பயனர் பேச்சு:உலோ.செந்தமிழ்க்கோதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளடக்கம்

வாருங்கள்!

வாருங்கள், உலோ.செந்தமிழ்க்கோதை, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--இரா.பாலா (பேச்சு) 09:50, 27 திசம்பர் 2014 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், உலோ.செந்தமிழ்க்கோதை!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 16:30, 16 மார்ச் 2015 (UTC)


வணக்கம் ஐயா, 'அறிவியல் ஒளி' இதழ் மூலம் தங்களைப் பற்றி அறிவேன். தமிழ் விக்கிப் பீடியாவுக்குத் தங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறேன். தங்களைப் போன்ற அறிவியல் அறிஞர்கள் விக்கிப்பீடியாவில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி தமிழ் விக்கியில் புதிய அறிவியல் கட்டுரைகளை படைத்திடவும் ஏற்கனவே உள்ள அறிவியல் கட்டுரைகளை பிழை திருத்தி உதவி செம்மைப் படுத்திடவும் தங்களின் வருகை பயனளிக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:19, 2 ஏப்ரல் 2015 (UTC)


பதக்கம்[தொகு]

Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கி முறைகளைத் திறந்த மனதுடன் கற்றுக் கொண்டு மிளிரும் உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 10:31, 26 சூன் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 10:36, 26 சூன் 2015 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 11:03, 26 சூன் 2015 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:40, 29 சூன் 2015 (UTC)


முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்[தொகு]

வணக்கம். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 13:15, 1 சனவரி 2016 (UTC)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:40, 1 சனவரி 2016 (UTC)
முதற்பக்க அறிமுகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:10, 9 சனவரி 2016 (UTC)

பதக்கம்[தொகு]

Special Barnstar Hires.png சிறப்புப் பதக்கம்
தங்களின் சிறந்த விக்கிப் பங்களிப்புக்காக. மேலும் தங்களின் விக்கிப்பணி தொடர வாழ்த்துக்கள். -- Μ₳Ά₮Ή₳\/Ά₦  ( பேச்சு  ) 15:16, 11 சனவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:08, 12 சனவரி 2016 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:19, 12 சனவரி 2016 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:41, 12 சனவரி 2016 (UTC)


விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்[தொகு]

2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியாவின் கொடி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியாவின் கொடி கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் கொடி மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கையின் கொடி மாதவன், இந்தியாவின் கொடி உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.


பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 07:12, 15 ஆகத்து 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |}


பதக்கம்[தொகு]

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகளை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், விக்கிப்பீடியாவில் நடைபெற்ற தொடர்த் தொகுப்பு நிகழ்வில் அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கி, அதன் மூலம் மூன்று மரங்கள் நட வழிவகை செய்ததற்காக இப்பதக்கத்தினை அளித்து மகிழ்கின்றேன். வாழ்த்துக்கள்_/\_. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:32, 2 செப்டம்பர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 15:48, 3 செப்டம்பர் 2016 (UTC)

சுற்றுக்காவல்[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:21, 13 அக்டோபர் 2016 (UTC)

சுற்றுக் காவலில் உதவ விருப்பமே. அதில் என்னென்ன பணிகளைச் செய்யவேண்டும் என அறிய விரும்புகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:48, 13 அக்டோபர் 2016 (UTC)

உதவ முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு தற்காவல், முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 14:17, 15 அக்டோபர் 2016 (UTC)


DNA-structure-and-bases.png உலோ.செந்தமிழ்க்கோதை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வணக்கம்[தொகு]

"Magway" என்ற பெயரை எப்படி தமிழில் எழுதலாம்? மேக்வே என்பது சரியா?--கி.மூர்த்தி (பேச்சு) 12:58, 26 நவம்பர் 2016 (UTC)

அதிரொலி வேண்டுமென்றால் மாகுவே என்றுதான் எழுதவேண்டும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:38, 26 நவம்பர் 2016 (UTC)

நன்றி ஐயா!--கி.மூர்த்தி (பேச்சு) 13:56, 26 நவம்பர் 2016 (UTC)

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு[தொகு]

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:10, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை[தொகு]

2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:22, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1[தொகு]

2017 விக்கிக்கோப்பை

விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:29, 9 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்[தொகு]

2017 விக்கிக்கோப்பை

உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:42, 11 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி[தொகு]

LED digit 1.pngLED digit 0.pngLED colon.pngLED digit 2.pngLED digit 2.pngLED pm.png
இன்று ஏப்ரல் 22, 2018
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:44, 31 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று[தொகு]

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:36, 25 சனவரி 2017 (UTC)

கவனியுங்கள்[தொகு]

வில்லெம் தெ சிட்டர் கட்டுரையின் தகவல்சட்டத்தைத் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 21:58, 30 சனவரி 2017 (UTC)

உங்களுக்காக கட்டுரையில் திருத்தம் செய்துள்ளேன். இந்தத் திருத்தத்தைக் கவனித்து அருள்கூர்ந்து உங்கள் ஏனைய கட்டுரைகளையும் திருத்துமாறு கேட்டுக் கொள்கிறே3ன். கட்டுரை எண்ணிக்கை முக்கியமல்ல. தரமான தகவல் தருவதே முக்கியம்.--Kanags \உரையாடுக 07:54, 31 சனவரி 2017 (UTC)

யாவாகிறிட்டையும் புரூவிட்டையும் பயனர் பக்கத்தில் தரவிறக்கம் செய்தல் எப்படி? உதவி செய்யவும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:35, 9 பெப்ரவரி 2017 (UTC)

போட்டி விளக்கம்[தொகு]

விக்கிக்கோப்பை இரண்டாம் சுற்றில் பங்குபற்றுவது தொடர்பில் மகிழ்ச்சி! தாங்கள் இவ்வாறு செய்கின்ற உசாத்துணைப்பட்டியல் இடுகின்ற தொப்பு சால சிறந்தது இல்ல என கருதுகின்றேன். இவ்வாறான மேற்கோள் இணக்கும் தொகுப்பே எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் போட்டியில் முனைப்புடன் செயற்பட்டதற்கு நன்றி? போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்! வெகு விரைவில் உங்களைப்போன்ற பயனர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் விக்கியில் ஓர் புதிய பரிசு வெல்லக்கூடிய போட்டியொன்று வரும் ஏப்ரல் தொடக்கம் இடம்பெறவுள்ளமை தொடர்பிலும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். விக்கிக்கோப்பை போல அப்போட்டியிலும் கலந்துகொண்டு பரிசுகளை வெல்வதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ஓர் பெண் விக்கியில் முனைப்புடன் பங்களிப்பது பெருமை தருகின்ற விடயம், தங்களீன் முனைப்பான பங்களிப்புகளுக்கு இச்சிறியேனின் பாராட்டுகள், நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:26, 15 பெப்ரவரி 2017 (UTC)

Request[தொகு]

Hello.

Could you create the article en:Theatre in Azerbaijan in Tamil Wikipedia just like the article வியட்நாமிய அரங்கு which you created?

Thank you.

31.200.20.213 10:50, 16 பெப்ரவரி 2017 (UTC)

I will certinly do it please. Thanking you for the encouragement please.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:18, 16 பெப்ரவரி 2017 (UTC)

விக்கித்திட்டம்:15 - கருத்துக்கோரல்[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி முன்னெடுக்கப்படவுள்ள விக்கித்திட்டம்:15 பற்றிய உங்கள் கருத்துகள், ஆதரவு/நடுநிலைமை/எதிர்ப்பு ஆகியவற்றை இங்கு இடுங்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:33, 26 பெப்ரவரி 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Trophy.png பாராட்டுகள்
விக்கிக்கோப்பையில் முனைப்புடன் பங்குபற்றியதுடன் ,மட்டுமல்லாது இரண்டாம் பாகத்திலும் வெகுவாகப் பங்காற்றியிருந்தமைக்கு இப்பத்தக்கத்தை விட வேறு எதுவும் தங்களுக்கு ஈடாகாது. வாழ்த்துகள்! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:39, 2 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்----கி.மூர்த்தி (பேச்சு) 13:36, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Arulghsr (பேச்சு) 14:03, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 22:24, 3 மார்ச் 2017 (UTC)
வணக்கம் பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை ஐயா, மனம் நிறைந்த வாழ்த்துகள்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:29, 4 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துகள். 👍 விருப்பம் --AntanO 09:30, 4 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 04:05, 6 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:14, 6 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC)

வாழ்த்துகள்[தொகு]

இனிய மகளிர் தின வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:34, 8 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு[தொகு]

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

பகுப்புகள்[தொகு]

புதிய பகுப்புகள் உருவாக்கும் போது அதற்கொத்த வேறு பகுப்புகள் உள்ளனவா எனப் பார்த்து உருவாக்குங்கள். உதாரணமாக புவியியலாளர்கள் பகுப்பைத் திறந்தீர்கள் என்றால் அங்குள்ள உப பகுப்புகளைக் காணலாம். அதற்கொப்ப புதிய உப பகுப்புகளை ஆரம்பிக்கலாம். நாடு வாரியாக புவியியலாளர்கள் என்ற 2வது உப பகுப்பு (duplicate) தேவையற்றது. இலக்கணப் பிழையும் உள்ளது.--Kanags \உரையாடுக 22:40, 10 மார்ச் 2017 (UTC)

மீண்டும் விக்கித்தரவு பற்றி[தொகு]

நீங்கள் உருவாக்கும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்து விடுங்கள். கட்டுரை உருவாக்கியவுடனேயே இணைத்து விட்டால் நல்லது. காலதாமதம் செய்தால் மறந்து விடுவீர்கள்.--Kanags \உரையாடுக 03:02, 12 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1[தொகு]

OOjs UI icon bellOn-rtl-invert.svg


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:56, 12 மார்ச் 2017 (UTC)

மீண்டும் நான்[தொகு]

நான் செய்துள்ள இந்த மாற்றத்தைப் பாருங்கள். உங்கள் பல கட்டுரைகளில் இந்தப் பிழை உள்ளது. ஆங்கிலத்தில் இருந்து copy/paste செய்யும் போது இதனை ஏன் மாற்றுகிறீர்கள்?--Kanags \உரையாடுக 11:10, 13 மார்ச் 2017 (UTC)

நன்றி[தொகு]

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை உடனுக்குடன் விக்கித்தரவில் இணைத்தமைக்கு நன்றி.--Kanags \உரையாடுக 09:48, 16 மார்ச் 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Brilliant Idea Barnstar Hires.png சிறந்த யோசனைக்கான பதக்கம்
தாங்கள் உருசிய விக்கியில் காணப்படும் கட்டுரைகளை தமிழுக்குக் கொண்டுவருவது அரும்பணி, மிகவும் சிறந்த யோசனை, தங்கள் தொண்டை ஊக்கப்படுத்த இதைவிட வேறு எதுவும் அடியேனால் தர இயலாது. வாழ்த்துகள்! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:39, 16 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

குறுங்கட்டுரைகள்[தொகு]

பின்வரும் கட்டுரைகளைக் கவனியுங்கள்: ஆண்டர்சு இலெக்செல், பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ.--Kanags \உரையாடுக 03:00, 26 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:28, 10 ஏப்ரல் 2017 (UTC)

திருத்துங்கள்[தொகு]

ஜான் சுடேன்லி பிளாசுகெட் கட்டுரையில் நாட்கள் சில சிவப்பு எழுத்தில் வருகிறது. கவனித்துத் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 12:14, 19 ஏப்ரல் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு[தொகு]

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:22, 26 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது![தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
  • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
 • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
 • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
 • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:04, 30 ஏப்ரல் 2017 (UTC)

உலோ.செந்தமிழ்க்கோதை! நீங்கள் பட்டியலிட்டுள்ள கட்டுரைகளில் புறநிலை அண்டவியல் என்று ஒரு கட்டுரை உள்ளதே. அந்தக் கட்டுரை ஏற்கனவே த.வி. யில் உள்ளதா? இங்கேயும் காணவில்லையே. --கலை

த. வி.யில் இல்லை. நீக்கிவிடுகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 21:46, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்[தொகு]

வணக்கம்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்! ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அடஹ்ற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், :அத்தோடு சிறுகோள் எனும் கட்டுரை இன்னமும் முழுமையாக விரிவாக்கப்படல் வேண்டும், 26000 பைட்டைத் தாண்டவில்லையே,

அதோடு சிறுகோள் பட்டை போட்டிக்கு விரிவாக்க வேண்டிய கட்டுரைப்பட்டியலில் இல்லை அல்லவா?

ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:59, 2 மே 2017 (UTC)

கட்டுரையின் பைட்டுகளின் வரம்பை 32000 ஆகினால் இது 1000 கட்டுரைகளின் உச்ச எல்லைக்குக் கொண்டுபோகும். அதற்கு மேலான விரிவாக்கமும் கட்டுரை முழுமையடைய நிறைவுற தேவைப்படலாம். இவ்விரிவாக்கம் பின்னர் செய்துகொள்ளலாம்.கலை, சிறீகீரன் உக்கங்களினை அன்புடன் ஏற்கிறேன், நன்றிகள்!. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:48, 6 மே 2017 (UTC)

மகிழ்ச்சி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:20, 6 மே 2017 (UTC)
26,000 பைட்டுக்கு மேல் கட்டுரையை விரிவாக்கினால் போதும். நடுவர்களினால் போட்டிக்காலத்தில் வழங்கும் ஆலோசனைகளையும், பின்பற்றுங்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:37, 6 மே 2017 (UTC)

போட்டிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தல்[தொகு]

தயவுசெய்து நீங்கள் விரிவாக்கும் கட்டுரைக்கு உங்களால் 6000 பைட்டுக்களுக்கு மேல் சேர்க்கப்பட்டும், கட்டுரையின் மொத்த அளவு 26000 பைட்டுக்களைத் தாண்டிய பின்னரும், அந்தக் கட்டுரையை போட்டிக்குச் சமர்ப்பியுங்கள். சிறுகோள் கட்டுரை 26000 பைட்டுக்களைத் தாண்டவில்லை. நானும் எனக்கு நேரம் கிடைக்கும்போது, அந்தக் கட்டுரை விரிவாக்கத்தில் உதவுகிறேன். நன்றி. --கலை

சிறுகோள் கட்டுரை போட்டிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்! இது போல் பல கட்டுரைகளை விரிவாக்கி போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:13, 6 மே 2017 (UTC)

பெரு வெடிப்புக் கோட்பாடு கட்டுரையை சமர்ப்பிக்கலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:38, 6 மே 2017 (UTC)

கோள் கட்டுரையை சமர்ப்பிக்கலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:14, 10 மே 2017 (UTC)

கவனிக்க[தொகு]

ஜான் எர்ழ்செல் கட்டுரையை முடிந்தால் திருத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:20, 10 மே 2017 (UTC)

Kanags சில திருத்தங்கள் செய்துள்ளேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:47, 10 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : முற்பதிவு[தொகு]

இங்கு 12 கட்டுரைகளையே முற்பதிவு செய்யலாம், நீங்கள் 15 செய்துள்ளீர்கள். அருள்கூர்ந்து 3ஐ அகற்றுங்கள். ஒரு நாளுக்குள் அகற்றாவிடின் இறுதி மூன்றையும் நாமே அகற்றுவோம். போட்டியில் முனைப்போடு பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகள். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:12, 16 மே 2017 (UTC)

வணக்கம் உலோ.செந்தமிழ்க்கோதை! எனக்குப் பிடித்த பல நல்ல தலைப்புக்களைத் தெரிவுசெய்து போட்டிக்காக முற்பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றிகள். Face-smile.svg நீங்கள் 12 கட்டுரைகளை முதலில் பதிவு செய்துவிட்டு, ஒவ்வொரு கட்டுரையாகச் சமர்ப்பிக்கும்போது, புதிதாக அடுத்த கட்டுரையை உங்கள் முற்பதிவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். --கலை (பேச்சு) 16:19, 16 மே 2017 (UTC)
உலோ.செந்தமிழ்க்கோதை! நீங்கள் விரிவாக்கம் செய்த அறிவியல் கட்டுரையை போட்டிக்குச் சமர்ப்பியுங்கள். முற்பதிவு செய்திருக்கும் ஒரு கட்டுரையை தவிர்க்கலாமே தவிர, அதனை இன்னொருவர் விரிவாக்கம் செய்வது தடுக்கப்படவில்லை. எனவே நீங்கள் அதனைச் சமர்ப்பிக்கலாம். மயூரநாதன் நிச்சயம் புரிந்துகொள்வார்.--கலை (பேச்சு) 16:13, 25 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
 • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
 • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
 • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:00, 21 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

 • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
 • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
 • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
 • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
 • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:34, 31 மே 2017 (UTC)
வணக்கம் உலோ.செந்தமிழ்க்கோதை! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் (மின்தேக்கி, உயிரித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள்

  நானோ தொழில்நுட்பம்
  மின்னணுவியல்
  உள் எரி பொறி
  நீர்ப்பாசனம்
  அச்சிடல்
  திரிதடையம்
  இருமுனையம்
  மின்தூண்டி
  மின்சாரம்

ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். இதில் ஏதாவது மாற்றம் தேவையெனில், தயவுசெய்து கூறுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 21:40, 31 மே 2017 (UT

மின்தேக்கிக்கு மாற்றாக உள் எரி பொறியைப் பதிவு செய்யவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 23:47, 31 மே 2017 (UTC)

Yes check.svgY ஆயிற்று--கலை (பேச்சு) 05:02, 1 சூன் 2017 (UTC)


வணக்கம்! உங்களுக்காக 01.06.17 இல் முற்பதிவு செய்யப்பட்ட மின்னணுவியல் கட்டுரை 10 நாட்களாகத் தொகுக்கப்படாத காரணத்தால் முற்பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 10 நாட்களுக்கு, ஏனைய பயனர்கள் விரும்பின் அந்தக் கட்டுரையை முற்பதிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 21.06.17 இற்குள், வேறு எவரும் இந்தக் கட்டுரையை முற்பதிவு செய்யாவிடின், 21.06.17 இற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் இங்கே குறிப்பிட்ட நாளில் (தொடர்ந்துவரும் 10 நாட்களுக்கு) முற்பதிவு செய்யலாம். உங்களால் முன்னர் முற்பதிவு செய்யப்பட்டிருந்த நீர்ப்பாசனம், அச்சிடல், திரிதடையம் ஆகிய கட்டுரைகள் இன்று முதல் 10 நாட்களுக்கு உங்களுக்காக முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீங்கள் முன்னர் முற்பதிவு செய்த இருமுனையம், மின்தூண்டி, மின்சாரம் ஆகிய கட்டுரைகளும் பட்டியலில் உள்ளன. முற்பதிவின்போது, ஒரு தடவையில் மூன்று கட்டுரைகளுக்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 11:02, 11 சூன் 2017 (UTC)

தகவல் தொழில்நுட்பம்[தொகு]

இக்கட்டுரையில் பல தேவையற்ற ஆங்கில உள்ளடக்கங்களை நீக்கியுள்ளேன். இன்னும் விரிவாக்குங்கள். 26,000 பைட்டைத் தாண்ட வேண்டும். ஆங்கில உள்ளடக்கங்கள், நூற்பட்டியல்கள், உசாத்துணைகளை கொடுக்காதீர்கள் அதற்குத் தானே ஆங்கிலவிக்கி இருக்கின்றது. தமிழில் இருந்தால் கொடுங்கள். இல்லையாயின் இரண்டு மூன்று ஆங்கில உசாத்துணை நூல்களையோ நூற்பட்டியலையோ கொடுத்தால் போதுமானது. தொடர்ந்து சிறப்பாகப் பங்குபற்றி போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:14, 2 சூன் 2017 (UTC)

 • உடனடியாகக் தகவல் தொழில்நுட்பம் கட்டுரையை மேலும் விரிவாக்கி அமைத்தமைக்கு பாராட்டுக்கள். தற்போது கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 • @Shriheeran: கட்டுரையைப் பார்த்து தற்போது ஏற்றுக்கொள்ளலாம்.
 • நீங்கள் கட்டுரை விரிவாக்கி முடித்த நிலையில், மேற்கோள்களில் அனேகமானவை பிழை காட்டிக்கொண்டு இருந்ததை அவதானித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அவற்றை ஆங்கிலக் கட்டுரையில் ஒவ்வொன்றாய்த் தேடிப்போட வேண்டி இருந்தது. இதனை நீங்கள் கட்டுரை விரிவாக்கத்தின்போதே செய்வது இலகுவாக இருந்திருக்கும். பல மேற்கோள்களிற்கு நீங்கள் குறிச்சொற்களை மட்டுமே கொடுத்திருந்தீர்கள். அவற்றிற்கான உரையைக் கொடுக்கவில்லை. ஆங்கிலக் கட்டுரையிலேயே அந்த உரைகளைத் தேடி எடுத்து (ஆங்கிலக் கட்டுரையின் தொகுப்புப் பெட்டிக்குப்போய், நூலாசிரியர், பதிப்பாசிரியர் பெயர்களைத் தேடும்போது, உரையுடன் கூடிய பகுதி கிடைக்கும்) இணைத்திருந்தால் இலகுவாக இருந்திருக்கும்.
--கலை (பேச்சு) 21:59, 3 சூன் 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --குறும்பன் (பேச்சு) 20:28, 3 சூன் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--கலை (பேச்சு) 21:49, 3 சூன் 2017 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:02, 4 சூன் 2017 (UTC)
👍 விருப்பம். வாழ்த்துகளும் பாராட்டுகளும் --Booradleyp1 (பேச்சு) 02:40, 4 சூன் 2017 (UTC)
👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:21, 4 சூன் 2017 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துக்கள்!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:51, 4 சூன் 2017 (UTC)
👍 விருப்பம்--இரா. பாலா (பேச்சு) 16:00, 4 சூன் 2017 (UTC)

துப்புரவுப் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

சென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 7 சூன் 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை[தொகு]

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:35, 20 சூன் 2017 (UTC)

சுற்றுக்காவல் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம்.

குறிப்பு: இது அனைத்து சுற்றுக் காவலர்களுக்கும் அனுப்பும் பொதுவான செய்தி. ஏற்கனவே நீங்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சி.

அண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய உங்கள் உதவி தேவை. இது போன்ற பணிகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு இன்னும் கூடுதல் பொறுப்புகள்/அணுக்கங்களைத் தங்களுக்கு அளிக்க முன்வரும் போது மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுக்காவல் பணியில் ஏதேனும் ஐயம் என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. - இரவி, சூன் 26. மாலை 06:00 இந்திய நேரம்.

போட்டிக் கட்டுரை தொடர்பாக[தொகு]

 • புதைபடிவ எரிமம் கட்டுரையில் த.வி. யில் இல்லாத வார்ப்புருக்கள் உரையாடலின் இடையில் இடப்பட்டிருந்ததால், அவை வழுக்களாகச் சிவப்பில் இருந்தது. அவ்வாறான இடங்களில், அத்தகைய வார்ப்புருக்களைத் தவிர்த்துவிட்டு வேறு வடிவத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன். கட்டுரையில் திருத்தத்தைப் பாருங்கள்.
 • இன்னுமொரு வேண்டுகோள். நீங்கள் கட்டுரையை விரிவாக்கம் செய்யும்போது, முதலே எழுதப்பட்டிருக்கும் உரையையும் திருத்தி விட்டீர்கள் என்றால் சிறப்பாக இருக்கும்.
 • கட்டுரை முற்பதிவின்போது, குறிப்பிட்ட நாளின் கீழ் முற்பதிவைச் செய்யுங்கள். நன்றி.

--கலை (பேச்சு) 22:13, 26 சூன் 2017 (UTC)

உலோ.செந்தமிழ்க்கோதை! திருகாணி கட்டுரையில் ஆங்கிலத்தில் கொடுத்துள்ள உரையையும், தமிழாக்கம் செய்து, தமிழிலேயே எவ்வாறு விவரிக்கப்படுகிறது எனக் கொடுக்கலாம் என நினைக்கிறேன். ஆங்கில உரையை நீக்கிவிடுவது நல்லது. மேலும் அலகுகளைக் கொடுக்கும்போது, ஆ.வி. யிலுள்ள வார்ப்புருவிற்கான இணைப்பையே பயன்படுத்துவதால், அது த.வி. யில் சிவப்பிணைப்பாக மட்டுமே தோன்றுகிறது. அவற்றை எளிமையாக அலகுகளாகவே கொடுக்கலாம். முன்னரும் நீங்கள் விரிவாக்கிய ஒரு கட்டுரையில் அவ்வாறு இருந்து திருத்தினேன். திருகாணி கட்டுரையில் தற்போது மாற்றியுள்ளேன். --கலை (பேச்சு) 18:12, 3 சூலை 2017 (UTC)
உலோ.செந்தமிழ்க்கோதை! இயந்திரம் கட்டுரையிலுள்ள மேற்கோள்கள் பகுதியில் இரு மேற்கோள்கள் சிவப்பு இணைப்புக்களாக இருப்பதைத் திருத்து விடுவீர்களா? --கலை (பேச்சு) 12:45, 8 சூலை 2017 (UTC)

இயந்திரம் கட்டுரையின் சிவப்பு மேற்கோள்களை நீக்கிவிட்டேன், கட்டுரையை முழுமையாக்கும்போது அவற்றை வேண்டிய இடத்தில் இணைத்துக்கொள்ளலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:47, 8 சூலை 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Compass Barnstar Hires.png சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
மூன்று நாட்களும் சென்னை ஆசிரியர்களுக்குத் தக்க வழிகாட்டி ஊக்குவித்தமைக்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன். தங்களைப் போன்ற அனுபவம் மிக்க பயனர்களின் வழிகாட்டல் அவர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைந்திருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 06:08, 8 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

கொல்லைப்படுத்தல் கட்டுரை[தொகு]

உலோ.செந்தமிழ்க்கோதை! நீங்கள் போட்டிக்கட்டுரைக்காக விரிவாக்கிய கொல்லைப்படுத்தல் கட்டுரையில் மேற்கோளில் காட்டப்படும் வழுக்களைத் தயவுசெய்து திருத்திவிட முடியுமா?--கலை (பேச்சு) 17:32, 20 சூலை 2017 (UTC)

கட்டுரையை முழுமைபடுத்தி தான் வழுக்களை எடுக்கமுடியும் போலுள்ளது. திருத்திப் பார்த்தேன் புது வழுக்கள் தாம் தோன்றுகின்றன. கட்டுரையை வேண்டுமானால் முழுமைப்படுத்துகிறேன். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:44, 21 சூலை 2017 (UTC)

உலோ.செந்தமிழ்க்கோதை! வழுவை நீக்குவதற்காகக் கட்டுரையை முழுமைப்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் தமிழாக்கம் செய்த ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிட்ட மேற்கோள் சுருக்கத்துக்குரிய விரிவாக்கம் வேறொரு இடத்தில் இருக்குமல்லவா. அதனைத் தேடி எடுத்து, பிரதி செய்து, நீங்கள் தமிழ்க் கட்டுரையில் கொடுத்த சுருக்கத்திற்காகப் பிரதியீடு செய்தால் போதும். உங்களுடைய சில கட்டுரைகளில் செய்திருக்கிறேன். பார்த்தால் தெரியும். --கலை (பேச்சு) 14:49, 21 சூலை 2017 (UTC)
உலோ.செந்தமிழ்க்கோதை! இன்றுதான் பொறுமையாக வழு என்ன என்பதைப் பார்த்தேன். வழு காட்டும் மேற்கோள்கள் உங்களால் கட்டுரையில் இணைக்கப்படவில்லை. அதாவது நீங்கள் விரிவாக்கிய / தமிழாக்கம் செய்த பகுதியில் அவை இல்லை. ஆனால் மேற்கோள்கள் பகுதியில் மட்டுமே மேற்கோள்களாக இணைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலக் கட்டுரையிலிருந்து அப்படியே பிரதி செய்து போட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். எனவே அந்தப் பகுதியை விரிவாக்கம் செய்யப்படாவிடின் வழு காட்டும். நீங்கள் தொடர்ந்து விரிவாக்கம் செய்தால் வழுக்கள் நீங்கிவிடும். அப்படியில்லாவிட்டால், நீங்கள் விரிவாக்கிய பகுதியில் உள்ள மேற்கோள்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஏனைய வழுக்கள் காட்டும் மேற்கோள்களை மேற்கோள் பகுதியில் இருந்து நீக்கிவிடலாம். நன்றி. --கலை (பேச்சு) 21:43, 22 சூலை 2017 (UTC)
கட்டுரைக்குள் இருந்த 2 உரையில்லாத மேற்கோள் பெயர்களையும் மற்ற கட்டுரைக்குள் பயன்படுத்தாத அடியில் இருந்த மேற்கோள்களையும் நீக்கிவிட்டேன். தங்கள் குறிப்புகளைப் பார்க்கும் முன்பே நீக்கிவிட்டேன். நன்றிகளுடன், உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 01:12, 23 சூலை 2017 (UTC)

உதவி[தொகு]

உயிரியல் வானிலையியல் என்ற கட்டுரையை முடிந்தால் திருத்தித் தாருங்கள். இதற்கு இணையான ஆங்கிலச் சொல் என்ன என்பதையும் குறிப்பிடுங்கள். (Bioclimatology, Biometeorology?). நன்றி,--Kanags \உரையாடுக 07:24, 22 சூலை 2017 (UTC)

உரிய நூலைத் தேடிப் பிடித்து கட்டுரை துப்புரவு செய்கிறேன். முடிதால் மேலும் விரிவாக்குவேன்.அன்புடன், உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 01:15, 23 சூலை 2017 (UTC)

உயிரியல் வானிலையியல் என்ற கட்டுரையைத் துப்புரவு செய்துள்ளேன். இது மேலும் விரிவாக்கப்படும். உயிரியல் காலநிலையியல் எனும் தனிக்கட்டுரையும் எழுத முயல்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 00:19, 25 சூலை 2017 (UTC)

மிக்க நன்றி ஐயா.--Kanags \உரையாடுக 08:57, 26 சூலை 2017 (UTC)

போட்டிக் கட்டுரைகள் தொடர்பில்[தொகு]

வலிகுறை இடைவினை கட்டுரையில் முற்பதிவு வார்ப்புருவையும் சேர்த்தே 26000 பைட்டுக்கள் வந்திருந்தது. அதனை நீக்கியதும், பைட்டள்வு குறைந்துவிட்டது. தயவுசெய்து இன்னும் சிறிது விரிவாக்கி விடுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 13:50, 7 ஆகத்து 2017 (UTC)

மேலும் ஆயிரம் பைட்டளவுக்கு விரிவாக்கிவிட்டேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:24, 7 ஆகத்து 2017 (UTC)

 • வலிகுறை இடைவினை கட்டுரையை மேலும் விரிவாக்கியமைக்கு நன்றி. கட்டுரை தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.@Dineshkumar Ponnusamy:.
 • பீரங்கி வண்டி கட்டுரையில் மேற்கோள் வழு காட்டியது. காரணம் குறிப்பிட்ட மேற்கோளுக்கான உரை கொடுக்கப்படவில்லை. குறிச்சொல் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. அந்த குறிச்சொல்லுக்கான உரை ஆங்கிலக் கட்டுரையில், நீங்கள் விரிவாக்கம் செய்யாத பகுதியில் இருந்தது. அதனைத் தேடி எடுத்துப் போட்டுள்ளேன். மாற்றங்களைப் பாருங்கள். எனவே விரிவாக்கத்தின்போது, ஒரு ஆங்கிலக் கட்டுரையைத் தமிழாக்கம் செய்வதாயின், முழுமையாக தமிழாக்கம் செய்யாவிட்டால், மேற்கோள்களுக்குரிய உரைகளை விரிவாக்கம் செய்யப்படாத பகுதியிலிருந்து எடுத்துப் போட்டால் நன்று. அவ்வாறு செய்கையில் மேற்கோள்களில் வழு காட்டாமல் பார்த்துக்கொள்ளலாம். நன்றி. --கலை (பேச்சு) 11:48, 8 ஆகத்து 2017 (UTC)

நன்றிகள்!இனிக் கவனத்தில் கொள்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:08, 8 ஆகத்து 2017 (UTC)

வணக்கம்! ஒரு தடவையில் 3 கட்டுரைகள் மட்டுமே முற்பதிவு செய்யலாம் என்பதனால், மேலதிகமாக இருந்தவற்றை நீக்கியிருக்கிறேன். --கலை (பேச்சு) 16:55, 20 ஆகத்து 2017 (UTC)
தயவுசெய்து கட்டுரை விரிவாக்கத்தின்போது, சொற்களுக்கிடையில் இடைவெளி, எழுத்துப்பிழைகள் போன்ற சிறிய வழுக்களையும் கட்டுரையைச் சமர்ப்பிக்க முன்னர் திருத்தினால் கட்டுரை முழுமையடையும். நன்றி. --கலை (பேச்சு) 15:33, 30 ஆகத்து 2017 (UTC)

அதிகளவில் சிவப்பிணைப்புக்கள்[தொகு]

உலோ.செந்தமிழ்க்கோதை! உங்களுடைய சில கட்டுரைகளில் மிக அதிகளவில் சிவப்பு இணைப்புக்கள் உள்ளன.

 • அவை பொதுவாக ஆங்கிலக் கட்டுரையிலுள்ள அனைத்து உள்ளிணைப்புக்களையும் கொடுக்கும்போது, அவற்றிற்கான தமிழ்க் கட்டுரைகள் இல்லாமையால் ஏற்படுகின்றன. ஆங்கிலக் கட்டுரையிலுள்ள அனைத்து உள்ளிணைப்புக்களையும் கொடுக்காமல், முக்கியமானவற்றிற்கு மட்டும் உள்ளிணைப்புக்களைக் கொடுப்பதனால் சிவப்பிணைப்புக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்பது எனது கருத்து. அதிகளவில் சிவப்பிணைப்புக்கள் இருக்கையில் பக்கம் பார்ப்பதற்கு நன்றாக இல்லை.
 • சில உள்ளிணைப்புக்கள் சரியாகக் கொடுக்கப்படாமையாலும் இவ்வாறான சிவப்பிணைப்புக்கள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட ஆங்கிலச் சொல்லிற்குரிய சரியான தமிழ்ப் பக்கத்தைச் சரிபார்த்துவிட்டு உள்ளிணைப்பை இட்டால் இந்த வழுவைத் தவிர்க்கலாம். இது முக்கியம் என நினைக்கிறேன். காரணம் சரியான பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படாவிட்டால், உள்ளிணைப்புக் கொடுப்பது பயனற்றுப் போய்விடுமல்லவா?. --கலை (பேச்சு) 11:42, 16 செப்டம்பர் 2017 (UTC)

தங்களது குறிப்புகளை கவனத்தில் கொண்டு சிவப்பிணைப்புகளைக் குறைக்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:40, 18 செப்டம்பர் 2017 (UTC)

@உலோ.செந்தமிழ்க்கோதை: திசைவேகம் கட்டுரையில் சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அந்தக் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உள்ள கருத்துக்களைப் பார்த்து, தயவுசெய்து தேவையான மாற்றங்களைச் செய்துவிட முடியுமா?--கலை (பேச்சு) 18:03, 20 செப்டம்பர் 2017 (UTC)

கருத்துகளுக்கான எனது விளக்கத்தைத் தந்துவிட்டு, பொது ஒத்திசைவுக்கேற்ப, கட்டுரையை விரைந்து மாற்றியமைக்கிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 19:20, 21 செப்டம்பர் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: இறுதிக்கட்டப் பரபரப்பு[தொகு]

 • போட்டி நிறைவுபெற இன்னும் சற்று நாட்களே உள்ளன. தற்போது மூன்றாம் நிலையில் தாங்கள் உள்ளீர்கள். இன்னும் சில கட்டுரைகளை விரிவாக்கினால் இரண்டாவதென்ன, முதலாவதாகவே வந்துவிடலாம். உங்களால் முடியும்! தொடர்ந்து சிறப்புறப் பங்களித்தால் வெற்றி நிச்சயம். சளைக்காதீர்கள். உங்களால் முடியுமான கட்டுரைகளை விரிவாக்கி சிறப்புறப் போட்டியில் பங்களிக்கலாம்! வெற்றிபெற வாழ்த்துகள். நன்றி

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:59, 18 அக்டோபர் 2017 (UTC)

வணக்கம் உலோ.செந்தமிழ்க்கோதை! நீங்கள் போட்டிக் கட்டுரைகளில் 8 திருத்தப்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளும்படியும் இன்று இட்டிருந்த செய்தி பார்த்தேன். அவற்றில் தொலைபேசி தவிர்ந்த ஏனைய 7 கட்டுரைகள் பற்றி, அதே பக்கத்தில் ஏற்கனவே உரையாடி ஏற்றுக்கொண்டோமே. நீங்கள் உரையாடலையும், முடிவுகளில் செய்யப்பட்ட மாற்றங்களையும் கவனிக்கவில்லையா தெரியவில்லை. தொலைபேசி கட்டுரையும் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நன்றி. --கலை (பேச்சு) 18:08, 25 அக்டோபர் 2017 (UTC)

நன்றிகளுடன்,உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:19, 26 அக்டோபர் 2017 (UTC)

வணக்கம் உலோ.செந்தமிழ்க்கோதை! கல்வி என்ற கட்டுரை ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்டு 26000 பைட்டுக்களைத் தாண்டியுள்ளது. குறிப்பிட்ட போட்டியாளர், குறிப்பிட்ட திருத்தங்களைச் செய்த பின்னர் போட்டிக் கட்டுரைகள் பட்டியலில் நிறைவுற்றது என்ற வார்ப்புரு இடப்படவில்லை என நினைக்கிறேன். எனவே போட்டிக்காக அந்தக் கட்டுரையைத் திருத்த வேண்டாம். நன்றி. --கலை (பேச்சு) 19:18, 30 அக்டோபர் 2017 (UTC)
வணக்கம் உலோ.செந்தமிழ்க்கோதை! போர்த்துக்கேய மொழி கட்டுரையை, நீங்கள் முற்பதிவு செய்வதற்கு முன்பிருந்தே, தியாகு கணேஷ் அவர்கள் தொகுக்கப்படுகிறது என்ற வார்ப்புருவை இட்டுவிட்டு தொகுத்துக்கொண்டிருந்திருக்கிறார். தற்போது சமர்ப்பித்துள்ளார். நன்றி.--கலை (பேச்சு) 19:27, 31 அக்டோபர் 2017 (UTC)

எனது பங்களிப்புகளில் தொகுப்பு எண்ணிக்கையும் பிற விக்கிப் பங்களிப்புகளும் நீக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க முடியுமா? கட்டுரைப் பட்டியல் மட்டுமே வருகிறது. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:10, 7 நவம்பர் 2017 (UTC)

ஆசிய மாதம், 2017[தொகு]

WAM 2017 Banner-ta.png

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
 • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
 • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
 • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
 • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
 • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
 • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
 • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:12, 14 நவம்பர் 2017 (UTC)

STOP[தொகு]

ஒரே பகுப்புகளை வெவ்வேறு பெயர்களில் தொடங்குவதை அருள்கூர்ந்து நிறுத்துங்கள். நீங்கள் உருவாக்க விரும்பும் பகுப்புகள் ஏற்கனவே உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அனேகமான பகுப்புகள் ஆங்கில விக்கிப் பக்கங்களுக்கு இணைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் இங்குள்ள பகுப்புகளை அறிந்து கொள்ள முடியும். அல்லது தேடுதல் மூலம் அறிந்து கொள்ளலாம்.--Kanags (பேச்சு) 00:02, 27 திசம்பர் 2017 (UTC)

நன்றி! கவனித்துக்கொள்கிறேன்.அக்கறையுடன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 01:23, 27 திசம்பர் 2017 (UTC)

WAM Address Collection[தொகு]

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via Google form or email me about that on erick@asianmonth.wiki before the end of Janauary, 2018. The Wikimedia Asian Month team only has access to this form, and we will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. We apologize for the delay in sending this form to you, this year we will make sure that you will receive your postcard from WAM. If you've not received a postcard from last year's WAM, Please let us know. All ambassadors will receive an electronic certificate from the team. Be sure to fill out your email if you are enlisted Ambassadors list.

Best, Erick Guan (talk)

WAM Address Collection - 1st reminder[தொகு]

Hi there. This is a reminder to fill the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your postal mailing address via this Google form. This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems in accessing the google form, you can use Email This User to send your address to my Email.

If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let us know at WAM talk page so I will not keep sending reminders to you. Best, Sailesh Patnaik

Confusion in the previous message- WAM[தொகு]

Hello again, I believe the earlier message has created some confusion. If you have already submitted the details in the Google form, it has been accepted, you don't need to submit it again. The earlier reminder is for those who haven't yet submitted their Google form or if they any alternate way to provide their address. I apologize for creating the confusion. Thanks-Sailesh Patnaik

விக்கிப்பீடியாவின் ஆசிய மாத போட்டியில் பங்கேற்றமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.. இங்கு தங்களது விவரங்களை பதிவு செய்யவும். நன்றி. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 01:57, 26 சனவரி 2018 (UTC)

இப்படிவத்தை ஏற்கெனவே அனுப்பிவிட்டேன். படிவத்தைக் கிளிக் செய்தால் இப்படிவம் ஏற்கெனவே பெறப்பட்டதாக அறிவிக்கிறது. நன்றிகளுடன்,உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:20, 27 சனவரி 2018 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:29, 18 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு[தொகு]

அன்புள்ள செந்தமிழ்க்கோதை,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 09:37, 10 மார்ச் 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 16:52, 18 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - புதிய தலைப்புகள் அறிவிப்பு, தமிழ் இரண்டாம் இடத்தில்![தொகு]

வணக்கம், செந்தமிழ்க்கோதை. வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. இப்போட்டி 45 நாட்களைக் கடந்து பாதி நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்தைச் சேர்ந்த 40 விக்கிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நேற்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம்.

குறிப்பாக,

எனவே, தொடர்ந்து உற்சாகத்துடன் போட்டியில் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:11, 16 ஏப்ரல் 2018 (UTC)