பயனர் பேச்சு:Thamizhpparithi Maari
வாருங்கள்!
வாருங்கள், Thamizhpparithi Maari, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:35, 25 அக்டோபர் 2011 (UTC)
சேலம் அருங்காட்சியகம்
[தொகு]தமிழ்ப்பரிதி மாரி, தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தங்கள் வரவு நல்வரவாகுக ! நீங்கள் வடித்துள்ள சேலம் அருங்காட்சியகம் மிக அழகாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகள் !! அடுத்த கட்டமாக நீங்கள் விக்கியாக்கம் எனப்படும் விக்கிப்பீடியாவின் வடிவமைப்பிற்கு ஏற்றவாறு தகவல் வழங்க இந்தக் கட்டுரையில் எனது மாற்றங்களை பார்க்குமாறு வேண்டுகிறேன். அவற்றை இங்கே பார்க்கலாம்.
- முதல் பத்தியில் சுருக்கமாக கட்டுரையின் உள்ளடக்கத்தைக் குறித்து தருவது வழமையாகும். இதில் கட்டுரைத்தலைப்பு தடித்து இருப்பதும் ஆங்கிலம் அல்லது பிறமொழி வழக்கிருந்தால் தெளிவிற்காக தருவதும் (இந்தக் கட்டுரையில் தேவையில்லை) மரபாகும். இவை தேடல்பொறிகளில் கட்டுரை உள்ளடக்கத்தைக் கண்டறிய உதவுகின்றன.
- அடுத்து கட்டுரையில் வரும் சொற்கள் தமிழ் விக்கியில் ஏற்கெனவே கட்டுரைகளாக உள்ளனவா என்று தேடி அவற்றை உள்ளிணைப்புகளாகத் தருதல் வேண்டும்.
- அடுத்து இடம்பெறும் கூற்றுகளுக்கு நம்பகமான வளங்களிலிருந்து மேற்கோள்கள் தரப்படுதல் வேண்டும். காட்டாக சேலம் அருங்காட்சியகம் நிறுவப்பட்ட நாளிற்கு ஏதேனும் உசாத்துணை இருப்பின் அவற்றை இட வேண்டும்.
- கட்டுரையை மேலும் வளமாக்க வெளியிணைப்புகள் (இங்கு அதிகாரபூர்வ வலைத்தளம் போன்றன) கொடுத்தல் வேண்டும்.
உங்கள் பங்களிப்பு மேன்மேலும் வளர்ந்தோங்க வாழ்த்துகள் !! --மணியன் 13:41, 29 சனவரி 2012 (UTC)
அன்பு நண்பருக்கு தோழமை வணக்கம். கட்டுரை எழுதப்பெற்று சில மணித்துளிகளில் முழு ஈடுபாட்டோடு நீங்கள் காட்டிய ஈடுபாடு எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது,ஊக்குவிக்கிறது இக்கட்டுரை தொடர்பாக வரலாற்று ஆவணங்களைத்திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன்.
யாம் விக்கி பொதுவில் பங்களித்துள்ள ஒளிப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றினைப் பார்வையிடவும் விக்கி ஆக்கங்களுக்குப் பயன்படுத்தவும் அன்புடன் விழைகிறேன். தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி.
தோழமையுடன் மா. தமிழ்ப்பரிதி 9750933101 tparithi@gmail.com
பாராட்டு
[தொகு]விக்கிமீடியா காமன்சில் தங்கள் பங்களிப்புகள் கண்டு வியந்தேன். தமிழர், தமிழக வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தியுள்ளீர்கள். என்னுடைய பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள்: ஒரே பொருள் குறித்து பல்வேறு ஒளிப்படங்களை எடுக்கும் போது, அவற்றில் மிகச்சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பதிவேற்றலாம். எடுத்துக்காட்டு: நீல வானம், கோழி தொடர்பாகத் தாங்கள் பதிவேற்றியுள்ள படங்கள். நன்றி--இரவி 23:36, 10 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி
[தொகு]தோழமை வணக்கம். மிக்க நன்றி, தங்களின் வேண்டுகோளை ஏற்கிறேன். இனி, அவ்வாறே எம் செயல்பாடமையும். அன்பன், தமிழ்ப்பரிதி மாரி
வாழ்த்துக்கள்
[தொகு]தமிழ் விக்கி ஊடகப் போட்டி பரிசு | |
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் நீங்கள் தொடர் பங்களிப்பாளர் பரிசு பெற்றுள்ளீர்கள். |
பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை உங்களுக்கு அனுப்பி வைக்கப் பின்வரும் விவரங்களை tamil.wikipedia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்:
1) சான்றிதழில் இடம் பெற வேண்டிய பெயர் (தமிழில்)
2) முழு அஞ்சல் முகவரி
3) வசிக்கும் நாடு
--சோடாபாட்டில்உரையாடுக 20:34, 29 மார்ச் 2012 (UTC)
- தங்களின் தொடர் பங்களிப்பே எனக்கு ஒரு உந்துதலாக இருந்தது. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:14, 30 மார்ச் 2012 (UTC)
- வணக்கம் தாங்கள் ஊடகப் போட்டியில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்கள் --Iramuthusamy (பேச்சு) 15:04, 30 மார்ச் 2012 (UTC)
- விக்கி ஊடகப் போட்டியில் பரிசு பெற்ற தங்களுக்கு எனது வாழ்த்துகள். நன்றி.--Kanags \உரையாடுக 21:28, 30 மார்ச் 2012 (UTC)
- ஊடகப்போட்டியில் தொடர் பங்களிப்பாளர் பரிசைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். உங்கள் பங்களிப்புக்கள் தொடரட்டும்.--கலை (பேச்சு) 22:39, 30 மார்ச் 2012 (UTC)
- தாங்கள் ஊடகப்போட்டியில் தொடர் பங்களிப்பாளர் பரிசு பெற்றது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:05, 31 மார்ச் 2012 (UTC)
உங்களுக்குத் தெரியுமா திட்டம்
[தொகு]நீங்கள் பங்களித்த உதகமண்டலம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 2, 2012 அன்று வெளியானது. |
ஆவணப்படுத்தல்
[தொகு]நீங்கள் தமிழர்கள் பற்றிய பொருட்களை ஆவணப்படுத்துவது கண்டு மகிழ்ச்சி. நீங்கள் பல்கலைக்கழக ஆசிரியர் என்பதால் உங்களிடம் சில விசயங்களைக் கேட்கிறேன்.
- பாண்டியர் காலத்துப் போர்முறைகள் என்ற புத்தகத்தை நான் நெடுநாட்கள் தேடி வருகிறேன். அதை நீங்கள் எங்கும் கண்டதுண்டா. அப்படி இருப்பின் அப்புத்தகத்தின் முழுத்தகவல்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
- நீங்கள் அருங்காட்சியகங்களில் இருந்து புகைப்படம் எடுக்க அனுமதி எப்படி வாங்கினீர்கள். நான் குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம் அடுத்த வாரம் செல்வதாக உத்தேசம். அதனால் கேட்கிறேன்.
- தமிழ் பல்கலைக்கழகங்களின் இணைய மின் நூலகங்களின் இணைப்பை (யூ ஆர் எல்) அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இது எதனால்?
- இந்த இணைப்பிலுள்ள தர்மபுரி தொல்லியல் அருங்காட்சியகமும் நீங்கள் எழுதிய கிர்ட்டினகிரி அருங்காட்சியகமும் ஒன்றா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:30, 21 மே 2012 (UTC)
படம் பற்றிய ஐயம்
[தொகு]இப்படம் ஷெனாய் என்பதும் முகவீணை என்பதும் ஒன்றா?மயக்கமுள்ளது.பேச்சு:முகவீணை என்பதனையும் காணவும்--த♥ உழவன் +உரை.. 02:37, 23 சூலை 2012 (UTC)
பிறந்த நாட்குழுமம்
[தொகு]--மதனாகரன் (பேச்சு) 10:36, 25 சூலை 2012 (UTC)
File:A photo on power loom.JPG
[தொகு]I have nominated this image for using in India page in English Wikipedia. It will be helpful if could provide details on where this image was taken. --Anbu121 (பேச்சு) 05:16, 16 செப்டெம்பர் 2012 (UTC) I have captured this photograph is Nallanampatty. In this village most of the people involved in powerloom based jobs. Here the making of Saree, Cloths and Chudithar is very famous.
Photo description
[தொகு]The person in the photo is Mr. Arunasalam. Location: Nallanampatty village, Idaingkanasaalai panchayat, Sankari taluk, Salem district.--Thamizhpparithi Maari (பேச்சு) 04:29, 18 செப்டெம்பர் 2012 (UTC)
- அவரிடம் இதுபற்றி குறிப்பிட்டுள்ளேன்.பணியடர்வில் இருக்கிறாரென்றே எண்ணுகிறேன்.--த♥ உழவன் +உரை.. 16:02, 17 செப்டெம்பர் 2012 (UTC)
தொடர் பங்களிப்புக்கு நன்றி
வணக்கம், Thamizhpparithi Maari!
தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- ஏற்கனவே உள்ள குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் 15% குறைவான கட்டுரைகள் மட்டுமே 10 kb அளவுக்கு மேல் உள்ளன.
- உங்களுக்கு விருப்பமான விக்கித் திட்டங்களில் இணைந்து செயலாற்றலாம். புதிய திட்டங்களைத் தொடங்கலாம்.
- தமிழ் விக்கிப்பீடியாவின் துப்புரவு, பராமரிப்புப் பணிகளில் உதவலாம்.
- விக்கிப்பீடியாவைப் பற்றி பலருக்கும் எடுத்துரைக்க பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு உதவலாம்.
இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.
--இரவி (பேச்சு) 05:37, 23 பெப்ரவரி 2013 (UTC)
மகிழ்ச்சி
[தொகு]நாட்டுநலப்பணி மாணவர்களுக்கு விக்கிப்பீடியா அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். பட்டறை என்றாலே பெரிய ஏற்பாடாக இருக்க வேண்டும் என்று தயங்காமல், வேரடி இயக்கங்கள் இது போல மிக எளிமையான சூழலில் இருக்கும் வசதிகளைக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் தகவலைப் பகிர்வதாக அமைய வேண்டும். தொடர்ந்து விக்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 05:12, 5 மார்ச் 2013 (UTC)
நன்றி, தங்களின் வாழ்த்துகள் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது
[தொகு]நமக்கு கிடைக்கப்பெறும் ஒவ்வொரு வாய்ப்பிலும் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சி குறித்து சிந்தித்தால், நாம் அடையும் இலக்கு மிக எளிதாகும். நாம் பல்கலைக்கழக, கல்லூரி, பள்ளி மாணவர்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தக்க விளைவை உண்டாக்கும் என்பதின் தாக்கத்தை நான் உணர்கின்றேன். பொதுவாக நாட்டுநலப்பணித்திட்ட முகாம்களில் சமுக விழிப்புணர்வுப்பொருண்மைகளே இடம் பெறும்; பெரியார் பல்கலைக்கழக மேட்டூர் கல்லூரியில் என்னை உரையாற்ற அழைத்த முதல்வரிடம் நான் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா விழிப்புணர்வின் தேவை குறித்து சொன்ன உடனேயே ஒப்புக்கொண்ட முதல்வர் பேராசிரியர் மோ. தமிழ்மாறன் அவர்களுக்கு என் நன்றி. வெல்க தமிழ்க்கணினி! வாழ்க விக்கி!--Thamizhpparithi Maari (பேச்சு) 17:47, 5 மார்ச் 2013 (UTC)
விக்கிப்பீடியா:மூலங்கள்
[தொகு]விக்கிப்பீடியா:மூலங்கள் என்ற புதுப்பகுதி உருவாக்கப்பட்டுளது. நீங்கள் உங்களுக்கு தெரிந்த வலைதளங்களை இங்கு சேருங்கள். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:26, 3 சூன் 2013 (UTC)
- மிக்க மகிழ்ச்சி. எனக்கு தெரிந்த வலைதளங்களை சேர்க்க/ இணைக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி!--14.139.186.82 09:11, 3 சூன் 2013 (UTC)
பிறந்தநாள் வாழ்த்து
[தொகு]-- :) ♦ நி ♣ ஆதவன் ♦ ( உரையாட ) 05:45, 18 சூலை 2013 (UTC)
- மிக்க நன்றி--Thamizhpparithi Maari (பேச்சு) 19:48, 19 சூலை 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு
[தொகு]வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)
- மகிழ்ச்சி. இஃதோர் இனிய நிகழ்வு. கண்டிப்பாக கலந்து கொள்கிறேன். நிகழ்வு சிறக்க, மிளிர வாழ்த்துகள். --Thamizhpparithi Maari (பேச்சு) 14:39, 21 செப்டம்பர் 2013 (UTC)
- உங்கள் தொலைப்பேசி எண் தேவை. என் எண் 99431 68304. பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான நேர அட்டவணை, இட விவரங்கள் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா பக்கத்தில் இற்றைப்படுத்தியுள்ளேன். அருள்கூர்ந்து உடனே தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 19:55, 27 செப்டம்பர் 2013 (UTC)
விக்கிப்பீடியா பயிற்சி
[தொகு]விக்கிப்பீடியா பட்டறைகள் பற்றிய தகவல்களை விக்கிப்பீடியா திட்டக் கட்டுரைகளில் மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும். உங்கள் கட்டுரை விக்கிப்பீடியா:சேலம் சுழற் சங்கத்தில் விக்கிப்பீடியா தொகுத்தல், தமிழ்க்கணினிப் பயிற்சி என்ற பக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 09:28, 20 செப்டம்பர் 2013 (UTC)
- தங்களின் செயற்பாடு வரவேற்கப்பெறுகின்றது.--Thamizhpparithi Maari (பேச்சு) 14:42, 21 செப்டம்பர் 2013 (UTC)
நன்றியுரைத்தல்
[தொகு]நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல் | ||
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:00, 15 அக்டோபர் 2013 (UTC) |
- சகோதரன் ஜெகதீஸ்வரன் அவர்களே தங்கள் பணி மிளிர வாழ்த்துக்கள்.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:54, 16 அக்டோபர் 2013 (UTC)
- நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 02:04, 16 அக்டோபர் 2013 (UTC)
- தோழரே தங்களின் இன்பணிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:54, 16 அக்டோபர் 2013 (UTC)
மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:38, 16 அக்டோபர் 2013 (UTC)
- மிக்க மகிழ்ச்சி நண்பரே தங்களின் விக்கிப்பணிகள் சிறக்க எம் வாழ்த்துகள்.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:54, 16 அக்டோபர் 2013 (UTC)
தமிழ்ப்பரிதி, நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:54, 16 அக்டோபர் 2013 (UTC) |
- அன்பு நண்பரே தங்களின் தமிழ்ப்பணிகள் சிறக்க எம் வாழ்த்துக்கள்.--Thamizhpparithi Maari (பேச்சு) 05:54, 16 அக்டோபர் 2013 (UTC)
--நந்தகுமார் (பேச்சு) 08:31, 16 அக்டோபர் 2013 (UTC)
- தங்களின் வெற்றிப்பயணத்திற்கு வாழ்த்துகள்.--Thamizhpparithi Maari (பேச்சு) 17:19, 16 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
[தொகு]- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:05, 27 அக்டோபர் 2013 (UTC)
- நல்ல செய்தி, பங்கெடுக்கின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 09:48, 5 நவம்பர் 2013 (UTC)
வணக்கம் Thamizhpparithi Maari! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!
--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:44, 17 மே 2014 (UTC)
லண்டன் விக்கிமேனியா
[தொகு]நன்னோக்குத் தொண்டாளரும் சாதனையாளருமான தமிழ்ப்பரிதி மாரிக்கு விக்கிமேனியா உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்ந்து வாழ்த்துகிறேன். என் பணி--Sengai Podhuvan (பேச்சு) 03:58, 2 சூலை 2014 (UTC)
- மிக்க நன்றி ஐயா--Thamizhpparithi Maari (பேச்சு) 10:23, 2 சூலை 2014 (UTC)
- வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:35, 2 சூலை 2014 (UTC)
- மிக்க நன்றி தோழர்--Thamizhpparithi Maari (பேச்சு) 17:20, 3 சூலை 2014 (UTC)
- மிக்க நன்றி ஐயா--Thamizhpparithi Maari (பேச்சு) 10:23, 2 சூலை 2014 (UTC)
விருப்பம் வாழ்த்துகள் அய்யா. செய்தியறிந்து மகிழ்வு கொண்டேன் ..-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:52, 3 சூலை 2014 (UTC)
- மிக்க நன்றி தோழரே.--Thamizhpparithi Maari (பேச்சு) 18:12, 14 சூலை 2014 (UTC)
- வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 03:22, 4 சூலை 2014 (UTC)
- இனிய வாழ்த்துக்களைப் பகிர்ந்த தோழர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.--Thamizhpparithi Maari (பேச்சு) 18:13, 14 சூலை 2014 (UTC)
- விருப்பம் வாழ்த்துக்கள் ஐயா.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:16, 14 சூலை 2014 (UTC)
- மகிழ்ச்சி, நன்றி நந்தினி.--Thamizhpparithi Maari (பேச்சு) 20:53, 14 சூலை 2014 (UTC)
- மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஐயா - ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 19:43, 5 ஆகத்து 2014 (UTC)
- மகிழ்ச்சி, மிக்க நன்றி தோழர்.--Thamizhpparithi Maari (பேச்சு) 04:26, 6 ஆகத்து 2014 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
[தொகு]வணக்கம் Thamizhpparithi Maari!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
--ஆதவன் 07:47, 30 திசம்பர் 2014 (UTC)
வாழ்த்துக்கள்
[தொகு]இத்திட்டம் சிறப்புற எம் இனிய வாழ்த்துக்கள்--Thamizhpparithi Maari (பேச்சு) 09:51, 31 திசம்பர் 2014 (UTC)
- நன்றி, உங்கள் முனைப்பான பங்களிப்பைக் கண்டும் மகிழ்கிறேன்.--இரவி (பேச்சு) 14:43, 1 பெப்ரவரி 2015 (UTC)
- மிக்க நன்றி இரவி. தங்களின் வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி.--Thamizhpparithi Maari (பேச்சு) 14:53, 1 பெப்ரவரி 2015 (UTC)
வேண்டுகோள்...
[தொகு]வணக்கம்! பழமொழி வழங்கும் பல்துறைச் சிந்தனைகள் (நூல்), தமிழ்ப் பழமொழிகள் ஓர் ஆய்வு (நூல்) ஆகிய கட்டுரைகளை என்னால் இயன்றளவு விக்கியாக்கம் செய்துள்ளேன். இக்கட்டுரைகளைக் கவனித்து, தமிழ்ப் பழமொழிகள் தொகுதி 1 (நூல்) எனும் கட்டுரையிலும் உரிய திருத்தங்களை செய்துவிடுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:49, 31 சனவரி 2015 (UTC)
- மிக்க மகிழ்ச்சி தோழர் அவர்களே. தங்களின் கருத்திற்கும் வழிகாட்டலுக்கும் மிக்க நன்றி!--Thamizhpparithi Maari (பேச்சு) 03:12, 1 பெப்ரவரி 2015 (UTC)
முதற்பக்க அறிமுகம் வேண்டல்
[தொகு]வணக்கங்க. தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தமிழ்ப்பரிதி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--இரவி (பேச்சு) 07:20, 2 பெப்ரவரி 2015 (UTC)
- வணக்கம். மிக்க மகிழ்ச்சி இரவி. விரைவில்--Thamizhpparithi Maari (பேச்சு) 16:38, 4 பெப்ரவரி 2015 (UTC)
- மீண்டும் ஒரு நினைவூட்டல் :) --இரவி (பேச்சு) 12:00, 24 ஆகத்து 2015 (UTC)
தானியங்கி வரவேற்பு
[தொகு]வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு
[தொகு]வணக்கம்!
சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:44, 7 சூலை 2015 (UTC)
- உறுதியாகப் பங்கேற்பேன்--Thamizhpparithi Maari (பேச்சு) 17:47, 18 சூலை 2015 (UTC)
Thank you for taking part in the Community Health learning campaign!
[தொகு]Hi Thamizhpparithi Maari,
Thanks for contributing a drawing in the Community Health mural at Wikimania 2015! In case you haven't seen it yet, the campaign is still ongoing until Sunday. We have posted a few questions related to what makes a healthy community online, and we've had some interesting contributions. I was wondering if you wanted to share your views there, as well?
Happy editing! Best, MCruz (WMF) (பேச்சு) 16:46, 19 ஆகத்து 2015 (UTC)
விக்கிப்பீடியா-தமிழ் இணையக் கல்விக்கழக கூட்டு முயற்சி
[தொகு]மேற்கூறிய கூட்டுமுயற்சியில் தொடங்கப்பட்ட கட்டுரைப் பக்கங்களில் பகுப்பு:விக்கிப்பீடியா-தமிழ் இணையக் கல்விக்கழக கூட்டு முயற்சி என்ற பகுப்பைச் சேர்க்க வேண்டாம். பேச்சுப் பக்கங்களில் {{விக்கிப்பீடியா-தமிழ் இணையக் கல்விக்கழக கூட்டு முயற்சி}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள். --மதனாகரன் (பேச்சு) 11:53, 15 செப்டம்பர் 2015 (UTC)
- பரிதி ஐயா, பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இடுவதைவிட கட்டுரைப் பக்கத்திலேயே பகுப்பு தெரியவேண்டுமென்றால், நாம் பேசியது போல மறைக்கப்பட்ட பகுப்புகளாக அந்தப் பகுப்பை மாற்றிவிடுங்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 16:11, 15 செப்டம்பர் 2015 (UTC)
சிறந்த பரப்புரைச் செயற்பாட்டுக்கான பதக்கம்
[தொகு]சிறந்த பரப்புரைச் செயற்பாட்டுக்கான பதக்கம் | ||
செல்லும் இடம் எல்லாம் தமிழ் விக்கிப்பீடியா, கட்டற்ற பண்பாடு குறித்து எடுத்துரைத்து தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகளுக்கு முக்கியக் காரணியாகவும் அமைந்த உங்கள் பரப்புரைச் செயற்பாட்டைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். --இரவி (பேச்சு) 18:54, 17 செப்டம்பர் 2015 (UTC) |
விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 19:03, 17 செப்டம்பர் 2015 (UTC)
- வாழ்த்துக்கள் தோழரே --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:09, 18 செப்டம்பர் 2015 (UTC)
மூலிகை மணி (இதழ்)
[தொகு]தமிழ் இதழ்கள் என்ற பகுப்பிலில் இருக்கும் துணைப் பகுப்புகளில் இதழ் இருப்பதால், பொதுப் பகுப்பில் இருந்து நீக்கி உள்ளேன். --Natkeeran (பேச்சு) 14:29, 30 செப்டம்பர் 2015 (UTC)
குறிப்பிடத்தக்க நூல்கள்
[தொகு]வணக்கம், நூல்கள் பற்றி எழுதப்படும் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கமை வழிகாட்டலுக்கு அமைவாக உள்ளதா என்பதைக் கவனியுங்கள். குறிப்பிடத்தக்கமை அல்லாத கட்டுரைகள் நீக்கப்படலாம்.--Kanags \உரையாடுக 07:39, 3 நவம்பர் 2015 (UTC)
குறிப்புகள்
[தொகு]பரிதி,
த. இ. க. - தமிழ் விக்கிப்பீடியா கூட்டு முயற்சி சார்பாக பரப்புரைகளில் ஈடுபட்டுப் புதிய பயனர்களை விக்கியில் அறிமுகப்படுத்தும் போது பின்வருவனவற்றைக் கவனிக்க வேண்டுகிறேன்:
- பயனர்கள் தங்களைப் பற்றியோ, தங்களுக்குத் தெரிந்தவர்கள், தொடர்புடைய நிறுவனங்களைப் பற்றியோ எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு எழுதுவது நலமுரண் செயற்பாடாகப் பார்க்கப்படும் என்பதால், விளம்பர நோக்கு என்று கருதி கட்டுரைகள் நீக்கப்பட வாய்ப்புண்டு.
- அனைத்துத் தலைப்புகளும் விக்கிப்பீடியாவின் குறிப்பிடத்தக்கமை வரையறைகளுக்கு உட்பட்டு, தகுந்த சான்றுகளுடன் எழுதப்பட வேண்டும். குறிப்பிடத்தக்கமை இல்லாத கட்டுரைகள் நீக்கப்பட வாய்ப்புண்டு.
- ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை விரிவாக்க முன்னுரிமை தரலாம். ஏற்கனவே ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள தலைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வரலாம். அல்லது, தலைப்புகள் பட்டியலில் இருந்து தலைப்புகளைப் பெறலாம். இதன் மூலம் தலைப்புக்குக் கலைக்களஞ்சிய முக்கியத்துவம் இல்லை என்ற காரணத்துக்காக கட்டுரை நீக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.
- கட்டுரைகள் நீக்கல், மற்ற பிற மாற்றங்கள் குறித்து நீங்களோ உரியவர்களோ நேரடியாக விக்கிப்பீடியாவிலேயே உரையாடுங்கள். இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்டு அதன் நம்பிக்கையைப் பெற முடியும்.
- விக்கிப்பீடியா காலத்துக்கும் இருக்கும் திட்டம். தரமே முதன்மை. இதற்கு மாறாக குறுகிய காலத்தில் எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டுச் செயற்படுவது, கட்டுரைகளை உருவாக்குபவர்கள், துப்புரவு செய்பவர்கள் என்று அனைவரின் உழைப்பையும் நேரத்தையும் விரயமாக்கும்.
- இரண்டு முறை விக்கிமேனியா சென்று வரும் அளவுக்கு விக்கி இயக்கத்தில் நன்கு அறிமுகமுள்ள பயனராகிய நீங்கள், வேறு எவரேனும் விக்கி வழமைகளுக்கு மாறாக அறிந்தோ அறியாமலோ செயற்பட்டால் கூட, எடுத்துச் சொல்லி விக்கி முறைகளுக்கு உட்பட்டுச் செயற்பட உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், கூட்டு முயற்சி மேல் மற்ற பங்களிப்பாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் ஆதரவும் குறையும். நீண்ட கால நோக்கில் இது நல்லதன்று.
நன்றி. --இரவி (பேச்சு) 13:04, 19 திசம்பர் 2015 (UTC) விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:08, 21 திசம்பர் 2015 (UTC)
Thank you for taking part in the Community Health learning campaign!
[தொகு]Hi,
apologies for writing in English, if this is not your first language.
I want to thank you once more for engaging in conversation on the Community Health learning campaign. It took us a while, but we can finally announce the winner of the prize, as well as share the outcomes of this conversation.
- The winner of the Wikimania 2016 scholarship is Basak! Congratulate her on her Talk page!
- The analysis of the consultation can now be found on Commons. It was presented at Wikiconference USA 2015, together with a more extensive research project on Community Health.
You might also be interested in taking part in the 2015 Harassment consultation. This is the first of several planned consultations on this topic, intended to provide a place to discuss ideas, concerns, proposals and possible solutions regarding Wikimedia communities’ harassment-related challenges.
This conversation would not have been the same without you. If you have more ideas, or follow up comments on the findings of the campaign, don't hesitate to leave me a message my talk page.
Have a great day,
MediaWiki message delivery (பேச்சு) 20:04, 22 திசம்பர் 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு
[தொகு]வணக்கம்!
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
- பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
- கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
- கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)
தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:15, 28 சூலை 2016 (UTC)
விக்கிக்கோப்பை
[தொகு]வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.
போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:55, 8 திசம்பர் 2016 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு
[தொகு]15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)
- நான் பங்கேற்கின்றேன். நல்ல முயற்சி, இனிய வாழ்த்துகள்.--Thamizhpparithi Maari (பேச்சு) 08:51, 7 மார்ச் 2017 (UTC)
- நன்றி, பதிவு செய்யுங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:57, 7 மார்ச் 2017 (UTC)
பல கணக்குகள்
[தொகு]பல பயனர்கணக்குகளை உருவாக்குவதன் காரணம் தான் என்ன? விளக்க முடியுமா.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:16, 18 மார்ச் 2017 (UTC)
- தமிழக உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு விக்கி மீடியாத்திட்டங்களில் தொகுப்பபுப் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன. கல்லூரிகளில் ஒரு ஐபியில் 5 கணக்குகளுக்கு மேல் தொடங்க இயலாது. எனவே, நான் கணக்குகளை உருவாக்குகின்றேன். --Thamizhpparithi Maari (பேச்சு) 08:20, 21 மார்ச் 2017 (UTC)
15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு
[தொகு]அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:08, 26 ஏப்ரல் 2017 (UTC)
ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி
[தொகு]வணக்கம்! பயிற்சி குறித்த குறிப்பிடத்தக்க தகவல்களை விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 21 - 23 எனும் பக்கத்தில் இடலாம். உதாரணமாக -
- எத்தனை பேர் பங்களித்தனர்?
- எவ்வளவு நேரம் பயிற்சி தரப்பட்டது?
- எந்தெந்த தலைப்புகளில் பயிற்சி தரப்பட்டது?
- பயிற்சியின்போது ஏதேனும் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டால், இணைக்கலாம்.
நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:04, 21 சூன் 2017 (UTC)
அன்பே Thamizhpparithi Maari! நீங்கள் படம் பற்றி ஒரு கட்டுரை செய்ய முடியும் பாட்டி ப்ரெஸ்ஸம்? நன்றி! --178.71.160.13 16:25, 12 பெப்ரவரி 2018 (UTC)
Share your experience and feedback as a Wikimedian in this global survey
[தொகு]Hello! Sorry for writing in English. The Wikimedia Foundation is asking for your feedback in a survey. We want to know how well we are supporting your work on and off wiki, and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation. You have been randomly selected to take this survey as we would like to hear from your Wikimedia community. The survey is available in various languages and will take between 20 and 40 minutes.
You can find more information about this survey on the project page and see how your feedback helps the Wikimedia Foundation support editors like you. This survey is hosted by a third-party service and governed by this privacy statement (in English). Please visit our frequently asked questions page to find more information about this survey. If you need additional help, or if you wish to opt-out of future communications about this survey, send an email through the EmailUser feature to WMF Surveys to remove you from the list.
Thank you!
--WMF Surveys (talk) 01:32, 31 மார்ச் 2018 (UTC)
Reminder: Share your feedback in this Wikimedia survey
[தொகு]Every response for this survey can help the Wikimedia Foundation improve your experience on the Wikimedia projects. So far, we have heard from just 26% of Wikimramedia contributors who Wikimedia programs like the Education program, editathons, or image contests. The survey is available in various languages and will take between 20 and 40 minutes to be completed. Take the survey now.
If you are not fluent in English, I apologize again for posting in English. If you have already taken the survey, we are sorry you've received this reminder. We have designed the survey to make it impossible to identify which users have taken the survey, so we have to send reminders to everyone.If you wish to opt-out of the next reminder or any other survey, send an email through EmailUser feature to WMF Surveys. You can also send any questions you have to this user email. Learn more about this survey on the project page. This survey is hosted by a third-party service and governed by this Wikimedia Foundation privacy statement. Thank you! —WMF Surveys (talk) 17:18, 15 ஏப்ரல் 2018 (UTC)
Reminder: Wikimedia survey (corrected link)
[தொகு]Every response for this survey can help the Wikimedia Foundation improve your experience on the Wikimedia projects. So far, we have heard from just 26% of Wikimramedia contributors who Wikimedia programs like the Education program, editathons, or image contests. The survey is available in various languages and will take between 20 and 40 minutes to be completed.Take the survey now.
If you are not fluent in English, I apologize for posting in English. If you have already taken the survey, we are sorry you've received this reminder. We have designed the survey to make it impossible to identify which users have taken the survey, so we have to send reminders to everyone. If you wish to opt-out of the next reminder or any other survey, send an email through EmailUser feature to WMF Surveys. You can also send any questions you have to this user email. Learn more about this survey on the project page. This survey is hosted by a third-party service and governed by this Wikimedia Foundation privacy statement. Thanks! —WMF Surveys (talk) 17:24, 15 ஏப்ரல் 2018 (UTC)
Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey
[தொகு]Hello! This is a final reminder that the Wikimedia Foundation survey will close on 23 April, 2018 (07:00 UTC). The survey is available in various languages and will take between 20 and 40 minutes. Take the survey now.
If you are not a native speaker of English, I apologize for writing in English. If you already took the survey - thank you! We will not bother you again. We have designed the survey to make it impossible to identify which users have taken the survey, so we have to send reminders to everyone. To opt-out of future surveys, send an email through EmailUser feature to WMF Surveys. You can also send any questions you have to this user email. Learn more about this survey on the project page. This survey is hosted by a third-party service and governed by this Wikimedia Foundation privacy statement. Thank you!! --WMF Surveys (talk) 05:54, 20 ஏப்ரல் 2018 (UTC)
- I have filled the survey form, thanking you.--Thamizhpparithi Maari (பேச்சு) 13:47, 29 ஏப்ரல் 2018 (UTC)
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்
[தொகு]வணக்கம்.
வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.
வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.
இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.
நன்றி.
தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!
[தொகு]வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.
போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
[தொகு]சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
- நன்றி, மகிழ்ச்சி, நான் பங்கேற்கின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 07:09, 1 நவம்பர் 2019 (UTC)
ஆசிய மாதம், 2019
[தொகு]வணக்கம்.
இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:12, 3 நவம்பர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!
[தொகு]வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.
இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.
சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.
இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.
வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.
நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)
முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்!
[தொகு]வணக்கம் பரிதி. முதற்பக்க அறிமுகத்தில் உங்களைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து உங்கள் பங்களிப்புகள் சிறக்கட்டும். --இரவி (பேச்சு) 16:47, 20 நவம்பர் 2019 (UTC)
- மிக்க நன்றி இரவி, தமிழ் விக்கியில் என் செயற்பாடுகளுக்கு நீங்கள் அளிக்கும் உறுதுணையும், ஏனைய நண்பர்களின் ஒத்தழைப்பும் என்னை இயக்குகின்றது. தொடர்ந்து இருப்போம்! தொடர்பில் இருப்போம்!--தமிழ்ப்பரிதி மாரி (பேச்சு) 06:05, 4 திசம்பர் 2019 (UTC)
We sent you an e-mail
[தொகு]Hello Thamizhpparithi Maari,
Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.
You can see my explanation here.
MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
[தொகு]Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities
[தொகு]Hello,
As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.
An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:
- Date: 31 July 2021 (Saturday)
- Timings: check in your local time
- Bangladesh: 4:30 pm to 7:00 pm
- India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
- Nepal: 4:15 pm to 6:45 pm
- Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
- Live interpretation is being provided in Hindi.
- Please register using this form
For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.
Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)
re: Candidates meet with South Asia + ESEAP communities
[தொகு]Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங
[தொகு]அன்புடையீர் Thamizhpparithi Maari,
விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.
இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.
கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.
நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.
இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)
பயனர் கார்தமிழ் தொடர்பாக
[தொகு]விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) இங்கு உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது. உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். --AntanO (பேச்சு) 15:46, 5 மார்ச் 2022 (UTC)
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
[தொகு]வணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.
இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
[தொகு]வணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
[தொகு]வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
நல்ல கட்டுரை- அழைப்பு
[தொகு]வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,70,066 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)