விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPN
WP:AMA
இப்பகுதி அறிவிப்புகள் தொடர்பிலான ஆலமரத்தடியின் கிளையாகும். மேலும், இங்கு நேரடியாக விக்கிப்பீடியாவுக்கு தொடர்பில்லாத, அதே வேளை பெரும்பான்மை விக்கிப்பீடியர்களின் கவனத்துக்கு வர வேண்டிய, அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய அறிவிப்புகளை இடலாம். எடுத்துக்காட்டுக்கு, கூட்டு மதிநுட்ப முயற்சிகள், உலக மொழிகளின் வளர்ச்சி / போக்குகள் போன்றவை. இது ஒரு விளம்பரப்பலகையோ பொதுவான அறிவிப்புப் பலகையோ கலந்துரையாடல் மன்றமோ அன்று. இயன்றவரை, இதே செய்திகளை சமூக உறவாடல் வலைத்தளங்கள், மின்மடல்கள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்றும் கருதுங்கள். நன்றி.
« பழைய உரையாடல்கள்ஏழு நாள் விக்கி இணையவழிப் பயிற்சி[தொகு]

முழுமையான ஒரு விக்கித்திட்டங்கள் குறித்த ஒரு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நமது வெகுநாள் கனவான இப்போது நனவாகவுள்ளது. வருகிற ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ஏழு நாள் விக்கித் திட்டங்கள் குறித்த முழுமையான ஒரு இணையவழிப் பயிற்சியினை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து கணித்தமிழ்ப் பேரவை வழியாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நிகழ்ச்சி நிரல்

தினமும் மாலை 6-7 வரை கூகிள் மீட் வழியாக நடைபெறும். இதன் ஒளிப்பதிவு படைப்பாக்கப் பொதுமத்தில் யூட்யூப்பில் வெளியிடப்படும். அனைவரும் கலந்து கொள்ளலாம். முன்பதிவிற்கான படிவம். இது முதல் முயற்சியாகையால் நமக்கும் இது அனுபவமாக இருக்கும். இதர ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் கொடுத்துதவலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 09:03, 14 ஆகத்து 2020 (UTC)

  • இந்நிகழ்வுகளின் பதிவுகள், கட்டற்ற உரிமத்தில் வெளியிட, நீச்சல்காரன் வழிவகைச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த வரலாற்று பதிவாகும். இதுபோல இதுபோன்று நாம் பெற்றதில்லை என்றே எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 02:06, 17 ஆகத்து 2020 (UTC)
👍 விருப்பம் நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள்--கி.மூர்த்தி (பேச்சு) 06:02, 17 ஆகத்து 2020 (UTC)

ஏழு நாள் பயிற்சிப் பயிலகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்ட உடனே, ஏழுநாட்களுக்குரிய சிறப்புரையாளர்களை அறிமுகம் செய்ததோடு, அவர்களுக்குரிய தலைப்புகளையும் தந்து இப்பயிற்சி சிறப்புற நிகழ உதவிபுரிந்த நீச்சல்காரனுக்கு நன்றி! இப்படிப்பட்ட நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய எம் கல்லூரி அறங்காவலர் திருமதி மலர்விழி அவர்கள், கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் ஆகிய இருவருக்கும் நன்றி!! இப்பயிலரங்க ஒருங்கிணைப்பை ஏற்றுக்கொண்டு அதற்குரிய எல்லா செயல்பாடுகளையும் செய்து வருகின்ற இணை ஒருங்கிணைப்பாளரான பேரா.கு. இராமஜெயம் அவர்கள், அவர்களோடு செல்வி தாரணி, செல்வி பவித்ரா, செல்வி ரேஷ்மா, செல்வன் ஆர்லின்ராஜ், செல்வன் மணிகண்டன் ஆகியோரும் நன்றிக்குரியவர்கள்--முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (பேச்சு) 01:28, 20 ஆகத்து 2020 (UTC).

நிகழ்வை ஒருங்கிணைத்தோருக்கும் பயிற்சிகளை வழங்கியோருக்கும் வாழ்த்துகள். இந்தப் பயிற்சிகளின் காணொளி இணைப்புகளை இங்கே பகிர்ந்தால் ஏனையோருக்கும் பயன்படும். --சிவகோசரன் (பேச்சு) 12:00, 29 ஆகத்து 2020 (UTC)

Important: maintenance operation on September 1st[தொகு]

Trizek (WMF) (talk) 13:49, 26 ஆகத்து 2020 (UTC)

அரண் தமிழ் அறக்கட்டளை இணையவழிக் கருத்தரங்கம்[தொகு]

அரண் தமிழ் அறக்கட்டளை நடத்தும் பத்து நாள் இணையவழிக் கருத்தரங்கம் செப்டம்பர் 1 முதல் 10 வரை நடைபெறுகிறது. இணையத் தமிழ்ப் பயன்பாடு என்ற பொருண்மையில் வெவ்வேறு தலைப்புகளில் தினமும் மாலை 7-8 வரை நடைபெறுகிறது. செப் 6, 7 & 8 ஆம் நாட்களில் விக்கித் திட்டங்கள் குறித்த உரைகள் உள்ளன. முன்பதிவிற்கான இணைப்பு

ஆகிய பயனர்கள் கலந்து கொள்கின்றனர். மூவருக்கும் வாழ்த்துக்கள். ஆர்வமுள்ளவர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள அழைக்கிறோம். மேலும் தகவலுக்கு அழைப்பிதழ் -நீச்சல்காரன் (பேச்சு) 10:53, 29 ஆகத்து 2020 (UTC)

👍 விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 11:57, 29 ஆகத்து 2020 (UTC)

New Wikipedia Library Collections Now Available (September 2020)[தொகு]


Hello Wikimedians!

The TWL owl says sign up today!

The Wikipedia Library is announcing new free, full-access, accounts to reliable sources as part of our research access program. You can sign up for new accounts and research materials on the Library Card platform:

Many other partnerships are listed on our partners page, including Adam Matthew, EBSCO, Gale and JSTOR.

A significant portion of our collection now no longer requires individual applications to access! Read more in our recent blog post.

Do better research and help expand the use of high quality references across Wikipedia projects!
--The Wikipedia Library Team 09:49, 3 செப்டம்பர் 2020 (UTC)

This message was delivered via the Global Mass Message tool to The Wikipedia Library Global Delivery List.

உரையாடலில் பங்கேற்க அழைக்கிறோம்[தொகு]

அனைவருக்கும் வணக்கம். அனைத்தும் தழுவிய நடத்தை நெறியின் (Universal Code of Conduct) வரைவு ஒன்றை உங்கள் பரிசீலனைக்காகவும் பின்னூட்டத்திற்காகவும் பகிர்வதில் பரவசமடைகிறோம். முன்னதாக இந்த ஆண்டில் Wikimedia அறக்கட்டளை அறங்காவலர் குழு (Wikimedia Foundation Board of Trustees) இதைக் கட்டாயமாக்கியது. வரைவின் எந்தப் பகுதிகள் உங்களுக்கு அல்லது உங்கள் பணிக்குச் சவால்களை விடுக்கும் என்று UCoC வரைவாக்கக் குழு அறிய விரும்புகிறது. இந்த வரைவில் இடம்பெறத் தவறியது என்ன? தயவுசெய்து உரையாடலில் சேர்ந்துகொள்ளுங்கள், சேர ஆர்வம் இருக்கக்கூடிய மற்றவர்களையும் அழையுங்கள்.

--AMtavangu (WMF) (பேச்சு) 12:12, 10 செப்டம்பர் 2020 (UTC)

விக்கிப்பீடியப் பரப்புரைக் காணொளி தேவை[தொகு]

விழுப்புரம் GLUG (ஒரு கட்டற்ற மென்பொருள் குழுமம்) SFD 2020 கொண்டாட்டத்தின் பகுதியாக விக்கிப்பீடியா/விக்கித்திட்டங்கள் தொடர்பான ஒரு அறிமுகக் காணொளி கேட்டுள்ளனர். குறைந்தது 15 நிமிடம் அதிகப்பட்சம் எவ்வளவு நிமிடமானாலும் இருக்கலாம். இரு தினங்களுக்குள் அனுப்பக் கேட்டுள்ளனர். விக்கித்திட்டங்களில் எப்படிப் பங்களிப்பது என்று விளக்கும் செயல்முறை விளக்கமாக இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் அறியத் தாருங்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 11:55, 15 செப்டம்பர் 2020 (UTC)

பயனர் ஸ்ரீதர் உருவாக்கிய பரப்புரைக் காணொளி வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=JtNsJ9xai2k -நீச்சல்காரன் (பேச்சு) 13:17, 18 செப்டம்பர் 2020 (UTC)
கண்டேன். மகிழ்ந்தேன்.--உழவன் (உரை) 02:06, 19 செப்டம்பர் 2020 (UTC)
அருமை. வாழ்த்துக்கள்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:50, 19 செப்டம்பர் 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon II and Central Notice[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it