பயனர் பேச்சு:Neyakkoo

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Neyakkoo, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தகுமார் (பேச்சு) 09:26, 30 சூலை 2020 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

disambiguation pages[தொகு]

வணக்கம், ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள இது போன்ற பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்களை மொழிபெயர்க்காதீர்கள். அவை கலைக்களஞ்சியக் கட்டுரைகள் அல்ல.--Kanags \உரையாடுக 08:26, 22 செப்டம்பர் 2021 (UTC)

  • வணக்கம். வழிகாட்டலுக்கு நன்றி. தானியங்கியை மட்டும் பயன்படுத்தவில்லை. அதனை என் புரிதலுக்கு ஏற்பத் திருத்தம் செய்தபின்பு வெளியிட்டேன். அதுமட்டுமன்றி என் மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பின் மூலம் பங்களிப்புச் செய்யும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்து வருவதால், அதனை வெளியிட்டுக் காட்டி, அது எவ்வாறு தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தில் தெரிகின்றது என்பது வரை காட்டுவதால் வெளியிட்டுள்ளேன் என்பதைத் தங்களுக்குத் தெரிவிக்கின்றேன். அது தகுதியுள்ள கட்டுரை இல்லையெனக் கருதினால் நீக்கலாம். நன்றி!--Neyakkoo (பேச்சு) 09:39, 22 செப்டம்பர் 2021 (UTC)

தானியங்கித் தமிழாக்கம்[தொகு]

--Kanags \உரையாடுக 08:35, 22 செப்டம்பர் 2021 (UTC)

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு[தொகு]

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு[தொகு]

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு[தொகு]

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2022
விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


பரிந்துரை[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல் எனும் பக்கத்தில் வழிகாட்டல்கள் / நெறிமுறைகள் இடப்பட்டுள்ளன. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:39, 24 செப்டம்பர் 2022 (UTC)

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் நிர்வாகியாக பல்வேறு துப்புரவு மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருவதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்

பங்கேற்பாளர்கள்[தொகு]

வணக்கம் , வேங்கைத் திட்டப் பயிற்சிக்கான பங்கேற்பாளர்கள் என்பதில் தேர்வுக் குழுவினர் தான் பெயர்களை இடுவது சரியாக இருக்கும். எனவே நீங்கள் செய்த பதிவை மீளமைத்துள்ளேன். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 05:52, 20 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி. அது பற்றிய குறிப்பு இன்மையால் பங்கேற்கும் விருப்பமுடையோர் ஒப்பமிடலாம்போல் எனக் கருதியதால் ஒப்பமிட்டுவிட்டேன். அருள்கூர்ந்து பொறுத்தருள்க. நேயக்கோ (பேச்சு) 06:52, 20 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
ஓர் ஐயம். தமிழ் விக்கிப்பீடியா ஆலமரத்தடிப் பக்கத்தில் வருகின்ற வேங்கைத்திட்டப் பயிற்சியின் உள்ளூர் ஏற்பாட்டுக்குழுவில் ஒப்பமிட்டுள்ளேன். மேல் விக்கிப் பக்கம் இப்பக்கம் சென்று பார்த்தேன். அங்கு ஒருங்கிணைப்பாளர் (Coordinators) பகுதியில் ஒப்பமிடலாமா? நன்றி நேயக்கோ (பேச்சு) 11:55, 24 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
வேண்டாம். நீங்கள் இப்போதுதான் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் அனுபவத்தைப் பெற்றுவருகிறீர்கள். இது போன்ற நேரடி நிகழ்வுகளில் ஏற்கனவே உள்ள ஒருங்கிணைப்பாளர்களின் ஒப்புதலுடனே புதியவர்களைச் சேர்த்துக் கொள்ளமுடியும். பயனராக விருப்பப்பட்டு இணைத்துக் கொள்ள இயலாது. சிஐஎஸ்சுடனான உரையாடல், பிற மொழி பயனர்களுடனான உரையாடல், நிகழ்வுத் திட்டமிடல், பங்கேற்பாளர் தேர்வு எனப் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் இணைத்துக் கொள்வது சிக்கல். தமிழ்த் திட்டப்பக்க ஒருங்கிணைப்பாளர் பகுதியில் உள்ள உங்கள் ஒப்பத்தை நாகரீகம் கருதி நீக்கவில்லை. தொடர்ந்து விக்கிப்பீடியாவில் பங்களியுங்கள், அடுத்தடுத்த நிகழ்வுகளை ஒருங்கிணைக்கலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 08:13, 25 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி...நன்றி... நேயக்கோ (பேச்சு) 09:59, 25 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]
நாகரிகம் கருதி என் ஒப்பத்தை நானே மீளமைத்துக் கொண்டேன். முன்பே இது குறித்த அறிவிப்பு இருந்திருப்பின் ஒப்பமிட்டிருக்கமாட்டேன். தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி நேயக்கோ (பேச்சு) 10:04, 25 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)

- ஒருங்கிணைப்புக் குழு

மல்லி இனங்களின் பெயரிடலுக்கு உதவி தேவை[தொகு]

வணக்கம்

தாவரத்திட்டத்தில் இணைந்தமைக்கு நன்றி. நீங்கள் கேட்டபடி தரவுகளை திரட்டிக் கொடுத்துள்ளேன். காண்க: பேச்சு:மல்லிகை_இனங்களின்_பட்டியல்#ஒரே_ஒரு_பிறப்பிட_இனங்கள் உழவன் (உரை) 05:48, 17 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி...
இந்தப் பட்டியலில் எவை எவை ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளன?
நாடுகளின் அடிப்படையில் இனம் பிரித்தல் சிறப்பு.
அட்டவணை அடிப்படையில் கட்டுரைக்கான தரவுகளை வழங்குதல் நன்று. இது ஒப்பிடுவதற்குப் பயன்படும். நேயக்கோ (பேச்சு) 14:29, 17 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
தங்கள் எண்ணங்களை அறிந்தேன். நன்றி. அட்டவணை வடிவில் அனைத்து கட்டுரைகளையும் தருவது எளிமையல்ல. பல வாக்கியங்களை அட்டவணையில் எழுத இயலாது. எளிமையான தரவுகளைக் கொண்டு துணைப்பக்கமாக உருவாக்குகிறேன். ஆங்கில விக்கிப்பீடியாவின் en:Category:Jasminum என்ற பகுப்பு எனக் கூறுகிறது. அவற்றில் சிலவற்றை IPNI, இந்த பேரினத்தில் ஏற்கவில்லை. தனிப்பேரினத்தில் வகைப்படுத்தியுள்ளது. காண்க.Jasminum bignoniaceum எனினும், முதலில் அவற்றிற்கு இங்கு கட்டுரைகளை உருவாக்க உள்ளேன். தொல்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் பூக்களில் ஒருமித்த எண்ணங்கள் இல்லை. காண்க:பேச்சு:மௌவல் எனவே, இதுபோன்ற கட்டுரைகள் குறித்து, நீங்களும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்தலாம். நம்மில் பகிர்ந்த இலக்கு திரைநிகழ் பதிவை தாவரத்திட்டப் பக்கத்தில் இணைத்துள்ளேன். வார இறுதியில் வழமை போல நேரமிருப்பின் உரையாடுவோம். தாவரவியல் அறிஞர் ஏற்காடு இளங்கோ கட்டற்ற நூல்கள் எழுதுவதில் முனைப்பாக உள்ளார். அவரையும் உரையாட அழைத்துள்ளேன். உழவன் (உரை) 00:28, 18 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி... உறுதியாக இணைந்து உரையாடி தமிழ் வளத்தைப் பெருக்குவோம். நேயக்கோ (பேச்சு) 02:40, 18 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

மெய்யெழுத்து[தொகு]

மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு சொல் அமைக்கவியலாது. AntanO (பேச்சு) 12:43, 19 சனவரி 2024 (UTC)[பதிலளி]

மூலிகைப்_பட்டியல்_(தமிழ்நாடு)#முண்மூலிகைக்_குடும்பம்_(Acanthaceae)[தொகு]

முண்மூலிகைக்_குடும்பத் தாவரங்கள் என்பதில் 34 வரை நாம் உரையாடியபடி சீர்செய்துள்ளேன். அக்காலத்தில் இணையவசதி இல்லாமையால் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு நாடுகளில் பல பெயர்கள் கொண்டிருந்தமையால் இப்பெயர் குழப்பம் ஆகிறது. சரியாக கண்டறிய ஒரு தாவரத்திற்கு 15 நிமிடங்கள் தேவைப்படுகிறது நீங்கள் கூறியபடி, தாவரவியலாளர் பெயர்களை நீக்க நேரம் கிடைக்காததால், அப்படியே விட்டுவிட்டேன். உங்களுக்கு நேரம் இருக்கும் போது, கட்டுரையாக்கிய தலைப்புகளுக்கு தாவரவியலாளர் பெயர்களை நீக்குங்கள். பல பணிகளுக்கும் நடுவில், தொடர்ந்து இணைந்து செயற்படுகின்றமைக்கு நன்றி.தொடர்ந்து இணைந்து செயற்படுவோம். ஓங்குக தாவர வளம். உழவன் (உரை) 09:10, 27 சனவரி 2024 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி... நேயக்கோ (பேச்சு) 15:44, 28 சனவரி 2024 (UTC)[பதிலளி]

இவ்வார கலந்துரையாடல்[தொகு]

சென்ற வாரம் உரையாடலின் தொடர்ச்சியாக, வார்ப்புரு:Angiosperm families என்பதை முன்மொழிகிறேன். இதன் அடிப்படையில் முதலில் குடும்பங்களையும் செய்தல் நலம். ஏனெனில், இது சென்ற ஆண்டு வரை வகைப்பாட்டியல் அறிஞர் மேம்படுத்தியுள்ளனர். மேலும், இப்பொழுது தாவர வகைப்பாட்டியல் மரபின, பரிணாம அடிப்படைகளையும் கொண்டே பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. நாமும் அதனைப் பின்பற்றுதல் நலம். வழமையான உங்கள் ஒருங்கிணைப்பை, இக்கூடலிலும் எதிர்பார்க்கிறேன். வருபவர்கள் வரட்டும். பங்களிக்க விருப்பம் உள்ளவர்கள், தானாகவே வினா எழுப்பவர். அப்பொழுது அவர்களை இணைத்துக் கொண்டு செயற்படலாம். இப்பொழுது கல்லூரியில் இருப்பீர்கள். நாளை விக்கிப்பக்கம் வரும் போது அழையுங்கள். உழவன் (உரை) 03:19, 3 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி... பட்டியல் கண்டேன். சிறப்பு. ஒருங்கிணைக்கின்றேன். இணைந்து பயணிப்போம். நன்றி நேயக்கோ (பேச்சு) 11:54, 3 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

விக்கித்தரவு[தொகு]

வணக்கம் நீங்கள் உருவாக்கும் தாவரவியல் கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்துவிடுங்கள். இல்லையென்றால் அதே கட்டுரைகளைத் தெரியாமல் யாராவது மீண்டும் உருவாக்கும் நிலை ஏற்படும்.--கு. அருளரசன் (பேச்சு) 02:51, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

கருத்திற்கு நன்றி! தற்பொழுதுதான் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதும் முறைமையைக் கற்றுக்கொண்டு வருகின்றேன். அவற்றை இணைக்கும் நுட்பத்தினைக் கற்றுத் தாருங்கள். கற்று, மேம்படுத்துகின்றேன். நன்றி! --நேயக்கோ (பேச்சு) 14:55, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

அகணிய உயிரி[தொகு]

தாங்கள் தற்பொழுது தொகுத்து வரும் தாவரங்கள் கட்டுரைகளில் அகணியத் தாவரம் எனும் பொருளில் தொகுத்து வருகின்றீர்கள். எந்த அடிப்படையில் இவை அகணிய உயிரி என குறிப்பிடுகிறீர்கள். 2409:408D:3093:AE1D:0:0:18AD:A0 08:10, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

விக்கி 100 நாட்கள்[தொகு]

நான் தொகுத்துவரும் தொகுப்பில் 100 விக்கி நாட்கள் வார்ப்புருவினை நாளின் முதல் கட்டுரை தவிர்த்து பிற கட்டுரைகளில் இடுவதை தவிர்க்க வேண்டுகிறேன்.--சத்திரத்தான் (பேச்சு) 04:48, 17 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

சுமன் லதா பகத் என்னும் தொகுப்பில் தேவையில்லாமல் என்னும் வார்ப்புருவினை பேச்சுப் பக்கத்தில் இட்டுள்ளீர்கள். தொகுப்பு சுருக்கத்தில் மேம்பாடு என்று குறிப்பிட்டுள்ளீர். ஒருவர் இத்திட்டத்தில் பங்கேற்காத போது இந்த வார்ப்புருவைனை எந்த அடிப்படையில் இட்டுள்ளீர்கள். இந்த வார்ப்புருவினை இடுவதால் எவ்வாறு கட்டுரை மேம்படும் என்பதை தெரிவிக்கவும். வேண்டுகோளினை உதாசீணப்படுத்தி தொடர்ந்து இவ்வாறு செயல்படுவது வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது.--சத்திரத்தான் (பேச்சு) 03:52, 20 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
@Neyakkoo: பயனர்:சத்திரத்தான் தனது வேண்டுகோளை இந்த உரையாடல் பகுதியில் வைத்திருந்தார். அந்த வேண்டுகோள் கண்டுகொள்ளப்படவில்லை. அதன் காரணத்தால், இத்திட்டத்திலிருந்து விலகுவதாக நேற்று அவர் அறிவித்துள்ளார். எனவே அவர் உருவாக்கும் கட்டுரைகளை இத்திட்டத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு, இந்த மாதிரியான திட்டத்தில்... கட்டுரையை உருவாக்குபவரே வார்ப்புருவும் இடவேண்டும். ஒருங்கிணைப்பாளர்கள் இதற்கான கோரிக்கையை திட்டத்தில் பங்குபெறுபவர்களிடம் தெரிவிக்கலாம். இதுவே இங்கு நடைமுறை. இன்னொரு விசயம்: தனது புகுபதிகையில் பதிலளிக்காமல், இன்னொருவரின் பதிகையில் நுழைந்திருக்கும்போது பதிலளிப்பதால் (by mistake), தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனையும் கருத்திற் கொள்ளுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:08, 20 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
இருவரும் ஒரே கணினியைப் பயன்படுத்துவதால், இந்தக் குழப்பம் நிகழ்ந்துள்ளது. நாங்கள் விக்கிப்பீடியாவில் இதுவரை 50 நாள்கள்தான் தொடர் பங்களிப்புச் செய்து வருகின்றோம். இதில் முன்வைக்கும் கருத்துக்களைக் கவனத்தில் கொள்கின்றோம். அதிக ஆண்டுகள் பங்களிப்புச் செய்த அனுபவம் தங்களுக்கு இருப்பதால் எடுத்துக்காட்டுடன் வழிகாட்டினால் மேம்படுத்திக் கொள்கின்றோம். நன்றி நேயக்கோ (பேச்சு) 13:19, 20 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
விக்கி100நாட்கள் திட்டத்தின்கீழ் கட்டுரை எழுதப்பட்டால், எழுதியவரே வார்ப்புரு இடுமாறு திட்டத்தில் பங்குகொள்பவரின் உரையாடல் பக்கத்தில் வேண்டுகோள் வைக்கலாம். எடுத்துக்காட்டு: விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024/தலைப்புகள் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:39, 20 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
தகவலுழவன் நீங்கள் விக்கி 100 நாள்கள் திட்டத்தில் பங்களிக்கும் அறிமுகத்தில் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் வார்ப்புரு இடலாம் என்றீர்கள். அதற்கும் இங்கும் முரண்பாடு தெரிகின்றது. தங்களது எண்ணத்தைத் தாருங்கள். தாவரங்கள் பற்றிய மேம்படுத்தலில் சான்றுகள் இணைப்பது தொடர்பாகவும் கூறினீர்கள். அதற்கு ஒரு நிகழ்படம் உருவாக்கித் தந்தால் உதவியாக இருக்கும். நாங்கள் பேருந்து பயணத்தின் போது இந்தப் பங்களிப்பைச் செய்து வருகின்றோம். எங்களை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்து வழிகாட்டல் தந்து ஆற்றுப்படுத்துங்கள். நன்றி!--நேயக்கோ (பேச்சு) 03:24, 21 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]
அத்திட்டப்பக்கத்தில் உரையாடுவோம். அப்பொழுது தான் அத்திட்டத்தில் இருக்கும் பிறருக்கும் தெரியும். பின்னாளில் பிறருக்கும் எடுத்துப் பார்க்க ஏதுவாக இருக்கும். வார இறுதியில் நிகழ்படப்பதிவு செய்து தருகிறேன். தொடர்ந்து இணைந்து இருங்கள். உழவன் (உரை) 15:22, 21 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்[தொகு]

--~AntanO4task (பேச்சு) 06:48, 5 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நூறு நாள்களுக்குப் பின்பு எழுதப்பெறும் கட்டுரைகள் விரிவுபடுத்தப்படும். மேம்படுத்தும் வழிமுறைகளைக் குறிப்பிட்டுக் காண்பித்து வழிகாட்டினால் உதவியாக இருக்கும். நன்றி நேயக்கோ (பேச்சு) 11:06, 5 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
திருத்தப்படாத தானியங்கி மொழிபெயர்ப்புகள் நீக்கப்படும். ~AntanO4task (பேச்சு) 11:14, 5 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
தாங்கள் தந்துள்ள வார்ப்புருவில் கூறியுள்ளபடி அந்தக் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் தொடர்வோம். பிறரது கருத்தினை அறிய அந்த இடம் பொருத்தமாக இருக்கும். நன்றி நேயக்கோ (பேச்சு) 02:57, 6 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
திருத்தப்படாத தானியங்கி மொழிபெயர்ப்பு குறித்து உரையாடாது நீக்கப்படுகிறது. என்னுடைய முதன்மை கணக்கில் புகுபதிகை செய்திருந்தால், வார்ப்புரு இடாது நீக்கவிட வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும். ~AntanO4task (பேச்சு) 18:38, 6 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

விருப்பம்[தொகு]

வணக்கம்.

உங்களின் மின்னஞ்சல் பார்த்தேன். அதில் உங்களுடன் பணியாற்றும் நண்பர் வழிகாட்டியபடி, முதலில் மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) என்பதிலுள்ள பேரினங்களை முடிப்போம். அப்பொழுது தான் இனங்களை உருவாக்கும் போது தெளிவு கிடைக்கும். அவரின் கூற்றினை ஏற்கிறேன். இனப்பயெர் வெகுவாக மாறிவிட்டது. தாவரவியல் துறைசார் நண்பரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அவரும் நம்முடன் இணைய விரும்புகிறேன். இம்மாத இறுதியில் எனக்கு பயணப்பட இயலும். தேதி கூறுங்கள். ஞாயிறு பயணிப்பதை வழமையாக தவிர்ப்பேன். ஏனெனில், தனியார் பேருந்து கட்டணம் அதிகம். நான் அங்கு வர, 5 மணிநேர பயணம் என்பதால் கழுத்துவலி அரசுப்பேருந்துகளில் பயணித்தால் இன்னும் அதிகமாகிவிடும். எனவே, சனியன்று கூடல் நடத்த திட்டமிடுங்கள். உழவன் (உரை) 03:07, 8 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கீரைகளின் பேரினம்[தொகு]

வரைவு:கீரைகளின் பட்டியல் என்பதிலுள்ள சிவப்பு இணைப்புகளுக்குரிய பேரினங்களை உருவாக்கக் கேட்டுக் கொள்கிறேன். காய்கறிகளில் கீரை உணவு முதன்மை உணவு என்பதை யாவரும் அறிந்ததே. இருப்பினும் யாரும் இதில் அதிகம் ஈடுபடவில்லை. நாம் இதனை இலக்காகக் கொள்வோம். 100விக்கிநாட்கள் திட்டத்தில் தொடர்ந்து 76 நாட்கள் இணைந்தமைக்கு அக மகிழ்கிறேன். இந்த இலக்கு முடிந்தவுடன், உங்களுக்கு நேரம் இருந்தால் மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) கட்டுரையை விரிவு படுத்த, உங்களுடன் இணைந்து, வழக்கம் போல செயற்படுவேன். இன்னும் ஓரிரு வாரங்கள் என்னால், முழுமையாக ஈடுபட இயலாது. அவ்வப்போது நீங்கள் தொடங்கும் பேரினக்கட்டுரையை விரிவு படுத்துவேன். ஒரு கீரையின் முதலில் வருவது பேரினப் பெயர். அடுத்து வருவது இனப்பெயர் மூலிகைகளில் இருக்கும் வடிவம் இதில் இருக்காது என்பதால் கூறுகிறேன். கீரைகள் கட்டுரைகளை உருவாக்கியவுடன், வரைவு_பேச்சு:கீரைகளின்_பட்டியல்#கலந்துரையாடலுக்குப்_பிறகு_உருவாக்கப்பட்ட_கட்டுரைகள் என்பதில் இணைக்கிறேன். நீங்கள் எளிதாக அதிலிருந்து கீரைகளின் பேரினங்களை உருவாக்கலாம். உழவன் (உரை) 03:50, 17 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி... தமிழ்த் தரவு வளத்தை மேம்படுத்துவதில் தங்களுடனான இந்தப் பயணம் பேருவுவகையே. என்னுடைய தமிழ்ப்பணியில் ஊக்கம் தரும் என் பேராசிரியர் இரா. அறவேந்தன் போல் தாங்கள் விக்கித்திட்ட மேம்பாட்டிலும் நெறிப்படுத்தி வருவது பாராட்டுக்குரிய ஒன்று. தொடர்ந்து வழிகாட்டுங்கள். கற்றுக் கற்பிக்கவும் மேம்படுத்தவும் ஆவலாக உள்ளேன். நேயக்கோ (பேச்சு) 05:47, 17 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் தாவரங்கள்[தொகு]

வணக்கம், இங்கு நடைபெற்ற உரையாடலைப் பார்க்கவும். இது போன்று சில வார்த்தைகளை மட்டும் மாற்றி அமைத்துப் புதிய கட்டுரைகளை உருவாக்குவதற்கு தமிழ் விக்கிப்பீடியாவின் சமூக ஒப்புதல்களைப் பெற்றுள்ளீர்களா? இருந்தால் அறியத் தாருங்கள் . நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 04:42, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் இருந்து கீரைகளின் பேரினங்களை உருவாக்கி வருகிறேன். நான் விக்கிப்பீடியாவில் கடந்த இரு மாதங்களாகவே செயற்படுகிறேன். மேலும் 20 நாட்கள் மட்டுமே பங்களிப்பேன். பிறகு கல்லூரித் தேர்வுப் பணிகள். இருபது நாட்களுக்கு இருபது கட்டுரைகளைக் கொடுத்தால் அதனை உருவாக்குவேன். பல ஆண்டுகள் அனுபவம் உள்ள நீங்கள் வழிகாட்டவும். கற்றுக் கொள்கின்றேன். நன்றி! நேயக்கோ (பேச்சு) 10:49, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
வணக்கம், எனது கேள்விகளுக்கும் உங்களது பதிலுக்கும் தொடர்பில்லை.
//ஆங்கில விக்கியில் இருந்து// உங்களது கட்டுரைக்கும் ஆங்கிலக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்திற்குமான வேறுபாட்டை நீங்கள் உணரவில்லையா? காண்க:en:Abutilon ,en:Withania .இது போன்ற ஒரே மாதிரியான கட்டுரைகளை உருவாக்க சமூக ஒப்புதல் பெறுங்கள். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:39, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கீரைகள் பட்டியல்[தொகு]

இப்பட்டியலை கட்டுரைவெளிக்கு மாற்ற கேட்டுக் கொண்டுள்ளேன். கீரைகள் பட்டியலில், அடுத்துள்ள குமுட்டிக்கீரை ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லை. அதனை இன்று பிற இணையப் பக்கங்களில் படித்து உருவாக்குவேன். ஆனால், அதன் பேரினம் en:Allmania உள்ளது. ஆங்கில விக்கியில் இல்லாத ஆய்வுத் தரவுகள் powo தளத்தில் உள்ளன. அந்த தளத்தின் 250 ஆண்டு கால மேன்மையுள்ள தரவுகளை, ஒவ்வொன்றாக நேரம் இருக்கும் போது, பிறரோடு இணைந்து தமிழாக்கம் செய்வோம். இதுவரை உருவாக்கப்பட்ட கீரைகள் பேரினத்தில் வாழிடங்கள் தமிழில் முழுமையாக இல்லை. காண்க: கிளினசு அவற்றை முதலில் முடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்பொழுது தான் தாவரவியல் குறித்து அறியாதவர்களும், தாவரவியல் அணுகுமுறையை உணர இயலும். நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நானும் அவ்வப்போது விரிவு படுத்துகிறேன். இந்த வார இறுதியில் தேவைப்படும் நுட்பங்களை, தமிழ் இலினக்சு குழுவில் கேட்போம்.--உழவன் (உரை) 02:22, 21 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி... ஒரு கட்டுரையைத் தொடங்குவதில் துறைசார்ந்த அறிவுத் தேவை என்பதை நன்கு அறிவேன். அதையே தங்களது கருத்தும் தெளிவுபடுத்துகின்றது. தங்களின் தாவரவியல் அறிவை நான் அறிவேன். ஆகையால் நான் தொடங்கியிருக்கும் கட்டுரைகளை நீங்களும் மேம்படுத்துங்கள். நானும் மேம்படுத்திக்கொள்ள கற்றுத் தாருங்கள், பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளில் படித்த தாவரங்களைப் பற்றியும் அறியாதவற்றை அறிந்துகொள்ளவும் இப்பணி பேருதவியாக இருக்கின்றது. மகிழ்ச்சியாகவும் உள்ளது. தங்களின் தொடர் வழிகாட்டல் தேவை. தமிழ் இலினக்சு குழுவில் பேசுவோம். நன்றி... நேயக்கோ (பேச்சு) 03:04, 21 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கீரைகளின் வாழிடங்கள்[தொகு]

கிளினசு பேரினத்தில் en:Free state, en:Gulf states, en:Chita பல கட்டுரைகள் உள்ளன. powo தள வரைப்படத்தினை ஒப்பிட்டே எப்பகுதி என அறிய வேண்டும். அடுத்துள்ள Kriti என்பது en:Crete ஆகும். இதற்கு தமிழில் கட்டுரை உள்ளது. Transcaucasus என்பதற்கு en:South Caucasus உள்ளது. --உழவன் (உரை) 02:40, 21 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

Herbarium[தொகு]

Herbarium என்பதை உலர்தாவரகம் என எப்படி அழைக்கலாம்? ~AntanO4task (பேச்சு) 13:58, 3 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

சரியான பெயர் இல்லை என்று எண்ணினால் தாங்களே அதற்குரிய சரியான பெயரை இட்டுவிடுங்கள். நன்றி நேயக்கோ (பேச்சு) 10:44, 4 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
மர உலர் தாவரகம் என்ற பெயர் எங்கிருந்து பெறப்பட்டது? சான்று இணைக்கவும். ~AntanO4task (பேச்சு) 14:57, 4 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
பேச்சு:நிகர்நிலை உலர் தாவரகம், பேச்சு:உலர்தாவரக சுட்டுநூல்
கட்டுரைகளை உருவாக்குவதுடன், அவற்றை மேம்படுத்தவும் வேண்டும். --~AntanO4task (பேச்சு) 15:03, 4 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நீக்கல் வாக்கெடுப்பு[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு#விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்- கட்டுரைகள் என்பதில் நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளும் இருப்பதால் உங்களது கருத்தினையும் தெரிவிக்கவும். கட்டுரைகளை மட்டும் உருவாக்காது அது தொடர்பான உரையாடல்களிலும் கலந்துகொள்வது தான் சரியாக இருக்கும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:16, 3 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

எழுதுகின்றேன். நன்றி நேயக்கோ (பேச்சு) 10:45, 4 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

அறிவிப்பு[தொகு]

உருவாக்கிய கட்டுரைகளில் உள்ள சிக்கல்களை மேம்படுத்திய பின் புது கட்டுரைகளை உருவாக்கவும். முடியாவிட்டால், புது கட்டுரைகள் உருவாக்குவதற்கு தடை ஏற்படுத்த வேண்டி வரலாம். AntanO (பேச்சு) 05:35, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

இதுவரை 97 கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதில் என்ன மேம்பாடு செய்யவேண்டும் என அறியத் தாருங்கள். மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். 100 நாள் திட்டம் முடிவடைய இன்னும் மூன்று நாள்கள் உள்ளன. அதுவரை வாய்ப்பு நல்கினால் நலம் பயக்கும். நன்றி நேயக்கோ (பேச்சு) 08:44, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
உங்கள் திட்டத்தை நிறைவு செய்யுங்கள். கட்டுகைளின் பேச்சுப்பக்கங்களைக் கவனியுங்கள். எ.கா: உலர்தாவரக சுட்டுநூல் AntanO (பேச்சு) 09:05, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

உருங்கியா[தொகு]

ஒவ்வொரு நாளும் நீங்கள் எழுதிய கட்டுரைகளில் ஒன்றினை மேம்படுத்துகின்றமைக்கு நன்றி. உருங்கியா என்ற கட்டுரையில் இனங்களின் பெயர்களை சான்றுகளுடன் எழுதி விரிவாக்குங்கள். ஏதேனும் ஐயம் இருப்பின் இரவு 9 மணிக்கு மேல் செய்தியை அறியத் தருக உழவன் (உரை) 00:57, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நன்றி... வழிகாட்டுங்கள் மேம்படுத்துகின்றேன். நேயக்கோ (பேச்சு) 01:43, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

கூட்டுப்பணிக்கான வேண்டுகோள்[தொகு]

  • கம்மெலினேசியே என்பது நீங்கள் எழுதிய முதல் தாவரக்குடும்பம். இறக்குமுகமாக(குடும்பம் >> பேரினம் >> இனம் >> துணையினம் >> வகைகள்) இணைந்து செயற்படுவோம். எனவே, முதலில் இக்குடும்பத்தினை மேம்படுத்துவோம். நான் அதனை வகைப்பாட்டியல் மேம்பாட்டினை விரிவாக்கியுள்ளேன், நீங்கள் வளரில்புகள் இன்று எழுதுங்கள். இப்படி ஒவ்வொன்றாக முடிப்போம்.
  • இருவரும் ஒருவரை ஒருவர் சரிபார்த்துக் கொள்ள, இம்முறை உதவும் என்றே எண்ணுகிறேன். எனது முதல் பட்டம் தாவரவியல் தான். அதனால் சொல்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்று புரிந்து கொள்ள, ஒப்பீடு தேவை. அதற்கு (Taxonomy Of Angiosperms - Paperback, P C Vasishta) இந்த நூலினை தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளவும். என்னிடம் உள்ளது.
  • அப்பொழுதே வார்ப்புரு:Angiosperm families இனிதே முடிக்க இயலும். ஆங்கில விக்கிப்பீடியாவிலும், இந்நூலிலும் வகைப்பாட்டியல் விவரங்கள், பெரும்பாலும் முந்தைய விவரங்களே உள்ளன. அதற்கு POWO தளமும், விக்கியனங்கள் திட்டமும் உதவும். அதில் எனக்கு ஆர்வம். நான் பார்த்துக் கொள்கிறேன். அடுத்து வரும் வளர் இயல்புகளை மட்டும், நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இருவரும் இணைந்து கட்டுரையின் பிற தகவல்களை நுட்பத்தால், பிறரையும் வினவி மேம்படுத்துவோம். ஆங்கிலவிக்கிப்பீடியாவினை விட, புதிய சான்றுகளோடு, இப்போதுள்ள தமிழ் கட்டுரைகளை முடிப்போம். பிறகு புதியதை, உங்களுக்கு நேரம் இருந்தால் தொடங்குவோம்.

உழவன் (உரை) 03:35, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி... நேயக்கோ (பேச்சு) 07:26, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
மட்டற்ற மகிழ்ச்சி. நான்கு நாட்கள் வெளியூர் செல்கிறேன். mw:Help:Tables/en என்பதைக் கொண்டு, சிறு மாற்றத்தினை விக்கிப்பீடியா:100விக்கிநாட்கள்/Neyakkoo/1st round articles என்பதில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். கட்டுரைகளுக்கு இணைப்பு தர, விக்கிப்பீடியா:பைவிக்கிதானியங்கி என்ற பைத்தானின் நூற்கட்டகம் உதவும். முயன்று பாருங்கள். கையால் போடாதீர்கள். பைத்தானில் உங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள, விக்கிப்பக்கத்தினை, முனையத்தில் எடுத்து, திருத்தம் செய்யக் கற்றுக் கொள்ளவதே, உங்களை வழிநடத்தும். அதற்கு இக்குறிப்புகளைப் பயன்படுத்துக:
  1. பக்கத்தரவினை எடுக்க wikisource என்பதை, wikipedia என மாற்றிக் கொண்டு முயற்சிக்கவும்,
  2. "'\n" கொண்டு ஒவ்வொரு வரியாக படியுங்கள். முனையத்தில் தெளிவாக தமிழைப்படிக்க, KDE Konsole உதவும்.
  3. தலைப்புள்ள வரியினை எடுத்து, தலைப்பினை மட்டும் எடுத்து, அதில் இணைப்பு அடைப்பு குறிகள் தரவும். பிறகு இவ்வாறு மாற்றிய வரியை, மாற்றம் செய்யாத வரியை சேமித்தக் கோப்பில் சேமித்தது போல சேமிக்கவும்.
  4. பின்பு, சேமித்த கோப்பின் தரவுகளை, உரிய பக்கத்தில் ஒட்டி முன்தோற்றம் வசதி வழியே, இணைப்புகள் சரியாக உள்ளனவா என சரிபார்த்து, சேமிக்கவும்.

பரமேசு கூறியதை, மீண்டும் சிந்திப்போம்.

"Don't thing as a problem. Solve the issue/bug. You will get the return which will increase your self-power"

] என்பதை மறவாமல் செயற்படுவோம்.

ஓங்குக தமிழ் வளம்! வாழிய தமிழர் நலம்!! உழவன் (உரை) 01:52, 10 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

சிறப்பு... முயற்சிக்கின்றேன். நன்றி நேயக்கோ (பேச்சு) 02:54, 10 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Neyakkoo&oldid=3932776" இலிருந்து மீள்விக்கப்பட்டது