பயனர் பேச்சு:கி.மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொகுப்பு

தொகுப்புகள்


1 2

பொருளடக்கம்

சுற்றுக்காவல்[தொகு]

வணக்கம், மூர்த்தி. தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:19, 5 அக்டோபர் 2016 (UTC

இரவி சார் வணக்கம். பதிப்புரிமை தொடர்பான நடவடிக்கைகளில் எனக்கு உரிய பயிற்சியேதுமில்லை. ஆனால் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் நான் என்றும் மறுப்பேதும் சொல்வதில்லை. தேவையான தகுதி எனக்கு இருப்பதாக நீங்கள் கருதினால் அணுக்கத்தைச் செயற்படுத்துங்கள். நன்றி.--கி.மூர்த்தி (பேச்சு) 08:03, 5 அக்டோபர் 2016 (UTC).
உதவ முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். தவறு செய்து விடுவோமோ என்ற கவலை வேண்டாம். இதனையே கூட பதிப்புரிமை பற்றியும் பிற விக்கிப்பீடியா வழமைகள் பற்றியும் மேலும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் பயிற்சியாகவும் கருதல்லாம். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 12:53, 13 அக்டோபர் 2016 (UTC)

--இரவி (பேச்சு) 12:55, 13 அக்டோபர் 2016 (UTC)

புதுப்பயனர் வரவேற்பு[தொகு]

வணக்கம் மூர்த்தி, புதுப்பயனர் வரவேற்பு பயனர் பக்கங்களில் தரக்கூடாது. பயனர்களின் உரையாடல் பக்கங்களிலேயே வரவேற்க வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 11:12, 16 அக்டோபர் 2016 (UTC)

கடந்த பல மாதங்களாக, புதுப்பயனர் வரவேற்பு தானியக்கமாக இடப்படுகிறது. தற்போது, வரவேற்புக் குழுவில் உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன். தானாகவே, ஒரு சில பயனர் பேச்சுப் பக்கங்களில் உங்கள் பெயரில் வரவேற்பு தோன்றும்.--இரவி (பேச்சு) 15:56, 16 அக்டோபர் 2016 (UTC)

பதக்கம்[தொகு]

Real life Barnstar Hires.png மெய்வாழ்வுப் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 08:51, 17 அக்டோபர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

-நந்தகுமார், வணக்கம். ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி--கி.மூர்த்தி (பேச்சு) 08:57, 17 அக்டோபர் 2016 (UTC)-

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:15, 17 அக்டோபர் 2016 (UTC)
👍 விருப்பம்வாழ்த்துக்கள் மூர்த்தி ஐயா:) --நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:21, 17 அக்டோபர் 2016 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 13:41, 17 அக்டோபர் 2016 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 17:47, 17 அக்டோபர் 2016 (UTC)

உதவிக் குறிப்பு...[தொகு]

வணக்கம்! ஒருவரின் பேச்சுப் பக்கத்தில் ஏதேனும் உதவி கேட்பது (அல்லது) ஐயம் எழுப்புவது (அல்லது) கருத்து கேட்பது என்பன செய்யும்போது, புதிதான தலைப்பின்கீழ் கேளுங்கள். பக்கத்தின் மேலே, இரண்டாவது வரியில்... தலைப்பைச் சேர் எனும் பட்டை இருக்கிறது பாருங்கள்; அதனை சொடுக்குங்கள். அதன்பிறகு தலைப்பை எழுதி, நீங்கள் எழுத விரும்புவதை தொடர்ந்து எழுதலாம். என்னுடைய விளக்கம் போதுமானதாக இல்லையென்றால் தெரிவிக்கவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:52, 26 அக்டோபர் 2016 (UTC)

வேண்டுகோள்[தொகு]

தாங்கள் விக்கிப்பீடியாவின் ஆசிய மாதத்திற்காக உருவாக்குகின்ற கட்டுரைகளை இக்கருவியில் பதிவு செய்க, நீங்கள் உருவாக்கிய கட்டுரை 300 சொற்களைக் கடந்த அடுத்த நொடியிலேயே நிச்சயம் பதிவு செய்து விடுங்கள். உடனே பதிவு செய்யாத பட்சத்தில் போட்டியானது இறுக்க நிலையை அடையும் போதோ அல்லது வேறு சந்தர்பங்கலின் போதோ பல சிக்கல்களையும் தங்களுக்கு உருவாக்கி விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலதிக உதவி தேவைப்படின் என்னை பேச்சுப்பக்கத்தில் அணுகுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:46, 5 நவம்பர் 2016 (UTC)

<2000 கட்டுரைக்கும் அப்பால் ...[தொகு]

Iraayiravar.jpg ஈராயிரவர் பதக்கம்
மூர்த்தி, தமிழ் விக்கிப்பீடியாவில் 2000 கட்டுரைகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதுகின்றமைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றில் பெருமளவு வேதியியல் சார்ந்த விரிவான கட்டுரைகள் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. உங்களைப் போன்ற துறைசார் அறிஞரின் பங்களிப்புகள், விக்கியின் வரலாற்றில் மிகவும் போற்றதக்கது. நீங்கள் எனக்கு வழியுறுத்தியபடி, வரும் தைத்திங்கள் முதல் திறநிலை தொழினுட்பக் கட்டுரைகளை நிகழ்பட பாடங்களாகவும், கட்டுரைகளை எழுதுவேன். அப்பொழுது உங்களது வழிகாட்டல் மேலும் தேவைப்படும். வணக்கம்.

வாழ்த்துகள்[தொகு]

 1. உழவன் (உரை) 02:26, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--AntanO 02:33, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 05:16, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--Arulghsr (பேச்சு) 05:29, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம். தங்களின் கடின உழைப்பிற்கு நன்றிகள்; இன்னும் பல ஆயிரங்கள் கட்டுரைகளை எழுதி, தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பெருமை சேர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:52, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 07:43, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 12:40, 3 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களது சீரிய பணி தொடரட்டும் --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:54, 3 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் தங்களுக்கு இச்சிறியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:35, 3 திசம்பர் 2016 (UTC)
இத்தனை கைத்தட்டல்களும் என்னை மூவாயிரவர் பதக்கத்தை நோக்கி விரைவாக அழைத்துச் செல்ல உதவும். நன்றி நண்பர்களே!--கி.மூர்த்தி (பேச்சு) 17:38, 3 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்பாராட்டுகள்.--Semmal50 (பேச்சு) 07:02, 4 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:07, 6 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் தமிழில் அறிவியல் வளர்த்தமைக்கு மற்றொரு பாராட்டு.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:36, 7 திசம்பர் 2016 (UTC)
நீங்கள் ஈராயிரம் கட்டுரைகள் எழுதியது வியப்பில்லை. இன்னும் பல ஆயிரங்கள் எழுதுவீர்கள். ஆனால், தேர்ந்த ஒழுங்குடனும் ஈடுபாட்டுடனும் துறை சார்ந்த நாள் தவறாமல் எழுதும் முனைப்பைக் கண்டு வியக்கிறேன். தொடர்க உங்கள் சிறப்பான பங்களிப்புகள். --இரவி (பேச்சு) 10:36, 8 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம், வாழ்த்துக்கள். தொடர்ந்தும் பல ஆயிரம் கட்டுரைகளை எழுதித் தமிழ் விக்கிப்பீடியா சிறப்புற உதவுங்கள். --மயூரநாதன் (பேச்சு) 01:42, 22 திசம்பர் 2016 (UTC)

Address Collection[தொகு]

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your mailing address (not the email) via this google form. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. Best, Addis Wang, sent by MediaWiki message delivery (பேச்சு) 07:58, 3 திசம்பர் 2016 (UTC)

கட்டுரைகள் உருவாக்க வேண்டுகோள்[தொகு]

கீழ்கண்டவை உடல்நலத்துடன் மிகவும் தொடர்புடையவை என்பதால் வேண்டுகோள்களை, அவ்வப்போது இவ்விடத்தில் சேர்க்கிறேன்.

 • gallic acid, chebulagic acid, & chebulinic acid

திரிபலா என்ற கட்டுரையை இன்று உருவாக்கிய போது, மேற்கூறிய மூன்று வேதிப்பொருட்கள் மனிதனுக்கு நன்மை பயப்பதாகத் தெரிகிறது. அதுபற்றிய கட்டுரைகள் தமிழில் இல்லை. அவை பற்றி அறிய ஆவல். நீங்கள் உருவாக்க வேண்டுகிறேன். ஆவலுடன்.. --உழவன் (உரை) 15:59, 4 திசம்பர் 2016 (UTC)

 • Sodium bicarbonate, Tannic acid, Activated carbon
 • மனஉளச்சலைத் தடுக்க எடுத்துக் கொள்ளப்படும் மருத்துகள் பல, (Propantheline bromide, Glycopyrronium bromide, Glycopyrronium bromide, Oxybutynin, Methantheline, Benzatropine) சில பக்கவிளைவு உண்டாக்க வல்லன. இவற்றைப் பற்றியும் நீங்கள் கட்டுரைகளை, உருவாக்க வேண்டுகிறேன். மறவாமல் நேரம் இருக்கும் போது செய்யுங்கள்--உழவன் (உரை) 15:57, 5 சனவரி 2017 (UTC)

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு[தொகு]

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். இக்கருத்தெடுப்பில் கலந்து கொள்ள நீங்கள் குறிப்பிட்ட பயிற்சியில் பங்கு கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மாறாக, நேரடியாக பங்கு கொள்ளாதவர்களுக்கும் இதன் பயன் புலப்படுகிறதா என்று அறிவதும் இக்கருத்தெடுப்பின் நோக்கமாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:10, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை[தொகு]

2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:21, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1[தொகு]

2017 விக்கிக்கோப்பை

விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்[தொகு]

2017 விக்கிக்கோப்பை

உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க
.


விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி[தொகு]

  LED digit 9.pngLED colon.pngLED digit 5.pngLED digit 1.pngLED am.png
இன்று மே 26, 2017
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:49, 31 திசம்பர் 2016 (UTC)

வாழ்த்துக்கள்[தொகு]

 1. விக்கிக்கோப்பை-2017 இல் 1,000 புள்ளிகளைத் தாண்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 03:15, 13 சனவரி 2017 (UTC)
 2. 👍 விருப்பம்--உழவன் (உரை) 03:32, 13 சனவரி 2017 (UTC)
 3. 👍 விருப்பம். அனைத்தும் வழமை போன்று முழுமையான கட்டுரைகள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 06:06, 13 சனவரி 2017 (UTC)
 4. நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:03, 13 சனவரி 2017 (UTC)
 5. 👍 விருப்பம்
 6. 👍 விருப்பம் அசைக்கமுடியாத புள்ளி. அபரிமிதமான முயற்சி. வாழ்த்துக்கள்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 16:23, 16 சனவரி 2017 (UTC)
 7. 👍 விருப்பம் தங்கள் விடா முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.-- மாதவன்  ( பேச்சு ) 16:49, 16 சனவரி 2017 (UTC)
 8. 👍 விருப்பம் Heart.pngஅன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 02:37, 04 மார்ச் 2017 (UTC)

வேதியல் சூத்திரத்தை எழுதபுதிய முறை[தொகு]

Tech_News:_2017-03 என்பதைப் பார்க்கவும். குறிப்பாக, You will be able to use <chem> to write chemical formulas. Before you could use <ce>. <ce> should be replaced by <chem>. [158]--உழவன் (உரை) 09:26, 18 சனவரி 2017 (UTC)

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று[தொகு]

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளீகளூம் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:05, 25 சனவரி 2017 (UTC)

உப்பீனி உப்புகள்[தொகு]

பகுப்பு:உப்பீனி உப்புகள் - ஆங்கிலத்தில் எவ்வாறு எழுதப்படுகிறது?--Kanags \உரையாடுக 11:21, 26 சனவரி 2017 (UTC)

Halogens Or salts of Halogens --கி.மூர்த்தி (பேச்சு) 11:30, 26 சனவரி 2017 (UTC)
அவ்வாறென்றால், பகுப்பு:ஆலசன்கள், பகுப்பு:உப்பீனி உப்புகள் இரண்டும் ஒன்றுதானா? இரண்டையும் இணைக்கலாமா? இணைக்கலாம் என்றால் எதனை நீக்கலாம்?--Kanags \உரையாடுக 11:37, 26 சனவரி 2017 (UTC)
விக்கி முழுவதும் ஆலசன் என்ற சொல் பயன்பாடு மிகுதியாக உள்ளது. ஆலசன், ஆலைடு போன்ற பொது சொற்கள் வழக்கத்திற்கு வந்துவிட்டது போல் உணர்கிறேன். தனித்தமிழாக உள்ள உப்பீனி உப்புகள் என்ற பகுப்பை நீக்குவது தொடர்பாக உறுதியாக முடிவெடுக்கவும் தயக்கமாகவும் உள்ளது. அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 12:07, 26 சனவரி 2017 (UTC)

ரோசிதுகள்[தொகு]

rosids என்ற இணைப்பு பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளில் இணைக்கப்ப்டுள்ளது. இவற்றை மாற்றுவதற்கு தானியங்கி அணுக்கம் உள்ள ஒருவரிடம் கையளியுங்கள். அல்லது உங்கள் Bot கணக்கை இந்தத் தேவைக்காக மட்டும் தற்காலிகமாக தானியங்கி இணக்கத்திற்கு விண்ணப்பியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:42, 5 பெப்ரவரி 2017 (UTC)

முதல் முறையாக முயற்சித்து Bot பயன்படுத்தக் கற்றுக் கொண்டுள்ளேன். தொடர என்ன செய்ய வேண்டும்? அணுக்கம் பெறாமல் பயன்படுத்தக்கூடாதா? --கி.மூர்த்தி (பேச்சு) 10:46, 5 பெப்ரவரி 2017 (UTC)

ஒரு சில (20-25) கட்டுரைகள் என்றால் பரவாயில்லை. ஆனால், இது பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் இந்தத் தேவைக்காக மட்டும் அணுக்கம் பெறுங்கள்.--Kanags \உரையாடுக 10:49, 5 பெப்ரவரி 2017 (UTC)
அணுக்கம் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என எனக்குத் தெரியாது. இனி பயன்படுத்த வேண்டாம் என கூறியிருக்கலாம், முடக்கப்பட்டார் என்ற சொல் அவமானமாக உள்ளது. இனி எந்த கருவிகளையும் நான் பயன்படுத்தப் போவதில்லை. நன்றி.--கி.மூர்த்தி (பேச்சு) 10:52, 5 பெப்ரவரி 2017 (UTC)
குறை நினைக்க வேண்டாம். முடக்கப்பட்டது என்ற சொல்லை நான் பாவிக்கவில்லை. அதுவும் தானியங்கியாகவே தரப்பட்டது. பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் இருப்பதாலேயே நீங்கள் மேலும் தொடராதிருக்க குறைந்தபட்ச 2 மணிநேர தற்காலிகமான தடையை ஏற்படுத்தினேன். உங்கள் தானியங்கிக் கணக்கை வேறு குறைந்தளவு கட்டுரைகளில் தேவைப்படும் மாற்றங்களை நீங்கள் செயல்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 10:59, 5 பெப்ரவரி 2017 (UTC)
பயனர்:Info-farmer, சோதனைப் பதிவு என்று எந்தப் பதிவிலும் அவர் குறிப்பிடவில்லை. நூற்றுக்கும் மேல் ஒரே திருத்தங்களை செய்துள்ளார். இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.கது அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், பயிற்சி கொடுக்கும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் மாற்றங்கள் செய்யாமலிருக்கவே தடையை ஏற்படுத்தினேன். இது வழக்கமான பராமரிப்புப் பணியே. முன்னரும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு செய்துள்ளோம். நிருவாக அணுக்கம் உள்ளோர் முறையாகத் தமது அணுக்கங்களைப் பயன்படுத்துவதில்லை. கட்டுரைகளை நீக்குவது மட்டும் தான் நிருவாகப் பணி என்று சிலர் நினைக்கிறார்கள். எனினும், நானே தடையை நீக்க இருந்தேன்.--Kanags \உரையாடுக 11:22, 5 பெப்ரவரி 2017 (UTC)
@Kanags:! நீங்கள் அவசரப் படுகிறீர்கள்.
 1. ஒரு நிமிடத்திற்கு இரண்டு பதிப்புகளே செய்துள்ளார்.
 2. சோதனை ஓட்டம் நடைபெறும் போதே, அறிவிப்பு இன்றி தடைசெய்தல் தவறு.
 3. //பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் இருப்பதாலேயே // என்பது தவறானது.

இனி விக்கிப்பக்கமே வரமாட்டேன் என்று வருத்தப்பட்டுள்ளார். அவருக்கு மூன்று மணிநேரமாக நிரலாக்கம் பற்றி அறிமுகப்படுத்தியது உங்களுக்குத் தெரியுமா? புதிய நுட்பங்களை கற்க சில நாட்கள் ஆகும். தடைசெய்யாவிட்டால் என்ன இழப்பு வந்து விடும்? எனவே, இனி அவசரப் படாதீர்கள். அறிவிப்பு இன்றி செயற்படுவது நமது திட்டத்திற்கு உகந்தது அல்ல.அவரிடம் பேசியதில் மிகவும் வருத்தப்படுகிறார். அவரிடம் உரையாடி விட்டு, தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போதே செயற்பட்டால் எப்படி? --உழவன் (உரை) 11:26, 5 பெப்ரவரி 2017 (UTC)

அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது பணியையே நான் செய்தேன். ஒரு நிமிடத்திற்கு ஒன்று செய்தாரோ, அல்லது நூறு செய்தாரோ, அது பிரச்சினை இல்லை. ஆனால், நூற்றிற்கு மேல் ஒரே தொகுப்பை செய்துள்ளார். அவர் நிறுத்துவதாகத் தெரியவில்லை. (விக்கி நடைமுறையை நீங்கள் அவருக்கு சரியாகக் கற்பிக்கவில்லை). அதனாலேயே தடை செய்யும்படி ஆனது. முறைப்படி தற்காலிகத் தானியங்கி அணுக்கத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை சொல்லிக் கொடுங்கள். அத்துடன், இன்னும் ஒன்று: அருள்கூர்ந்து செயரத்தினாவின் கருவியை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து மூர்த்திக்கு விளக்கப்படுத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:40, 5 பெப்ரவரி 2017 (UTC)
சரிங்க! திரும்பவும் அவரிடம் பேசினேன். ஏனெனில், பல இடங்களில் கூறி உள்ளேன். விக்கி எனது குடும்பம் என்று. அவர் தமிழகத்தின் ஒரு மாவட்டம் முழுமைக்கும் பணியாற்றும், அரசு அலுவலர் அனைவருக்கும் ஊதியம் போடும் முக்கியமான பொறுப்பில் இருக்கும் அதிகாரி. எனது நிலையோ வேறு. எனது எல்லைக்குள் அவர் இல்லை. எனக்கு அவரின் மனநிலை பேசியதில் தெளிவாகத் தெரிகிறது. அவரிடம் பேசியதில்,ஒரு மூத்த பங்களிப்பாளர் என்ற முறையில் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் முடக்கப்பட்டார் என்ற சொல்லை பயன்படுத்துவது மிகவும் வருந்ததக்கது. விக்கியின் மீது எனக்கு ஆர்வம் குறைந்து விட்டது. இனி என்னை அழைத்து பேசாதீர்கள்.' என்று கூறியது, எனக்கும் வருத்தமாக இருக்கிறது. கற்கவும், கற்பிக்கவும் அனைவராலும் உடனே முடியாது. பொறுமை வேண்டும். அதனால், மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தவறு ஏற்படா சூழ்நிலையில் அவசரப்படாதீர்கள். அப்படியே நிகழ்ந்தாலும், அதனை சீரமைத்துக் கொள்ளலாம் என்ற வேண்டுகோளை முன்வைத்து, இப்பக்கத்தில் இருந்து விடைபெறுகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 11:59, 5 பெப்ரவரி 2017 (UTC)
மூர்த்தி அவர்களுக்கு வணக்கம். நடந்தது குறித்து எனக்கு முழு விவரம் தெரியவில்லை. எனினும் தாங்கள் இது குறித்து வருந்த வேண்டாம். முடக்கப்பட்டது எனும் சொல், தானியங்கி தந்தது; கனக்ஸ் பயன்படுத்தவில்லை. வெவ்வேறு இடங்களிலிருந்து, வெவ்வேறு நேர வலயங்களில் நாம் பங்களிக்கும்போது வார்ப்புரு இடுதல் / தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் ஆகியன தவிர்க்க இயலாதது. அதனையே அவர் செய்திருப்பார் என உறுதியாக நம்புகிறேன். மேலும் கனக்ஸ் கடினமாக நடந்துகொள்பவர் அல்லர். தயைகூர்ந்து நடந்ததை மறந்து, எப்போதும் போல தமிழ் விக்கியில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விக்கியில் அதிகளவு பங்களிப்பினை நாள்தோறும் வழங்கத் துடிக்கும் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைதான் இது. உங்களுக்கு ஆறுதல் தரும் நானும் சிலமுறை வேறு வழிகளில் வேதனையடைந்துள்ளேன். எனினும் வெளியேற மனமில்லாமல் இன்னமும் பங்களிக்கிறேன். தகவலுழவன் அடிக்கடி கூறுவது சரியே - விக்கி எனது குடும்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:04, 6 பெப்ரவரி 2017 (UTC)
மூர்த்தி, இது குறித்து வருத்தப்பட வேண்டாம். உங்கள் முதன்மைக் கணக்கை நான் தடை செய்யவில்லை. உங்கள் Bot கணக்கை மட்டுமே 2 மணி நேரம் (அதை விடக் குறைந்த அளவாகத் தெரிவில் இல்லை). தடை செய்தேன். முன்னர் அனுபவம் மிக்க பயனர் கணக்கையே தடை செய்துள்ளோம். விக்கிப்பீடியா தடையின்றி நகர்வதற்கு இந்நடவடிக்கை சில வேளைகளில் தேவையாக உள்ளது. உங்கள் வழமையான பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 06:27, 6 பெப்ரவரி 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Trophy.png விக்கிக்கோப்பை வாகையாளர்
தமிழ் விக்கிப்பீடியாவில் 2017 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட விக்கிக்கோப்பைப் போட்டியில் முதலிடம் பெற்று அசத்திய தங்களுக்கு இப்பதக்கம் உரித்தாகட்டும்! இது போல் மேலும் தமிழ் விக்கியில் தங்கள் பணி தொடரட்டும்!... --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:30, 2 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

 1. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:08, 3 மார்ச் 2017 (UTC)
 2. வாழ்த்துகள் மூர்த்தி. எனது அண்மைக்கால நிருவாகப் பணிகளினால் தங்களுக்கு ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். தமிழ் விக்கியில் உங்கள் பங்களிப்பைத் தொடர வேண்டுமென அனைவரும் விரும்புகிறோம்.--Kanags \உரையாடுக 01:13, 3 மார்ச் 2017 (UTC)
 3. ːமூர்த்தி அவர்களுக்கு வணக்கம். நடந்தது குறித்து எனக்கு விவரம் தெரியவில்லை. நம் விக்கியில் உங்கள் பங்களிப்பைத் தொடர வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 01:25, 3 மார்ச் 2017 (UTC)
 4. ஒவ்வொரு நாளும் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறேன். நம்முள் பல விக்கிக்குறித்த அமைவுகளை விளக்கிய கனகின் பங்களிப்புகளை நாம் மறக்கவே கூடாது. யானைக்கும் அடி சறுக்கும் என்ற முதுமொழியை நினைவு கூறுக. எது தவறு எது சரி என்று எண்ண வேண்டாம் என இருகரம் கூப்பி, வணக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன். மற்றரை விட நானே உங்களிடம் அதிக நாட்கள் பழக உறைவிட விக்கிப்பீடியத் திட்டத்தால். பழகியுள்ளேன். அதன்படியே தாவரவியல், நுட்ப கட்டுரைகளில் கவனம் செலுத்தி வருகிறேன். எங்களுடன் நீங்கள் என்றும் இருக்க வேண்டும் என்பதே என் துடிப்பாக உள்ளது. நாளை உங்களை நேரில் சந்திக்க வருகிறேன். (பயணவழி)வணக்கம்--உழவன் (உரை) 01:53, 3 மார்ச் 2017 (UTC)
 5. வாழ்த்துக்கள் மூர்த்தி ஒவ்வோரு நாளும் புதிய பக்கங்களையோ அல்லது அண்மைய மாற்றங்களையோ பார்க்கும்போது மூர்த்தியின் பங்களிப்பு உள்ளதா என ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன் தங்கள் நடந்த நிகழ்வை மறந்து தொடர்ந்து தமிழ் விக்கியில் பங்களிக்க வேண்டுகிறேன் ஆர்வத்துடன் தங்கள் வருகையை எதிர்நோக்கும் --Arulghsr (பேச்சு) 03:44, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:51, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 6.45, 3 மார்ச் 2017 (UTC)

ஸ்ரீஹீரன், தீக்குறும்பு செய்து தண்டனை பெற்ற ஒரு முடக்கப்பட்ட பயனருக்கு விக்கிக் கோப்பையை பரிசளிக்க விக்கி நடைமுறை அனுமதிக்கிறதா?

அனுமதிக்குமெனில்…..

வழிதவறி விக்கிப்பீடியாவிற்குள் வந்த என்னை, ”நன்றாக எழுதுகிறீர்கள், தொடர்ந்து எழுதுங்கள்” என்று இன்மொழியால் ஊக்குவித்த செல்வா அவர்களுக்கும், எனது நலனில் அக்கறை கொண்டு, என்னை ஒரு நல்ல மாணவனாக உருவாக்கியும் அவ்வப்போது தலையில்குட்டி வழிநடத்தியவருமான பெருமதிப்பிற்குரிய எனது ஆசான். Kanags அவர்களுக்கும் இக்கோப்பையை சமர்ப்பிக்கின்றேன்.. இருவருடைய இன்மொழிகளுமே என்னை இத்தனை கட்டுரைகளை எழுதவைத்தன என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேவையான வழிகாட்டுதல்களை உரிய நேரத்தில் அளித்து உதவிய, நந்தகுமார், Antan , உழவன், மா. செல்வசிவகுருநாதன், இரவி, ஸ்ரீஹீரன், தமிழ்க்குரிசில், Booradleyp1 மற்றும் எனது பேச்சுப்பக்கத்திற்கு வருகை தந்து தூண்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Kanags என்ற தனிப்பட்ட மனிதர்மீது எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. அவருடைய மாணவன் தவறிழைக்கும் போதெல்லாம் அவனை தண்டிக்கின்ற முழுஉரிமை உலகம் உள்ளவரை அவருக்கு உண்டு.

விக்கிப்பீடியா தடையின்றி நகர்வதற்கு அனுபவம் மிக்க பயனர் கணக்கையே தடை செய்துள்ளோம். என்று பெருமிதப்படும் தமிழ் விக்கிப்பீடியா நடைமுறையிடம் மட்டும் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கின்றென்.

“விக்கிப்பீடியா தடையின்றி மேலும் விரைவாக நகர்வதற்கு,, முற்றிலும் நிரலாக்க அனுபவமே இல்லாத எத்தனை பயனர்களுக்கு அடிப்படைப் பயிற்சியளித்து தொடர்பங்களிப்பாளராக தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகம் உருவாக்கியிருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஸ்ரீஹீரன்,

அவமானப்பட்டவன் புலம்பத்தான் செய்வான். கி.மூர்த்தி என்ற ஒருவன் விலகிநிற்பதால் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு எந்த இழப்பும் இல்லை. அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று விக்கிப்பீடியா நடைமுறை உங்களுக்கு வழிகாட்டுமென்றால், கவலையை மறந்து துடிப்புடன் செயல்படுங்கள் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.

மாறாக, மேலே கேட்கப்பட்ட இவனுடைய கேள்வியில் ஒரு சதவீதம் அளவாவது நியாயம் இருக்கிறது என்று தமிழ் விக்கிப்பீடியா நடைமுறை கருதுமென்றால்…….

நடந்து முடிந்த, நடக்க இருக்கின்ற தமிழ் விக்கிப்பீடியா போட்டிகள் குறித்த கி.மூர்த்தி என்ற தனிப்பட்ட ஒரு பயனரின் பார்வையை பதிவு செய்ய முன்வருவேன்.

அன்புடன் கி.மூர்த்தி.

அன்புள்ள மூர்த்தி, நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டீர்கள். நான் எப்போது உங்கள் கணக்கைத் தடை செய்தேன்? நீங்கள் அனுபவம் மிக்க பயனர். உங்கள் கணக்கைத் தரம் உயர்த்தியதே நான் தான் தான். அப்படியிருக்க நான் தடை செய்வேனா? நீங்கள் வேறொரு கணக்கை ஆரம்பித்து ஆயிரக்கணக்கான (பிழையான) திருத்தங்களை) செய்ய முற்பட்டீர்கள். அதனால், உங்கள் பணியை உடனடியாகத் தடுக்கும் நோக்கில் உங்கள் அந்த இரண்டாம் கணக்கை ஒரு சில மணி நேரம் தற்காலிகமாகத் தடை செய்ய நேர்ந்தது. இது வழக்கமான நிருவாகப் பணியே. இதுவும் செய்ய ஒரு நிருவாகியால் முடியவில்லை என்றால் நிருவாகியாக இருப்பதில் என்ன பயன்? விக்கி எல்லோரும் எப்போதும் எழுதுவதற்கு தொகுப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் ஒரு கண்காணிப்பு அவசியம் என நீங்கள் கருதவில்லையா? இதற்கு மேலும் உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டிய என்னால் முடியாது.--Kanags \உரையாடுக 22:32, 3 மார்ச் 2017 (UTC)
தற்காலிக அணுக்கத்திற்கு விண்னப்பியுங்கள் என்று நீங்கள் எடுத்துக் கூறியதற்குப் பின்னர் நான் எந்த திருத்தத்தையும் மேற்கொள்ள வில்லை. உங்கள் வார்த்தையை மீறி நான் என்றுமே நடந்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியும். பிழையேற்பட வாய்ப்பு இருக்கிறது என்று நீங்கள் எடுத்துச் சொன்னாலேயே நான் கேட்டுக் கொண்டிருப்பேனே? விண்ணப்பியுங்கள் என்று கூறிய அடுத்த வினாடியே முடக்கப்பட்டார் என்று அவமானப்படுத்த வேண்டுமா? தானாக முன்வந்து கற்றுக் கொள்ள முயலும் ஒரு முன்னணி பயனரையும் தமிழ்விக்கிப்பீடியா நிர்வாகம் தீக்குறும்பு செய்பவராகத்தான் கருதுமா? --கி.மூர்த்தி (பேச்சு) 22:51, 3 மார்ச் 2017 (UTC)
அனுபவம் வாய்ந்த ஒரு பயனர் என்பதற்காக உங்களுக்கு எந்த விதிவிலக்கும் அனுமதிக்க முடியாது. ஓரிரு மணிநேரம் உங்கள் இரண்டாம் கணக்கைத் தடை செய்ததில் உங்களுக்கு என்ன மானப் பிரச்சினை வந்தது? ஏற்கனவே இவ்வாறு அனுபவம் வாய்ந்த பயனர்களின் முதன்மைக் கணக்குகளே தற்காலிகமாக ஓரிரு மணிநேரம் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அவர்கள் இப்போதும் விக்கிப் பயனர்களாக பங்களிப்பு செய்கின்றனர். தீக்குறும்பு செய்பவர்களின் முதன்மைக் கணக்கையே நிரந்தரமாகவே தடை செய்கிறோம். நீங்கள் செய்தது தீக்குறும்பு அல்ல. நீங்கள் விக்கி நடைமுறையை அறியாமல் செய்தது. இனி உங்கள் விருப்பம். நன்றி. --Kanags \உரையாடுக 23:03, 3 மார்ச் 2017 (UTC)
வணக்கம், கி.மூர்த்தி. நீங்கள் முதலிடம் பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:24, 4 மார்ச் 2017 (UTC)

வாழ்த்துகள். 👍 விருப்பம் --AntanO 09:26, 4 மார்ச் 2017 (UTC)

கி.மூர்த்தி, விக்கிக்கோப்பை வாகை சூடியதற்கு வாழ்த்துகள். தங்களின் இரண்டாம் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது குறித்து இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கூற விரும்புகிறேன்:

 • புதிதாக வண்டியோட்டக் கற்கும் குழந்தை ஒரு சறுக்குப் பாதையில் கட்டுபாடு இன்றி செல்லும் போது அதனைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். இல்லை என்றால், அக்குழந்தை, வழியில் செல்வோர் இருவரும் பாதிக்கப்படலாம். இங்கு தடுத்து நிறுத்துவது அக்கறையாலே.
 • அமைச்சர்கள், பெரும்புள்ளிகள் வாழும் பகுதிகளில் கூட ஒரு மின்துறை ஊழியர் பராமரிப்புப் பணி காரணமாக மின்சாரத்தை முடக்க வேண்டி வரலாம். அது அவரது பணியின் ஒரு பகுதி. இதில் யாருக்கும் அவமரியாதை இல்லை. சொல்லப்போனால், அவர் தன் பணியைச் செய்யாமல் விட்டால் யாருக்கும் ஆபத்து கூட நேரலாம்.

User:Kanags தன் பணியைத் தான் செய்திருக்கிறார். இதில் தனிப்பட ஒன்றும் இல்லை. இது போல் பல்வேறு பயனர்களின் தொடர் தொகுப்புகளைக் காணும் போது நானே அவ்வாற தற்காலிக நடவடிக்கை எடுக்க நினைத்திருக்கிறேன். நாளை நீங்கள் நிருவாகப் பொறுப்பேற்றால் இதே பணியைச் செய்ய வேண்டி இருக்கும். ஒரு சிலரே பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் போது அவர்களுக்கு நம் ஆதரவை அளிக்க வேண்டியது கடமை. தங்களிடம் சொன்னால் போதாதா என்றால், தானியங்கிக் கணக்கு இயங்கும் நேரத்தில் நீங்கள் அவர் இடும் செய்தியைக் கவனிக்காமல் கூட இருக்கலாம். ஆனால், அந்நேரத்தில் ஆயிரக்கணக்கான பதிவேற்றங்கள் ஏறி இருக்கலாம். எனவே, இது முன்னெச்சரிக்கையாக எடுக்கும் நடவடிக்கையே. முடக்கப்பட்டார் போன்ற சொற் பயன்பாடுகள் நம் பண்பாட்டு நோக்கில் உள்வாங்கப்படும் விதம் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியது. இது குறித்து நிரலாக்கச் செய்திகளை மொழிபெயர்ப்பவர்கள் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

//“விக்கிப்பீடியா தடையின்றி மேலும் விரைவாக நகர்வதற்கு,, முற்றிலும் நிரலாக்க அனுபவமே இல்லாத எத்தனை பயனர்களுக்கு அடிப்படைப் பயிற்சியளித்து தொடர்பங்களிப்பாளராக தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகம் உருவாக்கியிருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.//

என்று வினவி இருந்தீர்கள். 2016ஆம் ஆண்டு சென்னையில் த. இ. க. வில் இரண்டு நாள் விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சி நடைபெற்றது. ஏறக்குறைய 280+ மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாவில் உலகிலேயே முதன்முறையாக, விக்கிமீடியா அறக்கட்டளை தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து இப்பயிற்சி அளித்தது. இதன் விளைவுகளை இங்கு காணலாம். தங்களைப் போன்றோருக்கு தானியக்கப் பங்களிப்புகளில் இருக்கும் ஆர்வம், இது போன்று இன்னும் தொடர் பயிற்சிகளை அளிக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது. நிச்சயம் முயல்வோம்.

தமிழுக்கான நவீன கலைக்களனஞ்சியத்தை ஆக்குவது ஒரு வரலாற்றுப் பணி. தங்களைப் போன்று முனைப்புடன் கட்டுரைகளை எழுதிக் குவிப்பவர்கள் அதன் முக்கிய பங்களிப்பாளர்கள். மனக்குறைகள், புரிதற் பிழைகளை ஒதுக்கி வைத்து மீண்டும் விக்கிப்பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். போட்டிகள் பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவற்றை ஆய்ந்து தக்க மாற்றங்களை மேற்கொள்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 15:27, 5 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பாராட்டு[தொகு]

 • 👌 - இயற்கை கட்டுரையை 1 லட்சம் பைட்டுக்கும் மேல் விரிவாக்கி அசத்தியபடி விக்கிக்கு மீள்வருகை அளித்தமை அற்புதம். இவ்வாறே தொடர்ந்து உங்கள் பங்களுப்பினைப் போட்டியின் மூலம் அளித்து வெற்றி பெறுங்கள் வாழ்த்துகள்.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:51, 1 மே 2017 (UTC)

மீண்டும் உங்கள் பங்களிப்புகளைக் காண மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வழமை போல சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 05:24, 2 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி[தொகு]

வணக்கம்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்! ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அடஹ்ற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:59, 2 மே 2017 (UTC)

பகுப்பாய்வு வேதியியல், கட்டுரையை இன்னும் கொஞ்சம் விரிவாக்கினால் நீண்ட கட்டுரையாகிவிடும், தர்போது அதன் மொழி வரியுருக்கள் அளவு 27,XXX அதை 30,000 மாக மாற்றயருள வேண்டுகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:37, 7 மே 2017 (UTC)
மூர்த்தி! தொடர்பங்களிப்பாளர் போட்டியில், சிறந்த, மிக விரிவான கட்டுரைகளை ஆக்கி வருகிறீர்கள். பாராட்டுக்கள். --கலை (பேச்சு) 15:13, 11 மே 2017 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:18, 11 மே 2017 (UTC)
தமிழ் விக்கிபப்பீடியா போட்டிகள் அனைத்திலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி நூறுகள் விளாசி கோப்பைகள் வெல்லும் உங்களுக்குப் பாராட்டுகள் :)--இரவி (பேச்சு) 16:11, 11 மே 2017 (UTC)

மணல்தொட்டி[தொகு]

இந்த மாற்றத்தை மீளமைத்து உள்ளேன். அதனை மாதிரி கட்டுரையாக எழுதச் சொன்னேன். நாளை அவர்களுக்கு அதனை வைத்து பயற்சி தர உள்ளேன்.--உழவன் (உரை) 16:16, 8 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
 • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
 • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
 • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:13, 21 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பாராட்டு[தொகு]

 • 👌 - இயற்கையில் ஆரம்பித்து இறப்பு வரைக்கும் சிறப்பாக 30 கட்டுரைகளை விரிவாக்கி, முதல் மூன்று பரிசுகளை வெல்வதற்கான தகுதியினை அடைந்துள்ளீர்கள்.
 • 👍 - ஆனாலும், 30 உடன் நின்றுவிடாது 60, 70, 80, 100 என தொடர்ந்து பல கட்டுரைகளையும் விரிவாக்குங்கள். அது உங்கள் வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ளவும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் அமையும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. தொடர்ந்து அசத்தலாகப் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி!...

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:50, 21 மே 2017 (UTC)

பாராட்டுகள். போட்டியை சிறப்பாக நடத்தும் சிறீகீரனுக்கும் எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:53, 21 மே 2017 (UTC)
நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:51, 21 மே 2017 (UTC)
தொடர்ந்து கட்டுரை விரிவாக்கப் போட்டியில் தரமான கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் கி.மூர்த்தி. வாழ்த்துகள். --கலை (பேச்சு) 17:37, 21 மே 2017 (UTC)