞ்சியத்திகாகவேயன்றி, நல்ல பிள்ளை என்ற பெயர் எடுப்பதற்கோ அல்லது "தமிழ் விக்கிப்பீடியா விளம்பரப்பலகை" ஒன்றுக்கு உதவுவதற்கோ அல்ல. --AntanO (பேச்சு) 17:31, 7 மே 2022 (UTC)
@CXPathi: இலக்கிய வகைமைகள் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது விக்கிப்பீடியாவின் contextக்குத் தேவையற்றது. தரமான இலக்கியத்திற்கு யார் authority என்று நீங்கள் கூறுவது நிகழ் உலகில் உள்ள cartelகளை மீண்டும் விக்கிப்பீடியாவில் நிறுவுவதாகவே முடியும். ஆகவே, அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது போல் புறவயமான ஒரு வரையைறையை உருவாக்க வேண்டும். பிறகு, அதனைச் சரி பார்த்து உறுதி செய்ய இலக்கிய ஆர்வமும் அறிமுகமும் உள்ள விக்கிப்பீடியர்கள் வேண்டும். இப்போது உள்ள தமிழ் விக்கிப்பீடியர் பயனர் நிலையில் இது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. --இரவி (பேச்சு) 18:06, 7 மே 2022 (UTC)
- @AntanO:நீங்கள் சொல்வதுடன் நான் பெரும்பாலும் ஒத்துக்க் கொள்கிறேன் அண்ணா. ஆனால் ஒருவர் அறிவியல், இலக்கணம் ஆகியவற்றை முக்கியமாகக் கருதும்போது இன்னொருவர் இலக்கியத்தையும் முக்கியமாகக் கருதலாம் அல்லவா?
விக்கிப்பீடியா இலவச விளம்பரம் ஆகக்கூடாது என்பது என் கருத்தும் தான். ஆனால் வணிக இதழ்களுக்கு வெளியே இருக்கும் ஒரு அறிவுத் தரப்பும் பொருட்படுத்தப்பட வேண்டும் அல்லவா?
விக்கிப்பீடியப் பங்களிப்பாளர்கள் அனைவரும் அனைத்துத் துறையிலும் எழுத வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? பலர் தங்களுக்குப் பிடித்த துறைகளில் எழுதுவார்கள். நாம் கவனிக்க வேண்டியது அவர்கள் எழுதுவது கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ற தலைப்பா என்பதையும் கட்டுரையின் நோக்கு, நடை ஆகியன விக்கிப்பீடியாவின் தரத்திற்கு ஒத்துவருகிறதா என்பதையும் தானே?
விக்கிப்பீடியாவில் ஒருவரைப் பற்றிய கட்டுரை இருப்பதால் பெரிய ஆதாயம் எதுவும் இருப்பதில்லை. எப்பொழுதாவது அந்த எழுத்தாளரைப் பற்றி கட்டுரையோ பேட்டியோ வெளிவந்தால் அடிப்படைத் தகவல்களை சேர்க்க உதவும் அவ்வளவுதான். நான் படைப்பாளிகளின் குறிப்பிடத்தக்கமையை நிறுவ ஆங்கில விக்கி பயன்படுத்தும் peer review தகுதியை தமிழ் விக்கியும் பயன்படுத்த வேண்டும் என்றே கூறுகிறேன்.
மேலே நான் கூறிய நான்கு தரப்புகளுள் ஏன் ஒன்றைச் சார்ந்த இதழ்களையும் எழுத்தாளர்களையும் பட்டியல் இட்டேன் என்றால் என்னால் அவர்களுக்கு நடுவே உள்ள இலக்கிய மதிப்பீட்டை நிறுவ முடியும் என்பதால் தான். தீவிர இலக்கிய தரப்பைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் சகாக்களைப் பாராட்டிக் கொள்வதில்லை. பிறரின் இலக்கிய இடத்தை விமர்சிப்பதே வழமை. எல்லாத் தர மதிப்பீடுகளையும் போல இதரப்பு ஏற்றுக் கொள்ளும் படைப்பாளிகளைவிட நிராகரிப்போரின் எண்ணிக்கையே அதிகம்.
@Ravidreams:, அண்ணா நான் இலக்கிய கார்ட்டல்களை இங்கு கொண்டுவந்து நிறுவ வரவில்லை அண்ணா. நான் சொல்லவருவது இலக்கியத்தில் popular fictionக்கும் literatureக்கும் உள்ள வேறுபாட்டையும் இங்கு உள்ள இலக்கியப் போக்குகளைப் பற்றியும் மட்டுமே. நான்கு தரப்பிலும் மிகக்குறைவாக எழுதி வாசிக்கப்படுவது மரபுக் கவிதைகள் தான். அப்போக்கின் கவிஞர்களுக்கும் விக்கிப்பீடியாவில் இடம் வேண்டும். முக்கியமான எழுத்தாளர்களைப் பட்டியல் இடும்போது இந்நான்கு தரப்பின் ஆட்களும் இடம் பெற வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு தரப்பின் மதிப்பீட்டை முன்னிறுத்தும் நபர்களையும் இதழ்களையும் நான் கூறியுள்ளேன். பிற போக்குகளை முன்னிறுத்தும் எழுத்தாளர்களையும் இதழ்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளேன்.
இப்போதைக்கு எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்கமையைத் தீர்மானிக்க ஆங்கில விக்கி கைக்கொள்ளும் படைப்பாளிகளுக்கான குறிப்பிடத்தக்கமை நெறிகளை நாமும் நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதும் அவ்விதிகளுள் முதல் விதியான peer reviewவை தீர்மானிக்க நம்பத் தகுந்த எழுத்தாளர்கள், இதழ்கள் என்று ஒரு பட்டியலை உருவாக்க வேண்டும். அவர்களால் குறிப்பிடப் பட்டிருந்தால் peer review என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் கோரிக்கை. -CXPathi (பேச்சு) 18:48, 7 மே 2022 (UTC)
- Peer review தேவை என்றவுடனே அது ஒருவருக்கு ஒருவர் முதுகு சொரியும் வேலை என்ற குரலும் எழுகிறது அண்ணா. நான் அது அவ்வாறு அல்ல - இது நிலைபெறும் ஒரு மதிப்பீடு என்று சொல்லவே இலக்கியப் போக்குகளைப் பற்றி எழுதினேன். இப்பொழுது இருக்கும் விக்கிப்பீடிய பங்களிப்பாளர்களைக் கொண்டு peer reviewக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய எழுத்தாளர்கள், இதழ்களின் பட்டியலை உருவாக்க முடியவில்லை என்றால், விக்கிக்குப் பங்களிக்காதவர்களிடமும் இந்த ஒரு பட்டியலுக்காக மட்டும் கருத்துக்களைக் கேட்டு பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என்றுதான் கோருகிறேன் அண்ணா. -CXPathi (பேச்சு) 01:58, 8 மே 2022 (UTC)
Vote for your favourite Wikimedia sound logo[தொகு]
Please help translate to your language
We are really sorry for posting in English
Voting in the Wikimedia sound logo contest has started. From December 6 to 19, 2022, please play a part and help chose the sound that will identify Wikimedia content on audio devices. Learn more on Diff.
The sound logo team is grateful to everyone who participated in this global contest. We received 3,235 submissions from 2,094 participants in 135 countries. We are incredibly grateful to the team of volunteer screeners and the selection committee who, among others, helped bring us to where we are today. It is now up to Wikimedia to choose the Sound Of All Human Knowledge.
Best wishes, Arupako-WMF (பேச்சு) 16:46, 17 திசம்பர் 2022 (UTC)
சிறப்புக் கட்டுரைகள் நியமனம்[தொகு]
சிறப்புக் கட்டுரைகள் நியமனம் மீண்டும் தொடங்கப்படுமா? இது வரை 11 கட்டுரைகள் மட்டுமே சிறப்புக் கட்டுரைகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளன. சுப. இராஜசேகர் (பேச்சு) 03:51, 24 திசம்பர் 2022 (UTC)
மொழிபெயர்ப்புக் கருவியில் கட்டுப்பாடுகள்[தொகு]
வணக்கம், ஐதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது தொழிநுட்பக் கூடலில் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியில் சிறிதளவு மாற்றங்கள் கூட செய்யாமல் கட்டுரை வெளியிடுவது தொடர்பாக Pau Giner, சுரேஷ் தொட்டிங்கல் ஆகியோரிடம் நமது சமூகம் சார்பாக கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு, இந்தக் கருவியில் உங்களுடைய சமூகம் எந்த மாற்றங்கள் அல்லது கட்டுப்பாடுகளை எதிர்பார்க்கிறது என்பதனைத் தெரிவித்தால் (phabricator ticket மூலம்) அதனை செயற்படுத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், தற்போது ஒரு பத்தியில் குறைந்தபட்சமாக ஐந்து வார்த்தைகளை திருத்தம் செய்தால் தான் வெளியிட முடியும் என்றும், கருவியில் அதீத கட்டுப்பாடுகள் விதிப்பது விக்கியின் அடிப்படைக் கொள்கைக்கு மாறானதாக இருக்கும் என்றும் visual editor, source editor மூலம் ஒருவரால் எந்தவகையானக் கட்டுரைகளையும் வெளியிட முடியும் எனும் போது ஏன் கருவிக்கு மட்டும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் கூறினார்.
தற்போதுவரை 26,140 கட்டுரைகள் தமிழில் இந்தக் கருவியினைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட கட்டுரைகளில் 26.02.2023 நிலவரப்படி 3413 கட்டுரைகள் நீக்கப்பட்டுள்ளது. எனவே சில கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் நமது துப்புரவுப் பணியினை குறைக்க இயலும் என நம்புகிறேன். காண்க விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)#போட்டிகளும், கலைக்களஞ்சியத்தின் தரமும்.
உதாரணமாக தெலுங்கில் உள்ள விக்கிப் பயனர்கள் குறைந்தபட்சம் 30% கட்டுரையில் மாற்றங்கள் செய்திருந்தால் ஒழிய அந்தக் கட்டுரையினை வெளியிட இயலும். இல்லாதபட்சத்தில் ஒரு பயனரால் அந்தக் கட்டுரையினை வெளியிட முடியாது. எனவே கீழ்கானும் பரிந்துரைகளை எனது கருத்தாக பரிந்துரைக்கிறேன். தமிழ்ச் சமூக ஒப்புதலோடு அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
- ஒரு பத்தியில் குறைந்தபட்சம் 20% திருத்தங்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
- அவர்/இவர் எனும் வார்த்தை பல முறை ஒரே பத்தியில் வருவதைத் தவிர்த்தல்.
- ஒரு பயனர் அதிகபட்சம் 30 நாட்களுக்குள் மொழிபெயர்ப்பு கருவியில் அந்தக் கட்டுரையினை உருவாக்கலாம். (அதிக நாட்கள் ஒரு பயனர் அந்தக் கருவியில் வைத்திருந்தால் மற்ற பயனர்களால் அந்தக் கட்டுரையினை உருவாக்க இயலாது).
- இரு சிவப்பு இணைப்புகளுக்கு மேல் உள்ள கட்டுரைகளை வெளியிடக் கூடாது.
ஆங்கிலத் தலைப்புகள் உள்ள தமிழ்க் கட்டுரைகளை வெளியிடக் கூடாது.
--ஸ்ரீதர். ஞா (✉) 15:16, 5 மார்ச் 2023 (UTC)
- தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். கூடுதலாக மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் மொழிபெயர்க்கப்படுவதை தடுக்கலாம். மற்ற மொழிக் கட்டுரைகள் மேற்கோள்கள் இல்லாத போது அவை எவ்வகையில் தரமானவை என்ற கேள்வி எழுகிறது. மொழிபெயர்ப்பு செய்யும் பயனர்கள் இரு மேற்கோள்களையேனும் இணையத்தின் உதவியுடன் இடலாம். இது தமிழில் உருவாக்கப்படும் புதிய மொழிபெயர்ப்புக் கட்டுரையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும்.
- ~~
- அபிராமி (பேச்சு) 15:57, 5 மார்ச் 2023 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தது 500 தொகுப்புகளைச் செய்தவர்கள் மட்டுமே உள்ளடக்க மொழிபெயர்ப்பு கருவியை பயன்படுத்த முடியுமாறு கருவியில் மாற்றங்களை செய்வது நல்லது.
- //ஆங்கிலத் தலைப்புகள் உள்ள தமிழ்க் கட்டுரைகளை வெளியிடக் கூடாது.// இது தற்போது தேவையற்ற கோரிக்கை என கருதுகிறேன். ஏனெனில் தற்போது உள்ளடக்க மொழிபெயர்ப்பில் தலைப்பையும் மொழிபெயர்த்து தருவதாக மேம்படுத்தபட்டுள்ளது.--கு. அருளரசன் (பேச்சு) 00:24, 6 மார்ச் 2023 (UTC)
- ஆம். நினைவூட்டலுக்கு நன்றி. ஸ்ரீதர். ஞா (✉) 06:19, 6 மார்ச் 2023 (UTC)
விருப்பம் தரத்தினை மேம்படுத்த நல்லதொரு செயலாக்க முயற்சி. வரவேற்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:52, 7 மார்ச் 2023 (UTC)
- ஆம். நினைவூட்டலுக்கு நன்றி. ஸ்ரீதர். ஞா (✉) 06:19, 6 மார்ச் 2023 (UTC)