பயனர் பேச்சு:Arularasan. G

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொகுப்பு

தொகுப்புகள்


1


நிருவாகப் பணி[தொகு]

@Arularasan. G: அருளரசன், வணக்கம். உங்களை நிருவாகப் பணிக்காக பரிந்துரைக்க எண்ணுகிறேன். உங்களுக்கு சம்மதமா என தெரிவியுங்கள். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 11:08, 3 சனவரி 2019 (UTC)

அழைப்புக்கு நன்றி நந்தகுமார் நிருவாகப்பணிக்கு சம்மதமே--அருளரசன் (பேச்சு) 13:16, 3 சனவரி 2019 (UTC)

@Arularasan. G: நன்றி, அருளரசன்.இங்கு உங்கள் சம்மதத்தை தெரிவியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 05:53, 4 சனவரி 2019 (UTC)

யாரோ எழுதிய கவிதை[தொகு]

வணக்கம்! இந்தக் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ள மேற்கோள் வேலை செய்யவில்லை. ஆங்கில விக்கியை முழுவதுமாக நம்பாதீர்கள். இது எனது அனுபவம். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:23, 14 சனவரி 2019 (UTC)

மா. செல்வசிவகுருநாதன் வேறு மேற்கோள்கள் உள்ளனவா என தேடிப்பார்க்கிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 08:13, 17 சனவரி 2019 (UTC)

👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:14, 17 சனவரி 2019 (UTC)

பொங்கல் வாழ்த்துக்கள்[தொகு]

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:48, 14 சனவரி 2019 (UTC)

நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்[தொகு]

வணக்கம், அருளரசன். தை முதல் நாளாம் இன்று, தங்களுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. பணி சிறக்க வாழ்த்துகள். விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி விரைவில் செயற்படத் தொடங்கும் :) --இரவி (பேச்சு) 06:19, 15 சனவரி 2019 (UTC)

அருளரசன்.சார் தமிழர் திருநாளில் நிருவாக அணுக்கம் பெறும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். ஹிபாயத்துல்லா 07:55, 15 சனவரி 2019 (UTC)
தமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்--Kanags (பேச்சு) 08:14, 15 சனவரி 2019 (UTC)

கௌதம் 💓 சம்பத், இரவி, ஹிபாயத்துல்லா, Kanags உங்களுக்கு தமிழர் திருநாள் வாழ்த்துகள். நிர்வாக அணுக்கத்துக்கு ஆதவரளித்த அனைந்து பயனர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றி--அருளரசன் (பேச்சு) 08:39, 15 சனவரி 2019 (UTC)

சீனாவிலிருந்து மனம் நிறைந்த வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 11:50, 15 சனவரி 2019 (UTC)
நிர்வாகப்பணிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:48, 17 சனவரி 2019 (UTC)

நந்தகுமார், பார்வதிஸ்ரீ உங்கள் வாழ்த்துக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 08:13, 17 சனவரி 2019 (UTC)

உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 16:49, 18 சனவரி 2019 (UTC)

தங்கள் நிர்வாக அணுக்கம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:43, 15 ஏப்ரல் 2019 (UTC)

இரவி நிர்வாக அணுக்கத்தை நீட்டியமைக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 13:53, 15 ஏப்ரல் 2019 (UTC)

பக்கம் நீக்கம்[தொகு]

வணக்கம், நீங்கள் முதன்மை வெளியில்லா பேச்சுப்பக்கங்களை இதனடிப்படையில் நீக்கு வருவதற்கு நன்றி. ஆனால் அனைத்தும் நீக்கத்திற்கு உகந்தவை அல்ல. சிலவற்றைப் பெயர் மாற்றலாம், சிலவற்றை உரிய பேச்சுப் பக்கத்திற்கு நகர்த்தலாம் அல்லது விட்டுவிடலாம். குறிப்பாகத் தொகுப்பு என்று உள்ள பேச்சுப்பக்கங்கள் பரணாகப் பயன்பட்டிருக்கலாம் அதனை உறுதி செய்து நீக்க வேண்டும். உதா)பேச்சு:தமிழர்/தொகுப்பு02, பேச்சு:இசுலாம்/தொகுப்பு2 -நீச்சல்காரன் (பேச்சு) 14:14, 17 சனவரி 2019 (UTC)

நீச்சல்காரன் நல்லது அவ்வாறே செய்கிறேன்--அருளரசன் (பேச்சு) 14:16, 17 சனவரி 2019 (UTC)

வணக்கம் அருளரசன்! பேச்சு:இசுலாம்/தொகுப்பு1 பக்கத்தில் பயனுள்ள உரையாடல் ஒன்று இருந்ததைக் கண்டேன். அதனை எங்கே மாற்றுவது என்று புரியாமல் இருந்தமையால்தான் அதனை அப்போதைக்கு விட்டு வைத்தேன். நீங்கள் பக்கத்தை நீக்க முன்னர், அதன் உள்ளடக்கத்தை எங்காவது மாற்றிவிட்டீர்களா? அவ்வாறெனின் எங்கே என்று அறியலாமா? நன்றி. --கலை (பேச்சு) 11:30, 19 சனவரி 2019 (UTC)
@Kalaiarasy: பேச்சு:இசுலாம்/தொகுப்பு1 மீளமைத்துள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 11:40, 19 சனவரி 2019 (UTC)
@Nan: நான் இசுலாம் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் பார்த்தபோது, ஆவணங்களைக் காணவில்லை. அதனால்தான் வேறு எங்காவது உரையாடலை அருளரசன் பதிவு செய்துள்ளாரா என்று அறிந்துவிட்டு, மீளமைக்கலாம் என்று இருந்தேன். நீங்களே செய்துவிட்டீர்கள். நன்றி.--கலை (பேச்சு) 12:02, 19 சனவரி 2019 (UTC)

வணக்கம். சுல்தான் அப்துல்லா பக்கத்தை மீண்டும் Sultan Abdullah ibni Sultan Ahmad Shah (Q15467111) பக்கத்தோடு இணைக்க வேண்டுகின்றேன். நன்றி.--MarthandanYathamaniam (பேச்சு) 16:56, 7 மே 2019 (UTC)

உதவி[தொகு]

வணக்கம். பேச்சு:மல்லிகார்ஜுண துர்கம், பேச்சு:மருபள்ளி இவ்விரு பக்கங்களிலும் உங்கள் உதவி தேவைப்படுகிறது. உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 14:33, 18 சனவரி 2019 (UTC)

கவனிக்கவும்[தொகு]

வணக்கம் அருளரசன்! "புதுச்சேரி சட்டமன்றப் பேரவை" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை (வலது பக்க பட்டையில் உள்ளது) என்பதைப் பாருங்கள். எனவே, புதுச்சேரி சட்டமன்றப் பேரவை தலைப்பு மீளமைக்கப்படவேண்டும். இல்லையெனில், பல கட்டுரைகளில் சிவப்பு இணைப்பு ஏற்படும்.--நந்தகுமார் (பேச்சு) 08:52, 28 சனவரி 2019 (UTC)
புதுச்சேரி சட்டமன்றப் பேரவை தலைப்பை மீளமைத்துள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 09:01, 28 சனவரி 2019 (UTC)
கவனிக்காமல் இதையே நானும் முன்பு (தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை) செய்துவிட்டேன். தவறான முன்னுதாரணம். மன்னிக்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 09:10, 28 சனவரி 2019 (UTC)

தவறுக்கு வருந்துகிறேன் --அருளரசன் (பேச்சு) 15:00, 28 சனவரி 2019 (UTC)

அப்புசாமி (கற்பனை கதைப்பாத்திரம்)[தொகு]

வணக்கம். இக்கட்டுரையில், பொருத்தமான பகுப்பினை சேர்த்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:35, 28 சனவரி 2019 (UTC)

குவைத் கடல் பாலம்[தொகு]

மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் திறக்கப்படுகிறது - காணொளி

உலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது.

குவைத் தற்போது வளைகுடா நாடுகளில் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக குவைத்தில் உலகிலேயே நான்காவது மிக நீளமான கடல் பாலம் ஷேக் ஜாபர் அல் அஹமது அல் சபாஹ் கடல் பாலம் என்ற பெயரில் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் கடல் மீது கட்டப்பட்டு இருப்பதுதான் வியக்கத்தக்க விஷயம் ஆகும்.

'பட்டு நகரம்' என அழைக்கப்படும் 'சுபையா நகரம்', மக்கள் வாழ முடியாத பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்கு, அதிக முதலீடுகளை கவரும் விதத்தில் இந்த பாலம் கட்டப்படுவதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. குவைத் நகரையும், சுபையா நகரத்தையும் இணையும் வகையில் அங்கு ஏற்கனவே ஒரு தரை வழிப்பாதை இருக்கும் நிலையில், அந்த பாதையூடாக சுபையா சென்றடைய 70 நிமிடங்கள் தேவைப்படுகிறன. ஆனால், இந்த புதிய கடல் பாலம் மூலம் 20 நிமிடங்களில் சுபையா சென்றடைந்து விடலாம்.

இந்த பாலம் 36 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 27 கிலோ மீட்டர் பாலம் கடலில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கட்ட 5 வருடங்கள் ஆகியுள்ளன. 2013 நவம்பரில் இந்த பாலத்தை கட்ட தொடங்கி இருக்கிறார்கள். சுமார் 300 கோடி டாலர் செலவில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவில் பெரிய அளவில் தூண்கள் நிறுத்தப்பட்டு பாலம் அமைக்கபட்டுள்ளது.

அத்துடன், இது பயன்பாட்டிற்கு வரும் நேரத்தில் சுபையா நகரில் சுமார் 100 கோடி டாலர் அளவுக்கு முதலீடுகள் குவியும் என குவைத் அரசு நம்புகிறது. மேலும், அங்கு, 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மின் ஆலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேற்படி கடல் பாலத்திற்கு கடந்த 2006ஆம் ஆண்டு உயிரிழந்த குவைத் மன்னர் ஷேக் ஜாபர் அல் அஹமது அல் சபாஹ் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பாலம் வரும் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. சுமார் 300 கோடி டாலர் செலவில் ஏறக்குறைய 5 ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள இந்த பாலம் 2018 டிசமபர் இறுதியில் திறக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. சில காரணங்களால் தாமதமாகி வந்தது. இந்தப் பாலம் பயன்பாட்டிற்கு தயாரானதையடுத்து சில நாட்களாக சோதனை ஓட்டங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குவைத் பொதுப்பணித்துறை அமைச்சகம் வெளியிட்ட காணொளி காட்சியை பெற எம்மை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது முகநூல் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

- பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ +965 9787 2482 abkaleel@gmail.com www.fb.com/khaleelbaaqavi Abkaleel (பேச்சு) 11:19, 31 சனவரி 2019 (UTC)

மறுமொழி[தொகு]

தகவலுக்கு நன்றி அக்கட்டுரையை மேலும் விரிவாக்க முயல்கிறேன்.--அருளரசன் (பேச்சு) 12:26, 31 சனவரி 2019 (UTC)

சிறு தகவல்[தொகு]

நெடுங்கால் உள்ளான் என்ற கட்டுரையில் செய்தித்தாளில் பிரசுரமானதை அப்படியே கொடுத்திருக்கிறீர்கள். அப்படியே கொடுக்காமல் விக்கி நடைக்கேற்றவாறு கொடுத்துதவுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 11:51, 3 பெப்ரவரி 2019 (UTC)

பழையது : [இந்தப் பறவை ஒரு சமூகப் பறவை என்று சொல்லத்தக்க வகையில். எப்போதும் கூட்டமாகவே காணப்படும். இவற்றின் கூடுகள் தனியாக அல்லாமல், ஒரு குடியிருப்பைப் போன்று கூட்டங்கூட்டமாகத் தண்ணீருக்கு அருகில் அமைந்திருக்கும். தன் எல்லைக்குள் வேறு பறவைகளை இது நுழைய விடாது. அவ்வாறு நுழைந்தால், சத்தமாகக் குரல் எழுப்பித் துரத்தும்.]
புதியது : [தண்ணீருக்கு அருகில் கூட்டாக தன் கூடைக்கட்டி கூட்டமாக வாழு தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் வேறு பறவைகளை இதன் பகுதிக்குள் அனுமதிக்காததாலும் இப்பறவையை சமூகப்பறவை என்று குறிப்பிடுகிறார்கள்.]
  • சாம்பல் நிற வாத்து என்ற பக்கத்தை மேம்படுத்தியதற்கு நன்றி. விக்கியில் நிறைய கட்டுரைகள் எழுதுகிறீர்கள். அதற்கும் நன்றி. நான் தெரிவிக்கும் தகவல்களைத்தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். சாம்பல் நிற வாத்து இந்த பக்கத்தில் செய்தித்தாளில் கொடுக்கப்பட்டுள்ளதை அப்படியே கொடுத்துள்ளீர்கள். அதனை கொஞ்சம் மேம்படுத்துங்கள்.
  • கட்டுரைப்பகுதி : சாம்பல் வாத்தின் இறகுகள் சாம்பல், வெள்ளை ஆகிய நிறங்களில் இருக்கும். இதன் அலகு ஆரஞ்சு நிறத்திலும், பாதங்கள் தட்டையாக இருக்கும். இப்பறவை அதிக எடை கொண்டதாக உள்ளதால், மற்ற பறவைகளைப் போன்று எடுத்தவுடனே உயரமாக பறக்க முடியாது. பறக்கத் துவங்கும்போது சற்று தொலைவு தாழப் பறந்து பின்னர், காற்றில் ஏறிப் பறக்கத் தொடங்கும்.


  • செய்திப்பகுதி : சாம்பல், வெள்ளை ஆகிய நிறங்களில் இதன் இறக்கையும், ஆரஞ்சு நிறத்தில் இதன் அலகும் இருக்கும். பாதம் தட்டையாக இருக்கும். அதிக எடை கொண்டது. மற்ற பறவைகளைப் போன்று இதனால் எடுத்தவுடனே பறக்க முடியாது. விமானத்தைப் போல் தண்ணீரின் மீது கொஞ்ச தூரம் தாழப் பறந்து சென்ற பின்னர்தான், காற்றில் ஏறிப் பறக்கத் தொடங்கும்.
  • கட்டுரைப்பகுதி : இவை கோடைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்யக்கூடியன. முட்டை இட்ட பிறகு, இவற்றின் இறகுகள் முற்றிலும் உதிர்த்துவிடும். புது இறகுகள் முளைக்க ஒரு மாதகாலம் ஆகும். அதுவரை வலசைபோவதற்கு தேவையான ஆற்றலை சேமிப்பதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். இறகுகள் இல்லாத காலத்தில், எளிதில் வேட்டையாடப்படும் ஆபத்து உள்ள காரணத்தினால், இவை பெருங்கூட்டமாகவே வசிக்கும்.


  • செய்திப்பகுதி :கோடைக்காலத்தில் இது இனப்பெருக்கம் செய்யும். முட்டை இட்ட பிறகு, இறகுகளை முற்றிலும் உதிர்த்துவிடும். புது இறகுகள் முளைக்க ஒரு மாதம் ஆகும். அதுவரை வலசைக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்காக இது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். இறகுகள் இல்லாத காலத்தில், மற்ற விலங்குகளால் எளிதில் வேட்டையாடப்படும் ஆபத்து இருப்பதால், பெருங்கூட்டமாகவே இவை வசிக்கும்.--Muthuppandy pandian (பேச்சு) 13:48, 25 பெப்ரவரி 2019 (UTC)

Muthuppandy pandian கட்டுரையை மேம்படுத்தும்போது செய்திப்பகுதியில் உள்ளதை முடிந்த அளவு சொந்த நடையில் மாற்றியே எழுதியுள்ளதாக கருதுகிறேன். ஒரு பறவை குறித்த கட்டுரையில் இவ்வாறு ஓரளவுக்குதான் செய்ய இயலும். இனி இம்மாதிரியான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தாமல் இருந்திடலாம் என கருதுகிறேன் நன்றி--அருளரசன் (பேச்சு) 14:04, 25 பெப்ரவரி 2019 (UTC)

  • உங்களைப்போல் சிறப்பான பங்களிப்பாளரை விக்கி இழக்க விரும்பவில்லை. உங்களின் பங்களைப்பை நான் வரவேற்கிறேன். உங்களின் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள். ஏதாவது திருத்தம் செய்ய நினைத்தால் நான் சரி செய்கிறேன். உங்களின் சேவை தொடரட்டும்.--Muthuppandy pandian (பேச்சு) 08:25, 26 பெப்ரவரி 2019 (UTC)

கவனிக்க[தொகு]

வணக்கம், கட்டுரைத் தலைப்புகளை வழிமாற்றின்றி நகர்த்தும் போது, அக்கட்டுரைத் தலைப்பு வேறு கட்டுரைகளில் இணைக்கப்பட்டுள்ளனவா எனப் பார்க்க வேண்டும். இணைக்கப்பட்டிருந்தால் அவற்றின் சிவப்பு இணைப்புகளை சீர் செய்ய வேண்டும்.--Kanags (பேச்சு) 21:50, 9 பெப்ரவரி 2019 (UTC)

Kanags இனி இதில் கவனமாக இருக்கிறேன்.--அருளரசன் (பேச்சு) 01:25, 10 பெப்ரவரி 2019 (UTC)

நன்றி[தொகு]

தங்களின் ஊக்குவிப்புக்கு மனமார்ந்த நன்றிகள் யு.ஷந்தோஷ்ராஜா 15:29, 11 பெப்ரவரி 2019 (UTC)

உருத்ரன்[தொகு]

மும்மூர்த்திகளில் சிவனை தவிர வேறு எவருடன் இவருக்கு தொடர்புள்ளதா ஜெ.கலையரசன் (பேச்சு) 16:34, 14 பெப்ரவரி 2019 (UTC) அல்லது மும்மூர்த்திகளில் சிவன் விஷ்ணு ப்ரம்மா தவிர வேறு யாரும் உள்ளனரா ஜெ.கலையரசன் (பேச்சு) 16:36, 14 பெப்ரவரி 2019 (UTC)

ஜெ.கலையரசன் உருத்திரன் சிவனால் உருவாக்கப்பட்வர் எனவே இக்கட்டுரையை சிவன் கட்டுரையுடன் இணைக்கத்தேவையில்லை. இது குறித்து உருத்திரன் கட்டுரையின் பேசுவதே பொருத்தம்--அருளரசன் (பேச்சு) 16:40, 14 பெப்ரவரி 2019 (UTC) சிவனால் படைக்கப்பட்ட உருத்திரன் எவ்வாறு மும்மூர்த்திகளில் ஒருவராக முடியும் ஜெ.கலையரசன் (பேச்சு) 16:43, 14 பெப்ரவரி 2019 (UTC)

உருத்திரன் கட்டுரையில் அவர் மும்மூர்த்திகளில் ஒருவராக குறிப்பிடப்படவில்லையே--அருளரசன் (பேச்சு) 16:49, 14 பெப்ரவரி 2019 (UTC)

விளக்கம்[தொகு]

Muthuppandy pandian தெ கலர் ஆப் பாரடைஷ்(திரைப்படம்) என்ற பெயரில் அடைப்புக்குறிக்கு இடையில் இடைவெளி இல்லாமல் இருந்தது. அவ்வாறு இல்லாமல் தெ கலர் ஆப் பாரடைஷ் (திரைப்படம்) என்று இடைவெளியை உருவாக்க தலைப்பை மாற்றினேன்--அருளரசன் (பேச்சு) 15:25, 20 பெப்ரவரி 2019 (UTC)

மொழிமுதல் எழுத்துக்கள்[தொகு]

ஃ மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வராது. காண்க: மொழிமுதல் எழுத்துக்கள் --AntanO (பேச்சு) 15:04, 5 மே 2019 (UTC)

இரண்டாயிரம் கட்டுரைகள்[தொகு]

Iraayiravar.jpg ஈராயிரவர் பதக்கம்
வணக்கம் அருளரசன் தாங்கள் பல்வேறு தலைப்புகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கட்டுரைகளை எழுதி வருவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
  1. ஸ்ரீ (talk) 05:46, 13 மே 2019 (UTC)

👍 விருப்பம் --மகாலிங்கம்--TNSE Mahalingam VNR (பேச்சு) 15:36, 9 செப்டம்பர் 2019 (UTC)


பதக்கம் வழங்கிய ஸ்ரீக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 13:09, 13 மே 2019 (UTC)

Translation request[தொகு]

Hello Arularasan, could you please translate this article about “Dravidian folk religion” into Tamil from the English Wikipedia? Here is the link: https://en.wikipedia.org/wiki/Dravidian_folk_religion Thank you very much.—2001:4BC9:820:76AC:C9DD:7F23:DA77:4136 16:58, 17 சூன் 2019 (UTC)

Yes check.svgY ஆயிற்று--அருளரசன் (பேச்சு) 08:14, 30 சூன் 2019 (UTC)

பகுப்பு:தமிழர்[தொகு]

இப்பகுப்பில் உள்ள பக்கங்கள் பொருத்தமான துணைப்பகுப்புகளுக்குள் சேர்க்கப்பட வேண்டும். --AntanO (பேச்சு) 18:36, 1 சூலை 2019 (UTC)

காவிரி ஆறு பக்கம்[தொகு]

காவிரி ஆறு எனும் பக்கத்தில் நான் பதிவிட்ட மாற்றம் இராச இராச சோழனுலா எனும் நூலில் இடம்பெற்றுள்ளன அப்படி இருக்கையில் ஏன் தாங்கள் என் செய்திகளை அழித்தீர்கள் . அதை உண்மை அல்ல என்பதை நிரூபிக்க வரலாற்றுச் சான்றுகள் உங்களிடம் உள்ளதா Ram9095 (பேச்சு) 02:55, 22 சூலை 2019 (UTC)

முடிந்தால் பதில் கூறவும்or undelete my post-its my efforts to reveal the world my true history my ancestors tamizhians Ram9095 (பேச்சு) 02:56, 22 சூலை 2019 (UTC)

Ram9095 காவிரி ஆறு தொடர்பான கேள்வியை காவிரி ஆறு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கேட்கவும்--அருளரசன் (பேச்சு) 12:17, 22 சூலை 2019 (UTC)

மெய்யெழுத்து[தொகு]

மெய்யெழுத்துக்களில் சொற்கள் ஆரம்பிப்பது இலக்கணப்பிழையும், மாத்திரை அளவில் சரியாக உச்சரிக்க முடியாது. எ.கா: (Blue = புளு, ப்ளு அல்ல) --AntanO (பேச்சு) 15:28, 21 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

ஆசிய மாதம், 2019[தொகு]

Ta Asian Month Banner Logo 2019.png

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:15, 3 நவம்பர் 2019 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:08, 25 நவம்பர் 2019 (UTC)

கட்டுரை திருத்தம் தொடர்பாக[தொகு]

வணக்கம். மாலத்தீவில் இந்துமதம் கட்டுரையினை சரி செய்துள்ளேன். தங்களின் மேலான கவனிப்பிற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இது போல நான் மொழியாக்கம் செய்த கட்டுரையில் பிழை இருப்பின் எனக்கு தெரியப்படுத்தவும். நன்றி. வசந்தலட்சுமி

என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 14:29, 1 திசம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arularasan._G&oldid=2865227" இருந்து மீள்விக்கப்பட்டது