பயனர் பேச்சு:பிரயாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருளடக்கம்

வாருங்கள்!

வாருங்கள், பிரயாணி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- Booradleyp1 (பேச்சு) 03:06, 29 திசம்பர் 2018 (UTC)

புதுப்பயனர் போட்டி[தொகு]

நண்பருக்கு வணக்கம். தாங்கள் புதுப் பயனர் கட்டுரைப் போட்டிகளில் சிறப்பாகப் பங்களித்து வருகிறீர்கள். வாழ்த்துகள்.

 • கட்டுரையின் முதலில் தமிழ் தலைப்புகளை எழுதுங்கள் அடைப்புக்குள் ஆங்கிலத் தலைப்புகளை எழுதவும் உங்களுடைய கட்டுரையில் செய்துள்ள மாற்றங்களைக் கவனிக்கவும்.
 • தாங்கள் ஆங்கிலக் கட்டுரைகளை எழுதுவதால் அந்தக் கட்டுரையத் தமிழ்க் கட்டுரையோடு இணைக்கவும்.
 • சான்றுகளை வெளியிணைப்புகளுக்கு முன்பாக சேர்க்கவும்.
 • சிவப்புக் குறிகள் இருந்தால் அந்தக் கட்டுரை தமிழில் இல்லை (அ) அந்தப் பெயரில் இல்லை. என்பதை அறியலாம்.

வெற்றி பெற வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.SRIDHAR G (பேச்சு) 09:21, 6 சனவரி 2019 (UTC)

தங்களுக்கும் வணக்கம். எவ்வாறு ஆங்கிலக்கட்டுரையுடன் தமிழ் கட்டுரையை இணைப்பது? அடுத்த கட்டுரையிலிருந்து தங்களின் குறிப்புகளை உபயோகப்படுத்துகிறேன் வாழ்த்துதலுக்கு நன்றி -- −முன்நிற்கும் கருத்து பிரயாணி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு இணைப்பு தருவது எப்படி என்று அறிய இந்தக் காணொளி பாருங்கள். --இரவி (பேச்சு) 18:36, 7 சனவரி 2019 (UTC)

சந்தேகங்கள்- புதுப்பயனர் போட்டி[தொகு]

கட்டுரைப்பெயர் மாற்றப்பட்டால் மறுபடியும் போட்டிக்கட்டுரையில் சமர்ப்பிக்க வேண்டுமா?? குறுப்பிட்ட அனைத்து ஆங்கில கட்டுரைகள் அல்லாமல் வேறு கட்டுரைகளை எழுதினால் போட்டியில் சமர்ப்பிக்கலாமா?? பிரயாணி (பேச்சு) 17:06, 7 சனவரி 2019 (UTC)

 1. குழப்பங்களைத் தவிர்க்க, பெயர் மாற்றிய கட்டுரையை இன்னொரு முறை சமர்ப்பித்து விடுங்கள்.
 2. கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளிலேயே கட்டுரைகள் எழுத வேண்டும். ஆனால், ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை அப்படியே மொழிபெயர்க்க வேண்டும் என்றில்லை. கூடுதல் தகவல் திரட்டி எழுதலாம். இந்தத் தகவல் நம்பகமான சான்றுகளின் அடிப்படையில் வேறு எங்கும் இருந்தும் வெட்டி ஒட்டாமல் பதிப்புரிமை சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும்.
 3. உங்களுக்கு வேறு என்ன துறை சார்ந்த கட்டுரைகள் எழுதுவது இலகுவாக இருக்கும் என்று சொல்லுங்கள். அவற்றைப் போட்டியல் சேர்க்க முயல்கிறோம்.

ஆர்வத்துடன் போட்டியில் பங்கு கொண்டு வருவதற்கு நன்றி. --இரவி (பேச்சு) 18:24, 7 சனவரி 2019 (UTC)

 1. நிதித்துறை சார்ந்த தலைப்புகளில் கட்டுரை எழுதுவது இலகுவாக இருக்கும் என எண்ணுகிறேன்.
 2. கட்டுரையை மறுபடியும் சமர்ப்பித்து விட்டேன். -- −முன்நிற்கும் கருத்து பிரயாணி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஆங்கில விக்கிப்பீடியாவில் நிதித்துறை சார்ந்து உள்ள சில கட்டுரைகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருகிறீர்களா? அதே போன்ற தலைப்புகளை இங்கும் தர முயல்வோம். கட்டுரைப் போட்டி தொடர்பான உதவிக்கு, இந்தப் பக்கத்தில் கேள்விகள் கேளுங்கள். மற்றவர்கள் உடனுக்கு உடன் பதில் அளிக்க வசதியாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 07:39, 9 சனவரி 2019 (UTC)

தேவையற்ற சிவப்பு இணைப்புகள்[தொகு]

வணக்கம். தாங்கள் துவக்கிய சுவாமிநாத தேசிகர் கட்டுரையின் அதிகப்படியான சிவப்ப்பிணைப்புகளை நீக்கியிருக்கிறேன். இதனை இனிவரும் கட்டுரைகளில் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:21, 13 சனவரி 2019 (UTC)

சொர்க்கத்தீவு (புதினம்)[தொகு]

வணக்கம்! இக்கட்டுரைக்கு மேற்கோள்கள் சேர்க்கப்படல் வேண்டும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் முழுமை பெறாததாகவே கருதப்படும் என்பதனை கருத்திற் கொள்ளுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:13, 20 சனவரி 2019 (UTC)

புத்தகத்தைப் பற்றி என்னவிதமான மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டும்??

உதாரணம்: மாதொருபாகன் (புதினம்). இணையத்தளத்தில் தேடிப்பார்த்து, மேற்கோள்களைச் சேருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:09, 20 சனவரி 2019 (UTC)

மிக்க நன்றி.

இணையத்தில் காணும் பக்கங்களில் வணிக நோக்கற்ற விவரங்கள் கொண்ட பக்கங்களை மேற்கோளாக இணைக்க வேண்டுகிறேன். (உதாரணத்திற்கு புத்தகத்தின் விலை குறிக்கப்படாத பக்கங்கள்).--Booradleyp1 (பேச்சு) 08:16, 21 சனவரி 2019 (UTC)

நன்றி

நிறமற்ற வானவில்[தொகு]

வணக்கம். முழுக்கதையையும் இவ்வளவு விரிவாகச் சொல்லாமல் சுருக்கமாக எழுதுவது நல்லது. --Booradleyp1 (பேச்சு) 08:16, 21 சனவரி 2019 (UTC)

மிகவும் நன்றி

அ. முத்துக்கிருஷ்ணன்[தொகு]

வணக்கம். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள், முழுமை அடைவது இல்லை என்பதனை கவனத்திற் கொள்ளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:42, 28 சனவரி 2019 (UTC)

உதவிக்கு, காண்க:- விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:44, 28 சனவரி 2019 (UTC)

பக்கம் பெயர்மாற்றம்[தொகு]

பா.தேவேந்திர பூபதி என்ற கட்டுரையானது பா. தேவேந்திர பூபதி என்ற பெயருக்கு நகர்த்தியுள்ளேன். இனி தாங்கள் எழுதும் கட்டுரைகளில் இடும் தலைப்பில் இது போன்று ஒரு இடைவெளி விடவும் நன்றி--அருளரசன் (பேச்சு) 14:52, 31 சனவரி 2019 (UTC)

பா. தேவேந்திர பூபதி[தொகு]

வணக்கம். எழுத்தாளர்கள் குறித்த கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள். மிக நன்று. விக்கியாக்கத்திற்காக உங்கள் கட்டுரைகளில் மேற்கோள்ளப்படும் திருத்தங்களைக் கவனித்து அடுத்து வரும் உங்கள் கட்டுரைகளில் அவற்றைத் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் கவனத்திற்கு:

 • கட்டுரையின் துவக்கத்தில் வரும் தகவற்பெட்டியின் இடப்பக்க விவரங்களை மொழிபெயர்க்கவோ மாற்றவோ வேண்டாம். வலப்புற விவரங்களை மட்டுமே மொழிபெயர்க்கவும்.
 • தனிநபர்களின் வலைப்பூக்களை மேற்கோள்களாகத் தராதீர்கள். அவை விக்கியில் ஏற்கப்படுவதில்லை.
 • மேற்கோளாகத் தரப்படும் இணையப்பக்கங்களில் உள்ள வாசகங்களைக் கட்டுரையில் மாற்றமின்றி அப்படியே பதிவுசெய்ய வேண்டாம். விக்கி விதிமுறைகளின் படி அது பதிப்புரிமை மீறலாகும்.
 • மிகைப்படுத்தும் சொற்களை கட்டுரையில் தவிர்க்கவும். கலைக்களஞ்சியக் கட்டுரைகள் அதிகப்படியான வருணனைகள் இன்றி சரியான விவரங்களை மட்டுமே ஆதாரங்களுடன் கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் கட்டுரைகள் மேலும் சிறப்பாக அமைய இக்குறிப்புகள் உதவியாக இருக்கும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:05, 31 சனவரி 2019 (UTC)

மிகவும் நன்றி. தேவையான அனைத்து குறிப்புகளையும் கூறியுள்ளீர்கள் மேலும் மாற்றங்கள் செய்யவேண்டுமெனில் உதவவும்

அ.முத்துக்கிருஷ்ணன்[தொகு]

புதிய தலைப்பினை சம்ர்ப்பித்தால் தான் அதர்கு மதிப்பெண் வழங்க இயலும் நன்றிஸ்ரீ (talk) 12:58, 5 பெப்ரவரி 2019 (UTC)

fountain problem[தொகு]

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் சிறப்பாக பங்களித்து வருவதற்கு நன்றி. தற்போது fountain கருவி செயலபடவில்லை. இருந்தபோதிலும் தாங்கள் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கருவி மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்போது உங்களின் கட்டுரைகளை மொத்தமாக சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 01:32, 17 பெப்ரவரி 2019 (UTC)

தற்காலிக ஏற்பாடு[தொகு]

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் நீங்கள் விரிவாக்கிய அல்லது உருவாக்கிய கட்டுரைகளின் பெயர்களை இங்கு இட வேண்டுகிறோம். இது தற்காலிக ஏற்பாடு தான். கருவி செயல்படத் துவங்கிய பிறகு வழக்கம் போல் சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 06:23, 19 பெப்ரவரி 2019 (UTC)

பதிப்புரிமை[தொகு]

Anti-copyright.svg

வணக்கம், பிரயாணி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


Stop hand nuvola.svg

வணக்கம், பிரயாணி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


--AntanO (பேச்சு) 16:59, 7 மார்ச் 2019 (UTC)

முனைப்பான பங்களிப்பு[தொகு]

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:26, 23 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- 2019[தொகு]

நன்றி பிரயாணி

வணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 12:57, 1 ஏப்ரல் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி முடிவுகள்[தொகு]

புதுப்பயனர் போட்டியில் தங்களின் சிறப்பான பங்களிப்புக்கு நன்றிகள். பரிசு விவரஙகளை இங்கே காணலாம். தொடர்ந்து பங்களித்து விக்கிப்பீடியாவுடன் இணைந்திருங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:21, 7 ஏப்ரல் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

பரிசினைப் பெற்றுக் கொள்க[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவில் நடந்த புதுப் பயனர் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு அமேசானின் மின்பரிசுச் சீட்டின் அனுப்பவுள்ளோம். இது தொடர்பாக தங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் வரவில்லை. தங்களின் தபால் முகவரியும், அஞ்சல் முகவரியினையும் தர இயலுமா? எனது மின்னஞ்சல் அல்லது இதர வழிகளிலும் தொடர்பு கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 10:37, 24 அக்டோபர் 2019 (UTC)

கடந்த 22ம் தேதி உங்கள் மின்னஞ்சல் வந்ததும் எனது முகவரியை பதிலனுப்பி விட்டேனே... தயவுசெய்து பாருங்களேன். Ebenezer joseph P 803, D wing, Eastern winds, Opp to bhunter bhavan Quareshi Nagar, Kurla East Mumbai 400070 9486060861

இதுதான் எனது அஞ்சல் முகவரியாகும்.

ஆசிய மாதம், 2019[தொகு]

Ta Asian Month Banner Logo 2019.png

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:54, 4 நவம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்![தொகு]

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:11, 25 நவம்பர் 2019 (UTC)

தொடருந்து பற்றிய கட்டுரைகள்[தொகு]

வணக்கம் நண்பரே! எனக்கு விருப்பமான தொடருந்துகளைப் பற்றிய கட்டுரைகளை எழுதியிருக்கிறீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டுரைகளில் ஒரே சொற்றொடர் இரண்டு மூன்று முறை வருகின்றன. ஏதும் ஆட்டோமேஷன் கருவி கொண்டு எழுதுகிறீர்களா என்று தெரியவில்லை. இனி எழுதும்பொழுது கட்டுரையின் உள்ளடக்கத்தை ஒரு முறை சரிபார்த்துவிடுங்கள். சிலவற்றை திருத்தியிருக்கிறேன். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:31, 30 திசம்பர் 2019 (UTC)

மிகவும் நன்றி நண்பரே... கூகுள் குரல்வழி உள்ளீட்டு கருவி முலம் கட்டுரைகளை எழுதி வருகிறேன். எல்லாக் கட்டுரைகளையும் ஒருமுறை சரபார்த்த பின்பே சமர்ப்பிக்கின்றேன். இனியும் நன்றாக சரிபார்த்து சமர்ப்பிக்கிறேன்.. தங்களின் திருத்தத்திற்கும் மேலான நன்றிகள்

கட்டுரைகளில் சான்றிணைத்தல்[தொகு]

வணக்கம் ஐயா. தாங்கள் உருவாக்கிய தொடருந்து குறித்த கட்டுரைகளில் சரியான நம்பத்தகுந்த சான்றுகளை இணைக்கவும். இல்லையெனில் அவை போட்டியிலிருந்து நீக்கப்படலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:45, 31 திசம்பர் 2019 (UTC)


வணக்கம்.... எல்லா கட்டுரைகளிலும் சான்றுகள் இணைத்துள்ளேனே... ஏதாவது எ.கா சொன்னீர்களென்றால் சரி பண்ணி விடுகிறேன். நன்றி

{{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.[தொகு]

வணக்கம்,

நீங்கள் உருவாக்கிய சில கட்டுரைகளில் {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்தியுள்ளீர்கள். இந்த வார்ப்புரு பயன்படுத்தும் போது தலைப்பையும் (title) கொடுக்கவும். இங்கு பார்க்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:00, 2 சனவரி 2020 (UTC)


வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி[தொகு]

வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:46, 4 சனவரி 2020 (UTC)

சிவப்பு இணைப்பு[தொகு]

வணக்கம். தாங்கள் வேங்கைத் திட்டம் 2.0 வில் கலந்துகொண்டு சிறப்பாக பங்களித்தமைக்கு வாழ்த்துகள். தங்களது கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகள் அதிகம் உள்ளன. அவற்றை நீக்கவும். நன்றிஸ்ரீ (✉) 11:20, 17 சனவரி 2020 (UTC)


விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020[தொகு]

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:25, 17 சனவரி 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பிரயாணி&oldid=2896089" இருந்து மீள்விக்கப்பட்டது