விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏப்ரல் 1[தொகு]

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்- கட்டுரைகள்[தொகு]
நீக்கலுக்கான காரணங்கள்
  1. விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்/தேவைப்படும் கட்டுரைகள்/தொடக்க வடிவம்/இனம் என்பதில் குறிப்பிட்டுள்ளவாறு சில வார்த்தைகளை மட்டும் மாற்றிவிட்டு பிறவற்றை அப்படியே வெட்டி ஒட்டப்பட்டுள்ளது.
  2. விக்கிப்பீடியா பெண்களை நேசிக்கிறது மறை முதற்கொண்டு வெட்டி ஒட்டப்பட்டுள்ளதைக் காண்க.
  3. இவை வெறும் கட்டுரை எண்ணிக்கையினை உயர்த்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றம்சாட்டுவதற்குக் காரணம், அதற்கான ஆங்கிலக் கட்டுரை (தேவையான அளவு) இருக்கும் போது அதற்கு சிறிதும் தொடர்பில்லாது மேற்குறிப்பிட்ட தொடக்க வடிவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பல கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
  4. சனவரி 19, 2024இல் இது தொடர்பான முதல் உரையாடல் நீச்சல்காரனால் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தொடக்க வடிவம் குறித்தான உரையாடல் ஆனால் இன்று வரை அடிப்படை வடிவத்திற்கான ஒப்புதலைப் பெற இந்தத் திட்டத்தைத் தொடங்கியவரோ அல்லது கட்டுரைகளை உருவாக்கியவர்களோ எவரும் முன்வரவில்லை. ஆனால், மார்ச் 30 வரை கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
  5. இவ்வாறான கட்டுரைகளை எண்ணிக்கைக்காகவே உருவாக்கினாலும் அவற்றைத் தானியங்கி மூலமாக உருவாக்க வேண்டும். இல்லை எனில் இதே போன்று துடுப்பாட்டக்காரர்கள், பள்ளிகள் தொடர்பான பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளை மிக எளிதாக வெட்டி ஒட்டி ஓரிரு மாதங்களில் உருவாக்கிவிடலாமே.
  6. இந்தக் கட்டுரைகளை நீக்கிவிட்டுப் பட்டியலாக உருவாக்கலாம். காண்க:en:List of endemic and threatened plants of India இல்லையெனில் இதே போல் எதிர்காலத்தில் இதனை உதாரணமாகக் காண்பித்து வெட்டி ஒட்டும் கட்டுரைகளை எழுத வாய்ப்புள்ளது. வெட்டி ஒட்டப்பட்டுள்ள சில கட்டுரைகள்: பகுப்பு:துன்பேர்சியா பேரினம்
    • சரி. குடும்ப சூழல் சரியில்லை பிறகு தொடர்வோம். அனுபவம் உள்ள நீங்கள் சமூக கருத்தினைப் பெற்று செயற்படுவீர்கள் என நம்புகிறேன். ஓரிரு வாரங்கள் கழித்து தொடர்ந்து செயற்படுவோம். உழவன் (உரை) 14:51, 1 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

ஆதரவு[தொகு]

  1.  ஆதரவு அனைத்துப் பக்கங்களையும் பட்டியல் பக்கமாக மாற்ற ஆதரிக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 19:03, 1 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
  2.  ஆதரவு பட்டியல் பக்கமாக மாற்ற ஆதரிக்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 20:03, 1 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
  3.  ஆதரவு கட்டுரைகளை மேம்படுத்த குறிப்பிட்ட காலக்கெடு விதிக்கவேண்டும். அதன் பிறகும் கட்டுரைகள் மேம்படுத்தபடாமல் அப்படியே இருந்தால், பட்டியல் பக்கமாக மாற்றலாம்.--கு. அருளரசன் (பேச்சு) 07:57, 5 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

மறுப்பு[தொகு]

  1. என் இலக்கு 100 நாள்களுக்கு 100 கட்டுரைகளைத் தொடங்கி வைப்பது ஆகும். அடுத்தக்கட்ட இலக்கு எழுதிய 100 கட்டுரைகளையும் தரத்தின் அடிப்படையில் இன்னும் மேம்படுத்துவதாகும். அதுவரை புதிய கட்டுரைகளை எழுதமாட்டேன். அந்த மேம்பாடு முடியும்வரை நான் தொடங்கிய கட்டுரைகளை நீக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.--நேயக்கோ (பேச்சு) 10:53, 4 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
    வணக்கம், தங்களது கருத்திற்கு நன்றி.
    • இங்கே இன்னும் 20 நாட்கள் தான் பங்களிப்பேன் எனக் கூறினீர்கள். இப்போது வேறுவிதமாகக் கூறுகிறீர்கள்.
    • //என் இலக்கு 100 நாள்களுக்கு 100 கட்டுரைகளைத் தொடங்கி வைப்பது ஆகும். // உங்களது சில கட்டுரைகள் உட்பட, ஆங்கிலத்தில் போதுமான அளவு தகவல்கள் இருக்கும்போதே, ஏன் இவ்வளவு அவசர அவசரமாக வெட்டி ஒட்டிக் கட்டுரைகளை உருவாக்க வேண்டும். விக்கிப்பீடியாவினை ஒப்படைப்புப் பணி (assignment) போல கருத வேண்டாம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:13, 5 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
  2. விருப்பமில்லை ஒவ்வொரு இனக்கட்டுரையும் தனித்துவமானது. தகவற்பெட்டி, படம், விக்கித்தரவு இணைப்பு, டாக்சன் பார், வெளியிணைப்புகள், விக்கியினங்கள், பொதுவக இணைப்பு. அதனால் தான் ஆங்கில விக்கியில் தனித்தனி பக்கங்களை அனுமதி அளித்துள்ளனர். கட்டுரை ஆழம் குறித்த ஆவணங்கள் உருவாகும் வரை, இந்த வாக்கெடுப்பினை அவசர அவசரமாக செய்ய வேண்டியதில்லை என்பதே என் முடிவு.--உழவன் (உரை) 17:21, 5 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நடுநிலை[தொகு]

எண்ணங்கள்[தொகு]

  1. கருத்து - @Neyakkoo and இ.வாஞ்சூர் முகைதீன்: கூட்டுழைப்பு வாயிலாக வளர்த்தெடுக்கப்படும் கலைக்களஞ்சியத் தளத்தில், வரையறுக்கப்பட்ட திட்டங்களின் மூலம் பங்காற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால் - ஒரு திட்டத்தின் கீழ் கட்டுரைகளை உருவாக்குதல், கட்டுரைகளை மேம்படுத்துதல் எனச் செய்யப்படும் பணிகளின் மீது வினாக்கள் எழுப்பப்படும்போது அவற்றிற்கு பதிலளிப்பது அவசியமானதாகும். கருத்துப் பரிமாற்றங்களின் வழியே இணக்கமான முடிவை அடைய முடியும்; நல்லிணக்கம் நிலவும். பதிலளிக்க மறுப்பது அல்லது உரிய பதிலளிக்காமல் வேறொன்றை எழுதுவது என்பவை பொதுவான நியதி அடிப்படையில் சரியன்று. எனவே உரிய பதிலைத் தாருங்கள். பதிலளிக்க இப்போது நேரமில்லையெனில், கால அவகாசம் கேட்டுவிட்டு, இந்தப் பணியை இப்போதைக்கு நிறுத்துங்கள். 100 நாள்களுக்கு 100 கட்டுரைகள் தொடங்க வேண்டும் எனும் இலக்கு இருப்பின், வேறு துறை சார்ந்த கட்டுரைகளை எழுதும் வாய்ப்பு உள்ளது. @இ.வாஞ்சூர் முகைதீன் and Info-farmer: //விக்கிப்பீடியா பெண்களை நேசிக்கிறது மறை முதற்கொண்டு வெட்டி ஒட்டப்பட்டுள்ளதைக் காண்க// என ஸ்ரீதர் இந்த உரையாடலின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனைத் திருத்தும் முயற்சியை நீங்கள் இன்னமும் எடுக்கவில்லை. இந்தத் திட்டத்தில் பங்களித்த / பங்களிக்கும் பயனர்கள் உரிய பதில்களைத் தந்தால் தான், மற்ற பயனர்கள் தமது ஆதரவு / எதிர்ப்புகளை தெரிவிக்க இயலும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:22, 5 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
  2. User talk:Sridhar G வாக்கிட்ட பகுதியில் உரையாடுதலைத் தவிரக்கவும். கருத்துப் பகுதியில் பெயரை சுட்டி உங்கள் எண்ணங்களைத் தெரிவித்தலே நலம்.
    • முதலில் இனப்படிவம் குறித்து தெரிவித்துள்ளீர்கள். அது குறித்த போதிய விளக்கம் அங்கேயும், அதன் பேச்சுப் பக்கத்திலும் அளித்துள்ளேன். முழுமையாக புரிந்து பின்பற்றாமல், அறைகுறையாக பயனர் ஒருவர் எழுதியிருந்தால், அது அவரின் தவறே. அப்படிவமே தவறு என்றால், அதனை முதலில் நீக்க வாக்கெடுப்பு நடத்துங்கள்.
    • பிறகு மாற்ற உள்ள கட்டுரைகளை, இதற்குரிய அட்டவணையை உருவாக்கி தந்தால், பலரும் ஒப்பிட்டு கலந்துரையாட வசதியாக இருக்கும்.
    • இருப்பினும், ஆழம் குறித்து தெளிவான வழிகாட்டல்களை காண ஆவலாக உள்ளேன். அதன் அடிப்படையில் பல மாற்றங்களை தாவரவியல் கட்டுரைகளில் தவறாமல் செய்வேன். --உழவன் (உரை) 17:05, 5 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
    @Info-farmer கட்டுரை ஆழம் எனும் அளவீடு, முற்றிலுமாக வேறுபட்ட விசயம். தமிழ் விக்கிப்பீடியாவில் தனியாக கையாளப்பட வேண்டிய முன்னெடுப்பு. இந்தத் திட்டத்தின் கீழ் 1000 கட்டுரைகள் உருவாக்கப்பட்டாலும், தமிழ் விக்கிப்பீடியாவின் ஆழம் அதிகரிக்காது. கூடுதல் புரிதலுக்கு இங்கு காணுங்கள்: கட்டுரை ஆழம் - விரிதாள் மூலம் எளிய கணக்கீடு. எனது கருத்து தவறெனில், மற்ற பயனர்கள் எனக்கு எடுத்துரைக்கலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:35, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
  3. வெறுமனே எதிர்ப்பு வாக்கிடுவதால், அது தகுதியாகிவிடாது. இணக்க முடிவு குறித்து ஆ.வி இவ்வாறு குறிப்பிடுகிறது. Consensus is Wikipedia's fundamental method of decision making. It involves an effort to address editors' legitimate concerns through a process of compromise while following Wikipedia's policies and guidelines. It is accepted as the best method to achieve the Five Pillars—Wikipedia's goals. Consensus on Wikipedia neither requires unanimity (which is ideal but rarely achievable), nor is it the result of a vote. ஸ்ரீதர் நீக்கலுக்கான காரணங்கள் 6 குறிப்பிட்டுள்ளார். இதற்கு வெளயில் உரையாடுவது தவறு. விரும்பினால், அப்படியானவர்களை எச்சரிக்கையும் செய்யலாம். இந்த 6 காரணங்களுக்கு தக்க விளக்கம் அளிக்கவிட்டால், நீக்கலுக்கு ஆதரவான கருத்துக்களை நடைமுறைப்படுத்தலாம். --AntanO (பேச்சு) 05:17, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
  4. @Info-farmer:
  • //வாக்கிட்ட பகுதியில் உரையாடுதலைத் தவிரக்கவும்.// நன்றி, தவிர்க்கிறேன்.
  • //அப்படிவமே தவறு என்றால், அதனை முதலில் நீக்க வாக்கெடுப்பு நடத்துங்கள்.// ஒப்புதலே பெறாத படிவத்திற்கு எதற்காக நீக்கல் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எவ்வளவோ எடுத்துக்கூறியும், எந்தப் பகுப்பில் உள்ள கட்டுரைகளை எடுக்க வேண்டும் என்பது முதற்கொண்டு விக்கிப்பீடியாவில் எந்த அறிவிப்புமின்றி கலந்துரையாடிய நிர்வாகியான நீங்கள், ஏன் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறீர்கள்.
  • //தனித்துவமானது// மடைமாற்ற முயற்சிக்க வேண்டாம். எனது கேள்விகளுக்கும் இந்த பதிலுக்கும் தொடர்பில்லை. நான் வெட்டி ஒட்டியதைப் பற்றி கேட்டுள்ளேன்.
  • //ஆங்கில விக்கியில் தனித்தனி பக்கங்களை அனுமதி அளித்துள்ளனர்// இதை அவர்களிருவர் கேட்டால் கூட பரவாயில்லை. இவ்வளவு அனுபவம் உள்ள நிர்வாகியான நீங்கள் கேட்பதுதான் வியப்பாக உள்ளது. நிற்க, இது ஆ. வி அன்று, ஆ.வியில் உள்ள தகவல்கள் வேறு நீங்கள் வெட்டி ஒட்டிய தகவல்கள் வேறு.
  • //கட்டுரை ஆழம் குறித்த// தொடர்பற்று பேச விரும்பவில்லை.
  • //வாக்கெடுப்பினை அவசர அவசரமாக// சனவரி 19, 2024 முதல் இது தொடர்பான உரையாடல் நடைபெறுகிறது. ping செய்த பிறகும் பயனர்கள் பதில் கூற மறுக்கின்றனர். (நேரமின்மை காரணமாக உரையாட மனமின்றி கட்டுரை ஆக்கத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறார் வாஞ்சூர் முகைதீன்) அவர்களது தனிப்பட்ட பக்கத்தில் அறிவித்த பின்னர் தான் இங்கு கருத்துக்களைப் பகிர்கின்றனர். நீக்கலுக்கான வாக்கெடுப்பில் கூறியுள்ளபடி 7 நாட்களில் முடிவெடுப்பது எப்படி அவசரமானதாக இருக்க முடியும். --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:29, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
எண்ணங்களால் உருவான மாற்றங்கள்
  1. ஐலெக்சு இக்கட்டுரையை மேம்படுத்தியுள்ளேன். இனி ஒவ்வொரு நாளும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையைப் பார்த்து விரிவுப்படுத்துவேன். வாய்ப்புத் தருக.--நேயக்கோ (பேச்சு) 16:27, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
    தங்களது புரிதலுக்கும், ஆக்கநோக்கிலான முயற்சிகளுக்கும் நன்றி. இனிமேல் இதுபோன்று வெட்டி ஒட்ட வேண்டாம்.
    கட்டுரைகளை நீங்கள் விரிவாக்க முன்வந்தால், மற்ற பயனர்களின் ஒப்புதலோடு உங்களது கட்டுரைகளை மட்டும் நீக்காமல் தக்கவைக்கலாம். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:45, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
    இன்று இரண்டாவது கட்டுரையாக உரூல்லியா என்பதை விரிவுப்படுத்தியுள்ளேன். நேயக்கோ (பேச்சு) 12:09, 7 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
    நன்றி,User:Sridhar G உங்களது பதில், உற்சாகமூட்டுவதாய் உள்ளது. நானும் மேம்படுத்தியுள்ளேன். துன்பேர்சியா பகுப்பில் உள்ள கட்டுரைகளில் இரண்டு மட்டுமே நான் தொடங்கியது.
  2. காண்க: 1) துன்பேர்சியா (ஆங்கில விக்கிக்கட்டுரையைவிட மேம்படுத்தி இருக்கிறேன்), பேச்சு:துன்பேர்சியா-மேற்கோள் இடுவது தொடர்பான உரையாடல் ,
    • 2) துன்பேர்சியா கிரிகோரீ (இனம்)
    • மூவரையும் ஒரே உரையாடலில் இணைத்திருக்கும் போது, மூவருக்கும் தனித்தனிப் பட்டியல் தாருங்கள். நீக்கல்களோ / மாற்றங்களோ செய்ய உள்ள கட்டுரைகளின் பட்டியல் கொடுத்தால், அவற்றை நீக்காமல் இருக்க, ஒவ்வொரு நாளும் விரிவாக்கலில் ஈடுபடுவேன்; ஐந்து நாட்கள் சொல்லிக் கொடுத்தும் புதுப்பயனர் என் பெயரைக் கீழ் இறக்கிவிட்டார். எனக்கு இது நல்ல பாடம். இனி பயிலரங்கு தவிர எங்கும் உதவி செய்ய மாட்டேன். பரப்புரை செய்யும் போது பதிவு செய்து கொள்வேன். ஒரு சிலவரிகளில் என் பெயரை கெடுத்து விடுகின்றனர்.
    • பள்ளி ஆசிரியர் எழுதிய கட்டுரைகளையும், அடுத்து கூகுள் கட்டுரைகளையும் துப்புரவு செய்ய திட்டமிட்டுள்ள நீங்கள் அனைவரும். போதுமான நேரம் புதுப்பயனருக்குக் கொடுங்கள். புதுப்பயனர்களுக்கு... கொஞ்சம் விதிவிலக்குகளை, நாம் பின்பற்றினால் பயன் ஏற்படும் என்பதே எனது முடிவு.
    • தொடக்கத்தில் கூறியது போல, இச்சமூக முடிவுப் படி கட்டுரைகள் நீக்கினால், அதனை அப்பயனரின் பேச்சுப் பக்கத்தில் அறிவித்து விடுங்கள். நீங்கள் கூடி நல்ல முடிவெடுப்பீர்கள் என்றே நம்புகிறேன். புதியவர்களை அதிகப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம். எனது இந்த முதல் முயற்சியில் பல அணுகுமுறைகளைக் கற்றுக் கொண்டேன். இனி இந்த பக்கத்தில் நான் தெரியபடுத்துவதற்கு ஒன்றுமில்லை. ஒரே நேரத்தில் பல மூத்த பயனர்கள் உரையாடும் போது, புரியாமல் செயற்படுபவர்களுக்கு மேலும் குழப்பமே ஏற்படுகிறது. ஒரு புதியவருக்கு ஒரு வழிகாட்டி என திட்டமிடுங்கள். நமது சமூகம் வளர ஒரே இடத்தில் கூடி பேசுவது நலம்.
    • புதியவர்களின் சிறுசிறு வேண்டுகோள்களை ஏற்பதால் அவர்கள் தொடர்ந்து செயற்படுவர் என்பதே எனது எண்ணம். அதற்குரிய எல்லைகளை நீங்கள் முடிவெடுங்கள். நானும் பின்பற்றுகிறேன். கட்டுரைகளை மேம்படுத்த இப்பக்கத்தில் இருந்து விடைபெறுகிறேன். ஓங்குக தமிழ் வளம்! வாழிய தமிழர் நலம்!! உழவன் (உரை) 07:37, 7 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
      உரையாடல்களை வளர்த்துக்கொண்டே செல்ல விருப்பமில்லை என்றபோதிலும், உண்மைகளைப் பதியாவிட்டால், பிற்காலத்தில் வரலாறு தவறாகத் தெரியும். எனவே இந்தப் பதிலுரை. புதுப் பயனர்களுக்கு முறையான வழிகாட்டல்களும், போதிய நேரமும் தரப்படுகின்றன. உதவி கேட்போருக்கு உதவிகள் அளிக்கப்படுகின்றன. விக்கிப்பீடியாவின் கொள்கைகள் அடிப்படையிலேயே விலக்குகள் தர இயலும். எந்தப் புதுப் பயனருக்கும் மூத்தப் பயனர்கள் அழுத்தம் தருவதில்லை. ஒரு மூத்தப் பயனரின் வழிகாட்டல்கள் வலிந்து ஏற்றுக்கொள்ளப்படாதபோதே, இன்னொரு மூத்தப் பயனர் தனது கருத்தை இடுகிறார். "பணிப் பளு. நேரமில்லை; எனவே கருத்திட இயலாது" என ஒரு பயனர் சொல்கிறார். ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவில் அடுத்தக் கட்டுரையை மும்முரமாக எழுதிக்கொண்டிருக்கிறார். இதில், உங்களின் நிலைப்பாடு என்ன? அனைத்துப் பயனர்களையும் தக்க வைக்க வேண்டும் என்றே ஒவ்வொரு பயனரும் நினைக்கிறோம். அனைவருக்கும் இது தன்னார்வப் பணியே. அனைவரும் ஒரு வேட்கையில் தான் (passion) இங்கு பங்களித்து வருகிறார்கள். கூட்டுழைப்பாக தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்கவேண்டும் என்பதே நமது எண்ணம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:11, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
முடிவு[தொகு]

ஆதரவு அடிப்படையில் இந்நாள் வரை விரிவாக்கம் செய்யாத வெட்டி ஒட்டிய கட்டுரைகள் நீக்கப்படுகிறது. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:29, 12 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

மார்ச் 13, 2024[தொகு]

கீரைகளின் பட்டியல்[தொகு]

கீரைகளின் பட்டியல் எனும் கட்டுரை பெரும்பகுதி ஆங்கிலத்தில் உள்ளது என்பதனால் நீக்கக் கோருகிறேன். துரித நீக்கல் தகுதியான //கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் முழுக்க ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரைகள் (இதில் சில மட்டுமே தமிழில் உள்ளது)//, //விக்கியாக்கம் செய்வதை விட முழுக்க அழித்து விட்டு புதிதாக எழுதுவதே மேல்// என்பதனால் நீக்கக் கோருகிறேன். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:34, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

ஆதரவு[தொகு]

 ஆதரவு பெரும்பகுதி ஆங்கிலத்தில் உள்ள இந்தப் பக்கத்தை நீக்கிவிட்டு புதிதாக எழுதுவதே சிறந்தது--கு. அருளரசன் (பேச்சு) 16:00, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

மறுப்பு[தொகு]
கருத்து[தொகு]

நீக்கல் வார்ப்புருவினை இட்டவன் என்றதால், கருத்து மட்டும் தெரிவிக்கிறேன். தவிர, கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் போதுமான அளவு எழுதிவிட்டேன். விக்கிப்பீடியாவின் அடிப்படைத் தேவையை எட்டாத கட்டுரையை "நீக்க வேண்டாம்" என ஆணையிட இயலாது. இக்கட்டுரையை யாராவது வளர்த்தெடுக்க விரும்பினால், வேண்டுகோளின் அடிப்படையில் வரைவு: என்பதாக நகர்த்தலாம். அவர், முழுமையாக தமிழுக்கு மொழியாக்கம் செய்து மேம்படுத்தலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:54, 13 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

  • ஆயிரகணக்கான குறுங்கட்டுரைகள் உள்ளன. எனவே முதலில் இதனை குறுங்கட்டுரையாக மாற்றி அதனுள் ஏற்கனவே உள்ள 25 கட்டுரைகளை இணைக்க வேண்டும். ஆங்கிலத்திலும், தாவரவியல் மொழியிலும் உள்ள பெயர்களை பேச்சுப் பக்கத்திற்கு நகர்த்தி தந்தால், ஒரு நாளைக்கு ஒரு கீரை என கட்டுரையை விரிவு படுத்தித் தருகிறேன். இந்த வேண்டுகோளுக்கு விக்கி விதிகள் இதற்கு பொருந்துமெனில் ஆவன செய்ய உடன் பங்களிக்கும் பங்களிப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

@Info-farmer: இந்தப் பரிந்துரையை நீங்கள் ஏற்றுக்கொண்டால், இந்த விடயத்தை விரைந்து முடித்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்க அனைவரும் சென்றுவிடலாம்.

  1. பலரின் பங்களிப்புகள் இருந்தாலும்... கலைக்களஞ்சியக் கட்டுரையாக மாற்ற முற்பட்டபோது தான், ஆங்கில உள்ளடக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, தமிழாக்கம் செய்ய இயலாமல் இருந்துள்ளது. எனவே, இக்கட்டுரையை நீக்குவதால் ஒரு பிரச்சினையும் இல்லை.
  2. வரைவு:கீரைகளின் பட்டியல் எனும் புதிய கட்டுரையை சிறு முன்னுரையுடன் ஆரம்பித்து, ஒரு கீரை குறித்த தகவல்களை மேற்கோள்களுடன் இட்டு, உரிய பகுப்பினை இட்டு, வரைவுக் கட்டுரையாக உருவாக்குங்கள்.
  3. இப்போதுள்ள கீரைகளின் பட்டியல் கட்டுரையில் உள்ள தகவல்களை படியெடுத்து, வரைவு பேச்சு:கீரைகளின் பட்டியல் எனும் பக்கத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
  4. இப்போதுள்ள கீரைகளின் பட்டியல் கட்டுரையை பேச்சுப் பக்கத்துடன் நீக்குங்கள். (இந்தப் பேச்சுப் பக்கத்தில் முக்கியத்துவம் இல்லை)
  5. வரைவு:கீரைகளின் பட்டியல் முழுமையாக வளர்த்தெடுத்து, மன நிறைவு அடைந்ததும் பொதுவெளிக்கு நகர்த்துங்கள்.
  • குறிப்பு: ஏற்கனவே இருக்கும் குறுங்கட்டுரைகளை முன்னுதாரணம் காட்டாது, இக்கட்டுரையை எப்படி கையாள்வது என்பதனைப் பார்ப்போம். ஏனெனில் பல்லாயிரம் கட்டுரைகளில் மேம்பாடு தேவைப்படுகிறது. விக்கித்திட்டங்கள் அனைத்துமே 'தொடர் முன்னேற்றம்' எனும் உட்கருத்துடன் தானே இயங்குகின்றன. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:21, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Sridhar G, AntanO, and Arularasan. G: -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:21, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Kanags நன்றி. உங்கள் பரிந்துரையை எதிர்ப்பார்த்திருந்தேன். மகிழ்ச்சி. உழவன் (உரை) 06:13, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Kanags: 'கட்டுரையின் வரலாறு காக்கப்பட வேண்டும்' என்பதாக நீங்கள் கருதுகிறீர்கள் என நினைக்கிறேன். அவ்வாறெனில், வரைவு என்பதாக நகர்த்தி, மேம்படுத்தலாமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:48, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@மா. செல்வசிவகுருநாதன் ஆம். 'வரலாறு முக்கியம்'. மேலும் இதனை சிறப்புற உருவாக்கினால், அதிகம் பார்க்கும் பக்கமாக மாறும். எனவே, மேலே 'Kanags' கூறியபடி மாற்றுங்கள். கட்டுரையை வளர்த்தெடுக்கிறேன்.--உழவன் (உரை) 06:22, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
இந்தத் தொகுப்புக்கு முன்னிலைப்படுத்தி கட்டுரையினை மேம்படுத்தலாம் (முன்னுரை, கட்டுரை அமைப்பு, சிவப்பிணைப்பு நீக்கம், மேற்கோள்). தற்போதுள்ள நிலையில் இதனை வைத்திருக்க முடியாது.--AntanO (பேச்சு) 08:16, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

பயனர்கள் @Kanags and AntanO: ஆகியோர் பரிந்துரைக்கும் 'முன்னிலைப்படுத்துதலை' ஏற்கிறேன். முன்னிலைப்படுத்திய பிறகு, வரைவு என்பதாக நகர்த்துவதா அல்லது பொதுவெளியில் வைத்திருந்து மேம்படுத்துவதா என்பதற்கான பரிந்துரையை அறிந்தபிறகு முடிவை அறிவித்துவிடலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:53, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

ஒருவர் மட்டும் இதனை மேம்படுத்த விரும்பினால் வரைவிற்கு மாற்றலாம். அல்லது பொதுவெளியிலேயே தொகுக்கலாம்.--Kanags \உரையாடுக 10:39, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
பொதுவெளியில் இருந்தால் நானும் இன்னும் சிலரையும் ஈடுபடுத்துவேன். ஏனெனில், இதனுள் பல கட்டுரைகள் உள்ளன. உழவன் (உரை) 14:25, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
//உள்நுழையாத பயனர்கள் உட்பட எவரும் வரைவுகளை உருவாக்கவும் திருத்தவும் இயலும்.// எனவே வரைவுப் பக்கத்தில் இருந்தாலும் அனைவராலும் திருத்த இயலும். தாராளமாக மற்றவர்களையும் ஈடுபடுத்தலாம். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:37, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Sridhar G and Arularasan. G: இதுவரை நடந்த உரையாடல்களின் அடிப்படையில், ஆங்கில உள்ளடக்கம் சேர்க்கப்பட்ட நிலைக்கு முந்தைய நிலையிலிருந்தபடி கட்டுரையைக் கொண்டுவர ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது (4 பேரின் ஒப்புதல்). இந்தக் கட்டுரையை மேம்படுத்த தகவலுழவன் விருப்பம் தெரிவித்துள்ளதால், கட்டுரையை வரைவு: என்பதாக நகர்த்தலாம். உங்களின் கருத்து அடிப்படையில், முடிவினை அறிவித்துவிடுவோம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:17, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 11:36, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 13:07, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
முடிவு[தொகு]

கட்டுரையை நீக்காது, தேவைப்படும் இடத்தில் முன்னிலைப்படுத்தி, மேற்கொண்டு மேம்படுத்த 6 பயனர்களும் தமது ஒப்புதலைத் தெரிவித்துள்ளனர். வரைவு: என்பதாக நகர்த்துவதற்கு எதிர்ப்பினை யாரும் பதிவுசெய்யவில்லை. //பொதுவெளியில் இருந்தால் நானும் இன்னும் சிலரையும் ஈடுபடுத்துவேன். ஏனெனில், இதனுள் பல கட்டுரைகள் உள்ளன// என பயனர் தகவலுழவன் தெரிவித்துள்ளார். இக்கட்டுரையினுள் உள்ளிணைப்பாக தரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்க / மேம்படுத்த பலரும் பணியாற்றலாம்; ஆனால், இக்கட்டுரையை வளர்த்தெடுத்து, மேம்படுத்தும் பணியை பயனர் தகவலுழவன் செய்வதே உகந்ததாக இருக்கும். (இதுவரை கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும், இந்தப் பக்கத்திலும் நடந்த உரையாடல்களின் அடிப்படையில்). எனவே, கட்டுரையை வரைவு: என்பதாகவே இப்போது நகர்த்துகிறேன். விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கூறுகளை இக்கட்டுரை நிறைவேற்றுவதாக எப்போது பயனர் தகவலுழவன் நினைக்கிறாரோ, அப்போது அவரே இக்கட்டுரையை பொதுவெளிக்கு நகர்த்திக்கொள்ளலாம். அதற்குரிய தார்மீகப் பொறுப்பு (justness) அவருடையது! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:43, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@தகவலுழவன்:

  1. வரைவு:கீரைகளின் பட்டியல்
  2. இக்கட்டுரையில் இருந்த உள்ளடக்கம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:08, 14 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
கட்டுரையை நானும், பயனர்:Kanags அவர்களும் மேம்படுத்தி உள்ளோம். கீரைகள் பகுப்பில் தற்போது 85 உள்ளன. அக்கட்டுரையில் உள்ள {{சமையல்}} வார்ப்புருவில் உள்ள பிற பட்டியல்கள் போல இதுவும் இருப்பதால் கட்டுரைவெளிக்கு வரைவிலிருந்து நகர்த்தக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், கீரைகள் பட்டியலை அப்பகுப்பில் உள்ள கட்டுரைகளுக்கு இதையும் காணவும் என்ற உட்பிரிவுக்கு இணைக்க விரும்புகிறேன். செய்ய வேண்டிய மாற்றங்கள் இருப்பின் அவற்றினையும் கூறவும். உழவன் (உரை) 01:29, 21 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]